Advertisement

அத்தியாயம்….17

முதலில் குழந்தைக்கு என்ன ஆகுமோ என்ற கவலையில் இருந்த குடும்பம் இப்போது மதிக்கு எதுவும் ஆக கூடாது என்ற வேண்டுதலோடு அந்த குடும்பமே மருத்துவமையிலேயே பழியாக கிடந்தனர்.

சரவணன் கூட கொஞ்சம் தேறி தன் கை அசைக்க ஆராம்பித்து விட்டான். ஆனால் மதி தான் அவளின் பி.பி நார்மலுக்கு வருவதும் ,பின் திரும்பவும் கீழ் இறங்குதுமாய் இருந்தது.

அவளின் லோ பி.பிக்கு அதிக ரத்தப்போக்கும் ஒரு காரணம். ரத்தம் அதிகம் ஏற்றியும் அதிக உதிரப்போக்கால்  அவளின் பி.பி ஒரு நிலையில் இல்லை.

ஆனால் முதலோடு  கீழ் இறங்க வில்லை என்பதால்  ஆபாத்து ஒன்றும் இல்லை என்று மருத்துவர் சொன்ன அந்த ஒத்த வார்த்தை தான் அப்போதைக்கு அக்குடும்பத்துக்கு ஆதாரவு பேச்சு.

இங்பெட்டில் வைத்திருக்கும் குழந்தையை ஒருவருக்கு பின் ஒருவராய் தூர இருந்து மொத்த குடும்ப உறுப்பினரும் பார்த்து விட்டனர் நம் மதியை தவிர… ஆம் மதி முழு நேரமும் மயக்கத்திலேயே தான் இருந்தாள்.

அவளின் எனர்ஜிக்கு ட்ரீப்ஸ் மட்டுமே…அதனால் குழந்தைக்கு மருத்துவர் வெளிப்பால் தான்  சொட்டு சொட்டாய் குழந்தைக்கு கொடுத்தனர்.

குழந்தை அப்படியே நம் வீராவை கொண்டே பிறந்திருந்தான். ஆம் குட்டி கருப்பண்ணச்சாமி  மதிக்கு குழந்தையாய் பிறக்க…

கோசலை , புஷ்பவதி , யசோதா அக்குழந்தையை கொண்டாடினர் என்றால்…வீரா அவர்களின்  அளவுக்கு முகத்தில் மகிழ்ச்சி காட்டவில்லை.

யசோதா கூட மதி இப்படி இருப்பதால் தான் இப்படி இருக்கிறான் என்று  முதலில் நினைத்தவள். அக்குழந்தையை தூரத்தில் இருந்து யோசனையுடன் பார்க்கும் போது அது மட்டும் காரணம் இல்லையோ என்று யோசிக்க  வைத்தது.

எப்போதும் போல் தன் மனதில் உள்ளத்தை வெளிப்படையாக….. “ ஏன் பெரிய மச்சான் உங்களுக்கு மகன் பிறந்தது சந்தோஷம் இல்லையா…..? மகளை எதிர் பார்த்திங்கலோ….?”  என்று கேட்டே விட்டாள்.

அதற்க்கு பதில் சொல்லாது அதே யோசனையுடனே இருப்பவனை பார்த்து…. “ என்ன  பெரிய மச்சான் என்ன பிரச்சனை…..?”

“ ரொம்ப கருப்பா இருக்கான்ல…..?”

யசோதா இதை எதிர் பார்க்கவில்லை. நிறம் என்ற பேச்சு  அந்த வீட்டில்  இது வரை வந்தது இல்லை. அனைவரும் கருப்பு என்பதால் இருக்கலாம்.

இப்போது  இது என்ன….? அதுவும் பிறந்த குழந்தையைய் பார்த்து….? அதையும்  கேட்டு  விட்டாள்.

அதற்க்கு…. “ மதிக்கு கருப்பு பிடிக்காது.” என்ற பதிலில்…

“ அப்படி உங்க கிட்ட  சொன்னாங்கலா…..?”

