Advertisement

அத்தியாயம்….5

“அ..பி ….” அதற்க்கு  மேல் நாரயணனால் பேச முடியாது. எப்போதும் போல் பக்கத்தில் இருக்கும் நோட்டில் அதுவும்  கிறுக்கலாக தான் எழுத முடியும்.

“அபி இன்னுமா எழுந்துக்கல….. “ கணவன் எழுதி கேட்டதற்க்கு….”

“நேத்து தேவி கூட ட்ரஸ் வாங்க போயி  லேட்டா தான் வந்தா….டையடா இருக்கு போல….தோ நான் போய் எழுப்புறேன்.” சொன்னது  போல் அபிராமியை எழுப்பினார்.

எழாமல்…. “அம்மா  ப்ளீஸ் …..” திரும்பவும் போர்வையை இழுத்து  போர்த்திக் கொண்டாள்.

எப்போதும் விடியலில் எழும் அபிராமி இன்று  சூரியோதையம் பின்னும் எழாமல் இருக்கும் மகளின் கழுத்து பகுதியில் தொட்டு பார்த்து விட்டு, சூடு இல்லை என்றதும் கதவை சாத்தி வெளியில் வந்த  அன்னை மரகதத்துக்கு ஏனோ இன்று அகல்யாவின் நினைவு அதிகமாய்…

இவளை போல் தானே அவளையும் வளர்த்தேன். அவள் வளர்ப்பில் எங்கு தவறினேன்.அன்றைய நாளை இன்று நினைத்தாலும் உடல்  முழுவதும் அனலாய் கொதிக்கும்….

சர்வசாதரணமாய் கருகலைத்து விட்டேன். இருபது வயது மகளாள் எப்படி பேச முடிந்தது. அடுத்து அடுத்து அவர் கனவிலும் நினையாதது.

திரையில் அவளை பார்த்த அண்டை அயலார்கள் எல்லாம் சொன்ன ஒரே வார்த்தை வளர்ப்பு சரியில்லை. முதலில் கசந்த அந்த வார்த்தை போக போக….வண்டியில் யாராவது இடிப்பது போல் வந்தால், அவனை திட்டாது, அவன் தாயை தானே திட்டுகிறோம். வண்டி ஓட்ட கூட தாயா கற்றுக் கொடுக்கிறாள். ஒரு கஷ்டம் வரும் போது தான் மனதில் எத்தனை பக்குவம்.

அகல்யா திரையில் எப்போது மின்ன ஆராம்பித்தாளோ….அப்பொழுதிலிருந்து படத்தையே பார்ப்பது இல்லை. வீட்டில் இருந்த டீவியை கூட பரண்மேல் ஏற்றியாகி விட்டது.

அவர்கள் அகல்யாவை மறக்க நினைத்தாலும், மறக்க விட்டது இல்லை அக்கம் பக்கத்தினர். அதுவும் அபிராமியை பார்க்க வந்த வரன் அனைவரும் தட்டி கழிக்க சொன்ன ஒரே காரணம் அகல்யா….

இந்த ஊருக்கு வந்து கூட…..தொடர்வது தான் வேதனை. இன்னும் பார்க்கும் வரன் அனைத்தும் கோயிலில் வைத்து பார்ப்பது தான். உண்மை மறைக்க கூடாது என்று சொன்னால் விளைவு….

“இந்த சினிமா எல்லாம் எங்க குடும்பத்துக்கு சரிப்படாது என்பது தான்.” கோயிலில் பார்ப்பதால் என்னவோ இன்னும் வீட்டு உரிமையாளருக்கு தெரியவில்லை. தெரிய வந்தால்…..

இன்னும் எத்தனை நாள் மூடி மறைக்க முடியும். என்றும் இல்லாது இன்று ஏன் அவள் நியாபகத்தின் நினைவுகள் அதிகமாய் தெரியவில்லை.

