Advertisement

அத்தியாயம்—–7

அந்த பகுதி அதிகம் சினிமா நட்சத்திரங்கள் தங்கள் ஓய்வு நேரத்தை  செலவழிக்க ஆடம்பரமாய் கட்டிய கெஸ்ட் அவுஸ் இருக்கும் பகுதி.

இவர்கள் போனது ஆயிஷாவுக்கு சொந்தமானது. அதை தங்கைக்கு காட்டவே  ஆயிஷா அழைத்து வந்தது.

இதை  சமீபத்தில் தான் வாங்கினாள். முதலில் எல்லாம் சொத்து வாங்க அதிக அக்கறை காட்டியது கிடையாது.

சமீபத்தில் தான் இந்த அக்கறை. வாங்கும் போதே தங்கையின் பெயரில் வாங்க தான் விருப்பம். ஆனால் ஏற்றுக் கொள்வாளோ…..தன் பெயரில் வாங்கி தங்கைக்கு உயில் எழுதி வைத்து விடலாம். சர்வேஷ்வரின் யோசனை இது.

ஆயிஷா பயந்தது போலவே அங்கு பத்திரிகைகாரர்கள் இருந்தார்கள் தான். ஆனால் இவர்களை எதிர் பார்த்து இல்லை.

ஆயிஷா வாங்கிய பக்கத்து கெஸ்ட் அவுசும் ஒரு நடிகையோடது தான். அங்கு ஒரு பெரும் புள்ளி வருவதாய் செய்தி வந்ததால் வந்த பத்திரிக்கைகாரர்களுக்கு  விருந்தாய் அமைந்தது சர்வேஷ்வர், ஆயிஷாவின் வருகை…. கூடவே யார் அந்த பெண்…..?

எதற்க்கும் இருக்கட்டும் என்று மூன்று புகைப்படங்களை எடுத்து விட்டனர்.புகைப்படம்  வெளிச்சம் என்பது ஆயிஷா, சர்வேஷ்வருக்கு நன்கு தெரியும்.

ஆனால் இதை பற்றி ஏதும் தெரியாத அபிராமி தன் மீது ஏதோ வெளிச்சம் படவும்  சுற்றி, முற்றியும், பார்த்து விட்டு தோளை குலுக்கிய வாறு கெஸ்ட் அவுசை நோக்கி நடந்தாள்.

காரில் போன இவர்கள் இருவரும் உள் செல்லாமல் அபிராமிக்காக காத்திருக்க இவள் அருகில் சென்றதும் வெளிச்சம் மின்னி மறைய ஆயிஷா சட்டென்று தன் துப்பாட்டாவை எடுத்து தங்கையின் முகத்தில் போர்த்த தன் பக்கம் இழுக்க.

இதை எதிர் பாராத அபிராமி நிலை தடுமாறி பக்கத்தில் நின்றுக் கொண்டு இருந்த சர்வேஷ்வர் மீது சாய்ந்தாள்.

பழம் நழுவி வாயில் விழுந்தது போல் இக்காட்சி  மரத்தின் மீது அமர்ந்து இருந்த பத்திரிக்கைகாரர்களுக்கு அதிர்ஷ்டமாக மாற….

இக்காட்சி ஏதோ தெய்வம் கண் முன் அருளியது போல் புகைப்படமாய் எடுத்து தள்ளி விட்டனர்.

நடந்தது என்ன என்று அறிந்த ஆயிஷா, சர்வேஷ்வர் …. “டாமீட்…..”  இருவரும் ஒரு சேர கத்திக் கொண்டே அபிராமியை உள் ளழைத்து கதவை சாத்தினர்.

அபிராமிக்கு என்ன என்று புரியவில்லை. அவன் மீது சாய்ந்ததால் திட்டினானோ….?ஆனால் அக்கா எதுக்கு  கத்தினா…..? அவள் அவர்கள் திட்டியதை பற்றி ஆராய…

ஆயிஷாவோ பயந்து சர்வேஷ்வரை பார்த்தாள். “நான் பார்த்து கொள்கிறேன்.” கண் ஜாடை காட்டி அகன்றான்.

