Advertisement

அத்தியாயம்—–10

சர்வேஷ்வரை ஆயிஷா அழைத்துக் கொண்டு சென்றது ஒரு பிரபலமான மருத்துவனை….அவன் கேள்வி பட்டவரை அபிராமியின் குடும்ப சூழ்நிலைக்கு இது அதிகப்படியாக தெரிந்தது.

ஆனாலும் ஆயிஷாவிடம் எதுவும் கேட்கவில்லை. காலையில் வந்த அபிராமியின் செய்தி பின்னுக்கு தள்ளப்பட்டு, ஆயிஷாவின்  செய்தியே முதன்மையாக எல்லா ஊடகத்திலும் பேசப்பட்டது.

இதை தான்  அவள் எதிர் பார்த்தாளா…..? தங்கையின் மீது பாசமான்னு கேட்டா தெரியாதுன்னு சொல்லுவா,

வயதின் அறியாமை தவறு செய்ய தூண்டி…இப்போது குடும்ப அமைப்புக்கு ஏங்குகிறாள். அது நன்றாகவே அவனுக்கு தெரிந்தது.

இருந்தும்  இதில் அவனால் ஒன்றும் செய்ய முடியாத நிலை. இந்த நோய் இல்லை என்றாலும் அவளை மணந்திருப்பானா….? என்பது சந்தேகமே….அதற்க்கு காரணம் அவனுக்கே தெரியவில்லை.மருத்துவமனையில் அபிராமிக்கு கொடுக்க பட்ட அறை சகல வசதியோடு  காணப்பட்டது. ஆயிஷாவின் நடவடிக்கை மூலம் சர்வேஷ்வருக்கு ஏற்கனவே சந்தேகம் தான். இப்போது அது ஊர்ஜிதமாகி விட்டது.

அவனின் குழப்பமான முகத்தை பார்த்து….. “அரசியல்வாதிகள் தான் இப்படி படுத்துக்கனுமா…..?ஏன் நாம படுத்தா  ஆகாதா….?”

சிரிப்புடன்….. “ நீ ஒகே.  உன் தங்கை இந்த ஐடியாவுக்கு எப்படி ஒத்துக்குனா….?” அவன் கணித்த வரை இந்த செய்தி பார்த்து எங்காவது மூலையில் முடங்கி இருப்பாள்.

அவன் நினைத்தது போல் அப்படி தான் முடங்கி  விட்டாள். ஆனால் அவள் தந்தை….. குன்றி போய் இருந்தது கொஞ்ச நேரம் தான். இருபிள்ளைகளை பெற்றேன். ஒன்றுக்கும் திருமணம் செய்து பார்க்க முடியவில்லையே…..? என்ன பாவம் செய்தேன். …..?

இல்லை நான் பாவம் செய்யவில்லை. எந்நேரமும் அந்த  பெருமாளையே சேவித்த என் பெண்ணுக்கு திருமணம் செய்து பார்க்க முடியாதா…..?முடியாது என்றால் தெய்வம் என்று ஒன்று இல்லை.

என்னை தான் முடக்கி மூலையில் போட்டு விட்டான். என் பெண்ணின் வாழ்க்கையும் அப்படி ஆக விட மாட்டேன்.

“ம…ரகதம்….” குரல் சத்தம் வந்தது ஆனால் ஒரு வித விகாரத்தன்மையுடன். அதனால்  தான் அவர் பெரும்பாலும் பேசுவதை தவிர்த்து விடுவார்.

ஆனால் இப்போது அந்த நாசுக்கு எல்லாம் பார்க்கும் மனநிலையில் அவர் இல்லை. கணவர் குரல் கேட்டு தான் மரகதத்துக்கு…..

“அய்யோஆத்துல   நோயாளி மனுஷா இருப்பது தெரியாம, இப்படி சத்தம் போட்டு கத்தி விட்டனே….

காலையில் ஒரு காபி தண்ணி கூட கொடுக்காது. மாத்திரை எல்லாம் எடுத்துக்கனும். இதை  கேட்டு பி.பி வேறு ஏறிடுச்சின்னா….மகளை மறந்து கணவனிடம் ஓடினார்.

மூச்சு வாங்கி நிற்கும் மனைவியிடம்….. “ தி..ட்டாதே அ.வ ஒ.ரு த.ப்பும் செ.ய்து இ..ரு..க்க மாட்டா….” இது சொல்லி முடிப்பதற்குள் அவருக்கு வேர்த்து விறு  விறுத்து விட்டது.

“ நீங்க ஒன்னும் சொல்ல வேண்டாம்ணா…..”

