Advertisement

அத்தியாயம்….10 
அன்று காபி ஷாப்பில்  அந்த கை பற்றல் பாலாஜிக்கு  ஜமுனா மீது ஒரு உரிமை உணர்வை கொடுத்தது. ஜமுனா பேசிய  கோப பேச்சையும் மறக்க வைத்தது அந்த கை பற்றல்…
யார் பேசினா….? என் ஜம்மூ தானே…. பேசிட்டு போகட்டும். என்னை அவ பேசாம யார் பேசுவா….? என்பது போல் அவன் மனதில் எழ…பின் என்ன…?  அவர்களின் மீட்டிங் பாயிண்ட் கிண்டி ரயில் நிலையம் என்றானது. 
காபி ஷாப் ரயில் நிலையம் கேண்டின்…. பாலாஜி  சாம்பார் வடை வாங்கி வந்து ரயில் நிலையத்தில் இருக்கும் காலியான இருக்கையில் அவளை அமர வைத்து  தானும் அமர்ந்து இருவரும் ஒரே ப்ளாட்டில் இருக்கும் வடையை….பகிர்ந்து உண்டனர் என்றால்…
மறுநாள்…பாலாஜி வருவதற்க்கு முன்  ரயில் நிலையத்துக்கு வெளியில் விற்க்கும் பாலாஜிக்கு  மிகவும் பிடித்த மிளகாய் பஜ்ஜி வாங்கி அவனுக்காக காத்திருப்பாள் ஜமுனா. இப்படி தினம் அவர்கள் சந்திப்பு ரயில் நிலையம்  என்றானது.
 ஒரு புறம்  பாலாஜி தினம் தினம் ஜமுனாவுடன்  சந்திப்புகள் நடந்துக் கொண்டு இருந்தாலும்…..மறு புறம் அவர்களின் நிச்சயம் வேலையும் ஜரூராக  நடந்துக் கொண்டு தான் இருந்தது.
வைதேகி எப்படி செய்வது என்று முழித்துக் கொண்டு  இருக்க…. “ கவலை படாதிங்க அத்தை எல்லாம் நன் பாத்துக்குறேன்.”   தன் அத்தையிடம் சொன்னது போல் அனைத்தையும் பார்த்து பார்த்து செய்தான்.
அவன் நினைவு தெரிந்து நல்லது நடப்பது இதுவே…சித்தப்பா பிள்ளைகளின் திருமணதுக்கு ஊருக்கு சென்று வந்தான் தான்…
தன்னை அழைத்தது தன்னிடம் இருக்கும் பணத்துக்காக என்று தெரிந்த்தால்…எதிலும் ஒரு   ஈடுபாடு இல்லாது..யாருக்கோ வந்து விருந்து என்பது போல் தான் கை கட்டி நின்று பார்த்திருப்பான்..
அதுவும் தன்னோடு சின்ன பையனுக்கு கல்யாணம்… தனக்கு பெண் பார்க்க கூட ஆள் இல்லை…பெண் பார்க்க என்ன… “ உனக்கு எப்போ  கல்யாணம் பாலாஜி….?” என்று கேட்க கூட ஆள் இல்லை. மணமேடையில் கண் பதித்திருந்தாலும்…அவன் மனதில் இந்த எண்ணங்கள் தான் ஓடிக் கொண்டு இருக்கும்.
தனக்கு  தான் விரும்பிய பொண்ணோடு திருமணம். முதலில் அடுத்த முகூர்த்தத்தில்  நிச்சயம் என்பதை மாற்றி… ஒரு நகைமாளிகைக்கு சொந்தமான ஒரு ஸ்டார் ஓட்டலில்  நிச்சயம் செய்ய திட்டமிட்டு… ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்தான். 
ஒருவர் உண்ணும் உணவின் விலையே ஐந்தாயிம்…தனக்கு தெரிந்தவர்கள்,  தெரியாதவர்கள்…. அனைவருக்கும் அழைப்பி விடுத்துக் கொண்டு இருக்கிறான். ஆம் தெரியாதவர்களுக்கும் தான். தான் குடியிருக்கு குடியிருப்பில் கூட யாரோடும் அவன் பேசியது இல்லை.