இந்த வீட்டை எப்படி எல்லாம் தன் தங்கைக்கு காட்ட அழைத்து வந்தாள். இப்போது என்ன ஆகுமோ…..?பயப்பந்து தொண்டைக்குள்  சுழன்றது.

“அக்கா ஏதாவது பிரச்சனையா…..?” குழப்பத்துடன் கேட்ட தங்கைக்கு…

“ஆ ஒன்னும் இல்ல அபி. வா வீட்டை காமிக்கிறேன்.” தனக்கே பயம் என்ற  போது, இது தெரிந்தால் இவள் எவ்வளவு பயப்படுவாள்.

“உன் வீடாக்கா….?”

“நம்ம வீடு.” சொன்ன அக்காவின் பேச்சை காதில் வாங்காது….

“ரொம்ப நல்லா இருக்குக்கா…..” சற்று தூரத்தில் சர்வேஷ்வர் கைய் பேசியில்  பேசிக் கொண்டு இருப்பதை பார்த்து ஏதாவது செய்வான்.சர்வேஷ்வர் மீது உள்ள நம்பிக்கையில் கொஞ்சம் சஞ்சலம் அகன்றவளாய் தன் தங்கைக்கு வீட்டை சுற்றி காண்பித்தாள்.

“ எந்த பத்திரிகையின்னு தெரியல குணா…இன்னிக்கு எடுத்த புகைப்படம் எந்த செய்திதாளிலும் வரக்கூடாது. எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்ல.” அந்த பக்கம் என்ன சொல்ல பட்டதோ….

“பாக்குறேன்  இல்ல. வரக் கூடாது அவ்வளவு தான்.” ஆணையோடு கைய்பேசி அணைத்து வைத்த சர்வேஷ்வரின் நெஞ்சிலும் திக் திக் தான். தவறாய் ஏதும் நடந்து விட கூடாதே என்று மனது அடித்துக் கொண்டது.

ஆயிஷாவோடு என்றால் இதை பற்றி சட்டையே செய்து இருக்க மாட்டான். இன்னும் சொல்ல போனால் நாளை இதை பற்றி  எப்படி எப்படி எல்லாம் வரும் என்று கிண்டலில் கூட இறங்கி இருப்பான்.

ஆனால் இது அபிராமி சம்மந்தப்பட்டது. அவளை பற்றி தவறாய் ஏதுவும் வர அவன் விரும்ப வில்லை.

கொஞ்சம் யோசனையுடன் தான் அவர்களை தேடி சென்றது. வெளியில் எப்படி இருந்தாளோ அது போலவே மொட்டை மாடியில் கட்டிய நீச்சல் குளத்தை பார்த்து கண்கள் விறிய கன்னத்தில் இருப்பக்கம் கை வைத்து….

“ அக்கா தண்ணீர் கீழே லீக் ஆகாதா…..? இந்த தண்ணிய எப்படி சுத்தம் செய்வீங்க…..? சிறு குழந்தை போல் அவள் மனதில் இருந்த சந்தேகத்தை தன் அக்காவிடம் கேட்டு தெளிவுப்படுத்துக் கொண்டு இருந்தாள்.

கடவுளே இவளுக்காவது ஏதும் நடந்து விடக் கூடாது. இங்கு வரவே தயங்கியவளை கூட்டி வந்து பிரச்சனையில் மாட்டி விட்டது போல் ஆகி விடக்கூடாது.

ஆயிஷா பேச்சு தங்கையிடம் இருந்தாலும் சர்வேஷ்வர் அங்கு வந்ததில் இருந்து பார்வை மொத்தமும் அவன் மேலே இருந்தது.

ஆயிஷா தன்னையே பார்த்துக் கொண்டு இருப்பதை பார்த்து தன் கட்டை விரலை உயர்த்தி காட்டினான்.

