Advertisement

அத்தியாயம்—-8

“ஏன்டி இப்படி பண்ண ….மத்தவா சொன்னது போல தானே ஆச்சி….”  அபிராமியை அடித்து கை ஓய்ந்த பின், ஒரு மூலையில் அமர்ந்து தன் தலையில் தானே அடித்துக் கொண்டு கதறி அழுதார் மரகதம்.

இவ்வளவு அடித்தும் அபிராமி இருந்த இடத்தை விட்டு அகலாது,  அமர்ந்த இடத்திலேயே பிரம்மை பிடித்தது போல் இருந்து விட்டாள்.

நேரம் சென்று உறங்கியதால் காலையில் கண் முழிக்காத அபிராமியின் விடியல்  இன்று துடப்ப கட்டை அடியில் இருந்து தான் ஆராம்பித்தது. எப்போதும் அபிராமி தான் தெரு தெளித்து கோலம் போடுவாள்.

இது போல் ஒரு சில நாள் அபிராமி  எழவில்லை என்றால், அவளை எழுப்பாது மரகதமே அந்த வேலையை முடித்த பின் தான் மகளை  எழுப்புவார்.

இன்றும் மகள் எழாது போக…..துடப்ப கட்டை எடுத்து வாசல் விளக்கி கொண்டு இருந்தவரிடம்….

தயங்கி, தயங்கி,  அந்த வீட்டின் உரிமையாளரும், தேவியின் அன்னையுமான பர்வதம்….

“மாமி…. மாமி…. இங்க கொஞ்சம் வாங்கலேன்.” தெருவில் செய்திதாளை எடுத்துக் கொண்டு போய் மரகதத்திடம் காட்டாது,  மாடியில் இருந்து இறங்கி வந்த பர்வதம், மாடியின் முடிவில் நின்றுக் கொண்டு அங்கு இருந்தே அவரை அழைத்தார்.

“தோ செத்த இத கூட்டிட்டு வந்துடுறேன்னே…..”

“இல்ல வாங்கலேன்.” செய்திதாளை பார்ப்பதும், தன்னை சங்கடத்துடன் பார்ப்பதையும் பார்த்து, ஒரு நிமிடம் திக் என்று அடித்துக் கொண்டது மரகதத்துக்கு,

தெரிந்து விட்டதோ…..அந்த ஊரில் தான் இது போல் வீடு தேடி  செய்திதாளோடு வந்து வம்பு வளர்ப்பாள்.

இவாளுக்கு தான் தெரியாதே….? யோசித்தவர். தெரிந்து விட்டதோ….அபிராமிக்கு வந்த வரனில்  யாராவது ஒருத்தர் போட்டு கொடுத்து இருப்பாளோ….

தெரு வாசலில் இருந்து பர்வதம் நின்றுக் கொண்டு இருந்த அந்த இடத்துக்கு வரும் அந்த ஒரு சில நொடியிலேயே மரகதத்துக்கு ஓராயிரம்    எண்ண குவியல்கள்.

அதற்க்கு ஏற்றார் போல் தான் பர்வதம்…. “மாமி இத கொஞ்சம் பாருங்க.” செய்திதாளில் முதல் பக்கத்தில் புகைப்படத்தோடு இடம் பெற்ற பகுதியை சுட்டி காட்டியதும், மரகதம் மனம் பதை பதைக்க தான்  அதை வாங்கி பார்த்தார். பார்த்தவருக்கு….. “பெருமாளே….” இப்போது இருப்பது போல் தான் தலையில் கை வைத்து அமர்ந்து விட்டார்.

அபிராமி நேற்று போட்டு இருந்த ட்ரஸில் ஏதோ ஒரு பெரிய வீட்டின் முன் நுழைவது போல் காட்சி….

அதற்க்கே தலையில் கை வைத்து அமர்ந்து விட்டவருக்கு, பர்வதம் தொடர்ந்து பேசிய…..

“ உங்களுக்கு நடிகை ஆயிஷாவை தெரியுமா…..? இது அவள் ஏதோ  சொல்வாங்கலே…. ஆ கெஸ்ட் அவுஸாம். அவளுது தானாம்.”

