Advertisement

அத்தியாயம்….22
மதியின் இந்த  கேள்வியில்….வீராவுக்கு இத்தனை நேரம் இருந்த இதமான மனநிலை மாறியது. அன்று அவன் இருந்த நிலை…..?  அவன் செய்தது தவறு தான்.
ஆனால் சூழ்நிலை…. தங்கைக்கு அண்ணனாய் அவளை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்களை ஏதாவது செய்ய வேண்டும். தவறு தான். நான் விரும்பிய பெண்ணை,  மதி சொன்னது போல் தம்பிக்கு தாரை வார்ப்பது.
ஆனால் நான் அப்போது  என்ன தான் செய்வது…..? வீட்டுக்கு தலை மகனாய்….தந்தைக்கு அடுத்து அவர் இடத்தில் நான் இருக்கும் போது….
கோசலை அத்தையை தன் அய்யன் தங்கையாகவா பார்த்தார். தன் மகள் போல் தான் அவரை நினைத்தார். அதனால் தான் தன் ஆத்தாவும்,  மற்றவர்களிடம் காட்டும் தன் கடுமையை நாத்தனாரிடம் காட்டியது இல்லை.
அதுவும் தன் அய்யன்… “ இவர் தான் மாப்பிள்ளை…வசதி அவ்வளவு இல்ல. ஆனா இவன கட்டிக்கிட்டா நீ என் பக்கத்துலேயே இருக்கலாம்.” பக்கத்து ஊரில்  இருக்கும் ஒருவனை மாப்பிள்ளையாக அழைத்து வந்த போது…
அந்த மாப்பிளையை நிமிர்ந்தும் பாராது…. “ நீங்க என்ன எனக்கு கெடுதலா பண்ண போறிங்க……?”  என்று சொல்லி தலை குனிந்து தன் அய்யன் காட்டியனின் தாலியை ஏற்றார்.
நடந்து…. புகுந்த வீட்டுக்கு போன அத்தை வயிற்றில் கொண்டவனின் கரு இருக்கிறது என்று  தெரியாமலேயே….. அமங்கலியாக திரும்பவும் அண்ணன் வீட்டுக்கு வந்த போது….
வீராவுக்கு நன்கு நினைவு இருக்கிறது. “ உன்னோட வாழ்கைய நானே செதச்சிட்டனே….” தன் அய்யன் தலையில் அடித்து அழும் வேளயில்….
“ அண்ணே அப்படி சொல்லாதிங்க……? அவருக்கு அல்பாயுசுன்னு உங்களுக்கு தெரியுமா…..?”  அன்று அய்யனை அத்தை தான் தேற்றினார்.
தன் வீட்டில் அத்தைக்கு அடுத்து தான் தன்  ஆத்தாவுக்கே உரிமை. அப்படி தான் அய்யனின் ஒவ்வொரு செய்கையும் இருக்கும். யசோதா  அத்தையின் மகளாய் இல்லாம அந்த வீட்டு மருமகளாய் தான் வளர்ந்தாள்.
அய்யன் சாகும் போது கூட தன்னிடம்….. “ அத்தைய யசோதாவே பார்த்துக்கன்னு தான் சொன்னார்.” ஆத்தாவ பற்றியோ …. சரவணனை பற்றியோ …. சொல்லலே.
ஒரு மகனாய் தந்தையின் வாக்கு நிறை வேற்றவும்…..அண்ணனாய் தங்கைக்கு நியாயம் கிடைக்கவும் எடுத்த முடிவு அது…
அந்த முடிவை  இப்போது நினைக்கும் போது….அது நடந்து இருந்தால்….. தன் மனதில் இருப்பதை எந்த நீக்கு போக்கும் இல்லாது….அன்று  தான் எதை நினைத்து அந்த முடிவை எடுத்தான்.
மனதில்  நினைத்ததை அப்படியே கோர்வையாய் மதியிடம் சொல்லிக் கொண்டு வந்தவன்…. அது நடந்து இருந்தால் என்று சொல்லி விட்டு….. மதியின் முகத்தை பார்த்தான்.
கலங்கிய கண்ணோடு…. “ அடுத்து ஏதும் சொல்லாதே….”
