Advertisement

அத்தியாம் ….20
ராசியானது    என்று , நான்கு தலைமுறையாய் அந்த மரத்தொட்டிலில்  தான் குழந்தையை படுக்க வைத்து பெயர் வைப்பது. அந்த காலத்து தேக்கு மரம் என்பதால் இன்றும் எந்த சேதாரமும் இல்லாது  அப்படியே இருந்தது.
குழந்தை பிறந்தால் மட்டும் பரணையில் இருந்து எடுத்து,  அதை பாலிஷ் செய்து அழகு படுத்தி விடுவர். அதே போல் இப்போது குழந்தை வீட்டுக்கு வருவதற்க்கு முன்னவே…. சரவணன் தன் கை கொஞ்சம் சரியானதும்,  செய்த முதல் வேலை தொட்டிலை அழகு படுத்தியது தான்.
அந்த தொட்டில் முழுவதும் பூவை தொங்க  விட்டு……குழந்தை படுக்க வைக்கும் பகுதியிலும் முள் இல்லாத பூவை  தூவ வைத்து, குழந்தை படுக்க ஏதூவாக செய்ததும்….
சொந்த பந்தம் அனைவரின்  முன்நிலையிலும்…. குழந்தையை  அதன் மீது படுக்க வைத்ததும் ஐய்யர்… “முதல்ல உங்க  குலச்சாமி பெயரை குழந்தை காதில் சொல்லிட்டு….. நீங்க தேர்வு செய்த பெயரை காதில் மூணு வாட்டி…..பெத்தவா சொல்லுங்கோ…..” என்றதும் தான்…
இன்னும் குழந்தைக்கு என்ன பெயர் வைக்க வேண்டும் என்று யோசிக்கவில்லையே….? கணவனும், மனைவியும் ஒருவருக்கு ஒருவர் பார்த்து முழித்துக் கொண்டு இருக்க…
நம்ம புஷ்பவதியோ….. “ என்ன  இந்த முழி முழிச்சிட்டு நிக்கிறிங்க…..? நம்ம குலச்சாமி பேரு சொல்லிட்டு …நம்ம வீட்டு தெய்வம் பேர சொல்லு பெரியவனே……”
புஷ்பவதியின் பேச்சில்,  நம் மதி இன்னும் முழி முழி என்று தான் முழித்திருந்தாள். குலச்சாமி…சரி…யாரு அது வீட்டு தெய்வம். மனைவியின் குழப்பம் கணவனுக்கு இல்லை போல்….
மதியை யோசனையுடன் பார்த்த வாறு…..” கருப்பண்ணாச்சாமி ……” என்று  கணவன் ஒரு முறை குழந்தையின் காதில் சொல்ல ஆராம்பித்ததும், மதியும் சேர்ந்து மூன்று முறை சொன்னவள், பின் அடுத்து என்ன பெயர் என்று கணவனை பார்த்தாள்.
அடுத்து…. “ வீராச்சாமி….” என்று வீரா ஆராம்பித்ததும் முதல் போல் அவளும் தொடர்ந்து குழந்தை காதில் ஓதியவள், கணவன் காதில்….
“ உங்களுக்கு குல தெய்வம். வீட்டு தெய்வம் இரண்டு தெய்வம்  இருக்கா……?” கேட்டாளே ஒரு கேள்வி…
அதற்க்கு அவன் பதில் அளிக்கும் முன் “ உன்ன குழந்த காதுல மட்டும் தான் ஓத சொன்னேன்.” எப்போதும் போல்  பிஷ்பவதி தன் எட்டு கட்டை குரலில் அதட்டினார்.
மாமியார் திட்டியதுக்கு அவரை முறைக்காது,  கணவனை முறைத்து பார்த்து விட்டு….. “ ஒன்னும் இல்ல அத்த….” சாதுவாக பம்ம….
“ பொழச்சிப்படி…பொழச்சிப்ப…..”
“முதல்ல வந்தவங்கல கவனிச்சி அனுப்பிட்டு , .புருஷனும் பொண்டாட்டியும் குசு குசுன்னு பேசுங்க….. புதுசா கண்ணாலம் கட்டுனது கூட  ஒழுங்கா இருக்குதுங்க…..” புஷ்பவதி இதையும் சத்தம் போட்டு தான் பேசினார்.
