Advertisement

அத்தியாயம்….11 
தண்டாயிதபாணிக்கு சட்டென்று வைதேகியை அடையாளம் தெரியவில்லை. அந்த அளவுக்கு வைதேகியின் தோற்றத்தில் மாற்றங்கள். ஆனால் தண்டாயிதபாணி அன்று பார்த்தது போலவே…. இன்றும் அப்படியே இருந்தார். மகளின் பிரச்சனையின்  வாட்டம் மட்டுமே தண்டாயிதபாணியின் முகத்தில் காணப்பட்டது.
உற்று பார்த்த்தில் வாய் தன்னால்… “ வைதேகி….” சத்தம் வெளி வரவில்லை. அவரையே பார்த்திருந்த்தால் அவர் வாய் அசைவில் தன் அத்தையின் பெயரை சொல்கிறார் என்பதை பாலாஜி புரிந்துக் கொண்டான்.
புரிந்துக் கொண்ட விசயம்… தெய்வம் நின்றுக் கொல்லும் என்பது உண்மை தான் போல் என்று  அவன் நடு மண்டையில் ஆணி அடித்தது போல் விளங்கியது.
தன் அத்தையிடம் எப்போதும் ஒரு கம்பீரம் இருக்கும்…அதை பார்த்த அனைவரும் சொல்வர். முகத்தில் வாழ்க்கையில் அவர் பட்ட அடிகள்….சிறு..சிறு கோடுகளாய் சுருக்கம் என்ற  பெயரில் அவர் முகத்தில் வயதை காட்டினாலும்…. அதுவும் ஒரு பக்குவப்பட்ட தோற்றத்தையே அவருக்கு கொடுத்தது. 
தனி ஒரு பெண்ணாய்…ஒரு பெண்ணை வளர்ப்பது என்பது அவ்வளவு சுலபம் இல்லை. அதுவும் வைதேகி போல்…திருமணம் ஆகாமல் குழந்தை பெற்றெடுத்து…உறவுகளின் ஆதாரவு இல்லாது  வளர்ப்பது என்பது அவ்வளவு எளிமையான விசயம் கிடையாது.
ஒரு பெண்ணின் கணவர் இறந்து விட்டால் என்றால்…அப்பெண்ணைய் இறக்கத்துடன்  இச்சமூகம் பார்க்கும். விவாகரத்து ஆனா பெண்ணை திமிர் பிடித்தவள் என்ற கண்ணோட்டதோடு நோக்கும்.
அதே…திருமணம் ஆகாது…பிள்ளை மட்டும் இருந்தால்…இச்சமூகம் அப்பெண்ணை  பார்க்கும் எண்ணமே வேறாக இருக்கும். மற்றவர்களின் அந்த எண்ணம் கொடுத்த தாக்கமே…வைதேகியின் முகம் எப்போதும் ஒரு இறுக்கத்துடன்  காணப்படும்.
என்னை அப்படி பார்க்காதே….?பார்த்தா….அவ்வளவு தான்.  ஆமா நான் அப்படி தான்..இப்போ என்ன….? என்பது போல் தான் அவர் செயல்கள் இருக்கும்.
மற்றவர்கள்  அதை எப்படி எடுத்துக் கொண்டார்கலோ..ஆனால் நம் பாலாஜி தன் மாமியாரை சரியாக கணித்து இருந்தான். இவர்கள் இப்படி இல்லாது இருந்து இருந்தால்…. அவர்கள் எப்படி இருந்து இருப்பார்களோ….? அதுவும் வயது வந்த பெண்ணை வைத்து இருக்கும் போது…அதை நினைத்து தன் மாமியார் மீது அவனுக்கு மரியாதை தான்.
ஒரு தடவை… ஜமுனா… “ என் அம்மாவ பத்தி நீங்க தப்பா நினைக்கலையே….?” ஜமுனாவில் அந்த கேள்வியில் இருந்தே….ஜமுனா காது  பட அவள் அன்னையை பற்றி என்ன என்ன பேசி இருப்பார்கள் என்று அவனால் புரிந்துக் கொள்ள முடிந்தது.
அதோடு அச்சமயம் ஜமுனா எவ்வளவு  வேதனை பட்டு இருப்பாள் என்பதையும் தான். 
