Advertisement

அத்தியாயம்—7

“என்னம்மா தலைக்கு குளிச்சியா….?” என்று கேட்டுக் கொண்டே மதியின் தலையைய் தொட்டு  பார்த்த சுந்தரி.

“என்ன மதி முடி காயவே இல்ல….குழந்தையைய் என் கிட்ட கொடுத்துட்டு  ஹார்ட்ரையர்  போடு.” என்றவரிடம்.

“நான்  அதெல்லாம் போடுறது இல்ல அத்த.” என்பவளிடம். “வள்ளி போடுவா…அது தான் சொன்னேன். சரி தலைய  கொஞ்சம் வெய்யிலிலாவது காட்டு.” என்று குழந்தையைய் வாங்கிக் கொண்டு அனுப்பிய சுந்தரியைய்  சுகவனம் ஒரு கண்டனப் பார்வை பார்க்க.

கணவன் கோபமாக பார்க்கிறார். ஆனால் ஏன் என்று தெரியவில்லையே….என்று நினைத்தவர்.”என்னங்க என்ன தப்பு செய்தேன்.” என்று அவரிடமே கேட்டார்.

“இப்போ எதுக்கு  வள்ளி கூட அந்த பொண்ணை கம்பெர் பண்ற….?”

“நான்எங்கே பண்ணேன்.” என்று சொல்லும் போதே தன் தவறை உணர்ந்த சுந்தரி.

“சாரிங்க நான் சொல்லனும் என்று சொல்லலே….” என்று வருந்திய மனைவியின் கைய் பற்றுய சுகவனம்.

“நீ தெரிஞ்சி சொன்ன என்று நான் சொல்லலே. இனி பேசும் போது பார்த்து பேசு சுந்தரி.” என்று அவர் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே…

ஹால் சுத்தியும் ஒரு பார்வை பார்த்துக் கொண்டே வந்த வல்லரசு. அப்பாவின் அருகில் அமர்ந்து அவர் எதிரில் இருந்த பேப்பரை கையில் எடுத்துக் கொண்டே…

“என்னப்பா அம்மாவ  பார்த்து பேச சொல்றிங்க.”

அவன் வந்ததில் இருந்து அவன் அலை புரும் பார்வையைய் பார்த்துக் கொண்டே இருந்த கணவன் மனைவி இருவரும். அவன் கேட்ட கேள்விக்கு சொல்லலாமா…?வேண்டாமா….? என்று சுகவனம் யோசிக்க.

ஆனால் அந்த யோசிப்பு எல்லாம்  எனக்கு இல்லை  என்ற ரீதியில் சுந்தரி அனைத்தையும் தன் மகனிடம் பகிர்ந்தவர்.

“ நான் வேணும் என்று சொல்லலே அரசு.” அன்னையின் வருத்தம் பொருக்க முடியாது.

“எனக்கு தெரியுமா.” என்று சொல்லி விட்டு பார்வை பேப்பரை பார்த்தாலும், ஸ்ரீ இது மாதிரி எத்தனை பார்க்க வேண்டி வருமோ…. ?இந்த வீட்டுக்கு எப்படி வரவேண்டியள். எப்படி எல்லாம் அவளை பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ஆயிரம் திட்டம் தீட்டியது என்ன…?இப்போது அதில் ஒன்றாவது  என்னால் நிறைவேற்ற முடிந்ததா….?.

என் பங்குக்கு நானும் அல்லவா அவளை  காய்ச்சி எடுக்கிறேன்.

எல்லாம் என்னுடைய கைய்யாலாக நிலை  தான் இப்படி வார்த்தைகளாய் அவளிடம் வெளிப்படுகிறது. நான் விரும்பிய பெண் இப்போது என் மனைவி. ஆனால்…..அவளுக்கு பொருத்தமானவனாய் நான் இப்போது இல்லை.

நான் எப்படி என் காதலை  அவளிடம் சொல்ல முடியும். சொன்னால் அந்த காதலே கேலி கூத்தா ஆகாதா…..? ஆயிரம் எண்ணங்கள்  மனதில் வலம் வர ஒற்றை எழுத்தை கூட படிக்காது பேப்பரை கீழே போட்டவன்.

