வில் – 13

சாதீயம் சீமைக் கருவேலம்.

வெட்டுதல் வீண்…! வேரறுப்போம் வாருங்கள்…!

வள்ளி கடத்தல்காரர்களின் பிடியில் இருந்து விடுபட்டதுமே, தன் முகம் வரை மூடியிருந்த போர்வையை உதறிக் கொண்டு வெளியே வந்தாள்

அவள் கோபமாய் திரும்பும் போதே, அவளின் முகத்திற்கு நேரே பெரிய கேக் ஒன்று நீட்டப்பட, அதன் மேல் பூங்கொத்தைப் ஒத்த மெழுகுவர்த்தி ஒளி உமிழ்ந்துக் கொண்டிருந்தது

சுற்றிலும் இருள் சூழ்ந்திருக்க, அம்மெழுகுவர்த்தி மட்டுமே அங்கு இருளை முடிந்த அளவு விரட்டிக் கொண்டிருந்தது. கூடவே பிறந்த நாள் வாழ்த்துப்பாவை இசைத்துக் கொண்டிருந்தது

வள்ளி திகைப்போடு நிமிர்ந்து பார்க்க, பார்த்தவளால் அவள் விழிகளையே நம்ப முடியவில்லை. ஆனந்த திகைப்பில் வள்ளி உறைந்து நிற்க

ஜுலைகாவின் கைகளில் கேக்கை கொடுத்துவிட்டு மற்ற இரு தோழிகளும், “மச்சி…’’ என பாய்ந்து சென்று வள்ளியை கட்டி அணைத்துக் கொண்டனர்

அவளும் தன் பங்கிற்கு இரு தோழிகளின் கழுத்திலும் கரம் கோர்த்துக் கொண்டாள்

இவர்கள் பிரிவார்கள் என பொறுத்து பொறுத்துப் பார்த்த ஜுலைகா, அவர்கள் அதே நிலையில் தழுவிக் கிடக்கவும், “அடியே எருமைகளா…. இப்படியே போஸ் கொடுத்துட்டு இருந்தீங்க…. கேக்கோட நான் மட்டும் ஓரமா போய் செட்டில் ஆயிடுவேன்.’’ என அறிவிக்க, மூன்று தோழிகளும் நிமிர்ந்து அவளைப் பார்த்தனர்

வள்ளி உதட்டில் மலர்ந்த முறுவலோடு, “கேக் பாக்ஸ்…! கேக் ஆட்டையப் போடுறப் பழக்கத்தை இன்னும் நீ நிறுத்தலையா..?’’ என வேடிக்கையாய் வினவ

மச்சிஅவ ஹிப் சைஸ் பாத்தா தெரியல. அக்கம் பக்கத்து குழந்தைங்க பர்த்டே பார்ட்டிக்கு வாங்குற கேக்கை கூட இன்னும் ஆட்டைய போட்டுக்கிட்டு தான் சுத்துறான்னு….!’’ 

ரித்திகா ஜுலைகாவை கலாய்க்கத் தொடங்கியதும், “அடியே கொத்தவரங்கா…! நான் உன்ன கலாய்ச்சேன். நீ குமுறி குமுறி அழுவ. உன்ன நான் அப்புறம் கவனிச்சுகிறேன்.’’ என ரித்திகாவிற்கு பொங்கல் வைத்தவள்

மச்சி….கை வலிக்குது மச்சிசீக்கிரம் கேக் கட் பண்ணுடி..’’ என கெஞ்சலில் இறங்கினாள்.  

அவளை நோக்கி அன்பாய் புன்னகைத்தவள், கேக் இருந்த தெர்மாகோல் அட்டையில் இணைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கத்தியை எடுத்து, எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தியை ஊதி அணைத்ததும், மற்ற மூன்று தோழிகளும் உற்சாகக் குரலில் பிறந்தநாள் பாடலை பாடினர்

கேக்கை வெட்டி, வள்ளி மூன்று தோழிகளுக்கும் ஊட்ட, அவர்கள் மூவரும் இவளுக்கு ஊட்ட, ஒருத்தி கேக்கின் கிரீமை எடுத்து வள்ளியின் கன்னத்தில் தடவ, அப்படியே அது ஒரு விளையாட்டாய் மாறி, நான்கு தோழிகளுக்கும் கொஞ்ச நேரத்தில் முகம் முழுக்க கேக்கை அப்பிக் கொண்டும் ஒருவரை ஒருவர் துரத்திக் கொண்டும் உற்சாகமாய் விளையாடிக் கொண்டிருந்தனர்

