Advertisement

அத்தியாயம்…..12

வீரப்பாண்டியனுக்கு  அய்யோ என்றானது. இவள் என்ன புரிந்து செய்கிறாளா…..? புரியாது செய்கிறாளா….?அவள்  முகபாவனையில் புரியவில்லை என்று தான் அவனுக்கு தெரிந்தது.

அது புஷ்பவதிக்கு தெரிய வேண்டுமே….. “ முத ராத்திரி முடிஞ்சு வந்தவ தலைக்கு தண்ணி ஊத்துனும் என்று கூட தெரியாதா…..? இத என்ன நம்ப சொல்றியா……?” கிராமத்து பெண்களுக்கு வீட்டில் நடக்கும் அனைத்து விசேஷங்களும் ஓராளவுக்கு தெரியும்.

அதனால் தான் சரவணாவும், யசோதாவும் புஷ்பவதி என்ன கேட்க  தங்களை அனுப்புகிறார் என்று தெரிந்து நாசுக்காக அகன்று விட்டனர்.

நம் மதி தான் கிராமத்து பெண்ணுக்கும், நகரத்து பெண்ணுக்கும் சேர்த்தி இல்லாது இருக்கிறவளாச்சே…..அதனால் இதை பற்றி தெரியாது இருந்தாள்.

ஆகாத கணவன் என்றாலும், தங்களின் அந்தரங்கம் இப்படி பொதுவில் விவாதிக்கப்படுவதில் அவளுக்கு துளியும் விருப்பம் இல்லை. அதனால் தன்னால் முகத்தை அருவெறுப்பில் சுழித்தாள்.

அதற்க்கும்….. “ என்னடி கண்ணாலம் கட்டிக்கிட்டா அடுத்து முதராத்திரி தானே….அது கூட தெரியாம தான்  உன் ஆத்தா உன்ன வளர்த்தாளா…..?”

அது என்ன எதற்க்கு எடுத்தாலும் தன் குடும்பத்தை இழுப்பது. அதுவும் இவர்கள் செய்த செயலுக்கு இவர்களை போலிஸில் பிடிச்சு  கொடுத்து இருக்கனும். இருக்கட்டும் அதற்க்கும் ஏதாவது வழி செய்யறேன். என்று நினைத்தவளுக்கு தன் குடும்பத்தை இனி இழுக்காதிங்க என்று சொல்லாமல் இருக்க முடியவில்லை.

“ எதுன்னாலும் என்ன பத்தி மட்டும் பேசுங்க. என் வீட்ட பத்தி பேசாதிங்க……” எந்த ஒரு பெண்ணுக்கும் தன் தாய் வீட்டை பற்றி தவறாய் பேசினால் பிடிக்காது. அந்த எண்ண போக்கில் தான் மதியின் பேச்சு இருந்தது.

இவ்வளவு நேரமும் அம்மாவாக இருந்தாலும், என்ன இது அவ தான் தெரியாம தலைக்கு ஊத்திக்கிலேன்னா…அதை தனியா கூப்பிட்டு நாசுக்காம சொல்லாம இப்படி கேட்குறாங்கலே….வீரப்பாண்டிக்கும்  சங்கடமாய் தான் இருந்தது.

ஆனால் அது  மதி பேசிய என் குடும்பம் என்பதில்…… “ உன் குடும்பம்…..அதை பத்தி என் ஆத்தா என்ன இந்த ஊரே பேசும்.” அவன் உண்மையை தான் சொன்னான்.

ஆனால் தன் குடும்பத்தை பற்றிய உண்மை தெரியாதவளிடம் சொன்னால் அவளுக்கு கோபம் வரத்தானே செய்யும்.

“ தூக்கிட்டு வந்து கட்டுன உங்க குடும்பத்தோடு ,எங்க குடும்பத்தை  பத்தி ஒன்னும் பேச மாட்டாங்க….” இரவு நடந்த சங்கம்மத்தால் மனதில் தன்னால் எழுந்த கணவன் என்ற உணர்வா….தன் கணவனை நேர்க் கொண்டு பார்த்து தான் சொன்னாள்.

