Advertisement

அத்தியாயம்….16

தன் பழைய வண்டியை விடுதியில்   விட்ட பாலாஜி  அதை ஸ்டாண்ட் போடும் போது…. “ புதுசு வாங்கனும். ஜமுனாவுக்கு என்ன வண்டி பிடிக்கும் என்று கேட்கனும்.” என்று  நினைத்தவன்..

“ அவளையே அழச்சிட்டு  போய் அவளுக்கு பிடிச்சா  மாதிரியே  வாங்கிடலாம் . கல்யாணதுக்கு முன் தான் அவளை வண்டியில சுத்தும் பாக்கியம் கிட்டல….கல்யாணத்துக்கு அப்புறமாவது சுத்தனும். அதுக்கு முதல்ல  புது வண்டி வாங்கனும்.” வண்டியின் சீட்டை தட்டிக் கொண்டே பாலாஜி மனதில் எண்ணமிட….

“ என்னடா வண்டிய  விட்டுட்டு வராம…வண்டி கிட்ட  என்ன பேச்சு வார்த்தை நடத்திட்டு இருக்காரு    இந்த முதலாளி…” என்று  நினைத்துக் கொண்டே  பாலாஜி முகத்தை பார்த்த  முருகேசன்…

“ம்..முத்திடுச்சி….இது கல்யாணம் ஆனா தான் தெளியும்.” என்று  நினைத்த அந்த  காவலாளி..

“இப்போதைக்கு   நாம  தெளிய வைப்போம்.”என்று நினைத்தவராய்…பாலாஜி அருகில் சென்ற முருகேசன்… “ சார்…சார்….” என்று  சத்தமிட்டு..இந்த உலகுக்கு மீட்டு எடுத்தவனை பார்த்து…

“ சீட்டில் ரொம்ப தூசியா இருக்கு முருகேசன். அதான் தட்டிட்டு இருக்கேன்.”

“ ஆமா சார்…ரொம்ப தான் இருக்கு.” அந்த கிழிந்து போன வண்டியின் சீட்டை பார்த்து சொன்ன முருகேசன்…

பின்  நியாபகம் வந்தவராய்… “ சார் உங்கல தேடிட்டு ஊருல இருந்து  உங்க தம்பி வந்து இருக்கார். அவர உங்க ரூமில தான் உட்கார வெச்சேன் சார்.”

“யாரு…?செந்திலா….?”

“ ஆமா சார்..அவர் பேர் செந்திலுன்னு  தான் சொன்னார்.” என்று  சொன்ன முருகேசன்   சொன்னதும்..பாலாஜி முகத்தில் தோன்றிய முடிச்சியில்..

“ என்ன சார்….அவர் உங்க தம்பி தானே…உங்க ஊரு சித்தப்பா பேருன்னு சரியா சொன்ன தொட்டு தான் சார்….உங்க ரூமில உட்கார வைத்தேன்.” எங்கு தவறான நபரைய் தெரியாது உட்கார வைத்து விட்டமோ என்று   பதட்டத்துடன் முருகேசன் பேச…

“ அய்யோ முருகேசன்.. பேச்சை கொஞ்சம் நிறுத்துங்க. அவன் என் தம்பி தான்…சரியான ஆள தான் உட்கார வெச்சி இருக்கிங்க. நீங்க பயப்படாதிங்க.” அவர் பதட்டத்தை குறைத்து விட்டே தன் அறை நோக்கி சென்றான் பாலாஜி.

“சித்தப்பா தான் எப்போவாவது வருவாரு…அதுவும் பணம் வாங்க மட்டும் தான். இவன் வந்ததே இல்லையே…அதுவும் விடுதிக்கு வந்து இருக்கான். என்ன விசயமா இருக்கும்.” என்று நினைத்துக் கொண்டே தன் அறைக்கு சென்றவனை…

தன் இருக்குகையில் அமர்ந்து இருந்த செந்தில்…. தான் வந்தும் எழாமல்…. “ என்ன அண்ணா எப்போவும் ஏழரைக்கே..வந்திடுவிங்கன்னு அந்த ஆளு சொன்னான்.” அங்கு மாட்டி இருந்த  கடிகாரத்தில்….எட்டு கடந்து இருந்ததை பார்த்து விட்டு…

“ இன்னிக்கு லேட்டா வந்து இருக்கிங்க….?”