மரகதத்தின்  தலையில் குண்டை தூக்கி  போடுவது தெரியாது மேலும் மேலும்…

“அந்த ஆயிஷாவ வெச்சி இருக்கான அந்த நடிகன் பேரு கூட நல்லா இருக்குமே…..எங்க வீட்டு சனியன் கூட எப்போ பார்த்தாலும் அவன் படத்த தான் டிவியில ஓயாம பார்த்துட்டு இருப்பாள்.”

சிறிது நேரம் யோசித்தவர். “ ஆ சர்வேஷ்வர். பெயர் சர்வேஷ்வர் அவன் கூட போயி இருக்கானா….நம்ம பொண்ண பத்தி நமக்கு தெரியும்.

ஆனா இத பாக்குறவங்க என்ன நினைப்பாங்க. இந்த பொண்ணுக்கு ஏன் இது மாதிரி சவகாசம் எல்லாம்.”

இன்னும் என்ன சொல்லி இருப்பாரோ….எப்போதும் போல் காலையில் நேரம் சென்று  எழுந்த தேவியிடம் அவள் தந்தை வாசித்த முதல் குற்றப்பத்திரிக்கை…

“ இனி அந்த பொண்ணோட சேராதே…..” என்பதே…

எப்போதும் போல் ஊத்த வாயிலேயே….காபியை  குடித்துக் கொண்டே…

“ எந்த பொண்ணோட அப்பா.”

“ கீழே இருக்காளே…அபிராமி அவ கூட தான்.”

குடித்த காபி புரை ஏற….. “ஏன்….?ஏன்….? தன்னிடம் இல்லாத அனைத்து நல்ல பழக்கமும் இருக்கும் அந்த பெண்ணிடம் பேசக்கூடாதா….?

“  முதல்ல நான் கூட நல்ல பொண்ணுன்னு தான் நினச்சேன்.”

“கடைசியா நினச்சாலும்  அவ நல்ல பொண்ணு தாம்பா…”

“ பேப்பரிலேயே நாரி போய் இருக்கா…. அவ உனக்கு நல்லவளா…..?”

அதை கேட்ட தேவிக்கு உள்ளம் பதை பதைத்து விட்டது. விஷயம் பெரியது போலவே…தன்னுடைய விளையாட்டு பேச்சை கை விட்டவளாய்…

“ என்னப்பா…..?”

“நேத்து அந்த பொண்ணு பிறந்த நாளுன்னு நீ தானே சொன்ன.”

“ஆமாம்.” இப்போ அதுவா விஷயம் சொல்ல வேண்டியத சட்டுன்னு சொல்றது தானே… தன் தந்தையை கடிய முடியாது. “ ஆமா அதுக்கு இப்போ என்ன….?”

“எனக்கு ஒன்னும் இல்ல. அவ பிறந்த நாளை நடிகர், நடிகை.  கூட கொண்டாடி இருக்கா போல.”

அவளுக்கு ஏற்கனவே தெரியும். அகல்யாவோடு அபிராமி போவது. கூடவே சர்வேஷ்வரும் போயி இருக்கார் போல. ஆனால் அது விஷயம் அல்ல.

இப்போ இவர் ஏதேதோ சொல்றாரே பத்திரிகை அது என்ன….?

தந்தையிடம் எதுவும் கேட்காது அவரை பார்க்க…. “ ஒரு அப்பா பொண்ணு கிட்ட  இத பத்தி பேசக்கூடாது. உங்க அம்மா கீழே அவங்க கிட்ட காட்ட பேப்பர் எடுத்துட்டு போய் இருக்கா அத நீயே படிச்சி பாரு.”

அவ்வளவு தான் கட கட என்று படி இறங்கி தேவி வருவதற்க்குள்  பர்வதம் சொல்ல வேண்டிய விஷயம் அனைத்தும் சொல்லி முடித்து விட்டு இருந்தார்.

