Advertisement

அத்தியாயம்….9

பூக்கள் பஜாரில் இருந்து  வாங்காது, தங்கள் தோட்டத்தில் பறித்த  பூக்களில் பாதியை கூடத்தில் கொட்டி விட்டு சென்றனர் வேலை செய்பவர்கள்.

“மதனி நாம எப்படி….?” அன்று நடக்கும் சடங்குக்கு ஆன அலங்காரத்தை கணவனை இழந்த நாம் எப்படி செய்வது…..?தயங்கிய வாறு கேட்டார் கோசலை.

“அதுக்குன்னு இருக்க ஆளுங்கல வரச் சொல்லி அனுப்பி இருக்கேன். இன்னும் செத்த நேரத்துல வந்துடுவாங்க…..” பேச்சு தன் நாத்தனாரிடம் இருந்தாலும் பார்வை முழுவதும் வாசல்  பக்கமே….

மாலையில் ஷெண்பாவுக்கு உடல்நிலையில் சில மாற்றம் ஏற்பட…எப்போதும் வீட்டில் யாருக்காவது உடல்நிலை சரியில்லை என்றால் வீரப்பாண்டி தான் அழைத்து செல்வான்.

அது போல் இன்றும்…. “ குட்டிம்மா ஏன் சோந்து சோந்து பாடுத்துக்குறா….?” புஷ்பவதியிடன் கேட்ட்துக்கு…

“ மேலுக்கு கொஞ்சம் சுகம் இல்லை.” என்ன  என்று விலாவாரியாக சொல்லாது மேலோட்டமாக சொல்லி வைத்தார்.

“ மேலுக்கு சுகம் இல்லேன்னா வீட்டில இருந்தா சரியாயிடுமா ஆத்தா ….? அவள கிளம்ப சொல்லுங்க ஹாஸ்பத்திரிக்கு கூட்டுட்டு போயிட்டு வந்துடுறேன்.”

“இல்ல அப்பூ நீ  வேண்டாம். நானும் கோசலையும் அழச்சிட்டு போறோம்.”

“இல்ல நானே கூட்டிட்டு போறேன்.” இன்று சடங்கு அதற்க்காக தான் தன்னை வேண்டாம் என்று சொல்கிறார், என்று தப்பாய் அர்த்தம் புரிந்துக் கொண்டு,  வம்படியாய் தங்கையை மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டு போனான். தாய் சொன்ன பெண் மருத்துவரிடம்…

“ பெரியவன் பேச்சு கேட்காது நாமே கூடிட்டு  போய் இருக்கனும்.” இதை மனதில் எத்தனை தடவை நினைத்தார் என்று அவருக்கே தெரியாது.

“ மதனி….மதனி….” தன் நாத்தனார் தன் கை தொடவும் தான் நினைவு வந்தவராய்…

“ என்ன  கேட்ட கோசலை…..?”  என்று கேட்டதுக்கு….

 

யோசனையுடன்…..“யார் கிட்ட சொல்லி அனுப்பி இருக்கிங்க  மதினி…. அப்பூ கிட்டயா….?”

“ அவன் சடங்கு வேலைய அவனையே செய்ய சொல்வேனா….?நம்ம சரவணனை  அனுப்பி இருக்கேன்.”

“உடம்பு சுகம் இல்லாதவன போய் எதுக்கு அனுப்பினிங்க மதனி…..?”

“வேற யார அனுப்ப சொல்ற….?நாம இரண்டு பேரும் கிட்ட இருக்க கூடாது. யசோதா சின்ன சிறிசு…..அது தான்  அவன அனுப்பி ஆள கூட்டியார சொல்லி இருக்கேன்.” சொல்லி முடிக்கவும் ஆட்களோடு சரவணன் வரவும் சரியாக இருந்தது.

“ சரவணா நீயே கிட்ட இருந்து பாரும்.” மூத்த இருவரும் ஒதுங்க…..

கூடத்தில்  கொட்டி கிடந்த பூக்களை காட்டி….. “இத வெச்சி ஜோடிச்சிடுங்க…..” என்று  சொன்னவன். அலங்காரம் செய்ய அண்ணனின் படுக்கை அறைக்கு அழைத்து சென்றவன் கூடவே….

“யசோதா  கொஞ்ச நேரம் சென்டு, அண்ணன் அறைக்கு மூனு காபி கொண்டா …..?” சத்தமாக சொல்லி விட்டு  சென்றான்.

