Advertisement

                        மின்னலின் மறைவில்

அத்தியாயம்….1

“போதும் ஆயிஷா…..” அவள் கையில் இருந்த மது கோப்பையை பிடிங்கி கீழே வைத்து விட்டு  அவளின் தோள் பற்றி எழுப்பினான்.

அவளோ அவன் கைய்பிடியில் இருந்து நழுவி திரும்பவும் தான் அமர்ந்து இருந்த ஷோபாவின் மீதே உட்கார்ந்து, தவறு பாதி படுக்கும் வாக்கில் இருந்தவள்.

“ S.R இப்போ மட்டும் ****அந்த பத்திரிக்கை காரன் பார்த்தான் அவ்வளவு தான். மூன்று எழுத்து நாயகி,  ஆறுஏழுத்து நாயகனோடு உல்லாசம். ” சொல்லி விட்டு சிரித்த அவள் சிரிப்புக்கு பின் இருந்த வலி யாருக்கு தெரியுமோ இல்லையோ….சர்வேஷ்வருக்கு தெரியும்.

“ இது எல்லாம் நமக்கு புதுசா…..?”   சர்வேஷ்வர் சொல்வதும் ஒருவகையில் சரியே….

சர்வேஷ்வர் தமிழ்நாட்டின் வெள்ளிதிரை நட்சத்திரம்.  அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் முதலிடம் வகிப்பவன். இந்த திரை உலகுக்கு வந்து பத்து வருடம் கடந்து விட்டவன்.

அதை செலபரேட் செய்ய தான் இந்த பார்ட்டி. அனைவரும் சென்ற பின்னும் ஆயிஷா போகவில்லை. முதன் முதலில் திரையில்  தனக்கு நாயகியாக நடித்தது ஆயிஷா தான்.

இப்போது தனக்கு அக்காவாக இரண்டு படம்  நடித்து கொடுத்து இருக்கிறாள். இன்று பார்ட்டிக்கு வந்த  ஒரு இயக்குனர் ஆயிஷாவிடம்….

“ S.R சாருக்கு அம்மாவா நடிக்கிறிங்கலா…..? ஆயிஷா.  முக்கியமான பாத்திரம் நல்ல ஸ்கோப் .” சொன்னதும் ஆயிஷாவுக்கு கோபம் வந்தாலும் அதை அடக்கியவளாய்…

“ யோசிக்கிறேன் சார்.”

“ரொம்ப யோசிக்காதம்மா, இன்னும் சுருக்கம் வந்துட போகுது.” போகும் வாக்கில்  பத்த வைத்து சென்று விட்டார். அனைவரும் சென்ற பின் மாட்டியது அனைவராலும் S.R என்று அழைக்கப்படும் சர்வேஷ்வர்.

“   எவ்வளவு  கொழுப்பு இருக்கனும் அவனுக்கு….?”

“ எவனுக்கு….?” என்று  சர்வேஷ்வர் கேட்கவில்லை.

“பழச மறந்துட்டான். என் கால்ஷீட்டுக்கு மூனு மாசம்,  என் பங்களாவுக்கு நாயா அலைந்தது மறந்துட்டு, இப்போ ….இப்போ …..சுருக்கமா சுருக்கம்.” என்று புலம்பியவள்.

பின்….. “ சர்வேஷ் நிஜமா சுருக்கம் இருக்கா…..?”  கவலையுடன் கேட்டாள்.

“முப்பது வயசுல சுருக்கம் விழ ஆராம்பிப்பது சகஜம் தானே ஆயிஷா….. இத போய் பெருசா….” திரையில் இருந்தாலும் சர்வேஷ்வரின் பேச்சு உண்மை ஒட்டியே இருக்கும். காரியம் ஆக காலை பிடிப்பது. காரியம் முடிந்ததும் காலை வாரி விடுவது. அவனிடம் இல்லை.

“ஓ…..” என்று சொல்லி  விட்டு இன்னும் கொஞ்சம் மதுவை உள்ளே தள்ளியவள்.

“ உனக்கு என்ன வயசு சர்..வேஷ்…? ” பேச்சு தெளிவு இல்லாது மது அதன்  வேலையை காட்ட தொடங்கியது.

சிரித்துக் கொண்டே “ முப்பத்திரெண்டு…..”

