Advertisement

அத்தியாயம்….19
மதி கோசலையின் அறையில், குழந்தைக்கு பசியாற்றிய பிறகு….அதற்க்கு என்று காத்திருந்தது போல் ஷெண்பா  குழந்தையை வாங்கிக் கொண்டு தன் அறைக்கு சென்று விட்டாள்.
மதிக்கு கோசலையின் அறையின் தனியாக  உட்கார்ந்து இருப்பது போர் அடிக்க….சரி வெளியில் செல்லலாம் என்று  எழும் வேளயில் அங்கு வந்த கோசலை…
“ இப்போ எதுக்கு வெளியே  போற…இங்கனவே உட்காரு….அங்கு பந்தி நடக்குது.” என்று சொன்னவரிடம்…
“ நான் போய் வேணா பந்தி பறிமாறுட்டா…..”
அவசரமாக……” வேண்டாம். வேண்டாம். ஒருத்தவங்க கண்ணு போல இருக்காது. காலையிலேயே அந்த மூச்சந்தி வீட்டு  பானு மதனி கிட்ட…என்ன உன் மருமக குழந்தை பெத்தா மாதிரியே தெரியல….அப்படியே துலக்கி வெச்ச செப்பு குடம் போல இருக்கான்னு   சொல்லிட்டு போனா…..
மதனி உன்ன அப்படி அலங்கரிக்கயிலேயே வேண்டாமுன்னு சொல்லலாமுன்னு தான் நினச்சேன். ஆனா மதனி ஆசைய ஏன் கெடுப்பானேன்னு விட்டுட்டேன்.” என்று சொல்லி விட்டு போனவர்…
பின் என்ன நினைத்தாரோ திரும்பவும் மதியிடம்…. “ இந்த பட்டு சேலைய  மாத்திட்டு சாதரண சேலையா கட்டு. ஆ குழந்தை பெத்தவ இவ்வளவு பூவூ வெச்சிக்க  கூடாதுன்னு சொல்லுவாங்க. அதனால கொஞ்சமா வெச்சிக்க…..” என்று சொல்லி கோசலை சென்று விட்டார்.
ஆனால் மதிக்கு தான் கோசலையம்மா சொன்னது போல் சேலை மாற்ற  மனது வரவில்லை. இது வரை அவள் உடுத்துய துணி யார் வாங்கி தந்தது தெரியவில்லை. வீரா தான்  வாங்கி இருப்பான் என்று நினைத்து இருக்கிறாள். பெரியதாக அது பற்றி தெரிய முயலவில்லை.
ஆனால் இப்போது இச்சேலை….நேற்று புஷ்பவதி அத்தை…. “ மதிக்கு மனையில் உட்கார   புது பட்டுசேலை எடுக்கனும். அப்படியே குழந்தைக்கு சுலுவா இருக்குற மாதிரி நூல் துணியா கொண்டா….” அவள் எதிரில் நடந்த பேச்சு வார்த்தை இது தான்.
இன்று காலையில் தான் அத்தை….. தன்னிடம் அதை கொடுக்கும் போது……” பரவால்ல  உன் நிறத்துக்கு ஏத்தா மாதிரி தான் சீல வாங்கிட்டு வந்து இருக்கான்.” என்று  சொல்லிக் கொண்டு அதை தன்னிடம் கொடுக்கும் போது… அதன் அழகில் அவள் மயங்கி தான் போனாள்.
அவளுக்கு  மிகவும் பிடித்த அடர்ந்த பச்சை நிறத்தில்,   அதுவும் முந்தியில் சரிகையிலேயே கிருஷ்ணர் அவர் காலின்  பெரு விரலை வாயில் வைத்துருப்பது போல்….அப்படியே தத்துரூபமாய்….
அதன் நிறத்தையும் … கிருஷ்ணர்  வடிவமைப்பையும் பார்க்கும் போது, சீமந்தம் செய்ய  எடுத்ததோ….. ?மனதுக்குள் சந்தேகம் எழுந்தாலும், ஆனால் வீட்டில் அதை பற்றி பேச்சு எழவில்லையே….
எப்படியோ புடவை அவளுக்கு மிகவும் பிடித்த கலரில். பிடித்த டிசைனில்….பிடித்த  கணவன் எடுத்துக் கொடுத்தது. ஆம் இப்போது மதிக்கு வீராவை மிகவும் பிடித்திருக்கிறது.
