Advertisement

அத்தியாயம்….3
பாலாஜி தங்கும் இடம் ஊரப்பாக்கம் என்பதால், எப்போதும்  போல் அவன் இரவு உணவை ஊரப்பாக்கம் விடுதியில் முடித்தவன்…அவன் ஒற்றை படுக்கை அறையில் மல்லாந்து  எப்போதும் போல் விட்டத்தை பார்த்து படுத்தவனுக்கு, எப்போதும் போல் தூக்கம் தான் வரவில்லை.
இன்று மாலை ஜமுனா சொன்னாதே அவன் நினைவடுக்கில் வந்து போயின என்பதை விட,  நிறந்தரமாக தங்கி விட்டன என்று தான் சொல்ல வேண்டும். அவள் சொன்னது போல் இதோ விடிந்ததும் அவள் வீட்டுக்கு  பெண் கேட்க சென்று விடலாம்.
ஆனால்  அப்படி பெண் கேட்டு விட்டால், அடுத்து திருமணம் தான். பின்  அவனின் லட்சியம் என்ன ஆவாது……? ஒரு ஆண்டாக அவன் விடுதி பெண்களை பிக்கப் செய்ய  அந்த வீதியின் முனையில் காத்திருக்கும் ஆண்களின் குழந்தை முகத்தை பார்த்து….
“ இந்த வயதில்  இவனுக்கு இந்த லவ்வு தேவையா….?” என்று  யோசித்தவனின் மனம், போக ….போக….இவனுங்கலே காதல் செய்யும் போது…நாம் செய்தால் என்ன…..? போக போக அந்த எண்ணம் தீவிரம் அடைந்து,  காதலித்து திருமணம் செய்ய வேண்டும் என்ற ஆசை மனதில் படி படியாக உயர்ந்து, திருமணம் செய்தால் காதலித்து தான் திருமணம் செய்ய வேண்டும் என்று நினைத்தவனுடைய மனசாட்சியோ….
பாத்து கட்டி வைக்க உனக்கு என்ன அப்பா… அம்மாவா ….இருக்காங்க….? நீயே ஒன்ன உஷார் செஞ்சா தான் உண்டு…இருக்கும் நிதர்சனத்தை எடுத்து உரைத்தது.
பார்க்கும் பெண்களை எல்லாம் இவர்களை காதலிக்கலாமா ….? என்று ஊன்றி பார்த்தது இல்லை. ஆனால் காதல் மணம் அதில் உறுதியாக இருந்தான்.
ஜமுனா இப்படி சொன்னதும்,  எந்த பதிலும் சொல்லாது கிளம்பியவனை பார்த்த அவள் பார்வையே சொன்னது…..அவள் மனதில் தன்னை பற்றி என்ன என்னுகிறாள் என்று….
இப்போதும் அவன் முடிவில்  எந்த மாற்றமும் இல்லை. காதலிக்க அவனுக்கு அவ்வளவு ஆசை. உண்மையான  அன்பை அவன் பத்து வயது வரை தான் அனுபவித்து இருக்கிறான். அதன் பின் ஏனோ …. தானோ ….என்ற  வாழ்க்கை தான்.
பணத்தை கொழிக்க செய்தவனுக்கு, அன்பை எப்படி பெற வேண்டும்…அதுவும் எனக்காக மட்டும் செலுத்தும் அன்பு…..யோசித்தவனுக்கு  கிடைத்த விடை தான் காதல்.( என்ன ஒரு லட்சியம்….)
இப்போது எப்படி தன் ஆசையை அவளுக்கு புரியும் படி கூறுவது என்பதில்  இருந்ததே ஒழிய …நீ இல்லை என்றால் என்ன…..? எனக்கு காதலிக்க பெண்களா கிடைக்க மாட்டார்கள்…..?  அப்படி அவன் நினைத்தும் பார்க்கவில்லை. அந்த அளவுக்கு அவனுக்கு ஜமுனாவை பிடித்து இருந்தது.
