Advertisement

அத்தியாயம்….2
மூன்று நாட்களுக்கு முன் ஊரப்பாக்கம் விடுதியில் எந்த நேரத்தில் இருந்தானோ…அதே நேரத்துக்கு இருக்கும் படி அங்கு வந்தவனின் கண்கள் தன்னால் ஜன்னல் பக்கம் சென்றது. அன்று அந்த  ரெயின் கோட் போட்ட பெண் அவனை கவர்ந்தாளா….? என்பது தெரியவில்லை. ஆனால் திரும்பவும் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இன்று காலையில் தான் வந்தது.
என்ன இது விடலை பையன் போல ஒரு அவஸ்த்தை…நினைத்தவன் கண் முன் அவள் பிம்பம். அழகு தான். ஆனால் அப்படி ஒன்னும் அழகு இல்லையே….
இதோடு அழகி எல்லாம் அவன்  விடுதியில் தங்கி இருக்கிறார்கள்.அவர்களை பார்க்கும் கண்ணோட்டம் எல்லாம் வேறு மாதிரி தான் இருக்கும்.
அவர்களை கடக்கும் போது கண்ணோடு அவன் சேவியை தான் கூர்மையாக்கி கொள்வான். அவர்கள் பேச்சில் தன் விடுதி சாப்பாடு பற்றியோ…. வசதி பற்றியோ பேசிக் கொள்கிறார்களா…..? என்ன பேசுகிறார்கள்….? என்பதனை அறிய…
அதற்க்கும் மேல் அவர்கள் அவனிடம் தாக்கத்தை ஏற்படுத்த வில்லை. ஆனால்  இப்பெண்….அன்று போட்டு இருந்த ரெயின் கோட்…பார்த்த உடன் பெண் புத்திசாலி  தான் என்ற எண்ணம் மட்டுமே…
பின் அப்போ..அப்போ அவளின் நினைவுகள். ஆனால் இன்று  காலை எழுந்ததும்…. அவளை பார்க்கா விட்டாள் இன்று இரவு தூங்குவோமா…? .என்று நினைக்கும் அளவுக்கு அவளின் நினைவுகள் . மதியம் ஊரப்பாக்கம்  விடுதி காவலாளியை அழைத்து….
“ தண்ணீர் லாரி எப்போ வரும்…..?” முதலாளியின் கேள்வி அவனை குழப்பத்தில் ஆழ்த்தியது.
“ என்ன சார்…என்ன கேட்குறிங்க….?  எனக்கு புரியல….?”
அந்த விடுதியில் தண்ணீர் போதும் மட்டும் வந்துக் கொண்டு இருக்கிறது. இது வரை தண்ணீர் லாரிக் கொண்டு தண்ணீர் தொட்டி நிரப்பியது  கிடையாது.
அந்த விடுதி கட்டும் போதே, போரை வேண்டிய மட்டும் ஆழப்படுத்தி  விட்டான். அதனால் தான் அக்கம் பக்கம் தண்ணீருக்கு பஞ்சம் ஏற்பட்டாலும், விடுதிக்கு ஏற்படவில்லை. இதனால் அக்கம் பக்கத்து மக்கள் பேச்சையும் கேட்டு இருக்கிறான்.
அதை எல்லாம் காதில் வாங்க மாட்டான். அது வேறு விசயம்…ஆனால் இப்பெண்…இன்று  பார்க்க வேண்டும் என்று நினைத்து விடுதி காவலாளியிடம் கேட்டே விட்டான். ஆனால் பாவம்  அவருக்கு தான் புரியவில்லை.
இப்போது திருத்தமாக  “ நம் விடுதி இருக்கும் ஏரியாவில் எப்போ தண்ணீர்  லாரி வரும்….?”
அந்த காவலாளிக்கு எதற்க்கு கேட்கிறார்….? என்று புரியவில்லை . இருந்தும்  முதலாளி கேட்டதுக்கு பதிலாய்… “மூன்று நாளுக்கு ஒரு தடவை வரும் சார்.” என்று சொன்னதும்…
மூன்று நாளுக்கு ஒரு தடவை என்றால்… “ இன்னிக்கி வந்துடுச்சா…..?” அவசரமாக கேட்டான்.