இந்த பிடித்தம் அப்பாவின் சுயரூபம் தெரிந்ததாலா…..? தெரியவில்லை. ஆனால் இப்போது மதிக்கு வீராவிடம் பேசவேண்டும் பழக வேண்டும் என்று ஆவளாக   காத்திருந்தாள்.
ஆம் காத்திருந்தாள் தான். பிள்ளை பெற்ற உடம்பு என்று கோசலையம்மா அறையில் இருக்க சொல்லி விட்டார்கள் புஷ்பவதியத்தை.
அத்தைன்னாலே  வில்லி தானா….? வீராவிடம் பேச சந்தர்ப்பம் கிடைக்காத கோபத்தில் மனதில் தாளித்தும் கொட்டினாள். சரி இந்த புடவை வைத்து  பேச்சை ஆராம்பிக்கலாம் என்று நினைத்து தான் புன்னியாதானம் செய்த உடன் பின்கட்டுக்கு சென்றது…
ஆனால் தனிமை பேச்சு…. மச்சினனே…இன்னிக்கி தானே உனக்கு முதல் இரவு…வைக்கிறேன் ஆப்பூ…. அய்யோ அது கிடக்கட்டும். இப்போ கோசலையம்மா  சேலை மாத்த சொல்லி இருக்காங்கலே….
இதை  வெச்சி தானே அவன் கிட்ட பேச்ச ஆராம்பிக்கலாமுன்னு நினச்சேன். திருமணம் முடிந்து குழந்தை பெற்ற பின்….. காதலி காதலனிடம்  ஏப்படி பேச்சை ஆராம்பிப்பது என்று திணறும் காதலி போல் மனதில் பதற்றம்.
சரி கோசலையம்மா சொன்னது போல் சேலைய மாத்துவோம். பேசுவதுக்கு  வேறு ஏதாவது விசயம் கிடைக்காதா என்ன…..? புடவை மீது கை வைக்கும் போது…
புஷ்பவதி அறைக்கு வந்து….. “ நல்ல வேள சீல மாத்தல…இன்னும் குழந்தைய தொட்டில்ல போடல…. இப்போ தான் கோசல உன்ன  சீல மாத்த சொன்னதா சொன்னா….வேண்டாம். கொஞ்ச நேரம் அப்படியே இரு….தோ மூணாவது பந்தி முடிஞ்சுடுச்சி…..
அடுத்து நீயும், பெரியவனும் , சாப்பிடுங்க…. கொஞ்ச நேரம் தூங்கி எழுந்தா தான்  குழந்தைக்கு பேர் வைக்கிற விழா அப்போ உடம்பு தெம்பா இருக்கும்.”
எப்போதும் பேசுவது போல் சத்தமான பேச்சு தான். ஆனால் இப்போது அந்த பேச்சு அவளுக்கு எரிச்சலை ஏற்படுத்தவில்லை. அதில் உள்ள அக்கறை மட்டுமே அவளுக்கு தெரிய…
அனைத்துக்கும் …”சரி… சரி….” என்று தலையாட்டிக் கொண்டாள்.
அதற்க்கும்…. “  ஒரு புள்ளயும் பெத்துட்ட…. எப்போ தான் வாய திறந்து பேச போறியோ…..” அதையும் சத்தமாக கத்தி விட்டு தான் சென்றார்.
“குழந்தை பிறப்பதற்க்கும் …வாய திறப்பதற்க்கும் ஏதாவது சம்மந்தம் இருக்கான்னா….?”   இதே இது போல் தோழிங்க யாராவது பேசி இருந்தால் , இவளின் பதில் இதுவாக தான் இருக்கும்.
தோழிகளுடன் பேசிய பழைய நினைவில் முகம் தன்னால் மலர்ந்தது. மலர்ந்த முகம் வாடுவதற்க்குள்  யசோதா வந்து….. “ வெளியாளுங்க சாப்பிட்டுட்டாங்க…இப்போ வீட்டு ஆளுங்க பந்தி தான் வாக்கா சாப்பிடலாம். அந்த சனம் வந்தது. அதற்க்குள் பந்தி முடிஞ்சுடிச்சா….. நினைத்ததை கேட்டும் விட்டாள்.
