Advertisement

அத்தியாயம்….6

“ நீ யார்…..?” பாலாஜியின் சாதரண தோற்றத்தை பார்த்த அந்த காவல் அதிகாரி  அவ்வாறு கேட்டார்.

இது வரை அமைதியாக இருந்த மற்றோரு காவல் அதிகாரி மரியாதை இல்லாது பேசியவரின்    காதில் எதோ  முனு முனுக்க….

“ அப்படியா!!!! பார்த்தா தெரியலையே…..”

“நீ நம்மலேன்னா உண்மை இல்லேன்னு ஆகாது. நம்ம S.Iக்கு   இவர் ரொம்ப பழக்கம் பார்த்து.”  இரு அதிகாரிகளும் தங்களுக்குள் பேசிக் கொள்ள…

அதில் இடைபுகுந்த பாலாஜி….” இன்னும் எத்தன நேரத்துக்கு இது போல பெண்களை  வெளியில் நிக்க  வெச்சி பேசுவிங்க…..?” என்று  கேட்டவன்…

தன் கைய்பேசியை கையில் எடுத்துக் கொண்டே…. “ S.I ஸ்டேஷனுக்கு வந்துட்டாரா….?” கேட்டுக் கொண்டே தன் கைய் பேசியில் அவர் எண்ணை எடுத்தவனை  தடுத்தவராய் அந்த காவல் அதிகாரி….

“ இன்னும் இல்ல சார்.காலை மூனு மணிக்கு ஒரு பையன் தண்டவாளத்துல தலைய கொடுத்துட்டதா…ரயில்  நிலைய அதிகாரிகிட்ட இருந்து தகவல் வந்தது….

போய் பார்த்தப்ப   உடம்பு முண்டமா தான் இருந்தது. அவர் பாக்கெட்டில் போன எடுத்தா…. அது எந்த சேதாரமும் இல்லாது அப்படியே தான் இருந்தது.

அதுல சில போட்டா இருந்தது சார். அந்த பையன் கூட இருந்த அந்த பொண்ணு கூட…இந்த பொண்ணும் இருந்த போட்டோ ஒரு சிலது இருந்தது. அப்புறம்….அவர் பேக்கேட்டை ஆராய்ந்ததில்..ஒரு லட்டரும்  கிட்டச்சது சார்.”

அந்த அதிகாரியின் இப்போதைய பேச்சு…பாலாஜியை பார்த்தவுடன் பேசிய பேச்சு போல் இல்லை. மிக தன்மையாவே பேசினார்.

“ அந்த லட்டர்ல இந்த பொண்ண பத்தி ஏதாவது எழுதி இருந்தாரா….?”

“ ஆமாம்.” அந்த காவல் அதிகாரி  அப்படி சொன்னதும்…

“ என்னன்னு….?” இப்போது பாலாஜியின் குரலில் கொஞ்சம் பதட்டம் இருந்ததோ….?

“ மாயா தோழி ஜமுனாவிடம்  கேட்டதுக்கு, எனக்கு ஒன்னும் தெரியாதுன்னு சொல்லிட்டா….” அந்த அதிகாரி இப்படி சொல்லவும் தான்… பாலாஜிக்கு  “அப்பாடி”  என்றானது.

“ அப்புறம் ஏன் சார்..இப்படி இவங்க கிட்ட பேசிட்டு இருக்கிங்க….? அது தான் அந்த பையன் இவங்களுக்கு ஒன்னும் தெரியாதுன்னு சொல்லிட்டானே…..?”

பாலாஜியின் கேள்வியில்….என்ன பதில் சொல்வது என்று  அந்த காவல் அதிகாரி முழித்து நின்றார்.

எப்படி சொல்வார்….?ஜமுனா பற்றி விசாரித்ததில்…தகப்பன் பெயர் தெரியாத பெண்….வீட்டில் ஆண்கள் இல்லை. இது போல் இடத்தில் தானே…. அரசியல்வாதிகளிடமும்…. அவர்களின் ஆதரவோடு செயல்படும் ரவுடிகளிடம் காட்டப்படாத எங்களுடைய வீரத்தை ….

 இது போல் இடத்தில்  தானே காட்ட முடியும். அதற்க்கு தான் விசாரணையை  இங்கு இருந்து ஆராம்பித்தேன் என்று  சொல்லவா முடியும்….?