தன் அன்னையிடம் இருந்து குழந்தையைய்  வாங்கிக் கொண்டே…. “குழந்தைய உங்க கிட்ட கொடுத்துட்டு  இவன் அம்மா எங்கே போனா….?”

என்ன தான் அவளுக்கு தான் தகுதி இல்லாதவன் என்று நினைத்தாலும் காலை எழுந்ததும் அவளை பார்க்க தான் அவசர அவசரமாக கீழே வந்தான்.

வந்தவன் கண்ணுக்கு அவள் அகபடாது போக. எங்கு இருக்கிறாள்  என்று நினைத்துக் கொண்டே அம்மாவிடம் கேட்கலாம் என்று வரும் போது அவர்கள் பேச்சு காதில் விழுந்தது.

தன் கேள்வி மறந்து என்ன என்று கேட்டதுக்கு அவர்கள்  தந்த பதில். அவனுக்கும்  ஒரு மாதிரியாக தான் இருந்தது.

என்னை மணந்ததால் இது போல் அவள்  இன்னும் என்ன என்ன பேச்சு கேட்க வேண்டி வருமோ….என்று வருந்தினாலும், அவளை  பார்க்காதது ஏதோ போல் இருக்க.

நேரிடையாக எப்படி கேட்பது என்று குழந்தையைய் சாக்கிட்டு கேட்க. கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே ஒரு சேர.

“அது தான் சொன்னனே அரசு.”

“என்ன சொன்னிங்க.”

“தலை காய வைக்க…..” என்று அவர்கள் இழுக்கும் போது தான் சே…இப்படி மாட்டிக் கொண்டோமே என்று ஒரு மாதிரியாகி விட்டான்.

அவன் நிலை புரிந்த சுகவனம். “என்ன அரசு உன் மனைவியைய்  கேட்ட . இதில் என்ன இருக்கு….?” என்று  கேட்டவரிடம்.

“இரண்டாம் மனைவி.” கண்களில் வலியிடன் சொல்ல. அவனின் வலி புரிந்தாலும்  சுந்தரி வரும் மருமகளை பார்த்துக்  கொண்டே …

“என்ன பேச்சு அரசு.” என்று அதட்ட.

தன் அன்னையின் பார்வையைய் தொடர்ந்து  திரும்பி பார்த்த வல்லரசு கண்களில் வலியுடன் தன்னையே பார்த்திருந்த மனைவியின் பார்வையைய் பார்க்க முடியாது.

காலையில் இருந்து எந்த முகத்தை பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தானோ…அந்த முகத்தை பார்க்க முடியாது அவ்விடத்தை விட்டு அவசர அவசரமாக அகன்றான்.

காலை பரபரப்பு அடங்கி கணவர் வேலைக்கு சென்றதும், குழந்தையைய் குளிப்பாட்ட வேண்டும் என்று அத்தையிடம்  சொல்லி விட்டு  தன் அறைக்கு வந்த  மதி.

குழந்தைக்கு குளிப்பாட்டும் என்ணமே இல்லாது அவனை படுக்க வைத்து தானும் அவன் பக்கத்தில் படுத்தவள். காலையில் இருந்து நடந்த நிகழ்ச்சியில் கண்ணில்  தண்ணீர் தன்னால் வர.

அதை துடைக்கும் எண்ணம் கூட இல்லாது கடவுளே நான் என்ன பாவம் செய்தேன். இன்னும் இது போல் எத்தனை பேச்சி  நான் கேட்க வேண்டும்.

காலையில் அத்தை சொன்னதுக்கே முகம் மாறாது அந்த இடத்தை விட்டு செல்வதுக்கு பாடாத பாடு பட்டு விட்டேன்.

தலையைய் காய வைக்கிறேன் என்று அழுத  முகத்தை எப்படி காமிப்பது என்று தான் பின் பக்கமாக வீட்டுக்குள் நுழைந்து தன் அறைக்கு சென்றுஅழுதது  தெரியாது டச்சப் செய்து  கீழே வந்தால்.

