Advertisement

அத்தியாயம்….23 (2)
“ மச்சான்…. மணி பாருங்க….. நான் போகனும் ” தன் மேல் கை போட்டு இருக்கானா….? இல்ல தன்னை சிறை பிடித்து இருக்கானா….? என்று நிர்ணயிக்க முடியாத  நிலையில் சரவணனின் கைய் அணைப்பில் இருந்த யசோதா…..வெளியில் போக கெஞ்ச….
ஜன்னலில் இருந்து கொஞ்சம்  சூரிய வெளிச்சம் சரவணன் மேல் பட…அதில் கண்  கூசியவனாய்….தன் கை கொண்டு கண்ணை மறைத்த வாறே…
“ நேத்து ராவுக்கு அதை  பெரிய போர்வையா போட்டு மூட தானே சொன்னேன்.” அப்போதும் எழுந்துக் கொள்ளும் எண்ணம் இல்லாது…அவளையும் விட மனது இல்லாது…..யசோதா ஜன்னல் மூடாதது தான் பெரிய குத்தம் என்பது  போல் சொன்னவனை முறைத்து பார்த்த யசோதா….
“ மச்சான் நான் வெளிய  போகனும்…” குரலில் கொஞ்சம் கோபத்தை கூட்டி சொன்னாள்.
“  பிடிக்கலையா….?” இந்த மூன்று நாளாய் சொல்லும் அதே பல்லவியைய் தான்  திருப்பி பாடினான்.
“ பிடிக்காம தான் இப்படி இருக்கேனா…..?” அவனின் அணைப்பை  சுட்டி காட்டி சொன்னதுக்கு….
“ அப்புறம் என்ன…..? போகனும் போகனுமுன்னு சொல்லிட்டே இருக்க…..” சொல்லிக் கொண்டே  அவளின் கழுத்து வளைவில் முகம் பதித்தான்.
இப்படியே விட்டா வேலைக்கு ஆகாது….என்று அவனின் முடியை இழுத்து தன் முகத்தை பார்க்க வைத்தவள்…
“ இந்த மூனு நாளா சாப்பிட மட்டும் தான் வெளியில போறோம். மதி….  புள்ள பெத்தவ…. ஆத்தாலும்…அத்தையும் மட்டுமே எவ்வளவு வேல பாப்பாங்க…..?” யசோதா கேட்பது நியாயமான கேள்வி தான்… ஆனால் இது சரவணனுக்கு  புரிய வேண்டுமே……?
“ இல்ல உனக்கு என்ன பிடிக்கல…அது தான் ஏதேதோ காரணம் சொல்லிட்டு இருக்க…..?”  யசோதா சிறு வயதில் இருந்தே….வீரப்பாண்டியன் தான் கணவன் என்று சொல்லி வளர்ந்தவள்.
சந்தர்ப்ப சூழ்நிலை…இன்று தன் மனைவியாக…. கட்டாயத்தில் தன் கூட இருக்கிறாளா…..? அவளோட கூடலின் போது அவளின்   நெகழ்வு சொல்கிறது….கட்டாயத்தில் இல்லை…விருப்பத்தோடு தான் தன்னோடு இருக்கிறாள் என்று…
ஆனால் பாழாப்போன மனது…அதை அவள் வாய் மூலம் சொல்ல கேட்டால்……மகிழ்ச்சி….அதன் விளைவாய்  விட்டது.
தன்னை சரிப்படுத்தி நேர்க் கொண்டு அமர்ந்த யசோதா…. “ எத வெச்சி நீங்க இப்படி சொல்றிங்க…..?” இத்தனை நேரம் பேசிய குரல் இல்லை இது…
தன் முடி பிடித்து இழுத்து….” போகனும்……” என்று சொல்லும் போது கூட அதில் ஒரு கிறக்கம்  இருக்க தான் செய்தது.
ஆனால் இப்போது… “ இல்ல யசோதா..அது….”
“அது…இது…எல்லாம் வேண்டாம்.  எதை நினச்சி நீங்க இப்படி கேட்டிங்க…..?” நீங்க சொல்லியே ஆகனும்…இல்லை என்றால் விட மாட்டேன் என்ற  தோரணை அக்குரலில்….
