Advertisement

அத்தியாயம்…..15

விரப்பாண்டி காட்டுப்பகுதியில் ஓடிக் கொண்டு இருப்பதை ஒரு வித பயத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தாள் யசோதா…..

இன்று அவளுக்கு திருமணம். பிடித்த திருமணமா….?அவளுக்கே தெரியவில்லை. பிடிக்காத திருமணமா….அவள் மனது உடனடியாக இல்லை என்றே  பதிலே சொன்னது.

குழந்தையில்  இருந்தே மாமன் வீடு தான் அவள் வீடானது. பூப்பெய்த அன்று வீரப்பாண்டி தான் குடிசை கட்டியது. அப்போது  கூட்டத்தில் இருந்த ஒரு பெருசு….

நிறுத்தி நிதானமாக வீரப்பாண்டி  குச்சு பின்னுவதை பார்த்து…. “ பொண்டாட்டிக்கு இப்பவே ஸ்டாங்கா வூடு கட்டுறப்பல நம்ம வீரா….” பகடி பேச….

அன்று  அவள் மனதில் பதிந்தது வீரா தன் வருங்கால கணவன் என்று….பின் மாமாவின் பேச்சில் அந்த வீட்டு மருமகளாகவே தன்னை உணர ஆராம்பித்தாள்.

வீராவை விரும்பினாளா…..? அதுவும் இன்று  வரை அவளுக்கு தெரியாது.

சரவணனை பிடிக்கும். அது எந்த விதத்தில் அதுவும் தெரியாது தான்,  அவன் தாலியை ஏற்றாள். ஆனால் தாலி கட்டிய பின் சரவணன் தன்னை பார்த்த பார்வை….காதலோ….முன் பின் செத்து இருந்தால் தானே சுடுகாடு தெரிவதற்க்கு …..குழம்பிக் கொண்டு இருக்கும் வேளயில் தான் பெரிய மச்சானின் போன்,

பின் நடந்தது… அதை நினைத்தால் என்ன…..?இப்போது கூட அதன் தாக்கத்தில் இருந்து அவளாள் வெளியே வரமுடியவில்லை. பெரிய மச்சான் வரட்டும் என்று காத்திருக்கும் போது தான்….இவர்கள் ஆட்கள் நான்கு பேர்… சரவணனிடம் ஓடி வந்து…..

“ போயிடலாம்  தம்பி…..” அவரப்படுத்தினார்கள்.

“இல்ல அண்ணா வரேன்னு சொன்னாரு…..”

“அய்யோ தம்பி நிலம ரொம்ப மோசமா இருக்கு…..பத்து பேரு தம்பி…..” சொன்னவரின் முகத்தில் பயத்தின் சாயல்…

“ பத்து பேரு தானா…..?நாம அதுக்கு மேல இருக்கோமே….”

“தம்பி நாம அடியோடு விட்டுடுவோம். இவனுங்க ஆள கொல்லாம விட் மாட்டாங்க….அதுவும் அவங்க நோக்கம்…..” அடுத்து ஏதும்  சொல்லாது மதியை பார்த்தார்.

சரவணா யோசிக்கும் போதே……. “ பெரிய மச்சான் வந்துடட்டும்….” சொன்னவரை பார்த்து யசோதா சொன்னதும்…

ஏதோ ஒன்று சரவணனை …. “ போகலாம்…..” என்று சொல்ல  வைத்தது.

“ இல்ல மச்சான் …பெரிய மச்சான் வந்துட்டடுமே…..” முகம் முழுவதும் பயம் பரவி கிடக்க சொன்னவளை பார்த்து….

“ என்னை  கைய்யாலகதவன்னு முடிவு பண்ணிட்டியா…..?” சரவணனின் அந்த வார்த்தையில் யசோதா அடுத்து ஒன்றும்  பேசாது , தங்களுக்கு ஏற்பாடு செய்த காரில் ஏறி அமர்ந்து விட்டாள்.

யாருக்கோ வந்த விருந்து என்பது போல் ஒன்றும் பேசாது அமைதியாக நின்றுக் கொண்டு இருந்த மதியிடம்…. “ வாங்க மதனி….” அழைத்ததுக்கு….

“ உங்க அண்ணன் வந்துடட்டுமே….” காரின்  அருகில் வந்தவள் ஏறாது இப்படி சொன்னதும்…. இது எப்போ இருந்து என்ற வகையில் ஒரு பார்வை பார்த்த யசோதா பின் மதியை பார்க்கவில்லை.

சரவணன் தான்…. “ இல்ல மதனி நிலமை  சரியில்ல…சீக்கிரம் ஏறுங்க அண்ணா வழியில வருவார்.”