பின் மதி வாய்  திறப்பாள்…. கணவன் ஏதோ வேலையாக பேச வந்தால் கூட…கை எடுத்து கூம்பிட்டு… சைகையில்…. “ போ…. போ….” என்பது போல் சைகை  காட்ட… அதை பார்த்த புஷ்பவதிக்கே சிரிப்பு வந்து விட்டது.
“ உன்ன என்னவோ நினச்சேன். நீ ஊம குசும்பா இருப்ப போலவே…..” மதியை சரியாக கணித்து புஷ்பவதி சொன்னார்.
குழந்தைக்கு வீராச்சாமி பேர் வைத்ததில் மதிக்கு   ஏதாவது மனது சுணுக்கமே தெரிய வேண்டியதால்… மதியின்  முகத்தை அப்போ அப்போ பார்த்து இருக்க….
புஷ்பவதியோ…..  கோசலையிடம்…. “ இந்த பெரியவன் பார்வையே சரியில்ல….அந்த புள்ளயே இழுத்துக்கோ…பொழச்சிக்கோன்னு இப்போ தான் மருத்துவமனையில் இருந்து வந்து இருக்கா….
நானே சூப்பு எல்லாம் கொடுத்து உடம்ப தேத்துனுமுன்னு நினச்சிட்டு இருக்கேன். நீயும் அவன் மேல ஒரு கண்ணு  வெச்சி இரு கோசலை.” தன் நாத்தனாரையும் உஷார் படுத்தியதை கேட்ட வீரா…
“ ஆத்தா….” மனதுள் தான் கத்த முடிந்தது.
எந்த வித பிரச்சனையும் இல்லாது அந்த விழா நடந்து முடிந்ததில், அக்காடா என்று ஆளுக்கு ஒரு மூளையில் இருந்தவர்களை….
“ இப்போ கந்தன் எடுத்துட்டு வருவான். சாப்பிட்ட பிறகு…..”  கோடிட்ட இடத்தை நிரப்புக என்பது போல் பேசிவிட்டு தன் அறைக்கு சென்று  விட்டான். இது போல் சமயத்தில் வீரா அந்த இடத்தில் இருக்க மாட்டான்.
வீரா சொன்னது போல் கந்தன் கொடுத்து விட்டு சென்றதும், சிறிது நேரம் சென்றதும்…. “ உடம்புக்கு நல்லது…..குழந்தைக்கு சளி பிடிக்காது. குழந்த பெத்தவங்களுக்கு ஜன்னி  காண கூடாதுன்னு இது கொடுக்கிறது தான். அதுவும் இன்னிக்கி எண்ணை தேச்சி தலைக்கு ஊத்தி இருக்க கண்டிப்பா கொடுக்கனும்.” புஷ்பவதியின் சத்ததில் யாருக்கு என்று தெரிந்துக் கொண்டு, அந்த இடத்துக்கு ஓடி வந்து நின்றான் வீரா.
ஓடி  வந்து நின்றவன் கண்ணில்,  கையில் க்ளாசோடு பேந்த பேந்த முழித்துக் கொண்டு ,  கையில் உள்ள க்ளாசையும், தன் அம்மாவையும், மாறி மாறி பார்த்துக் கொண்டு இருந்தவள் தான் தெரிந்தாள். வீராவை அந்த இடத்தில் யாரும் எதிர் பார்க்கவில்லை.
அங்கு கொஞ்ச நேரம் தர்மசங்கடமான நிலை….இருந்தும்  “ யசோதா எங்கேம்மா…? போன மாசத்துல ஆட்ட சந்தைக்கு ஏத்துனதுல கணக்கு இடிக்குது…..” யசோதாவை தான்  தேடி வந்தேன் என்று அதற்க்கு உண்டான காரணத்தையும் விளக்கியவனை அனைவரும் ஒரு மாதி பார்த்தனர்.
இப்போ என்னத்த கேட்டுட்டோமுன்னு இந்த பார்வை பாக்குறாங்க….. ? மனதில்  நினைத்ததை அவன் கேட்பதற்க்குள்…..மதிக்கு கண் ஜாடை காட்டி அவளை அழைத்து செல்லலாம்  என்று நினைத்தவனுக்கு மதி ஜாடை காட்டினாள்.
அவள் சாதரணமாக பேசினாளே அவனுக்கு விளங்காது. இதில் இந்த ஜாடை…அதுவும் இது போல் ஒரு நிகழ்வு அவர்களுக்குள்  நடந்ததே இல்லை எனும் போது…..