அப்போதும் ஆயிஷாவுக்கு நம்பிக்கை வரவில்லை. கட்டை விரலை காட்டியவனின் முகத்தில் நம்பிக்கையின் சாயல் குறைவது போல் காணப்பட்டதே அதற்க்கு காரணம்.

“என்ன சந்தேகமா உன் தங்கைக்கு….?” கேள்வி என்னவோ ஆயிஷாவிடம்…..பார்வையோ அபிராமியிடம்….

தன் கேள்விக்கு பதில் இல்லாது போகவே  சர்வேஷ்வர் பார்த்ததும் தான் ஆயிஷா பதில் அளித்தாள்.

“ அவ இதுக்கு முன்ன பார்த்தது இல்ல. அது தான் மாடியில் எப்படி கட்டினிங்கன்னு கேட்டுட்டு இருக்கா…..?”

“பார்த்தா மட்டும் போதுமா…..?” இப்போது அபிராமியை பார்த்து நேரிடையாக  கேட்டான். என்ன செய்யனும் என்பது போல் புரியாது அபிராமி சர்வேஷ்வரை பார்க்க…..

“ஸ்வூம் பண்ணு. நல்லா இருக்கும்.” என்று அவளிடம் சொன்னவன்.

ஆயிஷாவிடம்….. “ உன் ஸ்வூம்  ட்ரஸை கொடு.” நானும் ரெடியாகுறேன்.

அவனின் நீச்சல் உடை உடுத்த  இரண்டடி எடுத்து வைத்தவனின் காதில்….. “ அச்சோ அபச்சாரம்.” அபிராமியின் குரல் காதில்  விழ.

“கவலை படாதே அபி. தண்ணி நல்லா சுத்தமா தான் இருக்கும். தனிப்பட்ட உபயோகத்துக்கு எல்லாம் க்ளோரின்  அதிகம் போட மாட்டாங்க.” என்று சொன்னவன்…

திரும்பவும் ஆயிஷாவிடம்…. “எதுக்கும் அந்த  க்ரீமை உன் தங்கையிடம் கொடு.” அவனின் இந்த உரையாடலால் அபிராமியின் முகம் எப்படி அஷ்ட கோணலாகிறது என்பதை கவனியாது அவன் பாட்டுக்கு பேசிக் கொண்டு போனான்.

அவனுக்கும் இந்த பத்திரிகை காரர்களின் செயலால் மண்டை காய்ந்து  கொஞ்சம் ரிலாக்ஸ் தேவையாய் இருந்தது.

இதுவே ஆயிஷாவோடு இருந்து இருந்தால்,  நீச்சலோடு கொஞ்சம் மதுவையும் கலந்து தன்னை ரிலாக்ஸ் செய்து இருப்பான்.

அபிராமி இருந்ததால் தன்னை ரிலாக்ஸ் செய்ய நீச்சல் மட்டுமே தேர்ந்தெடுத்தான்.

அபிராமியை அழைத்ததில் எந்த விகல்பமும் சர்வேஷ்வர்க்கு இல்லை. தன் கெஸ்ட் அவுசில் ஆயிஷாவோடு பல தரம்  நீந்தி இருக்கிறான்.

அது போலவே தான் அபிராமிக்கும் அழைப்பை விடுத்தான்.

தான் இவ்வளவு சொல்லியும் அபிராமி நின்ற இடத்திலேயே இருப்பதை பார்த்து அவள் முகம் பார்க்க…

ஆயிஷாவோ….. “ அவளுக்கு நீச்சம் தெரியாது.”

இது எல்லாம் ஒரு விஷயமா என்பது போல் ஆயிஷாவை பார்த்து நீச்சல் குளத்தில் மிதந்துக் கொண்டு இருந்த பாதுகாப்பு வலையத்தையும்  பார்த்தான்.

“அவ அப்படி எல்லாம் குளிக்க மாட்டா……”

“இது என்ன பொது இடமா…..?நம்ம தனிப்பட்டது தானே…..?” அவளுக்கு தான் அன்னியன் என்ற எண்ணமே இல்லாது பேசினான்.

