Advertisement

அத்தியாயம்…. 23(3)
மூன்று வருடம் கடந்து…..
“ எலே கந்தா….கந்தா….” புஷ்பவதியின் அந்த எழரைகட்டு குரல் கூட அவன் சேவியில் விழாத அளவுக்கு பாக்கெட்டில் ஐபோனில் தனக்கு பிடித்த காதல் பாட்டை நிரப்பி….அதை இயரிங்….வழியாக கேட்டுக் கொண்டு இருந்த கந்தனின் கண்ணோ…. காதல் மயக்கத்தில் மூடி இருந்தது. (எனக்கும் காதல் வந்துடுச்சிலே….)
பின் இருக்காதா……? போன மாதம் ஷெண்பாவே   அவனை தேடி வந்து …. “ எதுக்கு அத்த மனச இப்படி நோக அடிக்கிறிங்க…..?” அவள் எதை பற்றி கேட்கிறாள் என்று தெரிந்தும்…
“எ..ன்ன….கேட்குற ஷெண்…பா…..? சிறு வயது முதல் விரும்பிய பெண்ணிடம், தனியே பேசுவது இதுவே முதல் தடவை என்பதால்…நாக்கு  தன்னால் தாளம் தட்டியது.
“ உன் கண்ணாலம் பற்றி தான். ஆத்தா மனச நோக அடிக்காதே…..” கந்தனின் அந்த பட படப்பும் துடி துடிப்பும் ஷெண்பாவுக்கு இல்லை போலும், பேச்சு சரளமாய் வந்து விழுந்தன.
“ அ..த.. நானும் சொல்லலாம் இல்ல. ஆத்தா மனச நோக அடிக்காதேன்னு.”
அவனுக்கு தெரியும் கடந்த ஒரு வருடமாய் புஷ்பவதி அத்தை மகளிடம் திருமணம்  செய்துக் கொள் என்று நச்சரித்துக் கொண்டு இருப்பது.
“ எனக்கு  கண்ணாலம் ஆயிடுச்சி….. என் வாழ்க்கைய என்  மனசுக்கு பிடிச்சவனோட வாழ்ந்து முடிச்சிட்டேன்.”
“ அது ஒரு கண்ணாலமா…..? சொல்  நீ செஞ்சிகிட்டது கண்ணாலமா…..? மனசுக்கு பிடிச்சவனோட வாழ்ந்தேன். அத ஒத்துக்குறேன். ஆனா அந்த கொஞ்ச நாள் வாழ்க்க கூட மகிச்சியா வாழ்ந்தியா……?
நீ வாழ்ந்த வாழ்க்கை நாள் கணக்கா….?அது கூட எனக்கு சந்தேகம் தான். நீ விடுதியில் இருந்த இதை பற்றி மேல பேச கூடாது. அது உன் அந்தரங்கள். அதுல நான் நுழைய விரும்பல….
நாளோ…. மணி துளியோ….பயம் இல்லாம இருந்தியா…..? சொல்…யார் பார்ப்பாங்க…..? என்ன ஆகும்…..? சொல்லு ஷெண்பா….உன்னால பதில் சொல்ல முடியாது.
நீ செஞ்சிகிட்டது கல்யாணமும் இல்ல…நீ வாழ்ந்தது வாழ்க்கையும் இல்ல…. இதுல நான் வாழ்ந்து முடிச்சிட்டேன் வேற சொல்ற…
முதல் சில வார்த்தைகள்  பேச தான் கந்தனுக்கு பட படப்பு எல்லாம். இப்போது நாம் பேசும் பேச்சு தான் தங்களுடைய வாழ்கையை தீர்மானிக்க போவது.  இப்போது பயந்தால் நாம் எப்போதும் தனி மரம் தான். அதை மனதில் வைத்து பேசி விட்டு அவள் முகத்தை பார்த்தான்.