அதற்க்கு ஒரு கள்ள சிரிப்பு ஒன்றை உதிர்த்து விட்டு…..” இப்போ முச்சூடும்  ஓடுனது எல்லாம் பொம்பளைங்க பந்தி தான்.”
“ அப்போ ஆம்பிளைங்க…..?” யசோதாவின் கள்ளச்சிரிப்பை சந்தேகத்துடன் பார்த்துக் கொண்டே கேட்க…
“ அவுங்களுக்கு எல்லாம் ஆட்டு தொட்டில பந்தி நடக்கும். ”
“ஏன்…ஏன்….” மதி  குழப்பத்தில் கேட்டாள்.
“சுட சுட இறக்கும்  கள்ளு. நம்ம ஊரு ஆம்பிளைங்க  சும்மா விடுவாங்கலா…..?” என்று சொன்ன யசோதா…
மதியை அருகில் அழைத்து…அவள் காதில்… “ கொஞ்சம் பொம்பளைங்களும் அங்கன தான் இருப்பாங்க…..”
“ என்னது பொம்பளைங்களும் குடிப்பாங்கலா…..?”
“இப்போ எதுக்கு இப்படி அதிசயத்துக்குற…பொம்பளைங்க குடிக்கிறது என்ன அவ்வளவு தப்பா…..? மரத்துல பதமா இறக்குன கள்ளு,  இன்னும் கேட்டா உடம்புக்கு ரொம்ப நல்லது தெரியுமா…..?”
யசோதா மதியை அக்கா என்று அழைக்க நினைத்தாலும், அவளின் வயதும், உருவமும்  பார்த்து தன்னால் ஒருமையில் அழைக்க தான் தோன்றுகிறது.
அதனால் சில சமயம் அக்கா என்று அழைப்பிலும், பல சமயம் மதி என்ற  அழைப்பிலும் இந்த இரண்டு நாளாய் அவர்களுக்குள் பேச்சு வார்த்தை நடைப்பெற்று வருகிறது.
“ நீ சொலவத பார்த்தா…நீயும்….” தன் ஒரு விரலை நீட்டி சந்தேகத்துடன் கேட்டவளின் விரல் பற்றி…
“ ஆமா…இப்போ என்னங்குற…..”
“அடிப்பாவீ…..” அவள் பிடியில் இருந்த விரலை விடுவித்து தன் மோவாயில்  கைய் வைத்த வாறு கேட்டவளின் பாவனையில்….
“ இந்த அப்பாவிய பாவீயா மாத்துனது உன் புருஷன் தான்மா…..”
“ என்ன சொல்ற…..?”
“ சில சமயம் புது மரத்து கள்ளு உடம்புக்கு நல்லதுன்னு பெரிய மச்சான் வீட்டுக்கே  கொண்டாருவாங்க…..”
“ அப்போ …அப்போ….” அதற்க்கு மேல் எப்படி கேட்பது என்று மதி தயங்க…..
“ அதே அதே….உன்ர அத்த….என்ர அத்த…..அப்படியே குடும்பமா…..” சொல்லி விட்டு கண்ணை அடிக்க…. அதற்க்கு மேல்  என்ன சொல்லி இருப்பாளோ…..
மடித்து கட்டிய வேஷ்டியை இறக்கி விட்ட வாறே…அங்கு   வந்த வீரா…… “ உன்ன சாப்பிட கூட்டியார தானே ஆத்தா சொன்னாங்க…..அத விட்டு இங்கு என்ன வெட்டி அரட்ட….” கடிந்து அவளை அனுப்பி விட்டு….
மதியை …..”சாப்பிட ….” அழைக்க அவள் புறம் திரும்பும் போது தான் முழுமையாக அவளை பார்த்தான்.
புன்னியாதானம் செய்ய….ஐய்யர் அழைத்ததும்,  பின் கட்டில் இன்னும் சமையல் முடியவில்லையே…அந்த நினைப்பிலேயே அவள் பக்கத்தில் அமர்ந்தவன்…
ஐய்யர் சொன்ன மந்திரத்தை கர்மசிரத்தையாக சொல்லி,  அவர் சொன்னதை செய்து விட்டு விட்டால் போதும் என்று சென்று விட்டான். மதி பின் கட்டு வரும் போது தான் ,எதுவும் முழுமையாக பார்க்க முடியாத நிலையில் இருந்தானே…
இப்போது அவன் எடுத்து கொடுத்த புடவையில்  இருந்தவளை பார்த்தவனின் நினைவுகள் தன்னால்  மூன்று வருடத்துக்கு முன் சென்று விட்டதால்,  தன்னால் அவள் போட்டு இருந்த வெள்ளைக்கள் மூக்குத்தியை   தொட்டு….