“ உன் அம்மாவ பத்தி நினைக்க என்ன இருக்கு….”  உன் அம்மா தப்பு ஒன்னும் செய்யல இது ஒரு விசயமா…? என்று பொருள் படும் படி தான் கேட்டான்.
ஜமுனா சந்தேகத்துடன் தன்னை பார்த்து…. “  நீங்க புரிஞ்சி பேசிறிங்கலா…? இல்ல புரியாம பேசுறிங்கலா….?” நான் எதை நினச்சி கேட்டேன்னு உங்களுக்கு புரியலையா…..?”
“ புரியாம என்ன….? நல்லா புரியுது. உங்க அம்மாக்கு கல்யாணம் ஆகல..நீ இருக்க…அது தானே விசயம். காதல் தப்பானது இல்ல ஜமுனா….
அந்த காதல் பெயரை சொல்லிட்டு ஒரு சிலர் தன் உடல் எரிச்சல தீத்துக்குறாங்க….. மழை நீர் தூயமையானது. அது சாக்கடையில கலந்தா….அதை சாக்கடை நீருன்னு சொல்றோம்…ஆத்துல கலந்தா…குடிநீர்ன்னு சொல்றோம்.
 தப்பு மழையில் இல்ல..அது விழும் இடத்தை  வைத்து தான்…மழையின் பெயர் மாறுபடுது. அது போல தான் காதல்.  உங்க அம்மா காதல் தப்பு இல்ல..அந்த காதல் வைத்த நபர் தான் தப்பானவங்க.
 ஒரு காதலன்  கிட்ட தன்னையே கொடுத்து இருக்காங்கன்னா….அந்த காதலனை அவங்க  எந்த அளவுக்கு நம்பி இருப்பாங்க…. அந்த நம்பிக்கையே கெடுத்த அவன் மேல் தான் தப்பு… இப்படி எல்லா தப்பும்  அவன் மேல தான் இருக்கு….
என்ன ஒன்னு இந்த பழ மொழி இருக்கே…முள் மேல்  சேலை பட்டாலும்…சேலை மேல் முள் பட்டாலும் சேதாரம் சேலைக்கு தான் என்று….தப்பு அவன் மேல் இருந்தாலும் பாதிப்பு உங்க அம்மாக்கு ஆயிடுச்சி…
அவங்க நினச்சி இருந்தா..உன்ன அழிச்சிட்டு எதுவும் நடக்காதது  போல…ஒருத்தனை பார்த்து கல்யாணம் செய்துட்டு நல்ல படியா வாழ்ந்து இருக்கலாம். ஆனா அவங்க அதை செய்யாம….உன்னை பெற்று… நல்ல  முறையா வளத்து…
தோ எனக்கு தாரை வார்த்தும் கொடுக்க போறாங்க…  அப்படி பட்டவங்களை நான் தப்பா நினைப்பேனா…?” ஜமுனா மனதில் உன் அம்மாவை பத்தி நான் தவறா நினைக்கலை..என்பதை விளக்கமாக சொன்னவன் பேச்சின் முடிவில் அவளை சகஜமாக்கும் பொறுட்டு… விளையாட்டு பேச்சாக முடித்து வைத்தான்.
அதுக்கு என்று வைதேகி செய்தது சரி என்று  அவன் சொல்ல வில்லை…காதலில் காமம் உண்டு தான்…ஆனால் அது எந்த நேரத்தில் என்பது தான் அந்த காதலுக்கு மரியாதை. வைதேகி காதலன்  மேல் உள்ள நம்பிக்கையில் காதலுக்கு மரியாதை செய்யவில்லை.
ஆனால் அதன் அடுத்து ஜமுனாவிடம்  அவன் சொன்னது போல் தனக்கு என்று ஒரு வாழ்க்கை அமைத்து நன்கு வாழ்ந்து இருக்கலாம். அதை செய்யாது….நல்ல முறையில் தானே ஜமுனாவை அவர் வளர்த்து இருக்கிறார்.
  அந்த விசயத்தில் அவன் சொன்னது போல் உண்மையில் வைதேகி மேல் அவனுக்கு மரியாதை உண்டு. தன்ன தனியாக அவர்கள் எத்தனையோ இன்னல்களை சந்தித்து இருப்பார்.
