Advertisement

அத்தியாயம்….8

சரவணனிடம் அவன்  உடல் நலத்தை விசாரித்து விட்டு….எப்போதும் போல் யசோதா கொடுக்கும் கருப்பெட்டி காபியை  குடித்துக் கொண்டே பின் பக்க தோட்டத்தில் பூப்பறிப்பதை பார்த்த வீரப்பாண்டி ….

அங்கு  வேலை செய்பவர்களிலேயே  மூத்த பெண்மணியை அழைத்து…. “என்ன பெரியாத்தா இன்னுமா முடியல…..?மார்க்கெட்டில்  பூ லோட ஏத்திட போறாங்க…வெரசா முடிங்க…..” உறவு முறை வைத்து அழைத்தாலும் பேச்சில் கண்டிப்பு இருந்தது.

பூக்கள் எல்லாம் பூக்கும் முன் தான் அதற்க்கு மதிப்பு.  பூத்து விட்டால் குப்பையில் கொட்ட வேண்டியது தான்.

அந்த மூத்த பெண்மணியோ…தலை சொறிந்துக் கொண்டே….. “ அந்த  பெரிய வூட்ல கொஞ்சம் வேல இருந்தது அப்பூ. அத செஞ்சி முடிச்சிட்டு வர நேரம்  கடந்துடுச்சி….”

அந்த  பெரிய வீடு என்றாலே,  அது கங்காதரன் வீடு தான். அங்கு என்ன வேலை…..? யோசித்தவன் கேட்டு விட்டான்.

“ அது நம்ம சின்னம்மா அறையிலேயே குளிக்க,  அப்புறம் நம்ம புழக்கட ஒதுங்குவோமே அப்பூ…அந்த கருமத்த கூட அங்கனவே கட்ட சொன்னாங்க…. அது தான் மவன் கூட நானும் ஒத்தாசைக்கு  போனேன். அந்த வேல ராவு ரொம்ப நேரம் இழுத்துடுச்சு. அது தான் எழ கொஞ்சம் நாழி ஆயிடுச்சி அப்பூ…. இந்த சிறுக்கிங்க நான் இல்லேன்னா வேலயா  பாக்குறாலுங்க . வாய் தான் ஆடுதுங்க…நீங்க போங்க அப்பூ தோ செத்த நேரத்துல முடிஞ்சுடும். ” வீரப்பாண்டியனிடம் வேலை காலதாமதம் ஆனாதுக்கு , சமாதானப்படுத்தி அனுப்பி  வைத்தார் அந்த மூத்த பெண்மணி.

இந்த பெரியாத்தாவின் மகன் கட்டட தொழிலாளி. இது போல் மேல் வேலை வந்தால்,  உதவிக்கு அவன் ஆத்தாவையும் அழைத்து செல்வது தெரிந்தது தான்.

ஆனால் மதி இல்லாத போது எதுக்கு அவ அறைய  கட்டனும். கங்காதரன் குணத்துக்கு அந்த அறைய இடிச்சி தானே போடுவான்.

மவனுக்கு என்ன என்ன செஞ்சான்…மவள சும்மா விட்டுடுவானா…..?  வீரப்பாண்டியனுக்கு எந்த வேலை எங்கு இருந்தாலும், அவன் கண் எப்போதும் தன்  வீட்டில் இருக்கும்.

சந்தைக்கு ஆடு ஏத்தி போக  . பூச்சி கொல்லி மருந்து வாங்க…சரவணன் உடல் நிலை இப்படி இருக்கும் போது அவன் தான் செல்ல வேண்டி இருந்தது.

அப்படி இருக்கும் போது  வீட்டுக்கு தக்க பாதுக்காப்பு வசதி செய்து வைத்து தான் செல்வது.

வீடு புகுந்து எல்லாம்  செய்ய அவனுங்களுக்கு தைரியம் இல்லை. இருந்தும் ஒரு பாதுக்காப்பு தான். இப்போது மதியின் மீது கைய் வைப்பது அவன்  மானத்தின் மீது கை வைப்பதற்க்கு சமம். அதோடு….

யோசனையுடன் கூடத்துக்கு வந்தவன் அங்கு இருந்த ஊஞ்சலில் அமர்ந்தும் அவன் சிந்தனை இதிலேயே…..ஏதோ திட்டம் போட்டுட்டாங்கலா…..? போட்டு விட்டார்கள் என்பதை  அங்கு வந்த காத்த முத்து அடித்து சொன்னார்.

