Advertisement

அத்தியாயம்…8 
தன் முன் அமர்ந்து இருந்த காவல்துறை அதிகாரி கேட்டுக் கொண்டு இருந்த கேள்விக்கு  எந்த வித…பயமும், பதட்டமும் ,இல்லாது விடை அளித்துக் கொண்டு இருந்த பாலாஜி….
காவல்துறை அதிகாரியின் பின் பக்கம் வந்து நின்ற ஜமுனாவை  பார்த்ததும் முகத்தில் பதட்டம் குடிக் கொள்ள….. “ நீ இப்போ போ…சாயங்காலம் வீட்டுக்கு வர்றேன்.” அவசரமாக ஜமுனாவை அந்த இடத்தை விட்டு  அகற்ற பார்த்தான்.
அவன் முன் அமர்ந்து இருந்த காவல்துறை  அதிகாரி பாலாஜிக்கு வேண்டப்பட்டவன்.இருந்தும்  தன் பின் பக்கம் நின்றுக் கொண்டு இருந்த ஜமுனாவை திரும்பி பார்த்து…பின் சாதரணமாக பாலாஜியின் முகம் பார்த்தப்படி தன் பேச்சை ஆராம்பிக்க ஏதுவாக இருந்தான்.
ஆனால் அந்த காவல்றை பக்கத்தில் அமர்ந்து இருந்த….சி.பி.ஐ….ஜமுனாவை சாதரணமாக எடுத்துக் கொள்ளாது…. “ மேடம் யாருன்னு நீங்க அறிமுகம் படுத்தலாமே….?” 
காலையில் தூக்க கலக்கத்திலேயே வந்த கைய்பேசி அழைப்பை ஏற்றவனுக்கு….  இணைப்பில் அந்த பக்கம் இருந்தவர்… “ நாங்க போலீஸ் ஸ்டேஷனின் இருந்து அழைக்கிறோம்….” என்றதும்…
எப்போதும் போல்…ஏதாவது ஒரு பெண்…காதலனோடு சென்று இருப்பாள்…என்று நினைத்து… “ என்ன சார்..காலையிலேயே…டிஸ்ட்டப் பண்ணிட்டு….” தூக்கம் கலந்த எரிச்சலில் சிடு சிடுத்தவனிடம்…
அந்த பக்க இணைப்பில் இருந்த காவல்துறை அதிகாரி…. “ சார் உங்கல என்கொயரி செய்ய சி.பி.ஐ ஆபிசர் காத்துட்டு இருக்காரு….நீங்க வர்றிங்கலா…இல்ல நாங்க உங்க ஹாஸ்ட்டலுக்கு வரவா…..?”
எப்போதும் ஒரு நண்பன் போல் பேசும் அந்த காவல்துறை அதிகாரி…கடமை தவறாத அதிகாரி போல் பேசியதும்…அவர் சொன்ன சி.பி.ஐ..விசாரணை…என்ற  வார்த்தையில் இது சாதரண பெண் மிஸ்ஸிங் இல்லை என்பதை சடுதியில் புரிந்துக் கொண்ட பாலாஜி…
“ ஐந்து நிமிஷத்தில்  விடுதியில் இருப்பேன் சார்…..” சொன்ன படி….அவன் விடுதிக்கு வரும் முன்னவே காவல்துறை அதிகாரியோடு இன்னும் இரண்டு பேர்..இருப்பதை பார்த்து விட்டு மரியாதை  நிமித்தமாக விஷ் செய்தான்.
பதிலுக்கு அவர்களும் விஷ் செய்ததும்,  தன் ஆபிஸ் ரூமுக்கு அழைத்து வந்து அமர வைத்த பாலாஜி… “ என்ன விசயம் சார்….? ” முகத்தில் எந்த வித பதட்டமும் இல்லாது கேட்டதில் இருந்தே….
அந்த சி.பி.ஐ…அதிகாரிகளுக்கு,  பாலாஜி மேல் இருந்த சந்தேகம் பாதி குறைந்து விட்டது.
 இருந்தும் முறைப்படி அவர்கள் தங்கள்  விசாரணையை தொடங்கினர்….“ உங்க விடுதியில் தங்கி இருந்த பெண்ணின் ஆபாச புகைப்படங்கள் வலை தளத்தில்   சுழன்றுக் கொண்டு இருக்கிறது.” என்று சொல்லி விட்டு அந்த சி.பி.ஐ அதிகாரி பாலாஜியின் முக மாற்றத்தை உன்னிப்பாக கவனித்தார்.
