Advertisement

அத்தியாயம்….21
“ எனக்கா…..?”  அவன் பேச்சில் இருந்தே  தன்னை மூன்று வருடத்துக்கு முன்பே  பார்த்து இருக்கிறான். பார்த்ததும் பிடித்தும் இருக்கிறது.  அவன் பிடித்தத்தை தன் கையில் உள்ள மூக்குத்தியே தெரியபடுத்துகிறது.
தன்னை எப்போது…..?எங்கு பார்த்தான்……? பிடித்தவன் ஏன் தன் தம்பிக்கு திருமணம்  செய்ய நினைத்தான். அதை தெளிவு படுத்திக் கொள்ள தான் இங்கு வந்ததே…
தன் மனதில் இருப்பதை  மதி கேட்காமலேயே….. “  உன்னய முதன் முதலா மூணு வருசம்  முன்ன உன் காலேஜ் கிட்ட இருக்க பேருந்து நிறுத்ததில்  தான் பார்த்தேன்.” என்று சொன்னதும்…
“ நீங்க எங்கு இருந்திங்க…….?”
“ எதிர்த்தாப்பல இருக்க டீ கடையில…..?” என்று  சொன்னவனை சந்தேகத்துடன் பார்த்தாள்.
கல்லூரியில் படிக்கும் பிள்ளைகளை பார்க்க என்று ஊரில் இருக்கும் இளந்தாரிகள் எல்லாம் அந்த டீ கடையில் தான் காத்திருப்பர். இவன் அங்கு இருந்து பார்த்தேன் என்று சொன்னதும்  சந்தேகப்பட்டது சிறிது நொடி தான்…
“ சீ….. சீ…அப்படி எல்லாம் இருக்காது.” அவள் மனதுக்குள் சொன்னது போல் தான் இருந்தது அவன் அடுத்து சொன்னது….
“ உங்க கல்லூரி தான்டி  இருக்க சந்தையில தான்…நம்ம மந்தையில இருக்க ஆட்ட எடைக்கு கொடுக்குறது. கொடுத்த உடனே  காசு கொடுத்துட மாட்டாங்க….இரண்டு மாசம் சென்டு…லம்பா பணம் சேர்ந்த போது தான் கொடுக்குறது. எனக்கும் சிறுக சிறுக வாங்குறது விருப்பம் இல்ல….
அது போல ஒரு சமயம்  பணம் வாங்கிட்டு வரும் போது, என் புல்லட் பிரச்சனை செஞ்சிடுச்சி…..என் பின்ன கந்தன் தான் உட்கார்ந்துட்டு  வந்தான்.
அவன் தான் நீங்க போங்க அண்ணே…..நான் வண்டிய சரி படுத்திட்டு எடுத்துட்டு வர்றேன்னு  சொன்னான். சரி வண்டிய பாருடான்னு அவன விட்டுட்டு கொஞ்ச தூரம் நடந்து வந்து அந்த கடையில டீ குடிச்சிட்டு இருக்கும் போது தான் ,காலேஜ் விட்டாங்க போல…
பொம்பள பசங்க….. சார சாரையா வந்துட்டு இருந்தாங்க. அப்போ தான் அந்த கடையில, ஊருல இருக்க இளந்தாரி பசங்க மொத்தமும் அங்கு இருக்குறத பார்த்தேன்.
அட நம்ம ஊருல இருக்கவன்  எவனாவது நான் இங்க நிக்குறத பார்த்தா…என் மானம் இல்ல போயிடுமுன்னு அவசரமா  டீக்கு காசு கொடுக்கும் போது தான்….
ஒரு பையன் …. “ இன்னிக்கி பச்சையில அப்படியே பச்சை  கிளி போலவே வந்து இருக்காடா…..” அப்படின்னு பக்கத்துல இருக்க இன்னொரு பையன் கிட்ட   சொன்னான். அதுக்கு அந்த பையன் ….
“ உனக்கு தைரியம் இருந்தா அத அந்த புள்ள கிட்டயே சொல்லேன்னு…..” சொன்னதுக்கு…
அவன்…. “ எதுக்கு நம்ம கூட சுத்துன குமாருக்கு துணையா ஹாஸ்பிட்டல படுத்து இருக்கவா….? அந்த புள்ள கிட்ட போனாவே அவள் அப்பன் ஆள வெச்சி உதைக்கிறான்.