“ அ..பிய கூ.ப்பிடு.” மனைவியின்  பேச்சை கேட்காது விடாது பேசினார்.

“ அந்த கடன் காரி…..”

“ வே..ண்டாம் ம.ரதம். அ.வ நம்..ம குழ..ந்தை. திட்…டாதே….”

“சரி சரி. நீங்க ரொம்ப பேசாதேல் நான் கூட்டிட்டு வர்றேன்.” கணவனிடம் சொல்லி விட்டு…

அபிராமியை அழைக்கும் போகும் நேரத்துக்குள் அந்த தாய் உள்ளம். ஆண்டாவா…..என் வயித்துல மட்டும் ஏன் இப்படி பசங்கல கொடுத்தே . சதா காலமும் உன்னை நினச்சதுக்கு பலனா இது…..?

“ வாடியம்மா உன் அப்பா உன்னை கூப்பிடுறார்.” தாயின் பேச்சு காதில் வாங்கும் நிலையில் அபிராமி இல்லை.

தலையில் கொட்டி….. “ வா உன்ன கூப்பிடுறார். அவர் மனசு நோக எதுவும் சொல்லாதே….பெரியவள  பெத்ததுக்கு அவரை முடக்கி வெச்சிட்டா…. உன் புன்னியத்துல அவர மொத்தமா சாச்சிடாதே…..” தலையில் நெருப்பை அள்ளி  கொட்டியது போல் இருந்தது தாயின் வார்த்தை.

“அம்மா நான் தப்பு செய்வேனாம்மா…..”

“அது தான்டி நேக்கு புரியல. அவ சின்ன வயசுல இருந்தே…..சொல் பேச்சு கேட்க மாட்டா….நீ சமாத்தா தானேடி இருந்தே….இப்போ இப்படி  பண்ணிட்டியேடி….”

இந்த செய்தியாள் கணவனின் உடல் நிலை. பெண்ணின் வாழ்க்கை இரண்டும் கேள்வி குறியாகி விட்டதே…..கணவனின் அறைக்குள் செல்வதற்குள் புலம்பி தள்ளி விட்டார்.

“குழ..ந்தை..ய தி..ட்டா..தே ம.ரகதம்” மனைவியின் பேச்சை கேட்டு சொன்னவர்…

தன் மகளை பார்க்க….தந்தை என்ன  என்று கேட்கும் முன்…. “ அப்பா நான் தப்பு செய்யலேப்பா….நான் தப்பு செய்யல. ஆனா நான் உங்க கிட்ட ஒரு விஷயத்த மறச்சிட்டேன்.” என்று ஆராம்பித்தவள்.

தேவியுடன் மாலுக்கு சென்றது  முதல் அனைத்தும் சொல்லி முடித்தாள்.

“பகவானே…..” தான் ஆடாவிட்டாலும் தன் சதை  ஆடுமுன்னு சொல்வாங்கலே….. “எங்கோ இருக்கான்னு நினச்சிட்டு இருந்தேனே…

பாவி பாவி…ஆச்சராமான குடும்பத்துல பிறந்துட்டு உனக்கு இந்த கெதியா…..?இப்படி அல்ப ஆயுசுல போக தான் அப்படி ஆடினியா…..? அதுவும் எந்த மாதிரி  நோவு.” நினைக்க நினைக்க அந்த தாயின் உள்ளம் துடித்து போனது.

மரகதம்  வெளிப்படையாக பேசிவிட்டார். நாரயணன் அதுக்கு திராணியற்று பகவனே…..

“அ…வளு…க்கு போ..ன் போடு….”

“ யாருக்குப்பா…..?”

“ உ.ன் அ.க்காவுக்கு…..”

“அப்பா…..” மகளின் குரலும்….” ஏண்ணா….” மனைவியின் குரலிம் காதில் விழாது போல்…. “சீ..க்கிரம் போ….டு….?”

கை நடுங்க  தன் பேசியில் அகல்யாவின் எண்ணை போட்டு தன் தந்தையிடம் நீட்டினார். அதை அவர் வாங்கவே அவ்வளவு கஷ்டப்பட்டார்.

வலது கை முற்றிலும் செயல் இழுந்து விட்டது. இடது கையால் தான் கொஞ்சம் ஏதாவது செய்ய முடியும்.தந்தை கஷ்டப்படுவதை பார்த்து….

“அப்பா நான் பிடிச்சிக்கிறேன்பா…..” சொல்லி விட்டு அவர் காதின் அருகில் பேசியை வைத்தாள்.

