Advertisement

அத்தியாயம்….6

எதற்க்கு கண் கலங்குகிறாள் என்று புரியாத அபிராமி….. “ அக்கா நான் எதுவும் தப்பா சொல்லிட்டேனா…..?”

“ம்….” மறுத்தவள். “நீ  எந்த தப்பும் செய்யல. நான் தான் தப்பு தப்பா போயிட்டேன். அப்போவும், இப்போவும், நீ  ஒரே மாதிரியா தான் இருக்கே….

நியாபகம் இருக்கா…..என் மேல கோபமுன்னா நீ பேசுவே, ஆனா அக்கான்னு  கூப்பிட மாட்ட….அப்போ அப்போ அது மாதிரி நடந்து இருக்கு. அப்போ எல்லாம் இந்த அக்கான்னு  அழைப்பு கேட்காதது ஒரு இரண்டு மணி நேரமோ…..மூனுமணி நேரமோ தான் இருக்கும்.

ஆனா கடைசி  இந்த முறை அக்கான்னு கேட்க ,நீண்ட ரொம்ப நீண்ட காத்திருப்பு  பத்து வருஷம்.”

அகல்யாவின் கை பற்றியவள்….. “அக்கான்னு  கூப்பிட கூடாதுன்னு இல்ல.” அபிராமியின் வருத்தமான குரலில்….

“புரியுது அபி.  நான் செஞ்சதுக்கு நீ இந்த அளவுக்கு என் கிட்ட பேசுவதே பெருசு.” பேசி முடித்தவளின் முகவாட்டத்தை பார்த்தவள்.

“அக்கா உடம்புக்கு ஏதாவது பண்ணுதா…..?” அந்த நோய் பற்றி எப்படி கேட்பது. அதை பற்றி ஒரளவுக்கு தான் அவளுக்கு தெரியும். நோயின் விளைவு பற்றி எல்லாம் அவ்வளவாக தெரியாது. தெரிந்துக் கொள்ள வேண்டும்.

பதிலுக்காக அகல்யாவின் முகத்தை பார்த்திருந்தவளின் மனதுக்குள் இத்தனை மனவோட்டங்கள்.

“ஒன்னும் இல்ல அபி. பயப்படாதே…..என் ப்ளீஸ்   அந்த நோய நியாபகப்படுத்தாதே அபி. உன் கூட இருக்கும் நேரத்திலாவது சந்தோஷமா இருக்கனுமுன்னு நினைக்கிறேன்.” சொல்லியவள்  பேச்சி புரிவதாய்…..

அக்காவிடம் அதை பற்றி எப்படி கேட்பது….“அக்கா…..அக்கா…..” இரண்டு முறை அழைத்து விட்டு முன் இருக்கையில் அமர்ந்து இருந்த சர்வேஷ்வரை பார்த்தாள்.

இது வரை தன்னிலையில் மூழ்கி இருந்த சர்வேஷ்வர், அப்போது தான்   காரை நிறுத்தி விட்டு அதை எடுக்காது இருக்கிறோம் என்று “போகலாமா…..?” ஆயிஷாவிடம் அனுமதி கேட்க மிரர் வழியாக  அயிஷாவை பார்க்க எண்ணி தான் பார்த்தான். அது என்னவோ பார்வை அபிராமியை தொட்டு தழுவியது.

அப்போது  தான் அபிராமியும் தன்னை தயக்கத்துடன் பார்ப்பதை பார்த்து….. “ஏதோ பேசிட்டு இருந்தாங்க போலவே…..” நியாபகம் வந்தவனாய்….

காரை எடுக்கும் எண்ணத்தை  கை விட்டு…… “நான் வெளியில் நிற்கிறேன்.  நீங்க பேசுங்க.” காரை திறக்க பார்த்தவனின் செயலில்…

அபிராமி  “அய்யோ நீங்க இருப்பதால் ஒன்னும் இல்ல.” அவசரமாக காரை விட்டு போக விடாது அவனை   தடுத்தாள்.