“ சின்ன போதுல இருந்தே நீ அண்ணாக்கு தான்னு….” அதற்க்கு கேல் சொல்ல முடியாது இழுக்க…
“ ம்…சொல்லுங்க….மனசுல இருக்குறது   பூராவும் சொல்லுங்க…..” அவன் பேச்சை ஊக்க படுத்தினாள்.
“ இல்ல எல்லா வகையிலும்….என்னோட அண்ணா தான்  உசத்தி…நீ கூட நம்ம கல்யாணம் அன்னிக்கி கங்காதரன் ஆளுங்க வரானுங்கன்னு வான்னு கூப்பிட்டதுக்கு  அண்ணா வந்துடட்டுமுன்னு சொன்னல…
அப்போ எனக்கு எப்படி இருந்தது தெரியுமா…..? நான் ஒரு கைய்யாலாகதவன்   போல…. அவ்வளவு கோபம்…
அப்புறம் யோசிச்சப்ப….அன்னிக்கி என் எதிரே தானே..அந்த சங்கரன் பையன் அப்படி உன்னிடம் பேசினான். என்னால என்ன செய்ய முடிஞ்சது… ?இதே அண்ணனா இருந்தா…கண்டிப்பா ஏதோ செய்து இருப்பாரு… என்னோட எல்லா வகையிலும் அண்ணா தான் உயர்வா தெரிஞ்சது.
எல்லா பெண்களுக்கும்  அவர போல ஆண தானே கண்ணாலம் கட்டிக்க பிடிக்கும்.
அதுவும் உனக்கு அவர் தான்னு சொன்னதால மனசுல உனக்கு ஆச….” தொடர்ந்தார் போல்  யசோதாவின் முகத்தை பார்த்த வாறு…..சொல்லிக் கொண்டு வந்தவன்…
தான் சொன்ன ஆசை என்ற வார்த்தை சொன்னதும்    யாசோதாவின் முகத்தை வந்து போன பாவனையில் பேச்சை பாதியிலேயே முடித்தான்.
“ சொல்லுங்க…சொல்லுங்க…ஏன் பாதியிலேயே நிறுத்திட்டிங்க…..” அவள் பேச்சில்…
“ இல்ல யசோதா உன்  மேல சந்தேகம் எல்லாம் படல….”
“ஓ…அது வேற படிவீங்கலோ….படுங்க…. படுங்க….” என்று சொன்னவள்.
“அப்போ இந்த மூனு நாளா இத மனசுல நினச்சிட்டு தான் என் கூட கூடினிங்கலோ….என்ன பாத்தா அப்படி பட்ட பொண்ணு மாதிரியா தெரியுது…..? மனசுல ஒருத்தனையும்…கட்டில்ல இன்னொருத்தனையும்….”
அதற்க்கு மேல் பேச விடாது யசோதாவின் வாயை பொத்தியவன்…” என்ன யசோதா…. இப்படி சொல்ற…. உன்ன நான் அப்படி நினைப்பேனா…..?”
“அப்போ இப்படி  பேசுனதுக்கு…என்ன அர்த்தம்….? நான் ஒரு மக்கு கூமூட்டை…. பெத்த மேதாவி நீங்க தான் எனக்கு புரியராப்பல சொல்லுங்கலே…..?”
யசோதாவின் பேச்சில்…எவ்வளவுக்கு எவ்வளவு  கிண்டல் நையாண்டி இருந்ததோ…அந்த அளவுக்கு கோபமும்  இருந்தது.
“ எனக்கு சின்ன வயசுல இருந்தே….அண்ணனோட நான் குறைவோன்னு தோனும் யசோதா… அண்ணா அது மாதிரி எதுவும் சொன்னது இல்ல.
ஆனா அவர் செயல் அவர் ஆளுமைய பார்த்து எனக்கு நானே….எனக்கு  அத சொல்ல தெரியல யசோதா…
அதுவும் இல்லாம  சின்ன வயசுல இருந்தே உன்னன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். ஒரு வயசுக்கு அப்புறம்….என் கூட நீ விளையாடுறது இல்ல…
அய்யன் நீ இந்த வூட்டு மருமக என்றதும் அண்ணாவுக்கு தான் என்பது போல பேசுனாங்க. அதுவும் இல்லாம  அய்யன் இறந்ததுக்கு அப்புறம் அண்ணா பணம் எல்லாம் உன் கிட்ட உரிமையோட கொடுத்தது….