அய்யோ…என்ற பதட்டம் மட்டுமே பாலாஜியின் முகத்தில் பார்த்த அந்த சி.பி ஐ அதிகாரி…. “ இத பத்தி நீங்க என்ன நினைக்கிறிங்க…..?” பாலாஜியிடமே கருத்தும்  கேட்டார்.
“ என்ன சொல்றதுன்னு எனக்கு தெரியல சார்….அறிவியல் வளர்ச்சிய…நல்லதுக்கு  உபயோகிக்காம…இத மாதிரி செய்வது ரொம்ப கொடுமையா தான் இருக்கு. ட்ரஸ் எடுக்கும் போது ஆடையை  போட்டு பார்த்து வாங்கும் பெண்கள் ரொம்ப ….ரொம்ப கவனமா இருக்கனும்.”
பாலாஜியின் முகத்தில் முதலில்  தோன்றிய அய்யோ…….. என்ற பாவனை மட்டுமே…அடுத்து  அவன் பேச ஆரம்பித்ததும் சாதரண முகபாவனைக்கு மாறி அவன் தன் கருத்தை தெரிவித்தான்.
சி.பி.ஐ அதிகாரிகளுக்கும் தெரியும்…விடுதியில் தங்கும் பெண்களுக்கு எல்லாம் கவலைப் படவா முடியும்…?அதுவும்  அந்த சி.பி. ஐ அதிகாரிகள் பாலாஜி பற்றி ஒரளவுக்கு விசாரித்தே இங்கு வந்தனர்.
அவனுக்கு இருக்கும் பெண்கள்  விடுதிகளின் எண்ணிக்கை…அதில் தங்கி இருக்கும் பெண்களின் எண்ணிக்கை….ஒவ்வொருவருக்கும் அவனால் கவலைபட  முடியாது தான்…இருந்தும்…? அதிகாரிகள் பாலாஜியின் மனநிலையை பற்றி அனுமானித்துக் கொண்டே….
அவனின் கருத்துக்கு பதிலாய்…. “ நீங்க சொல்வது ரொம்ப  ரொம்ப சரி தான். பெண்கள் உடை போட்டு பார்த்து வாங்கும் போது ரொம்ப ரொம்ப ஜாக்கிரதையா தான் இருக்கனும். விடுதியில் தங்கி இருக்கும் பெண்கள் உடை மாத்தும் போது கூடவா…ரொம்ப ரொம்ப ஜாக்கிரதையா இருக்கனும்….?”
இந்த கேள்வியில் பாலாஜியின் முகம் அதிர்ச்சி என்ற வார்த்தை சொல்லலாமா….?பேரதிர்ச்சி என்று சொல்லலாமா…? “ என்ன சார் சொல்றிங்க….? அந்த போட்டோஸ் எங்க விடுதியில் இருந்து எடுத்ததா….?” அந்த அதிகாரியின் நக்கலான  கேள்வியில் இருந்தே விசயத்தை புரிந்துக் கொண்டு அதிர்ந்து கேட்டான். 
“ யெஸ்….உங்க விடுதியில் இருந்து தான் எடுத்து இருக்கு….” என்று சொல்லியதோடு, அந்த வலையதளத்தை தேடி அதில்    இருந்த பெண்ணின் ஆபாச படத்தை காட்டினார்.
 அதில்  அறையின் கபோடின் மேல் விடுதியின் பெயரோடு  முன் பக்கம் அந்த பெண்ணின் நிர்வாண புகைப்படம் இருந்தது.அதை  வாங்கி பார்த்த பாலாஜியின் கண்ணில் வெறும் ஆராயும் தோற்றம் மட்டுமே…. 
அது தங்கள் விடுதியில் தான் எடுத்தார்கள் என்று  மட்டுமே பார்த்த பாலாஜி திரும்பவும் அந்த அதிகாரியிடம் கொடுத்ததவன் முகம் யோசனையில்…  பாலாஜியின் முகம் மாற்றம் அனைத்துமே அந்த அதிகாரிகளும் கவனித்துக் கொண்டு தான் இருந்தனர்.
