Advertisement

அத்தியாயம்—5

தன் மகனின் முகத்தை  பார்த்தே ஏதோ சரியில்லை என்று ஊகித்த சுகவனம். தன் பக்கத்தில் உள்ள வல்லரசுவின் கைய் பற்றி “தம்பி….” என்று அழைக்க.

அப்போது தான் தன்னை சுற்றி பார்த்து விட்டு தன் முன் ஆலாம் சுற்றி  விட்டு தன்னையே பார்த்திருந்த ஸ்ரீ யைய் பார்த்தான்.(அவனுக்கு எப்போதும் அவள் தான் ஸ்ரீ.)

அங்கு இருக்கும்  பெண்மணியில் ஒருவர் கிண்டலுடன் “ என்ன தம்பி என் மச்சினர் மாப்பிள்ளை பெரிய இடமுன்னு சொன்னார். ஆலாம் சுத்துனதுக்கு காசு கொடுக்காம  அப்படியே நிக்குறிங்க.” என்று கிண்டல் அடிக்க.

அந்த பேச்சில் கூட காசு போடாது இருக்கும் மகனுக்கு பதிலாக சுகவனம் மதிக்கு பணம் கொடுத்து விட்டு  கல்யாண பெண் பக்கத்தில் இருக்கும் போது தன் மகனை எப்படி தனியாக அழைத்து செல்வது என்று அவர் யோசித்திருக்கும் போதே…

தன் தந்தைக்கு அந்த கஷ்டம் தராது கட கட  என்று கல்யாண மண்டபத்தில் நுழைந்தவன் அங்கு மணமகன் அறை  என்று  எழுதி இருந்த அறைக்குள் நுழைந்து விட்டான்.

சுகவனமும்  மகனை பின் தொடர்ந்து  அறைக்கு செல்ல. இது வரை மகிழ்ச்சியாக இருந்த அனைவரின் முகமும் வாடாலாயிற்று. அங்கு இருந்த சுந்தரியிடம்  திருவேங்கடம் “என்ன சம்மந்தி மாப்பிள்ளைக்கு என்ன கோபம்….?” என்று கவலையுடன் கேட்க.

அவருக்கு தெரிந்தால் தானே அவரும் சொல்வார். அவரே மகன் விடு விடு என்று சென்றதை பார்த்து தான் ஏதோ சரியில்லை என்று இருக்கிறார்.

இருந்தும் சம்மந்தியிடம் “அது ஒன்னும் இல்ல சம்மந்தி .இப்போ தான் ஊரில் இருந்தே வந்தான். அங்கும் ஓயாது வேலை. அதான் கொஞ்சம் ஓய்வு எடுக்க போறான்.” என்ற சம்மந்தியின் வார்த்தையில்  சமாதானம் ஆனாவர் அடுத்து வேலையைய் பார்க்க சென்று விட.

சமாதானம் ஆகாத இரு பெண்களும் அந்த இடத்திலேயே நின்று இருந்தனர். ஸ்ரீவள்ளிக்கு  ஒரே குழப்பமாக இருந்தது. போனில் அப்படி ஆசையாக பேசியவனா  இவன் ….?ஏன் சிறிது நேரம் முன் கூட போன் போட்டு  நீ தான்  என்னை வரவேற்க வேண்டும் என்று அழிசாட்டியம் செய்தது என்ன…?இப்போது என்னை திரும்பியும் பாராது செல்வது என்ன….? ஸ்ரீவள்ளி இப்படி குழம்பிய படி இருக்க.

ஸ்ரீமதியோ  நான் என்ன செய்தேன் ஏன் என்னை அத்தான் அப்படி முறைத்து பார்த்தார். பணம் கூட  நான் கேட்கலையே….பெரிமா தானே ஏதோ கிண்டலாய் சொன்னார்.

ஆனால் ஒரு கல்யாணம் என்றால் கேலி, கிண்டல், இருக்க தானே செய்யும். இதை பெரியதாக எடுத்தா… அப்படி சென்று விட்டார் என்று இரு பெண்களும் இரு கோணங்களில் யோசிக்க.

அங்கு இருந்த மூத்த பெண்மணி ஒருவர்…மதியைய் பார்த்து “ஏன்டி உன் அக்கா அப்படியே சிலையா  நின்னா அதுக்கு ஒரு அர்த்தம் இருக்கும். மாப்பிள்ளை  அழகில் மயங்கிட்டான்னு நாங்க நினச்சிப்போம். நீ  ஏன்டி இப்படி சிலையா நிக்குற….நீயும் மயங்கிட்டியோ….? போய் சுத்துன ஆலத்தை ஊத்திட்டு வாடி….”என்று பகடி பேச.