விடியலிலேயே தன் வீடு தேடி வந்த  காத்த முத்துவை பார்த்த வீரப்பாண்டிக்கு ஏதோ இருக்கிறது என்று  அவன் உள்மனது சொன்னது….

அதற்க்கு ஏற்றார் போல்…. “ அந்த சாரங்கன் நேத்து பக்கத்து ஊருக்குக்கு  போய் தாலி வாங்கி இருக்கான்.”

“எதுக்கு…..?” என்று கேட்பதற்க்கு, வீரப்பாண்டியன் அறிவு அற்றவன் கிடையாது. சாரங்கன் வீட்டுக்கு ஒரே மகன். தங்களுக்கு குடும்ப ஆச்சாரியார் இருப்பது போல்…

அவர்கள் இனத்துக்கு என்று ஒரு ஆச்சாரியார் இருக்கிறார். அதுவும் அவர்கள் குடும்பத்துக்கு தாலி செய்ய ஆயிரெத்தெட்டு சம்பிரதாயம்.

அதை விடுத்து எப்படி சட்டென்று, அதுவும் பக்கத்து ஊரில் இருந்து தாலி வாங்கி வருவது…. வீரப்பாண்டியின் மனதில் பல சந்தேகங்கள் வந்தாலும்,  ஏதும் கேட்காது காத்த முத்துவின் பேச்சை கவனிக்க ஆராம்பித்தான்.

“கங்காதரன் அவன் வீட  எல்லாம் புதுப்பிக்கிறான்.” இது அவனுக்கு தெரிந்தது தான்.

ஆனால் இப்போது இவர் சொன்னதை வைத்து பார்த்தால், ஒன்றும் ஒன்றும் இரண்டு என்பது போல்….அவன் மனதில் எழுந்த சந்தேகம் மட்டும் உறுதி ஆனால் ….அவனுங்கல பல்லை கடித்தான் வீரப்பாண்டி…

பேச்சின் நடுவே  காத்த முத்துவின் முகத்தில் தோன்றிய தடுமாற்றத்தில்…. “ எது இருந்தாலும் சொல்லுங்க…..” வீரப்பாண்டி சொன்னதில்…

“ இப்படி சடங்கு வைக்காம  நீங்களும், உம்ம பொஞ்சாதியும், தனி தனியா இருக்குறது…எப்படியோ அவனுங்களுக்கு தெரிஞ்சி போச்சி அப்பூ….

கங்காதரன் கிட்ட இந்த சாரங்க பையன் நான் உங்க மகளுக்கு வாழ்க்கை கொடுக்குறேன். அவன் குடும்பத்தால மவன  தான் இழந்தோம்.

மவள  இழக்க கூடாது. நேரம் பார்த்து  தூக்கிட்டு தாலி கட்டிய கைய்யோட….சொல்லவே கூச்சமா இருக்கு தம்பி. அவன மாதிரி நான் பொட்டப்பையல்  கிடையாது விட்டு வைக்க…எண்ணி ஒன்பது மாசத்துல பிள்ளைய கொடுத்துடுவேன். அவன் உங்க மகள தூக்கினதோடு…அவன் பொஞ்சாதிய நான் தூக்கி புள்ள கொடுத்தா…. அது அவங்க இனத்துக்கே எவ்வளவு கேவலம். இதுவே நான்  மேம்போக்கா தான் சொல்றேன் தம்பி. அவன் என்ன என்னவோ பேசி இருக்கான் தம்பி.”

இதை கேட்க கேட்க  வீரப்பாண்டிக்கு கழுத்து நரம்பு புடைக்க கோபம்…என்பதை விட…. அவனை அடித்து தும்சம் செய்ய வேண்டும் என்ற வெறி…. பல்லை கடித்து தன் கோபத்தை வெளிக்காட்டது இருந்தான்.

ஆனால் இதை அனைத்தையும் கேட்ட புஷ்பவதி…. “ என் மருமவளுக்கு அவன் புள்ள கொடுப்பானா…..? என்ர வூட்டு பொண்ண பார்த்தாலே அவனுங்க கண்ணு இருக்காது இவன்….இவன்….” காத்த முத்துவிடம் கத்திய புஷ்பவதி…

“ பெரியவன இந்த பேச்ச கேட்டு நீ எப்படி அமைதியா இருக்க…..?”  காத்த முத்துவும், வீரப்பாண்டியும், ஊஞ்சலில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்ததால்,  பொறத்தாலே இருந்து வந்த புஷ்பவதிக்கு இவர்களின் முதுகு பக்கம் தான் தெரிந்ததே ஒழிய, முகம் தெரியவில்லை.

