Advertisement

அத்தியாயம்….1
தன் முன் இருந்த கணினியில்  மூழ்கியிருந்த நம் கதையின் நாயகன் பாலாஜி,  அதில் தெரிந்த இளம் பெண்களை பார்த்திருந்தவன் அடுத்து ஏதோ மாற்றி…. அதில்  சாப்பிட்டுக் கொண்டு இருந்த பெண்களை கவனித்துக் கொண்டு இருந்தவனின் முன்…..
 அந்த விடுதியின்   காப்பாளர் சகுந்தலா அம்மா  வந்து நின்றதும்…தன் கவனிப்பை விடுத்து….  “ சொல்லுங்க……?” என்றதும்…கொஞ்சம் தயங்கிய சகுந்தலா அம்மா…..
“ அந்த பெண்ணோட வீட்டில் இருந்து வந்து இருக்காங்க சார்.”  சொன்னவரின் முகத்தில் கொஞ்சம் பயம் தெரிந்தது.
ஆனால் நம்  நாயகனுக்கோ அது எல்லாம் இல்லை போல்…அவன் பிழைப்பே பெண்களை வைத்து தான்…. மகளிர் விடுதி வைத்து நடத்துகிறான்.
தற்போது  அமர்ந்து அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று  பார்த்துக் கொண்டு இருக்கும் இடம், சோழிங்கநல்லூர்….அவனுக்கு இது மட்டும் இல்லை.
பரனூர்….செங்கல்பட்டு, ஊராப்பாக்கம்.. போன்ற இடத்தில் ரயில் நிலையம் அருகில் இடம் வாங்கி,  அதை வேலைக்கு போகும் பெண்கள் தங்கும் வசதிக்கு ஏற்ப…. பத்துக்கு பத்து அளவின் அறையில், இரண்டு படுக்கை அமைத்து இரு பெண்கள்  தங்கும் மாறு செய்வதோடு…அந்த அறையிலேயே அனைத்து வசதிகளும் இருக்கும் படி வசதி செய்து கொடுப்பான்….
அது போல் மூன்று மாடி அமைத்து ஒரு விடுதியில் நூற்றி பத்தோ…நூற்றி இருபதோ…பெண்கள் தங்கும் அளவுக்கு இருக்கும். இது போல் நான்கு இடத்தில் பெண்கள் விடுதி நடத்துகிறான்.
ஆண்கள் விடுதி ஏன் நடத்தவில்லை….?சில பேர் கேட்டு இருக்கிறார்கள்.  அதில் பல பிரச்சனைகள் நடத்தியவர்களை பார்த்து அறிந்துக் கொண்டது.
பெண்கள் விடுதியில் பிரச்சனையே இல்லையா…..?இருக்கிறது. இதோ இப்போது அது போல் ஒரு பிரச்சனை தான் அவனுக்கு காத்துக் கொண்டு இருக்கிறது.
“ போங்க சகுந்தலம்மா….” அவரை அனுப்பி விட்டு உடனே செல்லவில்லை. ஆர அமர அவன் எடுத்துக் கொள்ள வேண்டிய காலை சிற்றுண்டியை முடித்து விட்டே  அந்த பெற்றோர்களை பார்க்க சென்றான்.
அவன் ஒரு தனிக்காட்டு ராஜா….இருப்பது ஊராப்பாக்கத்தில் மூன்று அடக்குமாடி கட்டிடத்தில் இரண்டாவது தளத்தில், ஒற்றை அறை கொண்ட வீட்டில் தான் இருக்கிறான்.
தனியாக சமையல் எல்லாம் இல்லை. விடுதியிலேயே காலை…மதியம்…இரவு உணவை முடித்துக் கொள்வான். அவன் வீட்டை வாரத்துக்கு ஒரு தடவை ஒரு ஆயா வந்து சுத்தம் செய்து கொடுத்து செல்வார்.
அவனுடைய மாதம் வருமானம் செலவு அனைத்தும் போக  இருபது லட்சம். ஆனால் அவனை பார்த்தால் அப்படி தெரியாது. வீடும் சரி…அவன் உடையும் சரி சாதரணமாக தான் இருக்கும். அவனை உற்று பார்த்தால் மட்டுமே,  இவன் உடையில் கவனம் செலுத்தினால் நன்றாக இருப்பானோ பார்த்தவர்கள் நினைத்தது உண்டு.
