Advertisement

அத்தியாயம்…..13

அனைவரையும் பார்த்த  மதியின் பார்வை கடைசியாக தன் கணவனின் முகத்தில் நின்றது. அவன் முகத்தில் தெரிந்த வெற்றியின் பெருமிதத்தில்….. புதியதாய் ஒரு சபதம் எடுத்தால்  அறிவுக்கு அர்த்தம் கொண்ட நம் மதி.

இந்த வாரிசுக்கு தானே இத்தனையும், இக்குழந்தை உங்க வீட்டுக்கு மட்டும் இல்ல, என் வீட்டுக்கும்   தான் வாரிசு. அதனால் என் குழந்தைய எதுவும் செய்ய மாட்டேன். எதற்க்கு இவ்வளவு செஞ்சிக்கலோ…அதை உங்களுக்கு கிடைக்காது செய்வேன்.

மனதில் வன்மம் வைத்து மேலுக்கு சிரித்து வைத்தவள். அவளுக்கு தெரியாமலேயே  அவள் குழந்தையின் உயிரை அந்தரத்தில் ஆடும் சூழ்நிலைக்கு கொண்டு சென்றாள்.

மனதின் திடம் உடலுக்கு இல்லாது போக…..சீழ்பாலின் வாசனையில் திரும்பவும் வாந்தி  எடுக்க…. பொறக்கடை பக்கம் சென்றவள் பின்னால், இப்போது ஓடியது வீரப்பாண்டியனே….

கணவனின் சவரஷணையை  மறுக்காது ஏற்றுக் கொண்டு, தன் கடமையான உணவு பரிமாற ,சமையல் கூடத்துக்கு சென்றவளை தடுத்த யசோதா….

“ நீங்க போய் ஓய்வெடுங்க நான்  சாப்பாடு போடுறேன்.” எப்போதும் ஏதோ எதிரியை பார்ப்பது போல் பார்க்கும் யசோதாவின் பேச்சில் அதிசயத்து போய் அவளை பார்த்த மதியிடம்….

“ நீங்க போய் ஓய்வெடுங்க அக்கா…..” அய்யோ தெளிய வெச்சி அடிங்கப்பா…..திரும்ப திரும்ப எனக்கு மயக்கம் வருதுல…..மனதில் தான் நினைத்தாள்.

அவள் மனதை தெள்ள தெளிவாக படித்த வீரப்பாண்டியனோ…..அவள் தலையில்  நோகாது கொட்டியவன்…. “ வா படுத்துப்ப…..” கை பிடித்து அழைத்து சென்றான்.

அவ்வீட்டில் பகலில் படுக்க கூடாது. வீட்டு தூரம் ஆன நாள் கூட, மதி படுத்து இருந்தால் , “பொம்பளைங்களுக்கு பகலில் என்ன படுக்கை….?” புஷ்பவதி  மதியிடம் சத்தம் போட்டால்…..மதியின் பார்வை தன்னால் தன் கணவனிடம் தான் செல்லும்…. அவன் ஏதாவது சொல்ல மாட்டானா…..?என்று.

அவனோ தாயின் முன் தன் மனைவி முகத்தை கூட பார்க்காதவன்…..அறையில்…. “ இது எல்லா பொண்ணுக்கும் வருவது தானே…இன்னுமா உனக்கு பழகல…..?” இப்படி தான் கேட்டு வைப்பான்.

அவன் பார்த்த பெண்களான அவன் வீட்டு பெண்கள், பகலில் படுத்து பார்த்தது இல்லை. ஒவ்வொரு பெண்களின் உடல்வாகு போல் தான் இது இருக்கும் என்று தெரியாது கேட்டு வைத்ததில்…

இப்போது அவனின் கவனிப்பை ஏற்க கூட முடியாது…. “ பகலில் படுத்தா அத்தைக்கு பிடிக்காது.” இப்போது எல்லாம் வீரப்பாண்டி கண்ணை  நேர்க் கொண்டு பார்த்து தான் அவளின் அனைத்து பேச்சும் இருந்தது.

“ இது மாதிரி சமயத்தில் திட்ட மாட்டாங்க…..” கோபம் இருக்கும் இடத்தில் சூட்சுமம் இருக்காது. அது போல் வெள்ளந்தியாக தான் பேசினான் வீரப்பாண்டியன்.

“ இது எல்லாம் பெண்ணுக்கும் இருப்பது தானே…..?” முன் அவன் சொன்ன வார்த்தையை திரும்ப அவனுக்கே படித்தாள் நம் மதி.