“ இல்ல சார். எப்போதும் இரவு நேரத்துல தான் சார் வரும்.”
“ஓ….” அடுத்து எதுவும் பேசாது வைத்து விட்டவன். மூன்று நாளுக்கு முன் வந்த நேரத்துக்கு முன்னவே ஊரப்பாக்க விடுதிக்கு வந்து விட்டான்.
எப்போதும் போல் அவன் வேலைகளை செய்துக் கொண்டு இருந்தாலும்,   லாரி சத்தம் கேட்கிறதா….சேவியை கூர்மையாக்கி வைத்து காத்திருந்தான்.
அவன் எதிர் பார்த்த்து போல் தண்ணீர் வண்டியின் சத்தம் கேட்கவும்,   மக்கள் முதலிலேயே போட்டு வைத்த அவர் அவர் குடத்துக்கு அருகில் வந்து நின்றனர்.
பாலாஜி தான் பார்த்திருந்த வேலையை ஒதுக்கி விட்டு ஜன்னல் பக்கம் பார்வையிட ஆராம்பித்தான். அன்று  போல் ஏதோ வேடிக்கை பார்க்கும் நிலையில் இல்லாது…..அவள் எங்கு நிற்கிறாள்… என்று கண்கள் மேய்ந்தன.
பாவம் அன்று ஜமுனா வேலையில் இருந்து கொஞ்ச நேரம் முன் தான் வந்து இருந்ததால்…. “ நீ சாப்பிடு…நான் போய் தண்ணீ பிடிச்சிட்டு வர்றேன்” என்று சொல்லி  அவள் அம்மா வைதேகி வந்து இருப்பது அவனுக்கு எங்கு தெரிய போகிறது. கொண்டு வந்த தண்ணீர் காலியாகி லாரியும் சென்று விட்டது.
“ முருகேசா…என்ன வண்டி போயிடுச்சி…..?” காவலாளியை அழைத்து கேட்டவனை  யோசனையுடன் பார்த்த அந்த காவலாளி…
“ தண்ணீர் ஊத்துனா போயி தானே ஆகுனும் சார்.” முதலாளி எதையோ  தெரிந்துக் கொள்ள கேட்க நினைக்கிறார் . ஆனால் அதை வெளிப்படையாக கேட்காது சுத்தி வளைத்து  கேட்டு தெரிந்துக் கொள்ள முற்படுகிறார் . என்பது வரை அந்த படிக்காத அனுபவஸ்தருக்கு புரிந்து விட்டது.
ஆனால் சம்பளம் கொடுக்கும் முதலாளியிடன் அதை தைரியமாக கேட்காது கேட்டதுக்கு பதில் அளித்த முருகேசன். பாலாஜியின் முகம் சோர்ந்து இருப்பதை பார்க்க முடியாது.
“என்ன சார் ஏதாவது தெரியனுமா….? முதலாளி என்ன நினைத்தாலும் பரவாயில்லை என்று கேட்டு விட்டான்.
பாலாஜி  அனைவரிடமும் சுமுகமாக பேச மாட்டானே  ஒழிய…உதவி என்று வேலையாள் யார் வந்து கேட்டாலும் தப்பாது செய்வான்.
போன மாதம் தன் மகள்  பெரிய மனிஷி ஆனாதுக்கு….லீவும் காசும் கேட்டதுக்கு…. இல்லை என்று  சொல்லாது கொடுத்தவர்.
“ காச என்ன செய்ய போற  முருகேசா…..?” என்ன கேள்வி என்று யோசனை ஓடினாலும்…
“ பொண்ணுக்கு சடங்கு செய்ய தான் சார் கடனா கேட்டேன்.”உண்மையை சொன்னான்.
“ இது கடனா வேண்டாம். உன் மகளுக்கு நான் கொடுத்த பரிசா இருக்கட்டும். ஆனா இந்த காச சடங்கு செய்யாம அவ பேருல பேங்குல போட்டு வெச்சா அவ மேல் படிப்புக்கு உதவும்.”
என்ன இது காசும் கொடுத்துட்டு,  சடங்கும் செய்யாதேன்னு சொல்றாரு…. குழம்பி போனவனை…. “ உன் பொண்ணுக்கு என்ன வயசு ஆகுது முருகேசா…..?”