கத்திக் கொண்டே முன் பக்கம் வந்த போது தான் , வீரப்பாண்டி எந்த அளவுக்கு தன் கோபத்தை கட்டுப்படுத்தி வைத்துள்ளான் என்பதை, ஏற்கனவே சிவந்த அவன் கண்கள் மேலும் சிவந்தும்,  கழுத்து நரம்பு புடைத்தும் இருப்பதை பார்த்து…

புஷ்பவதி தன் கோபத்தை கைவிட்டாரே  ஒழிய தன் பேச்சை இல்லை.

அங்கு மாட்டி இருந்த நாட்குறிப்பை எடுத்து அதனை பார்த்த வாறே….தன் கை விரல் கொண்டு ஏதோ கணக்கு போட்டவர்…

“அடுத்த நாளுக்கு அடுத்த நாள் நேரம் அம்சமா இருக்கு… அன்னிக்கி என்ற மவனுக்கும், மருமகளுக்கும், சாந்தி முகூர்த்தம்…..அவங்களுக்குள்ள எதுவும் நடக்கலேன்னு  எந்த எடுப்பட்ட சிறுக்கி சொன்னாளோ….இதையும் போய் சொல்லட்டும்” பொறத்தாலே வேலை பார்ப்பவர்களை பார்த்து கத்தினார்.

ஏற்கனவே அவர் குரல்  ஏழர கட்ட…இதில் தன் மவன ஆம்பிளை  இல்லை என்ற பேச்சில், அது பதினைந்து கட்டாக மாறியதில்…பொறாத்தாலே மட்டும் என்ன அந்த கிராமம் முழுவதுமே  கேட்டு இருக்கும்.

அப்படி இருக்கும் போது வேலை முடிந்தால் கோசலையின்  அறையில் தஞ்சம் புகும் நம் மதிக்கு கேட்டு இருக்காத என்ன…..?

புஷ்பவதி முன் போலவே தன்னை மருமகள் இல்லை என்று திட்டி இருந்தால் கூட பரவாயில்ல போலவே…நான் அவன் கூட  தனியாவா நினைக்க… நினைக்க…..

இப்போதே அவளுக்கு குளிர் காச்சல் வரும் போல் இருந்தது.  அதிகமான குளிரினால் தன் கை கொண்டு கழுத்தை தொட்டு தொட்டு பார்த்தாள்.

ஆனால் தன் கை குளுமையையே உணர்ந்ததில்…கடவுளே ஜூரம் வந்தால் கூட இத சாக்கா வெச்சி தப்பிச்சிக்கலாமே….ஜூரம் போக மாத்திரை  இருப்பது போல், வர ஏதாவது இருக்கா..?

யோசித்தாள் ….யோசித்தாள்…..யோசித்ததின்  கண்டு பிடிப்பாய் அவள் கண்கள் மின்னியது. இப்போ வேணா அந்த கருமத்த  இரண்டு நாள் சென்டு தானே வைக்கிறதா கேட்டுச்சி…. அப்போ தன் திட்டத்தை  நிறை வேத்தலாம்.

கோசலைக்கும்  தன் மதனி பேசியது கேட்டது. இதுக்கு இப்படியாவது நேரம் வந்ததே….அது வரை சந்தோஷம். கண்ணாலம் முடிஞ்சி இத்தன நாள் சென்டும் சடங்கு வைக்கலையே….மதனியிடம் இது பேச ஒரு தயக்கம். அதற்க்கு காரணம் மதனி மட்டும் இல்லை.  சரவணனின் உடல் நிலை. இந்த வீட்டு பெண்ணான ஷெண்பா வாழ்க்கை இழந்து இப்படி இருக்கும் வேளயில்…. அதன் பழிவாங்க தான் இந்த திருமணம் என்றாலும்…இது போல் பேச அவருக்கே ஒரு மாதிரியாக தான் இருந்தது.

கலகம் ஏற்பட்டால் தான் வழி பிறக்கும் என்பது சரி தான் போல், எப்படியோ நல்லது நடந்தால் சரி. சுட சுட பால் காச்சி எடுத்து தன் அறைக்கு சென்ற  கோசலை அங்கு உடல் முழுவதும் போர்வை போர்த்திக் கொண்டு படுத்திருந்த மதியை பார்த்ததும்…

“ என்ன கண்ணு  உடம்புக்கு என்ன பண்ணுது.”  தூங்குவது போல் பாவனையில் இருந்த மதி எந்த பதிலும் சொல்லாது தன் நாடகத்தை தொடர.

