Advertisement

அத்தியாயம்….7 
“ எனக்கு காதலிக்க ஆசை உண்டு….ஆனா காதலிக்கும் ஆசை உண்டு  தானே…. அது தான் தட்டோடு வந்துட்டேன்.” பாலாஜி ஹாலில் தன்னுடைய சித்தி ..சித்தாப்பாவை…. வைதேகியிடம் பேச  விட்டு, இங்கு தனிமையில் ஜமுனாவிடம் இவ்வாறு பேசிக் கொண்டு இருந்தான்.
“ எதுக்கு….? எனக்காக….இவ்வளவும்….?” ஜமுனாவுக்கு பாலாஜிக்கு தன் மீதான விருப்பம் இந்த அளவுக்கா… கொஞ்சம் வியப்பாகவே இருந்தது.
அப்படி என்ன இருக்கு என் கிட்ட….? நேற்றில் இருந்து அவளுக்கு அவளே இதை எத்தனை தடவை கேட்டு இருப்பாள்….?  கணக்கு அவளுக்கே தெரியாது.
பாலாஜி ஜமுனாவிடம்…விஷ்வா  விசயமாக அனைவரின் முன் பேசியதோடு சரி..அதன் பின் ஜமுனாவை பின்  தொடர்வதோ….அவள் பார்ப்பது போல் நிற்பதோ கிடையாது.
விஷ்வா விசயம் முடிந்து ஒரு மாதம் கடந்து நேற்று தான் பாலாஜியிடம் இருந்து போன் . அதுவும் தன்னுடன் இல்லை. வைதேகியிடம்… “ உங்க வீட்டுக்கு  நாளை மாலை என் சித்தி சித்தப்பாவோடு வருகிறேன்.” என்று பாலாஜி சொன்னதும்…
வைதேகிக்கு தலை கால் புரியவில்லை. போன மாதத்தோடு ஜமுனாவுக்கு இருபத்திரெண்டு வயது  முடிந்து விட்டது. திருமணத்துக்கு இந்த வயது ஒன்னும் மிக அதிகம் இல்லை.
ஆனால் குடும்ப பின்னனி  இல்லாத தன் பெண்ணுக்கு, முறையாக திருமணம் நடக்குமா….? பயந்துக் கொண்டு இருக்கும் ஒரு தாய்க்கு…இது எவ்வளவு பெரிய விசயம்.
அதுவும் தன் பெண்ணிடம் காதல் கேட்டவன்..இப்போது திருமணத்துக்கு பேச வருகிறேன் என்கிறான்….வைதேகி இவ்வாறு நினைக்கும்  போதே…
சித்தி சித்தப்பாவோடு சும்மா வருகிறானோ…நான் தான் அதிகமா   கற்பனை செய்கிறோமோ….? தன் மகிழ்ச்சியை கெடுக்கும் வகையாக இந்த சந்தேகம் வந்ததும்…
“ எதுக்கு தம்பி….? ”  வைதேகி ஒரு வித எதிர் பார்ப்போடு கேட்டார்.
“ உங்க மக  தான் வீட்டுக்கு பெண் கேட்டு வாங்கன்னு சொன்னா…நான் மட்டும் தனியா வந்தா நல்லா இருக்காதுல…எனக்கு அம்மா…அப்பா இல்ல…. அது தான் ஊரில் இருந்து சித்தி சித்தப்பாவ வரவழிச்சி இருக்கேன்.” வைதேகிக்கு பாலாஜியின்   இந்த விளக்கமே போது மானதாய் இருந்தது.
“ ரொம்ப சந்தோஷம் தம்பி…ரொம்ப…ரொம்ப சந்தோஷம்.”  வைதேகிக்கு வாயில் வார்த்தைகள் நர்த்தனம் ஆடியது.
இதை ஜமுனா வீட்டுக்கு வந்த உடன் சொல்லியதில் இருந்து…இதே தான் நினைத்துக் கொண்டு இருந்தாள். 