அப்போதும் தயக்கத்துடன் தன்னை பார்த்தவனை பார்த்து….. “உங்களுக்கு தெரியாதது  அக்கா கிட்ட பேச எதுவும் என் கிட்ட இல்ல. ஏன்னா அக்காவை பத்தி என்னோட உங்களுக்கு நல்லா தெரியும்.” கிளம்பிய இந்த சிறிது நேரத்திலேயே இது போல் இரண்டு முறை பேசுகிறாள். பத்திரிகை செய்தியை இவள் நம்புகிறாளோ…

தந்தையிடம் இதை  பற்றி பேச தயக்கம் காட்டதவன்,  அபிராமியுடன் பேச தயங்கினான்.

“சரி….” என்பது போல் தலையாட்டி விட்டு காரை எடுத்ததும் மீண்டும் தயக்கத்துடன்….. “அக்கா….” அழைப்புக்கு…

“என்ன அபி….என்ன விஷயம் எது என்றாலும் கேள்.”அகல்யா  சொல்லி விட்டாள் தான். ஆனால் சர்வேஷ்வர் போலவே அவளுக்கும் தன்னை பற்றிய கிசு கிசுவை கேட்பாளோ…..?

அவளின் பயம்  சர்வேஷ்வரை பற்றி மட்டும் அல்லாது வேறு…..என்று பயந்தவளின் மனசாட்சியோ….

“உனக்கு வந்த நோயில் இருந்தே தெரிந்து இருக்கும் நீ எப்படி என்று……இருபது வயதில் தப்பு செய்து விட்டு எந்த தயக்கமும் இல்லாது தாய் தந்தையையே நேர்க் கொண்டு பார்த்து சொல்லி விட்டு வந்தவளுக்கு…..

தங்கை  இதை பற்றி கேட்டு விடுவாளோ…..பயம். இந்த காலம் தான் மனிதர்களை எப்படி எல்லாம் மாற்றுகிறது.

அகல்யா பயப்பட்டது  போல் எதுவும் கேட்காது…… “ உங்க வீட்டுக்கு வந்தப்ப அங்கு என்ன என்னவோ இருந்தது. அதை இப்பவும் குடிக்கிறியாக்கா…..?”  மதுவையே வாய் வார்த்தையால் கூட சொல்ல தயங்கும் தங்கைக்கு இப்படி ஒரு அக்கா….

“ இப்போ  கொஞ்சம் கம்மி தான் அபி.”

“இது வேண்டாமே மொத்தமா நிறுத்திடேன்…..” சொல்வது சுலபம். ஆனால் செயல் முறை படுத்துவது,

அவளுக்கு தெரியும் முடியாது என்று இருந்தும்….. “பார்க்கிறேன் அபி.”

“பார்க்கிறேன்லா இல்ல.”  அகல்யா முன் கை நீட்டிய வாறே….. “சத்தியம் செய். இனி  குடிக்க மாட்டேன்னு.”

சத்தியம் செய்ய தயங்கியவளை பார்த்து…..” அப்போ  சும்மா சொன்னிங்கலாக்கா நிறுத்த பாக்குறேன்னும்.” ஆதாங்கத்துடன் கேட்டாள்.

“முடியாது அபி. முடியாது. அதுவும் இந்த சூழ்நிலையில் முடியவே முடியாது. வறுமையோட , தனிமை ரொம்ப கொடுமை  அபி.”

அபிராமியால் இதற்க்கு என்ன பதில் சொல்ல முடியும்.  அவளின் தனிமை போக்க வீட்டுக்கு வா என்று அழைக்க முடியுமா….?இல்லை நாங்கள் வந்து விடுகிறோம் என்று தான் சொல்ல முடியுமா…..?

இன்று அகல்யாவிடம்  இருந்தேன் என்று தெரிந்தாலே  என்ன சொல்வார்களோ என்ற பயம், இருந்தும் அகல்யாவின் உடல்நிலை கருதியே பயத்தையும் மீறி வந்தது.

இருந்தும் மனது கேட்காது…. “ குடித்தால் உடம்பு கெட்டுடும் அக்கா.” சொன்ன பிறகு  தான் அந்த வார்த்தையின் அபத்தம் அவளுக்கு புரிந்தது.

அதற்க்கு ஏற்றார் போல் அகல்யாவும்…..” இன்னும் கெட இருக்கா என்ன…..? சீக்கிரம் போனா நல்லா இருக்குமுன்னு தோனுது அபி.”

இவ்வளவு நேரமும் அக்கா தங்கையின்  உரையாடலை எந்த இடையூறும் இல்லாது கேட்டுக் கொண்டு வந்தவன், அகல்யாவின் இந்த பேச்சில்…..