“ அப்போ என்னோட காதல் பொய்யுன்னு சொல்றியா…..?” இப்போது ஷெண்பாவின் பேச்சில் கோபம் எட்டி பார்த்தது.
“ நான் எப்போ உன் காதல் பத்தி பேசினேன். நான் என் காதல் பத்தியே இது வரை உன்னிடம் சொன்னது இல்ல.”
“ வேண்டாம் கந்தன்….என் வாழ்க்கை முடிஞ்சி போன ஒன்னு…வீணா என்ன நினச்சிட்டு உன் வாழ்க்கைய கெடுத்துக்காதே…பாவம் அத்தை. நீ அவங்களுக்கு ஒரே மகன்…உன் மூலம் தான் அவங்களூக்கு அடுத்த சந்ததியே….”
அவள் எதை நினைத்து இப்படி பேசுகிறாள்….என்பதை புரிந்துக் கொண்ட….கந்தன்… “ அப்போ சாமீ உன் குழந்தை இல்லையா…..?”
“சாமீ என் மகன் தான்.” ஷெண்பாவின்  பேச்சில் உரிமை நிலை நாட்டும் தன்மை  இருந்தது.
வீரா மகனுக்கு அவன் தந்தை பெயரான வீரச்சாமி என்று  வைத்ததால், அனைவரும் அவனை சாமீ…சாமீ என்று தான் அழைப்பர்.
“ அப்போ என்ன….?உன் குழந்தை  நம்ம குழந்தை தானே…..” ஏதோ பேச வந்த ஷெண்பாவை தடுத்த கந்தன்….
“தோ பாரு மறுக்கனுமுன்னு ஏதேதோ பேசாதே…. என் கிட்ட ராஜங்கம் இல்ல…..என் இறுப்புக்கு  சாமீ போதும். நீ சொல் நான் உனக்கு போதுமான்னு…
நான் உன் அண்ணன்  கீழ் எடு புடியா இருக்கேன். படிப்பு உன் அளவுக்கு  இல்ல. சொத்து பத்து சொல்லிக்கிற அளவுக்கு இல்ல…அழகு சுத்தமா இல்லவே இல்ல…இதுல ஒன்னு சொல்லு….. நான்  விலகிக்கிறேன். இனி நான் எந்த விதத்திலும் உனக்கு தொந்தரவு கொடுக்க மாட்டேன்.”
அவன் பேசி கொஞ்ச நேரம் அந்த இடத்தில் அமைதி மட்டுமே நிலவியது. பின்…. “ என்னால மத்த பொண்ணுங்க மாதிரி இருக்க முடியுமான்னு கூட சந்தேகம் தான்.” அவள் எதை சொல்கிறாள் என்று  கந்தனுக்கு நன்றாகவே தெரிந்தது.
“ காதல்ன்னா உடல் சம்மந்தப்பட்டது…அந்த எண்ணம் வெச்சிக்காதே ஷெண்பா….” கந்தனின் அந்த பேச்சில் ஷெண்பா அவன் முகத்தை கூர்ந்து பார்த்தாள்.
அந்த பார்வையில்…. “அது இல்லாமலும் காதல் இல்ல.  ஆனா அது மட்டுமே காதல் இல்லேன்னு சொல்றேன். காதல் இல்லாத காமம் இருக்கலாம். காமம் இல்லாத காதல் இல்லை. ஆனா   இதால் நீ எனக்கு கிடைக்க மாட்டேன்னு ஆனா….எனக்கு அது வேண்டாம் ஷெண்பா….
அவன் பேச்சில்….அவள் பார்வை…உண்மையா….? என்று  கேட்டது.
“ நம்பலையா…..?”
“ உன் வாழ்க்கை  பாழாகிடும் கந்தா… வேண்டாம். உனக்கு என்ன தலையெழுத்து என்ன கட்டிக்கிடனுமுன்னு….?”