“ அந்த பையன் வீட்ல அழுவுறத பார்த்துட்டு மனசு தாங்காது….இங்கே வந்துட்டேன் சார்.  அந்த பொண்ணோட கூட்டாளி தானே இந்த பொண்ணு…கொஞ்சம் புத்தி சொல்லி இருந்தா…ஒரு உயிர் தப்பிச்சி இருக்குமே என்ற ஆதாங்கத்தில் சொல்லிடேன் சார்.

“ ஒரு உயிர் போனது வருத்துப்பட வேண்டிய விசயம் தான்…அதுக்குன்னு மத்தவங்க மதிப்போடு விளையாட கூடாது. அது என்ன   வார்த்தை….?கூட்டாளியா….? ஏதோ கொல்ல கூட்டத்தோடு தொடர்பு இருப்பது போல பேசுறிங்க…..

இந்த பொண்ணு  கிட்ட ஏதாவது கேட்கமுனுன்னா கேட்கலாம்,  தப்பு இல்ல. ஆனா கேட்கும்  முறைன்னு ஒன்னு இருக்கு.

கல்யாணம் ஆக வேண்டிய பொண்ணு. இப்படி ஒருத்தன் காதலிச்சிட்டு  தற்கொலை செய்ததுக்கிட்டான்…நீங்க வந்து விசாரிச்சா…இந்த தெருவுல இருக்குறவங்க என்னன்னு நினச்சிப்பாங்க….?”

அதே கவலை தான் வைதேகிக்கு….ஏற்கனவே தன்னால் தன் வீட்டில் பெண் கேட்க வருவார்களா….?என்பதே  சந்தேகம்   என்ற போது..

இப்போது  தன் பெண்ணை பற்றிய இந்த செய்தியில்….அம்மா போல பொண்ணு… இப்படி தானே ஊர் பேசும்….?

வைதேகி நினைத்தது போல் தான் பாலாஜி வரும் வரை இப்படி பட்ட பேச்சு  தான் அந்த இடத்தில் பேசப்பட்டது. நான் கூட அப்பா இல்லேன்னா என்ன…. பொண்ணு தங்கம் தான்னு நினச்சிட்டு இருந்தேன்.

விதை ஒன்னு போட்டா….சுரை ஒன்றா காய்க்கும்….?  என்பது சரியா தான் இருக்கு. இப்படி பட்ட பேச்சு தான் அங்கு  பேசப்பட்டது.

“அந்த பெண் என் விடுதியில் தான் தங்கி இருந்தாங்க…..” பாலாஜி அப்படி சொன்னதும்…

அந்த காவல்  அதிகாரி….” அப்படியா….?”

“ அந்த பொண்ண பத்தி விசாரிக்காம….இந்த பொண்ண பத்தி விசாரிச்சிட்டு வந்து இருக்கிங்க….”

இந்த பேச்சு மொத்தமும்  வீதியில்  தான் பேசப்பட்டது.அனைவரும் பார்த்துக் கொண்டும்…. கேட்டுக் கொண்டும் தான் இருந்தனர். யாரும் வந்து உதவி மட்டும் செய்ய தயாராய் இல்லை.

“ நீங்க இவங்களுக்கு…..”

“ நான் கட்டிக்குற பெண்….” அந்த வீதி மக்கள் கூடி இருக்க அனைவரும் முன்னும்,   ஜமுனாவை பார்த்துக் கொண்டே  சத்தமாகவே  சொன்னான்.

இது வரை அவமானத்தில் தலை குனிந்து இருந்த ஜமுனா,  பாலாஜியின்  அந்த வார்த்தையில் விழி விரித்து அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

திரும்பவும் அதே வார்த்தையை அவள் கண் நோக்கி…. “ நான் திருமணம் செய்யும் பெண்.” என்று சொன்னதும்…

“ வாழ்த்துக்கள் சார்…” பாலாஜியிடம் வாழ்த்திய அந்த காவல் அதிகாரியிடம்

“ இந்த கேசு விசயமா ஏதாவது  இவங்க கிட்ட விசாரிக்கனுமுன்னா…என்னை  தொடர்பு கொள்ளுங்க. நான் கூட்டிட்டு வர்றேன்.” என்று  தன் விசிட்டிங்க கார்டை அவனிடம் கொடுத்தான்.