விளக்கம் கேட்டவளே…. வேண்டாம் நான் கேட்ட வரை போதும்….
இப்போது இந்த சூழ்நிலையில்…..அதுவும் வீராவின் காதல் கதையை கேட்ட பின்…. அந்த முடிவு தந்தை….யசோதா….அண்ணனாய் ஆயிரம் காரணங்கள்  சொன்னாலும்…..அவன் வாயால் அது நடந்து இருந்தால்…அவளாள் அதை நினைத்து பார்க்க கூட முடியவில்லை.
கண் கலங்கியது தனக்காக அல்ல…அவனுக்காக.  திருமணம் முன் நான் அவனை பார்த்தது இல்லை. ஆனால் அவன்…..தம்பி மனைவியாய்…..எவ்வளவு கொடுமை…..?
ஏதோ பேச வந்தவனின்  வாயை அவன் பாணியில் பொத்தியவள்…. “ பிச்சிடுவேன்…இனி இது போல கோக்கு மாக்கா  எல்லாம் பேசக்கூடாது. இப்போ எனக்கு சரவணன் கொழுந்தன். யசோதா ஓருகத்தி…புஷ்பவதி அத்தை….கோசலையம்மா….இது தான் என் மனதில் இருக்கும் உறவு.
“ அப்போ ஷெண்பா …..?”
“ நம்ம  குழந்தைக்கு தாய். எனக்கு  தோழி…இன்னும் கொஞ்ச நாளில்,  ஒரு நல்ல மனது படைத்தவனுக்கு மனைவியாக  போகிறவள்.” நான் சொன்னது சரி தானுங்கல…..?
“ நீ சொன்னா அது சரியா  தான் இருக்கும்.”
“ அப்படியா….அப்போ நான் அத்த ரூமுக்கு போறேன்.” என்று  சொல்லி விட்டு எழுந்தவளின் கைய் பிடித்து உட்கார வைத்தவன்…
“ இரு போகலாம்…..இன்னும் கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கலாம்.”
“ பேசலாம் …பேசலாம்…. அத்த   உங்க கிட்டயே போக கூடாதுன்னு சொல்றாங்க. அவங்க மகன்  என் கிட்டயே இருன்னு சொல்றாங்க…..நான் யாரு பேச்ச கேட்குறது…..?”
“ பகல்ல….ஆத்தா பேச்ச கேளு. ராத்திரியில அவங்க மகன்  பேச்ச கேளு. பிரச்சனையே இருக்காது.”
“ இப்போ இருந்தா மட்டும் என்னதுக்கு ஆக போகுறது. வெறும் பேச்சு மட்டும் தான்.”
“ அடிப்பாவி பச்ச உடம்புகாரிடீ…இப்படி பச்ச பச்சயா பேசாதே…..நீ ஓடு…ஓடு….நீ இங்கயே  இருந்தா ….நல்லவன கூட கெட்டவனா மாத்திடுவே…..”
“ அப்போ நான் போகவா….போகவா…..” என்று  சொல்லிக் கொண்டே இருந்தாளே ஒழிய போகும் வழி தான்  காணவில்லை.
இப்போது வீரா தான்…. “ ஆத்தா பார்த்தா பிரச்சனையாகிடும் போ மதி….இன்னும் ஒரு மாசம் பொறுத்துக்க….நான் ஆத்தா கிட்ட பதமா பேசி உன்ன நம்ம அறையிலேயே தங்க ஏற்பாடு செஞ்சுடுறேன்….” கெஞ்சாத குறையாக மனைவியிடம் பேசினான்.
பின்ன கெஞ்ச தானே செய்வான்.   புஷ்பவதி மட்டும் மதி ராத்திரி தன் அறைக்கு வந்து போனது தெரிஞ்சது ….பகல்ல அவன் மானம் கப்பலேறி போயிடாது.
“ சரி நீங்க இவ்வளவு கெஞ்சுறதாலே போறேன்.”
அவள் போனால் போதும் என்பது போல் எழுந்து கதவு அருகில் சென்று  மதியை திரும்பி பார்க்க….அவளே அதே இடத்தில் சட்டமாக உட்கார்ந்துக் கொண்டு இருந்தாள்.