“ முப்பத்திரெண்டு வயசு உனக்கு முப்பது வயசு நானு அம்மா. ஏன்டா  இந்த சினிமாவுல நாயகிக்கு மட்டும் வயசு கம்மியா இருக்கனும். ஏறுனா மார்க்கெட் இறங்கிடும்.

ஆனா நாயகன் மட்டும்  வயசு ஏற …ஏற …ரசிகர்கள்  ஏறிட்டு போறாங்க. இது என்ன நியாயம்…..?”  ஆயிஷாவின் பேச்சின் உள்ள நியாயத்தால்….

“ சரக்கு உள்ள போனா…. தத்துவம் மட்டும் இல்ல. பல உண்மைகள் கூட வரும் போல..இவ்வளவு பீல் பண்றவ எதுக்கு எனக்கு அக்காவ நடிக்க ஒத்துக்கிட்ட….

அதனால தானே …. அவன் இப்போ அம்மாவா நடின்னு சொல்றான்.”

“ அது தான் சொன்னனே மார்க்கெட் டவுன்னு. திரையில் நட்சத்திரமா மின்னிட்டு வீட்டுல சும்மா இருக்க முடியல சர்வேஷ்.

அப்படி இருக்கும் போது  கண்ண கூசும் அளவுக்கு எல்லா  லைட்டையும் போட்டுட்டு தான் இருக்கேன்.”

இந்த பிரச்சனை பெரும்பாலான நாயகிகள் சந்தித்து இருப்பார்கள். வானளவு புகழ்ந்து கீழே இறங்குவது என்பது அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாதது.

“ பேசாம கல்யாணம் செய்துக்கே ஆயிஷா…கணவன் குழந்தை….நல்லா இருக்கும்.” இது வரை சோகத்தை கூட கேலியாக பேசிக் கொண்டு இருந்த ஆயிஷா….

“ அதுக்கும் எனக்கும் காத தூரம் சர்வேஷ்.”

“ ஏன் இப்படி சொல்ற…..? திரை நாயகிங்க எல்லாம் கல்யாணம் செஞ்சிட்டு கணவன், குழந்தைன்னு,  செட்டில் ஆகலையா…..?”

“ அதுல எத்தன கல்யாணம் நிலச்சி இருக்கு சர்வேஷ்.  தூர இருக்க வரை தான் நாம நட்சத்திரம். இறங்கிட்டா…..வேண்டாம்டா இப்படியே போகட்டும்.”

“ஆயிஷா…..” ஏதோ சொல்ல வந்தவனை தடுத்து…

“ இவ்வளவு பேசுறியே…நீ என்னை கல்யாணம் செய்துக்குறியா…..?”

“ஆ..யிஷா….” அதிர்ந்து போய் விட்டான்.

“பயப்படாதே…..அந்த சங்கடத்தை உனக்கு கொடுக்க மாட்டேன். என்  கூட யார் யாரு எல்லாம்.”

“ஆயிஷா போதும் ரொம்ப ஓவரா ஆயிடுச்சி.”

“ஆமா சர்வேஷ் ரொம்ப ஓவரா தான் ஆயிடுச்சி.” சர்வேஷ்வர்க்கும் ஆயிஷாவுக்கும் பத்து வருட நட்பு. ஆம் நட்பு தான். நட்பு மட்டும் தான்.

சர்வேஷ்வர்  ஒன்றும் பெண்களை அறியாதவன் கிடையாது. அதுவும் மிக ஈசியாக கிடைக்கும் இந்த உலகத்தில்  இருந்துக் கொண்டு….. முப்பத்திரெண்டு வயது வரை பிரம்மச்சரியத்தை கடைப்பிடிக்கும் அளவுக்கு யோக்கியமானவன்  கிடையாது.

ஆயிஷா திரைஉலகில் அவனின்  முதல் கதாநாயகி. இருவருக்கும் அது தான் முதல் படம். சொல்ல போனால் அந்த படத்தில் இருவரும் மிக நெருக்கமாக நடிக்கும் காதல் காட்சிகள்  ததும்பி வழியும் படம்.

நிஜத்தில் அந்த உணர்வு இருவருக்கும் வரவில்லை என்பது தான் நிஜம். ஆயிஷாவை இந்த திரை உலகத்தினர் நிறைய பேர் பயன்படுத்தி இருக்கிறார்கள். அதை சர்வேஷ்வரும் அறிவான்.