“அம்மா  வாங்க.” தேவி  கை பிடுத்து மேலே இழுத்து செல்ல பார்க்க…

போகும் போது கூட…. “எதுக்கும் அந்த ஆயிஷா கூட நம்ம பொண்ண தள்ளி இருக்க சொல்லு….” இனி என்ன இருக்கு தள்ளி நின்னு…

மரகதம் நினைத்ததை மேல் இருந்த தேவியின் அப்பா….. “இனி காப்பத்திக்க ஒன்னும் இல்ல. நாம தான் அவ கிட்ட இருந்து தள்ளி இருக்கனும்.” பொத்தாம் பொதுவாய் சொன்னவர்,

வீட்டு முதலாளி என்ற வகையில் மரகத்தை பார்த்து….. “ இந்த மாசம் வாடகை தர வேண்டாம். நீங்க கொடுத்த முன்பணத்தில் இருந்து கழித்துக் கொள்கிறேன்.” நாகரிகமாக வீட்டை காலி செய்யுங்கள் என்று சொன்னதோடு அவர் வேலை முடிந்தது என்று சென்று விட்டார்.

அபிராமியா…..? நினைக்க நினைக்க மரகத்துக்கு ஆறவில்லை. கீழே போட்ட துடப்பத்தை எடுத்து அபிராமியை விளாசி தள்ளி விட்டார்.

அகல்யா போல் அபிராமி தடுக்க எல்லாம் இல்லை. தென்னை துடப்பத்தின்  கீறல் அபிராமி முகத்தில் அங்கு…. அங்கு….. நன்றாகவே தெரிந்தது.

ஹாலில் இவ்வளவு நடந்தும்  நாரயணன் வாய் திறக்கவில்லை. அவர் அறையிலேயே   கூனி போய் படுத்து கிடந்தார்.

எழுந்து அமர்வதற்க்கும் ஒருவரின் உதவி தேவை படும் போது…..ரோஷம் எங்கு இருந்து வரும்.

அதுவும் இல்லாது அபிராமி முகத்தை பார்த்து  கேள்வி கேட்க எனக்கு என்ன யோக்கியதை இருக்கு.

தாங்கள்  சொன்னதை கேட்டு படிப்பை நிறுத்தினாள். தாங்கள் கொண்டு வந்த  வரனுக்கு எல்லாம் எதுவும் சொல்லாது தலை ஆட்டினாள்.

ஆனால் பலன்….யாரோ செய்த பாவத்துக்கு இவள் தண்டனை. கடைசியாக சமையல்காரனுக்கும் ஒத்துக் கொண்டாள்.

மத்தவா எல்லாம் பார்த்துட்டு போனா…..இவா தங்களை பத்தி ஆராய்ந்து, பாக்கும் முன்னவே வேண்டாம் என்று தட்டி கழித்து விட்டனர்.

எந்த முகத்தை வைத்துக் கொண்டு அவளிடம் கேட்பேன். கையாலாக தந்தையின் நிலையில் நாரயணன்.

*****************************************

“சர்வேஷ்…..” ஆயிஷாவின் குரலிலேயே அவள்   நிலை புரிந்தவனாய்…

“ அங்கு தான் வந்துட்டு இருக்கேன்.”

“நான் உன்னை நம்பினேனடா…..”

“ஆயூ…..” சர்வேஷ்வர் சொல்வதை கேட்க  ஆயிஷா தொடர்பில் இல்லை.

மூன்று வருடத்துக்கு பின் ஆயிஷாவின் வீட்டு வாசலில் பத்திரிகை காரார்களின் அணிவகுப்பு. அதை பார்த்து விட்டு திரும்பி போகும் நிலையில் சர்வேஷ்வர் இல்லை.

மனதில் வெறுப்பை சுமந்து இருந்தாலும்….. “ப்ளீஸ் வந்து பதில் சொல்றேன்.” இன் முகத்துடனே பத்திரிகாரர்களிடம் பேசி  விட்டு தான் ஆயிஷாவின் வீட்டிலேயே நுழைய முடிந்தது.

எப்போதும் தன்  அறையிலேயே தஞ்சம் புகுந்து இருக்கும் ஆயிஷா…..ஹாலில் நாளா பக்கமும்  செய்திதாளின் பக்கங்கள் சிதறி கிடக்க…

தலை விரி கோலமாய் அமர்ந்து இருந்த ஆயிஷாவின் தோள் பற்றி…. “ஆயூ….”