“ பதினொன்னு சார்…..”
“ பதினொரு வயசு முழந்தை வயசு முருகேசா…அந்த பொண்ணு பெரிய மனிஷி ஆயிட்டான்னு நீயே உன் தெரு முழுக்கும் விளம்பரப்படுத்துவியா…..? குழந்தையா பார்த்தவன் கூட அப்புறம் வேறு மாதிரி பார்ப்பானுங்க…இப்போ குழந்தையே விட்டு வைக்கிறது இல்ல….நாமே வம்ப வில கொடுத்து வாங்குனுமா சொல்லு….
அந்த காலத்துல பதினாறு வயசுல தான் பொண்ணுங்க பெரிய மனிஷி ஆவாங்க….என் பொண்ணு கல்யாணத்துக்கு  ரெடியா இருக்கா….என்று சொந்த பந்தத்த கூட்டி தெரிய படுத்த தான் இந்த விசேஷம் எல்லாம் வெச்சாங்க…
ஆனா  இப்போ பொண்ணுங்க பத்து வயசுலேயே பெரிய மனிஷியா ஆயிடுறாங்க…. அது மட்டும் இல்லாம அந்த காலத்துல பொண்ணுங்கல படிக்க எல்லாம் வைக்க மாட்டாங்க…
இப்போ இருக்க சூழ்நிலையில பொண்ணு படிச்சி தன் கால்ல நின்னா தான் நல்லது…தோ நீ வேலை பாக்குற  இந்த விடுதியிலேயே எத்தன பொண்ணுங்க, சொந்த ஊர விட்டுட்டு வேல செஞ்சி வீட்டுக்கு காசு அனுப்புதுங்க…. என்னடா காச கொடுத்துட்டு ….இப்படி பேசுறானேன்னு நினைக்கிறியா….?” என்று கேட்ட பாலாஜியிடம்..
“ அய்யோ அப்படி எல்லாம் இல்ல சார். நீங்க எலோர் கிட்டயும் அளவா தான் பேசுவீங்க…என் கிட்ட இவ்வளவு சொல்றிங்கன்னா அது என் நல்லதுக்கு தானே…நீங்க சொன்னாது போல சடங்கு எல்லாம் செய்யல சார்…வீட்டோடவே  வீட்டுக்கு அழச்சிக்குறோம்…. இந்த சார் நீங்க கொடுத்த காசு.”
திருப்பி கொடுத்த பணத்தை வாங்காது…. “ உன் பொண்ணுக்கு என் பரிசா இருக்கட்டும் நான் சொன்னது போல பேங்குல போடு….”
அப்படி ஏழை…. பாழைங்களுக்கு …. உதவி  செய்யும் முதலாளி…. குழம்பி போய் இருப்பது  காண முடியாது என்ன நினைத்தாலும் பரவாயில்லை என்று  கேட்டு விட்டான்.
பாலாஜி உடனே பதில் சொல்லாது  கொஞ்சம் யோசித்து….” அது எல்லாம் ஒன்னும்  இல்லே முருகேசா…நீ போய் சாப்பிட எடுத்துட்டு வா…..” என்று சொன்னவனின் பேச்சை கேட்டு…
உணவை  கொண்டு வந்து பாலாஜி டேபுள் முன் வைத்ததும்….” நீ சாப்பிட்டியா முருகேசா…..?” எந்த முதலாளி இப்படி அக்கறையுடன் கேட்பார்.
“ அதெல்லாம் ஆயிடுச்சி சார்…ரொம்ப  மீதி இருந்தது வீட்டுக்கும் கொடுத்து அனுப்பிட்டேன்.” பாலாஜி அதிலெல்லாம்  தாரளம் தான்.
அங்கு வேலை செய்பவர்கள் பெரும்பாலோர் அந்த  ஏரியாவில் இருப்பவர்கள் தான். அவர்கள் உணவை அங்கேயே முடித்துக் கொள்வர்.  இது போல் விடுதியில் சமைத்தது அதிக மீதம் இருந்தால் வீட்டுக்கு கொடுத்து அனுப்பலாம்.