ஜமுனாவும் அவள்  வீட்டில் அவனை பற்றிய நினைவு தான். அந்த ட்ரையின  பிடிச்சி இருந்தா….நானே தண்ணீ பிடிச்சி இருக்கலாம். பாவம் இன்னிக்கும்  நான் வர லேட் ஆயிடுச்சின்னு அம்மாவே தண்ணீய பிடிச்சி இருக்காங்க.
பாக்க  மெச்சூடா  தான் தெரியுறான் . அவனுக்கும் டைம் பாசுக்கு தான் பொண்ணு தேவ போல….அதுக்கு அவன் வேறு ஆள தான் பார்த்துக்கனும்…யாரு கிட்ட…..?  அவ்வளவு தான் அவளுக்கு அவன் நினைவு.
“ நீங்க உங்கல பத்தி முழு விவரமும் சொன்னிங்கலா சார்….?” முருகேசன் கேட்டதுக்கு…
அவனை ஒரு பார்வை பார்த்தவன்…. “ போய் வேலைய பாரு முருகேசா….” பேச்சு இதோடு முடிந்தது என்று அவனை அனுப்பி வைத்தான்.
இந்த இரண்டு நாளாய் முதலாளி முகம் சரியில்லை என்ற காரணத்தினால்  தான், முருகேசன் போய் கேட்டது. அந்த பெண்ணிடம் பாலாஜி தன் விருப்பம் சொல்லி, அதை அப்பெண் மறுத்து விட்டதோ….அதான் இந்த சோகமோ என்று ….?
பாஜாஜி பணம் படைத்தவன் என்றாலும்,  பார்க்க அப்படி தெரிய மாட்டான். அவன் உடையை அவன்  ஐயன் செய்கிறானா….? சந்தேகம் படும் படி தான் அவன் உடைஇருக்கும்.
ஏதோ வேலை வெட்டி இல்லாதவன் தன் பின் சுத்துகிறானோ,  என்று நினைத்து அப்பெண் மறுத்து விட்டதோ…. ஜமுனா மத்தியதர வர்க்கம் என்றாலும்,  உடையில் எந்த குறையும் இல்லாது தான் உடுத்துவாள்.
இக்கால  பெரும் பால பெண்கள்,  மனதை பார்த்தா காதலிக்கிறார்கள்….? பார்க்க ஸ்டைலாக…. பந்தாவாக வண்டில் போய்  நின்னா விழுந்துடுறாங்க…..சாதரண நல்லவன் ஒருவன் வந்து காதலிக்கிறேன் என்று சொன்னால்….சட்டை செய்வது  கிடையாது.
அதை  நினைத்து தான்…. பாலாஜியிடம் உங்களை பற்றி அனைத்தும் சொல்லி விட்டிர்களா…? என்று  கேட்டது.
அதற்க்கு பாலாஜி மூஞ்சியில் அடித்தது போல் பேசி அனுப்பியது முருகேசனுக்கு ஒரு மாதிரியாக தான்  போய் விட்டது.
சரி அவர் முதலாளி….அப்பெண் பற்றி அறிய நம்மிடம் சாதரணமாக பேசினார். அதை நாம் அதிகப்படியாக பயன் படுத்தி இருக்க கூடாது என்று  தன்னை தானே தேற்றிக் கொண்டு பாலாஜி சொன்னது போல் தன் வேலையை பார்க்க போய் விட்டான்.
பாலாஜிக்கோ உங்களை பற்றி சொல்லிட்டிங்கலா…? என்று கேட்டது…. ஜமுனாவை கீழ் இறக்கி பேசியது போல் இருந்தது.
முருகேசன் அப்படி  கேட்டதுக்கு என்ன அர்த்தம்….? ஜமுனா என் பணத்தை பார்த்து என்னை காதலிப்பாள் என்று  தானே….ஜமுனாவை யாரும் கீழாக பார்க்க அவன் விரும்பவில்லை.
என்றைக்கு இருந்தாலும்…அவள் தான் இந்த விடுதியின் முதலாளி. அவளை திருமணம் செய்து அவள்  பொறுப்பை அவள் ஏற்க்கும் போது, அவளுக்கு கிடைக்க வேண்டிய மரியாதை கிடைக்க வேண்டும். அதனால் தான்  முருகேசன் மனது பற்றி கவலை படாது அப்படி பேசி விட்டான்.