வீரா தன்னை பார்த்ததும்…. “ நான் இங்கே இருந்து போகனுமுன்னா நீங்க எனக்கு ஒன்னு தரனுமே…..?” அவள் கேட்ட தினுசுலேயே அது என்ன என்று தெரிந்துக் கொண்டவன்….
“ மதிம்மா…..மச்சான் ஆராம்பிச்சா அதோட விடாதுடா….. இப்போ வேண்டாம். சரியா…..” சிறு குழந்தைக்கு சொல்வது போல் சொல்லியவனின்  பேச்சை கேட்டவள்…
“ சரி.” என்று நல்ல பிள்ளையாக ஒத்துக் கொண்டவள்.
“ ஆனா  நான் ரொம்ப கண்ரோல்…..” என்று சொல்லிக் கொண்டே அவன் அருகில் வந்தவள்….
இது வரை  வரவில் மட்டுமே இருந்த முத்தத்தை,  வட்டியும் முதலுமாய் சேர்த்து வைத்து அவனுக்கு செலவு செய்து விட்டு…..அவன் மயங்கிய வேளயில் அந்த இடத்தை விட்டு ஓடி விட்டாள்.
கோசலையின் அறையில் ஒன்னும் தெரியாதவள் போல் அவரின் பக்கத்தில் படுத்துக் கொண்டவளுக்கு, அவனுக்கு முத்தம் கொடுக்காத போது இல்லாத வெட்கம் இப்போது வந்து ஒட்டிக் கொண்டது.
“ அய்யோ அவன் என்ன பத்தி என்ன நினைப்பான்…..?” கேள்விக்கு….அவள் மனசாட்சி…
“ உன் வண்ட வாளம் தான் அவனுக்கு முதல்லேயே தெரிஞ்சுடுசே…இப்போ என்ன புதுசா தெரியுறதுக்கு…..” எடுத்துரைக்க…. திருமணத்துக்கு முன்  கதையில் படித்த நாயகன் கனவில் வருவான்..இப்போது அந்த இடத்தை நம் வீரா நிறப்பினான்.
கோசலை ஷெண்பாவின்  உதவியுடன் குழந்தையை குளிப்பாட்டிக் கொண்டு இருக்க….. சாப்பாடுவதற்க்கு அமர்ந்த வீரப்பாண்டியன்…..
அத்தையின் அறை நோக்கி…. “ மதி…மதி….” சாப்பிட  எடுத்து வை. இரவில் அவள் கொடுத்த முத்தத்தின் ஈரம் இன்னும் அவன் உதட்டில்  மிச்சம் இருக்க…. அதை கொடுத்தவளின் மதி முகத்தை பார்க்க ஏங்கி அவளை அழைத்தான்.
வந்ததோ புஷ்பவதி….. இட்லி எடுத்து வைத்தவர்…. “ நேத்து செஞ்ச  கறி தொக்கு இருக்கு…..எடுத்து வைக்கட்டா…..?” சொல்லி விட்டு பதிலுக்காக  தன் பெரிய மகன் முகத்தை பார்த்தார்.
அவனோ… புஷ்பவதிக்கு பதில் சொல்லாது….. கோசலையத்தையின் அறை வாயிலேயே கண் இருந்தது. “ பெரியவனே…நான் இங்க இருக்கேன்…..”
ஓங்கி ஒலித்த குரலில்… “ என்ன ஆத்தா…..?” என்று கேட்டவனிடம்….
திரும்பவும் முதலில் கேட்டதையே…. “ நேத்தைய கறி தொக்கு வைக்கவா……?” என்று கேட்டதுக்கு….பதில் சொல்லாது….
“ வயசான காலத்துல உன்னைய வேலய  பாக்க விட்டு மத்தவங்கலா எங்கே போனாங்க…..?” குரலில் தான் கோபம் எதிரோலித்தது….முகத்திலோ ஆவலோடு நம்ம குரலுக்குக்காவது வராலா  பாரு… நேத்து சும்மா இருந்தவனை உசுப்பேத்தி விட்டுட்டு, இப்போ அறைக்குள்ள பதிங்கி கிடக்கா…..மனதில் மனைவிக்கு அர்ச்சணை நடந்தது என்றால்…
கண்களோ…..தெய்வத்தை காணும் பக்தனின் நிலையில் அலை பாய்ந்தது.