இந்த தைரியம்  எப்படி வந்தது…..?வீரப்பாண்டி மனதில் இது தான் ஓடியது. யோசனையிடன் அவளை பார்த்தவனுக்கு என்ன  தோன்றியதோ…..முகத்தில் புன்னகை வழிய அவள் காதோரம்….. “இரவு நீ நடந்துக்கிட்டதை பார்த்தா உனக்கு இது பிடிக்காத கல்யாணம்  மாதிரி தெரியலையே…..” அதற்க்கு அவளாள் பல்லை மட்டும் தான் கடிக்க முடிந்தது.

அனைவரின்  முன்நிலையில்…..ஆனால் இதை பார்த்த வீரப்பாண்டியனின் அம்மாவுக்கும், அத்தைக்கும், மனது கொஞ்சம் குளிர்ந்து தான் போனது.

ஆனாலும் புஷ்பவதி…… “ சரி சரி போய் தலைக்கு தண்ணிய ஊத்திட்டு விளக்கு ஏத்து……” இந்த  வார்த்தையின் மூலம் வீரப்பாண்டிக்கும், கோசலைக்கும் ,அவளை முழுதாய் இந்த வீட்டு மருமகளாய் ஏற்றுக் கொண்டது  தெரிந்தது.

தெரிய வேண்டிய மதிக்கோ…. கடவுளே….கொஞ்சம் காபி குடிச்சா நல்லா இருக்கும் போலவே….இரவு நேரம் கழித்து உறங்கியதாலோ….புது உறவை உடல் ஏற்றதாலோ…..மிக  சோர்ந்து இருந்தாள்.

“ காபி குடிச்சி போய் குளி….” இது சொன்னது வீரப்பாண்டி….

ஏதோ சொல்ல வந்த புஷ்பவதியிடம்….. “ கொஞ்சம் விட்டா அவள் மயங்கி விழுந்துடுவா…..” அதற்க்கும் புஷ்பதி ஏதோ சொன்னார் தான், ஆனால் அதை கேட்க தான் வீரப்பாண்டி அங்கு இல்லை.

அதோ இதோ என்று திருமணம் முடிந்து மூன்று மாதம் கடந்து விட்டது. இந்த மூன்று மாதமும் அந்த குடும்பத்தோடு ஒட்டவில்லை என்றாலும், வெறுப்பை காட்டாது  சாதரணமாய் நாட்களை கடத்தினாள். அவள் திருமணத்தால் அவளுக்கு கிடைத்த பயன் அசைவ ஓட்டல் வைத்தால் லாபம் பிச்சிக்கிட்டு போகும். அந்த அளவுக்கு அனைத்தும் நன்றாக செய்தாள்.

இதை புஷ்பதியே எதிர்பார்க்கவில்லை அந்த அளவுக்கு ருசியாக இருந்தது.  சமையல் வசம் மதியிடம் தான். யசோதா அதை ஒட்டு மொத்த குத்தகையாக மதியிடம் ஒப்படைத்து விட்டாள். பணக்கணக்கு யசோதாவிடம் தான் இருக்கிறது.

ஆனால் அதை மதி  கண்டு கொள்வதாய் இல்லை. இந்த குடுத்தில் காலம் முழுவதும் இருக்க நினைத்தால் தானே, அந்த உரிமை உணர்வு எல்லாம் ஏற்படும்.

ஆனால் அந்த குடும்பத்தோடு  ஒட்ட வைக்க…வீரப்பாண்டி குடும்பம் ஆவளோடு எதிர் பார்த்த இரு இனத்தவரின் ரத்தம் மதியின் வயிற்றில் உதித்தது .

எப்போதும் போல்…..மிளகாய் கிள்ளி போட்டு சாம்பாரை வைத்து விட்டு அதுக்கு தோதாய்…உப்பு கண்டத்தை வெண்ணீரில் ஊற்றி   அதை இளகி விட்டு வறுத்தவள். இவர்களுக்கு இது மட்டும் போதாதே என்று உலர்ந்த நெத்திலியும் வறுத்து எடுக்கும் போது…. குமட்டிக் கொண்டு  வந்தது.