“ இல்ல நீ ரொம்ப ஓஞ்சி போய்  இருக்க…செத்த நேரம் படு. நான் சாயங்காலம் டாக்டர் கிட்ட முன் பதிவு இருக்கான்னு கேட்குறேன்….” தன் மனைவியை படுக்க வைத்த பின்னே மருத்துவரை தன் கை பேசியில் அழைத்தான்.

தன் தங்கையை காண்பித்த மருத்துவர் இல்லாது, வேறு ஒரு பெண் மருத்துவரிடம் தான் தன் மனைவியை அழைத்து சென்றான் வீரப்பாண்டி….

முன் நினைவுகளின் தாக்கத்தில் தன் மனைவியின் மனதை காயப்படுத்தி  விடுவோமோ என்ற பயத்தில் தான் அந்த மருத்துவரை தவிர்த்தான்.

யாரோ ஒருவரின் மகளை கஷ்டப்படுத்த தெரிந்த வீரப்பாண்டிக்கு ….தன் குழந்தையின் தாயை சிறு துன்பத்தை கூட அவளுக்கு கொடுக்க அவன் விரும்பவில்லை. அதற்க்கு தான் இந்த முன்ஏற்பாடு….

மதியை பரிசோதனை செய்த மருத்துவர்…. அது குழந்தை தான் என்று உறுதிபடுத்தியதோடு….. “ ரொம்ப பலவீனமா  இருக்காங்க…..கொஞ்சம் சத்து மாத்திரை எழுதி தர்றேன்….” என்றதோடு மூன்று மாசத்துக்கு தாம்பத்தியம் வேண்டாம் என்றும் சொல்லி விட்டார்.

அப்பேச்சுக்கு மதி தன் கணவனை தான் திரும்பி பார்த்தாள். அவனோ எதோ கடவுள் அருட்வாக்கு  சொல்வதை பயப்பக்தியுடன் கேட்பது போல் மருத்துவரின் பேச்சை, இவளின் பார்வை பாக்காது கவனத்தோடு  கேட்டுக் கொண்டு இருந்தான்.

“ பாக்கலாம்   இவன் என்ன செய்யிறான் என்று…..?” மதி கிக அலட்சியமாக நினைத்தாள்.

இந்த மூன்று மாத தாம்பத்தியத்தில்  வீட்டு விளக்கு தவிர்த்து, ஒரு நாள் கூட அவளை அணைக்காது அவன் இருந்தது இல்லை . மருத்துவரின் பேச்சை காற்றில் பறக்க விடுவான் என்று மதி நினைத்திருக்க….

அவனோ தன் உலக்கை போன்ற கை அவள் வயிற்று மீது பட்டால் கூட,  உள் இருக்கும் குழந்தைக்கு ஏதாவது ஆகி விடுமோ என்ற பயத்தில்…. அவள் கழுத்து பகுதியில் அவன் கை போட்டு அவளை மூச்சு விடாது தன் அன்பு என்னும் சிறகில் அடைக்காப்பதாய் நினைத்து அவளை காத்தான். மொத்தத்தில்  வீடே அவளை கொண்டாடியது எனலாம்.

ஆனால் இவை அனைத்தும் ஒரு வித எரிச்சலிலேயே அவள் ஏற்றுக் கொண்டாள். கோசலையிடன் பேசினாலும் திருமணம் ஆனபுதியதில் பேசியது போல் உள்ளன்போடு பேசவில்லை.

இவங்களும் அன்று…” என் அப்பூக்கு என்ன….?” என்னவோ அவனுக்கு மனைவியா ஆவது கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்ற ரீதியில் தானே பேசின்பாங்க….. மதிக்கு அந்த கோபம் உள்ளுக்குள் அறித்துக் கொண்டே தான் இருந்தது.

அதனால் வீட்டில் இருப்பவர்களை அனைவரையும் பகைத்துக் கொள்ள கூடாதே என்று அவரிடம் சாதரணம் போல் பேசிய மதியின்  எண்ணம் முழுவதும் அந்த வீட்டு பெண்ணான ஷெண்பா மீதே தான் இருக்கும்.

இவளிடம் ஷெண்பா அதிகம் பேச மாட்டாள். ஆனால் அவளின் பார்வை ஏதோ வகையில் மதியை தொந்தரவு செய்தது  எனலாம்.