“ வந்துடுவாரா…..?” மதியின் அந்த வந்துடுவாரா….என்ற வார்த்தை அவன் வரக்கூடாது . அதற்க்குள்  தன் தந்தை வந்து விட வேண்டும் என்ற ஆதாங்கமே மேலோங்கி இருந்தது.

அதை சரவணன் கவனித்தானோ இல்லையோ…யசோதா கண்டுக் கொண்டாள்.  மதிக்கு தானே கதவை திறந்து விட்டு…. “ ஏறு….” யசோதாவின் அந்த குரலுக்கு மதி தன்னால் அடி பணிந்தாள்.

அவர்கள் காருக்கு முன்னே இரு மோட்டர் பைக்கும், பின்னே ஒரு காரும் என்று ஒரு மைல் தூரம் கூட கடந்து இருக்க மாட்டார்கள்.

கங்காதரன் ஏற்பாடு செய்த ஆட்கள் எதிர் சாலையில் வருவார்கள் என்று  நினைத்திருக்க…காட்டுக்குள் இருந்து வேகமாக ஒரு வண்டி சரியாக சரவணன் காரின் முன் வந்து நின்றது.

அதில் முன் சென்ற ஒரு மோட்டர் வண்டி தூக்கி தூரம் வீசி ஏரிந்ததில்…. அதிர்ச்சியுடம் சரவணனின் காரின் ஓட்டுனர் காரை நிறுத்தி விட்டார். வண்டிக்கு கீழே மறைவாக வைக்கப்பட்ட வீச்சருவாளை எடுத்த சரவணன்…

யசோதாவிடம் “வண்டிய விட்டு கீழே இறங்காதே….மதனி பார்த்து….” என்று சொல்லி இறங்க நினைத்தவனின் கை பற்றிய யசோதா…

“ பார்த்து மச்சான்…..” சொன்ன யசோதாவை ஆழ்ந்து ஒரு பார்வை பார்த்து விட்டு…. சட்டென்று  வண்டியில் இருந்து கீழே இறங்கவும்….

அவனை தொடர்ந்து  இறங்க பார்த்த மதியின் கை பற்றி….. “ அடங்கி உட்காரு….”  யசோதாவின் குரல் கடினப்பட்டு ஒலித்தது.

யசோதாவின் கை பிடியில் இருந்து தன் கையை விடுவிக்க முயற்ச்சி செய்த வாறே கண்ணாடி வழியாக தன் அப்பாவை பார்த்தவளுக்கு…   எங்கு இருந்து தான் அவ்வளவு தைரியம் வந்ததோ…

யசோதாவின் பிடியில் இருந்து தன் கையை விடுவிக்க முடியாது என்று யசோதாவின் மற்றொரு  கையை கடித்து விட்டாள். வலியில் தன்னால் யசோதாவின் கை பிடி தளர…

காரை  திறந்து  வெளியில் வந்ததும் யசோதாவும்  காரை விட்டு இறங்கி “ வேண்டாம் மதி…..போகாதே அந்த ஆளு உன்ன கொன்னுடுவான்.”  இவர்கள் காரை விட்டு இறங்கியதும் இவர்களை நோக்கி வந்த கங்காதரனை பார்த்த வாறு சொல்ல…

“ என் அப்பா என்ன கொல்வாறா….?” அடுத்து என்ன பேசி இருப்பாளோ…தன் தந்தை தன் அருகில் வந்ததும்…ஓடி போய்…

“ அப்பா….” கதறி அவர் மார்பில் ஒன்டியவளை….நிறைமாத கற்பிணி என்று  கூட பாராது….பிடித்து தள்ளி விட்டவர்…

“ சீ…யாருக்கு யாரு அப்பன்டீ….? என் குடும்பத்த கொல அறுக்க வந்தவளே….” அடுத்து அவர் என்ன பேசி இருப்பாரோ சங்கரன் அவர்கள் அருகில் வந்து…

“ என்ன மாமா பேச்சு வார்த்தை நடத்திட்டு இருக்கிங்க…அந்த அய்யனார் வந்துட்டா…..நம்மால ஒன்னும் பண்ண முடியாது.” என்று  சொல்லி விட்டு சமிஞ்சை காட்டியதும்… அந்த வட மாநிலத்தவர்கள் மதியை சூழ்ந்து கொண்டனர்.