“சும்மா என்ன அதுவே சொல்லிட்டு இருக்குறது. இது வந்தா உடனே சாவு இல்ல. ட்ரீட்மென்ட்  எடுத்துக்கலாம். இதுக்கு முதல் மருந்தே மனதைரியம் தான் அகல்யா…..”

“இதுக்கு மேல  தைரியம் வேணுமா என்ன…..?” அவள் சொல்வது உண்மை. தனக்கு அம்மாவாக நடிக்க ஒத்துக் கொண்ட படத்துக்கு கால்ஷீட் கொடுத்து விட்டாள்.

யாருக்கும் எதுவும் தெரியாது. சர்வேஷ்வர் தான்….. “இப்போ எதுக்கு படத்துல எல்லாம். வீட்டிலேயே  ரெஸ்ட் எடுக்கலாம்லே….”

“ஏதோ ஒரு கனவுல இந்த உலகத்துக்குள்ள நுழஞ்சிட்டேன். நல்லதோ கெட்டதோ….என் கடைசி வரை இதிலேயே இருந்துடுறேன் சர்வேஷ்.”

அதற்க்கு  மேல் அவளை வற்புறுத்தவில்லை. ஆனால் படம் வெளியூர் ஷூட்டிங் இல்லாதது போல் பார்த்துக்  கொண்டான். அதற்க்கும் பல கிசு கிசு. சட்டை செய்யவில்லை.

நடிப்பில் ஆயிஷாவை பத்தி எந்த குறையும் சொல்ல முடியாது.  அம்மாவா நடிப்பதா என்று தன்னிடம் ஆதாங்கப்பட்டவளா…..? நடிப்பில் அப்படி தத்ரூபமாய் தன் அன்னையாகவே  மாறிவிட்டாள்.

சர்வேஷ்வரே  இந்த நோய் வந்ததுக்கு ஆயிஷா சூழ்நிலையில் வேறு யாராவது இருந்து  இருந்தால்….அதிலேயே உழண்டு இருப்பார்கள். ஆனால் ஆயிஷா…..?

“ஷூட்டிங் அப்ப எல்லாம் பரவாயில்ல. ஆனா வீட்டில  நீ அதையே நினச்சிக்கிறியோன்னு தோனுது.”

சர்வேஷ்வர் எப்படி அவர்களின் உரையாடலில் தலையிட வில்லையோ…அதே போல் அகல்யா சர்வேஷ்வரின் பேச்சை அமைதியாக கேட்டுக் கொண்டு இருந்த அபிராமி….

சர்வேஷ்வர் சொன்ன ஹூட்டிங் என்ற வார்த்தையில்….. “ என்னது படத்துல நடிக்கிறியா….? ஏன்…..?”  அவளின் உடல் நிலை, ஏதாவது ஆகி விடுமோ பதட்டத்தில் கேட்டாள்.

“பயப்படாதே அபி.  நானும் அந்த படத்தில்  நடிக்கிறேன். உன் அக்காவ நான் பார்த்துக்குறேன்.” அபி…உன் அக்கா  கைய்பேசி உரையாடலில் தோன்றிய அதே உரிமை பேச்சு.

சர்வேஷ்வரை பார்க்காமல் அகல்யாவிடம்….” இந்த படம் எல்லாம் வேண்டாக்கா. விட்டுடுங்க.”

“டேட் கொடுத்தாச்சி அபி. இன்னும் கொஞ்சம் சீன் தான்.”

“வெளியூர், வெளிநாடு அப்படி  எல்லாம் இல்ல தானே….”

“அது எல்லாம் ஹீரோயினுக்கு தான் அம்மாவுக்கு எல்லாம் இருக்காது. ”

சில வருடமாய் அபிராமி படம் பார்ப்பதையே விட்டு விட்டாள். நட்பு வட்டமோ சிறியது தான்.  அவர்கள் சினிமாவை பற்றி பேசினாள், மற்றவர்களின் கவனத்தை ஈர்க்காது அங்கு இருந்து சென்று விடுவாள்.

அகல்யா சர்வேஷ்வர்க்கு அக்கா வேடத்தில் நடித்தாள். தான் வேலை பார்க்கும் நூலகத்தில் செய்திதாளை திருப்பும் வேளயில் ஏதேச்சையாக கண்ணில் பட்டது.