செய்து செய்து பழக்கமா….வீரப்பாண்டி அறையை ஒரு பார்வை பார்த்து விட்டு நாலா பக்கமும்   மல்லி சுற்றி…. அதன் மேல் இருவாச்சி….சுழற்றி நடு நடுவே ரோஜாவை பொருத்தி காதல் சின்னமான சிவப்பு பூவை படுக்கையின் நடுப்பகுதியில்  இருவர் பெயரை கேட்டு ஸ்ரீ…. வீரா…எழுதி முடிக்கும் வேளயில்…

“ பெரிய மச்சான் அறைக்கு எதுக்கு காபி எடுத்துட்டு வரச் சொன்னாங்க…..?” இதை பற்றி  யசோதாவிடம் யாரும் சொல்ல வில்லை. நேற்று புஷ்பவதி கத்தியதில் ஊரே இன்று சடங்கு என்று தெரியும். அந்த அளவே யசோதாவுக்கும் தெரிந்தது.

கிடா தேர்வு செய்ய இன்று காலையிலேயே  வீரப்பாண்டி பட்டிக்கு சென்று விட்டாள்.கிடாக்களை பொறுத்தவரைக்கும் நல்ல தரமான பொலிச்சல் உள்ள  கிடாயா இருந்தா தான் நல்ல தரமான குட்டிகள் கிடைக்கும்.

ஒரு பொலிக் கிடாவை மந்தையில் பாதி என்று சொல்வார்கள். நல்ல பாரம்பரியமான ,பால் அதிகமாக கொடுக்குற தாய் ஆட்டோட குட்டிகள்ல நல்ல உடல் வளர்ச்சி உள்ள ஆறு வயசுள்ள பொலிக் கிடாயா தான் தேர்வு செய்யனும்.

அப்படி தேர்வு செய்வதில் கூட ஏதாவது வில்லங்கம் வந்து விடும். ஆனால் யசோதா காட்டிய கிடாவை தேர்வு செய்தால் நல்ல ஆரோக்கியமான குட்டிகள் கண்டிப்பாக கிடைக்கும்.

அது அவளின் திறமையா….?இல்லை ராசியா….வீரச்சாமி இருக்கும் போது கூட யசோதா காட்டும் கிடாவை தான் சினைக்கு விடுவார்.

அது இப்போதும்  தொடர்கிறது. நேற்றே யசோதாவிடம் ….. “நாளைக்கு என் கூட பட்டிக்கு வந்து கிடாவ காட்டு…..”

“நானா…..?”

“ என்ன இது புதுசா நானான்னு கேட்டுக்கிட்டு…..?”

“ இல்ல ….?” இழுத்த வாறு கோசலை கிணற்றில்  இருந்து தண்ணீர் எப்படி சேந்துவது என்று ஆறாவது நாளாக  மதிக்கு வகுப்பு எடுக்கிறார்.

அவள் கைக்கு தண்ணீர் மேலே வருவேனா என்று அடம்பிடித்து, பாதி வழியிலேயே கீழே இறங்கி ….இறங்கி…. விழ,

அவளும் விடாது முயற்ச்சி செய்ததில், இன்று அவள் கைக்கு தண்ணிரோடு  வாலி கைக்கு வந்து விட….

“கோசலை அம்மா தண்ணிர் எடுத்துட்டேன். எடுத்துட்டேன்.” ஆர்பரித்தாள்.

அவளின் சிறுப்பிள்ளை  செயலில் புன்னகை பொங்க…. “ அப்படியே விட்டுட கூடாது கண்ணு. திரும்ப திரும்ப….சேந்தி கீழே ஊத்து.”

“நான் கஷ்டப்பட்டு சேந்துறத எதுக்கு கீழே ஊத்தனும்…..?” பக்கத்தில் இருக்கும் தொட்டியைய்  காட்டி….

“ அதில் ஊத்துறேன்….நீங்க துணி துவைக்கும் போது தண்ணி சேந்த தேவயில்ல….சரிங்கலா….?”

“இல்லடா நீ கீழே ஊத்துவது வீண் ஆவாது….தோ பாரு….நீ ஊத்துற தண்ணி தோ பாத்தி கட்டி இருக்கு பாரு  …வாழைக்கு போகும்…..”

“ஓ…சரி சரி…நான் கீழேயும் ஊத்துறேன். தொட்டிலேயும் ஊத்துறேன்.” கோசலை  துணி துவைக்க தண்ணி எடுக்க கூடாது என்ற கட்டளையோடு ஒரே வாலி தண்ணீர் எடுத்த தைரியத்தில்….