“ஏய் கிழவி உனக்கு  நல்லதாவே பேச தெரியாதா….? என்று தோள் பட்டையைய் ஒரு இடி இடித்து விட்டே ஆலத்தை  ஊத்த சென்றாள் மதி.

மதியால் கிழவி என்று சொல்லப்பட்ட அந்த மூதாட்டி “இது என்னடி வம்பா இருக்கு மாமான் மச்சானோடு சேர்த்து வைத்து பேசுறதுக்கு எல்லாம் இப்படி கோச்சிப்பா….? என்று  ஆள் காட்டி விரலை தவடையில் வைத்து நொடிக்க.

அந்த மூதாட்டியின் பேச்சிக் கேட்டுக் கொண்டே அங்கு வந்த மீனாட்சி “அவளுக்கு இது மாதிரி பேச்சு எல்லாம் பிடிக்காது  சித்தி. இனி இது மாதிரி தாமாஷூ எல்லாம் பேசுற வேள எல்லாம்  வெச்சிகாதிங்க.”  தன் மகளின் மனம் புரிந்தவராய் சொல்லி விட.

“அடி ஆத்தி இது என்ன கூத்தா இருக்கு…..” என்று சொல்லிக் கொண்டே  வேறு  ஒருவரிடம் இதை பற்றி பேச சென்று விட்டார்.

தன் அறைக்கு செல்லாது அங்கேயே நின்றுக் கொண்டு இருந்த ஸ்ரீயிடம் “என்னடி கல்யாணப் பொண்ணு இப்படி நட்ட நடுவில் நின்னுட்டு  இருக்கே…போ உன்னுடைய அறைக்கு போ…” வாய் பேச்சு வாயில் இருக்க.

 மனதோ அவசரப்பட்டு விட்டோமோ…..?  இந்த கல்யாணப் பேச்சு வந்ததும் பையனை  நேரில் பாராது அவசரமாக திருமணத்துக்கு ஏற்பாடு செய்தது தவறோ….? பெண்களுக்கே உண்டான நுட்ப  புத்தி மாப்பிள்ளை தன் பெண்ணை திரும்பி கூடபார்க்கவில்லையே…..? திருமணம் நடக்குமா நடக்காதா….? என்று ஆயிரத்தெட்டு யோசனை ஓடினாலும் வருவோரை வரவேற்க்கும் வேலையைய் செவ்வனே  செய்துக் கொண்டு  இருந்தார்.

மீனாட்சியின் கவலையைய் மெய்பிக்கும் வகையில் தலையில் கைய் வைத்து அமர்ந்து விட்ட மகனின் கேசத்தை வருடிய சுகவனம்…. “என்ன பெரிய தப்பு நடந்துடுச்சி அரசு…..?” தன் மகன் காரணம் இல்லாது இப்படி நடக்க மாட்டான். அதுவும் காரிலிருந்து இறங்கும் வரை சந்தோஷம், கல்யாணதுக்கு உண்டான பட படப்பு என்று காணப்பட்ட தன் மகனின் முகம். மதியையும், ஸ்ரீயையும், பார்த்து அதிர்ச்சியில் பேயறைந்தது போல் காணப்பட்டதுமே ஏதோ பெரிய தவறு நடந்து இருக்கிறது என்று முடிவு செய்து விட்டார்.

தன் தந்தைக்கு எந்த பதிலும் சொல்லாது கோட் பாக்கெட்டில் வைத்திருந்த அந்த அதிர்ஷ்ட்ட கூப்பனை.(அவனை பொறுத்தவரை அதிர்ஷ்ட்டமில்லா கூப்பன்.) எடுத்து கொடுக்க.

தயக்கத்துடன் அதை வாங்கி படித்தவரின் முகத்தில்  பயம், பதட்டம் , வந்து பற்றிக் கொள்ள. நெஞ்சு  ஏதோ பிசைவது போல் இருந்தது.

இது வரை தன் துக்கத்தில் மூழ்க்கி இருந்தவன். அப்பாவின் வேர்த்த முகத்திலும்,மார்பில் கைய் வைத்து அமர்ந்து  விட்ட தோற்றித்திலும், தன் கவலை மறந்து “அப்பா ஒன்னும் இல்லேப்பா…ஒன்னும் இல்லே…” அவர் மனதில் படியும் படி சொல்ல.

அந்த கூப்பனை காமித்து “எனக்காக சொல்லாதே…இது ஒன்னும் இல்லையா….?’ என்று சொல்லும் போது  இன்னும் அவருக்கு வேர்த்து கொட்ட.

ஏசியைய் அதிகமாக்கியவன்…..”அப்பா என்னப்பா செய்யுது. ஹாஸ்பிட்டல் போயிடலாம் அப்பா.” என்று சொல்லி எழுந்தவனின் கைய் பற்றிய சுகவனம்.