யசோதா மதியின் முன் வந்து நின்றுக் கொண்டு …மதியை  காப்பந்து செய்ய…

சங்கரன் சொன்ன….” இரண்டு பேரையும் போடுங்கடா…..” ஒருவர் தன் வீச்சி அறுவாளை யசோதாவின் மேல் படும் முன் சரவணனின் அறுவாள் அவனின் கையை பதம் பார்த்து விட்டது.

இது வரை சரவணனும்  அவனுடன் இருக்கும் ஆட்களும், கங்காதரன் ஏற்பாடு செய்த ஆட்களை அடிக்க மட்டுமே செய்தனர். அவர்களும் சரவணனின் ஆட்களை பலமாக தாக்கினரே தவிர கொல்லும் எண்ணத்தில் அவர்கள் சண்டை இடவில்லை.

எப்போது  மதனியையும், தன் மனைவியும் கொல்ல சொல்லி விட்டானோ…..இனி  வேறு எதுவும் பார்க்க கூடாது என்று கொல்ல பார்த்த கையை வெட்டி விட்டு அடித்தவனின் முதுகில் ஒரு கோடு போட்டவன் அடுத்தவனை தாக்கவும் ரெடியாகினான்.

அதை  பார்த்த கங்காதரன்….” ஏன்டா என் பொண்ன போட  பத்து நாளு, கறியும் சோறுமா போட்டு தேத்தி கூட்டிட்டு வந்தா ஆடி வாங்கிட்டு இருக்கிங்கலே…..”

ஏற்கனவே கை வெட்டப்பட்டு ரத்தம் ஒழுக வலியில் துடித்துக் கொண்டு இருப்பவனின் முகத்தில்….” தூ…..” என்று  தன் உமிழ் நீரை உமிழ்ந்தவரை மதி நம்ப முடியாது பார்த்திருந்தாள்.

தான் அணைத்ததும்   இத்தனை நாள் தன்னை காணத பாசத்தில் அவரும் அழுவார். பின் தனக்கு தைரியம் அளித்து வீட்டுக்கு அழைத்து செல்வார். அங்கு சென்று இந்த குழந்தையை பற்றிய நம் திட்டத்தை சொல்லலாம், அந்த வீரப்பாண்டியனின்  குடும்பத்தை கதற விடலாம் என்று அவள் திட்டம் வகுக்க….

அவர் தந்தை வகுத்த திட்டத்தை பார்த்ததில் , பேதை அவள் பேதளித்து தான் போய் விட்டாள்.

அதுவும் தன்னை காக்க அந்த ஆட்கள்  வீச வந்த அறுவாளை தன் மீது விழுந்தாலும் பரவாயில்லை என்று  யசோதா தன் முன் நிற்பதை பார்த்து…..

யாரை நம்புவது….? சொந்த அப்பா நிறைமாத கற்பிணி என்று கூட பாராது தள்ளியதோடு, தன்னை  கொல்லவும் ஆட்களை அழைத்து வந்து இருக்கிறார். நினைக்க நினைக்க அவளாள் நம்ப முடியவில்லை.

ஆனால் நம்பி தானே ஆகவேண்டும்.இதோ தன் கண் எதிரில் தன்னை தாக்க வருவோரை எல்லாம் என்  கொழுந்தன் தாக்கிக் கொண்டு இருக்கிறாரே… தன் பிரமையில் இருந்து வெளி வந்தவள் பார்த்த காட்சி நம்பு நம்பு இது தான் உன் தந்தை…

தன் கொழுந்தனை பார்த்தாள். தன்னிடம் யாரையும் அண்ட விடாது தன் மேல் அறுவா பட்டாலும் அதை கண்டு கொள்ளாது  இருப்பவனையும் …

ஒவ்வொரு முறையும் அவ்வளவு பெரிய வீச்சறுவாள் தன்னை தாக்கும் போது எல்லாம் தன் மீது பட்டாலும் பரவாயில்லை என்று தனக்கு பின் தன்னை இழுத்து கொள்ளும் யசோதாவையும் பார்த்தளுக்கு ,குழப்பத்தால் வந்த மயக்கமா……இல்லை இவ்வளவு நேரமும் வெய்யிலால் வந்த மயக்கமா….. மயங்க பார்த்தவளின் தோளை  பற்றிய யசோதா….

“ மதி மதி விழுந்துடாதே….” அவள்  வயிற்றில் மீது கை வைத்து…. “ பத்துரமா நம்ம வூட்ல சேர்த்துடனும். ஷெண்பா குழந்தை போனதே போதும்.”