இனி திருமணத்துக்கு  பின் அவரை நல்ல முறையில்  பார்த்துக் கொள்ள வேண்டும்..என்ற எண்ணம் அவன் மனதில் ஓடிக் கொண்டு தான் இருக்கிறது.
இதை பற்றி  அவன் ஜமுனாவிடமே வாய் திறந்தான் இல்லை. தனக்கு இனி ஜமுனாவின் அம்மா தானே தனக்கு அம்மா…. அந்த அளவுக்கு வைதேகி மீது பாலாஜி அன்பு என்பதோடு மதிப்பு வைத்திருந்தான்.
மாமியாரை தன்னோடு வைத்திருப்பதை பற்றி ஜமுனாவிடம் திருமணத்துக்கு பின்  பேசிக் கொள்ளலாம்….முதலில் திருமணம் நல்ல படியாக முடியட்டும் என்று காத்திருந்தான்.
வைதேகியின் வாழ்க்கையை  கெடுத்தவன் தன் முன் இருப்பவன் என்று புரிந்துக் கொண்டதும் பாலாஜியின்  பார்வையே மாறிப்போனது. பாலாஜி மற்றவர்களுக்கு வலிய சென்று உதவி செய்பவன் இல்லை.
அதே போல் மற்றவர்கள் மனது புண்படும் படியும் அவன் இது வரை பேசியது கிடையாது.  தன் விடுதியில் தங்கி இருக்கும் பெண்கள் தன் காதலனோடு சென்று விட்டால்….
தனக்கும் இதற்க்கும்  சம்மந்தம் கிடையாது…எங்கள் விடுதி இதுக்கு பொறுப்பு ஏற்காது….சொல்லி விடுவான். அது அவன் விடுதி விதிமுறை….வம்பு வளர்க்கும் கூட்டம் அவனிடம்  அப்பெண்ணை பற்றி தவறாக பேசினால்…
 அவர்களிடம்…..”முதலில் உன் வீட்டு  பெண் எங்கு போகுது வருதுன்னு பாருங்க….” மூஞ்சியில் அடித்தது போல் பேசி விடுவான்.
ஆனால் இப்போது பாலாஜி அதை எல்லாம் பார்க்காது… “ வினை விதைத்தால் வினையை தான் அறுப்பான்.” தண்டாயிதபாணியை பார்த்து சொன்னதும்….
தன் பிரச்சனை மறந்து  வைதேகியை அதிர்ச்சியுடன் பார்த்திருந்த தண்டாயிதபாணி  பாலாஜியின் இந்த பேச்சில் அவரை பார்த்தார். இப்போது தண்டாயிதபாணியின் முகம் அதிர்ச்சியில் இருந்து  குழப்பத்துக்கு மாறியது.
வைதேகிக்கு இவர் யார்….? பக்கத்து இருக்கையில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு….உரிமையுடன் அமர்ந்து இருப்பதை பார்த்தால்…. நெருங்கிய சொந்தம் என்று தெரிகிறது.
வைதேகிக்கு தம்பி இல்லை..ஒரே ஒரு அண்ணன் தான். ஒரு சில கணக்கை மனதில் போட்டவர் பாலாஜி வயதை  வைத்து மகனாய் இருக்காது.
மச்சினராய் இருப்பாரோ.. அப்போ இந்த  விடுதிக்கு வைதேகியின் கணவனுக்கும் பங்கு இருக்குமோ….என்று  நினைத்தாரே ஒழிய….
தான் செய்த பாவத்தால்  ஒரு பெண் இத்தனை வருடம்த னியாக   வாழ்க்கையில் போராடிக் கொண்டு இருக்கிறாள். அதுவும் அன்று  செய்த பாவத்தின் விரூட்சமாய் இருபத்தி மூன்று வயதில் ஒரு பெண் வளர்ந்து இருக்கிறாள் என்று  அறியாது…இப்படி தான் யோசித்தார்.
பாலாஜியின் பார்வையில் என்ன நினைத்தாரோ….வைதேகி இதை  எல்லாம் சொல்லி இருக்க மாட்டா…அதுவும் புகுந்த வீட்டில்…. இப்போது கூட தான் செய்த செயலின் வீரியம் தெரியாது தான் யோசித்தார். 