“நேரிடையா சொல்லலே….” திருமணம் அன்று மதி  சொன்ன  இந்த கருச்சட்டியை திருமணம் செய்ய மாட்டேன்  சொன்னதை சொல்லி விட்டு….

“ குழந்தையாவது அவளுக்கு பிடிச்சா மாதிரி பிறந்து இருக்கலாம்.” வீரா தன் ஆதாங்கத்தை இப்போதைக்கு இருக்கும் ஒரே ஆறுதலான யாசோதாவிடம் கொட்டி தீர்த்தான்.

“ என்ன மச்சான் பேச்சு இது. குழந்தைங்க தெய்வம் மாதிரி…..அது  எப்படி இருந்தாலும் நம் குழந்தை…அதுவும் நிறத்த  வெச்சி,  இத உங்க கிட்ட நான் எதிர் பார்க்கல மச்சான்.

மதி அன்னிக்கு பேசுனத  பெருசா  எடுத்துக்க கூடாது. அந்த மாதிரி சூழ்நிலையில் என்ன பேசுறது என்று தெரியாம தான் பேசி இருப்பாங்க….

எனக்கு  தெரிஞ்சி மதிக்கி அவங்க அப்பவ பத்தி  தெரியலேன்னு தான் நினைக்கிறேன். காரு கிட்ட அவங்க  அப்பா பேச பேச அப்படியே பேய் அறஞ்சா மாதிரி நின்னுடுச்சி….

அவங்க குடும்பத்து மேல வெச்ச நம்பிக்கையில தான் உங்கல அப்படி  பேசியிருக்கும். இப்போ எல்லாம் தெரிஞ்சி போச்சி இல்ல…இனி எல்லாம் நல்லதே நடக்கும் மச்சான்.”

நல்லவங்க வார்த்தை ஆயிரம் கோயிலில்  கும்பாபிஷேகம் செய்த பலனை தரும் என்பதற்க்கு ஏற்ப…யசோதாவின் வாய் பேச்சோ என்னவோ….மதிக்கு உடல் நிலையில் நல்ல முன்னேற்றம்  காணப்பட்டது.

குழந்தையும் இனி இங்பெட்டில் வைக்க தேவையில்லை. மதியின் அருகில் படுக்க வைக்க….மதியின் கை எப்போதும் குழந்தையின் தலை முடி கோதலிலும்….தாய் பால் கொடுக்கும் போதும் ஏதோ யோசனையிலேயுமே  கழிந்தது.

சரவணன் வீட்டுக்கு சென்று விட்டதால்….யசோதா வீட்டை பார்த்துக் கொள்ள சென்று விட்டாள். வீட்டில் இருக்கும் ஆடு மாடு பார்த்துக் கொள்ள புஷ்வதியும் சென்று விட….

மருத்துவமனையில் கோசலை மதியை பார்த்துக் கொள்ள இருந்தார். எப்போதும் மதியின் அருகில் இருக்கும் கோசலை வீரா அறைக்கு வந்து விட்டால் மட்டும்….

அது எங்கு இருந்து தான் தாகமும், தொண்டை அடைப்பும் வந்து விடுமோ….. “வீரா செத்த நேரம் மதி கூட இருப்பா…..வாய் வறண்டு போய் இருக்கு…தாகத்துக்கு ஏதாவது குடிச்சிட்டு வந்துடுறேன்……” என்று ஒரு நாள் சொன்னார் என்றால்…

மற்றொரு நாள்…. “காபி குடிக்கனும் போல இருக்கு….நான் கேன்டினுக்கு போயிட்டு வந்துடுறேன். நான் வர வரைக்கும் இங்கனவே இரு…..” வீராவிடம் சொல்லி விட்டு ஆர அமர தான் வருவார்.

வீராவுக்கு தன் அத்தை எதுக்கு இப்படி செய்கிறார் என்று தெரிந்ததால்…. ஒரு புன்சிரிப்புடன்…. “ சரிங்க அத்தை….” அவரை வழி அனுப்பி விட்டு….. அந்த அறையின் கதவை சாத்தியவனை….