நான் வரலாமா…’’ சற்று தொலைவில் உரத்த ஆண் குரல் கேட்க, நான்கு தோழிகளும் அப்படியே நின்றனர்

கையில் பெரிய ரோஜாப்பூ செடியோடு வில்லன் நின்றுக் கொண்டிருந்தான். பெரிய மஞ்சள் நிற ரோஜா ஒன்று அதில் மலர்ந்திருக்க, பெரிய புன்னகையோடு அவளை நெருங்கியவன், “பிறந்த நாள் வாழ்த்துகள்…’’ என வாழ்த்த, “தேங்கஸ்’’ என்றவள், அந்த செடியை வாங்கிக் கொண்டாள்

அவனையே ஊன்றிப் பார்த்தவள், “எல்லாம் உங்க ஏற்பாடா..?’’ என கேட்க, மற்ற மூவரையும் நோக்கி திரும்பியவன்

கேர்ல்ஸ் ஒரு ஐஞ்சி நிமிஷம், தனியா பேசிட்டு உங்க பிரண்டை உங்ககிட்டையே பத்திரமா ஒப்படைச்சிடுறேன்.’’ அவன் அப்படி சொன்னதும், “ஹே..’’ என்ற உற்சாக கூக்குரல் எழும்ப வள்ளிக்கு ஏனோ அவஸ்தையான உணர்வுகள் தாக்கியது

அவள் கரம் பற்றி அவளை கொஞ்சம் தள்ளி அழைத்து செல்லும் போது தான், தாங்கள் ஏரிக்கு வந்திருப்பதை வள்ளி உணர்ந்தாள்

வள்ளியின் கண்களைப் பார்த்தவன், “நான் உன் வாழ்கையில வந்த நிமிஷத்துல இருந்து நீ நிறைய இழந்துட்ட வள்ளி. உன் இழப்புக்கு நான் காரணமா இல்லாம இருக்கலாம். ஆனாஎனக்குள்ள ஒரு உறுத்தல் இருந்துகிட்டே இருக்கு

பட்டாம்பூச்சி மாதிரி ஜாலியா சுத்திட்டு இருந்த பொண்ணு நீன்னு உங்க அம்மா அடிக்கடி என்கிட்ட சொல்லுவாங்க. என்னால நீ இழந்த எல்லாத்தையும் திருப்பிக் கொடுக்க முடியுமா தெரியல. அட்லீஸ்ட்இந்த ஒரு நாள் ராத்திரியை என்னோட கிப்ட்டா கொடுக்குறேன் வாங்கிக்கோ வள்ளி

வாழ்கையில நடந்த எல்லா கசப்பான சம்பவத்தையும் இன்னைக்கு ஒரு நாள் நைட் மறந்துடு. உன்னோட ரொம்ப நாள் ஆசையை எல்லாம் உன் பிரண்ட்ஸ்கிட்ட கேட்டு, கேட்டு ஏற்பாடு பண்ணி இருக்கேன்

நீ ஆசைப்பட்ட மாதிரி காட்டுல என்னால இந்த ஏற்பாட்டை பண்ண முடியல. ஆனாலும் எங்க ஏரியும் சின்ன காடு தான். நடுராத்திரி அவுடிங். நீ ஆசைப்பட்ட கேம்ப் பயர். உன்னோட பெஸ்ட் பிரண்ட்ஸ்சோடா ஒரு மூன் வாக். விடிய விடிய அரட்டை. அப்புறம் இதுவும் லிஸ்ட்ல இருக்கு..’’ என்றவன், சட்டை மறைவில் இருந்து ஒரு பொருளை எடுத்து நீட்ட, அது ஒரு உயர் வகை ஒயின் பாட்டில்

வள்ளிக்கு ஏனோ முதல் முறை ஒரு மதுபாட்டிலைக் கண்டு சிரிப்பு வந்தது

இதெல்லாம் உங்ககிட்ட யார் சொன்னா..?’’ என்று உதட்டில் தேங்கிய புன்னகையோடு கேட்க, தானும் புன்னகைத்தவன், “வேற யாரு எல்லாம் உன் பிரண்ட்ஸ் தான்..’’ என்று சொல்லிவிட்டு பெரிதாய் சிரித்தான்

இது மட்டும் தான் சொன்னாங்காளா…..? இல்ல எல்லாத்தையும் உளறிட்டாங்களா..?’’ வள்ளி உதட்டுக்குள் மேலும் பொங்க முயன்ற புன்னகையை அடக்கியபடி கேட்க,