அவன்  உட்கார்ந்த இருக்கையும்..அவன் பேசிய தோரணையும் பார்த்து கோபம் சுரு…..சுரு….  என்று ஏறியது.  இருந்தும் கோபத்தை அடக்கினான்.   தன் திருமணத்தில்  பெற்றோர் ஸ்தானத்தில் இவன் அப்பா..அம்மாவை தான் நிற்க வைக்க வேண்டும்.அதை மனதில் கொண்டு   தன்னை அடக்கியவனாய்…

“எழு…” என்பது போல் சைகை காட்டினான். பாலாஜி விரல் அசைத்த பாவனையில் புரிந்துக் கொள்பவர்களாய் இருந்தால்….இனி ஒரு தடவை அந்த இருக்கையில் அமர மாட்டார்கள்.  ஆனால் இவன் என்ன ரகம் என்று தெரியவில்லையே….?

எழுந்து பாலாஜியின் எதிர் இருக்கையில் அமர்ந்தவன்…பாலாஜி அமர்ந்த்தும்…” அப்புறம் அண்ணா….?  எப்படி போகுது….?”

என்னவோ காலம் காலமாய்…அண்ணன் தம்பிக்குள் பேச்சு வார்த்தை இது தான் வழக்கம்  என்பது போல் பேசிய  அவன் பேச்சை பாலாஜி சுத்தமாய் ரசிக்க வில்லை.

“ அப்புறம்… எல்லாம் அப்புறம் பேசலாம். இப்போ என்ன விசயமா வந்து இருக்க….? உன் அப்பா ஏதாவது பணம் கேட்டாரா….?”

உன் அப்பன் எல்லாம் என்னை பணம் காச்சி மரமாய் மட்டும் தான் பார்த்து வருகிறார். நீ இந்த பாச பயிரை எல்லாம் வளர்க்க வேண்டாம் என்ற ரீதியில் தான் இருந்தது பாலாஜியின் பேச்சு.

அதற்க்கு செந்தில் ஏதோ சொல்ல வரும் போது…. “ சார் எங்க  ரூமில ஏசி  சரியா வேலை செய்ய மாட்டேங்குது.” என்று சொல்லிக் கொண்டு இரு  பெண் வந்து நின்றாள்.

அந்த இரு பெண்ணிகளின் வேலை நேரம் மதியம்  தான் என்பதால் தூங்கி எழுந்த அந்த இரவு உடையிலேயே வந்து நின்றனர்.

“ ஏசி மெக்கானிக்கை கூப்பிட்டு என்னன்னு  பாக்க சொல்றேன்.” என்று  பாலாஜி சொல்லிக் கொண்டு இருக்கும் போதே…

இன்னொரு பெண்… “ போன  வாரம் கூட இப்படி தான் ஆச்சி சார்.  வந்து சரி பண்ண இரண்டு நாள்ளே திரும்பவும் பிரச்சனை கொடுக்குது.”

“ சரிம்மா…இன்னிக்கு கூப்பிட்டு என்னன்னு  நானே கூட இருந்து பார்த்துடறேன்.” என்று சொல்லி விட்டு…. அத்தோடு அவர்களிடம் பேச்சு வார்த்தை முடிந்தது போல்….செந்திலை பார்க்க….

தன்னை பார்த்து அமர்ந்து இருந்த அவனின் வீல் சேர் பக்க வாட்டை பார்ப்பது போல் அமர்ந்து அப்பெண்களின் முகம் பார்க்காது கழுத்து கீழே கண்ணை மேய விட்ட  செந்திலை பார்த்தவனுக்கு கோபம் ஏற…

“ செந்தில்….” பாலாஜி கத்தவில்லை..ஆனால் பல்லை கடித்து கோபத்தை அடக்கி அவன் அழைத்த அவனின் பெயரிலேயே  அவனின் கோபம் அப்பட்டமாய் வெளிப்பட்டது.