ஆனால் போன் செய்து வீட்டில் இருப்பவர்களை வரவழைத்து கொடுத்தி விட வேண்டும். இவர்கள் போனால்  இரண்டு நாள் சம்பளம் பிடித்துக் கொள்வான். அவன் உதவி செய்வதை அவன் வேலையை பாதிக்காது பார்த்துக் கொள்வான்.
மற்ற்வர்களுக்கு அவன் வசதி  தெரியாவிட்டாலும், அங்கு வேலை பார்ப்பவர்களுக்கு அவன் வசதி தெரியும் தானே….? பாலாஜியும் தாங்கள் உண்ணும் உணவே சாப்பிடுவதை பார்த்து ஊழியர் அனைவரும் அதிசயத்து தான்  போவர்.
ஒரணா சம்பாதித்து விட்டு….மூவணா  செலவு செய்யும் காலத்தில், இப்படி இருந்தால் அதிசயத்து தானே போவார்கள்.
அப்படி பட்ட முதலாளியின் இன்றைய செயல் அந்த காவலாளிக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது…. அதுவும் உணவை கொடுத்து விட்டு…
“ ஏதாவது வேண்டுமா…..?” கேட்க சென்று பார்த்தால்…தான் வைத்த உணவில் கால் வாசிக் கூட உண்ணாது மூடி வைத்தவனை இதற்க்கு மேல் தாங்காது என்று…
“ சார் ஏதாவது தெரியனுமா….கேளுங்க சார். எனக்கு தெரிஞ்சதை சொல்லிடறேன்….மதியம் போன் செய்து தண்ணீர் வண்டிய பத்தி கேட்டிங்க….விசயம் அதை பத்தியதுன்னு தெரியுது..ஆனா என்ன என்று விவரம் தெரியல…..”
அப்போதும் பாலாஜிக்கு கேட்கலாமா…..? வேண்டாமா…..? என்ற குழப்பமே….
“ சார்…நான் எதுவும் தப்பா எடுத்துக்க மாட்டேன். இத பத்தி யாரு கிட்டயும் சொல்ல மாட்டேன்.” பாலாஜியின் முகத்தை வைத்தே அவர் கேட்க நினைக்கிறார். ஆனால்  எதற்க்கோ தயங்குகிறார் என்று சொன்னதற்க்கு…
“ மூன்று நாள் முன்  தண்ணீர் லாரி வந்த அன்னிக்கி ஒரு பொண்ணு தண்ணீர் பிடிக்க வந்துச்சி….” பாலாஜி பெண்களை  பற்றி வசாரிக்காதவன் இல்லை.
அது தன் விடுதியில் தங்கும் பெண்களை பற்றியதாக இருக்கும். அங்கு தங்கி இருக்கும் பெண்களுக்கு இரவு பணியும் வந்து போகும்…
அதை பற்றிய முழு விவரமும் அங்கு இருக்கும் லெட்ஜில் எழுதி கைய்யெப்பம் இட்டு  தான் செல்ல வேண்டும். அது மட்டும் இல்லாது விடுதி காப்பளர் சகுந்தலா அம்மாவிடம் சொல்ல வேண்டும். அவனின் விசாரணை  அனைத்தும் அது பற்றியதாக மட்டுமே இருக்கும்.
இது தான் முதல் முறை…தன் விடுதி பெண் இல்லாது மற்ற பெண்ணை  பற்றி கேட்டபது. பாலாஜி பேச்சில் இருந்தே அவன் எண்ணம் புரிந்த  முருகேசன்….
“ பேரு சார்…”
“தெரியல….முதல் தடவையா அன்னிக்கி தான்   பார்த்தேன்.” அடுத்து என்ன சொல்வது என்பது போல் பாலாஜி அமைதி காத்தான்.
“ இன்னிக்கி வரலையா சார்…..?”
வந்தா நான் ஏன் உன் கிட்ட விசாரிக்க போறேன் என்பது போல் முருகேசனை பார்த்தான்.