ரொமான்டிக் செய்வான் என்று  நீங்கள் எதிர் பார்த்தால் அது உங்கள்  தவறு….மனைவி குழந்தைக்கு பால் கொடுக்கும் போது யாராவது வந்து விட்டால்… அதற்க்கு  தான் கதவை அடைத்தது.

அவனே குழந்தை அழ ஆராம்பித்ததும்  குழந்தையை மதியின் மடி மீது வைத்து விட்டு அந்த பக்கம் திரும்பிக் கொள்வான்.

குழந்தை பால்  குடித்து முடித்ததும்…. “ம்…ம்…” என்று இரண்டு கணைப்பு மதி எழுப்பிய பின் தான் அவனே திரும்பி மதியை பார்ப்பான்.

மதியின் முகத்தை வைத்து குழந்தையை அவள் பக்கத்தில் கிடத்துவதோ ….இல்லை தொட்டிலில் படுக்க வைப்பத்தோ முடிவு செய்வான்.

இதற்க்கு தான் அவன் அத்தை அவர்களுக்கு  தனிமை கொடுத்து அவ்வப்போது வெளி நடப்பு செய்வது. இப்படியே தான் அவர்களின் மருத்துவமனை வாசம் முடிந்தது.

குழந்தைக்கு ஒரு மாதம் முடிவடைந்த நிலையில் தான் மதி குழந்தையுடன் வீட்டுக்கு அடி எடுத்து வைத்தாள். யசோதா  அவளுக்கும், குழந்தைக்கும், ஆலம் சுற்றி முடித்ததும்….

 “வலது காலை எடுத்து வெச்சி வாங்க அக்கா…..” எப்போதும் மற்றவர்கள் அக்கா  என்று அழை என்று சொன்னால் மட்டுமே வேண்டா வெறுப்பாக அக்கா என்று அழைக்கும் யசோதா…

யாரும் சொல்லாமலேயே…. “அக்கா “ என்று இன்முகத்துடன் வர வேற்க…. எப்போது இந்த வீட்டை

விட்டு  ஓடலாம்…என்று கடமைக்கு  அந்த வீட்டில் சுற்றி வந்த மதி….

 யசோதா சொல்ல தன் வலது காலை எடுத்து வீட்டுக்குள் அடி எடுத்து வைத்த மதி….அந்த வீட்டை முதன் முதல் சொந்தத்துடன் பார்த்தவள்…. யாரையோ தேட…அவள் தேடல் ஒரு இடத்துக்கு வந்ததும்,  நிலைப்பெற்று நிலைத்து விட்டது.

ஒரு வருடமாய் பார்த்த முகம் தான். ஆனால் இன்று மதியின் கண்ணுக்கு அந்த முகம் மிக சொந்தமாய் தெரிந்தது. முகம் அதே முகம் தான்.  அதில்  எந்த மாற்றமும் இல்லை. ஆனால் பார்த்த கண்ணில் தான்  வித்தியாசம்.

மதி ஒரு மாதம் மருத்துவமனையில் வருவாள்…வருவாள் என்று எதிர் பார்த்து…..யாரிடமாவது கேட்கலாம் என்று நினைக்கும் போது, ஏதோ ஒரு  வித தயக்கம் வந்து தடுக்கும். எந்த முகத்தை வைத்து கேட்பது…..?  தன் குடும்பத்தால் அவள் வாழ்க்கையே  பட்டு  போய் விட்டதே…..

இப்போதும் குழந்தையை பார்க்க வீட்டு வாசலில் நிற்காது ஒதுங்கி நின்று இருந்தவளின் அருகில் சென்ற மதி…

“ கை நீட்டுங்க……” மதி நேராக தன்னிடம் வந்து கை நீட்டுங்க என்று சொன்னதும் , எதற்க்கு….? ஏன்….? என்று புரியாத ஷெண்பா கை நீட்டவும்… நீட்டிய கையில் குழந்தையை  வைத்தவள்.

“ இனி  இவன் உங்க பொறுப்பு….”