ஈ…என்று ஒரு இளிப்பு இளித்தவன்… “ எனக்கு கொஞ்சம் ஏசி மெக்கானிக் தெரியும். அதான் நான் பார்க்கலாமுன்னு….”

“ அதுக்கு ஏசிய  தான் நீ பார்க்கனும்.”  உன் பார்வையை நான் கண்டு கொண்டேன் என்ற அர்த்தத்தில் பேசி விட்டு..

இன்னும்  போகாது  இருந்த அந்த இரண்டு  பெண்களை பார்த்து…. “ நான் தான் பாக்குறேன்னு சொல்லிட்டனே….”

தன் அறையில் பெண்கள் அடிக்கடி வருவது எப்போதும் அவனுக்கு பிடிக்காது. அந்த விடுதியில் இதை எல்லாம் பார்த்துக் கொள்ள ஒரு மத்தியதர வயதுடைய மேற்பார்வையாளரை வைத்திருக்கிறான்.

ஊரில் அவருடைய தந்தைக்குயின்  உடல்நிலை கொஞ்சம் மோசம் என்று சென்றவர்….இரண்டு நாள் கழித்து “ சார் அப்பா இறந்துட்டாரு…காரியம் மத்த வேல எல்லாம் முடிச்சிட்டு வர ஒரு மாதம் ஆகும்.” என்று  அவர்  சொன்னதால் தான் இதை எல்லாம் இவன் பார்த்துக் கொண்டு இருக்கிறான்.

“ இல்ல சார்  அந்த ஏசிய   சரி படுத்தினாலும் திடுமப திரும்ப பிரச்சனை கொடுக்கும் சார்.” அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்று புரிந்தும்…

“ அதுக்கு….” என்பது போல் அவர்களை பார்த்தவனிடம்…

“ திரும்ப திரும்ப  ரிப்பேர் செய்யிற காசுக்கு புதுசாவே வாங்கிடலாம் சார்.”

“  அது எல்லாம் நான் பாத்துக்குறேன். இன்னிக்கி  உங்க ரூம்  ஏசி வேலை  செய்யும்.” அவ்வளவு தான் என்பது போல் அவர்களை அனுப்பி விட்டான்.

அவர்கள் அந்த அறையில் இருக்கும் வரை செந்திலின் பார்வை அவர்கள் மீதே தான் இருந்தது.  பாலாஜி கோபத்துக்கு முன் நேரிடையாக பார்த்தவன்….பின் சைடு வாக்கில் பார்த்துக் கொண்டு இருந்தான்.

அப்பெண்களை அனுப்பி விட்டு… “ என்ன விசயம்..சீக்கிரம் சொல்லு எனக்கு நிறைய வேலை இருக்கு.”

பாலாஜி சொன்னது போல் இதற்க்கு அடுத்து கிண்டி விடுதிக்கு போய் பார்க்க வேண்டும். அடுத்து நுங்கம்பாக்கத்தில் வாங்கிய இடத்தில் விடுதி கட்ட ஆரம்ப கட்ட வேலை நடந்துக் கொண்டு இருக்கிறது.

அதை கட்டும் இன்ஞினியரை பதினொறு  மணிக்கு பார்க்க வருவதாக சொல்லி இருந்தான். பாலாஜி இன்று காலை  வழக்கம் போல்  எப்போதும் போல் தான் எழுந்தான்.

ஆனால் வழக்கத்துக்கு மாறாய்.. ஜமுனாவிடம் வந்த பேசி அழைப்பில் ….தன் வேலை அனைத்தும் மறந்து கடலை  போட்டதின் எதிரொலி தான் ஏழரைக்கு இந்த விடுதிக்கு வர வேண்டிய நேரம் தள்ளி எட்டு மணிக்கு வந்தது. இதனால் அனைத்து வேலையும் நேரம் கடக்க…சீக்கிரம் செல்ல வேண்டும் என்று சொன்னான்.

“அது தாண்ணா அதை பத்தி பேச தான் இங்கு வந்தேன்.”

“என் நேரத்துக்கும்..இவன் பேசுறதுக்கும் என்ன சம்மந்தம் இருக்கு….?” என்று பாலாஜி  யோசிக்க… “இருக்கே….” என்ற வகையாக இருந்தது அவன் அடுத்து அடுத்து பேசிய பேச்சுக்கள்.