“பேசாதே நீ பேசாதே….நம்பிக்கை துரோகிடா…. நீ நம்பிக்கை துரோகி. அய்யோ நம்பினனே முழுசா உன்ன நம்பினனே…” சர்வேஷ்வரின் சட்டை பிடித்து கத்தியவளின் செயலில் சர்வேஷ்வர் அதிர்ந்து  விட்டான்.

“ஆயூ  நான் என்ன செய்தேன். அபி நம்ம வீட்டுக்கு வரும் போதே வேறு ஒருத்தன் படம் பிடிச்சி இருக்கான். எனக்கு அது தெரியாது. குணா கிட்ட வீட்டு வாசல்ல வைத்து அபியோடு என் படம் அது மட்டும் தான் அவன் கிட்ட சொன்னேன். எனக்கும்  இப்படி ஆகுமுன்னு தெரியாது ஆயூ. நம்ம அபிய….”

“தோ இது தான். இது தான். யார் அபிடா….எனக்கே தங்கைன்னு வெளியில சொல்லிக்க முடியல. இதுல நீ வேற….பக்காவா ப்ளான் போட்டுட்டலே….

நீயும் என் கூட வரேன்னு சொல்றப்ப என்னோட தோழன்னு நினச்சி  தானேடா கூட்டிட்டு போனேன். எல்லோரும் என் முகத்துக்கு கீழே பார்த்து  தான் பேசுவாங்க.

என் முகத்த நேரா பார்த்து பேசுனவன் நீ ஒருத்தன் தான்டா…..நம்பினேன் சர்வேஷ். உன்னை ரொம்ப நம்பினேன். என்னை ஏதாவது செய்து இருந்தா கூடா பரவாயில்ல. ஆனா…அவ…அவ….தூரோகி.”

இத்தனை பேச்சுக்கும் ஒன்றும் சொல்லாது அமைதியாக ஆயிஷா சொன்ன அதே நேர்க் கொண்டு அவளின் முகத்தை, கை கட்டி பார்த்துக் கொண்டு இருந்தவன்…

அவள் அழுது ஓய்ந்ததும் …. “இப்போ நான் பேசட்டுமா…..?” அமைதியாக கேட்டான்.

ஆயிஷா மனதில் வைத்திருந்த ஆத்திரம் வார்த்தையாய் கொட்டி விட்டதாலோ என்னவோ…. இப்போது  மனது நேரான பாதையில் யோசிக்க ஆராம்பித்தது.

அதுவும் சர்வேஷ்வரின் நேர் பார்வை. தப்பு செய்தவனால்  இது போல் பார்க்க முடியுமா…..?

இத்தனை வருடத்தில் அவனை புரிந்துக் கொண்ட பழக்கத்தால் தப்பா பேசி விட்டோமோ….? இத்தனை யோசனையும் சர்வேஷ்வரை பார்த்த வாறே…

சர்வேஷ்வரும் அப்போது ஆயிஷாவையே தான் பார்த்துக் கொண்டு இருந்தான்.

அவளின் முகமாற்றத்தில்….. “ என்ன சந்தேகம் கொஞ்சம் போச்சா…இல்ல மிச்சம் மீதி ஏதாவது இருக்கா…..? இருந்தா தெளிவு படுத்த குணா வருவான்.

ஆ அதுக்குள்ள குணா தெளிவு படுத்தேன்னா….ஏற்கனவே நீ ப்ளான் போட்டியா….பேசி வெச்சிட்டியா…..? உன் மனசுக்குள்ள ஆயிரெத்தெட்டு  சந்தேகம் வருமே…..? அதையும் அவனே வந்து தீர்த்து வைப்பான்.

அவன் சொல்லி முடிப்பதற்க்கும், குணா வருவதற்க்கும் சரியாக இருந்த்து. சர்வேஷ்வரையாவது பத்திரிக்கைகாரர்கள் சூழ்ந்துக் கொண்டார்கள்.