அவங்க இவ்ளோ தான் சொன்னாங்க…. நானா நிறைய ஆராய்ச்சி பண்ணி உன்னைப்பத்தி தெரிஞ்சிகிட்டேன்.’’ வில்லனின் முகத்தில் தெரிந்த விசமதனத்தில், வள்ளிக்கு அப்படி என்ன தெரிந்துக் கொண்டான் என்று கேட்டே ஆக வேண்டும் போல ஒரு உந்துதல் வந்தது

என்ன தெரிஞ்சிட்கிடீங்க…?’’ வள்ளி சாதாரணம் போல முகத்தை வைத்துக் கொண்டு கேட்டாலும், என்ன பதில் வருமோ என்ற எதிர்பார்ப்பை அவள் முகம் பிரதிபலித்தது

ஜாஸ் மியூசிக் உனக்கு ரொம்ப பிடிக்கும். ராபர்ட் கிளாஸ்பரோட டை ஹார்ட் ஃபேன் நீ. ஹாரிபாட்டருக்கு ரசிகைமன்ற தலைவி நீ. உங்க அக்கா இறந்து போற ஒரு நிமிஷம் முன்னாடி வரைக்கும் உனக்கு பிடிச்ச சாமி ஐயப்பன்

உன்னோட எல்லா புக்லையும் உன்னோட பேருக்கு முன்னாடி சாமியே சரணம் ஐயப்பா போட்டு வச்சி இருக்க…. அப்புறம் ரூம் கதவை பூட்டிட்டு குத்து பாட்டுக்கு டான்ஸ் ஆட ரொம்ப பிடிக்கும்.  

அம்மா கையால செஞ்சா எல்லாமே அன்லிமிடெட் மீல்ஸ் தான் உனக்குஆனாலும் தக்காளி ரசமும், சேனை வறுவலும் உன்னோட பேவரிட். மஞ்சள் ரோஜா பிடிக்கும் உனக்கு. உங்க அக்கா கூட சண்டைப் போட பிடிக்கும்

சைக்கிள்ல வேகமா போக பிடிக்கும். ஸ்போர்ட்ஸ் கார், ஸ்போர்ட்ஸ் பைக் இதெல்லாம் உன்னோட பெரிய கனவு. வீட்ல பொய் சொல்லிட்டு திருட்டுத்தனமா பிரண்ட்ஸ் கூட ஊர் சுத்த பிடிக்கும் உனக்கு

இதெல்லாம் கொஞ்சம் கொஞ்சம் உன் அம்மாவும் ப்ரண்ட்சும் சொன்னது. மீதி நானா உன் கபோர்ட் ஆரய்ச்சி செஞ்சி கண்டுபிடிச்சது.’’  

வில்லன் அவளுக்கு பிடித்தன பற்றிய பட்டியலை முடித்ததும், “என் கபோர்ட் எல்லாம் நோண்டிப் பாத்தீங்களா என்ன…..!’’ வள்ளி உதட்டை  கடித்துக் கொண்டு கேட்க

வில்லனின் முகம் உல்லாசத்திற்கு மாறியது. “எஸ் பேபிநான் எல்லாமே பாத்துட்டேன். உன்னோட அந்த ப்ளே பாய் புக் கூட. நான் கூட உன்ன சின்ன பொண்ணுன்னு நினச்சிட்டு இருந்தேன். அந்த வயசுல என்ன வேலை எல்லாம் பண்ணி இருக்க நீஹா ஹா ஹா..’’ 

வில்லன் மந்தகாசமாய் புன்னகைக்க, வள்ளிக்கு வெட்கத்திலும் கூச்சத்திலும் முகம் சிவந்து விட்டது

அவனை நேர் பார்வைப் பார்க்க முடியாதவள், “அதெல்லாம் நீங்க நினைக்கிற மாதிரி ஒன்னும் இல்ல. டீன் ஏஜ்ல எல்லாருக்கும் இருக்க கியூரியாசிட்டி. நாங்க டுவல்த் படிச்சிட்டு இருக்கும் போது, எங்க கிளாஸ் மேட் ஒருத்தி மேரேஜ் பண்ணிக்கிட்டு ஸ்கூலுக்கு வந்துட்டு இருந்தா

எல்லா பொண்ணுங்களும் அவளை மறைமுகமா கிண்டல் பண்ணிட்டு இருப்பாங்க. பாவம் அந்த வயசுல அவ கஷ்டம் எனக்கெல்லாம் புரியல. புவி ஒரு நாள் அவளை ஏதோ கிண்டல் பண்ணப் போயி, அவ புவியை உனக்கெல்லாம் கல்யாணமே நடந்தாலும் கடைசி வரைக்கும் ஒன்னும் தெரியாதுடி அப்படின்னு பயங்கரமா திட்டிட்டா.