Advertisement

அத்தியாயம்….4

தன் நினைவின்  போக்கை அறிந்த சர்வேஷ்வர் என்ன இது…..? நினைவின் ஊடே  அபிராமியை பார்த்தான். அழகி தான் ஆனால் தான் பார்க்காத அழகிகளா…..?

ஆயிஷா இவளை  விட அழகி, அதில் சந்தேகம் இல்லை. மூன்று படம் தொடர்ந்தார்  போல் அவளுடன், அனைத்தும் காதல் ரசம் சொட்டும் படம். நெருக்கமான காட்சிகளில் நடிக்கும் போது கூட அவளிடம் அந்த எண்ணம் வரவில்லை.

அதனால் தான் நடிகைகளில் அவளிடம் மட்டும் நட்புக்கரம் நீட்ட தோன்றியது. அது போல் தான் ஆயிஷாவும், அவள் தனிப்பட்டு எப்படியோ….?ஆனால் தன்னிடம்,

படம் வாய்ப்புக்கு கூட தன்னிடம் கேட்டது இல்லை.

அந்த நட்புக்கு நன்மை செய்ய தானே இப்போது  இவளை இங்கு அழைத்து வந்தது. இவள் ஆயிஷாவின் தங்கை, அதுமட்டும் தான் நினைவில் இருக்க வேண்டும்.

இவன் நினைவில் உழண்டு கொண்டு இருந்தவனை தேவி “சார்….நாம போகலாமா…..?” என்ற  அழைப்பில் ….

“ம்….” என்று சொன்னவன்,  அபிராமியிடம்…. “ நீயும் வா…..” கை பிடிக்க போனவன் என்ன நினைத்தானோ கை தன் பக்கம் இழுத்துக் கொண்டான்.

“ சும்மா சீன் கிரியேட் செய்யாதே…..” அந்த வார்த்தை அபிராமியை பலமாக தாக்கியது.

“நான் ஒன்னும் சீன் போடல. நான் இங்கு வந்தது அப்பா, அம்மாவுக்கு, தெரிஞ்சதுன்னா என்னையும் தலை முழிகிடுவா….இவளால கல்யாண வாழ்க்கை தான் கனவா போச்சி….இப்போ என் குடும்ப அமைப்பும் போகனுமா…..?”

அபிராமியின் திருமணத்தடை ஆயிஷா சொல்லி தெரியும். “இப்போ என்ன வயசு ஆயிடுச்சின்னு கனவு அப்படின்னு சொல்லிட்டு இருக்க….வா.”

இதற்க்கு மேல் போகவில்லை என்றால்,அவன் சொன்னது போல் அலட்டிக் கொள்வது போல்  அர்த்தம் ஆகும். என்று காரை விட்டு இறங்கினாள்.

இவர்களின் பேச்சை புரியாத மொழி படம் போல் பார்த்துக் கொண்டு இருந்த தேவி….. “அப்போ லவ் மேட்டர் இல்லையோ…..” மனதில் நினைத்துக் கொண்டே மூவரும் ஆயிஷாவின் படுக்கை அறைக்குள் நுழைந்தனர்.

அபிராமிக்கோ நேராக படுக்கை அறைவரை  போக இவனுக்கு சுதந்திரம் இருக்கு என்றால்…..சீ எப்படினா போகட்டும்.

“இனி  எங்க ஜோலிக்கு வராதேன்னு சொல்லிடனும். கொஞ்ச நாளா ஒரு விலை உயர்ந்த கார், தான் ஏறும்  பஸ்சுக்கு பின் தொடர்வதை பார்த்து முதலில் பயந்து தான் போனாள்.

ஒரு நாள் பஸ்சில் வந்த சகப்பயணி…. “அந்த காரில் இருப்பது நடிகை ஆயிஷா மாதிரி இல்லை.” என்றதில் பயம் தெளிந்தாலும்,

இது என்ன புது பிரச்சனை என்று  தான் யோசிக்க வைத்தது. ஊர் விட்டு ஊர் வந்து, சொந்த பந்தங்களை துரந்து, இப்போது தான் மகிழ்ச்சி இல்லை என்றாலும், கொஞ்சம் நிம்மதியாக  இருக்கிறோம்.

அது பொறுக்கவில்லையா…..?நல்லா நாக்கை பிடிங்கிக்கிற  மாதிரி கேள்வி கேட்குறேன். சர்வேஷ்வரின் அழைப்பை ஏற்று  வந்ததற்க்கு இதுவும் ஒரு காரணம்.