சர்வேஷ்வரின் படுக்கையையும் நாயகிகள் பகிர்ந்து இருக்கிறார்கள். அதை ஆயிஷாவும் அறிவாள். இருவருக்குள்ளும் ஏனோ அந்த உணர்வு எழவில்லை.

சர்வேஷ்வர்க்கு ஆயிஷாவை பார்த்தால் வளர்ந்த குழந்தை போல் தான் தெரிவாள். வெளி உலகுக்கு எவ்வளவு எவ்வளவு சாதுர்யமானவளோ…..தனிமையில் அன்புக்கு ஏங்கும் குழந்தையாக .

சர்வேஷ்வர், திரை உலக குடும்பத்தில் இருந்து தான் வந்தான். அவனின் தந்தையும் ஒரு நடிகர் தான். அதனால் அவனை அனைவருக்கும் தெரியும்.

ஆயிஷாவின் பின்னனி யாருக்கும் தெரியாது. நம் சர்வேஷ் உட்பட. பத்து வருட நட்பில் அனைத்தும் பேசிய ஆயிஷா தன் குடும்பத்தை பற்றி  மட்டும் மூச் .

இரண்டு வருடம் முன் இன்று  போல் அன்றும், போதை அதிகமாகி  விட்டதால் இவன் தான் அவள் வீட்டில் விட்டான்.

அவள் படுக்கையில்   படுக்க வைத்து விட்டு ஏஸி போட்டு விளக்கை அணைக்கும் முன் ஆயிஷா….

“ அம்மா  என்ன மன்னிச்சிக்கம்மா…..என்னால தங்கை வாழ்க்கையும் பாதிக்குமுன்னு தெரியாதும்மா…என்ன மன்னிச்சிக்கம்மா… அப்பாக்கு இப்படி ஆகுமுன்னு நினச்சி பாக்கலேம்மா…..உங்க கூட சேரமுடியாத ரொம்ப தூரத்துக்கு போயிட்டேன்  மன்னிச்சிக்கோப்பா…” அவள் பிதற்றலில் இருந்து அவளுக்கு தந்தை, தாய், தங்கை , இருக்கிறார்கள் என்பதை தெரிந்துக் கொண்டவன்.

தனக்கு தெரியும் என்பதை அவளிடம் தெரியப்படுத்தவில்லை. தன்னிடம் இருந்து மறைப்பது  மறைத்தாகவே இருக்கட்டும் விட்டு விட்டான்.

“ஆயூ போகலாம்” ஆயிஷாவுடன்  மது அருந்தினால் ஒரு லிமிட்டோடு இருப்பான்.ஆயிஷா தன்னிலை மறக்கும் அளவுக்கு தான் எப்போதும் குடிப்பாள். அதனால், தான் வரம்பு மீறாது பார்த்துக் கொள்வான்.

இன்று ஏனோ அவன் நிலையும் மீறியதாய்  அவனே தள்ளாட எப்படி ஆயிஷாவை கூட்டி செல்வான்.

விளைவு ஆயிஷா ஓட்டி சென்ற கார் விபத்துக்குள்ளாகி  கார் முன் பக்கம் அடி வாங்கினாலும், ஆயிஷா அடிவாங்காது தப்பினாள்.

உடலளவில் மட்டும் தான்.  காலை செய்திதாளில் அனைவருக்கும்  விருந்து வைத்த ஆரெழுத்து நாயகனுக்கு,  தன்னையே விருந்தாக்கிய மூன்ரெழுத்து நாயகி.

“ஏன்டா அந்த பெண்ண பிடிச்சி இருந்தா….நிரந்தரமா வெச்சிக்க வேண்டியது தானே…. இது என்னடா….கர்மம்.”

முன் தலை முறைக்கு நாயகனாக இருந்த சர்வேஷ்வரின் தந்தை நாகேந்திரன் செய்திதாளை  டீப்பாவின் மீது தூக்கி போட்டு கத்த…

நேற்று இரவு அளவுக்கு மீறி குடித்ததால்  தன் கெஸ்ட் அவுஸில் இருந்து காலை ஆறுமணிக்கு வீடு வந்தும், போதை கலையாது போகவே இன்னும் கொஞ்சம்  தூக்கம் போட்டு விட்டு வந்தால் அப்பாவின் இந்த அர்ச்சணை…

தந்தை தூக்கி போட்ட செய்திதாளை படித்தவன். ஆயிஷாவுக்கு ஒன்றும் இல்லையே என்று கைய்பேசியின் மூலம் தெளிவுபடுத்திக் கொண்டு,  இப்போ என்ன என்பது போல் தந்தையை பார்த்தான்.

