Advertisement

அத்தியாயம்….4
“ என்னடி ஆபிசுல  ஏத்தாவது பிரச்சனையா…..?” என்று கேட்டு கொண்டே  தன் கைய் கைய்யோடு ஜமுனா விட்டெறிந்த கைய் பையையு சேர்த்து வைக்க வேண்டிய இடத்தில் வைத்து விட்டு  தன் மகளின் அருகில் அமர்ந்து கேட்ட ஜமுனாவின் அன்னை வைதேகியிடம்…
“ அதெல்லாம் ஒன்னும் இல்லேம்மா…..” சிறு வயதில் யாராவது  “ உன் அப்பா யாரு….” என்று தெரியாத சிலர் கேட்டார்கள் என்றால்….தெரிந்தே பலர் கேட்டு இருக்கிறார்கள் அப்போது எல்லாம்…
கண்ணை  கசக்கிக் கொண்டு… விவரம் புரியாது… “ அம்மா அப்பா யார் அம்மா….?” அம்மாவின் அழுகையைய் பார்த்து…
“ அய்யோ உங்களுக்கே தெரியாதா….? பாவம் விவரம் அறியாது இன்னும் தன் அன்னை மனதை நோகடித்து இருக்கிறாள்.
விவரம் புரியும் வயது வந்த உடன்…. தன் அன்னை மனது  நோகாது நடந்துக் கொண்டாள். சிறு வயதில் நேரிடையாக கேட்டது… இப்போது முதுகுக்கு  பின் பேசப்பட்டது. அதை அமைதியுடம் கடக்க கற்றுக் கொண்ட சமயத்தில் தான்…
தன் பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிந்த அன்று வைதேகி தன் மகளை மடித்தாங்கி…. “ இத சொன்னா நீ என்னை  பத்தி என்ன நினைப்பேன்னு தெரியல…. இத கேட்டு என்ன நீ வெறுத்து கூட போகலாம்….ஆனா இனி இத உன் கிட்ட இருந்து மறைக்க கூடாதுன்னு தோனுச்சி…..” வைதேகியின் பேச்சில் இருந்தே… இப்போது தன் பிறப்பின் ரகசியத்தை சொல்ல போறாங்க என்பதை சரியாக யூகித்தாள் ஜமுனா….
ஜமுனா யூகித்தது போலவே…. “ எனக்கு கல்யாணம் ஆகல ஜமுனா….” இதை அவள் ஓரளவுக்கு எதிர் பார்த்தது தான். கஷ்டம் வர வரதான் மனதில் வைராக்கியம் வளர்வதோடு மெச்சூரிட்டியும் வளரும் போல்… ஜமுனா சிறு வயதிலேயே மிக பக்குவம் அடைந்த பெண்.
தன் தந்தை இறக்கவில்லை….அன்னையைய்  விட்டும் பிரிந்து செல்லவில்லை. அப்படி ஒன்று  இருந்தால் தன் அன்னை இந்நேரத்துக்கு சொல்லி இருப்பார். அப்படி என்றால்….? அவள் நினைத்தது போல் அன்னை சொன்னதும்…
எதுவும் கேட்காது  நிமிர்ந்து தன் அன்னை முகத்தை பார்த்தவளின் முகம் பற்றி… “ அம்மாவ பத்தி தப்பா நினைக்கிறியாடா செல்லம்…..? ” மகள் மட்டுமே உலகம் என்று வாழும் அந்த தாய்…
அந்த கேள்வி கேட்டு விட்டு தன் மகளின் முகத்தை பார்த்த அந்த பார்வை….இன்றும் ஜமுனாவுக்கு நினைவு இருக்கிறது…  “ இல்லை…” ஜமுனா என்று தலையாட்டியதும் தான்…
“ என் செல்லமே…” ஜமுனாவின் முகத்தை  ஈரமும் படுத்தி, அதை துடைத்தும் விட்ட வைதேகி… “ எங்க வீட்டு மாடியில தான் அவன் குடிவந்தான். பாக்கா நல்லா இருப்பான்.” சொல்லி விட்டு தன் முகத்தை பார்த்த அன்னையின் கைய் பற்றலோடு ஒரு புன்னகையும் சிந்த… அந்த  ஒத்த புன்னகையே வைதேகிக்கு போதுமானதாக இருந்தது.