 அது கூட பரவாயில்ல   அழகான பொண்ணோட அப்பா கிட்ட அடிவாங்குறோமுன்னு இருக்கலாம்.  ஆனா அந்த வீட்ல இருக்க அல்லக்கை கிட்ட எல்லாம் அடி வாங்குனோமுன்னு   என்ன தலை எழுத்து வேண்டி இருக்கு……? அவங்க பேச்சில தான் யாருடா அது அப்படி பட்ட பொண்ணுன்னு பார்த்தேன்.”
இது வரை எந்த தங்கு தடையும் இன்றி பேசிக் கொண்டு இருந்தவன்…..பார்த்தேன்  என்று சொன்னவன், அடுத்து எதுவும் பேசாதுகண் மூடி ஏதோ தியானத்தில் இருப்பது போல்  காணப்பட்டான்.
அவன் பேச ஆராம்பித்ததில் இருந்து அவன் முகத்தில் வந்து போன முகபாவனையே பார்த்திருந்த மதிக்கோ…. “ என்ன நினைத்து இருப்பான்…..?” கேட்க ஆவளாக இருந்தது.
சரி அடுத்து  சொல்லுவான் என்று மதி அவன் முகத்தையே பார்த்திருக்க….எங்கே கண் திறந்தான்…. தூங்கிட்டானா…..? மதி நினைக்கும் வேளயில்….
கண் திறந்து அங்கு பரப்பி வைத்திருந்த மூக்குத்தியில் பச்சை கலரை மட்டும் கையில் எடுத்தவன்…. “ போடட்டா…..?” அனுமதி வேண்டினான்.
தன்னை பார்த்ததும் என்ன நினைத்தான்…..? என்று  கேட்கும் ஆவளில் இருந்த மதிக்கோ…. “ எந்த நேரத்தில் என்னடா…..? என்று தான் நினைக்க தோன்றியது.
ஆனால் அவன் முகத்தை பார்த்த பின் அவளுக்கு அவனின் விருப்பத்தை மறுக்க மனது வரவில்லை. சும்மா கெத்தா மூஞ்ச வெரப்பா வெச்சி சுத்திட்டு இருந்தவன் இவனா …..?என்பது போல் இருந்தது அவனின்  அப்போதையே முகப்பாவம்….
அதுவும் அவள் விரும்பி படித்த கதையின் நாயகம் போல் அவள் மனதுக்கு தோன…. தலை தன்னால் “ சரி…. “ என்று ஆடியது.( மனதுக்கு பிடித்து  விட்டால் சுமார் மூஞ்சு குமார் கூட ஹீரோ தாங்க…..)
அவள் விருப்பம் இல்லாத தொட்ட நம் வீராவோ…இப்போது ஒரு மூக்குத்தி போட அவள் விருப்பம்  தெரிந்த பின் தான் அவளுக்கு அதை போட்டான் . ( மூக்குத்தி போடுவது நமக்கே கஷ்டம்….அவனுக்கு போட அதிக நேரம் பிடித்தது. அந்த சீனுக்கு உங்களுக்கு பிடித்த ரொமான்ஸை கற்பனை செய்துக்குங்க.)
மதிக்கு  அந்த பச்சை கல் மூக்குத்தி போட்டதும் அவள் முகத்தை அப்படியும் ….இப்படியும் …திருப்பி  பார்த்தவன்…. “ ம்..ம்ம்” திருப்தி இல்லாதவன் போல் சொல்ல….
“ என்ன…என்ன ஆச்சி…..?”  அப்போ என்ன நினத்தான். இப்போ என்ன நினைக்கிறான்….எதுவும் தெரியாது மதிக்கு மண்டை குழம்பியது.
“ இல்ல அப்போ இது போல கன்னம் உப்பி இல்ல….அதனால இந்த  மூக்குல அந்த மூக்குத்தி அப்படி எடுப்பா தெரிஞ்சது.”
குழந்தை பெற்ற உடம்பு கொஞ்சம் சவரஷணை  மருத்துவமனையிலேயே புஷ்பவதி நன்கு சமைத்து கொடுத்து விட்டார்.