தன் நிச்சயம் தொட்டே அவர்கள் வீடு தேடி அழைப்பு விடுக்க…. “ அதுக்கு என்ன தம்பி கண்டிப்பா வந்துடுறோம்…” பாலாஜிக்கு தான்  அவர்களை தெரியாதே ஒழிய…
அந்த குடியிருப்பில் இருக்கும் அனைவருக்கும் பாலாஜியை நன்கு தெரிந்து இருந்தது.  அவனின் பணப்புழக்கம்….அவனின் சொத்து பத்து….அப்படி வசதி படைத்தவனின் இந்த எளிமை…
அதுவும் இத்தனை வருடம் இந்த குடியிரிப்பில் தான் இருக்கிறான் என்று தான் பேர்… வருவது தெரியாது போவது தெரியாது. அப்படி நல்ல பையன்…என்று அங்கு இருக்கும் அனைவரும் பாலாஜி பற்றி தான் பேசுவார்கள்.
அப்படி பட்டவன் தங்கள் வீடு தேடி வந்து பத்திரிகை நீட்டவும்… “ அதுக்கு என்ன தம்பி கண்டிப்பா வந்துடுறோம். இது எங்க வீட்டு விசேஷம் மாதிரி….” அந்த குடியிரிப்பில் அனைவரும் சொல்லி வைத்தது போல் இது தான் சொல்லினர்.
நிச்சயம் அன்று தன் விடுதியிலும் தடபுடல் விருந்து தான். பெண்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாய் நான் வெஜ் கேட்க..தந்துரியில் இருந்து.. கடாய் சிக்கன்…பெப்பர் சிக்கன்..சிக்கன் மஞ்சுரியன்…. ஆற்காடு பிரியாணி….மட்டன் சுக்கா… இது போல் ஆயிட்டம்  கொடுத்து…
“ அன்னிக்கி இது போதுமா…?” அங்கு உள்ள  பெண்களை பார்த்து புன்னகை புரிந்து கேட்க… அந்த பெண்களுக்கோ….வாய் அடைத்து போய் விட்டது.
 அவன் செலவிடும் தொகையை பார்த்து  துடுக்கான ஒரு பெண்…. “ என்ன சார்…பொண்ணு மந்திரி பொண்ணா……?தொழிலதிபர்  பொண்ணா…?” என்று கேட்க..
“என்  மனதுக்கு பிடித்த பெண்….” அதே புன்சிரிப்போடு சொன்னான். இப்படி தன் நிச்சயத்தையே  விமர்சனமாக செய்ய அனைத்து ஏற்பாட்டையும் செய்தான்.
ஜமுனாவை அழைத்து சென்று அவன் வாங்கி கொடுத்த புடவையின் விலையையும் …வைரத்தின்  விலையையும் பார்த்து… “ எதுக்கு இவ்வளவு ஆடம்பரம்….?”என்று ஜமுனா கேட்டதுக்கு….
“ என் கிட்ட இருக்கும் பணத்துக்கு செலவு செய்ய யாரு இருக்கா….? அப்பா அம்மா இருந்தா…அவங்களுக்கு செலவு செய்யலாம். அக்கா தங்கை இருந்து இருந்தா….கல்யாணம் அடுத்து அடுத்து வரும் சீர்  என்று பணம் செலவு ஆகும்…
 ஒன்டிக்கட்டையா இத்தன வருசம்  சம்பாதித்தது…இதுக்கு கூட செலவு செய்யலேன்னா எப்படி….? அதுவும்  முதல் தடவை உன் கிட்ட என் விருப்பத்தை சொன்னப்ப….