யசோதா சொல்லவும் நிலமையின் தீவிரம் அவளுக்கு புரிந்தது. நாம் விழுந்து விட்டால்….நம் குழந்தை பதறி தன் வயிற்று மீது கை வைத்து அதை மறைத்தார் போல்  பயத்துடன் யசோதாவை பார்க்க…

“ கவலை படாதே…..நம்ம வூட்டு குழந்தைக்கு ஒன்னும் ஆக விடமாட்டோம்.” வீராவையும், அந்த வீட்டையும் பிடிக்கவில்லை என்றாலும்…அக்குழந்தையை  கலைக்க வேண்டும் என்று மதி நினைத்தது இல்லை.

இது அவள் குழந்தை….இவர்களுக்கு இக்குழந்தையை கொடுக்க கூடாது. இதுவே அவள் எண்ணமாய் இருந்தது. இப்போது இவர்கள் தானே தன் உயிரையும் துச்சமாய் எண்ணி தன்னையும், தன் குழந்தையு காப்பாற்றுவது….

அவள் நினைவில் கடைசியாக யசோதா  சொன்ன ஷெண்பா குழந்தையை விட்டது போல்….ஷெண்பாவுக்கு கல்யாணம் ஆகி விட்டதா….. அவள் நினைவு கலைய ….முகத்தில் தண்ணீர் தெளித்தது போல்…. ரத்தம் தெளிக்க…

யசோதாவின்  “மச்சான்….” என்று கதறி தன்னை விட்டு ஓடும் போது தான் சரவணனின் கையில் அறுவா  வீசப்பட்டதின் விளைவாய் ரத்தம் வழிந்தோட இருப்பவனிடம் விரைந்தவளின் கை பிடித்து தடுத்தது தந்தை  என்று நினைத்து…

“விடு விடு….”  அவன் முகத்தை பார்க்காது கத்தினாள்.

“ என்ன கண்ணு மாமனுக்கும், அப்பனுக்கும், வித்தியாசம் தெரியலையே….?” சங்கரன்….இது வரை எட்டி இருந்து மட்டுமே பார்த்தவள்,  தன் கை பிடித்து…அதுவும் பிடிக்கும் சாக்கில் அவன் தொட்ட அங்கம் கூசி…

“சீ…..” மதியின் சீயில் தன் வலி மறந்து….

“ என் மதனிய விடு…..” கையில் ரத்தம் வழிந்தோடும் நிலையிலும்,  சரவணன் அவர்களை நோக்கி வந்தான்.

“ என்னல உன் அண்ணனோட இந்த குழந்தைய காப்பாந்து செய்ய இந்த துடி துடிக்கிற….. என்ன…என்ன விசயம்…..?” ஒரு விகார சிரிப்போடு சரவணனை பார்த்தவன், மதியின்  வயிற்றையும் பார்த்தான். இந்த பேச்சு அனைத்தையும் கங்காதரனும் கேட்டுக் கொண்டு தான் இருந்தார்.

பெத்த படித்த குடும்பம் ஊருக்குள் பெயர். மதிக்கும் தன் குடும்பத்தை நினைத்து ஏகப்பெருமை உண்டு. அந்த ஊரில் இவர்கள்  குடும்பம் தான் பேச்சில், உடை உடுத்துவதில், நாகரிகமாய் நடந்துக் கொள்வர். இதனால் அவள் தோழி வட்டத்தில் அவளுக்கு நற்பெயர் கூட…

“உனக்கு என்னடியம்மா…..?” இப்படி தான் பேசிக் கொள்வர்.

நாகரிகம் எது….?இதுவா….? சொந்த மகளை இப்படி  பேசுகிறான். அதை பார்த்து ஒன்றும் சொல்லாது ….. “ என்ன பேச்சில…சீக்கிரம் ஜோலி முடியும்.” கங்காதரனின் இந்த பேச்சு அவள் நினைவோட்டத்தை    தடுத்தது மட்டும் அல்லாது….

தன் குழந்தைக்கு ஒன்றும் ஆக  விடக்கூடாது. நல்ல விதமாக இக்குழந்தையின் அப்பாவிடம் ஒப்படைக்க வேண்டும். எங்கு இருந்து தான் ஆவேசம் வந்ததோ…. தன்னை நோக்கி வந்த சரவணனை,  அடியாட்கள் அடிப்பதை பார்த்து தன்னை பிடித்து இருந்தவனிடம் இருந்து தன் கையை உறுவிக் கொண்டு, பாதை விடுத்து காட்டு பகுதி நோக்கி ஓட ஆராம்பித்தாள்.

மதி ஓடியதும்  சங்கரன், கங்காதரனும் ஓடினர். சரவணனையும், சரவணனும், சரவணனின் ஆட்களும் அடியாட்களோடு தாக்கு பிடிக்க கொஞ்ச நேரம் சென்றது.

