Advertisement

அத்தியாயம்…..9 
“அடிப்பேன்…” என்று சொன்னதோடு சரி…ஒருத்தி கோச்சிக்கிட்டு  போனாளே…போய் சமாதானம் படுத்துவோம் என்று இருக்கா….? அது தான் நான் அவனுக்கு  ஈசியா கிடச்சிட்டானே அவன் எதுக்கு என் பின் வரப்போறான்….” ஜமுனா மனதுக்குள் பாலாஜியை  வஞ்சனை இல்லாது திட்டி தீர்த்து விட்டு…
இனி அவனை திட்டுவதற்க்கு  ஜமுனா வார்த்தைகளை யோசித்துக் கொண்டு இருக்கும் வேளயில்…சாவுகாசமாய் ஒரு வாரம் சென்று….கிண்டி ரயில் நிலையத்தில்  ஜமுனா முன் வந்து நின்றவன்…
“ உன் கிட்ட பேசனும்…வா மாலுக்கு போகலாமா….?”  என்று அழைத்தவனிடம்…
“ எதுக்கு அடிக்கவா…..?” 
சத்தியமாக பாலாஜிக்கு ஜமுனா பேசுவது புரியவில்லை. நாம மாலுக்கு தானே அழைத்தோம்…அதுக்கு வரேன்னு சொல்லனும்…இல்ல வரலேன்னு சொல்லனும்…. இவ என்ன சம்மந்தமே இல்லாம அடிக்கவான்னு கேட்குறா…..? குழம்பி போய் ஜமுனா முகத்தை பார்த்தான் பாலாஜி.
பாலாஜியின் குழம்பிய  முகத்தை பார்த்த ஜமுனா…. “ ஓ அன்னிக்கி நீங்க என் கிட்ட பேசுனதையே மறந்திட்டிங்களா….?  கேள்வி கேட்ட அவள் அதற்க்கு பதிலை எதிர் பாராது….அவளே திரும்பவும்…
“ அன்னிக்கி  அடிப்பேன் என்று சொன்னதை   மட்டும் தான் மறந்திங்களா….? இல்ல  அடிப்பேன்னு சொன்னவளையே மறந்திட்டிங்களா….?” பாவம் பெண்களின் வாய் ஜாலம்  எல்லாம் அறியாத பாலாஜி….
“ எப்போ  அடிப்பேன்னு சொன்னேன்….?” 
உண்மையிலேயே அன்று  இருந்த பதட்டத்தில்….அன்று  அங்கு இருந்து அவள் போனால் போதும்  என்று தான் அடிப்பேன் என்ற வார்த்தையை விட்டது. சொன்னவன் அதை மறந்து விட்டான்…அனால் அதை கேட்டவள் மறக்காது இருப்பாள் என்று அறியாது…
இந்த ஒரு வாரமும்  இருந்த பிரச்சனையில்…ஜமுனா என்ற ஒருத்தியை மறந்தவன் போல் தான் சுற்றிக் கொண்டு இருந்தான். இப்போது கூட பிரச்சனை அனைத்தும் முடிந்து விட்டது என்று இல்லை…
தன் விடுதியின் பெயர்   இனி இதில் வராது என்ற ஆசுவாசம் கிடைத்த உடன் தான்…அய்யோ இருக்கும் பிரச்சனையில்   ஜமுனாவுடன் போனில் கூட பேசவில்லையே….அதை தான் நினைத்தானே ஒழிய…
அன்று பேசியது…அவன்  நியாபக அடுக்கில் கற்பூரம் போல் கரைந்து போனது. ஆனால் நம் ஜமுனாவின் மனதிலோ….அது நங்கூரம் போல் நச்சுன்னு ஒட்டிக் கொண்டு விட்டது.
பார்த்து ஒரு வாரம்  கடந்து விட்டது. திருமணம் கூட நிச்சயம் ஆகி விட்டது..இனி  கூப்பிட்டால் வருவாள் ஆசையாக பேசலாம் என்று வந்தவனுக்கோ….. ஜமுனாவின் பேச்சு கொஞ்சம் எரிச்சலை ஏற்படுத்த தான் செய்தது.
இருந்தும் பொறுமையாக….” நீ என்ன பேசுறேன்னு எனக்கு புரியல ஜமுனா…. எது பேசுறது என்றாலும்  வா தனியா பேசலாம்…..” பாலாஜி தன்மையாக தான் அழைத்தான்.