அகல்யா சொன்ன அன்னையில்…. “யார் …யாருக்கு அன்னை…..?”

ஓட்டுனர் இருக்கையில் அமந்து இருந்த சர்வேஷ்வரை காட்டி…. “ இதோ இந்த ஹீரோவுக்கு நான்.”  

அவள் நூலகத்தில் வரும் செய்திதாளில் அகல்யா பற்றிய செய்தியை பார்க்க கூடாது என்று என்ன தான் மனதுக்கு கடிவாளம் இட்டாலும், பாய்ந்து அந்த  செய்தியில் தான் கண் மேயும்.

அதில் அகல்யா பற்றிய செய்தியில்….பல கதாநாயகர்ளோடு சேர்த்து வைத்து வந்து இருக்கிறது. சில இயக்குனரோடும். அகல்யாவை இணைத்து அதிகம் வந்தது என்றால்…. அது இந்த சர்வேஷ்வரோடு தான்.

உண்மையா…..?பொய்யா……? அதை  பற்றி அபிராமி ஆராய்ந்தது இல்லை. ஆனால்  அகல்யா சொன்ன சர்வேஷ்வருக்கு அன்னையில் அதிர்ச்சியாகி….

“என்னது அம்மாவா…..?”

அதற்க்கு அகல்யா ஏதோ சொல்ல வர….. “ அம்மா தாயே….அதை பத்தி பேசாதே…..அப்புறம் உன் அக்கா காதுல ரத்தம் வர வரை பேசுவா……”

சர்வேஷ்வர் பேச்சை அகல்யா பார்த்துக் கொண்டு இருந்தாலே தவிர எதுவும் பேசவில்லை. ஆனால் பேச வேண்டும் மனதில் நினைத்துக் கொண்டாள்.

நட்சத்திரம்  வானத்தில் இருந்தால் தான் அழகு. தரையிறங்கினால் மதிப்பு இராது என்பது உண்மை தான் போல்.

சர்வேஷ்வரை பார்க்க மாட்டோமா….? பெண்கள் தவம் கிடக்க. அபிராமியோ அவனின் அதிகப்படியான பேச்சில், இவர்களோடு வந்தது தவறோ…. யோசிக்க ஆராம்பித்தாள்.

“ வீட்டுக்கு சீக்கிரம் போகனும்.” இருவரையும் பார்த்து தகவலாய் சொன்னாள்.

“ எப்போவும் வேலை விட்டு வீட்டுக்கும் போக ஏழு மணி ஆகும் தானே……அதுக்குள்ள வீட்டுக்கு போயிடலாம்.” சர்வேஷ்வர் சொல்ல….

“அய்யோ அவ்வளவு நேரம் எல்லாம் முடியாது.”

“ஏன்…..?” இப்போதும் சர்வேஷ்வர் தான்  கேள்வி எழுப்பினான்.

“வீட்ல சொல்லாம வர்றது இது தான் முதல் தடவை. மனசு ஏதோ குத்துதூ…..”

“யார் கூடவா போற,  அக்கா கூட தானே…..”

“யார் கூடன்னாலும், வீட்ல சொல்லாம போறது தப்பு தான்.” இந்த உரையாடல் அழைத்தும்  சர்வேஷ்வர் காரின் மிரர் வழியாக அபிராமியை பார்த்து பேசினான்.

ஆனால் அபிராமி தன் கை நகத்தினை மட்டுமே பார்த்து குனிந்த தலை நிமிராது பேசி முடித்தாள்.

“அவ என்ன போல இல்ல சர்வேஷ். வீட்ல விருப்பத்துக்கு எதிரா அவ எதுவும் செய்ய மாட்டா….” செய்ய மாட்டாள்  என்பதை மிகவும் அழுத்திம் திருத்தமாக சொன்னாள் ஆயிஷா…..

“ம்….” ஒரு கை   ஸ்டேரிங்கை பிடித்து இருக்க மற்றொரு கையால் ஐந்து நாள்  தாடியை மெல்ல நீவி விட்டான்.

பத்து வருட நட்பின்  மூலம் ,சர்வேஷ்வர் இப்படி செய்கிறான் என்றால் எதையோ ஆழ்ந்து யோசிக்கிறான் என்பதை தெரிந்திருந்த ஆயிஷா….