மூன்று முறை முயற்ச்சி செய்தால், ஒரே  முறை ஏதோ முக்கால் வாலி தண்ணீர் கிடைக்க…முகம்  சுருங்கியவளை…

“ போக போக தான் வரும் கண்ணு…” கோசலையின் ஊக்கத்தில் தண்ணீர் இறைக்கும் பயிற்ச்சியை தொடர்ந்து மேற்கொள்ளும் மதியை …. வீரப்பாண்டி அழைத்ததுக்கு பதில் சொல்லாது யசோதா பார்க்க.

அவள் பார்வை தொடர்ந்து தன் பார்வையை செலுத்திய வீரப்பாண்டி அவளின் செய்கையில் சிரிப்பு வந்தாலும்….

“ என்ன அவள கூட்டிட்டு போக சொல்றியா….? அவ கழுத்துல தாலி கட்டிட்டதால  இந்த வூட்ல எதுவும் மாறல…

நீ என் அத்த மவ…..அய்யன் இருக்கும் போது செய்த எதுவும் மாறாது.

ஒழுங்கா காலையில் வெள்ளன கிளம்பி இரு. உன்ன பட்டியில விட்டுட்டு நான்  சந்தைக்கு வேற போகனும்.”

அது படி காலையிலேயே  பட்டிக்கு போன யசோதா இப்பொழுது  தான் வீடு வந்து சேர்ந்தாள். வந்ததும் சரவண பாண்டியனின் அழைப்பு…

இதோ காபி கப்போடு யோசனையுடன் அங்கு வந்த யசோதா …வீரப்பாண்டியனின் அறையின் ஜோடிப்பில்…எதற்க்கு….? என்று  தெரியாத குழந்தை இல்லையே….

சரவணன் முகம் பார்க்க கூசியவளாய்…தலை  குனிந்துக் கொண்டே…காபியை அவனிடம் கொடுத்து விட்டு அவன் முகம் பார்க்காது ஓடி வந்து  சமையல் அறையில் புகுந்துக் கொண்டாள்.

வீட்டில் இரு ஆண்கள். அதுவும் திருமணம் செய்யும் உறவு முறையில் இருந்தாலும்… அவர்களிடம் இது போல் கூச்சம்….நாணம் வந்தது  கிடையாது.

அதுவும் வீரப்பாண்டி தான் தன் வருங்கால கணவன் மனதில் பதிந்ததை,  உரிமையுடம் சாப்பாடு பரிமாறுவது , வெளியில் போகும் போது நேரம் சென்டு வருவீங்கலோ…..? கேட்பது. வீட்டுக்கு வந்தால் தண்ணீர் மொண்டு கொடுப்பது. இது போல் தான் செய்தாள்.  இந்த கூச்சம் ….நாணம் ….அவளுக்குமே புதியது.

அந்த அறையின் அலங்காரம் மனதில் வந்து போக… “ சே…இந்த சின்ன மச்சானுக்கு அறிவே இல்ல. அங்கன என்னையா கூப்பிடுவாங்க….” நினைக்க நினைக்க….மேலும் அவளை கனவுலகுக்கு கூட்டி செல்லாது…

“ இங்கன என்னடி மச மசன்னு நின்னுட்டு….சாம்பார் கொதிக்குது பாரு…பொறத்தால போய் கொத்து மல்லி தழைய பிச்சி அது தலையில போடு…..”

அவர்கள் வீட்டில் குளு குளு….சாதனம் கிடையாது. அவர்கள் வீட்டு தோட்டத்தில் விளையும் காய்கறி,  இது போல் தழை வகைகள், அனைத்தும் உடனுக்கு உடன் எடுத்து வந்து தான் சமைப்பர்.

அது போல் பொறாத்தால் சென்ற யசோதா….அங்கு வெங்காயம் நட்டு வைத்திருந்த பகுதியில்   அமர்ந்திருந்த மதி சுற்றி முற்றி பார்த்து விட்டு ஒரு செடியை பிடுங்கி…அதில் இருந்த வெங்காயத்தை அவள் மற்றொரு கையில் இருந்த கல்லைக் கொண்டு நறுக்கிய பின்…

மீண்டும் முதல் போல் பார்த்து விட்டு…..அந்த வெங்காய சாரை சுடியின் உள் கொண்டு செல்லவும்….