“ உனக்கு நல்லது செய்யிறதா நினச்சி இப்படி பண்ணிட்டனே அரசு.” என்று சொன்னதையே தான் சொல்லிக் கொண்டு இருந்தார்.

ஏதோ சரியில்லை என்று வந்த சுந்தரி கணவன் மகன் இருந்த கோலத்தை பார்த்து பதட்டத்துடன்… “என்ன அரசு என்ன ஆச்சி….?” என்று கேட்டதுக்கு பதில் இல்லாது போக.

தன் கணவனின் பக்கத்தில் பார்வையைய் திருப்பிய சுந்தரி வேர்த்து விரு விருத்த கணவனை பார்த்து மற்றது எல்லாம் மறந்து “என்னங்க என்ன செய்யுது.” என்று கேட்டவருக்கு ஒன்னும் சொல்லாது மகன் கொடுத்த கூப்பனையைய் தன் மனையிடம் கொடுத்தார்.

அதில் ஸ்ரீமதி என்று மதி  கைய்யெழுத்து போட்டதுக்கு முன்  திருமதி என்றும் பின் வல்லரசு என்றும் தன் மகனின் கைய்யெழுத்தில் எழுதி இருக்க.

“என்..ன…டா…..இ..து.” என்று அந்த கூப்பனை காமித்து கேட்க.

அந்த கூப்பனை வாங்கி திரும்பவும் கோட் பாக்கெட்டில் வைத்துக் கொண்ட வல்லரசு.“அம்மா அதெல்லாம் அப்புறம் பார்க்கலாம். முதல்ல அப்பாவை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போயிடலாம்.” என்று சொல்லியவனின் கையைய்  பற்றிய சுகவனம்.

“ஹாஸ்பிட்டலுக்கு எல்லாம் போக வேண்டாம். உடம்புக்கு ஒன்னும் இல்ல.” என்று வழிந்த வியர்வையைய் துடைத்துக் கொண்டே சொல்ல.

“அப்பா எனக்கு பயமா இருக்குப்பா…இது மாதிரி வியர்வை ஊத்த கூடாது. அதுவும் இவ்வளவு ஏசியில்.

இது ஆர்ட் அட்டாக்காய் இருக்குமோ என்ற பயத்தில் தான் உடனடியாக ஹாஸ்பிட்டல் போனால் நன்றாக இருக்கும் என்று  நினைத்தவன்.

தன் சந்தேகத்தை சொன்னால் இருவரும் பயந்து போய் விடுவார்களோ என்று நினைத்து அதை சொல்லாது இருக்க.

“என்ன அரசு எனக்கு ஹார்ட் அட்டாக்காய் இருக்குமோன்னு பயப்படுறியா…..? என்று கேட்ட தந்தையைய் தாய்  மகன் இருவரும் அதட்ட.

“எனக்கு உடம்புக்கு எல்லாம் ஒன்னும் இல்லடா என்னுடைய அஜாக்கிரதையால ஒரு பெண்ணின் வாழ்க்கையைய் பாழாப்போக போகுதோன்னு பதட்டத்தில் தான் இந்த வியர்வை அரசு. என் இதயம்  ரொம்ப ஸ்டாங்கா தான் இருக்கு.” என்று சொன்னவரின் கைய் பற்றியவன்.

“ இந்த கல்யாணம் நடக்கும் போது ….ஏன்பா பெண்ணின் வாழ்க்கை பாழா போகப் போகுது.” என்று சொன்னவனின் முகத்தை பார்த்தவர்.

என்ன நினைத்தாரோ…”வேண்டாம் அரசு. கல்யாணம் நின்னா கொஞ்சம் காலத்துக்கு அப்புறம் வேறு ஒரு நல்ல இடத்தில் அந்த பொண்ணுக்கு கல்யாணம் நடந்து நல்லா இருப்பா.

ஆனா இப்போ கஷ்டப்பட கூடாதுன்னு கல்யாணம் செய்துட்டு உங்க இரண்டு பேரு வாழ்க்கை பாழாக வேண்டாம். நான் போய் சம்ம….(சம்மந்தி என்று சொல்ல வந்தவர். சொல்லாது ) திருவேங்கடத்திடம் பேசிட்டு வந்துடுறேன்.” என்று மகனின் கையைய் எடுத்து எழுந்தவரின் கைய் பற்றி மீண்டும் அமர வைத்தவன்.

“சொல்லி…..சொல்லுங்க அதுக்கு அப்புறம்”

“அரசு….” அதற்க்கும் மேல் என்ன சொல்வது என்று சுகவனம் தயங்க.