“ என்னை அவனுக்கு அந்த அளவுக்கு பிடித்து இருக்கா….? நான் அழகு தான்…ஆனா அவன் ஆசையோடு என் ஆசைக்கு முக்கியத்துவம் கொடுத்து….அதுவும் அன்னிக்கி எல்லோர் முன்னும் நான் திருமணம் செய்யும் பெண்…என்று பகிரங்கமாக சொன்னது….நேற்றில் இருந்து  இதை தான் நினைத்துக் கொண்டு இருந்தாள்.
இன்று வைதேகியிடம் பாலாஜி …. “ நான் ஜமுனாவுடன் தனியா பேசனும்.”   என்று சொல்லி விட்டு தன் அறைக்கு வந்ததும்… அவன் பேசும் முன்னவே….கேட்டு விட்டாள். 
“ உங்களுக்கு காதலிக்க தானே ஆசை….” என்று…
அதற்க்கு தான்…” எனக்கு காதலிக்க ஆசை தான்….ஆனா காதலிக்கும் ஆசை இருக்கே….”  பாலாஜி அப்படி சொன்னதும்…
“ அப்படி என்ன இருக்கு என் கிட்ட…..?” 
அவளை மேலிருந்து  கீழாக முழுமையாக தன் கண்களால் அவளை அளந்த பாலாஜி பின்… “ தெரியல….இன்னும் கேட்டா..இப்போ நீ இவ்வளவு அழகா புடவை கட்டி இருக்கியே…
ஆனா நான் உன்ன முதல் தடவை பார்க்கும் போது….நீ என்ன ட்ரஸ் போட்டு இருந்தே  ..கலர்..ம்…ம்..புடவையா…. ? சுடிதாரா….? இல்ல நையிட்டியா….? என்று கூட எனக்கு தெரியாது.  இடுப்பு வரை ரெயின் கோட் போட்டுட்டு இருந்த…. 
இடுப்புக்கு கீழே என் பார்வை போகல….உன் முகத்தை கூட   நான் மங்களான லைட் வெளிச்சத்துல தான் பார்த்தேன். அது என்னவோ உன்ன திரும்பவும் பார்க்கனும் என்று  தோனுச்சி… அதுவும் மூணு நாள் கழிச்சி தான்.”
என்ன தான் காதலில் நம்பிக்கை இல்லை என்று சொன்னாலும்,  பாலாஜி சொல்ல..சொல்ல…ஏதோ இனம் புரியாத ஒரு சுகம் மனதில் எழுவதை ஜமுனாவால் தடுக்க முடியவில்லை. காதலிப்பதோடு …காதலிக்கப்படுவது சுகம் தானே….அந்த சுகத்தில் மூழ்கிய வாறே….
“ மூணு நாள் கழிச்சா….?” 
“ ஆமா திரும்பவும் உன்ன மூணு நாள் கழிச்சி தான் …பார்க்கனும் என்றதோடு பார்த்தே ஆகனுமுன்னு இங்கே வந்தா…..  தண்ணீர் பிடிக்க நீ வரல…”
“ ஓ…அப்புறம்….?” தன் சொல்லுக்கு மதிப்பு கொடுத்து…தன் வீடு வந்து பெண் கேட்ட…பாலாஜியை ஜமுனா காதலிக்கிறாளா….?  என்பது அவளுக்கே தெரியவில்லை.
ஆனால் அவன் மீது  ஜமுனாவின் மனதில் ஒரு மதிப்பு…மரியாதை  எழுந்தது. கூடவே அவன் பெண் கேட்டதால்…. ஒரு உரிமை. இவன் தனக்கானவன் என்று….
“ நான் என்ன கதையா சொல்லிட்டு இருக்கேன்….” காதலிக்க பிடிக்காது. ஆனா காதல் கதை கேட்க மட்டும் பிடிக்கும் போல்….பாலாஜி இதை மனதில் தான் நினைத்தான்.