பேசி விட்டானே ஒழிய…பாலாஜி தன்னை பற்றி ஜமுனாவிடம் சொல்ல வேண்டுமா….? அப்படி சொன்னால்….தான் தன்னை அவள் காதலிப்பாளா….? ஒரு மனது இப்படி கேட்டது என்றால்…..
மற்றொரு மனதோ அவள்  அப்படி பட்டவளாக இருந்தால்….தன் பெயர் கூட கேட்காது விருப்பம் இருந்தால் வீட்டில் பெண் கேள் என்று  சொல்லி இருப்பாளா….? அவன் நியாயமான மனது ஜமுனாவுக்காக பேசியது.
இப்படியே மூன்று நாட்கள் கழிய….கிண்டி ரயில் நிலையத்தில்  நின்ற பாலாஜியை , ஜமுனா யோசனையுடன் பார்த்துக் கொண்டு நின்றாள்.
பாலாஜியும் அவளை பார்த்தானே ஒழிய அவளிடம் சென்று  பேச முயலவில்லை. இப்போது அல்ல முதல் முறையும் அவள் தானே அவனிடம் சென்று பேசினாள்.
ஜமுனா செல்ல வேண்டிய வண்டி நின்றதும்….அவள் ஏறினாள். பாலாஜியும் அதே வண்டியில் முதல் வகுப்பு பெட்டியில்  ஏறியதை பார்த்து…
அவ்வளவு பெரிய அப்பாடக்கரா….? அவன் எவ்வளவு பெரிய அப்பாடக்கர் என்று  பாவம் அவளுக்கு தெரியவில்லை.
பாலாஜிக்கு வண்டி என்பது பழைய  டூ வீலர் தான். அதுவும் அதை தன் வீட்டில் இருந்து ஊரப்பாகம் விடுதியில் விட்டால்….அது அங்கேயே தான் இருக்கும்.
அவன் விடுதி  ரயில் நிலையம் அருகில் இருப்பதால்….ரயிலிலேயே அவன் பயணம். பின்  அங்கே அங்கே இருக்கும் தன் விடுதிக்கு நடந்தே சென்று விடுவான்.
முதல் வகுப்பு சீசன் டிக்கெட் எடுப்பது என்பது அவனுக்கு ஒரு விசயமே  கிடையாது. அதால் தன் நிலை உயர்வு அவன் நினைத்துக் கூட பாராதது.
கச கச என்ற ரயில் பயணத்தை தவிர்க்கவே இந்த முதல் வகுப்பு சீசன். அதுவுமே சில சமயம் கஜ கஜ என்று  தான் மக்கள் இருப்பர். அன்றும் பாலாஜி முதல் வகுப்பே ஆனாலும் நின்றுக் கொண்டு தான் வந்தான்.
ஊரப்பாக்கம் வந்ததும்,  ஜமுனா இறங்க கூடவே பாலாஜியும்  இறங்கியதை பார்த்து …இது வேலைக்கு ஆகாது என்ற பட்சத்தில் இப்போதும் ஜமுனா தான் அவன் அருகில் சென்றாள்.
“ வீட்ட பார்த்துட்டு பெரியவங்கல  கூட்டிட்டு வருவீங்களா…..?” அவள் எதற்க்கு….? எதை நினைத்து  கேட்குறாள் என்று தெரிந்ததும்…
தன் முகத்தில் புன்னகையை தவழ விட்டவன்…. “ எனக்கு உன் வீடு தெரியும்.”
“ஓ…அப்ப ஏன் வீட்டுக்கு வராம இப்படி…..” ரயில் நிலையத்தை சுற்றி காட்டி கேட்டுக் கொண்டு இருக்கும் போது…
அந்த  நிலையத்தின்  ஸ்டேஷன் மாஸ்டார்…. “ என்ன பாலாஜி தம்பி ஏதாவது பிரச்சனையா…..?” ஜமுனாவின் கோப முகத்தை பார்த்துக் கொண்டே பாலாஜியிடன் வினாவினார்.