அத  பாக்க எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்…ஆனா  இது தான் நிதர்சனம். யசோதா உனக்கு அண்ணியா வரப்போறவ…என்ன நானே சொல்லிக்குவேன். ஆனா  எனக்குள் நான் சொன்னது எல்லாம் உன்ன பாக்கும் வரை தான்.
பார்த்துட்டா இவ என் அத்த மக…எனக்கும் உரிமை இருக்கு. அய்யன் உன்ன இந்த வூட்டு மருமகளா வரனுமுன்னு தானே சொன்னாரு..
மருமகள்னா முத மருமகளா தான் வரனுமா……? ஏன் இரண்டாவதா வந்தா ஆகாதா……? இப்படி நான் எனக்குள்ள கேட்டுப்பேன். ஆனா இத ஆத்தா கிட்டேயும்…அண்ணன் கிட்டேயும் கேட்க  பயம்.
உனக்கு இது மாதிரி என் கிட்ட ஆச இருக்கா…..? என்று நினச்சி உன் முகத்த உத்து உத்து பார்த்தது தான் மிச்சம். எனக்கு அதுல ஒன்னும் புரியல…..”
சரவணனுக்கு இந்த கேள்விகள் இன்று முளைத்து இல்லை .என்று வீரா மதி கழுத்தில் தாலி கட்டினானோ…. அன்றிலிருந்து….அதுவும் தன் கூட்டாளி வந்து …
யசோதா சொன்னதாய்…சொன்ன….மாமன் இந்த வூட்டு மருமகள்ன்னு தான் சொன்னார். அது பெரிய மருமகளுன்னு சொல்லலையே…
நான் சின்ன மருமகளா வந்துட்டு  போயிடுறேன்..வீராவிடம் சொல்லி அவள் தான் இத்திருமணம் செய்ய  காரணம் என்று சொன்னதில் இருந்து…
யசோதா தன்னை  விரும்பி தான் மணக்கிறாளா…..? அக்கேள்வி மனதுள் முள் போல் குத்திக் கொண்டே இருந்தது.
திருமணம் முடிந்து பின் மருத்துவமனை….பின் குழந்தையின் சடங்கு…. மூன்று நாள் முன்  சடங்கின் போது கேட்க நினைத்தான் தான்…
அவளை தன் அறையில்…சர்வ அலங்காரத்துடன்  தனிமையில் பார்த்த போது, கேள்வி என்ன…..? வேறு எதுவும் தோனவில்லை.
சிறுவயதில் இருந்து ஆசைப்பட்ட பெண். இன்று மனைவி இது மட்டும் தான் அவன் நினைவில் இருந்தது.மூன்று நாள் தொடர் கூடலில் காமம் கடந்து…… ….காதல் வேண்டும் என்ற தூண்டுதலில் தான்  இன்று கேட்டு விட்டான்.
யசோதாவின் முகத்தில் இப்போது கோபத்தின்  சாயல் துளியும் இல்லை…ஏதோ யோசனையில் இருந்தவள்… பின்…. “ பெரிய மச்சான் உங்கல மதிய கட்டிக்க கேட்ட அப்போ நீங்க ஒத்துக்குனிங்க தானே…..?”
அந்த கேள்வியில் தயங்கியவன் … “ஆமா ….ஆனா பெரியவர் அவர் இருக்க…. என் கிட்ட   அண்ணா வந்து நீ பண்ணிக்கோ அப்படின்னா….என்ன அர்த்தம்.
அவர் உன்ன கட்டிக்க நினைக்கிறாருன்னு தானே அர்த்தம். அண்ணா….தங்கைக்கு இப்படி ஆனதால….சரி இது தான்னு….” அவன் தயக்கத்தை   மேலும் தொடர விடாது…
“ அது எல்லாம் சரி…. மதி இந்த வூட்டு  மருமகளா ஆவதற்க்கு முன்ன பார்த்து இருக்கிங்களா…..?”