தூக்கத்தின் காரணத்தை சொல்லி அன்னையை அனுப்பி விட்டவளுக்கு, இரவில் இருந்து தூக்கம் வருமா என்று அடம் பிடித்து தூரம் போயின…

போனவ அப்படியே போனவளா இருந்து இருக்க கூடாதா…..?  எங்கோ ஏதோ இருக்கா என்று நினைத்திருக்க…..எந்த நிலையில் அய்யோ…..அம்மா, அப்பா இதை தாங்குவார்களா…. ?முதலில் இதை எப்படி எடுத்துக் கொள்வார்கள். இதையும் அவமானமாய்…..தெரியவில்லை.

இதே சிந்தனையில் ஒரு வாரம் கடந்தது. ஆனால்  மனம் ஆறுவதற்க்கு பதில் குழப்பம் தான் அதிகமாய். அதுவும் சர்வேஷ்வரின் கைய்பேசி அழைப்பு.

இந்த ஒரு வாரத்தில்  கைய்பேசி மூலம் அகல்யா அழைத்ததோடு சர்வேஷ்வர் தான் அதிகமாய் அழைத்து இருந்தான்.

அவன் பேச்சில் அகல்யா மீது இருக்கும் அக்கறை தெரிந்தாலும், அதை விட அதிகமாய் தன்னிடம் உரிமை எடுத்து பேசுகிறானோ…..?அவனுடனான கைய்பேசி உரையாடலை  யோசிக்கும் போது இந்த எண்ணம் எழுவதை அவளாள் தடுக்க முடியவில்லை.

பேசுவது என்னவோ அகல்யாவை பற்றியது தான், பேச்சி முடிவில்…. “இதை நினைத்து உன் உடம்ப கெடுத்துக்காதே…..” ஒருமை அழைப்பு…. இது போல் பல,

இதை பெரியதாக நினைத்து கேட்க முடியவில்லை. அவன் உலகில் இது எல்லாம் சாதரணமானதாக இருக்கலாம். இதை கேட்க போய்…. “ நீ எல்லாம் எனக்கு ஒரு ஆளா…..?” கேட்டால், மனதால் நினைத்தால் கூட அவமானம் தானே…

இன்னும் மகள் வராததால்….. “அபி இன்னிக்கு  வேலைக்கு போகலையா…..?” சாம்பாரை கலக்கிக் கொண்டே கேட்கும் போது தான்….

அதை மறந்துட்டனே…..ஐந்து வருட பழக்கத்தையே குழப்பி விட்டது அகல்யாவின் சந்திப்பு. அகல்யா சந்திப்பால் மட்டுமா…..?

குளித்து முடித்தவள், கட்டில் மேல் அகல்யா  எடுத்து கொடுத்த உடையும், தேவி எடுத்து கொடுத்த உடையும் பக்கம் பக்கம் வைத்தவள், எதை உடுத்தலாம் யோசிக்கும் வேளயில்… “என்னடி இன்னுமா கிளம்பல…..?” கேட்டுக் கொண்டே அறைக்குள்  நுழைந்தவர், கட்டில் மேல் இருந்த உடையை பார்த்து….

“நல்லா இருக்கே…..இது தான் தையல்காரன் கிட்ட சரிப்படுத்த கொடுத்துட்டு வந்தியா……?” எடுத்து அவள்  மேல் வைத்து அளவு பார்த்துக் கொண்டே கேட்டார் மரகதம்.

அன்று அபிராமி வீசிய கைய் வெறும் கையோடு  வந்ததை பார்த்தவர்…. “எதுவும் வாங்கலையா……?” மரகதம் கேட்டதற்க்கு,

“அளவு சரியில்ல அது தான் தையல்காரன் கிட்ட கொடுத்துட்டு வந்தோம் ஆன்டி.”  தேவி சொல்லி சமாளித்ததோடு மறு நாளே தான் மட்டும் சென்று அவளுக்கு ஏத்த உடையை எடுத்து வந்து கொடுத்து விட்டாள்.