“ என் மீது உனக்கு இருக்க இந்த அக்கறை போதும் ஷெண்பா…மத்தவங்க போல நாம் வாழ…”அப்போதும் ஷெண்பா சந்தேகத்துடன் பார்க்க….
“ என்னை  நம்பு ஷெண்பா…நான் உன்ன பத்திரமா பார்த்துப்பேன்.”
அந்த உரையாடலின் முடிவின் கந்தனுக்கு எந்த பதிலும் கிட்ட வில்லை. ஆனால் மறு நாள் வீராவிடம் இருந்து அழைப்பு…
“ முறப்படி பொண்ணு கேட்டு வாடா….” என்று சொன்னவன்.
“ அய்யோ…இப்போ உன்ன வாடா போடான்னு கூப்பிட கூடாதுல…”
“ போங்கண்ணே….” அந்த ஒரு வார்த்தையில் தான் எவ்வளவு குதுகலம் அடங்கி இருந்தது.
பழைய நினைவில்  மிதந்துக் கொண்டு இருந்தவனுக்கு புஷ்பவதியின்  அழைப்பு விழாது போக….
“ என் மாமியா சொல்லுவா…ஒரு துரும்ப கிள்ளி போட்டு அத மாப்பிள்ளேன்னு சொன்னா….அது கூட முறுக்கு காட்டுமா…..”
போனில் ஜார்ஜ் தீர்ந்து போனதால் இந்த பேச்சு கந்தன் காதில் விழ…
“ அய்யோ அத்த என்ன இப்படி சொல்லிபுட்டிங்க…..? உங்களுக்கு  நான் எப்போதும் அதே கந்தன் தான் அத்த…”
“அதெல்லாம் இருக்கட்டும்…நாளைக்கு உன் ஆத்தா பரிசம் போட வரான்னு சொன்னா….” என்று சொன்னவர்…
தன் இடுப்பு பகுதியில் சொறுகி இருந்த சுருக்கி பைய்யில் இருந்து தடியான கழுத்து சங்கலியை அவனிடம் நீட்டிய வாறே…
“ இத தட்டுல வெச்சி எடுத்துட்டு வா….”
புஷ்பவதி வாடா..போடா என்ற  போது எல்லாம் தோன்றாத எதோ ஒன்று இப்போது தோன்றியது. “ வேண்டாம் அத்த…நான் போன வாரம் போய் வாங்கிட்டு வந்துட்டேன்.”
“ பார்த்தேன்…பார்த்தேம்….நேத்து உன் ஆத்தா எடுத்துட்டு வந்து காட்டினா…..ஒரு இழு இழுத்தா  கைய்யோட வந்துடும் போல இருக்கு.இந்தா இதை அதோட சேர்த்து வை… அப்போ தான் உறவு முறை எதிரில் கொஞ்சம் கவுரவமா இருக்கும்.”
இப்போதும்  அதை வாங்க அவனால்  முடியவில்லை. வாங்கினால் அவன் கவுரவம் ஆவது…..? என்ன சொல்வது யோசிக்கும் வேளயில்..
“ என்னலே வாங்கு….” இதற்க்கு மேல் மறுத்தால்…வாங்க கை நீட்டும் போது…
இருவரின் கை நடுவே ஒரு கை நீண்டு அதை வாங்கிக் கொண்டது. அதை திருப்பி திருப்பி பார்த்த ஷெண்பா…. “ இது அய்யன் உங்களுக்கு வாங்குனது தானே ஆத்தா….”
“ ஆமா…அத கந்தன் கிட்ட கொடு…”
“ அப்பாரு வாங்குனது உங்க கிட்டயே இருக்கட்டும் ஆத்தா….அவங்க வாங்கி வந்ததிலேயே பரிசம் போட வரட்டும். இனி அவர் சம்பாதிக்கிறது எல்லாம் எனக்கு தானே…அப்போ இதோட தடியானதா வாங்கி போடுவாரு….”