“அப்போ நான் காலேஜ் முடிச்சுட்டு கவர்மென்ட்  வேலைக்கு எக்ஸாம் எழுதிட்டு இருந்தேன். படிச்சது பெண்கள் பள்ளி …கல்லூரியும் பெண்கள் கல்லூரி தான்.பள்ளி கல்லூரி இரண்டுமே வீடு பக்கம் தான்.
ஆண்கள் கிட்ட பேச வாய்ப்பு இல்லாத போது…அப்பா..அண்ணன் தவிர்த்து முதல் ஆண் மகன்..அழகானவன்  ஒருத்தன் வந்து..என் கிட்ட வலிய பேசி….என் மனச போல் நடந்து…நீ ரொம்ப அழகா இருக்கேன்னு சொன்னதும்… நான் தலை குப்புற  தான் விழுந்து விட்டேன்.
எங்க காதல் பேச்சோடு தாண்டி எல்லை கடந்தது….அம்மா அன்னிக்கி விசேஷமுன்னு வெளியே போயிட்டாங்க…. அண்ணனும் ..அப்பாவும் ஆபிசுக்கு  போன அன்னிக்கி எப்போதும் வீட்டுக்கு உள்ளே வராதவன் வந்தான். அன்னிக்கு நடந்த தப்புல எனக்கும் பங்கு உண்டு. ஆனா அப்போ எனக்கு அவன் திருமணம் ஆனாவன்னு தெரியாது.”
இது வரை முகத்தில் எந்த பாவனையும் காட்டாது கேட்டுக் கொண்டு இருந்த ஜமுனா…. “ அவன் கல்யாணம் ஆனவன்.” என்ற செய்தியில்…. விழி விரித்து தன் அன்னையின் முகம் பார்த்தவளிடம்…
“ அவன் டைம் பாசுக்கு தான் என் கிட்ட பழகி இருக்கான். சென்னைக்கு ஏதோ பயிற்ச்சிக்காக வந்தவன் முடிந்து அவன் சென்ற பின் தான் அவனைய பத்தி முழுவிவரமும் எனக்கு தெரிய வந்தது. அதுக்குள்ள நீ என் வயித்து நாளு மாசம். எல்லாம் என் கைய்  மீறி போயிடுச்சி.
அண்ணனுக்கு நிச்சம் செய்த இடத்துல…இது போல பொண்ணு இருக்க வீட்ல என் பொண்ண எப்படி அனுப்புவேன்…என்ற பேச்சில் ….தன் திருமணத்தை ஆசையாக எதிர் பார்த்தவன்….என்னை விரோதியாக பார்க்க….என் தெரு…என் சொந்த பந்தம்…என் அப்பா…அம்மா…அனைவரும்….என்னை ஒழுக்க கெட்டவள் என்பது போலவே பேசவும், பார்க்கவும்,  செய்ய ஆராம்பிச்சிட்டாங்க….
அப்போதைக்கு என்னோட ஒரே ஆதாரவு…நான் எழுதுன கவர்மென்ட்  தேர்வில் வெற்றி பெற்று..எனக்கு வேல கிடச்சது தான். அந்த வீட்ட விட்டு வரும் போது நீ மூணு மாசக் குழந்தை  அதோட என் பிறந்த வீட்டு சொந்தம் என்ன விட்டு போயிடுச்சி….நான் செஞ்சது ரொம்ப பெரிய தப்பு….அதுக்கு உண்டான தண்டனைய இன்ன வரைக்கும் நான் அனுபவிக்கிறேன்.” தன் வாழ்க்கையின் கசடை சொன்ன வைதேகி…
“ உன் பிறப்புக்கு காரணமானவன் பெயர் தெரியனுமா….?”  என்று தன் அன்னை கேட்டதுக்கு…
“ வேண்டாம்…” என்று தலையாட்டிய ஜமுனா…அதற்க்கு அடுத்து அதை பற்றி பேசியது இல்லை.