எப்போதும் தன் வாயை பிடுங்க பார்க்கும் தேவி  அகல்யாவை பற்றி வாய் திறக்காதது அபிராமிக்கு அதிசயமாகவே இருந்தது.

ஐந்து வருட நட்பில்…. “தேவி அவங்க…..” ஆராம்பித்தவளை முடிக்க விடாது…..

“நான் விளையாட்டு தனமானவ தான். ஆனா மனிதர்களோட உணர்வ என்னால புரிஞ்சிக்க முடியும் அபி.  இந்த விஷயம் எவ்வளவு நுட்பமானதுன்னு எனக்கு தெரியும்.

இப்போ நீ ரொம்ப டிஸ்டப்பா இருக்க. இதை பத்தி இப்போ பேசாதே….கொஞ்சம் ஆற போட்டு, பிறகு என் கிட்ட சொல்லனுமுன்னு தோனினா சொல்.  சொல்லலேன்னாலும் பரவாயில்ல. நீ எனக்கு எப்போவும் அந்த அம்மாஞ்சி அபி தான். அதில் எந்த மாற்றமும் இல்லை.” எப்போதும் விளையாட்டு தனத்தோடு சுற்றும் தேவியின் பக்குவமான பேச்சில் அபியே அசந்து தான் போனாள்.

அவள் கைய் பிடித்து…. “ என்னை புரிந்து கொண்டதுக்கு ரொம்ப தேங்ஸ் தேவி.”

“ஒன்னு இரண்டு வருஷம் இல்ல. ஐந்து வருஷம் பிரன்ஷிப்,  இந்த அளவுக்கு கூட புரிஞ்சிக்கலேன்னா…..” அதற்க்கு மேல் பேசாது தான் வாங்கி வந்த  ட்ரஸை அவள் கையில் திணித்து விட்டு சென்றாள்.

அடுத்த நாளே தான் வேலை பார்க்கும் நூலகத்தின் முகவரிக்கு ஒரு பார்சல். விடுநர் முகவரியில் இடம் பெற்ற பெயர் அகல்யா….அவள் நிலை புரியாது இருந்து இருந்தால் அதை கையில் கூட தொட்டு இருக்க மாட்டாள். ஆனால் இப்போது ….

அதோடு அகல்யா கைய்பட எழுதி இருந்த….. “இந்த பிறந்த நாளுக்கு  உன்னோடு நேரம் கழிக்க விரும்புகிறேன். அடுத்த வருடம் என் நிலை எப்படியோ…..?”  அந்த வார்த்தை அவளை பலமாக தாக்கியது. தொலை பேசி எண் தெரிந்து இருந்தும் ,அதற்க்கு  அவள் பதில் அளிக்கவில்லை.

படுக்கையில் அகல்யா வாங்கி கொடுத்த ட்ரஸை பார்த்து இதை அணிந்து இன்று  முழுவதும் அவளோடு இருந்தால் தான் என்ன…..?

யோசனையுடன் இருக்கும் போது தான் மரகதம் வந்து அகல்யா வாங்கி கொடுத்த ட்ரஸை அவள் மேல்  வைத்து….. “இது நல்லா இருக்கு அபி. இன்னிக்கி இத போட்டுட்டு போ…..” புது துணியை பார்த்த பின் தான் மரகதத்துக்கு ஒரு வாரமா  அகல்யாவின் நினைவு அதிகம் வந்ததற்க்கு உண்டான காரணம் புரிந்தது.

அகல்யா எப்போது வீட்டை விட்டு போனாளோ….அப்பொழுதில்  இருந்து, பிறந்த நாள் அன்று வைக்கும் பாயசமும் காணாமல் போனது.

பாயசத்தை  அபியோடு அகல்யா தான் விரும்பி குடிப்பாள். அவளை வெறுத்தாலும், தாய் பாசம்… அன்று பாயசம் வைப்பதற்க்கு தடை போட்டது.

அபிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூட சொல்வது இல்லை. இந்த வருடம் தேவியால் புது துணி என்று  நினைத்தவர். ஒரு பெண்ணுக்காக அடுத்த பெண்ணின் ஆசையை மிதித்து விட்டமோ….காலம் கடந்து சிந்தனை.