நீ சொன்னியே…. என் அம்மாவுக்கு ஆகாத கல்யாணம் எனக்காவது ஆகனும் என்று….  அப்போ முடிவு பண்ணேன்….அந்த கல்யாணம் இந்த ஊரே பாக்கும் படி நடத்தனும் என்று…. என்ன ஒன்னு நான் காதலிசிட்டு பண்ணனும்  என்று நினச்சேன்… கொஞ்சம் முன்னவே நடக்குது அவ்வளவு தான்.”
முகத்தில் புன்னகையோடு பேசிக் கொண்டு இருந்த பாலாஜி கடைசியாக அவன் காதிக்க முடியவில்லை என்ற வார்த்தை சொல்லும் போது….முகம் மாறியதோ…ஜமுனா அவன்  முகத்தை உற்று பார்க்கும் போதே…அது பொய்யோ என்பது போல்…
முகம் முழுவதும் புன்னகை பூக்க…. “ நம்ம நிச்சயத்துக்கு நீ எனக்கு எதுவும் வாங்கி கொடுக்கலையா….?” கேட்டு வாங்கி போட்டுக் கொண்டான்..தன் விரலில் முதன் முறையாக ஒரு மோதிரம்..
அவன் வாங்கி கொடுத்ததுக்கு நூற்றில் ஒரு பங்கு கூட இருக்காது  ஜமுனா பாலாஜிக்கு வாங்கி கொடுத்த மோதிரம். ஆனால் அந்த மோதிரம் ஜமுனா போட்டு விட்ட்தால்…அதன் மதிப்பு ஏறியதோ….தன் கையை அப்படியும் இப்படியும் திருப்பி திருப்பி அழகு பார்த்தவன்…
ஜமுனாவிடம்… “ நல்ல இருக்குல….?” அவள் அபிப்பிராத்தை கேட்டு விட்டு அவள் முகத்தை பார்த்து…அவள் சிரித்தபடி…
“ நல்லா இருக்கு….” அந்த ஒற்றை பாராட்டில்…சந்தோஷித்தான்…இப்படி அடி புடி..என்று  அவன் நிச்சயம் அன்று அழகாக விடிந்தது.
மாலை தான் நிச்சயம்…. மாலை சீக்கிரம் வராதா….? நேரத்தை பார்த்து பார்த்து கட்த்திக் கொண்டு  இருக்கும் போது தான்….அவன் விடுதியில் தங்கி பாதிப்புக்கு உள்ளான சாந்தி…என்ற பெண்ணோடு அவர் தந்தையும்  வந்து இருப்பதாக..அந்த விடுதியி காப்பாளர் சகுந்தலாம்மா வந்து சொன்னதும்..
“ நல்லா நாள் அதுவுமா  இந்த பிரச்சனையை பற்றி பேசனுமா….?”  என்று யோசித்தான். பாலாஜி எப்போதும் தனக்கு ஆதாயம் இல்லாத விசயத்தில் தலையிட மாட்டான்.
தன் விடுதியில் தங்கி இருக்கும் பெண்களுக்கு  பல பிரச்சனை வந்து இருக்கிறது. அதில் சில பிரச்சனைகள் இவன் காதிலும் வந்து விழும் தான்….
அப்போது பாவம் என்று அவன் மனது எண்ணும் அதுக்கு அடுத்து அதை மராந்தவனாய் தன் வேலையை பார்க்க ஆராம்பித்து விடுவான். இது தான் பாலாஜி…
நல்ல நாள் அதுவுமா இந்த பிரச்சனை பற்றி பேச வேண்டாம் என்று….” இப்போ பார்க்க முடியாதுன்னு சொல்லிடுங்க சகுந்தலாம்மா….” என்று  சொல்லி அனுப்பி விட்டான்.
கொஞ்ச நேரம் சென்று…வெளியில் சத்தம் கேட்கவும்….போய் பார்க்க…அந்த சாந்தியின் அப்பா சாஷ்ட்டங்கமாய்  அவன் காலில் விழுந்து விட்டார்.
“அய்யோ..என்ன சார்…எழுந்துடுங்க…எழுந்துடுங்க….”  பதறி போய் ஒரு இரண்டாடி தள்ளி நின்றான்.