என்ன இது இன்னுமா எனக்கு இது பழகல…..இல்லையே முதல் ஒரு  மாதம் தானே இந்த குமட்டல் எல்லாம் இருந்தது. இப்போது எல்லாம் நினைக்கும்  போதே அடக்க முடியாது வாந்தி வரும் போல் இருக்கவே…

அந்த நிலையிலும் அடுப்பை அணைத்து விட்டு புழக்கடை பக்கம் ஓடினாள். காய் கறிபறிப்பவர்களுக்கு கூலி கொடுத்துக் கொண்டு இருந்த யசோதா, மதி வாந்தி எடுப்பதை பார்த்து ஓடி வந்து அவள் தலை பிடித்துக் கொண்டாள். அப்போதைக்கு அந்த தலை பற்றல் கொஞ்சம் இதமாகவே இருந்தது.

வயிற்றில் இருப்பது மொத்தமும் வந்ததும், இனி வராது என்று அருகில் இருந்த தண்ணீர் கொண்டு வாய் கொப்பளித்து விட்டு…..

யசோதா தலைப்பிடித்து விட்டதுக்கு….. “தேங்கஸ்….” என்ற ஒற்றை சொல்லோடு அடப்பாங்கரை வேலை பார்க்க மதி  உள்ளே சென்றாள்.

இத்தனை மாதம் கடந்தும் அவர்களுக்கு இடையே,  இன்னும் சுமுகமான பேச்சு வார்த்தை கிடையாது. சமைத்தவற்றை சாப்பிடும் அறைக்கு எடுத்துக் கொண்டு செல்லும் வேளயில்…..

அவளிடம் அந்த பாத்திரத்தை பிடிங்கி ஓரத்தில் வைத்த புஷ்பவதி அவள் கை பிடித்து கூடத்துக்கு கூட்டி செல்ல…

இத்தனை மாதம் கடந்தும்,  மதிக்கு வீரப்பாண்டியனோடு  புஷ்பவதியிடம் அதிகம் பயம் . வீரப்பாண்டியனின் இரவின் மென்மையாலோ என்னவோ இப்போது எல்லாம் அவனின் முகத்தை பார்த்து பேசுவது….சாப்பாடு பறிமாறுவது என்று அன்பு மனைவியாக இல்லை என்றாலும், கடமை தவறாத மனைவியாக நடந்துக் கொண்டாள்.

புஷ்பவதியோ மதியை மருமகளாய் ஏற்றுக் கொண்டாலும்….வீட்டோடு இருக்கும் மகளை பார்த்து அவ்வப்போது தேள் கொடுக்கு போல்  வார்த்தையால் கொட்டுவார். அதனால் புஷ்பவதியிடம் மட்டும் பயம் குறையவில்லை.

இப்போது  நான் என்ன தப்பு செய்தேன் என்று பயத்தோடு தான் புஷ்பவதியுடன் சென்றாள். ஆனால் அவள் பயத்துக்கு  முற்றிலும் எதிர் பதமாய் கூடத்து இருக்கையில் அவளை அமர வைத்து…..

அப்போது தான் அங்கு வந்த சரவணனிடம்….. “ அத கொஞ்சம் சுழல விடு.”  மின்விசிறியைய் காட்டி சொன்னவர்.

வந்ததில் இருந்து கேட்டே இராத குரலில்….. “ எப்போ தலைக்கு ஊத்துன மதி……” புஷ்பவதியின் வாயில் இருந்து இப்போது தான் அவள் பெயரை கேட்கிறாள். கேட்டதை நம்ப முடியாது அவள் அதிசயத்துடன் அவரை பார்த்தாள்.

திரும்பவும் இதமாகவே….. “ எப்போம்மா தலைக்கு ஊத்துன….?” இன்னும் இவர்கள் பேசினா தனக்கு மயக்கம் வருவது நிச்சயம். ஏற்கனவே  மயக்கம் வரும் போல தான் இருக்கு என்று நினைத்து…..

“ முந்தா நேத்து தான் ஊத்தினேன். கோசலையம்மா கூட சாம்பிராணி போட்டு விட்டாங்கலே……”  புஷ்பவதியின் கேள்விக்கு, அந்த மடச்சாம்பிராணி பதிலாய் இப்படி சொன்னாள்.

அதை கேட்டு வந்த கோபத்தை கஷ்டப்பட்டு அடக்கிய புஷ்பவதி …..பொறுமையாகவே… “ நான் நீ எப்போ  வீட்டுக்கு தூரம் ஆனேன்னு கேட்குறேன்……?”