பத்து வருடம் முன் அவன் ஒரு சாதரணமானவன் தான்…. அவன்  சொந்த ஊர் கிருஷ்ணகிரியை தான்டி ஒரு கிராமம். அவன் பத்தாவது வயதில் அவன் பெற்றோர் இறந்து விட்டனர். அது இயற்கையா……?
இன்று வரை அவன் சந்தேகம் தீரவில்லை.  ஒன்று விட்ட சித்தப்பா…சித்தியிடம் தான் பதினெட்டு வயது வரை இருந்தான். பாசம் கொடுத்தார்களா….அதற்க்கு  பதில் இல்லை.
கொடுமை…..? கண்டிப்பாக இல்லை.  அவனுக்கு சேர வேண்டிய நிலத்தின் மதிப்பே சில லட்சங்கள். அதை  அவர் சித்தப்பா பாதி குத்தகைக்கு விட்டு, மீதியை அவர் விவசாயம் பார்த்து வந்தார்.
பசித்தால் சமையல் அறையில் உணவு இருக்கும், வேண்டிய மட்டும் சாப்பிடலாம். உடல் நிலை சரியில்லை என்றால் அவனே சித்தப்பாவிடம் சொன்னால்…மருத்துவமனை அழைத்து சென்று  மருத்துவர் கொடுத்த மருந்தினை எந்த எந்த நேரத்துக்கு போட வேண்டும் என்று கொடுத்து விடுவார்.
அவன் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து அந்த விடுமுறையில் சித்தாப்பாவிடம் சென்று …..” நான் கொஞ்ச நாள்  விவசாயம் செய்ய போகிறேன்….” என்றதும்..
எப்போதும் தன்னை கண்டு கொள்ளாத சித்தி… “ உனக்கு ஏம்பா அந்த வேல…நீ படிச்சி  பெரிய ஆபிசுல வேலைக்கு போப்பா…..” என்ற வார்த்தையில்…
இவர்கள் தன் சொத்தை திருப்பி கொடுக்கும் எண்ணம் இல்லை போலவே….அன்றே ஊரின் பெரிய தலை வைத்து..தன் சொத்தை வாங்கிக் கொண்டான். வளர்த்ததுக்கு சித்தாப்பாவுக்கு  மூன்று ஏக்கர் கொடுத்து விட்டு…தன் தாய் தந்தை வாழ்ந்த வீடு…. அவர்களை புதைத்த இடம்…. அதை ஓட்டிய தோப்பை மட்டும் விட்டு, மத்த அனைத்தையும் விற்று….சென்னையை தன் இருப்பிடமாக கொண்டு  வருடம் பத்து கடந்து விட்டது.
அப்போது எல்லாம் இது போல்  பார்த்த இடத்தில் எல்லாம் விடுதி கிடையாது. இப்போது இருக்கும் அந்த வீடு தான் அவன் சென்னையில்  வாங்கிய முதல் சொத்து…
பின் அங்கு இருக்கும் ஒரு ஆண்கள் விடுதியில் தான்  முதன் முதலில் வேலைக்கு சென்றான். தன்னிடம் இருக்கும் பணத்தை அவன் எப்போதும் காட்டிக் கொண்டதே கிடையாது. அந்த விடுதியில்  பார்த்த வருமானம் தான்…நாமே வைத்தால் என்ன…..? என்று அவனை யோசிக்க வைத்தது என்றால்…
ஆண்கள்  விடுதியில் வந்த பிரச்சனையில்….பெண்கள் விடுதியாக நடத்தலாம்…. அதற்க்கு ரயில் நிலையம் அருகில் இருக்கும்  இடத்தை தேடி முதலில் செங்கல்பட்டில் தான் தொடங்கினான்.
பின் அனைத்தும்  அவனுக்கு ஏறு முகம் தான்….. இதோ ஒன்றில் இருந்து நான்கு விடுதி வைத்து நடத்துகிறான். இன்று வரை அவன் தனிக்கட்டை தான்.
எப்போதாவது  ஊருக்கு செல்வான்…இதோ அடுத்த மாதம் அவன் சித்தப்பா மகன் திருமணம்…சித்தப்பா…சித்தி நேரில் வந்து அழைத்து உள்ளனர்.