“ உங்க நிச்சயத்துக்கு வந்து போனதில் இருந்து வீட்டில் உங்கல  பத்தி தான் அப்பா பேசிட்டு இருக்காரு……”

“ அப்படி என்னடா என்னை பத்தி பேச இருக்கு….?” பாலாஜி இதை கேட்காது மனதில் தான் நினைத்தான். செந்திலோ  கேட்கவில்லை என்றாலும் அதன் தொடர்ச்சி நான் சொல்லி தான் தீருவேன் என்ற வகையாக…

“ பாவம் அவன் ஒருத்தனா அங்கே கஷ்டப்பட்டுட்டு இருக்கான்.  தம்பின்னு நீ இருந்து என்ன பிரயோசனம் அவனுக்கு உதவியா இருக்கலாம்லே…என்று  எனக்கு ஒரே திட்டு….” என்று பேசிய செந்தில்… தான் பேசியதுக்கு ஏதாவது பேசுவான் என்று  பாலாஜி முகத்தை பார்த்தான்.

அவனோ…”  நீ சொல்லு ராசா சொல்லு….” என்பது போல் அவன் முகத்தை  பார்ப்பதும் தன் நேரத்தை பார்ப்பதுமாய் இருந்தான்.

செந்திலுக்கோ இதுக்கு மேல என்ன சொல்வது….அது தான் சொல்ல வேண்டியது எல்லாம் சொல்லிட்டோம். இனி அவன் தானே சொல்லனும்.

இவன் என்னவோ…பேசாது அமைதியா பார்க்குறான். என்று நினைத்த  செந்தில்…

“ அண்ணா….” என்று அழைக்க..

“ ம்..அப்புறம்….?” என்று பாலாஜி கேட்க..

“அய்யோ  திரும்பவும் முதலில் இருந்தா….” என்பது போல் செந்தில் நினைத்துக் கொண்டவன்.

இவன் நம்ம மாதிரி படிச்சவன் இல்ல…அதனால் இவனுக்கு எல்லாம் நேரா சொன்னா தான் புரியும்…என்று நினைத்தவனாய்… “ உங்களுக்கு உதவி செய்யலாமுன்னு நான் வந்து இருக்கேண்ணா….”

“ஓ…” அந்த ஓவை சத்தமாக  சொன்ன பாலாஜி… எடுப்பது பிச்சை..அதில் உதவின்னு எனக்கு செய்யிறேன் என்ற போர்வையில்  பேச்சை பாரு மெல்ல முனு முனுத்தவன்.

“  உதவின்னா என்ன மாதிரி உதவி…?” கேட்க..

பாலாஜியின் கேள்வியில் செந்தில் மகிழ்ந்து போய்….“ தோண்ணே  இப்போ கூட   வந்த பொண்ணுங்க ஏசி ரிப்பேருன்னு சொன்னாங்கலே…

இனி  உங்க வேலைய கெடுத்துட்டு அதை நீங்க இருந்து  பார்க்க தேவையில்லை. நானே கூட இருந்து  பார்த்துப்பேன். நீங்க உங்க வேலைய பார்க்கலாம்.

அதுவும் இல்லேம்மா இப்போ உங்களுக்கு கல்யாணம்  வேற் ஆக  போகுது பர்சனலா…வேலை அதிகம் இருக்கும். நான் இங்கு இருந்தா எல்லாம் நான் பார்த்துப்பேன்.”

“ நீ எல்லா பார்ப்பேன்னு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நானும் பார்த்தேன்னே….”  இப்போது வந்த சென்ற இரண்டு பெண்களை செந்தில் பார்த்த பார்வையை நினைத்து சொல்ல…

“ ஆமேண்ணா நீங்க  புது மாப்பிள்ளையா கவலை படாம அண்ணி கூட இருங்க..உங்க எல்லாத்தையும் நான் பார்த்துக்குறேன் .”

“ உனக்கும் இப்போ தானேடா  கல்யாணம் ஆச்சி….நீயும்  புது மாப்பிள்ளையா இருக்க தேவையில்லையா….? என்று கேட்டதுக்கு….