அவள் ஜாடை பேச்சில் அர்த்தத்தை அவன் யோசிப்பதற்க்குள் கோசலை… “ இன்னிக்கி அவங்களுக்கு சடங்கு அப்பூ….” என்று சொன்னதும் தான்…
“ ஓ….” சே…. அவன் அறைய நான் தானே அலங்கரிச்சேன். வந்ததுக்கு ஏதோ சாக்கு சொல்லனுமுன்னு இப்படி அசடு வழியும் படி ஆயிடுச்சே…..
சரி வந்த  வேலைய கவனிப்போம் என்று  அவன் நினைக்கவும், புஷ்பவதி…. “ அந்த கறிய சாப்பிட்டு குடிச்சிட்டு படுப்புள்ள….குழந்த பசிக்கு அழ ஆராம்பிக்க போகுது.”
அத்தையின் பேச்சில் பாவம் போல் முகத்தை வைத்து அவனை பார்க்க…இதற்க்கு என்று  காத்திருந்தது போல்…. ஏதோ ஜாடை காட்டினான்.
“ பெரியவனே காலையில் இருந்து நீ செய்யிறது கொஞ்சம் கூட சரியில்ல…நான் அவ்வளவு தான் சொல்வேன்.” என்று புஷ்பவதி  மகனை நேரியாகவே கேட்டு விட்டார்.
“ ஆத்தா அதெல்லாம்   ஒன்னும் இல்ல… அவளுக்கு இது எல்லாம் பழக்கம் இல்ல…அது தான் வேண்டாமுன்னு…. சொன்னேன்.”  தான் காட்டிய ஜாடைக்கு தன் அன்னையிடம் விளக்கம் சொல்வது போல் சொல்லி கை ஜாடையில் அதை குடிக்க வேண்டாம் என்று  மதியிடம் சொன்னான்.
அதற்க்கு ஏற்றார் போல்  பசியில் குழந்தை அழுகிறது என்று  ஷெண்பா குழந்தையை மதியிடம் கொடுக்கவும், தன் கையில் உள்ள க்ளாசை வீராவிடம் கொடுத்து விட்டு.. குழந்தைக்கு பசியாற்றுகிறேன் என்று அந்த இடத்தை  விட்டு அகன்று விட்டாள்.
பின் அனைத்தும் முடிந்து வீடு அமைதியாகும் வரை பொறுத்திருந்தவன்…. தன் அறைக்கு  மதி இன்னும் வராததை பார்த்து, சரி நாமே போகலாம் என்று யாருக்கும் தெரியாது கூடத்துக்கு வரும் போதா சரவணன் தன் அறையை விட்டு வர வேண்டும்.
வீராவின் திரு திரு முழியை பார்த்து… “ அண்ணே…..” என்று ஆராம்பிப்பதுக்குள்….
“ இந்த நேரத்துக்கு நீ எதுக்கு வெளியில் வந்தே……?” தம்பி கேள்வி கேட்பதற்க்குள் அண்ணன் முந்திக் கொண்டான்.
“ தண்ணி…..” ஏதோ தவறு செய்து  விட்டு சொல்வது போல் அடங்கிய குரலில் தன் கையில் உள்ள சொம்பை காட்டி சொல்லியதும்…
“ சரி சரி சீக்கிரம் எடுத்துட்டு போ……” என்று  அதோடு விடாது…
“ அதெல்லாம் முதல்லையே எடுத்து வெச்சிக்கிறது இல்லையா……?” தம்பியை மேலும் ஒரு அதட்டல் போட்டதும்….
“ நீங்க  தானே அண்ணே எல்லாம் செஞ்சது…..” தன் அறையை அலங்கரித்ததை சொன்னவன்…
பின் மெல்ல…. “ நான் இவங்களுக்கு பண்ணும் போது  நடுவுல எந்த இடஞ்சலும் வந்துட கூடாதுன்னு எல்லாம் பார்த்து பார்த்து செஞ்சேன்.  இப்போ நான் பார் பாதியில …..”
அந்த அமைதியான நேரத்தில் அவன் பேச்சு தெள்ள தெளிவாக அவன் காதில் விழ தான் செய்தது. இருந்தும் “ என்ன சொன்னே…..” மீண்டும் ஒரு அதட்டல் போடவும்.
“ தோ சீக்கிரம்  தண்ணி எடுத்துட்டு போயிடுறேன்னு சொன்னேன் அண்ணே…..” பம்மி சென்றான்.