தன் அன்னை செய்தது தவறா….? சரியா…..? தெரியவில்லை. ஆனால் காதல் தவறானது…அந்த பதின் வயதில் அவள் மனதில் ஆழப்பதிந்தது இது தான்.
வாழ்க்கையில் தந்தை தெரியாத குழந்தைக்கு வர வேண்டிய அனைத்து பிரச்சனையும்,  ஜமுனாவுக்கு வந்தது. அதை உள்ளுக்குள்ளயே அடைத்து வைக்க பழகிக் கொண்டாள் என்ன ஒன்று  அப்போது எல்லாம் அவள் முகம் கோபத்தில் செவ செவ என்று சிவந்து….
அந்த கோபத்தை இது  போல் கைய் பைய்யோ….செருப்போ…அதில் காட்டி,  கொஞ்ச நேரம் சாப்பிட்டு தூங்கி எழுந்தால் என்றால்… சரியாகி விடும். இப்போது வேலைக்கு சென்றதில் இருந்து இது போல் கைய் பைய்யோ…செருப்போ மூளைக்கு ஒன்றாய் விழாது இருக்கவே…அந்த அன்னைக்கு கொஞ்சம் ஆறுதலாய் இருந்தது.
இன்று…பழைய நினைவில் மகளின் தலை கோதியவரின் கைய் பற்றிய…ஜமுனா…. “ இது வேறும்மா….” என்று சொன்னதுக்கு…
“ என்னதுடா…..” மகளின் அமைதியை பார்த்து….. “அம்மா கிட்ட சொல்லலாமுன்னா  சொல்லுடா….”
“ சொல்ல கூடாத விசயம் இல்லேம்மா…இன்னொரு வைதேகி உருவாக்க பாக்குறாங்க…” என்றதும்…
“ என்னடா என்ன விசயம்…யாராவது உன் கிட்ட தப்பா நடந்துக்க பார்த்தாங்கலா….?” ஆண்கள் இல்லாத வீடு பயந்து விட்டார் வைதேகி.
“ அய்யோ அம்மா…அது எல்லாம் இல்ல.” என்று சொன்னவள். பாலாஜி  தன்னை பார்த்தது , பேசியது, அனைத்தையும் ஒன்று விடாது சொல்லி விட்டாள். கேட்ட வைதேகிக்கு நெஞ்சில் ஓரம் ஆசை துளிர் விட்டது.
ஒழுங்கான பின்னணி இருக்கும் பெண்ணுக்கே திருமணம்  செய்வது என்பது உன்னை பிடி…. என்னை பிடி… என்பது போல் ஆகி விட்டது.அப்படி செய்து வைத்த திருமணம் நிலைப்பது  என்பது பெரிய குதிரை கொம்பு என்பது போல் இருக்கிறது.
இந்த லட்சணத்தில் தான் திருமணம் செய்யாமல் பிள்ளை பெற்றவள் என்றால்….தாயை போல் பிள்ளை நூலை போல் சேலை…இது போல் ஆயிரெத்தெட்டு பழமொழி இருக்கிறதே….. பணம் தன் மகளுக்கு திருமணம் செய்ய போதிய அளவு இருக்கிறது.
இப்போது வேலை வேண்டாம் என்று  எழுதி கொடுத்தால் கூட செட்டில் மென்ட் பணம் என்று பல லட்சங்கள் வரும். மாப்பிள்ளை வருவானா…..? அதை நினைத்து தான் வைதேகிக்கு கொஞ்ச நாளாய் மனது அடித்துக் கொண்டது.