அத்தை சொன்னது ஒன்னும் இல்லை என்பது போல் கணவன் சொன்ன வார்த்தையில்  கண்ணில் கண்ணீர் கூட வராது நின்று விட்டாள்.

தன் கணவன் அந்த இடத்தை விட்டு அகன்றதும் தான் நின்ன இடத்திலேயே நின்றுக் கொண்டு இருக்கிறோம் என்ற சொரணையே  வர  அத்தை மாமாவை பார்க்க.

அவர்களின் பாவமான  பார்வையைய் கூட தாங்க முடியாது சமையல் அறையில் புகுந்தவள். சமையல் செய்யும் அம்மாவுக்கு அவர் வேண்டாம் வேண்டாம் என்று மறுத்த போதும் உதவி செய்கிறேன் என்ற பேரில் கணவன்  செல்லும் வரை கண்ணில் கண்ணீர் வராமல் தாக்கு பிடித்தவள்.

அவன்  சென்றதும் அத்தையிடம் இருந்து குழந்தையைய் வாங்கி குளிப்பாட்டுகிறேன் என்று வந்தவள் அந்த நினைவே இல்லாது எவ்வளவு நேரம் இருந்தாளோ….அப்படியே தூங்கியும் விட்டாள்.

கடைக்கு சென்ற வல்லரசுவின் நிலையும் ஒரு நிலையில் இல்லாது அங்கும் இங்கும் அலை பாய்ந்துக் கொண்டே இருந்தது.

தான் சொன்ன இரண்டாம் மனைவி.உண்மை தான் .ஆனால் சொன்ன விதம். அதை கேட்டு அவள் எவ்வளவு துடி துடித்து இருப்பாள். அதுவும் இந்த கடையில் தானே அவளை பார்த்தேன்.

பார்த்ததும் வீட்டில் சொல்லாது ஊருக்கு சென்று வந்த பிறகு  பேசியிருந்தால் எல்லாம் நல்ல படியாக முடிந்து இருக்குமே…இதோ கல்யாணம் முடிந்த மறுநாளே கடைக்கு வந்து இருப்பேனா….?

அவளுடன் தான் தன் முதல் திருமணம் என்ற எண்ணத்தில் எப்படி எல்லாம் மைசூரில் இரவு பகல் என்று பாராது வேலை அனைத்தும் முடித்தான்.

கல்யாணம் ஆனாதிலிருந்து ஒரு மாதம் தங்களுக்கானது என்று திட்ட மிட்டது என்ன. பின் வள்ளியைய் மணந்து மறு நாளே வேலையைய் காரணம் காட்டி கடைக்கு வந்தது என்ன…?

இதோ இன்று நான் விரும்பிய ஸ்ரீ  இன்று என் மனைவி. ஆனால் இதோ இன்றும்  கடையில் தான் இருக்கிறேன். நானும் சந்தோஷமாக இல்லை.

அவளையும் சந்தோஷமாக வைத்துக் கொள்ள முடியவில்லை . என்ன வாழ்க்கை  இது. மதியம் வரை தன் நினைவுகளோடு போராடிக் கொண்டு இருந்தவன்.

அதற்க்கு மேல்  தாக்கு பிடிக்க முடியாது அந்த கடையின் மேனஜரை அழைத்து “பார்த்துக் கொள்ளுங்கள்.” என்று வீட்டில் மனைவி நிலை அறிய செல்லும் முதலாளியைய்  பார்த்துக் கொண்டே நின்றார் அந்த விசுவாசமான ஊழியர்.

அவருக்கு தான் வல்லரசு விரும்பும் பெண் யார்….? என்று தெரியுமே. திருமணம் அன்று மணமேடையில் வேறு பெண் அமர்ந்து இருக்க. பெண்ணின் தங்கையாய் ஸ்ரீமதியைய் பார்த்து அதிர்ந்தே விட்டார்.

பின் பக்கத்தில் அமர்ந்து இருந்த மாப்பிள்ளையைய்   பார்க்க. ஜீவனே இல்லாது அய்யர் சொல்லும் மந்திரத்தை சொல்லிக் கொண்டு இருக்கும் வல்லரசுவை பார்த்ததுமே முடிவு செய்து விட்டார் ஏதோ தவறு நடந்து இருக்கிறது என்று.