இன்று  எண்ணை தேய்த்து தலைக்கு ஊற்றியதிலும்….மதியம் கொஞ்சம் ஓய்விலும்,  அந்த கன்னம் மினு…மினு என்று தெரிந்தது.
அவன் அப்படி சொன்னதும் தன் கன்னத்தில் கை வைத்து….. “ அப்போ இது பிடிக்கலையா……?”
“ சீ…சீ. அது ஒரு அழகுன்னா…இது வேற மாதிரி……” தாய்மை அழகில் மின்னியவளை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்க்க….அந்த பார்வையிலேயே அவன் எதை குறிப்பிடுகிறான் என்று புரிந்துக் கொண்டவள்.
“சீ நீங்க ரொம்ப மோசம்.”
“ இந்த டையலாக் எதுக்கு…..? கீர அடுத்த மோடுக்கு மாத்துன்னு சொல்ற சமிஞ்சையா…..?”
இதை எங்கோ கேட்டு இருக்கேனே….. முகம் குழம்பியவளின் மோவாயை பிடித்து தன் பக்கம் பார்க்க வைத்தவன்…..
“ ரொம்ப யோசிக்காதே….நீ உன்  பிரண்ஸ் கிட்ட சொன்னது தான்.”
அவன் சொன்னதும்  எப்போதும் சொன்னோம் என்று நியாபகத்தில் வர கூடவே….” அய்யோ….” கையை வாயில் வைத்துக் கொண்டாள்.
அவள் வாயில் மீது இருந்து கையை எடுத்தவன்….. “ மதியமே உன் கிட்ட என்ன சொன்னேன். இத நீ  மூடக்கூடாது…நான் தான் மூடனும். அதுவும் இப்படி இல்ல….” என்று சொன்னவன்… எப்படி….? என்பதை செயல் முறையில் செய்து காட்டினான்.
அவன் முத்தத்தில் இவ்வளவு நேரமும் கிறங்கி போய் இருந்தவள்…. பின்  அவளுக்கு பிடிக்காத மாதிரி உதட்டை துடைத்துக் கொண்டே….. “ இதுக்கு தான் என்ன வரச்சொன்னிங்கலா……?”
“ வேற  எதுக்குன்னு நினச்சே……? நீயும் இதெல்லாம் நடக்குமுன்னு  தெரிஞ்சி தானே வந்த…..?”
“ நான் ஒன்னும் உங்கல போல அலஞ்சான்  இல்ல…..” முகத்தை ஒரு வெட்டு வெட்டி சொன்னவளின் செய்கை ரசித்து பார்த்துக் கொண்டே…
“ நான் அலஞ்சான் தான்டி…ஆனா அத நான் வெளிப்படையா காமிச்சிப்பேன். ஆனா நீங்க….” என்று ஆரம்பித்தவன்…. “ நீங்க இல்ல….நீ மனசுல ஆசை இருந்தும்…  பிடிக்காத மாதிரியே இருந்துட்டு…..அமுக்கினி மாதிரி இருக்க மாட்ட ….”
“அய்யோ அன்னிக்கு முழுசும் கேட்டுட்டான் போலவே….என் மானம் போச்சே….” இந்த முறை  சூதனமாக அய்யோ என்றதும்….. அடுத்து கையை வாய்க்கு கொண்டு செல்ல வில்லை.
“ பரவாயில்ல உஷரா தான் இருக்க.” என்று சொன்னவன்…திரும்பவும் அவளின் இதழில் தன் இதழை பொறுத்தியதும்….
“ நீங்க வாயில கை  வெச்சா தான் முத்தம்  கொடுக்குறதா சொன்னிங்க…..”
“ ஆமா….”
“ இப்ப நான் வாயில கை வைக்கலையே…அப்புறது எதுக்கு  முத்தம் கொடுத்திங்க…..?”
“ என் பொண்டாட்டி எவ்வளவு அறிவா…நான் சொன்னதை  புரிஞ்சிக்கிட்டா அந்த சந்தோஷத்துல கொடுத்தது.”
 அவன் பேச்சில் முதலில் சொன்ன அய்யோ என்ற வார்த்தை கூட வாயில் வராது வாய் அடைத்து போனாள்.