“ பச்சைக்கள் மூக்குத்தி  போடலையா…..?” தேவைக்கு மீறி எதுவும் பேசியது இல்லை. இது வரை இரவில் தேவைக்கு தான் அவளை அனுகியிருக்கிறான்.
இப்போது இந்த பேச்சு…அவன் தொடுகை…..அவள் பிள்ளை உண்டாகிய பின்…கொஞ்ச நாள் தான் அவளை அனுகியிருக்கிறான். முரட்டு தனம் எப்போதும் அவனிடம் இல்லை. அந்த அனுகலும்….மாதம் ஏற ஏற…. நின்று விட்டது.
அவளும் விட்டது என்று நிம்மதியாக இருந்து விட்டாள். தன் தந்தை பற்றி  தெரிந்ததில்…அதுவும் ஷெண்பாவுக்கு அவர் செய்த அநியாயம்….பெண்ணாய் கோபத்துக்கு மீறி…
தன் கணவனுக்கு எப்படி இருந்து இருக்கும்…..?இதை தான் அந்த சமயம் அவளை  யோசிக்க வைத்தது. அதற்க்கு என்று அவன் செய்தது சரி என்று ஆகிவிடாது.
ஒரு தவறை சரி செய்ய….அடுத்த தவறு சரியான தீர்வாய் இராது. அதுவும் தம்பிக்கு கட்ட நினைத்தது….வீட்டில் யசோதா கட்ட பேச்சு நடந்தது….
அவன் மீது அவள் மனது சென்றாலும்…இதை பேச வேண்டும் என்று தான் அவனிடம் தனிமையை நாடினாள்.
ஆனால் இப்போது அவன் பேச்சு…பார்த்த பார்வை….அந்த சிறு  தொடுகை…. பேச என்ன…..?எதையும் யோசிக்க கூட முடியாது செய்து விட்டது.
தான் கேட்டதுக்கு பதில் சொல்லாது தன்னையே பார்த்திருந்தவளை   உலுக்கியதும்…. “ என்ன…என்ன கேட்டிங்க…..?”
திரும்பவும் “  இந்த புடவைக்கு பச்சை கள் மூக்குத்தி போடலையான்னு கேட்டேன்.”
திருமணத்துக்கு முன்….அனைவரும் தோடு ….வளையல் என்று  தன் உடைக்கு ஏற்ப மேட்சிங்காக போடுவார்கள் என்றால்…..இவள் மூக்குத்தி    கூட அதே நிறத்துக்கு மாற்றி தான் கல்லூரிக்கு செல்வாள். அவளிடத்தில் அனைத்து நிறத்திலும் மூக்குத்தி இருக்கிறது.
வீரா இவளை தூக்கி வரும் போது,  வீட்டில் எப்போதும் வெள்ளை மூக்குத்தி தான் போடுவாள். அந்த மூக்குத்தி தான் இன்று வரை….அதை மாத்தவே இல்லை.
“ இந்த மூக்குத்தி தான் இருக்கு…..” அவன் கேள்விக்கு திக்கி திணறி பதில் சொல்லி விட்டாள்.
“ என் கிட்ட இருக்கு…..மாத்திக்கிறியா…..?” ஆவளாக கேட்டான்.
இவங்க கிட்ட மூக்குத்தியா….? ….. “ஏது……?” கேட்டும் விட்டாள்.
“ மூனு வருசத்துக்கு  முன் வாங்குனது……எடுத்துட்டு வரவா…….” தன் அறையில் இருப்பதை கொண்டு வர போக பார்த்தவனின் கை பற்றி ஏதோ  நினைவில் .“வேண்டாம்…வேண்டாம்…..” அவசரமாக மறுத்தாள்.
அவளை கூர்மையுடன் பார்த்த வாறு…. “ ஏன்……?” இப்போது அவன் பார்வை அவளுக்கு கூச்சத்தை தரவில்லை.