பாலாஜி சுயநலம்  மிக்கவன் தான். அந்த  சுயநலம் கூட அவனை சுற்றி இருந்தவர்கள் தான் அவனுக்கு கற்று தந்தார்கள்.
பெற்றோர் இல்லாதவன் என்ற இரக்கத்தை அவர்கள் எனக்கு காட்டினார்கலா…? என்னிடம் இருக்கும்  சொத்துக்காக தானே என்னை வைத்திருந்தார்கள்.
அதை அனுபவிப்பதோடு…மொத்தமாய் எடுத்துக் கொள்ளவும் பார்த்தார்களே…. அவர்களை பற்றி தெரிந்து ஊரின் பெரிய மனிதர்களிடம் போனால்…அவர்களும் தன்னிடம் பணத்தை வாங்கி தானே எனக்கு சேர வேண்டியதை வாங்கி கொடுத்தார்கள்.
அதை விற்று பணத்தை எடுத்து சென்னை வந்தவனிடம்,  சின்ன வயசு தானே என்று பிரச்சனை உள்ள இடத்தை தன் தலையில்  கட்ட நினைத்தவர்கள். இப்படி தன்னை சுற்றி சுயநல பிண்டங்கலாய் இருக்கும் போது…
நான் மற்றவர்களின் சொத்துக்கு ஆசை படவில்லை..யாரையும் ஏமாற்ற வில்லை…என்ன என்னை சுற்றி நடக்கும் தவறை கண்டும் காணாது கடந்து போகிறேன் அவ்வளவு தானே…  இந்த கொள்கை உடைய பாலாஜி….தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பான்.
அந்த நிலையில் தான் நல்ல நாள் அதுவுமா….இது தேவையா….? என்று நினைத்து சாந்தியின் தந்தையை பார்க்க மறுத்தது…ஆனால் அவர் இப்படி காலில் விழுந்ததும்… பெரியவர் காலில் விழுந்து அந்த பாவம் நமக்கு தேவையா….? என்று நினைத்து தான் பதைத்து போனான்.
“ சார் சார்…எழுந்துடுங்க…” என்று  சொல்லி கைய் தூக்கி எழுப்பி நிறுத்தியவன்… “ என்ன சார்… பெரியவங்க  நீங்க என் காலில் எல்லாம் விழுந்துட்டு…” இதற்க்கு மேல் இவரை இப்படியே அனுப்ப முடியாது என்று  தன் அலுவலக அறைக்கு அழைத்து சென்றான்.
கூடவே  சாந்தி தலை குனிந்து வந்ததை பார்த்து பாலாஜிக்கு கொஞ்சம் வேதனையாக தான் இருந்தது. அதுவும் அவள் கண் இரண்டும் ஒட்டி… கசங்கிய உடை…சாப்பிட்டு எத்தனை நாள் ஆனதோ என்ற தோற்றத்தை பார்த்து..
இதற்க்கு முன் சாந்தி இருந்த  தோற்றம் மனதில் வந்து சென்றது. இப்பெண்ணுக்கு நடந்தது பெரிய கொடுமை தான்… ஆனால் காதலனை நம்புவதற்க்கு ஒரு அளவு வேண்டாமா….? உண்மையான காதலன் காதலியின் மனதை  பாக்க தான் ஆசை படுவானே ஒழிய உடலை பாக்க இல்லை.
காதலுக்கும் காமத்துக்கும் வித்தியாசம் தெரியாது இது போல் புதை குழியில் விழும் பெண்களை என்ன சொல்வது….? ஏற்கனவே புண்பட்டு இருக்கும் பெண்ணை குத்தி ரனப்படுத்தவா முடியும்…. இப்பெண் இதனை கடந்து வர வேண்டும்…
 சாந்தியும்….அவள் தந்தையும் எதுவும் பேசாது  அந்த இடமே நிசப்த்ததில் இருக்க…. இவை அனைத்தும்  அவன் மனதில் ஓடிக் கொண்டு இருக்கும் வேளயில்..