“ நான் தனியா எல்லாம் வர மாட்டேன்….” முறுக்கிக் கொண்டு சொன்னவளிடம்…
“  உன்ன  தனியா கூட்டிட்டு போய் தப்பு செய்யிற எண்ணம் எல்லாம் எனக்கு இல்ல… அதனால தைரியமாவே வா…..”
“ என்ன சொன்னிங்க…. என்ன சொன்னிங்க…. தப்பு …தப்பு….” பல்லை கடித்துக் கொண்டு அடுத்த வார்த்தை வாயில் வராது  கோபத்துடன் பாலாஜியை முறைத்து பார்த்தாள்.
பாலாஜி அப்போதும் பொறுமையுடன்…. “ உன்ன சுத்தி பார் ஜமுனா….எல்லோரும்  நம்மையே பாக்குறாங்க…. நீ தினம் போகும் வழி இது…இதை பார்த்து யாரும் உன் கிட்ட தப்பா நடந்துக்க கூடாது…வா நான் உன் கிட்ட கொஞ்சம் பேசனும் அவ்வளவு தான். ஆசையா பேச எல்லாம் கூப்பிடலே….”
நம்ப முடியாது பார்த்தவளிடம்…. “ முதல்ல ஆசையா பேசலாமுன்னு தான் வந்தேன்…ஆனா அன்னிக்கி ஏதோ நான் பேசி  இருக்கேன்…போல அதை க்ளியர் பண்ணி அனுப்பிடறேன்….”
“ எந்த மாலுக்கு போகலாம்….” என்று  சொல்லி அவனுக்கு நான் உன் கூட வருகிறேன் என்று உணர்த்தினாள்.
அவள் அப்படி  சொன்னதும், தன் போனில் ஓலாவில் புக் செய்து விட்டு… “ வா ஸ்டேஷ்ன் வெளியில் நிக்கலாம்….” அவளிடம் பேசிக் கொண்டு இருக்கும் போதே…கார் புக்  செய்ததுக்கு கார் ஓட்டியின் கைய்பேசி எண்ணும்…கார் நம்பரும் வர…
 அந்த ஓட்டுனரிடம் பேசி  முடித்ததும்…. “ சீக்கிரம் வா ஜம்மூ….கார் வெளியில் தான் நிக்குது…” கைய் பிடித்து இழுத்து சென்றவன் அந்த தொடுகையை  அனுபவிக்கவில்லை என்றாலும்… நம் ஜமுனாவுக்கோ அவன் கை பிடித்துக் கொண்டு இருப்பது ..கூச்சமா…வெட்கமா…என்று உணராது ஒரு வித மயக்கத்தோடு  தான் அவன் பின் சென்றாள்.
அவ்வளவு பேசியவள்… என்ன ஒன்னும் வாய் திறக்க மாட்டேங்குறா….?காரில் போகும்  போது ஜமுனாவின் அமைதியை பார்த்து…. “ என்ன ஜம்மூ….உன்னை வலுக்கட்டயமா கூட்டிட்டு போறேன்னு கோபமா…..?”  அவளின் முகச்சிவப்பை பார்த்து விட்டு கேட்டான்.
அட லூசு காதல் சொன்னவன்..என்னை  கை தொட்டதை ஏதோ மரக்கட்டைய கையில் பிடிச்சது போல இருக்கான். காதல் வேண்டாமுன்னு சொன்ன நான் ஏதோ ஷாக் அடிச்சாப்பல   இருக்கேன். அவளை திட்டிக் கொண்டு, அவனையும் மனதில் திட்டி தீர்த்தவள்.
பேச்சை மாற்றும் பொருட்டு…. “ உங்க கிட்ட கார்  இல்லையா….?” இப்போது அவன் வசதி அவளுக்கு தெரியும் தானே….கார் என்பது இவனுக்கு என்ன பெரிய விசயமா….என்று நினைத்து கேட்டாள்.
“ இது வரை  கார் வாங்க அவசியம் ஏற்படவில்லை. இனி வாங்கனும். அதுக்கு முன்ன ஒரு வீடு  வாங்கனும் ஜம்மூ….”
“ சொந்….த  ஒரு வீ…டு இல்லையா….?” மாதம் ஐம்பாதாயிரம் சம்பளம் வாங்குபவனே….வங்கியில் கடன் போட்டு  வீடு வாங்கிக் கொள்கிறான்….இவன் என்ன சொந்தமா வீடு இல்லை என்கிறான்.
முதலில்  அவன் சொன்ன காருக்கு அவசியம் இல்லை அதனால் வாங்க வில்லை என்பது போல் அவன் பேசிய பேச்சிலேயே….இப்போ எல்லாம் அவசியத்துக்கா வாங்குறங்க..