எப்போதும் ஒரு ஆணும்,  பெண்ணும், விவாதம் செய்வது போல் இருந்தால்….பெண்ணிடம் தானே…. “ என்னம்மா ஏதாவது பிரச்சனையா….? என்று  கேட்டு அந்த ஆணை தானே முறைத்து பார்ப்பர். இங்கு என்ன தலை கீழாய்…இப்படி நினைத்தாலும்… தன் முறைப்பை ஜமுனா சிறிதும் குறைக்க வில்லை.
அந்த ஸ்டேஷன் மாஸ்டர் திரும்பவும் ஏதோ கேட்க முனைய….” ஒன்னும் இல்ல சார்…தெரிஞ்ச பொண்ணு தான்.”
“ஓ அப்படியா….?” என்று  சொன்னாலும், தன் சந்தேக பார்வையை ஜமுனா மீது செலுத்திக் கொண்டே தான்  சென்றார்.
என்னடா இது…..? நானே இங்க பல வருஷமா இருக்கேன். பள்ளியில் இருந்து…. கல்லூரி வரை…. இதே ரயில் நிலையத்தில் தான் நின்னுட்டு இருக்கேன். இந்த மாஸ்டர்  இந்த ரயில் நிலையத்தில் பணிக்கு வந்து வருசம் மூணு ஆச்சி….என்ன ஒரு தடவ கூடவா பார்த்து இருக்க மாட்டாரு…
எனக்கு பேசாம யாரோ ஒருத்தனுக்கு என்று நினைக்கும் போது தான் அந்த ஸ்டேஷன் மாஸ்டர்…. “ பாலாஜி….” என்ற அழைப்பு நியாபகத்தில் வந்தது.
ஓ துரை பேரு பாலாஜியா….? அந்த ஸ்டேஷன் மாஸ்டருக்கு இவன  தெரிஞ்சி இருக்கு….
“நீ  எங்கே இருக்க….?”  என்று ஒருமையில் கேட்டதுக்கு…
“ உன்னோட ஏழு வருசம் பெரியவன். நீ படிச்ச பெண் தானே  உனக்கு மரியாதை தெரியாது….” பாலாஜி காட்டமாக கேட்டான்.
பாலாஜி எந்த நிலையிலும் தன் மரியாதை குறைவதை விரும்ப மாட்டான். தன் விடுதியில் பல தரப்பட்ட மாநிலத்தில் இருக்கும் பெண்கள் தங்கி இருப்பதால், மொழி பிரச்சனையால் சில சமயம் அந்த பெண்கள் பேச தெரியாது   ஒருமையில் அழைத்தாலே அவனுக்கு அவ்வளவு கோபம் வரும்.
தன்னை அழைக்கும் முறையை தெள்ள தெளிவாக சொல்லி விடுவான். அப்படி பட்டவனிடம் இந்த  ஒருமை அழைப்பு அவனுக்கு அவ்வளவு கோபத்தை ஏற்படுத்தியது.
அந்த பெண்களாவது…மொழி பிரச்சனையால் தெரியாது அழைத்தார்கள். இவள் தமிழ்  தானே இவளுக்கு என்ன கேடு…..இப்படி தான் அவன் மனதில் நினைத்தான்.
“ ஓ துரைக்கு  கோபம் வேறு வருமா…?” என்று சொன்னவள். அப்போதும்….. “ உனக்கு எப்படி  மரியாதை முக்கியமோ…எனக்கு என் பெயர் முக்கியம் . அத கெடுக்க நான் அனுமதிக்க மாட்டேன். ஒரு பெண் பின்னாடி சுத்துறவனை  இதோடு மரியாதையா என்னால் அழைக்க முடியாது. மரியாதை உனக்கு தேவைன்னா…இனி என் பின்னாடி சுத்தாதே…..” சொல்லி விட்டு போக பார்த்தவளை…
“ நான்  உன்னை திருமணம் செய்துக்கிறேன் என்றால் கூட…   உன் பின்னால் வரக் கூடாதா…..?” பாலாஜியின் இந்த பேச்சு அவளை தடுத்து நிறுத்தியது.