அதில் அவனுக்கு சொந்தமாக இருக்கும் மகளிர் தங்கும் விடுதியின் எண்ணிகையை பார்த்து “ சரி  சார் அப்படியே ஆகட்டும்” கூழை கும்பிட்டு  போட்ட அந்த அதிகாரி…

ஜமுனா…வைதேகியிடமும்… “ மன்னிச்சிக்குங்கம்மா….. தப்பு யார் மேல இருக்குன்னு தெரியாம விசாரிச்சிட்டேன்.” மன்னிப்பு  கேட்டு விட்டே சென்றனர்.

“ நீங்க உள்ளே போங்க….” என்று சொன்ன பாலாஜி வைதேகியிடமும் தன் விசிட்டிங் கார்டை கொடுத்து விட்டு….

“ ஏதாவடு உதவின்னா…தயங்காம  கூப்பிடுங்க….” கைய் கூப்பி செல்ல பார்த்தவனை…

“ வாங்கலேன்….காபி குடிச்சிட்டு போகலாம்.” வைதேகி பாலாஜியை  வீட்டுக்குள் அழைத்தாள்.

அந்த அழைப்பு பாலாஜிக்கு எப்படி தோன்றியதோ…நம் ஜமுனாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது.  இது வரை யாரையும் வைதேகி வீட்டுக்கு அழைத்தது கிடையாது. அதுவும் ஆண்பிள்ளைகளை இல்லவே இல்லை என்று  தான் சொல்ல வேண்டும்.

ஆண்கள் இல்லாத  வீடு…ஒரு பேச்சு வந்து விடக்கூடாது என்றா…இல்லை ஒரு ஆணை  நம்பி வீட்டில் அழைத்த பாவம் தான் தன் வாழ்க்கை சீர் கெட்டு விட்டது என்ற எண்ணத்தாலா…..? ஏதோ ஒன்று…

தண்ணீர் கேன் கொண்டு வருபவனை கூட….” வாசலிலேயே வைத்து விட்டு போப்பா….” அங்கேயே பணத்தை  கொடுத்து விட்டு,  பைசல் செய்து  விடுவார்.

அப்படி பட்ட அம்மா இன்று இவனை… “ சீ..சீ இவரை….(மனதில் தன்னால் மரியாதை எழுந்தது.)

வைதேகி தன் மகள் பாலாஜி பற்றி சொன்னதுமே…பேசாம அவனுக்கே கட்டி வைத்து விடலாமா…..? என்று யோசனை செய்தவர் தானே…

இன்று  அனைவரின் முன்னும் தன் மகளை கட்டிக் கொள்பவன் என்று சொன்னதில் இருந்து…ஏமாற்றுபவன் கண்டிப்பாக அனைவரின் முன்னும் இந்த  வார்த்தையை சொல்லி இருக்க மாட்டான்.

தன் சிறு வயதில்  மனிதனை எடை போட தெரியாது ஏமாந்து போனார்…ஆனால் பணியில் கத்துக் கொடுத்ததோ…இல்லை வயது கத்துக் கொடுத்ததோ…இப்போது வைதேகிக்கு மனிதர்களை எடை போடும் தகுதி வந்து விட்டது.

அனைவரும் வேடிக்கை பார்க்க…இவர் தானே உதவி செய்தார். வீட்டில் அழைத்து இது பற்றி பேச தான்  வைதேகி பாலாஜியை வீட்டுக்குள்  அழைத்தார்.

“ சாரிக்கா….. கொஞ்சம் ஸ்டாக் இல்லேன்னு இப்போ தான் குக் சொன்னான். அத ஏற்பாடு செய்யனும். இப்பவே டைம் ஆயிடுச்சி…தப்பா எடுத்துக்காதிங்க….” என்று  மன்னிப்பு வேண்டியவனிடம்…

“ பரவாயில்ல தம்பி… பாவம் நீங்கல வேலையா போய் இருந்து இருப்பிங்க…இங்க எங்களுக்கு பிரச்சனைன்னு உதவ வந்ததே பெரிய விசயம் தம்பி.” கை  கூப்பி நன்றி தெரிவித்த வைதேகியின் கை பிடித்த பாலாஜி…

“ குடும்பத்தோட  வேலை  பெரிய விசயம் இல்லேக்கா…இப்போ கூட பிள்ளைங்க சாப்பாடு விசயம் அது தான்  போறேன்” என்றவனின் பேச்சில் வைதேகி அடியோடு சாய்ந்து தான்  போனார்.