என்ன செய்கிறாள் இவள்….வெளியில் போய் என்ன இது…?எதுக்கு….? பாவம்  ஏகப்பட்ட கேள்வி யசோதாவின் மனதில்…

போன மாதம் நவரச நாயகன் நடித்த முதல் திரைப்படமான அலைகள் ஓய்வதில்லை….தொலைக்காட்சியில் போட்டத்தை மதி பார்த்தது போல்  யசோதாவும் பார்த்து இருந்தால், விளங்கி இருக்கும்…அம்மணி எதுக்கு இப்படி செய்யிறாங்கன்னு….

வந்தது தெரியாது கோசலை சொன்னதை செய்து விட்டு எப்போதும் ஏதாவது செய்துக் கொண்டு இருப்பவள்,  இன்று நடக்கும் சடங்கால் தன் அறையில் முடங்கிக் கொண்டவளுக்கு, மதி செய்ததை நினைத்தே குழப்பியவளுக்கு இன்று புதியதாய் வந்த நாணமும்  தூரம் போனது.

வாசலையே பார்த்திருந்த புஷ்பவதி கண்ணில் கணல் மின்ன தன் புல்லட்டை நிறுத்தியவன்….பின்னால் இறங்கிய தங்கையிடம்….

“ இப்போ கொடுத்த மருந்தாவது ஒழுங்கா போடு…..உன்ன செஞ்சதுக்கு அவனுங்க படுறது பார்க்க வேண்டாமா….?அதுக்காவது உடம்ப தேத்திக்க….”

காலையில் எழுந்ததில் இருந்த  இதமான மனநிலை இப்போது முற்றிலும் மாறி போனவனாய்….முகம் சிடு சிடுக்க  வீட்டுக்குள் நுழைந்தான்.

எப்போதும் கோசலை அறையில் முடங்கிக் கொள்ளும் மதி, பாவம்  இன்று அதிசயமாய் கூடத்தில் கோசலையம்மாவிடம்….பேசுவதும்,  தன் கழுத்தை தொட்டு பார்ப்பதுமாய் இருந்தாள்.

வந்தவன் நேராய் மதியிடம் வந்து…..” இருக்குடி…உன் அப்பனுக்கு இருக்கு…ஆ அவன் கூட சுத்திட்டு இருப்பானே ஒருத்தன் அவனுக்கும் இருக்கு…..” கோபமாய் பேசுகிறான் என்று தெரிகிறது.

ஆனால் என்ன….?எதுக்கு….?பாவம் மதிக்கு காரணம் தான் தெரியவில்லை.

ஷெண்பா தான்…. “ அண்ணா பாவம் அவங்க என்ன செய்வாங்க….?” தன் காதல் கணவனின் உருவத்தை ஒட்டி இருக்கும் மதியை பார்ப்பது மனதுக்கு ஒரு வகையில் ஆறுதலாய் இருந்தது. அதனால் பரிந்து பேச…
“ தெரியாதா…தெரிய வெச்சிடுறேன்….” தன் அறைக்கு நுழைய பார்த்தவனை….

“பெரியவனே…..தம்பி அறைக்கு போய் குளிச்சிட்டு வாப்பா…..” இன்று என்ன என்பதையே மருத்துவமனையில் அந்த பெண்மருத்துவர் தன்னை அழைத்து திட்டிய திட்டலில் அனைத்தும் மறந்து போய்…

“ எதுக்கு அவன் அறைக்கு போகனும்…..?” கேட்டவனிடம்…

சரவணா தான்…. “ இப்போ தான் அலங்காரம் முடிஞ்சி இருக்குணா…..”

“ஓ….” சொல்லிக் கொண்டே மதியை முறைத்த படி  சரவணன் அறைக்கு சென்றான். வீரப்பாண்டியன்  பார்க்க மட்டும் முரட்டு தோற்றம் உடையன் கிடையாது.

செயலிலும், முதலில் அவன் கை தான் பேசும். ஆனால் வீட்டில்  அதற்க்கு அப்படியே எதிர் பதமாய் இருப்பான். வீட்டு பெண்களுக்கு முக்கியதுவம் கொடுப்பான். அவர்கள் மனது அறிந்து நடந்துக் கொள்வான். குடும்பத்து மீது மிக பற்று உள்ளவன்.

இன்று அந்த மருத்துவர் சொன்ன செய்தியில் தன் குண  இயல்பே முற்றிலும் மாறி போனவனாய் இருந்தான்.