மதியிடம் இருந்து  எந்த பேச்சும் இல்லாததால்….மதி செய்தது போலவே கோசலையும், அவள் கழுத்தை தொட்டு பார்த்தார்.

அவருக்கும் அதே குளுமை  உணர்வு தான். என்ன ஒன்று வியர்வை ஏன் இப்படி பெருகுது…..மின் விசிரி சுழல்வதை பார்த்து….

போர்த்தி இருந்த போர்வை எடுத்து விட்டு….. “ என்ன பேசுவதும் கேட்கல..இப்படி வேக்குது….உடம்புக்கு ஏதாவது பிரச்சனையா…..கருப்புண்ணசாமியே…. என்ன இது…..? இருந்து…. இருந்து… இப்போ தான் ஏதோ  வீட்ல நல்லது நடக்க இருக்கு, இப்போ போய் இந்த புள்ள இப்படி படுத்து இருக்கு.”

“ சீ பாவம் எனக்கு உண்மையிலேயே உடம்பு சரியில்லேன்னு வருத்த படுறாங்க….தன் நாடகத்தை கை விட்டு எழுந்துக்கலாமா….? யோசிக்கும் வேளயில்…

“ அப்பூ….” என்ற கோசலையின் அழைப்பில்…. “அய்யோ கெட்டது அவன் வந்தா நடிச்சது உண்மையாலே ஆயிடும்.” பதறி போய் எழுந்தவள்.

வீரப்பாண்டியை கூப்பிட்டுக் கொண்டே அந்த அறையை விட்டு போக பார்த்தவரின் கை பிடித்து….

“எனக்கு ஒன்னும் இல்ல….ஒன்னும் இல்ல. கொஞ்சம் அசதி அது தான்  அடிச்சி போட்டது போல தூங்கிட்டேன் போல….” பதட்டத்துடன் பேசும் மதியை உத்து பார்த்த கோசலை…

“ஒன்னும் இல்லேன்னா பரவாயில்ல…இந்தா இந்த பால குடிச்சி படுத்து எழுந்தா மீதம் இருக்கும் அசதியும்  கூட ஓடி போயிடும்.”

அவர் பேச்சில் என்ன இருந்தது என்பது சரியாக தெரியவில்லை என்றாலும், அவர் சொன்னதை கேட்டு பாலை  குடித்து விட்டு நல்ல பிள்ளை போல் படுத்துக் கொண்டாள்.

தன் அத்தையின் “அப்பூ….” என்ற ஒரே அழைப்பில்,  அப்போது தான் காத்த முத்துவை அனுப்பி வைத்த வீரப்பாண்டியின் காதில் விழ…. கோசலையின்  அறை நோக்கி தன் காலை செலுத்தினான்.

அத்தையின் அறையில் நுழையும் முன், மதி இருக்காளே…யோசனையுடன் அறைவாயிலிலேயே  நின்றவனுக்கு, அவர்கள் இருவரின் உரையாடல் கேட்டதோடு மதியின் மனநிலையும் புரிந்தது.

அவர்கள் இருவருக்கும் சாதரண பேச்சு வார்த்தையே இல்லாத போது, இதை பற்றிய பேச்சாய்  …. “ பயப்படாதே…..” எப்படி சொல்வான்.

ஆனால் அதை அவன் சொல்லி இருந்தாலுமே…அதை அவன் கடைப்பிடித்து இருக்க மாட்டான். அப்படி அமைந்து விட்டது வீட்டின் சூழ்நிலை.

அடுத்த நாள் விடியலிலேயே வந்து இறங்கிய தன் தங்கையின் வெளிறிய  தோற்றத்தை பார்த்து இது வரை பேசாத வீரப்பாண்டி…..