அதற்க்கு ஏற்றார் போல் திருமணம் முடிந்து அடுத்த நாளே கடைக்கு வந்தவரை பார்த்து எதுவும் கேளாது ஊழியரின் விசுவாசத்தில்  முதலாளியைய் தொந்தரவு செய்யாது முடிந்த மட்டும் அனைத்தும் தானே பார்த்துக் கொண்டார்.

அதே போல் கடையில் வேலை இல்லாத போதும் தன் அறையே பழியாக கிடப்பவரை வீட்டில் இருந்து தனக்கு போன் செய்து விசாரிக்கும் பெரிய முதலாளிடம். “ஆமா அய்யா. கடையில் நிறைய வேலை தான்.” என்று பொய்யும் உரைத்தார்.

இப்போது தான் விரும்பிய பெண் மனைவியாக கிடைத்தும், ஏன்…? முதலாளி இப்படி இருக்கிறார் என்ற யோசனையில் இருக்கும் போது, ஒரு கஸ்ட்டமர்  பிரச்சனை செய்வதாய் சேல்ஸ் பாய் சொல்ல கேட்டு அந்த பிரச்சனையைய் பார்க்க சென்றதில் முதலாளி பிரச்சனையைய் மறந்து விட்டார்.

வீட்டுக்கு வந்த வல்லரசு அழுது கொண்டே உறங்கியதில்  கன்னத்தில் உப்பு கண்ணீர் கரையாய் படிந்து இருக்க  தூங்கும் மனைவியின் கன்னம் தொட உயர்ந்த கைய் அப்படியே அந்தரத்தில் நிற்க.

ஏதோ நினைத்தவனாய் தொடாது  கையைய் கீழே இறக்கியவன். கீழே விடு விடு என்று இறங்கி அன்னையிடம் வந்தவன்.

“அம்மா ஸ்ரீ காலையில் சாப்பிட்டாளா…..?” என்றதுக்கு.

“சாப்பிட்டு தான் இருப்பா. அது தான் குழந்தையைய் குளிப்பாட்டி அவனை தூங்க வெச்சி   நானும்  தூங்குறேனு சொல்லிட்டு போனாளே….” என்ற பதிலில்.

இது என்ன பதில் என்று பார்க்க. “என்ன அரசு மதி சாப்பிடலையா…..?” என்று கேட்டதுக்கு.

“வீட்டில் இருக்கும்  உங்களுக்கு தெரியாதது….எனக்கு தெரிஞ்சிட போகுதா….?” என்று எப்போதும் இப்படி பேசாத பையனின் பேச்சில் அடி பட்ட   ஒரு பார்வை பார்க்க.

அன்னையின் பாஎவையில் “அம்மா சாரிம்மா.” என்று வருந்தி மன்னிப்பு கேட்கும் மகனின் கைய் பற்றியவர்.

“இல்லடா அரசு. நான் கொஞ்சம் பார்த்து இருக்கனும். இனி நான் அவள் சாப்பிடுறாளா….?இல்லையான்னு….? பார்த்துக்குறேன் அரசு.”

திரும்பவும் மன்னிப்பு கேட்ட வல்லரசு. “மனசுக்கு ரொம்ப  கஷ்டமா இருக்குமா…” என்று சொல்லியவனின் கன்னம் பற்றி பக்கத்தில் அமர வைத்தவர்.

“என்ன அரசு. இப்படி ஒடிஞ்சி போய் பேசுற. எல்லாம் கொஞ்சம் நாளில் சரியாயிடும். கவலை படாதே.” என்று மகனுக்கு ஆறுதல் வழங்க.

“சரியாயிடனும் அம்மா. இல்ல என் மனசே என்னை கொன்னுடும்.” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே கீழே இறங்கி வந்த ஸ்ரீமதியைய்  பார்த்து தாய் மகன் இருவரும் பேச்சை நிறுத்தி அவளை பார்க்க.