அந்த அமைதியை கலைக்கும் வகையாக…. “ தம்பி நீங்க தான் தம்பி எங்களுக்கு உதவி செய்யனும்….”
என்ன  உதவி..என்பது போல் அவர் முகத்தை பார்த்தான் பாலாஜி…. “ உங்களுக்கு பெரிய ஆளுங்களை  எல்லாம் தெரியுமுன்னு பொண்ணு சொன்னா…. எங்களுக்கு நியாயம் கிடைக்க நீங்க தான் உதவி செய்யனும் தம்பி….”
“ அது தான் எல்லாம் சரியா நடந்துட்டு இருக்கே…..” அவனுக்கு தெரிந்த வரை….குற்றவாளிகளை பிடிக்க…காவல்துறை விரைந்து தான் நடவடிக்கை எடுத்துக் கொண்டு இருந்தனர். அதை நினைத்து  தான் அவன் சொன்னான்.
“ இல்ல  தம்பி…இந்த கேசுல சங்கரன் வர வரை எல்லாம் சரியா தான் நடந்துட்டு இருந்தது. ஆனா இதுல  அவன் இன்வால்வ் ஆகி இருக்கான் என்று தெரிஞ்சதுல இருந்து… கேசு வேறு மாதிரி இழுத்து செல்ல பாக்குறாங்க….” சங்கரன் யார்…? 
இந்த கேசில் கேள்வி படாத  புது பெயரா இருக்க… அதை சாந்தியின் அப்பாவிடமே கேட்டு விட்டான்.
“ அவ ரொம்ப பெரிய இடத்து பையன் சார்..அங்கு அங்கு காசு புகுந்து விளையாடுது போல…பணம் பலம்..அதிகார பலம் இரண்டும் அவங்க கிட்ட இருக்கு….”
“ஓ…” இது அவனுக்கு புது செய்தி… “ ஆனால் இதில் நான் என்ன செய்ய முடியும்….? என்று  கேட்டதுக்கு..
“ பாப்பா சொல்லிச்சி உங்களுக்கு போலீஸ் காரங்க எல்லாம் நல்லா தெரியுமுன்னு…. முன்ன ஒரு தடவை கூட இங்கு யாருக்கோ பிரச்சனை போது நீங்க தான் உதவி செஞ்சதா சொன்னா….” சாந்தியை காட்டி அந்த பெரியவர் சொன்னதும்…
தான் உதவி செய்த நபர் யார்…? என்று யோசிக்காமலேயே பாலாஜிக்கு புரிந்தது.  ஜமுனா என்று… இதில் யோசிக்க என இருக்கு….? அவன் இது வரை யாருக்காவது உதவி செய்து  இருந்தால் தானே யோசிக்க எல்லாம்….
“ சார் நீங்க சொன்னது அந்த பையன்  மிக பெரிய இடமுன்னு…எனக்கு சும்மா S.I அந்த அளவுக்கு தான் தெரியும்… மன்னிச்சிக்குங்க..இதுல உங்களுக்கு  என்னால உதவி செய்ய முடியாது.” என்று சொல்லி விட்டான்.
“ இல்ல  சார் நீங்க இப்படி சொல்ல கூடாது…உங்க வீட்டு பெண்ணா இருந்தா….” இந்த வார்த்தையை சாந்தியின் அப்பா தண்டாயிதபாணி சொல்லி கொண்டு இருக்கும் போது…
“ அதே தான்…உன் பொண்னுன்னா நீதி வேண்டும்..அடுத்த பொண்ணுன்னா…  அவள் உடல் வேண்டுமோ…” என்று வைதேகி சொல்லிக் கொண்டே…
பாலாஜியின் பக்கத்தில் இருக்கும் இருக்கையில் அமர்ந்து கால் மேல் கால் போட்டுக் கொண்டு மிதப்பாக கேள்வி கேட்டார்.

Advertisement