ஆயிஷாவின் படுக்கை அறையில் அன்று  போல் இன்றும் மது வகைகள் பரப்பி வைக்கப்பட்டு இருந்தது. சர்வேஷ்வர்க்கு இது பழகி போன ஒன்று போல் அதை ஓரம் கட்டி…

“ உட்காருங்க…இப்போ எல்லாம் ரொம்ப குடிச்சி உடம்ப கெடுத்துக்குறா…..எந்த நிலமையில் இருக்காளோ…அது  தான் உங்களை நேரா அறைக்கே அழச்சிட்டு வந்துட்டேன்.” விளக்கம் கொடுத்தான்.

குளியல் அறையில் தண்ணீர் விழும் சத்தத்தில்….கதவை தட்டி….. “ஆயூ….” என்று அழைக்க.

“தோ வந்துட்டேன் சர்வேஷ்.” சொன்ன சிறிது நேரத்துக்கு எல்லாம் வந்து விட்டாள். அவள் நேரம் இவள் வந்ததும் நேராக பார்த்தது சர்வேஷ்வரை மட்டுமே….

அபிராமியும், தேவியும்  சர்வேஷ்வர் எதிர் பக்கம் அமர்ந்து இருந்ததால் அவர்களை பார்க்காது…

“என்ன மேன் இப்போ தான் யூ டியூபில் பார்த்தேன். இரண்டு பெண்களை முகத்தை மூடி கூட்டிட்டு போறத…..நேர இங்கு வந்து இருக்க. இதுக்கு எல்லாம் நீ உன்னோட கெஸ்ட் அவுசுக்கு தானே போவ.” ஆயிஷாவின் பேச்சில்  சர்வேஷ்வர்க்கு தலையில் அடித்துக் கொள்ளலாம் போல் இருந்தது.

இந்த பத்து வருட திரைவுலகில் கூச்சம், நாச்சம், விட்டு விட்டது தான். ஆனால் இப்போ…அய்யோ…அவன் பயந்தது போல்…

“எல்லோரும் உன்னை போல் நினச்சிட்டியா……?” தங்கையின் குரலில் அவள் பக்கம் திரும்பியவள்.

“பொம்மிமா…..” தான் உடுத்தி இருந்த உடை, இப்போது தான் பேசிய பேச்சு அனைத்தும் மறந்து அவள் காலடியின் கீழ் அமர்ந்தாள்.

“வந்துட்டியாட….வந்துட்டியா….?” அவள் கையை தன் முகத்தில் பதித்துக் கொண்டாள்.

தன் கை ஈரத்தை உணர்ந்தாலும், தாங்கள் பட்ட கஷ்டங்கள் கண் முன் வர….

“சீ என்னை தொடாதே…..அருவெருப்பா இருக்கு.” அசிங்கம் தன் கையில் பட்டு விட்டால்  எப்படி முகம் போகுமோ அந்த தோற்றம் அபிராமியின் முகத்தில், கோபப்படுவாள் என்று தெரியும்.ஆனால் இந்த அருவெருப்பு…..

“பொம்மி…..”

“கூப்பிடாதே…என்ன அப்படி கூப்பிடாதே….உன் கிட்ட ஒன்னு சொல்ல தான்…”  சர்வேஷ்வரை காட்டி கூப்பிட்டதும் வந்தேன்.

“இனி என் பின்னாடி கார வெச்சி சுத்திட்டு இருக்காதே…..”

“ஏன்…பொ(பொம்மி என்று அழைக்க வந்தவள் அதை விடுத்து.)  அபிராமி. அக்கா கிட்ட இப்படி பேசுற….?”

காதை தன் இருகரங்கள் கொண்டு மூடியவள். “அப்படி சொல்லாதே….அந்த அந்த வார்த்தையால் தான் ஊர் விட்டு ஊர், சொந்தம், பந்தம், விட்டதோடு, என் படிப்பு எல்லாம் போச்சி.

ஏதோ இங்கு வந்து யாருக்கும் எதுவும் தெரியாம நிம்மதியா இருக்கோம். இதையும் கெடுத்துடாதேன்னு சொல்ல தான் வந்தேன். வர்றேன்.” என்று ஒரு அடி எடுத்து வைத்தவள்,

பின்… “போறேன்.” தேவியை பார்க்க அவளோ மந்திரத்துக்கு  உட்பட்டது போல் அவள் பின் செல்ல பார்த்தாள்.

“அபிராமி நில்.” சொன்னது சர்வேஷ்வர். அந்த குரலுக்கு அடுத்த அடி எடுத்து வைக்க ஏனோ மனம் முரண்டியது.