அவன் பார்த்தது எல்லாம் தன் அங்கத்தின்  பகுதியை காட்டி தன்னுடைய கைய்யெப்பம் வாங்கிய பெண்களையே….

அதற்க்காக சர்வேஷ்வர் அபிராமியை அப்படி என்னுகிறான் என்பது இல்லை.  அவனை பொறுத்தவரை கூட நீந்துவது என்பது கூட சேர்ந்து காபி குடிப்பதற்க்கு சமம்.

“எனக்கு இது எல்லாம் பழக்கம் இல்லை.” அபிராமி  வெடுக்கென்று பதில் அளித்தாள்.

புரியாது பார்த்த சர்வேஷ்வரை…… “எனக்கு இதில் எல்லாம் பழக்கம் இல்லை.”

அதையும் சாதரணமாக எடுத்துக் கொண்டவனாய்…. “பழக்க படுத்திக்கிட்டா  போச்சி…..” அப்போதும் ஆடம்பர வாழ்க்கை நினைத்து பேசுகிறாள் என்று தான்  சொன்னான்.

“இந்த பழக்கம் எல்லாம் படுத்திக்கனும் என்று எந்த அவசியமும் எனக்கு இல்லை.” சொல்லி அந்த இடத்தை விட்டு அகன்றாள்.

“இனி பழக்கப்படுத்தி தான் ஆகனும்.” மனதில் சுகமாய்  பல நினைவுகள். இந்த உரையாடலில் பத்திரிகைக்காரன் பற்றிய பயம் கூட பின்னுக்கு தள்ள பட்டது. பின் என்ன டென்ஷன்  தன்னால் இருந்த இடம் தெரியாது போனது.

ஆனால் ஆயிஷா என்ன தான் அபிராமியிடம் சாதரணமாக பேசினாலும், உள்ளுக்குள் ஏதோ நடக்க போகிறது மனது அடித்து சொன்னது.

“என்னக்கா ஏதாவது பிரச்சனையா…..?” கடைசியாக போகும் போது கூட கேட்டாள்.

“ஒன்னும் இல்ல.” அதையே திரும்ப அழுத்தம் திருத்தமாக சொல்லி வீட்டின் தெருமுனையில் இறக்கி விட்டார்கள்.

ஆயிஷா வீட்டின் முன் வந்ததும் உள்ளே வராது கார் டாஷ் போர்டில் இருந்த வைர நெக்லஸை அவளிடம் நீட்ட….

“எனக்கா…..?”

“உனக்கு தானே பிறந்த நாள்.”

“என் தங்கைக்கும் தான் இன்னிக்கி பிறந்த நாள்.”

“ அப்படியா….?அப்போ மொத்தமா   கொடுத்துடலாம்.”

“சர்வேஷ்….”

“போதும் இது செட்டாகாது இது தானே…இப்போ அதை பத்தி பேச எனக்கு நேரம் இல்ல.குணா மெசஜ் அனுப்பி இருக்கான். போய் பார்க்கனும்.”

குணா யார் என்று தெரிந்ததால்….. “ ஒன்னும் வராம அவன் பார்த்துப்பான்லே…..”அவள் மனதில் சர்வேஷ்வரின் விஷயம் பின்னுக்கு தள்ளப்பட்டு புகைப்படம் விஷயம் முன்னுக்கு வரப்பட்டது.

“ஒன்னும் ஆகாது நான் பார்த்துக்குறேன்.” சர்வேஷ்வர் சொன்ன படி…

குணா காட்டிய புகைப்படம் அத்தனையிலும் அபிராமி, சர்வேஷ்வர் அத்தனை நெருக்கமாய்…

என்னவோ இருவரும் காலம் காலமாய் காதலர்கள் போல் அப்படி எடுத்து காட்டிய புகைப்படத்தை பார்த்து சர்வேஷ்வரே அசந்து தான் போனான்.