“ அப்போ  உங்க வீட்டு பெரியவங்கல அழச்சிட்டு என் வீட்டுக்கு வர்றிங்கலா…..?” இது வரை அவள் பேச்சு அனைத்தும் வெட்டு ஒன்று… துண்டு இரண்டு என்பதாய் மட்டுமே தான் இருந்தது.
ஆனால் இப்போது அவள் பேசிய பேச்சில்….அந்த  குரலில் தெரிந்த ஆர்வம்…தன்னை மிகவும் பிடித்து விட்டது அதனால் தான்  இந்த ஆர்வம். கண்டிப்பாக இதனை அவன் நம்ப மாட்டான். தன்னை பார்த்த பார்வையில் ஒரு சிறிதளவு கூட ஆர்வம் தெரியவில்லை,  என்பதை அவன் நன்கு அறிவான். எதற்க்கு…?
தன் கேள்விக்கு பதில் அளிக்காது தன்னையே முறைத்துக் கொண்டு இருந்தவனிடம் திரும்பவும்… “ வீட்டுக்கு எப்போ வருவீங்க….?” முதலில் கேட்ட ஆர்வமான குரல் சிறிதும் குறையாது கேட்டவளிடம்….
“ உன் வயசு என்ன….?”
தான் கேட்டதுக்கு பதில் அளிக்காது…அவன் ஏதோ கேட்கிறானே…அதுவும் அவனுக்கு தெரிந்ததையே…
“கொஞ்ச நேரம் முன் தானே உங்களோட ஏழு வயசாவது பெரியவன் என்று சொன்னிங்க…..? எனக்கு உங்கல பத்தி எதுவும் தெரியல…ஆனா உங்களுக்கு என் வீடு…படிப்பு வயசு எல்லாம் தானே தெரிஞ்சி இருக்கு….”  எப்போதும் போல் இப்போது அவள் பேச்சு மாறி இருந்தது.
“ போன வருசம் தான் படிப்ப முடிச்சதா சொன்னாங்க….. உன் வயசு ஒரு இருபத்திரெண்டு…இல்ல இருபத்தி மூணு இருக்குமா….? அதுக்குள்ள ஏன் கல்யாணத்துக்கு அவசரப்படுற…?”
பாலாஜியின் இந்த கேள்வியில் அவனை எவ்வளவு முறைக்க முடியுமோ அவ்வளவு முறைத்து விட்டு…. “ ஏன்னா..இன்ன வரை என் அம்மாவுக்கு கல்யாணம் ஆகல….அட்லீஸ்ட் அது எனக்காவது நடக்கட்டுமே என்று தான்.” என்று சொல்லி விட்டு அவனை திரும்பி பாராது சென்று விட்டாள்.
அவள் பேச்சில்…நம் பாலாஜி தான் குழம்பி போனவனாய்..இவள் என்ன சொல்கிறாள்….? என்று அப்படியே நின்று விட்டான்.
நம் நாயகியோ….வீட்டுக்கு வந்து தன் கைய் பையை மூளையில் வீசி விட்டு….. தன் அன்னை இன்னும் அலுவலகத்தில் இருந்து வராததால்…காலையில் சமைத்து கட்டிக் கொண்டு போன மீதத்தை  ப்ரீஜில் இருந்து எடுத்து சூடு படுத்தி தன் பல்லில் உணவை அரைத்தால் என்றால்…. மனதில் பாலாஜியை அரைத்து தள்ளி விட்டாள்.
அது தானே பார்த்தேன்…என்ன பத்தி தெரிஞ்சு கல்யாணம் செய்துக்குறேன்னு சொன்னது நான் கூட அவன் ரொம்பபப நல்லவனோனோனோ நினச்சிட்டேன்.
ஆம்புள  புத்தி எப்படி போகும்….? டைம் பாசுக்கு நான் ஆள் இல்ல…பாலாஜியிடம் முதலில் சொன்னதையே மனதில் சொல்லிக் கொண்டாள்.
எனக்கு காதல் வேண்டாம் திருமணம் தான் வேண்டும் என்று  சொல்லும் ஜமுனா…..திருமணத்துக்கு முன் காதலித்தே ஆக வேண்டும் என்ற  ஆசைக் கொண்ட பாலாஜியும் எப்படி இணைவார்கள்….?

Advertisement