உபயோகம் இருக்கோ…இல்லையோ…தேவை படுகிறதா…இல்லையா….அது எல்லாம் இல்லை.   தவணை கட்டும் வருமானம் வந்தாலே….பெருமைக்கு ஒரு காரை வாங்கி வீட்டில் முன் நிற்க வைத்து விடுகிறார்கள்.
இவனுக்கு வரும் வருமானத்துக்கு  மாதம் ஒரு கார் வாங்கலாம். இவன் என்ன என்றால்  அவன் பேச்சில் இப்படி யோசித்துக் கொண்டு இருக்கும் போது அவன் அடுத்து சொன்ன…சொந்த வீடு வாங்கனும் என்ற  பேச்சில் அதிர்ந்து தான் போய் விட்டான்.
அவள் அதிர்ர்ச்சி அவனுக்கு என்ன உணர்த்தியதோ…. “ இப்போ நான் இருப்பது சிங்கிள் பெட்ரூம் இருக்கும் ப்ளாட்  தான் ஜம்மூ. அதுவும் அப்போ நான் சென்னை வந்த புதுசுல செகண்ட் ஹான்ல வாங்குனது.
 நீ கவலை படாதே..வீடு வாங்கும் அளவுக்கு என் கிட்ட பணம் இருக்கு. உனக்கு ப்ளாட் தான் பிடிக்கும் என்றால் ப்ளாட்டையே வாங்கலாம்…இல்லை  நிலம் வாங்கி வீடு கட்டலாம் என்றால்… நுங்கம்பாக்கத்தில் லேடிஸ் ஹாஸ்ட்டல் கட்ட என்று ஒரு இடம் வாங்கி போட்டு இருக்கேன்..அதில் வீடை கட்டலாம்…எல்லாம் உன் விரும்பம் தான் ஜம்மூ….”
சொந்த வீடு இல்லையா….? என்ற அவள் அதிர்ச்சியை தவறாய் புரிந்துக் கொண்டு பேச… “ நான் உங்க பணத்தை பார்த்தா கல்யாணம் செய்ய ஒத்துக்கிட்டேன்…? ”
“ அய்யோ ஜம்மூ…நான் சொன்னதை….நீ தப்பா புரிஞ்சி கிட்ட….” 
“ என்னுடைய அதிர்ச்சியையும் நீங்க தப்பா தான் புரிஞ்சி கிட்டிங்க….”
 பெண்கள்  சூழ தான் அவன் உலகு. ஆனால் பேசியதோ….காரியத்தோடு…அதுவும்  வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்ற வேலை பேச்சு மட்டுமே….
பெண்களின்  நுண்வுணர்வு..அதில் வந்து போகும் சந்தேகங்கள்….  மற்றவர்கள் தங்களிடம் பேச்சிலும் எதிர் பார்க்கும்  தன்மான உணர்வு..இதை எதையும் அறியாது தான் பாலாஜி பேசியது
ஜமுனாவுக்கு நான் என்ன இவன் பணத்தையா பார்த்தேன்…..? பணத்துக்கு வந்தவள் போல பேசி வைக்கிறான்….மனதில் நினைத்ததை கேட்டும் விட்டாள்.
“ நான்  உங்க பணத்தை பாக்கல… உங்கல முதல் தடவை வீட்டுக்கு வந்து பெண் கேளுங்க என்ற  போது…நீங்க இவ்வளவு வசதின்னு எனக்கு தெரியாது.” என்று சொன்னவள்..
அவனையும் அவன் உடுத்தி  இருந்த உடையையும் பார்த்து விட்டு… “ உங்கல பார்த்தா கூட அப்படி தெரியல…இருந்தும்  வீட்டுக்கு பெண் கேட்க வர சொன்னதுக்கு காரணம்… மரியாதையான கல்யாண வாழ்க்கைக்கு தான்.” 