“அ…கி.” அகல்யாவை அகி என்று தான் அழைப்பார். தந்தையின் அழைப்புக்கு அந்த பக்கம் அழுகையின் குரல் மட்டுமே பதிலாய் கிடைத்தது.

“எ..ன்னால ரொ..ம்ப பேச முடியா..து.”

“நா..ன் வரே..ன்பா….”

“என..க்கு தா..ன் வாய் கோணி..கிச்சி உனக்கு என்ன……?” எப்போதும் கம்பீரத்தோடு  வலம் வரும் தந்தை. பேசும் போது தனித்து கேட்கும் அவர் குரல்…இன்று….

“அப்பா எல்லாம் என்னால தானேப்பா…..?”

“இல்..லேன்னு சொ..ல்ல மாட்.டேன். ஆ..னா இப்..போ அபியையும்….”

“அப்பா அவ வாழ்க்கை பாழாக நான்  விட மாட்டேன்.” என்று சொன்னவள் பின் தன் திட்டத்தை சொல்ல.

நாரயணன் சொன்ன உடன் ஒத்துக் கொண்டார். நேர்மை பார்த்து உண்மை பின்னால் ஓடி கிடைத்தது என்ன…..? கால், கை விலங்காமல் போனதும், தன் சின்ன மகளுக்கு ஒரு வாழ்க்கை   அமைத்து கொடுக்க முடியாமல் போனது தான் மிச்சம்.

என்ன செய்தாவது அபிக்கு திருமணம் செய்ய வேண்டும். இனி வெளியில் முடியாது. அகல்யா சொன்ன திட்டத்துக்கு சம்மதித்து விட்டார்.

அனைத்தும் சர்வேஷ்வரிடம் சொன்னதும்…. “ உனக்கு வில்லி பாத்திரம் கொடுத்தா சும்மா பின்னி எடுத்து இருப்ப ஆயூ.”

“இருந்தா நடிக்கிறேன்.”

“சும்மா சோக்கீதம் வாசிக்காத. உனக்கே தெரியும் இப்போ தான் உனக்கு ஆராம்ப கட்டம் தொடர்ந்து சிகிச்சையால்….தள்ள முடியும்.”

“எனக்கும் புரியுது சர்வேஷ். ஆனா அந்த காலத்துல என் குடும்பத்து கூட இருக்கனுமுன்னு நினைக்கிறேன்.”

“அது தான் உன் அப்பா உன் கிட்ட  பேசிட்டாரே அப்புறம் என்ன…..?”

“அபிக்காக பேசினார். எனக்காக தெரியல. அதுவும் இல்லாம அம்மா இன்னும் என் கிட்ட பேசல….”

“கவலை படாதே பேசிடுவார்.”

“பேசனும் சர்வேஷ். திரும்பவும் அந்த வாழ்க்கைக்கு போகுனுமுன்னு ஆசையா இருக்கு.” கண்ணில் இது நடந்தால் நன்றாக இருக்குமே எதிர் பார்ப்பு தெரிய.

“நடக்கும் கண்டிப்பா நான் நடித்தி காட்டுறேன் ஆயூ.” பேசிக் கொண்டே அபிராமியின் அறைக்குள் நுழைந்தனர்.

அபிராமி இவர்களை பார்த்து முகத்தை திருப்பிக் கொள்ள….அகல்யா எதிர் பார்க்காதது அவள் அம்மா….

“அகல்யா எப்படிடி இருக்கே…..?நோக்கு ஏன்டி புத்தி இப்படி போச்சி…..? கடவுளே நான் என்ன பாவம் செய்தேன்.” அகல்யாவை கட்டி பிடித்து அழுது விட்டார்.

தன் அன்னையின் அணைப்பில் நெகிழ்ந்த அகல்யா, அன்றும்… இன்றும்…. இவர்கள் மாறவில்லை. அப்படியே தான் இருக்கிறார்கள்.

ஆனால் நான் இவர்களை விட்டு எங்கோ…..அகல்யாவின் நினைவை “ அகி….”

“அப்பா….அப்பா எப்படிப்பா இருக்கிங்க…..?” அதற்க்கு கணவர் பதில் சொல்லும் முன் ….

“ அது தான் செய்யிறது எல்லாம் செஞ்சுட்டு அவர மூலையில முடக்கிட்டியே…..அப்புறம் என்ன…..?”

இந்த வார்த்தை தன் வாழ்நாள் முழுவதும் தொடரும் …என்று தெரிந்தே….குடும்பத்துடன் இணைய விரும்பினாள்.