“பரவாயில்ல நல்ல திறமையானவங்க தான். இவங்க மட்டும் சினிமாவுல நுழைந்தால்  ஒரு ரவுண்டு வரலாம்.” சொன்ன படி பணத்தை கொடுத்து விட்டு கடைசியாக…

“இவ்வளவு தானே…..” கையில் இருந்த புகைப்படத்தை காட்டி சர்வேஷ்வர் கேட்டதுக்கு,

“ உங்களோடு இருந்த புகைப்படம் அவ்வளவு தான் சார்.” அத்தோடு விடைப் பெற்று சென்று விட்டான்.

சர்வேஷ்வர் தன்னோடு மட்டும் தானே புகைப்படம் எடுத்தது நினைத்து…..

“என்னோடு ஆயிஷாவை தவிர, ஒரு பெண்ணோடு புகைப்படம் இருக்கு. அது வேண்டும்.” மட்டும் தான் சொன்னது.

அவன்  சொன்னது  போலவே….அபிராமி, சர்வேஷ்வரோடு இருந்த புகைப்படத்தை மட்டும் அனைத்து பத்திரிக்கைகாரன் மூலம் தன் ஆள் பலத்தை காட்டி (குணா  பெரும் புள்ளிகளுக்கு வேலை முடித்து கொடுக்கும் கைக்கூலி. வெளிப்படை படையாக சொல்வது என்றால் ரவுடி.) சர்வேஷ்வர் சொன்ன வேலையை சரியாக செய்து முடித்தான்.

அவர்கள் இருவருக்கும் தெரியாத ஒரு விஷயம்…..***** பத்திரிகைகாரன் அபிராமி ஆயிஷாவின் கெஸ்ட் அவுஸ் உள்நுழையும் போதே புகைப்படம் எடுத்ததும்,

அவன் வந்த வேலையான அடுத்த வீட்டுக்கு   பெரும்புள்ளி வந்ததும், தன் கேமிராவை அவர்கள் பக்கம் திரும்பி தான் வந்த வேலை முடித்து சென்று விட்டதையும் அறியாது விட்டது தான்.

அதுவும் அந்த கேமிரா மேன் ஏதோ உதவும் என்று தான் அபிராமியை புகைப்படம் எடுத்தது.  ஆனால் அன்று இரவு ஒரு பத்திரிக்கை நண்பர் சொன்ன…

“அந்த பெண் பெரிய இடம் போல…குணாவே வந்து எடுத்த புகைப்படத்தை வாங்கி சென்று விட்டான்.” என்ற பேச்சில்…

“ஓ….” குணா எந்த காரியம் ஆனாலும், தன் ஆட்களை மட்டும் தான் அனுப்புவான். பேசிய தொகை பெரியதாக இருக்கும் பட்சத்தில் தான் குணாவே  காரியத்தில் இறங்குவான்.

“பெரிய இடமா அப்போ பெருசா செஞ்சிடலாம்” அந்த பத்திரிகைகாரன்  நாளை செய்தி தாளில் வரும் எழுத்து கூட மனதில் வரம் வர…

தன் பத்திரிகை அலுவலகத்தை நோக்கி சென்றான். சர்வேஷ்வரோ இன்று அபிராமி முகத்தில் காட்டிய  வர்ணஜாலத்தில் சொக்கி போய் துயில் கொள்ளவில்லை என்றால்….

அபிராமி அக்காவோடு இருந்த சந்தோஷத்தையும் மீறி, அம்மா அப்பாவிடம் மறைத்து விட்டமே குற்றவுணர்ச்சியில் தூக்கம் வராது படுக்கையில் கிடந்தாள்.

இவர்களின் அனைவரின் நிலையும் வெவ்வேறாய்  இருக்க. நாளை விடியலில் அனைவருக்கும் அதிர்ச்சி என்ற ஒரு நேர் கோட்டில் இணைக்கும் அந்த செய்தி பத்திரிகை அலுவலகத்தில் அச்சில் ஏற்றப்பட்டது.

 

   

 

Advertisement