அப்போது தான் அவர்  எதை நினைத்து கேட்கிறார் என்று  புரிந்தவளாய்…..ஏதோ கணக்கு செய்தவளின் கை தன்னால்  அவள் வயிற்று மீது படிந்தது.

மதி பதில் சொல்ல வில்லை என்றாலும், அவளையே ஆர்வமுடம் பார்த்திருந்த புஷ்பவதி அவளின் செயலில் முகம் மலர…..” என் ராசாத்தி…..” மதியின் முகத்தை நெட்டி முறித்து விட்டு….

“ கோசலை…. கோசலை…..” அவருக்கு பதில் கொடுக்காது….அவர்கள் வீட்டில் அன்று கன்று போட்டதால் சீழ் பால் இருந்தது.

அதில் சர்க்கரை போட்டு கைய்யோடு எடுத்து வந்தவர்….. “ மதினி இந்தாங்க….நீங்களே உங்க மருமவளுக்கு கொடுங்க…..” என்று சொல்லி புஷ்பவதியிடம் கொடுத்தார்.

அவரும் அதை வாங்கி அவளிடம் கொடுக்காது….. “ வாய திற…..” என்று சொல்லி ஊட்டி விட்டார்.

புஷ்பவதியின் விசாரணையின் ஆராம்பத்திலேயே வீரப்பாண்டி வீட்டுக்குள் வந்து விட்டான். அம்மாவும், மனைவியும் ஒன்றாக அமர்ந்து இருப்பதை பார்த்து அங்கேயே நின்று விட்டான்.

அப்போது தான் தன் ஆத்தாவின் கேள்வி காதில் விழுந்தது. அவனும் ஆவளுடம் தன் மனைவியையே பார்த்திருக்க….அவள் தன் வயிற்று மீது கை வைத்ததும், ஓடி சென்று தன் மனைவியை சுத்த வேண்டும் என்று வேகம் எழுந்தாலும்……அமைதியாக…

நான் தந்தையாகி விட்டேன். அந்த உணர்வை கண் மூடி முழுமையாக  அனுபவித்தான். அப்போது அவன் மனதில் சபதம்….எதற்க்கு இந்த திருமணம் எதுவும் அவன் நியாபகத்தில் இல்லை. தான் ஒரு தந்தை….அதை அளித்த தன் மனைவியை காதலோடு பார்த்தான்.

மதியும் புஷ்பவதியின் விசாரணையில் …தான் தாயாகி விட்டோம் என்று அவளும் மகிழ்ந்து தான் தன் வயிற்றில் கை வைத்தாள். பின்……புஷ்பவதி  சீழ் பால் ஊட்டும் போது நிமிர்ந்து வாங்கியவள்….எதிரில் முகம் முழுவதும் மகிழ்ச்சியில் திளைக்க… பூரிப்போடு எதையோ சாதித்து விட்ட நிலையில் கண் மூடி நின்று இருந்த கணவனை கண்டதும்,

இனிய சுவைக் கொண்ட அந்த சீழ்பாலும், அவளுக்கு கொஞ்சம் கசக்க தான் செய்தது. அப்போது தான்  புஷ்பவதி கையில் உள்ள சீழ் பாலை அனைவரும் கொடுத்து மகிழ்ந்து இருப்பதை பார்த்து…

“ ஓ இவங்க நினச்சதை சாதிச்சிட்டாங்கலே…..எதுக்கு என்னை கட்டிக்கிட்டு வந்தாங்கலோ….அது நிறைவேறுடுச்சிலே…..”

பாவம் அப்போது புஷ்பவதிக்கும் இந்த வீட்டு வாரிசு. மகள் மூலம் அதற்க்கு வழி இல்லாது போய் விட்டது. மகன் மூலம் அந்த பெருமை. அதுவும் வீட்டின் முதல் வாரிசு…..அந்த மகிழ்ச்சியில் தன்னால் அனைவருக்கும் கொடுத்து விட்டு தன் கணவனின் புகைப்படத்து முன் நின்று….

“ நீங்க தாங்க உங்க மகனுக்கு மகனா பொறக்கனும்…..”  என்ற வேண்டுதலையும் வைத்தார்.

 

Advertisement