தொந்தரவு என்றால்….. வருத்தம் தரும் வகையில் இல்லை. ஷெண்பாவின் கண்ணில் அப்பட்டமான பாசத்தை பார்க்கிறாள்.

அப்பார்வையில் கொஞ்சம் கூட பொய் இல்லை. அதை திட்டவட்டமாக அவளாள் சொல்ல முடியும். இப்போது அவள் பார்வையில் கொஞ்சம் ஏக்கமும் சேர்ந்து தெரிகிறதோ….என்ற வகையில் இருந்தது.

ஒரு நாள் அவள் பார்வை தன் உடம்பில் சென்ற  பகுதியை பார்த்து தன்னால் கை வயிற்று மீது படிந்தது.

ஏன் இந்த பார்வை….?இதுவே மதியின் எண்ணமாய் இருந்தது.  இவளுக்கும் திருமணம் ஆனால் குழந்தை பிறக்கதானே போகிறது….பின் என்ன…..?

ஷெண்பா தன் அண்ணியாக  ஆனாது…பின் நடந்த நிகழ்வு எதுவும் மதிக்கு தெரியாது. அவளை  ஒரு வீட்டு பறவையாகவே வளர்த்து விட்டனர்.

அவளும் அதை தான்டி செல்ல விருப்பம் கொண்டது இல்லை. திருமணத்துக்கு முன் அவளின் உலகமே வேறு….அதில் ஏகப்பட்ட கற்பனைகள்…

அவள் பார்த்த  சினிமா….படித்த கதைகள் அனைத்தும்  காதல் ததும்பும் கதைகள்.

அதில் வரும் நாயகன் போல்  ஆறடி உயரத்தில் செக்க சிவந்த நிறத்தில்…. மென்மையோடு தன் கை பற்ற தன் நாயகன் தன்னை தேடி வருவான்.  தன் அழகை…தன்னை போற்றி ஒரு பொக்கிஷம் போல் தன்னை வைத்திருப்பான். இது போல் ஏகப்பட்ட கற்பனைகள்.

அதற்க்கு  எதிர் பதமாய் தன் வாழ்க்கை அமைந்ததில் திகைத்து தான் போனாள் அப்பாவை…..

அதனால் ஊரில் நடந்தது எதுவும் தெரியாது. மதியை பெயரில் மட்டுமே வைத்திருந்தவளுக்கு ஷெண்பாவின் ஏக்கப்பார்வை புரியாது தான் போனது.

அதுவும் மதி கருவுற்றதில் இருந்து,  எப்போதும் ஏதோ ஒரு நினைவில் மூலையில் முடங்கி இருந்த ஷெண்பா…. மதிக்கு வேலைக் கொடுக்காது யசோதாவுக்கு உதவியாக கூட மாட வேலை செய்வதோடு….. சத்துள்ள ஆகாரமாய் மருத்துவர் சொன்ன உணவை  மதிக்கு சமைத்து கொடுத்தாள்.

ஷெண்பா மதியிடம் அப்படி ஒன்னும் சகஜமாய் பேசியது கிடையாது. ஆனால் அந்த அன்பு பார்வை….எதோ சொல்வது போல் இருப்பதால்….அவளின் மனது புண்படக்கூடாது என்றாவது பிடிக்கவில்லை என்றாலும் அவள் சமைத்ததை சாப்பிட்டு விடுவாள். உறவு தெரியாது அவர்களுக்குள் ஏதோ ஒரு  பாசப்பிணைப்பு ஏற்பட்டு விட்டது என்று கூட சொல்லலாம்.

இதோ  மதிக்கு ஆறு முடிந்து எழு மாதம் அடி எடுத்து வைத்த மாதத்தில் சீமந்தம் செய்ய வேண்டும். ஆனால் யார்…..?

இத்தனை மாதம் தன்னை அனுசரித்து நடந்துக் கொண்ட தைரியத்தில் மதி….. “ எங்க வீட்ல தானே செய்யனும். நீங்க சொன்னா….”  புஷ்பவதியின் பார்வையில்…

“ நேர்ல வேணா….போன்ல சென்னா கூட போதும் அவங்க வந்துடுவாங்க……”

“ வந்துடுவானுங்க….வந்துடுவானுங்க……” மிக திமிராய் திருமணம் ஆன புதியதில் எப்படி பேசுவானோ…..அந்த தோரணையில் சொன்னான் வீரப்பாண்டி….