மதியின்  அமைதியை பார்த்து …. “ என்ன மதி உன்ன எங்கே பார்த்தேன்னு  தெரிஞ்சிகிட்ட….உன்ன பார்த்ததும் என்ன நினச்சேன்னு தெரிஞ்சிக்க வேண்டாமா……?”
அவசரமாக “தெரியனும் …. தெரியனும்” என்று தலையாட்டியவளின் தலையை பிடித்து அதை நிறுத்தி விட்டு….
“அவங்க சொன்னாப்பல….நீ அப்படியே கிளி போல தான் என் கண்ணுக்கு தெரிஞ்ச…. அதுவும் இந்த மூக்கு….. அதன் கூர்மையால எடுப்பா தெரிஞ்சுதா…? இல்ல அந்த  மூக்குத்தி கலரால அது எனக்கு எடுப்பா தெரிஞ்சுதா…..? தெரியல.
மொத்ததுல  முதல்ல உன் கிட்ட கவுந்தது…இந்த மூக்கால தான்.  உன்ன நினச்சாலே…என் வாய் தன்னால் மூக்கீ தான் சொல்லும்.
நான் ஏதாவது ஆட்டோ பிடிச்சி தான் ஊர் போய் சேரனுமுன்னு நினச்சேன். நீ நம்ப ஊர் பஸ் வந்ததும் அதில் ஏறினியா…. அட நம்ம ஊரா… ? இல்ல வழியில இறங்கிப்பியா….? தெரிஞ்சுக்க …ஆட்டோல போற எண்ணத்தை  விட்டுட்டு பஸ்சுல ஏறுனேன்…. உன் பின்னாடி இருக்கையில தான் உட்கார்ந்தேன்.”
இது வரை அமைதியாக கேட்டுக் கொண்டு வந்தவள்….  “ பொம்பளைங்க இருக்கையில தான் அமருவீங்கலோ…..”
அவள் தலையில் கொட்டியவன்… “ நீ ஆம்பிளைங்க இருக்கையில் உட்கார்ந்துட்டு இருந்தேடீ…..” திரும்பவும் பல்பு வாங்கின எபெக்ட் அவள் மூஞ்சியில்.
“ நான் சொல்லி முடிக்கிற வரை சும்மா இரு.” வாய் மூடியவன்….
பின்… “ என்னடீ ஒரு பொம்பள பிள்ள மாதிரியாடி நீங்க பேசுறிங்க…..?” அவள் செய்வதை இப்போது அவன் செய்தான். அதானுங்க வாயில கை வைச்சிக்குறது.
“ யப்பா…. உன் பக்கத்துல இருக்கவ…. என்னடி எல்லாம் பச்சையா இருக்குதுன்னு கேக்குறா….. நீ அதுக்கு  அப்போ பேச்சும் இன்னிக்கு பச்சையா பேசலாமுன்னு சொல்ற…
அந்த புள்ள முத ராத்திரி பத்தி பேசலாமா…கேட்டதுக்கு…. நீ கொடுத்த பாரு ஒரு விளக்கம்…. அவன் வந்து  தொட்டதும் நம்ம சாஞ்சிட கூடாது. சீ….மோசம்… இப்படி சொன்னாலே அவன் அடுத்த அடுத்த கட்ட த்துக்கு போயிடுவான். பேச்சாடீ அத  கேட்க என் இரண்டு காது பத்தலடீ….
அந்த புள்ள முத ராத்திரிக்கு வெள்ள சீல தானே உடுத்துவாங்க…நீ என்ன முத்து செட்டு போட்டுட்டுக்குவீயான்னு கேட்டதுக்கு….சொன்னியே ஒரு பதிலு…முத ராத்திரியில அதையாடி அவன் பார்ப்பான்னு  யப்பா நாங்கல இதெல்லாம் பேசுனது இல்லடி…. அதுவும் இது மாதிரி பச்ச புள்ள போல முகத்த வெச்சிக்கிட்டு….” இது வரை முதன் முதலில் அவளை பார்த்தது…அவள் பேசியதை விளையாட்டாக சொல்லிக் கொண்டு வந்தவன்…
“ நீ உனக்கு வரப்போறவன பத்தி சொன்னியே…அப்பயே  செக்க சிவந்து இருக்கனும். உன்ன மட்டுமே தாங்கனும். இந்த ஊரு பிடிக்கல…..சென்னையா இருந்தா நல்லா இருக்கும்.  நீ சொன்னதை கேட்க கேட்க…
இதுல ஒன்னு கூட நமக்கு ஒத்து போகலையேன்னு நினைக்கிறப்ப தான் யசோதாவோட நினைப்பே வந்தது. என்ன இது…வீட்ல நமக்கு பேசி வெச்ச ஒருத்தி இருக்கா….