யாரிடமும் என் மகளுக்கு மாப்பிள்ளை பாருங்கள் கேட்க கூட ஒரு மாதிரியாக இருக்கும் இந்த சமயத்தில்,  விரும்பி ஒரு பையன் வருகிறான்.
“ பையன் ஊரு….என்ன செய்யிறான் செல்லம்….?” ஆவளோடு கேட்ட அன்னையின் குரலில் படுத்து இருந்தவள் எழுந்து அமர்ந்து…
“ அம்மா நான் தான் சொன்னனே…அவன் சும்மா டைம் பாசுக்கு கேட்டு இருக்கான். நீங்க பாட்டுக்கு மனசுல கோட்டைய கட்டாதிங்க….”
“ நீயே எப்படி டைம் பாசுன்னு முடிவு செய்த….?”
“ அது தான்  பொண்ணு கேட்க வீட்டுக்கு வாடான்னா..பேக் அடிக்கிறானே…அதுல இருந்தே  தெரியல அவனோட லட்சணம்.”
“ சும்மா  எல்லோரையும் சந்தேக கண்ணோடவே பாக்காதே செல்லம்…ஒரு வேள அவன் நல்லவனா கூட இருக்கலாம்ல…..”
“ அந்த உங்க நல்லவன். உண்மையிலேயே நல்லவனா இருந்தா வீடு  தேடி வரட்டும்.”
வைதேகிக்கு அதற்க்கு  மேல் பேச வாய்ப்பு கொடுக்காது. ஜமுனா   பெட்சீட்டை இழுத்து போர்த்தி தூங்கி போனாள்.
எப்போதும் கிளம்பும் நேரத்தை விட சீக்கிரம் கிளம்பி….” அம்மா டிபன் எடுத்து  வைங்க….” என்று சொன்ன மகளுக்கு செய்து வைத்த பூரியை அவள் தட்டில் வைத்து தொட்டுக் கொள்ள  தால் ஊத்திய வாறே…
“ என்னடி இன்னுக்கி சீக்கிரம்  கிளம்பிட்ட….?” கேட்ட அன்னையிடம்….
“ என் பிரண்ட் உன் வீட்டு கிட்ட ஏதாவது பெண்கள் விடுதி இருக்கான்னு பாக்க சொன்னா…அது தான்  எதிர்த்த வாக்குல இருக்க விடுதியில விசாரிக்கலாமுன்னு….” என்று சொல்லிக் கொண்டே அவசர அவரசமாக வாயில் பூரியை அடைத்துக் கொண்டு  கிளம்பினாள்.
“ சார்…சார்… அந்த ஜமுனா பொண்ணு இங்கு வராங்க சார்.” அன்று அவ்வளவு கண்டித்தும்…தன் முதலாளியின் மனதுக்கு பிடித்த பெண்….தன் முதலாளியை காண  வந்ததும்….குஷியாகி ஓடி வந்து பாலாஜியிடம் சொன்னார் முருகேசன்.
“ நீ போ….” என்று முருகேசனை அனுப்பி விட்ட பாலாஜி….” நம்ம அவ வீட்டுக்கு பெண் கேட்க  வரலேன்னு…அவ மாப்பிளை கேட்க இங்கே வந்துட்டாளோ…..?” நினைத்துக் கொண்டே…காத்திருக்கும் பகுதியான வராண்டாவை நோக்கி சென்றவனை பார்த்து…. ஜமுனா விழி விரித்து தன்னால் எழுந்து நின்றாள்.
ஜமுனாவின் செயலை பார்த்தே நம்மை பார்க்க இவள் வரவில்லை  என்று பாலாஜி தெரிந்துக் கொண்டான். இங்கு வரும் பெண்கள்  இங்கு தங்குவதை பற்றி விசாரிக்க தான் பொதுவாக வருவார்கள்..