அதில்…பயம் இல்லாது அதிர்ச்சி அடுத்து யோசனையின்  சாயல் படிந்ததை பார்த்தும்… “ இதுக்கு என்ன சொல்றிங்க….?  உங்கள் விடுதியில் எடுத்த புகைப்படம் வலையதளத்தில் கசிந்து இருக்கு…. அதுக்கு நீங்க தானே பொறுப்பு….
அப்போதும் முகத்தில் பதட்டம் கொள்ளாது…. “ கண்டிப்பா….” என்று பாலாஜி சொல்லிக் கொண்டு இருக்கும்  போது தான் ஜமுனா வந்தது.
பாலாஜி  நிலையில் யார் இருந்தாலும் குற்றமே செய்யவில்லை என்றாலும் கண்டிப்பாக கொஞ்சம் பயந்து தான் இருப்பார்கள். ஆனால் பாலாஜியின் இந்த  கூல் அணுகு முறை அந்த அதிகாரிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வேளயில்…
ஜமுனாவை பார்த்து பாலாஜியின் இந்த பதட்டம்… “ யார் இந்த பெண்…இங்கு தங்கியிருப்பவளா…..?” தெரிந்துக் கொள்ளும் ஆவளிலும்…. இந்த பெண்ணால் கூட இந்த கேசில் நூல் கிடைக்கலாம் என்ற யுத்தியிலும், ஜமுனாவை போக விடாது. தங்கள் பக்கத்து இருக்கையில் அமர வைத்து விட்டனர்.
பாலாஜியால் ஒன்றும் செய்ய முடியாத நிலை…இருந்து இருந்து இப்போ தான்  இவ வரனுமா….? என்று தான் இருந்தது பாலாஜிக்கு….
திரும்பவும் அந்த அதிகாரி… “  மேடம் யாருன்னு சொல்லலையே…?” என்று  கேட்டதுக்கு…
பாலாஜி வாய் திறக்கும் முன்….முன் ஒரு நாள் ஜமுனா வீட்டுக்கு சென்ற அந்த ஏட்டு…. “ மேடம்  தான் சார கல்யாணம் செய்துக்க போறவங்க சார்….” ஜமுனாவையும், பாலாஜியையும் பார்த்து சிரித்துக் கொண்டே   சொன்னார்.
“ஓ….” என்றதோடு ஜமுனாவை ஒரு ஆராய்ச்சி பார்வை பார்த்தார் அந்த அதிகாரி.பாலாஜிக்கு  ஜமுனா இங்க அமர்ந்து இருப்பது துளியும் பிடிக்கவில்லை.
ஜமுனாவோ….பாஜாஜி பக்கம் திரும்பாது….அந்த அதிகாரியின் முகத்தையே பதட்டத்தோடு பார்த்து இருந்தாள். வெளியில் மீடியா காரார்கள் உள்ளே  போலீச் விசாரணை…என்ன பிரச்சனை….? தெரியா விட்டால் தலை வெடித்து விடும் போல் இருந்தது.
நான் வருவதற்க்கு முன் என்னவோ பேசிக் கொன்டு இருந்தவர்கள்…தான் வந்த பின் பேசாது என்ன ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.
 என்ன பிரச்சனை ….? எப்படி தெரிந்துக்   கொள்வது…. பொறுமை இல்லாது அந்த அதிகாரியிடமே கேட்டு விட்டாள்… “ சார் வெளியில்   மீடியா எல்லாம் இருக்காங்க….என்ன பிரச்சனை சார்….?” என்று…
அதற்க்கு அந்த அதிகாரி  பதில் அளிக்கும் முன்….. “ ஜமுனா உனக்கு இது தேவையில்லாதது . நீ முதல்ல ஆபிசுக்கு கிளம்பு.” இப்போது வெளிப்படையாகவே  ஜமுனாவை முறைத்துக் கொண்டு பேசினான்.
“ எது எனக்கு தேவையில்லாத விசயம்….? நீங்கலா….? இல்ல இந்த விடுதியா….?” 
“ ஜமுனா….? பல்லை கடித்துக் கொண்டு அவளின் பேச்சை நிறுத்த  முயன்றவனை தடுத்த அந்த அதிகாரி…
“  ஊருக்கே தெரிஞ்ச விசயம்….உங்க மேடமுக்கு தெரியலேன்னா….எப்படி…? அவங்க கேட்குறதுல ….நியாயம் இருக்கு தானே….?” பாலாஜியிடன் கேட்டவர்…
ஜமுனாவிடம்   விசயத்தை சொல்லி…தன் கைய்பேசியில் முன் பாலாஜியிடம் காட்டியதை ஜமுனாவிடம் காட்டினார். அதை வாங்கி பார்த்த ஜமுனாவின் முகம்  வெளிறி போய் விட்டது.