அதனால் மதிக்கும்  வார்த்தை திணறாது….. “ யசோதாவுக்கு வாங்குனத…..அவங்க கிட்ட தான் கொடுக்கனும்.”
தன் பார்வை மாற்றது…. “ அத அவளுக்கு வாங்குனேன்னு  சொன்னேனா……?” கேள்வி கேட்டவனை….
லூசா என்பது போல்  சந்தேகமாக ஒரு பார்வை பார்த்த வாறு….. “  அப்போ எனக்கு வாங்குனதா……?”
“ஆமாம்…..” என்பவனை…இவன்  கண்டிப்பா லூசு…. இல்ல என்ன லூசாக்க பாக்குறானா……? என்று தான் நினைக்க தோன்றியது.
“ வீரா….வீரா……” புஷ்பவதியின்  குரல் எட்டு கட்டையில் எதிரொலிக்க…..
“தோ ஆத்தா…..”
“என்னத்த தோ தோன்னு…..யசோதா போனவ வரலையேன்னு உன்ன அனுப்பிச்சா….போனவன் போனவனாவே இருக்கியே….அந்த அற என்ன அலுவூதி அறையா… அப்படியே இழுத்து பிடிக்க….வெள்ளன வா….”
“பச்ச உடம்புக்காரி…கொஞ்சம் சூதனமா இரு.  ஆம்பிளன்னே அப்படி…. இப்படி ….தான் இருக்க செய்வாங்க…நாம தான் பதமா இருந்துக்கனும்.”
முதல் குரல் மகனுக்கு என்றால்…இரண்டம் குரல் மருமகளுக்கு…எந்த நாசுக்கும்  பார்க்காது, இதையும் சத்தமாக தான் சொன்னார்.
அதை கேட்ட மதிக்கு தான்…..” அய்யோ…..” என்றானது.
வீராவுக்கு அது போல் இல்லை  போல்…..திரும்பவும்….” வரோம்.” என்று அவன் தாய்க்கு சற்றும் குறையில்லாது  சத்தம் போட்டவன்…
“ மதி ராவு என்  அறைக்கு வா…..” மெல்ல சொல்ல….
மாட்டேன் என்பது போல் தலையாட்டியவளின் தலை பற்றி…. “  பச்சை கல் மூக்குத்தி மட்டும் இல்ல எல்லா கலருலேயும் மூக்குத்தி வாங்கி வெச்சி இருக்கேன். அது யாருக்கு வாங்குனதுன்னு உனக்கு  தெரிஞ்சிக்க வேண்டாமா……?”
அவசரமாக….. “ தெரியனும். தெரியனும்.” என்று  சொல்லியவளிடம்….
“ அப்போ நான் சொன்னது போல ரூமுக்கு வா…..”
“இப்போ அத்த சத்தம் போட்டது கேட்டதுல….? நான் எப்படி வருவதாம்……” அவள் கேட்ட பாவத்தில்…
அவள் அருகில் சென்று…..” உன்ன அப்படியே…..” என்று  சொன்னவன்….என்ன நினைத்தானோ…..
“ ராவுக்கு யாரும் உன்ன தடுக்க மாட்டாங்க…அதுக்கு உண்டானத செஞ்சிட்டேன்.” ரகசியமாக சொல்ல….
அவனினும் ரகசியமான குரலில்……“ என்ன செஞ்சிட்டிங்க……”
“ புது கல்லு மரத்துல இருந்து இறக்குனத. வீட்டுக்கு கொண்டார சொல்லிட்டேன்.”
“ அச்சோ….” வாய் மூடியவளின் கை எடுத்து…
“ இனி அத நான் தான் மூடுவேன்….” என்று சொல்லி விட்டு அவள் வாயில் இருந்த கையை எடுத்து விட்டதும்.
திரும்பவும் தன்னால்….. “ அய்யோ….” என்று சொல்லி வாயின் மீது கை போகும் வேளயில்…
“ என்ன இப்பவே மூடனுமா….நான் ராவுக்கு பாக்கலாமுன்னு பார்த்தா…..” என்று  சொல்லி கண் சிமிட்டியவனின் பேச்சு எல்லாம் இன்று புதியதாய்…..

Advertisement