“ குட்டிம்மா என்னடா…..?” பதைத்து கேட்டான். காதல் கணவன் இழந்து, அதோடு வாரிசு இழந்து வாழ்க்கையே வெறுமையாகி போன ஷெண்பாவுக்கு,  தன் சகோதரனின் இந்த பழைய அழைப்பில் அவன் நெஞ்சில் சாய்ந்தவளின்…

தலையை தடவி விட்ட வாறே…. “ என்னடா எதுக்கு அழற….?” வார்த்தையில் அத்தனை வேதனை. கேட்டு விட்டான் எதற்க்கு அழற என்று….?அவனுக்கு தெரியாதா….அவள் இழந்தது எத்தகையது என்று…

ஆயிரம் பணம் கொட்டி கொடுத்தாலும், அவள் இழந்ததை அவனால் கொடுக்க முடியுமா…..? அவள் தந்தை இருக்கும் வரை ஷெண்பாவை யாரும் ஒரு பேச்சு பேசக் கூடாது. அவர் அடிக்கடி சொல்லும் வார்த்தை அவள் இந்த வீட்டு மகாலஷ்மி. ஷெண்பா  வளர்ந்த பின் கூட அவளை நடக்க விடாது, தான் தோள் மீது தான் சுமப்பார்.

“குழந்த மாதிரி  வளந்த பிள்ளையே எதுக்கு சுமந்துக்கிட்டு….?” வீதியில் போகும் போது அங்கு இருந்த பெருசுகள் கேட்டால்…..

“ அவளுக்கே  குழந்தை பிறந்தாலும், இவ எனக்கு குழந்தை தான்ல…..” அப்படி சீராட்டி வளர்ந்தவளின் இன்றைய நிலை…

“ என்ன குட்டிம்மா…என்ன ….?” அண்ணனிடம் எப்படி சொல்வாள். இருபது வயதிலேயே கற்ப்பபை அகற்றி விட்டால்….அதனால் ஏற்படும் பக்க விளைவோடு….கொடுத்த மாத்திரை சரி வர போடாததால், சுளு சுளு உள் குத்தலில்   சீழ் கோர்த்து விட்டதோ…. என்ற சந்தேகம்.

பெண்ணிடம் மட்டுமே பகிர கூடிய அந்தரங்கமான சில விஷயங்கள். அண்ணனே ஆனாலும்ரு ஆண் மகனிடம்  எப்படி சொல்வாள். எதுவும் பேசாது அழுதவளின் நிலை தெரியாததால் அப்போதிக்கு தலை கோதி மட்டுமே அவனால் விட முடிந்தது.

சினைக்கு மாட்டை அனுப்பி விட்டு, அப்போது தான்  வீட்டுக்குள் நுழைந்த புஷ்பவதி, இந்த அதிகாலையில் மகள் வந்ததோடு மட்டும் அல்லாமல், அண்ணன் மீது சாய்ந்து அழுதவளை பார்த்து பெத்த மனம் பதறி துடிக்க…

“ அடி ராசாத்தி …..” மகளின் தலையை மகனிடம் இருந்து  தன் நெஞ்சுக்குள் பொத்திக் கொண்டவர்…

“ என்ன கண்ணு….?”  ஆத்தாவின் அனுசரணையான வார்த்தையில் மனதில் இருக்கும் பாரத்தையும், உடலில் ஏற்படும் பாரத்தையும் ஒருங்கே இறக்க நினைத்து தலை நிமிர்ந்து தயக்கத்தோடு தன் அண்ணனை பார்த்தாள்.

“ பெரியவனே….நீ கொஞ்சம் அண்ணான்டா போ ராசா….”

“எதுக்கு நான் போகனும். என் தங்கை பத்தி எனக்கு தெரியாத ரகசியம் என்ன இருக்கு….?அது தான் ஒரு முற மறச்சி ஆனாது பத்தாதா….?”

என்ன தான் தங்கை மீது பாசம்…அந்த  அதிகாலையில் தங்கை வந்த நிலை…..பேசி விட்டாலும்….தங்கை செய்த செயல், அதனால் வந்த விளைவு. அவனால் மன்னிக்க முடியவில்லை என்பதை விட மறக்க முடியவில்லை எனலாம்….

அண்ணன் தான் செய்த தப்பை மன்னிக்கவே மாட்டானா…..? வேதனையுடன் பார்த்தாள்.

“பெரியவனே நீ  கொஞ்சம் செத்த நேரம் சும்மா இருப்பா…..” தன் மகனிடம் பணிவுடன் சொன்னவர்…

மகளிடம்…. “ அது தான் அண்ணன் கேட்குறாப்பலலே என்ன சொல்லு….? அவனுங்க திரும்பவும் ஏதாவது வம்பு செஞ்சாங்கலா….சொல்லு…. அவனுங்க  மாதிரி நம்ம வீட்டு ஆம்பிளைங்க பொட்டச்சி கிட்ட வீரத்த காட்ட மாட்டாங்க…. நேரா அவனுங்க வூட்டுக்கே போய் செஞ்சிடுவாங்க…..”