“ பரவாயில்லப்பா போங்க ..உங்களுக்கு எப்போ சவுகரியப்படுதோ அப்போ வீட்டுக்கு வாங்க….” அவரும் தன் கைய் பேசி எண்ணை பாலாஜிக்கு கொடுத்து விட்டு..

“ வரதுக்கு முன்ன போன் போடுங்க தம்பி…நான் அப்போ தான்  வேலைக்கு லீவ் போட  வசதியா இருக்கும்.”

“ கண்டிப்பா அக்கா…” புன்னகையோடு வைதேகியிடம் விடைப் பெற்ற பாலாஜி,   மறந்தும் ஜமுனா பக்கம் தன் பார்வையை திருப்ப வில்லை.

ஜமுனாவுக்கு ஒன்றும் புரியவில்லை..என்ன நடந்தது….? இன்று படுக்கை விட்டு எழுந்தவளுக்கு அடுத்து அடுத்து…அதுவும் அந்த காவல் அதிகாரி பேசிய பேச்சு…. அதை நினைத்தாலே…

பாலாஜி வரவில்லை என்றால்….தன்னை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று இருப்பார்களோ….? அப்படி தான் நடந்து இருக்கும்.

ஆண்கள் இல்லாத வீடு…கண்டிப்பாக அனைவரும் இலக்காரமாக தான்  நடத்துவார்கள். இதோ இந்த தெருவில்  தான்  நீண்ட வருடங்களாக இருக்கிறோம்.

என் பிறப்பு அதை விடுத்து… தன்னை பற்றியோ தன் அன்னை பற்றியோ…தவறாக நினைக்கும் படி நடந்து இருக்கோமா….? அந்த காவல் அதிகாரி பேசிய பேச்சுக்கு யாராவது வந்து தங்களுக்காக பேசினார்களா….?

இல்லையே…அதற்க்கு  பதில்…அதானே….இவர்கள் இப்படி தான்..என்ற ஏளன பார்வை தானே ….அனைவரின் பார்வையிலும் தெரிந்தது.

ஜமுனா இவ்வாறு  நினைத்துக் கொண்டு இருக்க….  வைதேகி“ “வாம்மா…அதை எல்லாம் நினைக்காதே…வீட்டுக்குள்ள  வா…” என்று அழைத்து சென்றவர்…

“ அந்த தம்பி நல்லவர் தாம்மா….”

“ம்..தெரியும்மா…..” என்று  சொன்னாள்  ஜமுனா..

“ அப்போ கட்டிக்க என்னம்மா….?”

“ நான் என்ன கட்டிக்க மாட்டேன்னாம்மா சொன்னேன்…வீட்டுக்கு வந்து பொண்ணு கேளுங்கன்னு தானே சொன்னேன்.”

“அதான் அந்த தம்பி கேட்டுடுச்சில..அதுவும் அவ்வளவு பேரு முன்னாடி…”

இது தான் ஜமுனாவுக்கு குழப்பமாக இருந்தது. அனைவரின் முன்னும் அவன்  தன்னை பெண் கேட்டானா….?  தன் காதலை சொன்னனா என்று….

பாலாஜிக்கும் அதே யோசனை தான்….அனைவரின் முன்னும் அப்படி சொல்ல வேண்டும் என்று பாலாஜி திட்டம் எல்லாம் தீட்டவில்லை.

இன்று ஏனோ காலையில் இருந்து அவன் மனது ஒரு மாதிரியாகவே இருந்தது. அவனும் இந்த ஒரு வாரம் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறான்.

அந்த பெண்  மாயா ஊருக்கு சென்றதில் இருந்து ஜமுனா ஒரு மாதிரியாக இருப்பதையும்….அந்த பையன் கூட ஏதோ இவள் கிட்ட பேச போய்….மூஞ்சி தொங்க போட்டுக்  கொண்டு வந்ததையும்… பார்த்துக் கொண்டு தானே இருக்கிறான்.