ஏன் அழைக்க மாட்டார்கள்….? அவர்கள் மகள் திருமணத்துக்கு சுலையாக பத்து லட்சம் கொடுத்து  இருக்கிறானே…. இப்போது கூட எதற்க்கோ அடி போட தான்….இந்த கவனிப்பு எல்லாம்.
அது தெரியாதவனும்  இல்லை. பார்க்கலாம் எது வரை செல்கிறார்கள்  என்று….. அவனுடைய குணமே இது தான்..எதற்க்கும் அலட்டிக் கொள்ள மாட்டான்.
அரை மணி நேரம் காக்க  வைத்து விட்டு….. தன்னை பார்க்க வந்தவர்கள் முன்…. “ என்ன விசயம்…..” பல் இடுக்கில் மாட்டிக் கொண்டு இருந்த கீரையை குச்சியை வைத்து குத்திக் கொண்டே கேட்டவனை பார்த்து அந்த பெற்றோர்களுக்கு ஆத்திரம் …அத்திரமாக வந்தது.
“ என்ன சார்…என்ன விடுதி நடத்துறிங்க….? ஒரு பொறுப்பு வேண்டாம்….? என் பொண்ண ஒரு வாரமா காணல…நாங்கலே அடிச்சி பிடிச்சி வந்தா…..நீங்க என்னவோ குசலம் விசாரிப்பது போல சாவுகாசமா வர்றிங்க…… நான் போலீசுக்கு போகப் போறேன் ?” மேலும் எகுற பார்த்த அந்த பெரியவரை,  சைகையில் அமைதியாக இருக்கும் படி செய்தவன்.
அங்கு நின்றுக் கொண்டு இருந்த  செக்யூரிட்டியை அழைத்து….. “ என் ரூமில் டேபுள் மேல இரண்டு  பேப்பர் வெச்சி இருக்கேன், அதை எடுத்துடுட்டு வா…..”
அவன் வரும் வரை பாலாஜி அவர்களிடம் எதுவும் பேசவில்லை. அவன் சொன்ன காகிதம் தன் கையில் கிடைத்ததும்…அவர்களிடம் அதை கொடுத்து விட்டு….
“ மேல இருப்பது நான்  காவல் நிலையத்துல கம்பிளையின் செய்தது. அடுத்து இருப்பது….உங்க பொண்ண நீங்க இங்கு விடும் போது அதை படிச்சி கைய்யெழுத்து போட்டது. என்ன  இருக்குன்னு நிதானமா படிச்சி பாருங்க…..”
அதில் இடம் பெற்ற சாராம்சத்தில் முக்கியமானது…. இது தான்….இங்கு தங்கும் பெண்களுக்கு இவ்விடுதியில் இருக்கும் வரை தான்…விடுதி பொறுப்பு…. வெளியில் நடப்பதற்க்கு விடுதி பொறுப்பு ஏற்காது.
“ படிச்சிட்டிங்கலா……?” என்று கேட்டவன்…
பின் அவர்களை தன் அறைக்கு அழைத்து சென்று ..தன் முன் இருந்த கணினியில் போன வாரம் அவர்கள் மகள் வேலைக்கு செல்கிறேன்…என்று  சொல்லி போனதை காட்டியவன்… பின் அவள் இங்கு வரவில்லை. நீங்கலே நல்லா பாருங்க…”
கணினியை அவர்களே  இயக்கும் படி அவர்கள் பக்கம் நகர்த்தி வைத்தவன்….அவர்கள் சந்தேகத்துக்கு, பார்த்து முடித்ததும்.
“ இப்போ சொல்லுங்க……? நீங்க வந்ததும் இது காமிச்சா மட்டும்  போதும்…ஆனா நான் காவல்துரையில் கம்ளையிண்டும் செய்து இருக்கேன். அவர்கள் கொடுத்த தகவல்….உங்க பொண்ணு அவன் காதலன் கூட  போயிட்டான் என்பது… இது சரியா…பாருங்க….” தன் கடமை முடிந்தது என்று கை கட்டி அவர்களை பார்த்தான்.