தான் செய்த தவறுக்கு கடவுள் தண்டனை கொடுத்து விட்டார். கடவுளுக்கு மேலான அம்மா, அப்பா கொடுப்பதையும் ஏற்று தானே ஆக வேண்டும்.

“அ..ப்பா….நீங்க கவலை படாதிங்கப்பா…..நான் உங்கல வெளிநாட்டுக்கு கூட்டிட்டு போயாவது  சரி படுத்திடுறேன்பா.” தந்தைக்கு தைரியம் அளிக்க…

அவரோ…. “ நீ பாத்..துக்க….நான் இருக்..கும் வரை..யாவ..து நீ இருக்க வேண்..டும். எனக்கு அந்.த சோக.த்தை..யாவது கொடுக்காம இரு.”

“அப்பா….” கை பிடித்து கதறி அழுது விட்டாள்.

இதை அனைத்தும் பேசாது பார்த்துக் கொண்டு இருந்தது அபி மட்டும் இல்லை. நம் சர்வேஷ்வரும் தான்.

அபிக்கு இது என்ன நாடகம்,  காலையில் நீ தற்கொலை செய்து கொள்வது போல் நடிக்க வேன்டும் சொன்ன உடன் அவளுக்கு இதில் சிறிதும் உடன் பாடு இல்லை.

“அவ படத்துல நடிச்சா….என்னை நிஜத்துல நடிக்க சொல்றாளா…..? முடியாது.” திட்ட வட்டமாக சொல்லி விட்டு தன் தாயை பார்த்தாள்.

அவராவது தனக்கு ஆதாரவாய் பேசுவார் என்று ஆனால் அவரோ….. “ ஏன்டி இரண்டு பேரும் என்னை உயிரோட புதைக்க பாக்குறிங்க.  ஒழுங்கா உங்க அப்பா சொல்ற படி செய்.” தன் ஒரு மகளுக்காவது திருமணம் செய்து வைத்து, பேரன் பேத்தி பார்க்க அவர் ஆசைப்பட்டார்.

அந்த கோபத்தில் அபிராமி பேசாது இருந்தாள் என்றால்….சர்வேஷ்வர் அபியிடம் எப்படி தன் விருப்பத்தை சொல்வது. அவளை சம்மதிக்க வைக்க பெரும்பாடு படவேண்டி இருக்குமோ…..?.

அதுவும் ஆயிஷாவுடனான தன் உறவு முறை சிக்கலில், இதை எப்படி அவள் நினைப்பாள். அவள் குடும்பத்தினர் தன்னை ஏற்பார்களா….

இப்படி மலைத்து போய் இருக்கும் சமயத்தில்…..நினைத்தே பாராது மடியில் மலர் விழுந்தால் எப்படி இருக்கும்….

அந்த ஆனந்தத்தில் பேசாது அபிராமியையே பார்த்திருந்தான். முதன் முதலில் பார்த்த போதே ஏதோ ஒரு  ஈர்ப்பில் தான் தன் பாதுகாவலர்களை விட்டு அழைத்தான்.

பின் ஆயிஷாவின் தங்கை என்று தெரிந்ததும்…. அவள் குடும்பத்தோடு சேர்க்க நினைத்தவன். தானும் சேர விருப்பம் கொள்ள மனது துடித்தது அவனுக்கு மட்டுமே தெரியும்.

தான் வாழ்ந்த வாழ்க்கை….சினிமாவினால்  அவள் குடும்பத்தின் நிலை….? இப்படி இருக்கும் போது தன் விருப்பத்தை எப்படி நிறை வேற்றிக் கொள்வது. பயந்துக் கொண்டு இருக்கும் வேலையில் ஆயிஷா நடத்திக் கொடுத்து விட்டாள்.

தோழியாய்  அவள் தன் விருப்பத்தை நிறைவேற்றி விட்டாள்.  அது போல் அவள் விருப்பத்தை தான் நிறை வேற்றவேண்டும்.

இதில் அபியின் விருப்பம் என்ன….? என்ன நினைக்கிறாள் அவளை பார்த்தான். அவன் பக்கம் திரும்பியும் பாராது கண்ணை  மூடி சயனத்தில் இருப்பது போல் காணப்பட்டாள்.

தான் அங்கு இருப்பதையே ஒருவரும் கண்டு கொள்ளவில்லையே தொண்டை கணைத்து தன் இறுப்பை தெரிவித்தான்.

அப்போது தான் நாரயணன்….” “வா..ங்கோ….மா…” மாப்பிள்ளை என்று  கூப்பிட வந்தவர் அதை பாதியில் நிப்பாட்டினார்.

“ மாப்பிள்ளைன்னே கூப்பிடுங்க மாமா….”