அதுவும் பாதி அடியாட்கள் மதி சென்ற காட்டு பகுதிக்கு செல்வதை பார்த்து….அடிப்பட்ட கை கொண்டே கூடிய மட்டும்  தன்னை தாக்குபவர்களை தாக்கி விட்டு….

“ யசோ…நீ இங்கயே இரு… அண்ணா இந்த வழியா தான் வருவார்…வந்தா…..” விரலை நீட்டி பாதை காமித்தவன்.. தன்னுடன் இருந்தவர்களுடன் அவனும் மதி சென்ற வழியே சென்றான்.

நிறைமாத கற்பிணியான மதியால் வெகுதூரம் ஓட முடியாது பாதி வழியிலேயே தன் தந்தையிடம்  பிடிப்பட்டாள்.

“ அப்பா வேண்டாம்பா….பாப்பா….” தன் வயிற்றை தடவி காண்பித்து கெஞ்சினாள். யாரை நம்பி தன் குழந்தையை தான் வைத்துக் கொள்ளலாம் என்று  நம்பினாளோ….அவரிடமே குழந்தைக்காக உயிர் பிச்சை கேட்டாள்.

“நான் கூட நீ பிடிக்காம தான் குடும்பம் நடத்துறியோன்னு நினச்சேன்….ஆனா… பார்த்தா…..”  குழந்தை உண்டாகி இருக்கும் போது பெண்களிடம் இயற்கையிலேயே ஒரு பொலிவு காணப்படும்.

வீரப்பாண்டியன் குடும்பத்தின் கவனிப்பால், அப்பொலிவு நம் மதிக்கு கூடுதலாகவே  காணப்பட்டது. அவளின் கூடுதல் அழகை பார்த்து சொன்னான் சங்கரன்.

“ வெட்டி பேச்சு என்ன சீக்கிரம்…..” தந்தையின் வார்த்தையில் தன்னை நோக்கி வந்தவர்களிடம்….

“ வேண்டாம் என்  புருஷனுக்கு மட்டும் இது தெரிஞ்சது.உங்கல ஒருத்தனையும் விட மாட்டாரு…..” விரல் நீட்டி எச்சரித்தாள்.

அதற்க்கு கங்காதரன்….. “ உன் புருஷன்….கூட பிறந்த தங்கச்சி….குழந்தைய மட்டும் இல்லாம கருவையே அறுத்தெறிச்சோம்…. அதுக்கே அவனால ஒன்னும் புடுங்க  முடியல…இதுல..உன்ன…. போடி….” கங்காதரன் பேச்சில்…

“ என்னத்துக்கு…..? எதுக்கு…..?” அவளுக்கு  தலை சுற்றுவது போல் இருந்தது. என்னை சுற்றி என்ன நடக்கிறது…..?

ஷெண்பா குழந்தைய இவங்க ஏன்….மதியின் முகத்தை பார்த்து…. “ என்ன உன் புருஷன் உன் கிட்ட ஒன்னும் சொல்லலையா….? ரூமுக்கு வந்ததும்….” சங்கரனின் பேச்சில்…

அந்த அருவெறுக்க தக்க வார்த்தையை காதில் வாங்காது….. “ என்ன சொல்லலையா…..?” என்று கேட்டாள்.

“ அது தான் உங்க அண்ணனை திருட்டு தனமா கல்யாணம் செஞ்சு குழந்தைய வாங்கினதால, உன் அண்ணன் செத்து போய்…..” அவன் பேச்சில்…

“ அண்ணா…அண்ணா….”

“ என்னல வல வலன்னு பேசிட்டு…” சங்கரன் பேச்சை தடை செய்த கங்காதரன்…

மதியை நோக்கி…..” ஆமா நான் தான் என் வம்சத்த இதே கைய்யால கொன்னேன்…உன்னையும் கொல்ல போறேன்.”

“ என்னடா என்  வாய பார்த்துட்டு நிக்கிறிங்க……ம்…..”

தன்னை நோக்கி வருபவர்களை பயப்பார்வை பார்த்துக் கொண்டே….. “ வேண்டாம்…வேண்டாம்….” அவர்கள் ஒவ்வொரு அடியாய் தன்னை நோக்கி வரும் போது எல்லாம்….

“ வேண்டாம்…..வேண்டாம்….” என்று  மதி தன் காலை பின் நோக்கி செலுத்தியளின் பாதம் முட்புதரில் வைக்க….தட்டு தடுமாறி அப்படியே அந்த  வேலிகாத்தான் முட்கள் மேல், படுத்த வாக்கில் விழுந்தாள்.

Advertisement