அவன் சொன்னது அனைத்தும் சரி தான். ஆனால் அவன் சொன்ன விதம் அது தான்…. அதை அந்த பெற்றோர்கள் கேட்டும் விட்டனர்.
அவர்கள்  இப்படி கேட்டதுக்கு கூட எந்த வித….ரியாக்க்ஷனும் காட்டாது…  “ உங்க மகள் சம்பளம் என்ன சார்…..?”
நம்ம என்ன  கேட்டா…இவன் என சம்மந்தமே இல்லாது கேட்குறான்…அவர் மனது நினைத்தது முகபாவனை காட்டி கொடுத்து விட்டதோ….
“ என்ன சார் சம்மந்தமே இல்லாது கேட்குறேனா…? சம்மந்தம் இருக்கு. உங்க பொண்ணு இந்த வருசம் தான் வேலையில் சேர்ந்து இருக்காங்க….உங்க பொண்ணு வேல பார்த்த  கம்பெனியில ப்ரசர்க்கு….இருபத்தாயிரம் சம்பளம் தான். விடுதிக்கு ஆராயிரம் போயிடும்.” என்று சொன்னவன்..
“ வீட்டுக்கு எவ்வளவு அனுப்புனாங்க……?” அவர்களை கேள்வி கேட்க…..
“ பதினைந்தாயிரம்….” அந்த பெரியவர் தொகை  சொல்லும் போதே….அதில் உள்ள பிசகு அவருக்கு தெரிந்தது.
“ என்ன சார்…கணக்கு இடிக்குதா…..?” என்று  கேட்ட பாலாஜி….கணினியில் தெரிந்த அவர் பெண் பிம்பத்தை  காண்பித்து…
“ பாருங்க…..அவங்க போட்டு இருக்க  ட்ரஸ்…அப்படியே கொஞ்சம் கீழ இறங்கி அவங்க செப்பல்ல பாருங்க….அவங்க கையில இருக்க கைய் பையை பாருங்க….  எல்லாம் விலை அதிகமானது. இதுக்கு எல்லாம் ஏது பணம்…..?
அதெல்லாம் விட்டுடுங்க…இப்பொ வந்து என் கிட்ட குதிங்க….போங்க சார் பொண்ண தேடி கண்டு பிடிங்க… கூட்டிட்டு போனவன் நல்லவனா இருக்க மாட்டான்.”
பாலாஜியின் அந்த  பேச்சில் அதிர்ச்சி உற்று அவனை பார்த்த பெரியவரிடம்…. “ உண்மையா  விரும்பி இருந்தா…பணத்த இப்படி வாரி இறச்சி இருக்க மாட்டான். இது எல்லாம் எனக்கு தேவயில்லாதது…ஏதோ  சொல்லனுமுன்னு தோனுச்சி அவ்வளவு தான்.”
பேச்சி முடிந்தது என்பது போல் கை கூப்பி  அவர்களை வழி அனுப்பும் வகையாக எழுந்து நின்றதும்…அவர்கள் வாய் அடைத்து,  கை கூப்பி விடை பெற்றார்கள்.
ஊராப்பாக்கம்…இரவு உணவை முடித்து நாளை சமைக்க தேவையான அனைத்தும்  இருக்கிறதா…..? கணினியில் கணக்கு வழக்குகளை சரி பார்த்து விட்டு… பாதுகாப்பையும் பார்த்து விட்டு…..
அதற்க்கு பின் என்ன என்ற நிலையில் கண் மூடி இருக்கையில் சாய்ந்தவனின் செவியில்….தண்ணி வண்டியின்  ஓசை….என்றும் இல்லாது இந்த வருடம் தண்ணீர் பஞ்சம்…காரணம்…. தானும் கூட அவன் மனதில் ஓடியது.
ஒருவர் பிழைக்க…இன்னொருவர்  இரை …..மண்ணில் இருக்கும் புழு மீனுக்கு இரை…..மீன் மனிதனுக்கு ….மனிதன் மண்ணுக்கு….வாழ்க்கையே   ஒரு சுழற்ச்சி தானே….நினைத்தவனுக்கோ..