கண்ணை  மூடிக் கொண்டு இருந்த அபிராமியின் பார்வை இப்போது அவர்கள் பக்கம் திரும்பியது.

இருவருக்கும் எப்படி பேச்சை தொடங்குவது என்பதில் தயக்கம். மரகதமோ….தன் முந்தானையைய் போர்த்திக் கொண்டு …..கூச்சத்துடன்…

“எப்படி இருக்கேள்…..?”

அவரின் செயலில் சர்வேஷ்வருக்கு சிரிப்பு தான் வந்தது. இது எல்லாம் அவனுக்கு புதிது.

“ம் நல்லா இருக்கேன்.” இப்போது அவங்க எப்படி இருக்காங்கன்னு கேட்கனுமா…..? யோசனையுடன் ஆயிஷாவை பார்த்தான்.

அவனின் பார்வையில் சிரிப்பு வர ஆயிஷா  அதை அடக்க பெரும் பாடு பட்டும் அது வெளிப்பட்டு விட…

இது வரை ஒரு  வாய் திறக்காது, அங்கு நடப்பதற்க்கும் தனக்கும் எந்த விதச் சம்மந்தமும் இல்லை என்பது போல் இருந்த அபிராமி….இவர்களின் இந்த செயலில் தங்கள் பெற்றோரை அவர்கள் கிண்டல் செய்கிறார்களோ…என்று வெகுண்டவள்.

“ இப்போ எதுக்கு சிரிக்கிறேள்…..?”

அவள் காட்டிய முகபாவத்தில் சிரிப்பை கட்டு படுத்த நினைத்த இருவரும்  சத்தமாகவே சிரித்து விட்டனர். மொத்தத்துக்கு அது மருத்துவமனை போலவோ…..

நாடகம் என்றாலும் தற்கொலை முயற்ச்சியில் படுத்துக் கொண்டு இருக்கும்  மருத்துவ அறை என்ற நினைப்பு கூட இல்லாது.

பெண்னை பார்க்க வந்து அங்கு கேலி கிண்டல் அறங்கேறுமே…..அப்படி ஒரு நிகழ்வு போல் மகிழ்ச்சியாக ஆயிஷா சர்வேஷ்வர் இருந்தார்கள் என்றால்….

நாரயணனும், மரகதமும் பயந்து…. “என்ன அபி எதுக்கு இப்போ அவங்கல திட்டுற….. பத்திரிகையில் ஏதேதோ கண்டத போடுவா அதெல்லாம் நம்ப படாது.” பத்திரிகையில் அவர்களை பற்றி வந்த செய்தியில் தான் அபி அவர்களை கோபித்துக் கொள்கிறாளோ என்ற பயத்தில் அவர்களுக்கு பரிந்து வர.

“ நேக்கு தெரியும்மா…இன்னிக்கி என்ன பத்தி கூட தான் வந்தது. அப்போ நான் தப்பானவளா…..?”

சர்வேஷ்வர், ஆயிஷா இருவரும் ஒரு சேர….

“ அபி என்ன பேச்சு…..?” என்று அதட்டினர்.

தொடர்ந்து சர்வேஷ்வர்….. “ நீ நல்லவ தான் அபி. ஆனா நான் தான்…..” சர்வேஷ்வரை மேலும் பேச விடாது “சர்வேஷ்…..” போதும் என்பது போல்  கண்ஜாடை காட்டினாள்.

“இல்ல ஆயூ எனக்கு அபி கூட பேசனும். தனியா…..”  ஆயிஷா தன் பெற்றோர்களை பார்த்தாள்.

“பேசலாம் மாப்பிள்ளை.ஹாஸ்பிட்டலுல வேண்டாமே…ஆத்துக்கு  பெரியவாள எல்லாம் அழச்சிட்டு வாங்கோ…அப்புறம் என்ன ஷேமமா பேசலாம்.” இது வரை வாய் திறக்காது இருந்த மரகதம் சம்மந்தம் பேசிய பிறகு தான் தனியாக பேச முடியும் என்று சூட்சுமமாக சொன்னதும், திரும்பவும் உதவிக்கு ஆயிஷாவை பார்க்க.

அவளோ நான் இருக்க பயம் ஏன் என்பது போல் கண் ஜாடை காட்டினாள். இவர்களின் செயலை பார்த்துக் கொண்டு இருந்த அபிக்கு சிரிப்பு வந்தாலும் அதை அடக்கியவளாய் நான் ரொம்ப நல்ல பிள்ளை என்பது போல் அமைதியாக இருந்தாள்.

 

 

 

Advertisement