“உங்க அப்பா அம்மா அந்த காலத்து மனுஷால், அவங்க கிட்ட பேசுனா புரிஞ்சிக்க மாட்டாங்கன்னு தான் உன்னை கூட்டிட்டு வந்தேன்.புரிஞ்சிக்கிறியோ…இல்லையோ….அட்லீஸ்ட்டு  காது கொடுத்து கேட்கலாம்லே…..”

அவன் பேச்சில் திரும்பி அவனை பார்த்த அபிராமி…..அங்கு இருந்த மதுவை தன் ஆட்காட்டி விரலால் சுட்டி காட்டி…..

“இது அந்த காலம் இல்ல, எந்த காலத்துக்கும் ஏத்துக்க முடியாதது.” பின் அவள் உடையை காட்டி…

“இது….. எங்க அப்பா பாதம் தெரிவது  போல் பாவடை கட்டினாலே ஒரு முறை முறைப்பார். அந்த பார்வைக்கு என்ன அர்த்தமுன்னு தெரிஞ்சி அந்த தப்ப சரிப்படுத்துவதோடு, இனி அது மாதிரி செய்யாம பார்த்துப்போம்.

அதுக்கு இது மாதிரி உடை உடுத்துவா எல்லாம் தப்பானவங்கன்னு  சொல்ல மாட்டேன். நேக்கு பிடிக்காது. அவ்வளவு தான்.

ஆ  அப்புறம் என்ன சொன்னேல்.  சொல்றதையாவது கேளுன்னா….. ஊருல நிறைய பேர் சொல்றத கேட்டுட்டு தான் இந்த ஊருக்கு வந்து இருக்கேன். அதுவும் உங்கல வெச்சி இவள….”  ஏதோ சொல்ல வந்தவனை தடுத்து…

“நேக்கு அது பத்தி எல்லாம் ஒன்னும் தெரிய வேனா…” சர்வேஷ்வரிடம் பேசியவள், அகல்யாவை பார்த்து…..

“எங்க  வழில நாங்க போறோம்  விட்டுடு. அப்பா, அம்மா  சந்தோஷத்துக்காக சமையல் காரனுக்கு தலையாட்டி இருக்கேன்.

வழக்கம் போல உன்னால அதை கெடுத்துட்டு அவங்களுக்கு இன்னும்  மனவுளச்சல் ஏற்படுத்தாதே…..” திரும்பி பார்க்காது செல்லும் தங்கையிடம்….

“அப்போ நான் அனாதை பிணமா தான் போகனுமா…..?” என்று சொன்னவள் பின்….

“நான் செத்தா நீயாவது  எனக்கு கடைசியா பிண்டம் வைப்பேன்னு பார்த்தேன். ம் இதுவும் நல்லதுக்கு  தான், நான் என்ன நல்ல சாவ சாகப்போறேன், இதால உனக்கு இன்னும் பிரச்சனை தான் கூடும்.”  அந்த வார்த்தை கேட்டதும் போக மனது வரவில்லை.சாவு இந்த வயசுல ஏன் பேசுறா….? நினைத்தது கேட்கவில்லை.

ஆனால் சர்வேஷ்வர்….. “ என்ன பேச்சு பேசுற…ஓ அது தான் சொத்து பிரிப்பதுன்னு பேசிட்டு இருக்கியா…..?என்ன தற்கொலையா…..?”

“ஆமாம் சர்வேஷ்வர் தற்கொலை தான். அது பண்ணலேன்னாலும் சாவு  என்னை தேடி தான் வரப்போகுது. ஆனா…..ரொம்ப கேவலமான சாவா இருக்கும். நான் செத்தும் என் குடும்பத்துக்கு அசிங்கத்த தான் ஏற்படுத்துவேன்.”

“என்ன ப்ளாக் மெயிலா…..?” அகல்யாவை பார்த்து கேட்ட அபிராமியிடம்….

ஒரு  மருத்துவ அறிகையை  நீட்ட…..அபிராமி வாங்குவதற்க்குள் அதை பிடிங்கி பார்த்த சர்வேஷ்வர் அதில் இருந்தவற்றை உள்வாங்கவே அவனுக்கு ஒரு நிமிடம் பிடித்தது.

“எப்படி….?இது எப்படி….ஆச்சி….? யாரால்…..?”