அப்போது தான் சமையல் கட்டில் இருந்து அதிகாலையில் கோசலை அம்மாவிடம் சமையல்கலை படிப்பை படிக்கும் மதி, கோசலை அம்மா சொன்னது போல் பதமாய் பாயாவுக்கு மசாலா அரைத்து கொடுத்து விட்டு….

எப்போதும் குளு குளு அறையிலேயே இருந்து பழக்கப்பட்டவளுக்கு, இந்த கொஞ்ச நேரம் கூட வெக்கையில் இருக்க முடியாது, நெத்தி வியர்வையை தன் துப்பட்டாவை கொண்டு துடைத்துக் கொண்டே வந்தவள்…

புஷ்பவதி சொன்ன…. “ வூடு புகுந்து…..” பாவம் யாரு வீடு  புகுந்து பிரச்சனை பண்ண போறாங்கலோ…..? அது தன் தாய் வீடு தான் என்று தெரியாது எப்போதும் போல் கோசலை அறைக்கு அடைக்கலம் புக பார்க்க….

“ ஏன்டி சித்ராங்கி….” யாரோ யாரையோ கூப்பிடுறாங்க என்பது போல் நிற்காது போய் கொண்டு இருப்பவளை…

“அடியே நல்ல குடும்பத்துல இருந்து வந்து இருந்தா வீட்டு பெண் இப்படி கண் கலங்கி இருக்காலே என்ன ஏதுன்னு கேட்பா…. நீ தான் கருவருத்த குடும்பத்தில் இருந்து வந்தவ ஆச்சே…..”

புஷ்பவதி திட்டலில் இருந்து,  அவர்கள் தன்னை தான் கூப்பிட்டார்கள் என்று  திரும்பி அவர்களை பார்த்தாள். அப்போது தான் ஷெண்பா அங்கு இருப்பதை கவனித்தாள்.

அவள் இது வரை வீரப்பாண்டி தங்கையை உத்து பார்த்தது இல்லை.  இப்போது தான் பார்க்கிறாள். பார்த்த உடன் நினைத்தது, பரவாயில்ல இவ இவங்க மாதிரி   உயரமா…குண்டா, கருப்பா இல்ல.

இதுவரை இந்த உயரம்…குண்டு…நிறம்….பிடிக்குமா….?பிடிக்காதா….? ஆராய்ந்தது இல்லை.

ஆனால் இக்குடும்பத்தில்  வந்ததில் இருந்து அது போல் தோற்றத்தை பார்த்தாலே…..ஒரு வித பிடித்தமின்மை ஏற்பட்டு விட்டது.

ஷெண்பாவை பார்த்துக் கொண்டே …புஷ்பவதி பேச்சான அது என்ன எப்போ பார்த்தாலும் கருவருத்த குடும்பமுன்னு சொல்லிட்டு இருக்காங்க….? அப்படினா என்ன….?

பாவம் அவளுக்கு தன் வீட்டில் நடந்தது  ஒன்றுமே தெரியாது. அக்கிராமத்திலேயே படித்த குடும்பம் நம்முடைய குடும்பம். அந்த மரியாதை காப்பாத்த கல்லூரிக்கு சென்று வந்தாள்.

பெரிய மச்சி வீடு….தோழிகளின் புகழ்ச்சியில்….பெருமையும் சேர…..தன்னை உட்கார வைத்து சவரஷணை  செய்யும் தாய்….இதோடு என்ன வேண்டும். சுக போக வாழ்வு. அது அமைத்து தந்த தாய்…தந்தை பற்றி எதுவும் தெரியாது.

விஷகாச்சலில் அண்ணன் இறப்பு,  அவளை கதி கலங்க வைத்தது. முதல் துக்கம் ….அப்போதைய சூழ்நிலையில் தந்தை தன்னிடம் வந்து…

“ இனி நீ கல்லூரிக்கு போக வேண்டாம்.” தனக்கும் ஏதாவது ஆகிவிடுமோ அப்பா பயப்படுகிறார்.

ஸ்டெடி லீவ் தானே…அதை விட்டால் நேரிடையாக பரிட்சை எழுத வேண்டும். அப்போது  தந்தையிடம் பேசி செல்லலாம். இது தான் அவள் தன் குடும்பத்தை புரிந்துக் கொண்ட லட்சணமும்…அவள் வகுத்த திட்டமும்.

 

Advertisement