அடக்கடவுளே… தான் சொன்னதுக்கு இப்படி ஒரு எதிர் வினையா….? இதை எதிர் பார்க்காத பாலாஜி…  “ ஜம்மூ ப்ளீஸ்..நீ தப்பா எடுத்துக்காதே….எனக்கு பேச தெரியலையா….? இல்லை நான் பேசுவது எல்லாம் உனக்கு தப்பா தெரியுதான்னு தெரியல…
உன்னை பத்தி எனக்கு ஒன்னும் தெரியல. என்னை பத்தி உனக்கு ஒன்னும் புரியல. ஆனா இது மட்டும்  நிஜம். நீ பணத்துக்கு ஆசை படுற பெண் இல்லை என்று மட்டும் எனக்கு தெரியும். நாம பேசி பேசி காதலை வளர்க்கலேன்னாலும் பரவாயில்ல….கல்யாணம் நிக்க கூடாது. நீ வேணா வீட்டுக்கு போயிடுறியா….? வண்டிய நிப்பாட்ட சொல்றேன்”
பாலாஜிக்கு உள்ளுக்குள் பயம் வந்து விட்டது…என்ன இது எது பேசினாலும் பிரச்சனையில் வந்து நிற்கிறது. காதல் செய்து கல்யாணம் செய்யலேன்னாலும் பரவாயில்ல..கல்யாணத்துக்கு முன் விவாகரத்து ஆகி விடக் கூடாது என்பதில் தெளிவாய் இருந்தான்.
அவளோடான பேச்சை முடித்து விட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்க  அவன் நினைத்தான். அதற்க்கும்..
“ ஓ பாதியிலேயே கழட்டி விட பாக்குறிங்கலா…..?” 
“ இல்ல ஜமுனா… நாம பேச பேச பிரச்சனை ஆகுது. நான்  உன்னுடன் முதல்ல ஆசையா பேசலாமுன்னு தான் வந்தேன். உன் கோபத்தை பார்த்து கோபம் குறைய பேச ஆரம்பிச்சா…பேச்சு  எங்கு எங்கோ போய் இன்னும் தான் பிரச்சனை அதிகமா ஆகுது.” அவனுக்கு திருமணம் நல்ல படியாக முடிந்தால் போதும்.
அதற்க்கு    இவளோடான பேச்சை எவ்வளவு தவிர்க்கிறோமோ அவ்வளவு நல்லது. காதலிக்க ஆசை பட்டவன் தான். அதுவும் ஜமுனாவை தான் பார்த்த கேட்ட காதலை போல் ஆசை தீர காதலிக்க வேண்டும்.
கல்யாணத்துக்கு பின்…  “ காதலிக்கும் போது இத சொன்னிங்க..அத சொன்னிங்க.. இப்போ அதில்  ஒன்னும கூட செய்யாம என்னை நல்லா ஏமாத்திட்டிங்க….” என்ற மனைவியின் சண்டையை சமாதானப்படுத்தும் செல்ல செல்ல சீண்டல்கள்… இப்படி தன் வாழ்க்கை சுவாரசியமாக இருக்க வேண்டும் என்று நினைத்தான்.
ஆனால் இப்போது நடப்பதை பார்த்தால்….தன் வாழ்க்கையில் கல்யாணம் ஒன்று  நடந்தால் போதும்…சீண்டல்கலோ…கொஞ்சல்கலோ…திருமணதுக்கு பின் வைத்துக் கொள்ளலாம்.
 போத்திக்கிட்டு படுத்தா என்ன….? படுத்துக்கிட்டு போத்திகினா என்ன….?  விசயம் படுக்கனும் அவ்வளவு தான் என்று நினைத்து தான் ஜமுனாவை போக சொன்னான். அனால் அதற்க்கும்  ஜமுனா இப்படி பேசி வைத்தால்….
பாவம் பாலாஜிக்கு அடுத்து என்ன பேச என்று கூட தெரியாது  திரு..திரு என்று ஜமுனாவை விழித்து பார்த்திருந்தான். கடவுளுக்கே  பாலாஜி நிலையை பார்த்து பரிதாபம் வந்து விட்டது போல்…
அவர் ஓட்டனரின் ரூபத்தில்… “ சார் நீங்க இறங்க வேண்டிய இடம் வந்துடுச்சி….” சொன்ன ஓட்டினரின் முகத்தில் புன்னகை வந்து போயினவோ….?  என்று சந்தேகம் படும் படி இருந்தது அவன் முகத்தோற்றம். பின் பாவம் அவனும் காரில் ஏறியதில் இருந்து ஜமுனா பாலாஜியின் பேச்சு வார்த்தைகளை   கேட்டுக் கொண்டு தானே இருக்கிறான்.
காருக்கு உண்டான பணத்தை கொடுத்து  விட்டு பாலாஜி ஜமுனாவை பார்க்க…. ஜமுனாவும் அப்போது பாலாஜியை  தான் பார்த்துக் கொண்டு இருந்தாள். 