அவசரமாக….. “ இல்லை….” என்று தலையாட்டினான்.
“அப்போ நீங்க ஹாஸ்பிட்டல்ல இருந்து  வந்தப்ப தான் பார்த்திங்க…..?”
யோசனையுடன்….” ஆமாம்….” என்று சரவணன் தலையசைக்க….
“பார்த்ததும் ,என்ன அழகான பொண்ணு…நாம கட்டுறதா இருந்தது,  கைய் பிடிக்க முடியலையேன்னு வருந்தினிங்களா…..?” இந்த உரையாடல் முழுவதும் கட்டிலில் அமர்ந்த வாறே பேசியிருந்தனர்.
யசோதாவின் இந்த பேச்சில்…  எழுந்து நின்றவன் கோபத்துடன் “ என்ன கிறுக்கு தனமா பேசிட்டு இருக்க….அவங்க என் மதினி…மதினின்னா அம்மா மாதிரி…சீ ” அருவெறுத்து போனான்.
“  இப்போ கோபம் வருதா….? இப்போ கோபம்  வருதான்னு கேட்டேன்….. நான் என்ன தப்பா  கேட்டுட்டேன். நீங்க சொன்னிங்க…என் அண்ணா போல தான் கணவனா வரனுமுன்னு எல்லா பொம்பளைங்களும் ஆசை படுமுன்னு…
நான் கேட்குறேன்….ஆம்பிளைங்க என்னை  மாதிரி பொண்ண கட்டிக்க ஆசை படுவாங்கலா…..?  இல்ல மதி மாதிரி ஒல்லியா …சிவப்பா ….அழகா…. இருக்க பொண்ண   கட்டிக்க ஆசை படுவாங்கலா…? சொல்லுங்க…..? “
சரவணனுக்கு இப்போது தான் … கேட்ட கேள்வியின் அபத்தம் புரிந்தது. மதினி அழகு தான். ஆனால் அது என் கண்ணுக்கு தெரியலையே….
அவர்களை  திருமணம் செய்ய முடியவில்லையே….? ஒரு நொடி கூட நினைத்து பார்த்தது இல்லையே..இன்னும் சொல்ல போனால் எதில் இருந்தோ விடுதலை…அந்த எண்ணம் தானே வந்தது. அந்த எண்ணன் வர நான் யசோதாவை விரும்பினேன். அப்போ….. யசோதா…..?”
அவன் முகத்தையே பார்த்திருந்த யசோதா…. அவன் எண்ண ஓட்டத்தை புரிந்தவளாய் “ நான் உங்களையும் அத மாதிரி நினைக்கல . பெரிய மச்சானையும் அத மாதிரி நினைக்கல..
உங்களுக்கு நியாபகம் இருக்குமுன்னு நினைக்கிறேன். நான் சின்ன வயசா இருக்கச்ச,   ஒரு நாள் கருக்கல்ல நம்ம பூந்தோட்டத்துல மாமா வேல ஆளுங்கல மேப்பார்வ பார்த்துட்டு இருக்கறச்ச பின்னாடி ஒரு கருநாகம் நிக்கிறத அவரு  கவனிக்கல…
அப்போ என் ஆத்தா பார்த்துட்டு சத்தம் போட்டா எங்கே அண்ணான கொத்திடுமோன்னு மாமாவுக்கும்,  பாம்புவுக்கும், நடுவாப்பல நின்னப்ப…அது என் ஆத்தவ கொத்திடுச்சி….
அப்போ ஆத்தா பிழச்சதே….அதிசயமுன்னு தான் மருவத்துவர் சொன்னாரு…. அப்போ மாமா ஆத்தா கிட்ட என்ன காட்டி….
“ நான் தீர விசாரிக்காம உன்ன கட்டி குடுத்ததுக்கு , இந்த புள்ளைக்கு  அப்பன் இல்லாம ஆயிடுச்சேன்னு நானே துடிச்சிட்டு இருக்கேன். நீ இப்போ செஞ்ச காரியத்துக்கு ஒன்னு கிடக்க ஒன்னு ஆகியிருந்தா….