என்னடா…. தத்துவமா நினச்சிட்டு இருக்க…..?தத்துவம்  யோசிக்கும் வயசாடா….?அனைத்தும் அவனுக்கு அவனே யோசிப்பது தான். தன் முன் இருந்த பத்திரிகையில் பார்வை சென்றது…
சித்தப்பா அவர் மகன் கல்யாணதுக்கு வரும்மாறு கொடுத்த  திருமண அழைப்பிதழ். இருபத்தி ஐந்து வயது தான். தன்னோடு ஆறுவயது சிறியவன்… இன்றும் ஐந்துக்கும்…பத்துக்கு தந்தையிடன் கைய்யேந்தி நிற்பவன். தன்னோடு அவனுக்கு இருக்கும்  ஒரே தகுதி அவனுக்கு பெற்றோர் இருப்பது.
சீ..என்ன இது…..? இன்னிக்கி என்ன என்னவோ நினச்சிட்டு…பத்திரிகையில் இருந்து பார்வை ஜன்னல் பக்கம் பார்வையிட ஆராம்பித்தது.
தண்ணி வண்டியின்  முன், அடித்து பிடித்துக்  கொண்டு குடத்தோடு பெண்கள். ஆண்கள் ஒரு சிலரே….இரவு அல்லவா…அவர்கள் வேறு தண்ணி முன்,  இது போல் முன்டி அடித்து நின்றுக் கொண்டு இருப்பர்.
இளவட்டம் போல் இருந்த ஒருவனிடம்….” சீக்கிரம் திறந்து விடுப்பா…..” ஒரு பெண் குரல் எழுப்பினார்.
“   இரும்மா….சும்மா கத்தாதே….கொஞ்சம் அப்பாலக்கா நில்லு….இல்லேன்னா வண்டிய அப்படியே எடுத்துட்டு போயிடுவேன்” இப்போதைக்கு அவன் தானே கடவுள்.
“ கோச்சிக்காதப்பா…..போன தபா நான் ஐந்து  குடம் தான் பிடிச்சேன். அது தான்.” தன்மையாக பதில் அளித்தார்.
“ சரி சரி…பிடிச்சி தள்ளாம  பிடிங்க….” கெத்தாக சொன்னவன்…தண்ணிரை  ஒரு ஒரு குடமாக ஊற்றிக் கொண்டு வந்தவனின் கவனம்….வேறு எங்கோ…அவன் பார்வையை தொடர்ந்து இவன் பார்வை சென்றது.
பார்வை முடிந்த இடம் பதின்மூன்று வயது சிறுமி. நமக்கு தான்  அவள் சிறுமி போல் அவனுக்கு….அச்சிறுமியோ நகத்தை கடித்துக் கொண்டு தண்ணிர் நிரம்பி வழிவதையே பார்த்துக் கொண்டு இருந்தாள். தன்னோடது எப்போது வரும் என்று….
அடுத்து அவள் குடம் எனும் போது   அவள் கண்ணில் எவ்வளவு மகிழ்ச்சி…. ? அச்சிறுமியின் மகிழ்ச்சியை கூட்டும் வகையாக அந்த வெக்கைக்கு குடத்தில் மட்டும் அல்லாது அவள் மேலும் தண்ணிரை  பாய்ச்சி ஊற்றினான்…
அவள் உள் போட்டு இருக்கும் ஷிம்மியின் நிறம்…கருநீலம். அடுத்து அடுத்து என்று வயதை பார்த்து தண்ணீர் ஊற்றிக் கொண்டு இருந்தான்.
நம் நாயகன்…அநியாயத்தை பார்த்து பொங்கும் ரகம் இல்லை. நம்மை போல் வேடிக்கை மட்டுமே பார்ப்பான். அதே போல் பார்த்துக் கொண்டு இருந்தவனின் கண்ணில் பட்டாள் நம்  கதையின் நாயகி ஜமுனா…..
இந்த வெயில் காலத்தில்….ரெயின் கோட் போட்டுக் கொண்டு அடுத்த தன் குடத்தை வைத்து இப்போ  ஊற்று என்பது போல் அந்த தண்ணிர் ஊற்றுபனை பார்க்க…
அவனோ  சிறு தண்ணிர் கூட,   கீழேயும்… மேலேயும் …. சிந்தாது…குடத்தில் மட்டுமே ஊற்றி… இப்போது இருக்கும் தண்ணிர் பஞ்சத்துக்கு நியாயம் செய்தான்.

Advertisement