அவன் பேச்சில் மதி முதலில் இருந்தா….என்று தான் தோன்றியது. அப்போதைக்கு பிரச்சனையை தவிர்க்க …..” மதினி ஒன்பதாம் மாதம் செய்யலாமே…..” கோசலையின் பேச்சுக்கு அனைவரும் சம்மதித்தனர்.

புஷ்பவதி  “ இந்த மாசம் நல்ல நாளா பாரு…..” வீரப்பான்டியனிடம் சொன்னதும்….

“ என்ன ஆத்தா இப்போ தானே அத்த சொன்னதுக்கு ஒத்துக்கினிங்க…..” மகன் கேள்விக்கு….

“ வீட்ல  விசேஷம் வைக்கனுமுன்னா….. பெரியவனே அது உன்னதா மட்டும் தான் இருக்கனுமா……?” கேள்வி கேட்ட புஷ்பவதியின் பார்வை  தன் இளைய மகனையும், யசோதாவையும் தொட்டு மீண்டது.

தாயின் பார்வையை புரிந்துக் கொண்ட வீரப்பாண்டி….. “ அவங்க கிட்ட  சம்மதம் கேட்டிங்கலா…..?”

“ என்னவோ இவன் சம்மதம் கேட்டு தாலி கட்டினது போல கேட்பதை பாரேன்…..” இப்படி நினைத்தது நம் மதியே…..

“ இவ இந்த வூட்டு மருமக ஆவனும். இது அய்யன் வாக்கு….எனக்கு ரெண்டு  புள்ளங்க தான்….உனக்கு கண்ணாலம் ஆயிடுச்சி…இப்போ இருக்குறது அவன் தான். முடிவான விஷயத்துக்கு சம்மதம் என்ன சம்மதம்…..”

“அது தானே…..” இதுவும் நம் மதியே தான் நினைத்தாள்.

இந்த பேச்சு  வார்த்தை அனைத்துக் பொத்தாம் பொதுவாய் அனைவரும் இருக்க கூடத்தில் தான் நடந்தது.

இன்னும் மதி  வேறு எதுவும் நினைக்காது சரவணன் அவசரமாய்….. “ எனக்கு சம்மதம் தான் ஆத்தா…..” சொல்லி விட்டு யசோதாவை பார்த்தான்.

யசோதாவும்…. “ எனக்கும் சம்மதம் தான் அத்த….” சொன்னதோடு அவள் அடுத்த வேலை பார்க்க  சென்று விட்டாள்.

இத்திருமணத்தால் இவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக இருப்பார்களா….?என்ற சந்தேகத்திலேயே ஐய்யரை பார்த்து நல்ல நாள் குறித்ததோடு திருமண வேலைகளையும் ஆராம்பித்து விட்டான்.

“ ஆத்தா சொன்னது போல்……இது தான் என்றான பின் ஆராய்ச்சி எதற்க்கு…..” கடவுள் மேல் பாரத்தை போட்டு ஆராம்பித்த திருமணம் எந்த இடையூறும் இல்லாது சுமுகமாகவே முடிந்தது.

வெளிவேலைக்கு என்று வேலையாட்கள் நிறைய பேர் இருந்ததால்…..வீட்டில் உள்ள பெண்களை…குறிப்பாக மதியை வேலைவாங்காது  அனைத்து திருமண வேலைகளையும் வீரப்பாண்டி கச்சிதமாக முடித்தான்.

எப்போதும் போல் அவர்கள் குலதெய்வத்தின் சன்னதியில் திருமணத்தை முடித்து வீட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்ததால்…..வீரப்பாண்டி அனைவருக்கும் முன் வீட்டுக்கு வந்து விருந்துக்கு  உண்டானது அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டு இருக்கும் வேளயில்…

அரக்க பறக்க ஓடி வந்த ஒருவன் வீரப்பாண்டியின்  காதில் ஏதோ கடிக்க….அவனோ பல்லை கடித்துக் கொண்டே…..

கல்யாண மாப்பிள்லையான தன் தம்பியை தொலைபேசி மூலம் அழைத்து….. “ உன் கூடவே மதனியே அழச்சிட்டு வா…..”

வீரப்பாண்டியன் பெண்ணுக்கும், மாப்பிள்ளைக்கும்,  என்று தனியாக அலங்காரம் செய்த காரை கோயில் முன் நிறுத்தி விட்டு தன் ஆத்தாவிடம்…..

“ பொண்ணும் மாப்பிளையும் இதில் வரட்டும்….” பிடித்ததோ…இல்லையோ…. இருவருக்கும் திருமணம் முடிந்து விட்டது.