“ அந்த பொம்பளைய பிடிச்சி இருந்தா  நிரந்தரமா வெச்சிக்க வேண்டியது தானே…..” தான் போன வழியை மகனுக்கு காட்டினார்.

“பிடிச்சி இருந்தா கல்யாணம் தானே செஞ்சிக்குவாங்க…..?” தலையில் அடித்துக் கொண்டே லெமன் டீயை  மகனின் கையில் திணித்து விட்டு செல்லும் தாயை பார்த்து ஒரு நமுட்டி சிரிப்போடு கேட்டான்.

“என் வீட்டு வாரிசு புனிதமானவள் மூலமா தான் வரனும்.”

“அதுக்கு நாமும் அப்படி இருக்கனும்…..?” மகனின் பேச்சில் எங்கு ஆயிஷாவை இந்த வீட்டு மருமகளாய் கொண்டு வந்து விடுவானோ என்ற பதட்டத்தில்….

“**** அந்த இயக்குனர்  அவர் மகளை உனக்கு கொடுக்க பிரியப்படுறார். ”

“ அந்த பெண் ரொம்ப புனிதமானவளோ…..?” தன்கெஸ்ட் அவுசுக்கு இரண்டு முறை வருகை தந்துள்ளவளை  பற்றி தெரிந்துக் கொண்டே தந்தையிடன் வினாவினான்.

“ அவ சினிமா பக்கம் வந்தது இல்லடா….” திரைவுலகில் இருப்பவரே இப்படி சொன்னார்.

“ஒ அப்படியா….?” என்று சொல்லும் போது அவனின் மேனஜர் சிவபிரகாஷ்  வந்து விட்டான்.

கால்ஷீட்டின் படி இன்றைக்கு  உண்டான படப்பிடிப்பை சொன்னதும், தந்தையுடனான பேச்சை  அத்தோடு முடித்துக் கொண்டான் சர்வேஷ்வர்.

**************************************************** “ நான் சொன்ன நாவல் எடுத்து வைக்க சொன்னனே  இன்னும் வரலியா அபிராமி.” ஐந்து வருடமாய் அந்த நூலகத்தில் வேலை பார்க்கும் அபிராமியிடம் எப்போதும் அந்த நூலகத்துக்கு வந்து போகும்  பெண்மணி பழக்கத்தில் கேட்க.

“ நீங்க  கேட்ட மாதிரி தான் எல்லோரும் அந்த நாவல கேட்குறாங்க மாமி . இன்னும் இரண்டு நாள்ல வந்துடும். வந்தா உங்களுக்கு எடுத்து வைக்கிறேன்.” அவர் தந்த  புத்தகத்தை எடுத்து வைத்து விட்டு, இப்பொழுது எடுத்த புத்தகத்தின் பெயரை எழுதி அவரிடம் கொடுத்துக் கொண்டே இன்முகத்துடன் சொன்னாள் அபிராமி.

“சரிடா குழந்தை மறந்துடாம எடுத்து வெச்சிடு என்ன…..?” தன் மடிசார் புடவையை  சரிப்படுத்திக் கொண்டே சென்றார், அந்த மாமி.

நாவலை தேடுகிறேன் என்று கலைத்து போட்ட புத்தகத்தை, அந்த அந்த இடத்தில் வைத்து விட்டு, எடுத்து போன புத்தகத்தை காலம் சென்றும் திருப்பிக் கொடுக்காதவர்களின் பெயர்களை எல்லாம் எழுதி முடித்து  நேரம் பார்க்க, அது சரியாக ஒன்று என காட்டியது.

தன் கைய்பேசி மூலம் வீட்டுக்கு அழைப்பு விடுத்தவள்…. “ அம்மா அப்பாக்கு சாப்பாடு, மாத்திரை, எல்லாம் ஒழுங்கா கொடுத்துட்டேலா…..?”