பாலாஜிக்கு ஜமுனாவிடம் தன் மனதில் எழுவதை எல்லாம்  பேச ஆசை தான். ஆனால் ஏதாவது தவறாய் நினைத்து விடுவாளோ….என்ற பயமும்   இருந்தது.
பாலாஜிக்கு ஜமுனாவை பற்றி என்ன தெரியும்…? பார்த்து இருக்கிறான்…அதுவும் தூரத்தில் இருந்து…பேசியது இரண்டோ…மூன்று தடவை. அதுவும் அவள் மறுப்பை தெரிவிக்க மட்டுமே அவள் தன்னிடம் பேசி இருக்கிறாள்.
இதில் ஜமுனாவை பற்றி பாலாஜிக்கு என்ன  தெரியும்….? அதனால் ஜமுனா தான் பேசுவதை எப்படி எடுத்துக் கொள்வாளோ….என்ற பயம் பாலாஜிக்கு இருக்க தான் செய்தது. அதனால் அடுத்து பேச அவன் தடுமாற…
அந்த தடுமாற்றம் நம் ஜமுனாவுக்கு இல்லை போல்…. “ மூணு நாள் கழிச்சி தான் என்னை பாக்கவே தோனுச்சா…..? நல்ல காதல் தான் உங்க காதல். ” தான் கேட்டதுக்கு பதில் இல்லாது போக… ஜமுனாவுக்கு அது தெரிந்துக் கொள்ளும் ஆசை மனதில் உந்தி தள்ள விளையாட்டாய் கேட்பது போல் திரும்வும் கேட்டாள்.
“  நல்ல காதலா….?கெட்ட காதலா….? காதலித்து பார்த்தா தானே தெரியும்.” என்ன தான் ஜமுனாவுக்கு விருப்பத்துக்கு உடனே தட்டை தூக்கி கொண்டு வந்து விட்டாலுமே…
தான் கண் பார்த்த காதல் அனுபவத்தை…நான் உணர முடியவில்லையே…அந்த வருத்தம் பாலாஜிக்கு இருக்க தான் செய்தது.  அந்த வருத்தத்தில் சட்டென்று இப்படி சொல்லி விட்டான். சொல்லிய பிறகு தான்…
“அய்யோ…கோச்சிப்பாளோ….?” பயந்து போய்  அவளை பார்க்க…அதற்க்கு ஏற்றார் போல் தான் ஜமுனா பாலாஜியை ஒரு மாதிரியாக பார்த்து வைத்தாள்.
இவ கோபப்ட்டா இப்படி தான் பார்ப்பாளோ….? அவள் பார்வையை பார்த்து ஆராய்ச்சியில் இறங்கியவனின் மனசாட்சி..இப்போ இது தேவையா….? போய் அவள சமாதானப்படுத்துடா… காதல் தான் இல்லாம போச்சி….அவ மல ஏறினா…கல்யாணம் கச்சேரியும் இல்லாம போயிடும் பார்த்துக்கோ…. இவ்வாறு அவன் மனசாட்சி எடுத்துரைத்ததில்….
“ கோபமா….?” ஜமுனாவை சமாதானப்படுத்துவதில் இறங்கியவனுக்கு பல்பு தான் கிடைத்தது.
“ கோபமா….?எனக்கு என்ன கோபம் இருக்க போகுது. கோபம் வந்தா உங்களுக்கு தான்  என் மீது வரனும். காதலிக்க விடாம தட்ட தூக்க வெச்சிட்டாளே என்று…..”
ஜமுனா வார்த்தைக்கு கோபம் இல்லை என்று சொன்னாலும்…அவள் பேசிய விதம்…கோபம் என்று பாலாஜிக்கு  எடுத்துரைக்க…
பேசிய வரை போதும் என்று…. “ சரி போகலாமா….” ஹாலை  சுட்டி காட்டி சொன்னான்.