இனி பிடிக்கும் படி அவர்களுக்கு தனிமை கொடுக்க வேண்டும்….என்று  வீரப்பாண்டி நினைத்ததின் விளைவு தான் இந்த தனி கார். அது சரவணனுக்கும் தெரிந்தே இருந்தது.

இப்போது திடிர் என்று அண்ணன் சொன்னதும்…..தன் அண்ணன் ஏதும் காரணம் இல்லாது  சொல்ல மாட்டார் என்று எதற்க்கு என்று கேட்காது….

“ சரிண்ணா…..” அவனின் பதிலில்….பக்கத்தில் நின்றுக் கொண்டு இருந்த யசோதா….

“ என்ன மச்சான்…..” என்ற கேள்விக்கு….

“ அண்ணா மதனிய நம்மோட அழச்சிட்டு வரச் சொன்னாரு…..” என்றது தான்…

யாசோதாவின் பார்வை சட்டென்று நாளா புறமும் சுழன்று மதியின் மீது நிலைத்து நின்றது.

அங்கு மதியோ கொளுத்தும் வெய்யிலில் தன் எட்டா மாதம்  வயிற்றின் மீது கை வைத்து மிக சோர்வாக நின்றுக் கொண்டு இருப்பதை பார்த்து…

“ மச்சான் உங்க மதனிய இங்கு கூப்பிடுங்க….”

நடுக்காட்டில் இருக்கும் அவர்கள் குலதெய்வ கோயிலில் எந்த வித வசதியும் இல்லாது போக கொஞ்சம் இடம் மட்டும் தான் நிழலாய் இருந்தது.

அதில் பெரியவர்கள், குழந்தைகள், அமர்ந்துக் கொள்ள…எங்கு இடம் இல்லாத நம் மதி தயங்க தயங்கி தான் சரவணன் யசோதாவின் அருகில்  போய் நின்றது.

விருந்தை கவனிக்க வீட்டுக்கு சீக்கிரம் புறப்பட்ட நம் வீரப்பாண்டியன்….அவர்களுக்கு தனிமை கொடுக்காது இவ என்ன…..

“ அப்படி நில்லு…..” அவன் உடல் மொழியுலும்,  அவன் சொன்ன விதத்திலும்…..கட கட என்று அந்த இடத்தில் இருந்து அகன்று இதோ இப்படி நிற்கிறாள்.

சரவணனுக்கு அண்ணன் எதற்க்கு சொல்கிறார் என்று  புரிந்ததால் எதுவும் மறுத்து சொல்லவில்லை. சொன்னால்  எனக்கு இத்திருமணத்தில் விருப்பம் இல்லையோ என்று நினைத்து குழப்பிக் கொள்வார் என்று ஏதுவும் பேசாது இருந்தவன்…

அப்போது தான் தாலி கட்டிய தன் மனைவி ஏதாவது சொல்வாள் என்று  பார்க்க…அவளோ யாருக்கு வந்த விருந்தோ என்று அவர்கள் பக்கம் திரும்பியும் பார்க்கவில்லை.

இப்போது கூப்பிட சொல்லவும்….. மதி அருகில் சென்ற சரவணா…. “ மதனி அங்கன வாங்க……”  என்று அழைக்க….

முந்தியில் வியற்வையை துடைத்துக் கொண்டே….. “ பரவாயில்ல…..இப்போ  கிளம்ப தானே போறோம்.” அங்கு அமர்ந்து இருந்தவர்களை கவலையுடன் பார்த்தாள்.

அவளின் கவலைக்கு காரணம் அங்கு கூடி பேசிக் கொண்டு இருந்தவர்கள்,  இப்போது கிளம்புவது போல் இல்லை.

இந்த பட்டு புடவையில் வியர்வை துடைத்தாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை. மேலும் அந்த ஜரிகை முகத்தில் பட்டு இன்னும் எரிச்சலை தான் கிளப்பியது.

மதியின் எண்ணம் புரிந்தவனாய் “ அவங்க இப்போதைக்கு கிளம்ப மாட்டாங்க…..அதுவும் இல்லாம அண்ணன் உங்கல எங்க கூட அழச்சிட்டு வரச் சொன்னாரு…..” என்றதும்….

அப்போதும் தயக்கத்துரன் யசோதாவை பார்த்தாள்.

“ அவளும் தான் சொன்னா….” என்றதும் தான் மதி  சரவணனுடன் யசோதா அருகில் சென்றாள்.

 

Advertisement