அந்த பக்கம் என்ன சொல்லப்பட்டதோ….. “தோம்மா சாப்பிட்டுறேன்.”

“ஆ வேல எல்லாம் ஆச்சி….”

“ம்…ம்.” முடித்து விட்டு தன் தாய் கொடுத்து விட்ட எலுமிச்ச சாதத்தோடு, சேனை  வறுவளையும் சேர்த்து சாப்பிட்டு முடித்த அபிராமியின் படிப்பு தகுதி, பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி.

படிப்பு வரவில்லை என்று  அவள் படிப்பு தடைப்படவில்லை. குடும்ப பிரச்சனையால் தடைப்பட்டது. அபிராமிக்கு பார்மஸி படித்து சொந்தமாக மருந்தகம் வைக்க வேண்டும் என்ற கனவு.

அந்த கனவில் இடி இறக்கிய அவர் தோப்பனார். கூடவே மாப்பிளை தேடும் படலமும் ஆராம்பித்து விட்டார். அவள் பன்னிரெண்டாவது முடித்த  கையோடு ஆராம்பித்த மாப்பிள்ளை தேடும் வேட்டை இன்னும் முடிவுக்கு வரவில்லை.

பெண் அழகு இல்லை என்று ஒருவரும் சொல்ல முடியாது . செதுக்கி வைத்த சிற்பம் போல் இருப்பாள். நிறம் இப்போது சாப்பிட்ட  எலுமிச்ச நிறம். உயரத்துக்கு ஏற்ற உடல் வாகு.

எங்கும் சதை ஏற்றியோ…குறைந்தோ இருக்காது. வீட்டில் நகை, சீர் அனைத்திலும் ஒரு குறை இல்லாது செய்ய ரெடியாக இருந்தாலும் ,  வயது இருபத்திநாளாகியும், இன்னும் கல்யாண மார்கெட்டில் அவள் விலை போகவில்லை.

பிதிங்கி வழியும் பஸ்ஸை பார்த்து அபிராமி முழியும் பிதிங்கியது. இருந்தும் அடித்து பிடித்து ஏறினாள். இன்னும் இரண்டு நிறுத்தத்தில் இறங்குவது தானே சமாளித்து விடலாம். இத்தனை வருட பழக்கத்தில் ஒரு கையால் விழாமல் பிடித்துக் கொண்டு, அடுத்த கையால் கைப்பையின் ஜிப்பை திறந்து பயணச்சீட்டு கேட்க….

அவன் முறைத்த முறைப்பில் அவசரமாக ஒரே கைய்யால் சில்லரையை எடுத்து நீட்டியவளிடம்…. “ இப்போ எப்படி வந்தது…..?” அனைவரும் கேட்கும் படி சத்தமாக திட்டி விட்டே  சென்றார்.

சென்னை வந்த புதியதில் இந்த பேச்சுக்கு எல்லாம் கண்ணில் கண்ணீர் வழியும். இப்போது பழகி விட்டது.

அபிராமிக்கு சென்னை வாசம்  ஐந்து வருடமாய் தான். சொந்த ஊர் ஆற்காடு. அங்கு இருக்கும் பெல் கம்பெனியில் தான் தந்தை  வேலை பார்த்தார்.அப்போது அளவான அழகான குடும்பம்.

இப்போது….?  அவள் பெருமூச்சு விடுவதற்க்கும்,  தான் இறங்க வேண்டிய இடம் வருவதற்க்கும், சரியாக இருந்தது.

குரோம்பேட்டையில் இருக்கும் நூலகத்தில் தான் அபிராமி வேலை பார்க்கிறாள். இருப்பிடம் பழவந்தாங்கல்.

பேருந்து நிறுத்துமிடத்துக்கும் அவள் வீட்டுக்கும் பத்து நிமிட  நடைபயணம். ஒரு சந்தில் நாயின் சத்தம் அதிகமாய் இருக்க.

காக்க காக்க கனகவேல் காக்க…..கந்தசஷ்ட்டி சொல்லி முடிக்கவும், அவள் வீடு வருவதற்க்கும் சரியாக  இருந்தது. வீட்டு வாசலில் நின்றுக் கொண்டு இருந்த அபிராமியின் தாய் மரகதம் மகள் வாயின் முனு முனுப்பில்…

அங்கு நீர் நிறப்பி இருந்ததில் இருந்து  ஒரு குவளையில் நீர் எடுத்து அவளிடம் நீட்டிய வாறே….