“என்ன சொல்ல போறிங்க. என் பையன் உங்களோட இரண்டாவது மகளை தான் விரும்புகிறான். அதனால் இந்த கல்யாணம் நடக்காதுன்னு சொல்ல போறிங்கலா….? சொன்னா அதுக்கு அப்புறம் என்ன நடக்கும். நீங்க நினச்சது போல இந்த கல்யாணம் நின்னுடும். ஆனா….அதுக்கு அடுத்து என்ன நடக்கும்.

இப்போ இல்லேன்னாலு பிறகாவது அவரோட இரண்டாவது பொண்ணை எனக்கு கல்யாணம் பண்ணி கொடுப்பாரா…?எந்த அப்பா  தன்னுடைய ஒரு  பொண்ணோட வாழ்க்கையைய்  அழிச்சவனுக்கே  அடுத்த பொண்ணை கட்டி கொடுப்பாரு…..? சொல்லுங்க. எப்படியும் நான் விரும்பிய பொண்ணை கல்யாணம் செய்துக்க முடியாது. கல்யாணம் பண்ணாம நீங்க என்னை விட போறது இல்ல. இந்த ஒரு மாசமா அந்த பெண்ணுக்கு போன் போட்டு நல்லா இருந்த மனசையும் கெடுத்துட்டேன்.

 எப்படி பார்த்தாலும் இந்த கல்யாணம் நடப்பது தான் நல்லது. அதனால அதுக்கு உண்டான வேலைய போய் பாருங்க. என்ன ஒன்னு  கொஞ்சம் ரிசப்ஷனை தள்ளி போட்டா நல்லா இருக்கும். என்னையும் தேத்திக்கனும்லே….” வல்லரசு முதலில் வாழ்க்கையின் போக்கு இது தான் என்று பேசினாலும் கடைசியாக அவன் சொன்ன என்னையும் தேத்திக்கனும்லே  என்ற வார்த்தை சொல்லும் போது குரல் உடைய.

“அரசு  என்னலா உயிர்ப்பு இல்லாத வாழ்க்கை தான் உனக்கு கொடுக்க முடிஞ்சுதா…..?” என்று  சுகவனம் கண்கலங்கி சொல்ல.

சுந்தரியும் வல்லரசுவின் கைய் பற்றி “நல்லா யோசிச்சி தான் சொல்றியா அரசு. கல்யாணம் என்பது அதோடு முடிஞ்சுடுற விஷயம் இல்ல. உன் கடைசி வரை வரும் சொந்தம்.  நம்ம வீட்டுக்கு  வரும் பொண்ணு எந்த விதத்திலும் கஷ்டப்பட கூடாது. நான் சொல்றது புரியுமுன்னு நினைக்கிறேன்.” கல்யாணம் செய்தா மட்டும் போதாது அந்த பெண்ணோடு நல்ல படியாக வாழ வேண்டும். என்று மறைமுகமாக உணர்த்த.

“நீங்க சொல்றது புரியுதுமா….கல்யாணதுக்கு உண்டான கடமையைய் நான் சரியாக செய்வேன்.” என்று சொல்லும் மகனை வேதனையுடன் தான் சுந்தரியால் பார்க்க முடிந்தது.

கல்யாணத்துக்கு பிறகு வாழும் வாழ்க்கை கடமை என்று சொல்லும் நிலையில் மகனை  கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறோமே….என்று நினைத்தாலும் .இன்னும் தெளிவு படுத்திக் கொள்ள  விஷயம் இருப்பதால் மகனை தயக்கத்துடன் பார்க்க.

“இன்னும் என்னம்மா…நான் இப்படி வந்ததே….ஏதோ பிரச்சனை என்று அவங்க பயந்து இருப்பாங்கா…நாம  இப்படி வெளியில் போகாமல் இருந்தா இன்னும் பயந்து தான் போவாங்க. “ என்று சொன்னதுக்கு.

“இல்ல அரசு. இந்த    பெண்ணை கல்யாணம் செய்தா மதியைய் அடிக்கடி பாக்குற சுழ்நிலை வரும். அதையும் யோசிச்சு பார்த்துக்க.” என்றவரிடம்.

“நான் பாத்துக்குறேன்மா கூடிய மட்டும் அவங்க வீட்டுக்கு போகாம இருக்கேன்.” என்று சொல்லி முடித்த மகனிடம் இதுக்கு மேல் தாங்கள் ஒன்றும் சொல்வதற்க்கு இல்லை என்று அடுத்த வேலையைய் பார்க்க சென்று விட்டனர்.

என்ன தான் தாய் தந்தையிடம் பேசி அவர்களை அனுப்பி வைத்து விட்டாலும், வல்லரசுவால் தன்னால் முடியுமா….? என்று யோசித்தவன். முடிந்தே ஆகவேண்டும் என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டான்.

 

Advertisement