மரகதம் அகல்யா எடுத்து கொடுத்ததையே அணிய சொன்னதும், ஏனோ அக்காவோடு செல்ல அம்மாவே அனுமதி கொடுத்து விட்டது போல் ஒரு எண்ணம்.

அந்த துணிவில் அகல்யா எடுத்து கொடுத்த ஆடையை அணிந்து நூலகத்துக்கு சென்றாள். அவளுக்கு தெரியும் தன்னுடை வேலை நேரம். அவளே தன்னை தொடர்பு கொள்வாள்  என்ற எண்ணத்துக்கு ஏற்ப…

அங்கு வந்த  நூலகத்தின் மேற்பார்வையாளர்  பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்ததோடு….. “ இன்று உனக்கு விடுமுறைம்மா.” என்றவரிடம்…

“சார் அப்போ…..” நூலகத்தை  யார் பார்த்துக் கொள்வார் என்ற  சிந்தனையில் அவரை பார்த்தவளிடம்…

“ நான் இன்னிக்கு பார்த்துக்குறேன்.” சொல்லி அனுப்பி விட்டார்.

கைய்பையில் இருந்து பேசியை எடுத்தவள், தொடர்பு கொள்வாளோ….சிந்தனையில்  வெளியில் வந்தவளுக்கு, சாலையை மறித்தது போல் இருந்த கார் இவளுக்காக திறந்ததும்….

ஒரு நிமிடம் பயத்தில்  நெஞ்சில் கை வைத்து இரண்டடி பின் எடுத்து வைத்தவள், காரில் இருந்து இறங்கிய சர்வேஷ்வரை பார்த்து நெற்றி முடி மேல் எழும்ப….யோசனையுடன் பார்க்கும்  வேளயில்…

காரில் கண்ணாடியின் கீழ் இறக்கத்தால் அகல்யா தெரிந்தும், அபிராமிக்கு  அந்த காரில் ஏற ஏனோ தயக்கம்.

“சீக்கிரம்….”  சுற்றும் முற்றும் பார்வை சுழல விட்ட வாறே சொன்ன அகல்யாவின் அவசரம் அதற்க்கு மேல் அபிராமியை சிந்திக்க விடவில்லை.

சிந்திக்க விடாதது அகல்யாவின் அவசரம் மட்டுமா……? அபிராமியின் நியாயமான மனசாட்சி….

சர்வேஷ்வர் பார்த்த ஆளை தின்னும் பார்வையில்  தான் அவசரமாக காரில் அமர்ந்து கொண்டதுக்கு காரணம் அவள் மனசாட்சி எடுத்து உரைத்தது.

பின் இருக்கையில் தன் அக்காவோடு அமர்ந்த அபிராமி ,அந்த பெரியகாரில் அனைத்து வசதியும் ,  காரின் அளவையும் பார்த்து…..அகல்யாவிடம்….

“இது தான் கேரவனா…..?” இந்த ஒரு வார பேசி உரையாடலுக்கு பிறகும் அக்கா என்ற அழைப்பு அவள்  நாவில் வர மறுத்தது.

“ இல்ல அபி. அது வேற மாதிரி இருக்கும். ஒரு நாள் காட்டுறேன்.”

இவள் அவசரமாக “வேண்டாம்.” அவளின் மறுப்புக்கு முன்….

முன் இருக்கையில் ஓட்டுனரின் இருக்கையில் அமர்ந்து இருந்த சர்வேஷ்வர்….. “ இனி அப்போ அப்போ பாக்குற மாதிரி வரும்.” எந்த அர்த்ததில் சொன்னானோ….

“எனக்கு பாக்கனும் என்ற  ஆசை எல்லாம் இல்லை.” அவசரமாக அபிராமி தன் மறுப்பை தெரிவித்தாள்.

“ஏன்….உன் வயசு பொண்ணுங்களுக்கு இதெல்லாம் ஒரு ஆசை தானே…..”