ஆனால் குணாவின் காரை பார்த்த மட்டில்  ராஜ மரியாதையோடு அவனுக்கு வழிவிட்டனர்.

வந்ததும் சர்வேஷ்வரை பார்த்து….. “நீங்க மேடத்த வாசல்ல வெச்சி எடுத்த போட்டோ அத மட்டும் தானே சொன்னிங்க. முதல்லையே தெளிவா சொல்லி இருந்தா…..நான் பாத்து இருப்பனே……” தன்னிடம் கொடுக்கப்பட்ட வேலை இப்படி சொதப்பி விட்டதே, குணா பேச்சில் அந்த ஆதாங்கம் வெளிப்பட்டது.

“ எனக்கும்  தெரியாது. நாங்க காருல வந்தோம். அந்த பொண்ணு செடிய பார்த்துட்டு வந்தா…அதான் தெரியல.

அதுவும் எங்களுக்கு தான் இது போல் பிரச்சனை வரப்போகுது என்று கொஞ்சம் அசால்ட்டாய் இருந்துட்டோம்.”

“ஓ….” அங்கு சிதறி கிடந்த  செய்திதாளை சேகரித்த குணா அதில் இடம் பெற்று இருந்த வாசகத்தை படிக்க ஆராம்பித்தான்.

“ பழைய  பறவையே…..புது பறவையை இணைத்ததோ…. சர்வேஷ்வர், ஆயிஷா இணைந்த புகைப்படத்தோடு ….தனியாக அபிராமி அந்த கெஸ்ட் அவுஸில் வரும் புகைப்படம்.

மேலும் வந்த செய்தியை சத்தம் போட்டு வாசிக்க கூட தகுதி இல்லாத குப்பை.

“குணா அது என்ன ராமயணமா…. படிக்க படிக்க புன்னியம் கிடைக்க. அதை தூக்கி தூரப்போடு.”

சர்வேஷ்  சொன்னது போல தூரம் போட்டவன். ஆயிஷாவின் ஓய்ந்த தோற்றத்தை பார்த்து…

“ சார் மேடமுக்கு இவங்க என்ன ஆகுனும்…..?” அபிராமிக்கும் ஆயிஷாவுக்கு இருக்குமான உறவை கேட்டான்.

குணா கேள்விக்கு, சர்வேஷ் ஒன்றும் சொல்லாது அமைதியாக இருந்தான்.

“என் தங்கை.” பதில் அளித்தது ஆயிஷா…

“அவ என் தங்கை.” அழுத்தம் திருத்தமாக சொன்னாள்.

இனி வாய் மூடி சும்மா இருந்தால் செய்திதாளில் வந்தது உண்மை என்று  ஆகிவிடும்.

அதோடு குணா பேசியதில் இருந்து சர்வேஷ்வர் துரோகம் செய்யவில்லை. நடந்த செயல்கள் சந்தர்ப்ப வசத்தால்  நடந்தது தான் என்று தெரிந்ததும் சர்வேஷ்வர் பக்க பலமாக இருக்கிறான் என்ற தைரியம் வரப்பெற்று…. எழுந்து…

“சர்வேஷ் நான் ரெடியாகுறேன். வெளியில் இருக்கறவங்கல வர வெச்சி குடிக்க ஏதாவது ஏற்பாடு செய்.” என்று தன் அறைக்கு செல்ல இரண்டு அடி எடுத்து வைத்து விட்டு திரும்பவும்  திரும்பி சர்வேஷ்வரிடம்…

குணா கையில் இருந்த பத்திரிகை  காட்டி…… “இவன் கண்டிப்பா இருக்கனும்.”

“ஆயிஷா…..” ஏதோ சொல்ல வந்தவனின் பேச்சை தடுத்து….

“ சாரி சர்வேஷ். நான் உன்ன தப்பா  நினச்சதுக்கு….” திரும்பவும்….

“சாரி இனி உன் பேச்சை கேட்க நான் தாயாராய் இல்லை.” ஏதோ தீர்மானம் எடுத்தவளாய் தன் அறை நோக்கி சென்றாள்.

 

Advertisement