“ அந்த பொண்ணு எப்படி இருந்துச்சி சார்….நான்  இந்த ஏரியாவுல ரொம்ப நாள் இருக்குறவன் சார். அது மட்டும் இல்லாம வெளியிலேயே நின்னு இருக்குறதால…யார்….?யார்….? தண்ணீர் பிடிப்பாங்கன்னு எனக்கு தெரியும் சார். கொஞ்சம் அடையாளம் சொன்னா யாரா  இருக்குமுன்னு சொல்லுவேன்.” என்று முருகேசன் சொன்னதும்…
பாலாஜிக்கு என்ன சொல்வது என்று குழப்பமாக இருந்தது.இருட்டில் பார்த்த தொட்டு  நிறம் கொஞ்சம் கம்மியா தெரிஞ்சதா….?இல்ல அந்த பொண்ணோட கலரே கம்மியா…..? பாக்க கொஞ்சம்  உயரமா இருந்தது போல தான் இருந்தது. முகம் அது கண்டிப்பா கலையா இருந்தது. அதை அடித்து சொல்வான். இப்படி  சொன்னா இவனால் சொல்ல முடியுமா…..?”
“ அந்த பொண்ணு எது மாதிரி உடை உடுத்தி  இருந்துச்சின்னு சொன்னா பொண்ணு யாருன்னு…..?எனக்கு தெரிஞ்சாலும் தெரியலாம் சார்.” என்றவனிடம்…பாலாஜி என்ன சொல்ல முடியும்…..?
“ அந்த பொண்ணு ரெயின் கோட் போட்டு இரு…..” கடைசி வார்த்தையை  அவன் சொல்லி கூட முடிக்க வில்லை.
“ ஜமுனா சார்…அந்த பொண்ணு பேரு ஜமுனா…. நம்ம விடுதி எதிர்த்தா போல மூனு வீடு தள்ளி தான் சார் அந்த பொண்ணு வீடு. அந்த வீட்ல தான்  பத்து வருஷமா குடி இருக்காங்க. அம்மா பொண்ணு மட்டும் தான். அப்பா பத்தி ஒரு விவரமும் தெரியல. அவங்க அம்மா தமிழ்நாடு விவசாயத்துரை சேப்பாக்கத்துல தான் வேலை பாக்குறாங்க… இந்த பொண்ணு போன வருஷம் தான் படிப்ப முடிச்சி…கிண்டியில  ஒரு ஐடில வேல பாக்குது.”
ஜமுனாவின் ஜாதகத்தை தவிர. தனக்கு தெரிந்த அனைத்து விவரங்களையும் முருகேசன்  புட்டு புட்டு வைத்தார்.
அனைத்தையும் கேட்டுக் கொண்டு இருந்த பாலாஜி முருகேசன் சொன்ன ஐடியில வேல பாக்குது என்ற வார்த்தையில்…..
“ பொண்ணு என்ன படிச்சி இருக்கு…..?”
“ பி.ஈ ….சார்.”
“ஓ…” பாலாஜியின் குரலில் சுருதி கொஞ்சம் குறைந்தது.
“ என்ன சார்…ஏன் ஒரு மாதிரியா ஆயிட்டிங்க…..? பொண்ணுக்கு அப்பா இல்லேன்னா…..?”
“சேச்சே…அந்த பொண்ணுக்கு அப்பாதான்  இல்ல…எனக்கு இரண்டு பேருமே இல்ல…பிரச்சனை அது இல்ல….படிச்சி இருக்கா…. நான்  ப்ளஸ்…டூ தான்…அது தான் பாக்குறேன்.”
சும்மா பார்க்க வேண்டும் என்ற  ஆவளில் வந்தவனுக்கு…அவனோடு அவள் படித்தால்…என்ன படிக்கவில்லை என்றால் என்ன…..? தன்னால் தங்கள் இருவருக்கும் இருக்கும் இடைவெளியை மனது அசைப்போட்டு…இது சரி வருமா….? என்பதை விட… அந்த பெண் ஒத்துக் கொள்வாளா….?என்ற சிந்தனையே அவனுக்கு..
“ என்ன சார் உங்களுக்கு என்ன சார் குறச்சல்…படிச்சவன் சம்பாதிக்குறதோட நீங்க அதிகமா தானே சம்பாதிக்கிறிங்க…பாக்கவும்  நல்லா இருக்கிங்க….உங்கல யாராவது வேண்டாமுன்னு சொல்வாங்கலா…..?”