அந்த சங்கிலியை புஷ்பவதியிடமே  கொடுத்து விட்டு…. “ வாங்கி போடுவிங்க தானே…..” கந்தனிடம் கேட்டாள்.
இத்திருமணம் முடிவானதில் மகிழ்ந்ததை விட…இப்போது ஷெண்பா பேச்சில் மகிழ்ந்து போனான்.
“ உனக்கு இல்லாததா புள்ள….இது வர ஒத்தையா   பொறுப்பு இல்லாம சுத்திட்டு இருந்தேன். இப்போ தான் நீ வர போறியே….  இனி நான் ஒழுங்கா வேல வெட்டிக்கு போய் சம்பாதித்து உன்ன நல்ல படியா வெச்சிக்கிறேன் புள்ள.”
சங்கிலியை மீண்டும் சுருக்கு பையில் வைத்துக் கொண்டே அவர்களின் உரையாடலை  முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாட கேட்டுக் கொண்டு இருந்தார்.
கந்தன் சென்ற பின்…அந்த இடத்துக்கு வந்த சரவணன்… “ என்ன ஆத்தா இப்படி சொல்லிட்ட…..?”
“ எப்படி சொல்லிட்டேனாம்…..?” என்று  தன் மகனிடம் பேசிக் கொண்டு இருக்கும் வேளயில்… எட்டு மாத குழந்தையை  வயிற்றுல் சுமந்துக் கொண்டு அந்த இடத்துக்கு வந்த யசோதா….
“ அத்த இப்படி பேசி இல்லேன்னா…ஷெண்பாவும் கந்தன் அண்ணாவும் இப்படி பேசியிருப்பாங்கலா…..?”
சரவணனுக்கு அப்போது தான் தன் ஆத்தாவின் சூட்சுமம் புரிந்தது…. “ என்ன சின்னவனே…இப்பவாவது இந்த ஆத்தவ புரிஞ்சிக்கிட்டிங்கலா…..?”
“ புரிஞ்சது…புரிஞ்சது…. “ பலமாக  தலையாட்டினான்.
“அது சரி பெரியவன் எங்கே காணும்…..”
“ அண்ணே அவர் அறையில இருக்கார் ஆத்தா….”
“ யப்பா அந்த புள்ளைய கட்டுன நாள்ல இருந்து….அட காக்கும் கோழி மாதிரி எப்போ பார்த்தாலும் வூட்டுலேயே அடஞ்சி கிடக்குறான்…. கூப்பிடு  ….”
சரவணனனுக்கு கூப்பிடும்  வேலை வைக்காது…. சட்டை பட்டனை போட்டுக் கொண்டே  அந்த இடத்துக்கு வந்த வீரா….
“ என்ன ஆத்தா கூப்பிட்டிங்கலா…..?”
“ நாளைக்கு உன் தங்கச்சிக்கு பரிசம் போட வர்றாங்க… உமக்கு அது நியாபகத்துல  இருக்கா இல்லையா ……?”
“ என்ன ஆத்தா….?இப்படி கேட்கிறிங்க…..?”
“ பின்ன எப்படி கேட்க சொல்றலே…..? போய் வேலையையும் பாரும்…..”
இப்போது வீராவுக்கு ஆத்தாவின் இந்த பேச்சு எல்லாம் பழகி விட்டது. முதலில் எல்லாம் தம்பி …யசோதாவின் காது பட இப்படி பேசுகிறாரே…கொஞ்சம் கூச்சமாக தான் இருந்தது.
கூச்சத்த பார்த்தா …அடுத்த ஆண்டே தன் மனைவியின் சாயலில் பெண் குழந்தைக்கு அப்பா ஆகி இருக்க முடியுமா….? என்ன ஒன்று மதி உண்டாகி இருக்கா என்று  தெரிந்ததும்…
அன்று  ஆத்தா பேசிய பேச்சும் தான் கொஞ்சம் அதிக படியோ என்று  எண்ண தோன்றியது. அந்த எண்ணம் கூட “ மது உடம்பு தாங்குமா…..அவ உடம்பு தேற வேண்டாமா…..?” என்ற அக்கறையில்..