“ரொம்ப  யோசிக்காதே சர்வேஷ். முடியாது.”

“எது…..?” என சர்வேஷ்வர் கேட்கவில்லை.

அவ்வப்போது  இவர்கள் என்ன புரியாது பேசிக் கொள்கிறார்கள்.

“ இவர்களோடு வந்தது தவறு.” வந்த இந்த சிறிது நேரத்துக்கு எல்லாம் இதை அவள் எத்தனை தடவை நினைத்து விட்டாளோ….

கார் நின்றதும் தான் தன் நினைவில் இருந்து வெளியில் வந்த அபிராமி,  காரை விட்டு இறங்கி வெட்ட வெளியில் பார்வையை செலுத்தினாள்.

சென்னையில் இவ்வளவு அழகான இடமா…..?சென்னை வந்த இந்த ஐந்து வருடத்தில் பார்த்தது எல்லாம்  மார்க்கெட். தேவி புன்னியத்தில் ஒரு சில மால். அம்மா புன்னியத்தில் வீடு பக்கத்தில் இருக்கும் கோயில்.  மற்றும் இவள் வேலை பார்க்கும் நூலகம் இவ்வளவே….

அந்த இடத்தின் அழகில் இவ்வளவு நேரமும் நினைத்திருந்த வந்தது தவறோ….என்ற எண்ணத்தை தூக்கி போட்டவளாய் கன்னம் இரண்டிலும்  கை வைத்து அந்த அழகை ரசித்து பார்க்க.

அவள் அழகை காரை விட்டு இறங்காத சர்வேஷ்வர் ரசிக்க. இந்த சூழ்நிலையை ஆயிஷா  ரசிக்க முடியாது.

“சர்வேஷ்வர்……”  அதற்க்கு மேல் என்ன சொல்லி இருப்பாளோ…

“என்ன உன் தங்கை உன் போல் இல்லை. அது தானே…..?எனக்கும் அது தெரியும்.” என்று சொன்னவன்.

பின் ஆயிஷாவின் முகத்தை ஆழ்ந்து பார்த்த வாறே…. “என்ன ஆயிஷா தங்கைன்னு வந்துட்டா நண்பன்  உனக்கு இரண்டாம் பட்சம் ஆயிட்டான்லே…..”

“நான் உனக்கும் தான் பாக்குறேன் சர்வேஷ். ஒத்து வராததை எதுக்கு மனசுல நினச்சிட்டு இருக்கனும்.”

“ஒத்து வருமா….?வராதான்னு….?  நான் பாத்துக்குறேன் ஆயிஷா .” இவர்களின் உரையாடல் இன்னும் எவ்வளவு நேரம் நீடித்து இருக்குமோ…..”

“இறங்கலையா…..?” அபிராமியில் குரலில்…

கார் நின்ற  இடம் கெஸ்ட் அவுஸின் கேட் அருகில்…

அவர்கள் உள்ள செல்வதற்க்கு இன்னும் சிறிது தூரம் செல்ல வேண்டி இருந்தது.   காவலாளி கதவு திறக்கவே சர்வேஷ்வர் காரை நிறுத்தியது.

அந்த இடத்தின்  அழகில் இறங்கிய அபிராமியை, இருவரும் தடுக்காது இருந்து விட்டனர். அவள்  போல் அவர்கள் இருவரும் இறங்க முடியாது. எங்கு இருந்து அவர்கள் மேல் வெளிச்சம் விழுமோ…..?

“இன்னும் போகனும் காரில் ஏறு அபி.” சர்வேஷ்வர் அழைப்புக்கு,

போகும் தூரத்தை பார்வை இட்ட வாறே….. “ நான் நடந்து வர்றேன்னே……” சர்வேஷ்வர் கேள்விக்கு அக்காவை பார்த்து பதில் அளித்தாள்.

அபியிடம்….  “சரி….” என்று சொன்ன அகல்யா…

“சர்வேஷ் நீங்க  போங்க.” அபிராமியை பார்த்துக் கொண்டே காரை எடுத்தான்.

தன் மேல் மட்டும் தான் வெளிச்சம் படும் என்று தவறாய் கணித்த அகல்யா, தங்களால் தன் தங்கையின் மீதும் படும் என்று நினைக்க தவறியது ஏனோ….

 

 

Advertisement