சரவணன் பேச்சில் சிரிப்பு வந்தவனாய்…பையன் இதுல  விவரமா தான் இருக்கான். என்று நினைத்தவன் கூடவே யாரோட தம்பி…
தன் முறுக்கு மீசையை இன்னும்  முறுக்கி விட்ட வாறு ஓசைப்படாது கோசலை அறையில் வெளியில் வந்து நின்று ….
“மதி…” என்று  ஒரு முறை தான் அழைத்தான். மதி  கதவு அருகிலேயே இருந்து இருப்பாள் போல்….. சட்டென்று கதவு திறந்துக் கொண்டது.
கதவின் அந்த பக்கம் வீரா நின்றுக் கொண்டு இருப்பதை பார்த்து…. “ என்ன இந்த நேரத்துல……?” எதுவும் தெரியாதது போல் கேட்டவளை ஒன்னும் சொல்லாது, திறந்து இருந்த கதவின் வழியே தன் அத்தையை பார்த்தவனுக்கு ஏக திருப்தி….
பின் தன் மனைவியின் பக்கம் பார்வையை செலுத்தியவன்….. “ ஏன்டி இந்த ஒன்னும் தெரியாத பார்வை பாக்குறது. இந்த ஒன்னும் தெரியாத பேச்சு பேசுறது….இதெல்லாம் பார்த்து  இவங்க ஏமாறுவாங்க. ஆனா நான் ஏமாற மாட்டேன்டி….நீ எவ்வளவு பெரிய தில்லாலங்கடின்னு எனக்கு தெரியும்.” கணவனின் அந்த பேச்சில் ரோசம் பொத்துக் கொண்டு வந்து விட்டது நம் மதிக்கு….
“ அது என்ன எப்போ பாரு…இதே பேச்சு. முத ராத்திரிக்கும் இது போல தான் ஏதோ பேசி வெச்சிங்க…அப்புறமும் இரண்டு தடவ  இது போல் தான் சொன்னிங்க..உங்க மனசுல என்ன பத்தி என்ன நினச்சிட்டு இருக்கிங்க…..? சொல்லுங்க சொல்லுங்க…..” என்று சொல்லிக் கொண்டே கதவின்அந்த பக்கம் இருந்தவள் , இந்த பக்கம் வீராவின் அருகில் வந்து நின்றாள்.
தன் பக்கம் வந்தவளை அருகில் இழுத்து விட்டு வீரா கதவை  சாத்தியதும்…. “ இப்போ எதுக்கு கதவ அடச்சிங்க……?”
“ திரும்ப ….. திரும்ப… என் கிட்ட இந்த ஹாக்டிங் கொடுக்குற வேலைய வெச்சிக்காதே ……கதவ அடைக்கனும் தானே நீ இந்த பக்கம் வந்தது.”
“ அய்யோ கண்டு கொண்டானே……”  என்ற நிலை தான் மதிக்கு….அவன் சொன்னது போல் தான் வீரா அந்த மூக்குத்தி  கதை சொன்னதில் இருந்து அது என்ன …..? என்று கேட்க ஆவள்.
கூடவே தன் மனதில் இருப்பதை கேட்டு தெளிவு படுத்திக் கொள்ளவும் விரும்பினாள். இந்த ஒரு வருடம் எப்படி வாழ்ந்தோமோ…ஆனால் இனி ஒரு கூடல் என்பது ஒருவருக்கு ஒருவர் தெரிந்துக் கொண்ட பின்பு தான். இது வரை நடந்தது தவறாய் இருந்தாலும், இனியாவது சரியாக இருக்க வேண்டும் என்று எண்ணினாள்.
அனைவரும் அவர் அவர் அறைக்கு முடங்கி…கோசலையும்  தூங்கியதும்…. “ என்ன இன்னும் காணும். அவர் சொன்னது போல் நாமே  அவர் அறைக்கு போகலாமா…..?” யோசித்ததின் முடிவில்…வேண்டாம் நாம அலைவது போல் ஆகி விடும்.
பொறுத்து பொறுத்து பார்த்தவள்,  அவன் வருவது போல் காணும். சரி நாமே போவோம்  என்று கதவை திறக்கும் வேளயில் தான் கூடத்தில் சரவணன் வீராவின் பேச்சு சத்தம் கேட்டது.