பாலாஜியின் பாவமான முகத்தை  பார்த்து விட்டு இதோடு போதும் என்று நினைத்த ஜமுனா…. “ சரி ஏதோ பேசனும் என்று  சொன்னிங்கலே…. வாங்க காபி ஷாப்புக்கு போகலாம்….” என்று ஜமுனா பேசியதும் தான் பாலாஜிக்கு அப்பாடா என்றானது.
இரு காபி சொல்லி விட்டு பாலாஜி ஜமுனாவை பார்க்க….இந்த ஒரு வாரமாக  பாலாஜியை மனதில் என்ன தான் திட்டிக் கொண்டு இருந்தாலும்…ஒரு ஓரத்தில்  அந்த பிரச்சனை என்ன ஆனதோ….அந்த மீடியா விடுதியை பற்றி காட்டவில்லை.
ஆனால்  செய்தி தாளில் படித்த …பெண்களை குறிப்பாக தங்கள்  சொந்த ஊரை விட்டு விடுதியில் தங்கி படிக்கும் இளம் பெண்களை குறிவைத்து ஒரு குரூப் தங்கள் காதல் வலையில் விழ  வைத்து…
அவர்களே தங்கள் அந்தரங்கங்க புகைப்படத்தை தங்களுக்கு அனுப்பும் படி செய்து…அதை காட்டி தன் ஆசைக்கு மட்டும் அல்லாது அந்த க்ரூப்பே அந்த பெண்ணை சீரழிப்பதோடு மட்டும் அல்லாது …தாங்கள் சொல்லும் பெரும்புள்ளிகளின் படுக்கைக்கு  அனுப்பியும் வைத்து உள்ளனர்.
அதில் பாதிக்கப்பட்ட பெண் ஒருத்தி தான் பாலாஜியின் விடுதியில் தங்கி  இருந்த பெண். தன் காதலனின் ஆசை வார்த்தையில் மயங்கி தன் அறையில் தங்கி இருந்த பெண்ணை தன்னை புகைப்படம் எடுக்க சொல்லி தன் காதலனுக்கு அனுப்பியும்  இருக்கிறாள்.
அதன்  தொடர்ச்சியாக அந்த க்ரூப் அவளுக்கு டிமாண் வைக்க…அதை அந்த பெண் ஏற்காது தன் சொந்த ஊருக்கு  சென்று விட்டாள்.
 இந்த பெண்ணின் எதிர்ப்பை  அந்த க்ரூப் எதிர் பார்க்கவில்லை போலும், இது வரை தங்கள் மிரட்டலுக்கு பணிந்து போன பெண்களே  ….
முதன் முறை என்ன செய்வது என்ற அந்த கோபத்தில் அவள் படத்தை நெட்டில் ஏத்தி விட்டதில் பிரச்சனை  வெடித்து விட்டது. ஜமுனாவுக்கு இது அனைத்தும் செய்திதாள் மூலம் தெரிந்த விசயங்கள்.
இருந்தும்   ஒவ்வொரு நாளும் பத்திரிக்கையை புரட்டும் போது…. இதில் பாலாஜியை சம்மந்தப்படுத்துவார்களா…?விடுதி பற்றி தவறான செய்தி வந்து விடுமோ….?மனது துடித்தது அவளுக்கு தானே தெரியும்.
தன்னை ஒரு வாரம்  துடி துடிக்க வைத்து விட்டு சாவகாசமாய் வந்து பேசலாமா….?  என்று அழைத்தால்… அந்த கோபத்தில் தான் ஜமுனா அவனை வதைத்து எடுத்து விட்டாள். 
காரை விட்டு இறங்கியதும் அவன் முகத்தை பார்த்து பாவம் அவனே  பிரச்சனையில் யாரும் இல்லாது தனித்து போராடி இருக்கிறான்…அந்த பிரச்சனை முடிந்ததா….?இல்லையா ….?  என்று கூட தெரியவில்லை.
இந்த சமயத்தில் நாம் ஆறுதலாய் இல்லை என்றாலும்,  அவனை மேலும் வருத்த வைக்கிறோமோ…என்றதில் அமைதியாகி..
தனிமை கிடைத்ததும்… பாலாஜி தன்னை பார்த்த அந்த பார்வையில் அவன் கையில் தன் கை வைத்து அழுத்தம் கொடுக்க….வார்த்தைகளால் சொல்ல முடியாத ஓராயிரம் ஆறுதல் வார்த்தைகள்…அந்த கை தொடுகையில்  பாலாஜி உணர்ந்தான்.
 
 
 

Advertisement