எப்போதும் எட்டு மணிக்கு தான்  அந்த விடுதிக்கு  வரும் பாலாஜி,  இன்று  ஆறு மணிக்கே வந்து விட்டான். வந்ததும் நல்லதற்க்கே…

அவன் மட்டும் தன் ஆபிஸ் ரூமில் இருந்து இருந்தால்….ஜமுனா வீட்டு முன் போலீஸ் வந்த  உடனே வந்து இருப்பான். சமையலுக்கு தேவையான பொருள் ஸ்டாக் எடுக்கும் போது தான்…இது நடந்து விட்டது.

முருகேசன் மட்டும்  வந்து சொல்லாமல் இருந்து இருந்தால்….அவன்  எப்போது வந்து இருப்பானோ….?நல்ல வேளை என்று  தான் நினைக்க தோன்றியது.

அந்த காவல் அதிகாரி அனைவரின் முன்னும் ஜமுனாவை அப்படி   பேசியதை கேட்டதும்….தெரிந்து விட்டது ஆண்கள் இல்லாத வீடு விளையாடி பார்க்க நினைக்கிறார்கள் என்று…

விளையாட விட அவள் கைய்பொம்மை இல்லையே…என் பாவையை எப்படி விட்டு விட முடியும்.  அவள் என்னுடையவள். யாரும் அவளை லேசாக நினைத்து விடக்கூடாது என்று  தான் சட்டென்று அப்படி சொல்லி விட்டான்.

இப்போதும் சொன்னதும் நல்லதுக்கு தான் என்று நினைத்தான். தன் பேச்சு தான் ஜமுனா அம்மாவின் மனதில் நல்லெண்ணத்தை ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறது என்பதை அவன் நன்கு அறிவான்.

இப்படியே இருவரும் நினைத்து இருக்க…ஒரு வாரம் கடந்ததே தெரியவில்லை.இந்த ஒரு வாரத்தில் மாயாவின் பிரச்சனையும் ஒரு முடிவுக்கு வந்து விட்டது.

நடந்தது இது தான்…. மாயா கொஞ்சம் பெரிய இடம் போல்….இவள் நேரம் தன் காதலை வீட்டில் சொல்ல போகும் நேரம் தானா….சொந்தத்தில்  இவர்களை விட கொஞ்சம் வசதியான இடம்  வர..

மாயாவின் அப்பா….” என் பொண்ணும் வரா…நீங்க  பொண்ணு பாக்கா வாங்க….” என்று அழைப்பு விடுத்து விட்டார்.

வீட்டுக்கு வந்த மாயாவுக்கு அதிர்ச்சி  தான்.கூடவே கொஞ்சம் பயமும் இருக்க தான் செய்தது. இருந்தும் தைரியத்தை வர வழைத்து சொல்லி விட்டாள்.

காதலை சொல்லியதில் இருந்து வீட்டில் போராட்டம் தான். தாங்கள் பார்த்த இடம் என்ன…நீ பார்த்து வெச்சி இருக்க இடம் என்ன….? இந்த பேச்சு வார்த்தை நடந்துக்  கொண்டு  இருக்கும்  போது மாயா போனை அணைத்து விட்டாள்.

முடிவு தெரியாது விஷ்வா போன் செய்தால்…என்ன சொல்வது என்று…. ஏதோ நெட்பேங்கிங்  செய்ய போனை ஆன் செய்து விட்டு சென்றதும் விஷ்வா…போன் செய்ய அதை மாயாவின் அப்பா அட்டென் செய்ய…

“ என் பொண்ணுக்கு கல்யாணம் முடிவாயிடுச்சி..இனி போன் போடாதே….உன் கிட்ட எப்படி இதை சொல்வது என்று  தான் என் மக இத்தனை நாளா  போனை அணைத்து வைச்சி இருந்தா…

தோ இப்போ கூட உன் நம்பரை பார்த்து விட்டு தான்   நீங்களே சொல்லுங்கன்னு என் கிட்ட போனை  கொடுத்துட்டு போயிட்டா….”  மாயாவின் அப்பா வாயில் வந்ததை சொல்லி வைத்ததில்…. நடந்த விபரீதம் தான்…விஷவாவின் மரணம். இதில் யார் மீது தப்பு சொல்வது….? கேசு மூடப்பட்டு  விட்டது.

இருந்தும் ஜமுனாவுக்கு…ஒரு காதலால் ஒரு இறப்பு ..இதே தான் அவள் மனதில் ஓடிக் கொண்டு இருந்தது.

Advertisement