“ என்ன நாய் பயமா…..?” என்று  சொன்னவர்.

“ஜலத்த கால் முன் பாகம் மட்டும் ஊத்தாதேடி….பிடிச்ச பீடை போதும்.” எப்போதும் சொல்லும் சுப்ரபாதம் தான், எப்போதும் போல் கேட்டுக் கொண்டே…

“மா பசிக்குது. முதல்ல தட்ட எடுத்து ஏதாவது வைய்.”  காலோடு ,முகத்தையும் அலம்பி விட்டு, தந்தை நாரயணனை பார்க்க அவர் அறைக்கு சென்றாள்.

ஒரு கைய் ஒரு கால் விலங்காது, கடந்த  ஐந்து வருடமாய் படுக்கையில் தான் இருக்கிறார். ஆரம்பித்தில் அவரை பார்த்தாலே அபிராமியின் கண்ணில் கண்ணீர் தன்னால் வழியும். இப்போது  இதுவும் சாதரணம் என்ற வகையில் பழகி விட்டது.

ஸ்டோக்கின் உபயோகத்தால் வாயும் ஒரு பக்கம் இழுத்து கொள்ள, பேச்சும் சரியில்லாது தான்  ஒலிக்கும். ஒரு கை கொண்டு சைகையில் “சாப்பிட்டியா…..?” கேட்டவரிடம்.

“இல்லேப்பா….நீங்க சாப்பிட்டிங்கலா…..?”

“இல்லை….” என்றதும் அங்கு இருந்தே…

“மா….அப்பாக்கும், நேக்கும்,  சேர்த்து எடுத்துட்டு வாங்கோ.” சில சமயம் என்பதை விட, பல சமயம் இது போல் அவர் அறையிலேயே அனைவரும்  உண்பர்.

தந்தைக்கு ஊட்டி கொண்டே தானும்  தன் வாயில் இட்லியை பிய்த்து போட்டுக் கொண்டு இருந்த அபிராமி,  அம்மா ஏதோ தன்னிடம் பேச வருவதும், பின் தயங்குவதுமாய் இருப்பதை பார்த்து…

ஏதும் சொல்லாது தந்தைக்கு போதிய  அளவு ஊட்டியவள். தானும் தேவைக்கு ஏற்ப சாப்பிட்டு முடித்து விட்டு…

“ம் சொல்லுங்கம்மா…..?”  அங்கு இருந்த துண்டால் தந்தையின் வாயை  துடைத்துக் கொண்டே கேட்டாள்.

“எ..ன்ன….?”

“  மாப்பிள்ளையின்  பெயர்….என்ன வேலை …..?. அந்த விவரம் தான்.”

முதலில் கஷ்டமாக கடக்கும் இந்த பெண் பார்க்கும்  வைபவம், இப்போது மிக சுவாரசியமாக ரசிக்க ஆராம்பித்து விட்டாள்.

அவன் தன்னை அளவிடும் போது அருவெறுத்தது போனவள்.  இப்போது மாப்பிள்ளையை தான் அளவிட்டு மனதுக்குள் கமெண்ட் கொடுப்பது குஷியாகி போக…

இந்த வைபவத்தை எதிர் பார்க்கவே ஆராம்பித்து விட்டாள், என்று  தான் சொல்ல வேண்டும்.

மகளின் மாற்றத்தில் கலங்கிய முகத்தை  சீர் செய்துக் கொண்டே…. “ பெயர் பட்டாபி….தோப்பனார்….”

கை காட்டி நிறுத்து என்று  சொன்ன அபிராமி…. “வேலை…..” கேட்டதுக்கு மென்று முழுங்கிய வாறே…

“ விசேஷ வீட்டுக்கு எல்லாம் சமச்சி….”

“சமையல் கான்ரெக்ட்டா….?”

“இல்ல அவ கிட்ட வேலை பாக்குறா….”

“ஓ….சமையல்காரரா” எதுவும் சொல்லாது எழுந்து போகும் பெண்ணை என்ன சொல்வாளோ ஆர்வமுடன் பார்த்த தாயின் மனது நோகாது.

“பாருங்கம்மா….” எழுந்து தன் அறைக்கு சென்று விட்டாள்.

 

Advertisement