“ அவசரப்பட்டு விட்டோமோ…என்ன தான் அவள் மயக்கினாலும்….நான் கொஞ்சம் ஸ்டெடியா நின்னு இருக்கனுமோ……?” காலம் கடந்து யோசித்து என்ன செய்ய….?
அது அவன் வாங்கிய லாவெண்டர் கலர் மூக்குத்தி போட்டு….  “அத்தான் நல்லா இருக்கா…..?” திருமணத்துக்கு முன் அவள் செய்துக் கொள்ளும் அலங்காரம் போல் இப்போது அனைத்தும் அதே  நிறத்தில்.
அதுவும் மைசூர் சில்க் புடவை அவள் இடுப்பில் நழுவ…அதில் இவன்  இதையம் நழுவி தொபுக்கடிர் என்று அவளிடம் விழுந்து விட்டது. அதுவும் அவள் அழைத்த அத்தானில்…
“ என்ன மதி புதுசா அத்தான்னு….? நம்ம பழக்கத்துல மச்சான்னு தான் கூப்பிடுவாங்க…..” அத்தான் என்ற அழைப்பு போதை தந்தாலும்…அவள் வாய் மொழியாக  மீண்டும் கேட்கும் ஆசையில் கேட்டான்.
“ உங்களுக்கு அவங்களும் நானும் ஒன்னா…..? சொல்லுங்க….?ஒன்னுன்னா…நான் எப்போவும் போல வாங்க…போங்கன்னு உப்பு சப்பு இல்லாம கூப்பிடுறேன்.” அவன் மடியில் அமர்ந்த வாக்கில் கேட்டால்…பாவம்  அவன் என்ன செய்வான்….? மொத்தமாக விழுந்ததின் விளைவு தான், அழகி….ஆம் அவன் மகளுக்கு இட்ட பெயர் அழகி…
“என்னலே கனவு கண்டுட்டு இருக்க….?போய் ஜோலிய பாரும். எப்போவும் போல கந்தன் கந்தன்னு கூப்பிட்டு வேல வைக்காதே….இனி இந்த வூட்டு மாப்பிள்ளை..அப்புறம் உன் தங்கச்சி உன்ன சும்மா விட மாட்டா….”
“ ஆத்தா….” ஷெண்பாவின் அழைப்பில்  வெக்கம்…கொஞ்சல் இல்லை என்றாலும்…. முதலில் இருந்த கோபம்…வெறுமை இல்லை. அந்த நம்பிக்கை தான்  அவரை இதோ திருமணம் வரை வர வைத்தது.
அந்த மகிழ்ச்சி மனநிலையிலேயே பரிசம் போட்டு அடுத்த முதல் முகூர்த்ததிலேயே திருமணம் குறித்து..இதோ அவர்கள் புதுபித்த அவர்கள் குலச்சாமி கோயிலில்…தன் மகளை மாலையும் கழுத்தோடு பார்த்த புஷ்பவதிக்கு மனது நிறைந்தது என்றால்…
கோசலை….ஷெண்பாவின் வாழ்க்கை இப்படி ஆனாதில் இருந்து இந்த வீட்டு பெண்களுக்கே  குடும்ப வாழ்க்கை ராசி இல்லையோ….தான் போன வேகத்தில் வந்தது போல்…இவளும் வந்து விட்டாளே…
கூடவே தன் அண்ணன் சொன்ன…. “நமக்கு ஒரு அத்தை இருந்தாங்க …அவங்க  வாக்க பட்டு போன இடம் சரியில்லாததால் தன்னையே எரித்துக் கொண்டார்கள் என்று  சொன்னது நியாபத்தில் வந்து போனது.