ஆனால் இவன் ஏன் இப்படி பார்க்கிறான் அதற்க்கும் காரணம் புரியவில்லை தண்டாயிதபாணிக்கு….
“ என்ன….உங்க பொண்ணுக்கு ஒன்னுன்னா துடிக்குது..அதை நீ மத்த பொண்ணுக்கு செய்யறப்ப இனித்ததா….?”
பாலாஜியின் இந்த பேச்சில்…சொல்லி விட்டாளா…? இதை எல்லாமா சொல்லி இருப்பா… அதுவும் புகுந்த வீட்டில்…வைதேகிக்கு திருமணம் ஆகி இருப்பாள். இது எல்லாம் பெரிய விசயமா…? வயதில் இது எல்லாம் சகஜம் . அப்போதும்  தண்டாயிதபாணியின் எண்ணம் இதுவாக தான் இருந்தது. 
இதோ இப்போது தன் மகளுக்கு இப்படி நடந்தும் கூட…. அவர் கவனத்தில் வைதேகி வரவே இல்லை. அந்த அளவுக்கு தான் தண்டாயிதபாணியின் வாழ்க்கையில் வைதேகியின் பங்கு.
இப்போது பாலாஜியின் இந்த பேச்சில்…  “சார் நீங்க என்ன சொல்றிங்க…?” சாந்தி கேட்டாள்.  வைதேகியை பார்த்ததும் சாந்திக்கு அடையாளம் தெரிந்து விட்ட்து.
ஜமுனாவின் அம்மா என்று….ஜமுனாவுக்கு  பிரச்சனை வந்த அன்று பாலாஜி வலிய சென்று உதவி செய்ததில் இந்த விடுதி முழுவதும் பேச்சு இது தான்.
“ நம்ம ஏகபத்தினி விரதன் ஒரு பொண்ணுக்கு அவரே போய் உதவி செஞ்சாராம்” விடுதி பெண்கள் பாலாஜிக்கு இட்ட பட்ட பெயர்  ஏகபத்தினி விரதன். தண்டாயிதபாணிக்கு அய்யோ என்றானது..
இதை எல்லாம் என் மகள் கேட்டால்…. பயந்து விட்டார். இந்த பிரச்சனையில் மகளுக்கு உதவி  செய்ய கேட்டு வந்த்து கூட மறந்தவராய்….
“ அது தான் சார் முடியாதுன்னு சொல்லிட்டாரே..வா வேறு ஏதாவது வழி இருக்கான்னு   பார்க்கலாம்….” அங்கிருந்து பெண்ணை அவசர அவசரமாய் அழைத்து செல்ல பார்த்தார்.
“ அப்பா இருங்கப்பா நான் சார் கிட்ட பேசுறேன்.” தந்தையின் வாயை அடைத்த சாந்தி பாலாஜியை பார்த்து…
“ சார்..சார் நீங்க மனசு வெச்சா எனக்கு உதவி செய்ய முடியும் சார். அன்னிக்கி இவங்க  பொண்ணுக்கு உதவி செஞ்சிங்கல சார்.” எப்படியாவது தன்னை சந்தி சிரிக்க வைத்தவனுக்கு தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும்  என்று பாலாஜியிடம் கெஞ்சினாள்.
இதை பார்க்க பாலாஜிக்கும் பாவமாக தான் இருந்தது.  இவள் அப்பா செய்த தப்பு ஒரு புறம் இருந்தாலும்…தண்டாயிதபாணி சொல்வதை பார்த்தால் பெரிய பெரிய தலைகள் எல்லாம் இதில் இன்வால்வ் ஆகி இருப்பது போல தெரிகிறது. இதில் தன்னால் என்ன செய்ய முடியும்….? என்று தான் நினைத்தான்.
அதை அப்பெண்ணிடம் பொறுமையாகவே சொன்னான்..” தோ பாரும்மா…ஜமுனா விசயம் வேறு.. உன் விசயம் வேறு…” பாலாஜி தன் பேச்சை முடிப்பதற்க்குள்…
“ என் பொண்ணை இவர் கட்டிக்க போறவர்..அந்த சொந்தத்துல இவர்  என் மகளுக்கு உதவி செய்தார். நீ இவருக்கு யாரும்மா….உதவி செய்ய…?” இத்தனை வருடம் தான் பட்ட அவமானங்கள்..பட்ட வேதனைகள்…வார்த்தைகளாய் வந்து விழுந்தன.