அந்த மருத்துவர் சொன்னதே  மீண்டும் மீண்டும் அவன் காதில்  எதிரொலித்துக் கொண்டே இருந்தது. புஷ்பவதி மருத்துவரிடம் போகும் போது பெண் மருத்துவர் என்றதும்…

பெண்கள் சம்மந்தப்பட்டதோ…. அதனால் தான் ஆத்தா  தன்னோடு அனுப்ப தயங்கினார்களோ….நான் யார் அவளுக்கு….? அண்ணன் தானே….அண்ணன் என்பவன் இன்னொரு  தகப்பன் தானே….

மருத்துவமனையில் பெண்மருத்துவர் அழைத்ததும் , தங்கையுடன் உடன் செல்ல எழும் போது….

“ அண்ணே நீங்க வேணாம்…..” தயங்கிய வாறு சொல்ல….

“என்ன இது….?” என்று மனதில் நினைத்தாலும், சரி இப்போ எதுவும்   சொல்ல வேண்டாம் ,என்று தங்கை விருப்பம் போல் அவன் வெளியில் காத்திருந்தான்.

மற்றவர்களுக்கு எடுத்த நேரத்தோடு, தன் தங்கைக்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கிறாரோ…ஏதாவது பிரச்சனையா….? நினைத்துக் கொண்டே எழும் வேளயில்…

செவிலியர் ஒருவர்….. “ உங்கல டாக்டர் கூப்பிடுறார்.”  என்று சொன்னதும்…

பயம்…பதட்டம் ….மனது பட படக்க விரைந்து சென்றான்…..அவன் பதட்டத்துக்கு ஏற்ப தான்….

“ நீங்கலாம் என்ன ஆளுங்க…..? வெள்ளையும் சொள்ளையுமா….இருந்தா மட்டும் போதாது…. வீட்டு பெண்களையும் கொஞ்சம் பார்த்துக்கனும். உங்க கவுரவத்துக்கு என்ன காரியம் செஞ்சு இருக்கிங்க…..?”

வீரப்பாண்டி ஏதோ சொல்ல வருவதை கூட கேட்காது…..ஷெண்பாவும்…. “ இவுங்க இல்ல…..” அவள்  பேச்சையும் காதில் வாங்காது…..

“ என்ன சார்  ஜாதி….சின்ன பொண்ணு… உள்ள முழுக்க செப்டிக் ஆகி இருக்கு…..” இவ்வளவு நேரமும் டாக்டரின்  பேச்சை தடுக்க பார்த்தவன். ஷெண்பாவின் உடல் நிலை பற்றி சொல்லவும் அமைதியாகி விட்டான்.

இருபது வயசுல மாதந்திரம் வந்துடனும். இல்லேன்னா உடல்ல எவ்வளவு பிரச்சனை ஏற்படும் தெரியுங்கலா….?

உங்களுக்கு எப்படி தெரியும். நீங்க தான் ஆம்பிளைங்க  ஆச்சே….இது பொம்பளைங்க டிபார்ட்மென்ட்…. நீங்க ஏன் இந்த பிரச்சனை எல்லாம் தெரிஞ்சி வெச்சிக்க போறிங்க….?

எந்த அளவுக்கு ஜாதி வெறி கருவறையிலேயே கை வைக்கும் அளவுக்கு….நெஞ்சில ஈரமே இருக்காதா…..

செஞ்சது மட்டும் இல்லாம  படிக்க அனுப்பிட்டிங்க…சரியா சாப்பிடாம….மாத்திர போடாம….தையல் போட்ட இடத்துல எல்லாம் செப்டிக் ஆகி இருக்கு. ஒரு மாசம் கண்ணும் கருத்துமா பார்த்தா தான் பொழைப்பா….இல்லேன்னா செப்டிக் வெச்ச செத்து போயிடுவா…..”

அவன் இருக்கும் கிராமத்தில் பெண்மருத்துவர் கிடையாது. பக்கத்து ஊருக்கு  அழைத்து வந்ததால், வீரப்பாண்டியனை தெரியாது கண்ட படி அந்த பெண் மருத்துவர் திட்டி அனுப்பி விட்டார்.

அவர் திட்டியது கூட கவலை இல்லை.ஆனால்….தங்கைக்கு நடந்த கொடுமை,  நீரு பூத்த நெருப்பாய் இருந்ததை அந்த மருத்துவர் விசிறி விட்டு அதை கொழுந்து விட்டு எரிய செய்து விட்டார்.

அதனால் அவனிடம் இருந்து வெளிப்படும் வெப்பத்தை நம் மதி தாங்குவாளா….? இந்த மனநிலையில் தான் அவன் சோபன அறைக்குள் சென்றது.

 

Advertisement