அதுவும் வீராவுக்கு பெண் குழந்தை பிறந்ததில் அனைவரும் மகிழ்ந்து இருக்க…நம் கோசலைக்கு மட்டும் மனதில் ஏதோ சொல்ல முடியாத பயம் இருந்துக் கொண்டே இருந்தது.
அந்த பயம்…இப்போது ஷெண்பா மாலையும் கழுத்துமாய் நின்றதில்…மனது நிறைந்து போய்….
“ எங்க வூட்டு பெண்கள் தீர்க்க சுமங்கலியாக புருசனோடு பிள்ளைகளை பெத்து,  சீரும் சிறப்புமாய் வாழ வேண்டும் மனதார வாழ்த்தினார்.
வீராவுக்கும் சரவணனுக்கு தங்கை வாழ்க்கை நல்ல படியாக அமைந்ததில் மகிழ்ச்சி என்றால்,  இன்னொரு மகிழ்ச்சி தங்கள் திருமணம் போல் எந்த வித பிரச்சனையும் இல்லாது முடிந்ததில்.
எப்போதும் சரவணா மதியைய் பார்த்து கிண்டல் செய்யும் பேச்சு…. “ உங்க விசேஷ சீருடை பச்சையா….மதினி..எப்போ விசேஷம் என்றாலும் பச்சை கலர் உடுத்திக்கிறிங்க…..?”  என்று கேட்க..
வீராவை ஓர விழி பார்வை பார்த்துக் கொண்டே…. “ அத உங்க அண்ணன் கிட்டயே  கேளுங்க கொழுந்தனாரே…..” அவர்களின் இருவரின் பார்வை பரிமாற்றத்திலேயே ஏதோ இருப்பதை புரிந்துக் கொண்டவன்.
“ அண்ணே மதினியே உங்களுக்கு முன்னவே தெரியுமா……?”
எது முன் என்று  கேட்காது…அவன் கேள்வியில் திகைத்து…. “ நானே தாலி கட்டும் போது தான்டா பார்த்தேன்.” மதியின் திகைத்த பார்வையில்  அது பச்சை பொய் என்று அனைவருக்கும் தெரிந்து விட்டது.
அதில் இருந்து மதி பச்சை நிறத்தில் உடை உடுத்தினாலே சரவணன்  கிண்டல் சில சமயம் எல்லையை கடந்து விடும்…
அதனால் இன்று  அடர்ந்த சிகப்பு நிறத்தில் சேலையும், அதே நிறத்தில்  மூக்குத்தி…. அட்டிகை..வளையல் அணிந்து எப்போதும் போல் வீராவை மயக்கினாள்.
வருடங்கள்  போக போக வீராவின் காதல் கூடிக் கொண்டே சென்றது. கணவனின் பார்வைக்கு பதில்  பார்வை மதியும் வழங்க தவற வில்லை.
தன் மகன் சாமீ…ஷெண்பாவின் கைய் பிடித்து இருக்க…தன் மகள் அழகி பட்டு உடுத்தி தன் அப்பத்தாவின் மடியில் அமர்ந்துக் கொண்டே…. அத்தையின் திருமணத்தை பார்த்திருக்க…
இங்கு இவர்களோ…..பழைய நினைவில் மூழ்கி விட்டனர். இதே கோயிலில் கட்டாய தாலி கட்டிக் கொண்டவள். இன்றோ….கட்டையில் போகும் வரை…அவனோடு தான் வாழ்க்கை என்று தன் காதலால் தன் மனதை மாற்றியதை என்ன என்று சொல்ல……?
மாறியதே மனம்…..மதியின் மனது வீராவிடம்….யசோதாவின் மனது…சரவணன் வசம்…அதே போல் ஷெண்பாவின் மனதும்  கந்தனிடம் சேரும்.
      சுபம்

Advertisement