இந்த புள்ளக்கி ஆத்தாலும் இல்லாம செஞ்சட்டேன்னு என் ஆயுசு முழுசும் என் மனசு அறிச்சு எடுத்துடாதா…..?” என்ன காட்டி மாமா ஆத்தாவ திட்டினப்ப…
அதுக்கு என் ஆத்தா…. “  எனக்கும் என் மவளுக்கும் மட்டும் இல்லாம இந்த  வூட்டுக்கே நீங்க தான் பாதுகாப்பு அண்ணே…..
நான் இல்லாம கூட என் மக இருந்துடுவா,  நீங்களும் இந்த குடும்பம் தான் என் மகளுக்கு வேண்டும்…இந்த பேச்சு எல்லாம்   மருத்துவமனையில் பெரிய மச்சான் இருக்கும் போது தான் நடந்தது. உன் நம்பிக்கையே  எனக்கு அப்புறம் என் மகன் காப்பத்துவான்.” சொன்னாரு…
அப்போ இருந்து தான் பெரிய மச்சான் என் கிட்ட எல்லா பொறுப்பும் கொடுத்தது. அது கூட என் ஆத்தா  மாமாவ காப்பத்தினாங்க என்றதாலயா…..? இல்ல மாமா வாக்க காப்பத்தனும் என்றதாலா… நானும் இந்த வூட்டு பெண். அந்த உணர்வு ஏற்படுத்த  தான் பெரிய மச்சான் அப்படி நடந்துக்கிட்டாரு….”(இந்த மாதிரி சென்டி மென்ட் டையலாக் டைப் பண்ண எனக்கே ஒரு மாதிரியா தான் இருக்கு.)
“ போதும் யசோதா…நான் உன்ன தப்பா நினச்சி பேசல….எனக்கே ஒரு தாழ்வு. இப்போ புரியுது….மனசுல  விருப்பம் இருக்க பொண்ண பாத்தா அவ மட்டும் தான் அழகா தெரிவா… எனக்கு நீ மட்டும் தான் அழகு யசோதா….அதே போல் ஒரு நாள் உனக்கு நான் மட்டும் தான் அழகா தெரிவேன்.”
“ இப்போவும் எனக்கு நீங்க அழகா தான் தெரியுறிங்க மச்சான்.”
“அப்படியா…..?” வெளியில் போகனுமுன்னு சொன்ன யசோதாவும் போக  காணும். சரவணனும் அவளை விட காணும்.(சரவணா….யசோதா ..யாரு யாரு கேட்டாங்க… போதுமா…..?”
“ பெரியவனே….. அந்த வடக்கால  இடம் விலைக்கு வருதுன்னு சொன்னியே அது என்ன ஆச்சி…… ?”  புஷ்பவதியின் கேள்விக்கு…
“ விலை கூடுதலா சொல்றான் ஆத்தா…”
“ நல்ல செம்மண்  பூமி பெரியவனே…அங்கு பூந்தோட்டம் போட்டா நல்ல  விளச்சல் கொடுக்கும்….வில கொஞ்சம் முன்ன பின்ன இருந்தா கூட  பரவாயில்ல பேசி முடிச்சிடு…”
“நம்ம விலைய கேட்டுட்டு அடுத்தவன் கிட்ட போய் இருக்கான். பாக்கலாம்…”  அம்மா …மக னின் பேச்சிக்கு இடையே….
கந்தனின் அம்மா அங்கு வரவும்…. “ என்ன பூங்கோதை  எப்படி இருக்க….? அடுத்த தெரு தான் வூடு…ஆனா எட்டி பாக்குறது இல்ல…இப்போ என்ன தேவைக்கு வந்து இருக்க….. “ புஷ்பவதியின் பேச்சு எப்போதும் நறுக்கு தெரித்தார் போல் தான் இருக்கும்.
அவரை பற்றி நன்கு தெரிந்ததால்…. “ எங்க மதினி நானும் வரனும் வரனும் தான் நினைப்பேன். “ என்று இழுக்கையில்…
“அதுக்குள்ள பாப்பான் குறுக்க  வந்துட்டாரா…..?” அவர்கள் இருவரின் பேச்சையும் சிரிப்புடன் கேட்டுக் கொண்டே அந்த இடத்துக்கு வந்த மதி…
“ வாங்க பெரிம்மா…..” என்று சொல்லி விட்டு அனைவருக்கும் காப்பி   கலக்க அடுப்பாங்கரைக்கு சென்று விட்டாள்.