“ ஷெண்பாவும்…அத்தயும் குழந்தைய  குலுப்பாட்டிட்டு இருக்காங்க…யசோதாவும் சரவணாவும் இன்னும்  எழுந்துக்கல….” ஆத்தாவின் பேச்சுக்கு பதிலாய்…
“இன்னுமா…..” என்று கேட்டவன்…நேற்று அவர்களுக்கு என்ன நாள் என்ற நினைவில் நாக்கை கடித்துக் கொண்டு அமைதியானான்.
அவன் மனதில் மதி…அதை தவிர வேறு எதுவும் இப்போதைக்கு நினைவு இல்லை போல்….
“ உங்கல  தனியா வேல பாக்க விட்டுட்டு இந்த மதி என்ன செய்யிறா…..?”  என்று புஷ்பவதியிடம் சொன்னவன்…
கோசலையின் அறை நோக்கி…. “ மதி…மதி…..” என்று கத்தினான்.(கோபமா இருக்கான்னாம்.)
“ நீ என்ன கத்து கத்தினாலும் அவ வர மாட்டா…..” என்று சொல்லிக் கொண்டே…
இட்லிக்கு கறி தொக்கு வைத்தார். இவன் இப்போதைக்கு தான் கேட்டதுக்கு பதி அளிக்க மாட்டான் என்று அவரே முடிவு எடுத்து வைத்தவரை நோக்கி…
“ எதுக்கு வர மாட்டா…..?”
“ நான் தான் சொல்லி இருக்கேன்…..கொஞ்ச நாளைக்கு பதமா நடந்துக்கன்னு…..” என்று சொன்னதும்…அய்யோ தொட்டிக்கு போறதுக்கு முன்ன மதிய  பாக்க முடியாதோ….? அவன் கவலை அவனுக்கு….
“ என்னம்மா…ஊரு  உலகத்துல புள்ள பெத்துக்கலையா…..? அவள என்ன வரப்புல வந்தா வேல பாக்க சொன்னேன் ….?தோ இது போல  சாப்பாடு போடுவது….இது கூட அவளால முடியலையா…..?
ஆத்தா நீங்க உன்  மருமகளுக்கு ரொம்ப தான் இடம் கொடுத்து வெச்சி இருக்கிங்க.. இப்போ விட்டா   பொரவு பிடிக்க முடியாது…நான் அவ்வளவு தான் சொல்லுவேன்.”
அவன் ஆத்தா படித்த பாடத்தை அவருக்கே திருப்பி போட்டான் வீரா…..
அப்போது  குழந்தையை தூக்கிக் கொண்டு அங்கு வந்த கோசலை கால் நீட்டி காலில் குழந்தையை படுக்க வைத்து விட்டு…..
“ என்ன சாம்பிராணி தயாரா இருக்கா….” கேட்டதும் ..
கன…கன என்று எரிந்துக் கொண்டு இருந்த கரி மீது சாம்பிராணி தூளை போட்டுக் கொண்டே அந்த பாத்திரத்தை கோசலை அருகில் வைத்து விட்டு…அத்தை எப்படி செய்கிறார் என்று கவனமாய் ஷெண்பா கவனிக்க…
நம் கோசலையோ கைய் அது பாட்டுக்கு குழந்தைக்கு சாம்பிராணி புகை காட்டியது என்றால்…. “ மதனி ….ராவு நம்ம வூட்ல மோகினி பேய் உலாவுதுன்னு நினைக்கிறேன்….” என்று  சொல்லிக் கொண்டே வீராவை பார்த்தார்.
வீராவுக்கு அப்போது தான் புரிந்தது. மதி தன் அறைக்கு வந்து போனது தெரிந்த தொட்டு தான் அவளை நம் கண்ணில் கூட காட்ட மாட்டேங்குறாங்க….