சர்வேஷ்வர் பேச்சை யோசனையுடன் கேட்டுக் கொண்டு இருந்த அகல்யா….. “ அவளுக்கு எப்போவும் அந்த ஆசை எல்லாம் இல்ல சர்வேஷ்.” சொன்ன அகல்யாவை காரின் மிரர் வழியாக  சர்வேஷ்வர் பார்க்க . அகல்யாவும் அப்போது சர்வேஷ்வரை தான் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

மிரர் வழியாகவே….. “ முன்ன சொன்னா  மாதிரி ஈசிஆர் தானே…..?” சர்வேஷ்வர் கேள்விக்கு,

“ம்.” என்ற பதிலே அகல்யாவிடம் இருந்து…

அவர்கள் பேச்சில் ஏதோ பொடி வைத்து பேசுவது போல் ஒரு எண்ணம் அபிராமிக்கு, இன்று அகல்யாவின் பிறந்த நாள் இருவரும் கொண்டாட திட்டம் தீட்டி இருப்பார்களோ…..?தான் இடஞ்சலாய்….. அதை கேட்டும் விட்டாள்.

கார் ஓடுகிறதா என்று தெரியாது  மிதந்து கொண்டு இருந்த காரின் நிலை, அபிராமியின் இக்கேள்வியால்….சர்வேஷ்வர் சட்டென்று ப்ரேக்கின் பகுதியில் கால் போக….

அந்த வேகத்தில் ஓடிய கார் திடிரென்று நிற்பதால்….அதன் அதிர்வில் விலை மதிப்பு மிக்க அந்த காரே ஒரு நிமிடம் ஆடி தான் நின்றது.

நல்ல வேலை பின் எந்த காரும் வராததால், காரும், உயிரும்,  எந்த வித சேதாரமும் இல்லாது தப்பியது.

சர்வேஷ்வரின் செயலுக்கு அகல்யா ஒன்றும் கேட்கவில்லை. அபிராமி பயந்து…. “என்ன ஆச்சி….? என்ன ஆச்சி….?”  பயந்து போய் விட்டாள்.

அவளின் காரின் பயணமே விரல் விட்டு எண்ணி விடலாம். இந்த திடிர் அதிர்வை அவளாள் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

“ஒன்னும் இல்ல.” சொன்ன சர்வேஷ்வர் முகத்தில் குழப்பத்தின் ரேகை.

ஒன்னும் இல்லாததுக்கா  நிறுத்துனான். மனதில் நினைத்ததை சொல்லாது அகல்யாவை பார்த்தாள். அவளோ ஒரு கேலி சிரிப்பு இடையூற…

“என்ன சர்வேஷ்வர்….ஆட்டமே காணாத உன் கார் ஆடி போயிடுச்சி…..”

“எப்போவும் ஒரே மாதிரி போயிட்டு இருக்க முடியுமா…..?” சொல்லியவனை கூர்மையுடம் ஆயிஷா பார்த்ததும்…. “ நான் கார சொன்னேன்.”

“அப்படியா…..?பார்த்து நல்ல கார் விபத்து ஆகாம பார்த்துக்க.”

ஏற்கனவே பயந்து  உட்கார்ந்து இருந்த அபிராமி இவர்களின் இந்த குழப்பமான பேச்சிலும், கடைசியாக அகல்யா சொன்ன விபத்து என்ற வார்த்தையாலும்…

“என்ன அக்கா பிறந்த நாள் அதுவுமா விபத்துன்னு அபசகுணமா பேசிட்டு…..” அக்கா என்ற அழைப்பு தன்னால் வந்து விழுந்தது.

தான் பேசிய பேச்சுக்கு எந்த பிரதிபலிப்பும் இல்லாது போக, பக்க வாட்டில்  தன் அக்காவை திரும்பி பார்த்தவளுக்கு அகல்யாவின் கலங்கிய முகமே கண்ணில் பட்டது.

 

Advertisement