இந்த பேச்சில் தண்டாயிதபாணி..இவருக்கு தான் பொண்ணை கொடுக்க போறாளா..பரவாயில்லை பெரிய இடமா தான் தன் மகளுக்கு பேசி முடிச்சி இருக்கா….  என்று நினைத்தவர்…திரும்பி தன் மகளை பார்த்தார்.
இப்படி தன் வாழ்வை தானே கெடுத்து இருக்காளே…. வைதேகியின் மகளும் தன் மகள் தான் என்று தெரியாது இருவரையும் தொடர்பு படுத்தி நினைத்துக் கொண்டார்.
“ இல்ல ஆன்டி நீங்க மனசு வெச்சா எனக்கு நியாயம் கிடைக்க செய்ய முடியும்…உங்க மகள் சொன்னா சார் கண்டிப்பா கேட்பாரு…ப்ளீஸ் ஆன்டி…ப்ளீஸ்…” சாந்தி வைதேகியிடம் கெஞ்சிக் கொண்டு இருக்கும் வேளயில்…
 மருதாணி கைய்யோடு அங்கு வந்த ஜமுனா… “ அம்மா மருதாணி எப்படி இருக்குன்னு காமிக்க  இவர கூட்டிட்டு வாங்கன்னு தானே உங்களை அனுப்பினேன். அதை விட்டுட்டு மருமகன் கிட்ட பேசிட்டு இருக்கிங்களா….”
இன்று மாலை நிச்சயத்துக்கு ஒரு வாரமாக முகத்துக்கு பேஷியல்…ப்ளீச்சிங்….எக்ஸட்ரா….எக்ஸட்ரா…செய்து ஏற்கனவே மழு மழு இருந்த கன்னத்தை இன்னும்  மெருகூட்டியதில் ஜமுனாவின் அழகு கூடி தெரிந்தது.
அந்த அழகு முகத்தை பார்த்த பாலாஜி…. “அய்யோ இருந்து இருந்து எனக்கு ஒரு நல்லது நடக்குது அதை அனுபவிக்க விடாது இன்னிக்கி தான் இவர் வரனுமா….?கடவுளே இவர் யார் என்று  ஜமுனாவுக்கு தெரிந்தால்..இவள் முகத்தில் இருக்கும் இந்த மகிழ்ச்சி நிலைக்குமா….?
தான் கேட்டதுக்கு எந்த பதிலும் சொல்லாது இருந்த  அன்னையை பார்த்தவள்… பின்பு பாலாஜியை பார்க்க..இருவர் முகத்தையும் பார்த்த ஜமுனாவுக்கு குழப்பமாக இருந்தது.
காலையில் கூட போனில் “ ஈவினிங் எப்போ வருமுன்னு இருக்குன்னு  போனிலேயே ஒரு லிட்டருக்கு ஜொள்ளு ஊத்தினானே..இப்போ நேருல வந்து இருக்கேன்… ஆசையா பாக்கம என்னமோ விளக்கு எண்ணைய குடிச்சாப்பல இருக்கான்.
இந்த அம்மா கூட “ தோ மாப்பிள்ளையே கூட்டிட்டு வரேன்னு சந்தோஷமா தானே வந்தாங்க…இப்போ ஏன் ஒரு மாதிரியா இருக்காங்க….?” என்று நினைத்துக் கொண்டு இருந்தவளின் பார்வையில் அப்போது தான் பட்டனர்…
சாந்தி ..தண்டாயிதபாணி…சாந்தியை  வலையதளத்தில் பார்த்தாலும்…அந்த அளவுக்கு  உன்னிப்பாக பார்க்கவில்லை. அதனால் அடையாளம் தெரியாது…
“ இவங்க யார் பாலாஜி உங்க  சொந்தக்காரங்களா….?” ஊரில் இருந்து வந்த சொந்தமோ என்று கேட்டாள்.
“ அவர் சொந்தம் இல்லை. உன் சொந்தம்…” இப்படி சொன்னது வைதேகியே….

Advertisement