 அந்த அதிகாரி ஒன்றும் அந்த  ஆபாச காட்சியை கெட்ட எண்ணத்தில்   ஜமுனாவிடம் காட்டவில்லை. ஆண்கள் மத்தியில் தனித்து ஒரு பெண்ணாய் அந்த  படத்தை பார்த்தது… நெஞ்சி பட படக்க….நெற்றியில் வியர்வையின் திட்டுக்கள் அங்கு அங்கு பூக்க….கைய் கொஞ்சம் வெட வெடக்க..ஏதோ போல் ஆனது.
இதுக்கு தான் பாலாஜி அவளை அங்கு இருந்து அகற்ற பார்த்தான். அந்த படம் ஒரு பெண்ணின்  நிர்வாண படம் தான். ஒரு ஆணாக …ஆண்களுக்கு நடுவே தான் பார்த்தது வேறு…அதுவே ஆண்களுக்கு மத்தியில் ஒரு பெண்ணாய் ஒரு பெண்ணின்  நிர்வாண படத்தை பார்ப்பது என்பது…. அவளுக்கு எவ்வளவு அசுகரியத்தை ஏற்படுத்தும்.
தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட ஜமுனா தயக்கத்துடன் பாலாஜியை நிமிர்ந்து பார்க்க…அவனோ…உன்னை வெட்டவா….? குத்தவா….? என்பது போல் முறைத்து பார்த்துக் கொண்டு இருந்தான்.
பின்… “ இப்போ விசயம் தெரிஞ்சுடுச்சில…போறியா….?” வாசல் பக்கம் கைய் காட்டினான்.
அவளோ…. “  இல்ல இப்போ என்ன நடக்கும்….?” அந்த படத்தை பார்த்த சங்கடம் கொஞ்சம் அகன்றவளாய் அடுத்த என்ன நடக்குமோ…பயந்து போய் அவனிடம் கேட்டாள்.
ஜமுனாவுக்கு இவன் விடுதியில் எடுத்த போட்டோ….இவன் மேல் தானே பழி விழும். இவனை என்னவோ செய்து விடுவார்களோ….அவள் கண் முன் அவனை விலங்கிட்டு…வெளியில் அழைத்து செல்வது போலவும்…அதை அந்த மீடியாகாரர்கள் படம் பிடித்து அடுத்த நாள் கொட்டை எழுத்தில் செய்திதாளில் இடம் பெற்றது போலவும்…
என்ன என்னவோ நினைவு வந்து பயந்தவளாய்…அந்த அதிகாரிகளிடம்  “ சார்… சார் இவர் ரொம்ப நல்லவர்…இவர் அந்த அறையில் கேமிரா வைக்கல….” ஸ்டைட் ஸ்டேட்மெண்ட் கொடுப்பது போல் கொடுத்தவளை… பாலாஜி என்ன செய்தால் தகும் என்பது  போல் பார்த்தான்.
அந்த அதிகாரிகளுக்கு சிரிப்பு வந்து விட்டது போல்… “ இது சம்மந்தப்பட்டவர்களிடம் விசாரிக்கும் விசாரணை தான். இவர் பெயரில் தப்பு இல்லை என்றால்….இதில் பயப்பட ஒன்றும் இல்லை.” என்று ஜமுனாவிடம் சொல்ல..
“ இவர் மேல கண்டிப்பா தப்பு இருக்காது சார். எனக்கு இவர நல்லா தெரியும். ரொம்ப நல்லவர்.” வேலிக்கு ஓணா சாட்சி என்பது போல்..கட்டிக் கொள்பவனுக்கு சாட்சி கொடுத்தால் நம் ஜமுனா…
ஜமுனாவின் பேச்சில்… “ இந்த  நம்பிக்கை எப்போதில் இருந்து ….” என்பது போல் ஒரு பார்வை பார்த்தானே ஒழிய வாய் திறந்து கேட்க வில்லை.