கந்தனின் அம்மா  சரவணனின் கூட்டாளியும்…..வீராவின் எடுபுடுயும் மட்டும் அல்ல…..வீரா குடும்பத்துக்கு உறவு..முறை தான்.
சரவணன் வீராவை அண்ணன் என்று அழைக்க…. அவன் வயதுடைய கந்தனும் அதே போல் அழைக்க ஆராம்பித்து விட்டான்.
பூங்கோதையின் முகத்தில் தெரிந்த கவலையை கவனித்த வீரா…..” என்ன அத்த ஏதாவது பிரச்சனையா…..?” இப்போது புஷ்பவதியும் எந்த விதண்டவாத  பேச்சு இல்லாது அவரை கவனிக்க…
“ என்னத்த வீரா சொல்றது…..நம்ம மேல தெரு வாணி மவள கந்தனுக்கு கொடுக்கறதா சொன்னாங்க…..” என்று கந்தனின் திருமண பேச்சை  ஆராம்பித்ததும்…
“ ம்…நல்ல  குடும்பம் தான். பொண்ணும் மூக்கும், முழியுமா….நல்லா இருப்பா…..”
“அது தான் மதினி பொண்ணு நல்லா  இருக்கா …நீ ஏன் கட்டிக்க மாட்டேங்குறேன்னு கேட்டதுக்கு,  இரண்டு நாள் வூடு வரல இவன். வீரா உன் கூடவே தானே சுத்துவான். நீ இதெல்லாம் கேட்கலாமுல்லே ……”  புஷ்பவதியிடம் பேச்சை ஆராம்பித்து வீராவிடம் முடித்தார்.
“ எனக்கு இதெல்லாம் தெரியாது அத்த…நான் எப்போவாவது  அவன் கல்யாணம் பத்தி கேட்டா ஏதோ சொல்லுவான்..இப்போ தான் அவன் மழுப்பி இருப்பானோன்னு தோனுது….நான் கேட்டு சொல்றேன்.”
அத்தையிடம் கொடுத்த வாக்குக்கு ஏற்ப ….  “ என்னடா என்ன விசயம்….” நேரிடையாக கந்தனிடம் கேட்டதுக்கு…
அவனும் நேரிடையாகவே…. “ என்ன அண்ணே ஆத்தா  வூட்டுக்கு வந்துச்சா…..?”
“ என் வூட்டுக்கு  அவங்க வந்தது இருக்கட்டும்..நீ ஏன் உன் வூட்டுக்கு  போகல ….அத முதல்ல சொல்லு…..?”
“போனா  சும்மா கண்ணாலம்….கண்ணாலாமுன்னு உயிர வாங்குறாங்கண்ணே…..”
“ ஏன்டா எத்தன   வீட்ல இந்த பேச்சு எடுக்க மாட்டாங்காலான்னு பசங்க காத்துட்டு இருக்காங்க தெரியுமா…..?நீ என்னன்னா…..? சொல்லு உன் பிரச்சனை என்ன…..?”
“ என் பிரச்சனை எல்லாம் தீர்க்க முடியாது அண்ணே…..”
“அப்போ பிரச்சனை இருக்கு….நீ  சொல்லு ..அது தீர்க்க முடியுமா…..?தீர்க்க முடியாதான்னு பொரவு பாத்துக்கலாம்…..”
“ வேண்டாம் அண்ணே…விட்டுடுங்க….”
“என்னலே….காதலா…..? என்ன  வேற சாதியா….?சொல்லு தூக்கிடலாம்.” வீராவின் பேச்சுக்கு கந்தனின்  முகத்தில் மெல்லிய புன்னகை வந்து போக….
“ ஏய் நான் விளையாடலேடா…. அவன் எந்த கொம்பனா இருக்கட்டும் சொல்லு தூக்கிடலாம்….”
“ அண்ணே…அண்ணே…என் பிரச்சனையே வேறு….”