“ ஏதோ பேசனும் என்று சொன்னிங்க….?”  தன் மனதில் எழுந்த கேள்வி….அதற்க்கு பதில் கிடைக்க அவளிடம் பேசனும் என்று தான் வந்தான். 
முதல் தடவை என்னை பார்த்து உனக்கு என்ன தோனுச்சி….?அவளுக்கு காதல் தோன்றி இருக்காது. அது அவனுக்கே நன்கு தெரியும்.
இருந்தும்…ஒருவனை முதல் தடவை பார்த்தாள்…ஏதாவது தோனும் தானே….பார்த்த அனைவரையும் தோனாது. ஆனால் நான் அவளிடம் காதல் சொன்னவன்.
அப்படி இருக்கும்  போது…ஏதாவது ஒன்று தோன்றி தானே இருக்கும்.குறைந்த பட்சம்…இவனுக்கு நான் கேட்குதா….?அப்படி என்ன தோனுச்சி…
எந்னை பார்த்து குறைந்த பட்சம்…பரவாயில்ல பையன் நல்லா தான் இருக்கான். இப்படி ஏதாவது கேட்டு தெரிந்துக் கொள்ள  தான் ஜமுனா அறைக்கு வந்தான்.
ஆனால் பேச்சு போகும் பாதை பார்த்து பயந்து போனவனாய்…. “ சும்மா பேசலாம்…தான் வந்தேன். வேற ஒன்னும் இல்ல….”  அந்த ஒன்னும் இல்லை என்ற வார்த்தையிலேயே…ஓராயிரம் இருப்பது போல் ஜமுனாவுக்கு தோன்றியது. இருந்தும் அவன் போவதற்க்கு…. “ சரி….” என்பது போல் தலையாட்டி வைத்தாள். 
ஜமுனாவின் அறையில்  இருந்து வந்த பாலாஜி சித்தப்பாவின்  அருகில் வந்து அமர்ந்ததும்…. வைதேகி பாலாஜி முகத்தையே பார்ப்பதை பார்த்து…தன் முகத்தை இயல்புக்கு கொண்டு வந்தவன்…
தன் சித்தாப்பாவிடம்… “ என்ன சித்தப்பா எல்லாம் பேசி முடிச்சாச்சா…..?  முகூர்த்த தேதி குறிப்பதை பற்றி கேட்டான்.
“ அடுத்த மாசமே  ஒரு நல்ல வளர்பிறை மூகூர்த்த நாள் இருக்கு..ஆனா  சம்மந்தி அம்மா…. கல்யாண மண்டபம் அவ்வளவு சீக்கிரத்துல   கிடைக்காதுன்னு சொல்றாங்க..
அதுக்கு அடுத்த மாசம்..ஆடி. அப்போ நாம கல்யாணம் பண்ண மாட்டோம். அதான் மூணு மாசம் கழிச்சி…ஒரு வளர்பிறை மூகூர்த்தத்த  குறிச்சி வெச்சி இருக்கோம்.” தன் கையில் உள்ள காகிதத்தை காட்டி சொன்னவரிடம்…
“ ஜாதகம் எல்லாம் பாக்க  தேவையில்லையா….?”பாலாஜி தயங்கிய வாறு வைதேகியிடன் கேட்டான்.
“ இல்ல மனசுக்கு பிடிச்ச பிறகு..இந்த ஜாதகம் எல்லாம் வேண்டாம் தம்பி. அது பொறுந்தலேன்னா…அப்புறம் மனசு சங்கடப்படும்.” வைதேகி இவ்வாறு பேசிக் கொண்டு இருக்கும் போது…அங்கு வந்த ஜமுனாவை பார்த்த பாலாஜியின் கண்கள்…
“ இது மனதுக்கு பிடித்த கல்யாணமா….?” என்று கேள்வி கேட்டது.