சொல்லிட்டாங்கலே….வேண்டாமுன்னு சொல்லிட்டாளே….ஆம் முருகேசன்  கொடுத்த விவரத்தை வைத்து, கிண்டி ரயில் நிலையத்தில் அவளுக்காக காத்திருந்தான். ஊரப்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்தே அவளை  பார்த்திருப்பான்.
இவன் யாருடனும்  பேச முயலவில்லை என்றாலும்,  இவனை தெரிந்தவர்கள் இவனை பார்த்தால்….” என்ன…சார்….” என்றோ…. “ தம்பி…” என்ற  அழைப்பிலோ விசாரித்து செல்பவர்கள் முன்….இந்த காத்திருப்பு வேண்டாம் என்று கருதியே…. தன் சந்திப்பை கிண்டியில் வைத்துக் கொண்டான்.
முதல் முறைப் பார்க்கும் போது நிறம் தன்னோட கம்மி தான்.  அதில் அவனுக்கு அவ்வளவு மகிழ்ச்சி. எதை வைத்தும் தன்னை அவள் மறுக்க கூடாது…இதுவே அவன் எண்ணமாய் இருந்தது.
அவள் அழகா..இல்லையா….?அதை எல்லாம் அவன் ஆராயவில்லை. ஏதோ ஒன்று…இவளை எனக்கு பிடித்து விட்டது. அது என்ன ….? என்று  கூட யோசிக்கவில்லை. காதலிக்க வேண்டும். இவள் என்னை காதலிக்க வேண்டும்.
பார்வையால் மட்டுமே ஜமுனாவை பின் தொடர்ந்தான். பேச முயலவில்லை….பத்து நாளும் இது போலவே கடக்க… பதினோன்ராம் நாள் மாலை  ஜமுனா எப்போதும் போல் ரயில் வருகிறதா….. பக்க வாட்டில் பார்க்கும் போது…பத்து நாளாய் பார்த்தவன் முகம் தெரிய, அவள் ஏற  வேண்டிய வண்டி வந்து நின்றும் ஏறாது இருந்தாள். பாலாஜி யோசனையுடன் அவளை பார்த்தான்.
அப்போது ஜமுனாவும் அவனை பார்க்க….என்ன நினைத்தானோ …..பாலாஜி  அவள் அருகில் வந்து நின்றான். அப்போதும் ஜமுனா தன் பார்வையை மாற்றாது அவனையே பார்த்துருந்தவள்.
“ என்ன லவ்வா…..? என்று கேட்டவள்.பின்….  “ பாக்க சின்ன பையனா தெரியல…அதனால இது வயசு  ஈர்ப்புன்னு சொல்லி தட்டி கழிக்க முடியாது. உங்களுக்கு என்ன அவ்வளவு பிடிச்சி இருந்ததுன்னா….வீட்டுக்கு வந்து பொண்ணு கேளுங்க…கல்யாணம் பண்ணிக்கலாம்.”
அவள் பேச்சில்…பாலாஜிக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை.  அவள் பேச்சில் அவன் மனது மகிழ்ந்ததா…..? கண்டிப்பாக இல்லை.
“ வீட்டுக்கு வாங்க ….” ஏதோ செய்தி வாசிப்பது  போல் தான் இருந்தது அவளின் பேச்சு.
ஜமுனா பேச்சுக்கு எந்த பதிலும் சொல்லாது அவள் முகத்தையே பார்த்திருந்தான் பாலாஜி அடுத்து என்ன சொல்வாள் என்று…ஏதோ சொல்ல போகிறாள் என்று நினைக்கும் வேளயில்…
“ என்ன சார்…எடுத்ததும் கல்யாணமுன்னு சொன்னதும் ஷாக் ஆயிட்டிங்கலா…. ?பின்ன இருக்காதா……? காதலுன்னு சொல்லிட்டு மூனு மாசம் சுத்திட்டி,  கழட்டி விடலாமுன்னு நினச்சா…இப்படி கல்யாணமுன்னு சொன்னா…ஷாக்கா தான் இருக்கும். என்ன செய்யிறது…நீங்க நினைப்பது என் கிட்ட நடக்காது…வேறு ஆள பாருங்க…..” வேறு கடைய பாருங்க….என்பது போல் சர்வசாதரணமாக சொன்னாள்.

Advertisement