தவறான நேரத்தில் வந்து விட்டோமோ….? அம்மா , மகன் ஏதோ  முக்கியமா  பேசி இருந்தாங்க  போல நம்மால் பேச்சு தடை பட்டு விட்டோதோ….? என்று நினைத்தவள்.

தன்னை பார்த்தவர்களை தயக்கத்தோடு பார்த்துக் கொன்டே குழந்தையைய் காமித்து “பசி போல .அழுதான். அதான்….” என்று துண்டு துண்டாய் வார்த்தையாக பேசி  தன்னை தவறாய் நினைத்துக் கொள்வார்களோ என்று சொல்ல.

அவள் பேச்சிலும், அவள் உடல் அசைவிலுமே, அவள்  நெர்வசாக   இருப்பதை பார்த்த  வல்லரசு.

இவள் ஏன் இப்படி இருக்கிறாள். இது இவள் வீடு தானே…? எங்கு வருவதற்க்கும் போவதற்க்கும் உரிமை இருக்கு தானே…..? இங்கு எதுக்கு  வந்தேன் என்று காரணத்தை சொல்ல வேண்டுமா….?என்று  நினைத்துக் கொண்டே அவளையே பார்த்திருக்க.

மதியோ நாம் என்ன தவறாய் சொல்லி விட்டோம் இவன் இப்படி உத்து பார்க்கிறான் என்று பயத்துடன் கணவனை பார்க்க.

இருவரின் பார்வையைய் இடை பார்வை பார்த்த சுந்தரி மகனின் கைய் பற்றி நினைவுக்கு கொண்டு வந்தவர்.

மருமகளிடம் “குழந்தைக்கு சாப்பாடு போட்டு என் கிட்ட கொடு. என் பேரனுக்கு நான் ஊட்டுரேன்.  இதோ உன் புருஷன் வந்து இருக்கான் பாரு அவனுக்கும் சாப்பாடு போட்டு  கூடவே நீயும் சாப்பிடு.” என்று சொன்னவர்.

பின் “ நீ காலையில் சாப்பிட்டியோ….? இல்லையோன்னு…..? தெரியலே. தோ இவன் வந்ததும் வராததுமாய் ஸ்ரீ சாப்பிட்டாளான்னு கேட்குறான். தெரியலேன்னா…வீட்டில் இருந்துக் கொண்டு என்ன பண்றிங்கன்னு திட்டறான்.

ஏன்மா வயசான காலத்தில் நாங்க  உன்னை கவனிக்கனுமா…..? நீ எங்களை கவனிக்கனுமா….?” மகன் முறைக்க முறைக்க அனைத்தையும் போட்டு உடைத்த சுந்தரி.

மேலும் “இனி காலையில் உன் புருஷனுக்கு போட்டுட்டு நீயும் அவன் கூடவே சாப்பிடுற….அதே போல மதியம் அவனுக்கு போன் போட்டு அவன் வீட்டுக்கு வந்தா அவன் கூட சாப்பிட்டு.

இல்ல வரலேன்னா எந்த கடையில் இருக்கானு கேட்டு அந்த கடைக்கு சாப்பாட்டை அனுப்பிட்டு  உடனே நீயும் சாப்பிட்டு தான் மாடிக்கு உன் ரூமுக்கு போற.” என்று  சொல்லி முடித்தவர்.

எழுந்து நடந்துக் கொண்டே  முனு, முனுக்கிறேன் என்ற பெயரில் மதிக்கு கேட்கும் படியாகவே … “இனி எனக்கு என்ன…?அவ ஆச்சி அவ புருஷன் ஆச்சி. அவ குழந்தை ஆச்சி. வயசான காலத்தில் கோயில், குலம். என்று போகாம இவங்களையேவா பார்த்துட்டு இருக்க முடியும்.” என்று சொல்லிக் கொண்டே தன் அறைக்கு மறைந்தார்.

அம்மாவின் சூட்சுமம் தெரிந்த வல்லரசு சிறுபுன்னகையோடு டையின் டேபிலுக்கு வர. ஸ்ரீமதியோ குழப்பத்தோடு சாப்பாடு பரிமாற வந்தாள்.

 

Advertisement