சரி நம்ம கெத்த அப்படியே   மெயின்டன் பண்ணுவோம் என்று காத்திருந்தாள்.  அதை சரியாக ஊகித்து கூறியதோடு வேறு என்ன என்னவோ சொல்றானே….. என்ற கோபத்தில் மேலும் எகுற…
“ ரொம்ப பண்ணாதடி…..” கை பிடித்து  இழுத்து சென்றவன் தன் அறை வந்ததும் பிடித்த கையை விட்டு விட்டான்.
ஆனால் நம் மதியோ அவன் கை பிடிக்கும் போது எந்த வாக்கில் கைய் இருந்ததோ…. அதே போல் அவனை பார்த்து கை நீண்டுக் கொண்டு இருக்க…
அவள் முகத்தையும், கையையும் மாறி மாறி  வீரா பார்க்கவும் தான்…. “ அய்யோ….மானம் போயிடுச்சே…..” மனதுள் பேசுவதாய் நினைத்து சத்தமாக சொல்லி விட…
“ உன் மானம் இப்போ இல்ல. மூணு வருசம் முன்னவே போயிடுச்சி….”
வீராவின் பேச்சில் விளையாட்டு தனத்தை கை விட்டவளாய்…. “ என்ன உங்களுக்கு முன்னவே தெரியுங்கலா……?”
“ தெரியும்…..” என்பது போல் தலையாட்டியதும்…
“ எப்படி…. எங்கு பார்த்திங்க….. என் பிரண்ஸ் கிட்ட பேசும் போது ஏதாவது கேட்டிங்கலா…..?” அவன் பேச்சில் ஏதோ  யூகித்தவளாய் கேட்டாள்.
“ பரவாயில்ல…நான் நினச்ச மாதிரி நீ கேடி தான்.” இப்போது நிஜமாகவே அவளுக்கு கோபம் வந்து விட்டது.
“ இது என்ன பேச்சு. எப்போ பார்த்தாலும் கேடி தில்லாலங்கடின்னு…..” மூக்கை உறிஞ்சியவளின் மூக்கை பிடித்து ஆட்டியவன்.
“ மூக்கு மேல என்னம்மா கோபம் வருது….”
அவளை  கட்டில் மேல் அமர வைத்து அவள் மூக்கை நிமிண்டி கொஞ்சியவனின் கையை தட்டி விட்டவள்.
“ சும்மா பேச்ச மாத்தாதிங்க….. முதல்ல மூக்குத்திய காமிங்க…..” என்றதும்….
தயாராய்  ஒரு சிறு பெட்டியில் வைத்திருந்த மூக்குத்திகளை காட்டினான். அவன் அந்த நகை பெட்டியை திறந்ததும் அவனிடம் இருந்து அந்த நகை பெட்டியை பரித்துக் கொண்ட மதி…. மெத்தையில் கொட்டி  அதன் நிறத்தை பார்க்கலானாள்.
மெத்தையில் வெள்ளை நிறத்தில் விரிப்பு போட்டு இருந்ததால்…. பளிச் என்று மூக்குத்தியின் நிறங்கள் தெரியலாயின….. பச்சை …சிவப்பு…வெள்ளை….மஞ்சள்….நீலம்….. ஒன்று ஒன்றாய் தன் கையில் எடுத்து பார்த்துக் கொண்டு வந்தவள்..
லாவண்டர் நிறத்தில் உள்ள மூக்குத்தியை கையில் எடுத்ததும்….” இத எங்கே வாங்குனிங்க….நான் எல்லா  நகை கடையிலும் கேட்டேன். இந்த ஏரியாவுல இல்ல. சென்னை போன்ற பெரிய ஊருல வேணுமுன்னா இருக்குமுன்னு சொல்லிட்டாங்க…உங்களுக்கு எப்படி….”
“ ஆர்டர் கொடுத்து செஞ்சேன்…. யசோதாவுக்கும் ஷெண்பாவுக்கும்,  சிவப்பு கலருல அட்டிகை செய்ய நம்ம ஆச்சாரியார் கிட்ட செய்ய சொல்லி ஆத்தா சொன்னாங்க. அப்போ  கூட மூக்குத்தியும் செய்ய கொடுத்தேன்”
“எதுக்கு…..?யாருக்கு…..?” என்ற கேள்விக்கு…
“ உனக்கு…..” என்பது போல் கையை அவளை பார்த்து நீட்டினான்.
(அடுத்த அத்தியாயத்தில் அவன் காதல் கதைய சொல்லிடுறேன்.)

Advertisement