“என்ன…..” அபிராமி சர்வேஷ்வரின் அதிர்ந்த முகத்தை பார்த்து குழம்பி போனவளாய்  கேட்க

பதில் சொல்லாது அந்த மருத்துவ அறிக்கையை அவளிடம் நீட்டினான். அனைத்தும் ஆங்கிலத்தில் எழுதி இருந்தது. அபிராமி படித்தது தமிழ் வழி கல்வி.

பன்னிரெண்டாவது தேர்ச்சி பெற்று இருந்தாலும் ,ஆங்கிலத்தை உன்னிப்பாக படித்தால் தான் அவளாள் உள்வாங்க முடியும்.

சர்வேஷ்வரின் பதட்டமான முகத்தை பார்த்து என்னவோ ஏதோ என்ற பதட்டத்தில் அவளாள் அந்த அறிக்கையை  நிதானமாக படிக்க முடியாது போக, அவனிடமே கொடுத்தவள்.

“எனக்கு படிக்க தெரியல, இதுல  என்ன இருக்கு….?” கேட்டவளின் முகம் முழுவதும் வியர்வை துளிகள்.

என்ன தான் அக்கா இல்லை என்று சொன்னாலும், ரத்தப்பாசமும், பதினான்கு வயது வரை ஒன்றாக வளர்ந்த பந்தமும் விடுமா…..?

தான் ஆடாவிட்டாலும், தன் சதை ஆடும் என்று சொல்வாங்கலே…..அது இது தானோ….? என்று எண்ணும் படியாக அவள் கை கெட்டியாக தன் துப்பாட்டாவை பற்றிக் கொண்டு கேட்டவளிடம் எப்படி சொல்வான்.

அவன் தயங்குவதை பார்த்து….. “பெரிய வியாதியா…..?”

தேவியை பார்த்துக் கொண்டே “ஆம்….” என்பது போல் தலையாட்டினான்.

தான் இருப்பதால் தான் இவர்கள் பேச தயங்குகிறார்கள் என்ற இங்கிதம்  தெரிந்த தேவி…

“ நான் ஹாலில் வெயிட் பண்றேன்.” அவள் கை பிடிக்க பார்த்த அபிராமியிடம்….

“போகட்டும்.” என்று சொன்ன சர்வேஷ்வர்.

தேவிடம்…. “ சாரி ….” என்று சொன்னவனிடம்….

“பரவாயில்ல சார்.” என்று சொன்ன தேவி அபிராமியின் கை பிடித்து ஒரு அழுத்தம் கொடுத்து விட்டே சென்றாள்.

தேவி சென்றதும் சர்வேஷ்வர் அந்த வீட்டு  சமையல்லாம்மாவிடம்….பேசியின் மூலம்….

“கீழே இருக்குறவங்களுக்கு ஜூஸ் கொடுங்க.ஆ முக்கியமா கொஞ்ச நேரத்துக்கு யாரையும் அம்மா அறைக்கு அனுப்பாதிங்க.”

இதை எல்லாம் சாதரணமாக பேசிய  சர்வேஷ்வர் அபிராமியை பார்த்ததும், இந்த பெண்ணிடம் இதை பற்றி எப்படி சொல்வேன்.  ஆயிஷாவை பார்த்தான். அவள் இதற்க்கும் எனக்கும் சம்மந்தமே இல்லாதது போல் அமர்ந்து இருந்தாள்.

ஒரு பெரும்மூச்சு விட்டவன், இந்த விஷயத்தை எப்படியாவது  சொல்லி தான் ஆகவேண்டும் என்று முடிவு செய்தவனாய்…

“நீ இதை எப்படி எடுத்துப்பேன்னு தெரியல…. இந்த அறிக்கையில் ஆயிஷாவுக்கு எச்.ஐ.வி இருக்குன்னு இருக்கு.” இதை அபிராமியின் முகம் பார்க்காது, மருத்துவ அறிக்கையை  மட்டுமே பார்த்தே சொல்லி முடித்தான்.

ஏதோ விழுந்த சத்தம் தொடர்ந்து…..”சர்வேஷ்….” ஆயிஷாவின் பதட்டமான குரலில் நிமிர்ந்தவன் சாஷ்ட்டங்கமாய் விழுந்து இருந்த அபிராமியை பார்த்து….

“அய்யோ…..” என்று பதறி  அவளிடம் சென்றவன் அவள் நெத்தியில்  விழும் போது டீப்பாவின் மீது பட்டு விழுந்ததால் காயம் ஏற்பட்டு,  அதில் இருந்த ரத்தம் பீச்சி அடிக்கவில்லை என்றாலும் ரத்தம் வந்தது.