இவள் வீடு இங்கயே இருக்கும் போது…யாருக்காக விசாரிக்க…. ?தோழிக்காக இருக்குமோ ….? ஜமுனாவை பார்த்து அவள் அருகில் செல்வதற்க்குள்  ….அவள் வந்த காரணத்தை சரியாக யூகித்து விட்டான்.
“ ஓனர் வருவாருன்னு சொன்னாங்க…..?” பாலாஜியை பார்த்து ஜமுனா கேட்டதும்….
“ ஏன் என்னை பார்த்தா…முதலாளியா தெரியலையா….?”
அதற்க்கு…. “ ஓ…” என்ற பதில் மட்டுமே ஜமுனாவிடம் இருந்து வெளிப்பட்டது. பாலாஜி ஜமுனாவிடம் இந்த முகபாவனையை சிறிதும் எதிர் பார்க்கவில்லை.
தன்னை தெரியாதவர்களுக்கு தன் வசதி தெரியாது. அவன் தோற்றத்தை பற்றி அவனுக்கே நன்கு தெரியும்.  இது என் இடம் என்று சொன்னதும்..ஜமுனா ஆச்சரியப்பட்டு போவாள். இதை தான் அவன் எதிர் பார்த்தது. ஆனால்…
அவனின் நினைவை…. “ இங்கே தங்க எவ்வ்வளவு பே பண்ணனும்…..?”  அங்கு தங்குவதை பற்றி ஜமுனா விசாரிக்கவும்….
“ வாங்க என் ஆபிஸ் ரூமுக்கு போயிடலாம்…..” அந்த ஹால் மிக சிறியதாக இருக்கும். சில பெண்கள் அங்கு வந்து கூட பல்  விலக்குவர். அப்படி வந்த பெண்கள் வாயில் நுரை வழிவதை துடைத்துக் கொண்டே….பாலாஜி, ஜமுனாவை குறு குறு என்று பார்ப்பதை பார்த்து தன் ஆபிஸ் அறைக்கு அழைத்து சென்று…
தன் டேபுள் மேல் இருந்த  அங்கு தங்கும் ஆகும் செலவு..அதில் எது எது அடக்கம்…  அவர்கள் கேட்ட வசதி செய்து கொடுத்தால்.. கட்ட வேண்டிய அதிகப்படி பணம்….அங்கு தங்க கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்  அச்சடிக்கப்பட்ட காகிததை அவள் முன் நீட்டினான்.
பாலாஜியிடம் கேள்வி கேட்கும் அவசியமே இல்லாது அனைத்தும் அதில் இருப்பதை பார்த்து படித்தவள் மெச்சுதலோடு அவனை ஒரு பார்வை பார்த்தாள்.
“ என் பிரண்ட் கேட்டா..இத அவ கிட்ட கொடுக்குறேன்.  இதில் இருப்பது அவளுக்கு ஓகேன்னா…வருவா….” தன் கைக் கெடிகாரத்தை பார்த்த வாறே….ஆபிசுக்கு டைமானதை உணர்ந்து எழுந்து…
“ வர்றேன்….” சொல்லி போக பார்த்தவளை…. “ இப்போ நான் டைம் பாசுக்கு பழகும் ஆள் இல்லேன்னு புரிஞ்சி இருபிங்கன்னு நினைக்கிறேன்.” என்ற  குரலுக்கு…
திரும்பி… “ நீங்க பெண்கள் விடுதி நடத்துனா…. ரொம்ப நல்லவருன்னு நாங்க நம்பிடுவோம்மா….?” அப்போதும் அவள் இடக்காக தான் பேசினாள்.
“ அப்போ எத வெச்சி தான் நீங்க என்னை நம்புவிங்க….?”
“ தட்டோட என் வீட்டுக்கு பெண் கேட்க வந்தா….” என்று சொல்லி விட்டு  அங்கு நிற்காது போய் விட்டாள்.

Advertisement