“ ஆத்தா நான் சும்மா பேசிட்டு தான் இருந்தேன்.” (என் அப்பன் புதருக்குள் இல்லை என்பது போல் விளக்கினான்.)
“ அது தான் வேண்டாமுன்னு சொல்றேன் பெரியவனே ..….” தன் வெண்கல தொண்டை கொண்டு கத்தியதில்…மதி மட்டும் அல்லாது யசோதா சரவணன் கூட  சாப்பிடும் அறையில் கூடி விட்டனர்.
அட கடவுளே…இந்த வீட்ல நான் எவ்வளவு கெத்தா இருந்தேன். இப்போ என்னன்னா…. என் மானத்த எல்லோர் முன்னாடியும் ஏலம் விடுறாங்கலே….பாதி சாப்பாட்டில்  எழுந்துக் கொள்பவனை கை பிடித்து உட்கார வைத்த புஷ்பவதி…
“ மொத்தம் சாப்பிட்டு விட்டு இந்த இடத்தை விட்டு எழு….” இன்னும் இரண்டு இட்லியை அவன் தட்டில் வைத்தவர்..
யசோதாவை பார்த்து…. “ என்ன குளிக்காம வந்துட்ட…போ …போ தலைக்கு ஊத்திட்டு வா…..” என்று கத்தியவர்  ..
“ என்னடா உனக்கு  வேற தனியா சொல்லனுமா…..?” தன் சின்ன மகனையும் விட்டு வைக்காது கத்தினார்.
“ என்ன அப்படியே மச மசன்னு  நின்னுட்டு….குழந்த பெத்தவ நேரத்துக்கு சாப்பிடனும்லே….” மதியை அதட்டி உட்கார வைக்கவும்…தயங்கி தயங்கி வீராவின் பக்கத்தில் உட்கார்ந்த மதியின் தட்டிலும் நாலு இட்லியும் கறி தொக்கும் வைத்தவர் சாப்பிடு… அதட்டி சொன்னார்.
அத்த ரொம்ப கோவமா இருக்காங்க…எப்படி அவங்கல சாந்தம் படுத்துறது என்ற யோசனையில் வீராவை கவனிக்கவில்லை. நம் வீராவோ தன் ஆத்தாவின் வாயில் இருந்து  இவ்வளவு வாங்கிய பின்னும்…
மதி அறையில் இருந்து வந்ததில் இருந்து அவள் முகத்தையே பார்த்திருந்தான்….மதி தன்னை பார்க்காது இருந்த கடுப்பில் தன் கைய் முட்டிக் கொண்டு அவள் விலா எலும்பில் குத்த…
அத்தையின் கோபத்தை எப்படி மலை இறக்குவது என்ற ஆராய்ச்சியில் இருந்தவளுக்கு கணவனின் குத்தலில்  முகம் பளிச்சிட…
“ நான் வரல…வரலேன்னு தான் சொன்னேன் அத்த…..” யாரு எங்கே கூப்பிட்டா…..? இவ வரலேன்னு சொல்றதுக்கு…. அது தனக்கு மனைவி வைத்த ஆப்பு என்று தெரியாமலேயே….அவளின் பேச்சில் கவனத்தை செலுத்தினான்.
“ ஆம்பிளேன்னா அப்படி இப்படி தான் இருப்பாங்க…நாம தான் கொஞ்சம் சூதனமா இருக்கனும்…புரிஞ்சுதா…..?” மதிக்கு புரிந்ததோ இல்லையோ வீராவுக்கு புரிந்து..
அடி பாவி என்பது போல் மனைவியை ஒரு பார்வை பார்த்துக் கொண்டு இருக்கும் வேளயில்…. கந்தன்  கூடத்தில் வந்து தயங்கி நிற்பது தெரிய…
“ என்ன கந்தா வா…..” என்று அழைத்தும் வராது…
“ பரவாயில்ல அண்ணே….. நான் இங்கனவே இருக்கேன். நீங்க சாப்பிட்டே வாங்க…” சொன்னாலும் அவன் முகத்தில்  தெரிந்த பதட்டத்தில் அவசரமாக கை அலம்பிக் விட்டு…. அவனை நோக்கி சென்றான்.

Advertisement