ஜமுனாவின் பேச்சுக்கு ஒரு சிரிப்பை மட்டும் கொடுத்த அந்த அதிகாரிகள்…  தான் வந்த வேலையும்..நேரம் ஆவதையும் உணர்ந்து…
“ இந்த பெண்  எப்போ தன் ஊருக்கு போனாங்க ….?” வளையதளத்தில் இடம் பெற்ற பெண்ணை பற்றி கேட்ட அந்த அதிகாரிக்கு…
“ கொஞ்சம் இருங்க….”  என்ற பாலாஜி அந்த மகளிர்  விடுதியின் பொறுப்பாளர் சகுந்தலாம்மாவை அழைத்து விசாரித்தான். 
அவர் ஒரு லட்ஜரை பார்த்து விட்டு… “ போன வா…ர…ம்….போனா…ங்க சார்.”  என்ன தான் தவறு செய்ய வில்லை என்றாலும்..காவல்துறை விசாரணை என்று வரும் போது மக்கள் பயப்பட தான் செய்கிறார்கள்..அந்த பயத்தில் சகுந்தலா அம்மாவின் வார்த்தை திக்கி முக்கி வெளி வந்து விழுந்தன.
“ காரணம்  சொன்னாங்கலா….?”
“ ஆ கேட்டேன் சார். ஆபிஸ் லீவ் இல்லாதப்ப ஊருக்கு போறியேம்மா…ஏதாவது வரன் வந்து இருக்கான்னு….? அதுக்கு அந்த  பொண்ணு நான் இருக்க கேட்டுக்கு இப்போ அது ஒன்னு தான் குறச்சலுன்னு….ரொம்ப சலிச்சா போல சொல்லுச்சி….சார்.” சகுந்தலாம்மா சொன்னதும்..
அந்த அதிகாரி… “ஓ…” என்று சகுந்தலாம்மாவிடம் பேச்சை முடித்துக் கொண்டவர்கள்.
பாலாஜியிடமும் … “ ஏதாவது  விசாரிக்கனுமுன்னா நாங்க வருவோம்…வெளி ஊருக்கு எங்கேயும் போறதா இருந்தா….சொல்லிட்டு போங்க….” சொல்லி விட்டு எழுந்து போக…
ஜமுனா… “ ஏன்…ஏன் ஊருக்கு போக கூடாது.” அந்த வார்த்தை பாலாஜியை குற்றம் சாட்டுவது போல் இருக்க கேட்டாள்.
பாலாஜியோ…அந்த அதிகாரிகளிடம்… “ நீங்க சொன்னது போல் செய்கிறேன் சார்.” எழுந்து நின்று அவர்களை வழி அனுப்பி விட்டு…
“ இப்போ எதுக்கு நீ இங்க வந்தே….?” காதல் மொழி பேச நினைத்த  ஜமுனாவிடம் எரிச்சல் மிகுதியில் கத்தி விட்டான்.
“ஏன்..ஏன்..இங்கு நான் வரக் கூடாதா….?”
“ வரப்போ வராதே…வரக்கூடாத நேரத்துல சரியா வந்துடு….”
“ பார்த்தியா..பார்த்தியா… காதல் சொல்லி கொஞ்ச நாள்  தான் ஆச்சி…கல்யாணம் நேரம் குறிச்சி இன்னும் கல்யாணம் கூட ஆகல…அதுக்குள்ள என்ன உனக்கு பிடிக்கலலே… எனக்கு தெரியும் ..இந்த ஆம்பிளங்கல பத்தி …அது தான் உனக்கு தண்ணி காட்டினேன்….” 
 “ தண்ணி  காட்டினியா…? தண்ணி காட்ட நான் என்ன மாடா…..நீ என்ன நினச்ச…லவ் பண்ணா திட்ட கூடாதுன்னா….நான் திட்டுவேன்…அதுவும் உனக்கு ஏதாவது பிரச்சனை வரும் போல் இருந்தா திட்டுவது என்ன அடிக்க கூட செய்வேன்….காதலுன்னா  கொஞ்சிட்டே இருக்க மாட்டாங்க.”
எப்படி பேசினால் அவள் போவாள் என்று அறிந்து பேச…அவன் எண்ணியது போல்….” ஓ…அடிப்பிங்கலோ…அடிப்பிங்க அடிப்பிங்க…” தோள் மேல் இருந்த கைய் பையை இழுத்துக் கொண்டே அந்த இடத்தை விட்டு அகன்றாள்.
 

Advertisement