“ஆயூ பஸ்ட் ஏய்ட் எடு…..” ஆயிஷாவை துரிதப்படுத்த…

“ம்….” என்று   சொல்லி அவள் மருத்துவ பெட்டியை எடுக்க போக…. தயங்கி அபிராமியை  பார்த்தவன்,

பின்… அவளை தூக்கி படுக்கையில் படுக்க வைத்தான்.  ஆயிஷா மருத்துவ பெட்டியை நீட்டிக் கொண்டே….

“எதுக்கும் டாக்டரை  கூப்பிடலாமா….?”

“வேண்டாம் இவ யாருன்னு வீண் பிரச்சனை வரும்.”  என்று சொன்னவனை பயத்துடன் பார்க்க…

“தையல் போடும் அளவுக்கு எல்லாம் ஆழம் இல்ல ஆயூ.கவலை படாதே….”  அபிராமிக்கு முதல் உதவி செய்துக் கொண்டே ஆயிஷாவை கவலையுடன் பார்க்க… அவளோ…..அபிராமியை கவலையுடன் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

அபிராமிக்கு தண்ணீர் தெளித்த பின்னும் மயக்கம்  தெளியாமல் இருப்பதை பார்த்து ஆயிஷா…..“இவ இன்னும்  மயக்கம் தெளியாம இருக்காளே சர்வேஷ். எனக்கு ரொம்ப பயமா இருக்கு. பேசாம அந்த பொண்ணை  ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போக சொல்லலாமா…..?” அவள் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே…

அபிராமியின்  முகச்சுழிப்பை பார்த்து…. “மயக்கம் தெளியுது. நீ போய் ஏதாவது ஜூஸ்.” என்று  ஏதோ சொல்ல வந்தவன் …

“வேண்டாம் நீ இரு நான் போய் எடுத்துட்டு வர்றேன்.”

கொஞ்ச நேரத்துக்கு எல்லாம் கையில் மூன்று க்ளாஸில்  ஆராஞ்ச் ஜூஸ் கோப்பை அடங்கிய தட்டுடன் தேவி பார்த்த பார்வையை பொருட்படுத்தாது அறைக்கு வந்தவன் அங்கு….

அபிராமி ஆயிஷாவிடம்….. “ எ..ப்படி….?”

ஒரு தங்கை அக்காவிடம் கேட்க கூடாத கேள்வி தான். ஆனால் கேட்கும் நிலையில் ஆயூஷா

“தெரியல…..”

“ எ..ன்ன….தெரியல….” இதற்க்கு மேல் எப்படி கேட்பது  அதுவும் இதை பற்றி….

“ ஆயிஷா இந்தா…..”ஒரு  ஜூஸை அவளிடம் நீட்டியன் மற்றொன்றை அபிராமியிடம் நீட்டினான். தயங்கினாலும் வாங்கி குடித்து விட்டாள்.

எதிர் இருக்கையில் அமர்ந்துக் கொண்ட சர்வேஷ்வர்….. “ஆயிஷா  உன் ட்ரீட் மென்ட் எந்த அளவுக்கு இருக்கு….?”

“நான் இன்னும் ஆராம்பிக்கல.”

“ஏன்…..” அதிர்ச்சியுடன் கேட்ட சர்வேஷ்வர்…கொஞ்சம் நேரம் ஏதோ பேசினாளே…தற்கொலைன்னு….. “ ட்ரீட் மென்ட் பண்ணலாம் ஆயிஷா….”

“பண்ணா….சொல் பண்ணா சரியாயிடுமா…..?”

“கொஞ்சம்….” இதற்க்கு மேல் எப்படி சொல்வது தயங்கினான்.

அந்த தயக்கம் ஆயிஷாவுக்கு இல்லை போல்…. “ என் சாவை தள்ளி போடலாம்லே…..வேண்டாம் சர்வேஷ். சாவு எப்போன்னு காத்துட்டு இருக்குறது கொடுமை.”

அமைதியாக அபிராமி இவர்களின் பேச்சை  கேட்டு கொண்டு இருந்தாள். ஆனால் மனதிலோ….எதுக்கு இவளுக்கு இந்த நிலமை….?

அழகான குடும்பத்தை விட்டு, விட்டில் பூச்சியாய் பறந்து, எவ்வளவு அழகான குடும்பம், சந்தோஷம் மட்டும் தானே அப்பா அம்மா கொடுத்தாங்க.

இந்த திரைவுலகில் என்ன இருக்குன்னு வந்தா…..பணத்துக்கா…..? அந்த பணம் இவளின் இந்த நிலையை சரிபடுத்துமா…..?

 

Advertisement