அதோட….விடல பையன்  மாதிரி பஸ் ஸ்டாண்ட்ல  ஒரு பொண்ண பார்த்து அவ பின்னாடியே இப்படி நூல் பிடிச்ச மாதிரி வர்றேன்னே என்ன நினச்சே எனக்கு ஒரு மாதிரி ஆயிடுச்சி…
யசோதா இந்த வீட்டு மருமகளா வரனும் என்பது அய்யன் வாக்கு…..அத எப்படி நான் மறந்தேன். இந்த என்னோட எண்ணத்தில் முடிவில் நம்ம ஊரும் வந்துடுச்சி..
அந்த நிலையிலும் நீ என் கூடவே இறங்குனத பார்த்து அட நம்ம ஊரு பொண்ணு தான்னு நினைக்க தோனுச்சி….இதோட இன்னொன்னும் நினச்சேன்..
யாருடா…?நம்ம ஊருல இவ்வளவு செவத்த புள்ள…இந்த புள்ள வெயில்லையே பார்த்து இருப்பது போல தெரியலையே….நம்ம ஊரு பொண்ணுங்க கொஞ்ச நேரம் கிடச்சாலும் வயலுக்கு வந்து வேல பாக்குங்க….
இல்லேன்ன என் ஆட்டு தொட்டிக்கு வந்து வேல பாக்குங்க….யாராவது உறவு முறை வீட்டுக்கு வந்து இருக்கோ… என் யோசனைக்கு முடிவா…அங்கு  அந்த ஆளு வந்தான்… நீ அப்பான்னு போனியா….
இவனோட பொண்ணா…. அதோட உன் நினப்ப மறந்து  என் வேலைய நான் பாக்க ஆராம்பிச்சேன்..ஆனா பச்ச கலர பார்த்தாலே….உன்னையும்…நீ பேசுன பச்சை பச்சை வார்த்தையும் தான் நியாபகத்துக்கு வரும்.
ஒரு மூணு  மாசம் சென்டு….  அடுத்த ஊருல இருக்க நான்  கணக்கு வெச்சி இருக்கும் வங்கிக்கு  போயிட்டு வெளியில வரும் போது பக்கத்துல இருக்க நகை கடையில இருந்து நீ உன் தோழிங்க  கூட வெளியில வந்த…
அப்போ நீ அந்த பொண்ணு கிட்ட “ அந்த லவெண்டர் கலர் மூக்குத்தி இங்கேயும் இல்லடி….” ரொம்ப வருத்தமா சொன்னியா….
அடுத்த வாரம் அம்மா யசோதாவுக்கும் ஷெண்பாவுக்கு அட்டிகை செய்ய  சொன்னப்ப கூடவே நீ சொன்ன கலர் மூக்குத்தியும் செய்ய சொன்னேன். அந்த தட்டான் என்ன ஒரு மாதிரியா பார்த்துட்டு தான் அத செஞ்சி கொடுத்தார்.
பின்  எதுக்குன்னு தெரியாமலேயே எனக்கு எந்த நிறத்துல மூக்குத்தி பிடிக்குமோ…. எல்லா கலருலேயும் வாங்கி  வெச்சேன்.”
இது வரை ரசனையோடு அனைத்தையும் சொல்லிக் கொண்டு வந்த வீரா…. “ அப்போ தான் என் தங்கை நிலை. உன் அப்பன் செஞ்சது…..” சொல்லி விட்டு மதி முகத்தை பார்த்தவனுக்கு…. அங்கு தெரிந்த வேதனையில்..
“ என் தம்பிக்கு…..”
“ ம்…உங்க தம்பிக்கு என்ன தார வார்க்க பார்த்திங்க….சொல்லுங்க…..” என்று கேட்டவளுக்கு எப்படி சொல்வான்…. அப்போது அவன் பட்ட துன்பத்தை…..

Advertisement