“ அது தான்  ….என்னடா சொல்லி தொல….”
“சாதிலா நம்ம சாதி தான்…..”
“நம்ம இனத்துல…..யாரு…? நீ எங்கேயும் கண்ண நோட்டம் விட்டு பார்த்தது இல்லையே…..? என்று  கேட்டவன்….
“ சொல்லுடா யாரு…..”
“ இல்ல அண்ணே…அந்த பொண்ண கட்ட முடியாது.”
“அது தான் ஏன்…..?”
“அந்த பொண்ணுக்கு கண்ணாலம் ஆகி….இப்போ கட்டினவன்   இறந்தும் போயிட்டான்….” என்று சொன்னதுமே…
“ ஷெண்பாவா…..”
அதற்க்கு கந்தன் அமைதி காக்கவும்…. “ சொல்லுடா ஷெண்பாவா…..?”
“ மன்னிச்சிக்க அண்னே…சின்ன போதுல  இருந்தே ஷெண்பானா எனக்கு ரொம்ப புடிக்கும். ஆனா அண்ணே நான் பேசுனதே இல்ல அண்ணே…” எங்கு வீரா தன்னை தப்பாக புரிந்துக் கொள்வானோ என்ற பயத்தில் தன்னிலை விளக்கம் கொடுத்தான்.
வீராவுக்கோ  என்ன சொல்வது என்றே புரியவில்லை….எப்போ வந்து சொல்லி இருக்கான். இதை தான் எண்ண தோன்றியது. சின்ன போதுல இருந்து பிடிச்சி இருக்குன்னா..அப்போதே சொல்லி இருந்தா…என் தங்கை வாழ்க்கை இதெல்லாம் நடந்து இருக்காதோ…..
“ சரி அது  தான் இல்லேன்னு ஆயிடுச்சிலே….உன் வாழ்கையே பாருடா…..” தங்கை வாழ்க்கைக்கு வருந்தினாலும்…சின்ன வயதில் இருந்து கூட இருந்தவனின் வாழ்க்கை பாழாக கூடாது என்ற நல்ல எண்ணத்தில் சொன்னான்.
“ கட்டாயம் பண்ணிக்கிறேன்…அண்ணே…ஆனா அதுக்கு முன்ன ஷெண்பா நல்லா வாழறது பாக்கனும்…அத பார்த்த பொரவு தான் நான் கண்ணாலம் கட்டிப்பேன்.” தீர்த்து சொல்லி விட்டான்.
“என்னடா சொல்ற….? அவ நிலமை  தெரியும்ல…யாருடா கட்டுவா…..?”
“ நான் கட்டிக்கிறேன்…எனக்கு கட்டி கொடுக்குறிங்கலா…..?சொல்லுங்க அண்ணே எனக்கு கொடுக்கிறிங்கலா….?நான் நல்லா பார்த்துப்பேன் அண்ணே…..”
வீராவுக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை….கந்தனை இழுத்து கட்டி அணைத்தவன்…. “ எனக்கு  தெரியும்டா…”
“அண்ணே…..அப்போ எனக்கே ஷெண்பாவ கொடுத்துடுறிங்கலா……?” ஆர்வத்துடன் கேட்டவனிடம்….
“ நான் இத பத்தி ஆத்தா கிட்ட பேசுறேன்டா….”
கூடத்தில் அனைவரும் கூடி இருக்க…. “ ஷெண்பா எங்கே ஆத்தா…..? கந்தனை பற்றி பேச வீரா கேட்டான்.
“ அவ இப்போ எல்லாம் சாப்பிடுறதுக்கு மட்டும் தான் அவ அறையில இருந்து  வெளியே வரா….அவ பொழுது எல்லாம் குழந்தையோட தான்.” என்று புஷ்பவதி சொன்னதும்…..
“ ஆத்தா கந்தன் நம்ம ஷெண்பாவ கட்ட ஆசை படுறான்.” எந்த மேல் பூச்சும் இல்லாது  வீரா சொல்லி விட்டான்.
“ என்னலே சொல்லுறே….”