மதி இப்படி செய்வாள் என்று, ஷெண்பா மட்டும் இல்லை…அந்த குடும்பத்தில் யாரும்  எதிர் பார்க்கவில்லை.

குழந்தையை கையில் வாங்கிய ஷெண்பாவின் கண்ணில் இருந்து ஆனந்த கண்ணீர் வழிய…அக்குழந்தையயே கண் சிமிட்டாது பார்த்திருந்தாள்.

குழந்தை  வந்து  விட்டது என்றதும்,  எப்போதும் தன் அறைக்குள்ளயே முடங்கி இருக்கும் ஷெண்பா ஆவளோடு ஓடி தான் வந்தாள்.

புஷ்பவதி “ ஆலத்துக்கு உண்டானதை செய்…..” என்று  சொன்னதும்…

ஷெண்பா ஆலம் கரைக்க தேவையான பொருட்களை எடுக்க சமையல் கட்டு இருக்கும் பகுதிக்கு  அடி எடுத்து வைக்கும் போது…

புஷ்பவதியின்…. “ என்ன யசோதா ஆலம் கரைக்க சொன்னா…அப்படியே நிக்குற…. குழந்தையோடு எம்புட்டு நேர அந்த புள்ள வெளியில நிக்கும்.” என்று அதட்டல் போடவும் தான்….

 அன்னை ஆலம் கரைக்க  தன்னை  சொல்லவில்லை. தன் சின்ன மதனியை சொன்னாங்க என்று சரியாக ஊகித்தவள்.

கூடவே…..நம்ம  இருக்கும் நிலைக்கு, நம்மல சுத்த சொல்வாங்கலா…..? வறண்ட பகுதியில் கரடு…முரடு…மட்டும் தான்  கண்ணுக்கு தெரியுமாம்…

அது போல் வேதனைப்பட்ட உள்ளதுக்கு, ஒரு சாதரணமான பேச்சு கூட…இப்படியும் இருக்குமோ…..? தன்னையே வருத்திக் கொள்ளும் என்பதுக்கு ஏற்ப…

ஆசையாக குழந்தையை பார்க்க ஓடோடி வந்தவள். ஒரு மூளையில் ஒதுங்கி நின்றவளின் கையில் குழந்தையை  வைத்ததும்… தன்னால் கண்ணில்  கண்ணீர் வந்தது.

குழந்தையை  கொடுத்து விட்டு மதி தன் அறைக்கு போக பார்க்க….ஏதோ மயக்கத்தில் இருந்து தெளிந்தவள் போல்…..

“ என்னால பார்த்துக்க முடியாது……” ஷெண்பாவின் பேச்சு அழுத்தமாக ஒளித்தது.

அந்த அழுத்ததுக்கு சிறிதும் குறையாத அழுத்தம்  கொடுத்து…. “ நீங்க தான் பார்த்துக்குறிங்க…..”

“ குழந்தைய என் கிட்ட கொடுத்துட்டு,  நீங்க என்ன பண்ண போறிங்க……?” என்று  கேட்ட ஷெண்பாவை பார்க்காது…

அனைவரையும் பொதுவாக பார்த்தபடி….. “ நானே செத்தேன் பிழச்சேன்னு…இப்போ தான்  ஹாஸ்பிட்டலில் இருந்து வந்து இருக்கேன்…..கொஞ்சம் உடம்ப தேத்திக்கலாமுன்னு  குழந்தைய பார்த்துக்க  உங்க கிட்ட கொடுத்தா….இப்படி பேசுறிங்க…..? சவரஷ்ணம் செய்ய நான் தாய் வீட்டுக்கா போக முடியும்…..?” மதியின் இந்த பேச்சு நன்றாகவே வேலை செய்தது…

 என்றாலும், ஷெண்பா…. “ ஏன் குழந்தைய பார்த்துக்க நம்ம வீட்டில் வேறு யாரும் இல்லையா ……?” விடாது  கேட்டாள்.