“ ஏதோ புதுசா கட்டுற விடுதி கூடவே உங்களுக்கும் வீடு கட்ட போறிங்கலாம்மே…அது கொஞ்சம் பெருசா கட்டிட்டா நாங்க இருந்துட போறோம்.” அவ்வளவு தான் விசயம் இது போய் பெருசா…? என்ற விதத்தில் அவன் பதில் அளித்தான்.

“அப்போ பக்காவா ப்ளான் செய்துட்டு தான்  பையன் வந்து இருக்கான். நிச்சயம் முடிந்த மறு நாள் தான்  அந்த நுங்கப்பாக்கம் விடுதி கட்ட ஏற்பாடு செய்து இருந்த இன்ஞினியர் வீட்டுக்கு வந்தது.

ஜமுனாவின் யோசனைக்கு ஏற்ப…விடுதி கட்டும் இடத்தின்   பக்கத்தில் இரண்டு  படுக்கை அறை கொண்டு ஒரு வீடும் கட்ட வேண்டும் என்று தான் இன்ஞினியரிடம் பேசிக் கொண்டு இருப்பதை….

அன்று மாலை தான் ஊருக்கு டிக்கெட் புக் செய்து இருந்த   சித்தப்பூ….சாவுகாசமாய்  சித்தி சுட்டு போட்ட தோசையை சாப்பிட்டுக் கொண்டே…தாங்கள் பேசிக் கொண்டு இருப்பதையும் கேட்டு இருக்கிறார். சித்தப்பூ  கேட்டதின் பலன் தான்  இவனின் இந்த வருகை…

“ இன்னும் விட்டால் இவன் பேசிக் கொண்டே போவான் ….இதோடு முடித்துக் கொள்ளலாம்….” என்ற முடிவோடு..

“ இப்போதைக்கு  இல்ல..எப்போதைக்கும் எனக்கு யாரின் உதவுயும் தேவைப்படாது. அதுவும் உன்  மாதிரியான  ஆண்களின் உதவி தேவையே படாதுன்னு நினைக்கிறேன்.”

“ என்ன அண்ணா சொல்றிங்க….?”

வீட்டில் அப்பா  இவனை  பற்றிய பேச்சில்…. ஓ…பாலாஜியுடன் இருந்தால் நமக்கு பலவகையில் நல்லது. என்று நினைத்து தான் இங்கு வந்தது.

இவனிடன் பேசி இங்கேயே  நம் குடும்பத்தோடு செட்டில் ஆகிடலாமுன்னு பார்த்தா….என்ன இவன் பிடி குடுத்தே  பேச மாட்டேங்குறான்.அதுவும் என்னை மாதிரி ஆண்களின்  தேவையில்லையாமே…  அதை கேட்டும் விட்டான்.

“ இல்ல நான் நடத்துவது எல்லாம் பெண்கள் விடுதி. இனி வேலைக்கு ஆள் வைப்பது என்றால் பெண்களாய் பார்த்து தான் வைக்க போறேன். இனி அதுக்கு கூட ஆள் பார்க்க தேவையில்லை. என் மனைவி கூட இதை எல்லாம் பார்த்துப்பா…அவ கூட உதவியா ரிடையட் ஆக போகும்  என் அத்தை  இருப்பாங்க.”

சொத்தை ஆட்டைய போட இனி நான் தனிமனிதன் இல்லை..என்பது போல் தன் பேச்சை முடித்தவன்…

“ சரி நான் கிளம்புறேன்… நீ எப்படி…?” எப்போது கிளம்புவாய் என்ற அர்த்ததில் கேட்டான்.

ஏதோ நினைத்து வந்தேன்..ஆனால்… “ தோ நானும் ஒரு பிரண்ட  பார்த்துட்டு ஊருக்கு போகனும்.”  பாலாஜி கூடவே நடந்து வந்தவன்…சொன்ன..

“ அந்த சாந்தி பொண்ணு இன்னும் இங்கே தான் இருக்கா….?” என்ற செந்திலின் கேள்வியில் பாலாஜி அப்படியே  நின்று விட்டான்.

Advertisement