“ ஆமா ஆத்தா….” என்று சொன்ன வீரா.. இன்று கந்தன் சொன்னதை அனைத்தையும் சொன்னதும்…
அங்கு இருந்த அனைவருக்கும் அதிர்ச்சி என்றாலும்..கூடவே மகிழ்ச்சியும் ஏற்பட்டது. ஷெண்பாவின் வாழ்க்கை காலம் முழுவதும் இப்படியே தான் சென்று  விடுமோ….என்ன தான் குழந்தையின் வருகையில் சிரித்துக் கொண்டு இருந்தாலும்…
மனதில் ஒரு மூளையில் கரையான் போல் மனது இதை நினைத்து அறிக்க தான் செய்தது.
அனைவரும் மகிழ்ந்தாலும் நம் புஷ்பவதி மட்டும்…. “ இத எடுத்தோம் கவிழ்த்தோமுன்னு முடிவு எடுக்க முடியாது பெரியவனே…
எம் மவளுக்கு உடம்பு மட்டும் புண்ணாகி போகல….மனசு முழுவதும் புண்ணாகி கிடக்கு. அது ஆர  தான் என் மருமக அவ மகனையே கொடுத்து இருக்கா…
கொஞ்ச காலம் ஆகட்டும்…அந்த கருப்பண்ணச்சாமியின் அருளில் எல்லாம் நல்லதே நடக்கும்….அதுக்கு முன்ன நம்ம குலதெய்வ கோயில சீர்படுத்தனும் ராசா…
உன் மவன் கண்ணாலம் மட்டும் இல்லாம அடுத்த அடுத்த வாரிசு கண்ணாலம் எல்லாம் அங்கு தானே நடக்கனும்.”
ஷெண்பா கல்யாணம் விசயத்தை  கொஞ்ச ஆற போட்டு அடுத்து தன் குலதெய்வ கோயிலை  சீர்படுத்தும் வேலையில் இறங்கினர்.
“ பரவாயில்ல நம்ம புஷ்பவதிக்கு வாய் மட்டும் இல்ல மனசும் பெருசு தான்…. யாருக்கு மனசு வரும் இவ்வளவு செலவு செய்ய….” கோயிலை சீர்படுத்தியதும் அல்லாது ஊர் சனம் மொத்த பேரையும் அழைத்து விழா போல் கொண்டாடினர்.
அதை பார்த்து தான் ஊர் ஜனம் மொத்தமும் இவ்வாறு  பேசியது.
“ ஆமா..அதான் இரண்டு மருமகளும் தங்கம் போல வந்து இருக்காங்க…..”
அவர்கள் சொன்னதுக்கு ஏற்ப தான் மதி ஒன்று ஒன்றுக்கும்  …” யசோ…இப்படி செய்யலாமா…? அப்படி செய்யலாமா…..?” தான் பெரிய மருமகள்….தான் ஏன் கேட்டு செய்ய வேண்டும் என்ற ஆணவம் இல்லாது பணிந்து போக…
யசோதாவோ….” என்ன மதி…உங்க விருப்ப படி செய்யுங்க…..”
“ எனக்கு இந்த வழக்கம் எல்லாம் தெரியாது யசோ…நீன்னா இங்கயே வளர்ந்தவ….அது தான்.”
அப்போது  வந்த வீரா…. “ யசோ….ன்னிக்கி காணிக்கை பணம் கொடுத்தேனே அது தா…..” பெரிய மச்சான்  கொடுத்த பணத்தை எடுக்கும் போது…
வீரா மதியை பார்த்து…  “ பச்ச கிளி….பார்த்தாலே பத்திக்குது….” தன் மனைவியிடம் காதல் மொழி பேசி விட்டு…யசோதா கொடுத்த பணத்தை  நல்ல பையனாக வாங்கி சென்று விட்டான்.
வீரா தன் அய்யனுக்கு கொடுத்த வாக்கை  தன் தம்பியின் உதவியுடன் நிறை வேற்றினான். அது போல காதலித்த மனைவியின் மனது கோணாது…. காதல் வாழ்க்கையையும் தொடார்ந்தான்.
ஒரு அண்ணனாய் ஷெண்பாவுக்கு நல்ல வாழ்க்கை அமைத்து கொடுப்பான் என்ற நம்பிக்கையில்…..
              சுபம்….
 

Advertisement