“இவங்களிடமா…..?” மதி  கை நீட்டி காட்டிய விதத்திலும்….அவள் முகத்தில் வந்து போன பாவனையிலும்….ஏதோ வேற்று கிரக வாசியை பார்ப்பது போல் பார்த்தவள்…

பின் ஷெண்பாவை பார்த்து….. “ இவங்களுக்கு ஆடு மாடு  பார்த்துக்க  தெரிஞ்ச அளவுக்கு,  குழந்தைய பார்த்துக்க தெரியாது.”

மதியின் பேச்சில்…அடிப்பாவி என்பது போல் அனைவரும் வாய் பிளந்து பார்த்துக் கொண்டு இருந்தனர்களே தவிர… அவளை எதிர்த்து  எதுவும் பேசவில்லை.

அவள் எதற்க்கு அப்படி பேசுகிறாள் என்று   அனைவருக்கும்  தெரிந்ததால்,  யாரும் வாய் திறக்கவில்லை.

வீரா மட்டும் மனதில்….பூனை  மாதிரி இருந்துட்டு என்ன பேச்சு பேசுறா…..? இப்படி நினைத்த  மறுநொடி…

இவ எப்படி பட்ட தில்லலங்கடின்னு  நமக்கு தான் மூணு வருசத்துக்கு மன்னவே தெரியுமே…பாக்க பச்ச குழந்தை மாதிரி  முகத்தை வெச்சிட்டு,  பேசுனது எல்லாம் பச்ச பச்ச….அன்றைய  அவளின் பேச்சை நினைத்தால்….

இன்றும் அவனின் கருத்த முகம்,  கொஞ்சம் செவந்து  போச்சுனா பார்த்துக்குங்க…..நம்ம மதி என்ன பேச்சு பேசி  இருப்பான்னு……?

வீரா பழைய நினைவில் இருந்து மூழ்கி வெளிவருவதற்க்குள்,  நம்ம  குட்டி கருப்பண்ணச்சாமி தூக்கத்தில் இருந்து வெளி வந்து…

“ங்கா…ங்கா…..” குரல் எழுப்பிய வாறே….கடந்த சில நாட்களாய்….அப்படி குரல் எழுப்பிய உடன், தன் முகத்தில்  மேல் படியும் மெல்லிய துணி  இன்று விழாததாலோ…என்னவோ…..?

குழந்தை அழுவதையே பார்த்திருந்த ஷெண்பாவின் மாராப்பை  பிடித்து இழுத்து அத்துணியை தன் வாயில்  நுழைக்க  பார்க்க…

“ அய்யோ அழுக்கு…..” பதறி குழந்தையிடம் இருந்து தன் முந்தியை இழுத்ததால்…. கைக்கு கிடைத்தது…வாய்க்கு கிடைக்காது போக…

அழகாக … “ங்க…. ங்க…..” என்று மெல்லிய குரலில்  ரீங்கரமாய் குரல் எழுப்பிய குழந்தை…..கோபத்தில்…அக்குடும்பத்தின் வாரிசு நான் என்பது போல்….

“ வீல்…..” என்று குழந்தை அதிகம்  சத்தம் எழுப்பி தன் கோபத்தை காட்டியதும்….

“ மதனி குழந்தைக்கு பசியாத்திட்டு தாங்க.நானே பாத்துக்குறேன்.”  குழந்தையில் அழுகையை பார்க்க முடியாது ஷெண்பா இறங்கி வந்தாள்.

“ அது…..” என்பது போல் ஒரு பார்வை பார்த்த மதி…. “ குழந்தைக்கு பால் கொடுத்துட்டு உங்க கிட்ட கொடுத்துடுவேன். அதுக்கு உண்டானத நீங்க தான் பாத்துக்கனும்…..” என்று கட்டளையிடும் குரலில் சொன்ன மதி…

அதே குரலில்…. “ வாங்க உங்க அறைக்கு  போகலாம்.” குழந்தைக்கு பசியாத்த கூட  மதி தங்கள்  அறைக்கு  செல்லாது…ஷெண்பாவின் அறைக்கு சென்றாள்.

Advertisement