ஆனால் பாவம் பாலாஜிக்கு அப்போதும் ஜமுனாவிடம் இருந்து பதில்  கிடைக்கவில்லை. ஜமுனாவுக்கு கண் பாஷை தெரிந்தால் தானே…. கண் பாஷை  தெரிய முதலில் அவன் மனதை படித்து இருக்க வேண்டுமே…
திருமணம் நாள் குறித்து ஒரு  வாரம் கடந்து விட்டது. அடுத்த வாரம்  முகூர்த்த சேலை எடுப்பதாக முடிவும் செய்யப்பட்டது. பாலாஜி அன்று தனிமையில்  ஜமுனாவிடம் பேசியதோடு சரி…அதற்க்கு பின் பேசவில்லை.
பாலாஜி பார்ப்பதோடு சரி. அதுவும் பாலாஜிக்கு  மட்டுமே. ஜமுனாவுக்கு அந்த வாய்ப்பும் இல்லை. தன் மகளிர் அலுவலக அறையில் இருந்து பலாஜி ஜமுனாவை பார்ப்பதால்…. ஜமுனாவுக்கு தெரியாது போயின. அதனால் ஜமுனா   அந்த விடுதியை கடக்கும் போது மட்டும் தன்னால் கால் மெல்ல அடி எடுத்து வைக்கும்.
கண்கள் அந்த விடுதி வாயிலேயே பார்த்த படி கடக்கும். ஆனால் அவள் எதிர் பார்த்தவன்  காட்சி அளிக்காது..தினம் தினம் முருகேசன் முகம் தரிசனமே கிட்டியது.
தினம் பார்த்ததாலோ..இல்லை தன் முதலாளியை கட்ட போகும் பெண் என்பதாலோ….முருகேசன் தினம் ஜமுனாவுக்கு ஒரு காலை வணக்கம் வைக்க…. பதிலுக்கு  ஒரு புன்சிரிப்போடு கடந்த ஜமுனாவுக்கு தினம் தினம் ஏமாற்றமே கிட்டியது.
இன்றும்  முருகேசன் தான் வணக்கம் வைக்க போகிறான் என்று விடுதி வாயில் பார்த்தவளுக்கு… என்றும்  இல்லாது நிறைய பேர் கூடி இருக்க… மெல்ல நகர்ந்த அவள் கால்கள் அடியோடு நின்று விட்டது.
“என்ன..ஏன் இவ்வளவு கூட்டம்…அதுவும் கையில் கேமிராவோடு….” உற்று பார்த்தவளுக்கு…ஒருவன் கையில் இருந்த மைக்கில் எழுதி இருந்த சேனல் பெயரை பார்த்து விட்டு…நெற்றி சுருங்கியவளாய்.. கட கட என்று… விடுதியின் வெளியில் நின்றுக் கொண்டு இருந்த  முருகேசன் அருகில் சென்றாள்.
அந்த சமயத்தில் ஜமுனாவை பார்த்த முருகேசன்…. “   நீங்க போயிடும்மா….” ஜமுனா பேசும் முன்னவே அந்த இடத்தை விட்டு அவளை அகற்ற பார்த்தான்.
அங்கு நிலவிய சூழலை பார்த்த ஜமுனாவுக்கு ஏனோ மனது திக்… திக்….  என்று அடித்துக் கொண்டது. பாலாஜிக்கு என்னவோ என்பதை விட…பாலாஜியின் பெயருக்கு என்ன ஆகப்போகிறதோ என்ற கவலை தான் வந்தது. 
அந்த கவலை அந்த சமயத்தில்….ஏன் வந்தது என்று அவளுக்கே  தெரியவில்லை… முருகேசன் போ என்று சொல்லியும் கேட்காது…
“ என்ன பிரச்சனை அண்ணா…..?” முதல் முறை  ஜமுனா முருகேசனிடம் பேசுகிறாள்.
இதே சாதரணமான சமயம் என்றால்…தன் முதலாளிக்கு பிடித்த பெண் தன்னிடம் பேசி விட்டார் என்று  மகிழ்ந்து போய் இருப்பானோ என்னவோ…
ஆனால்  இன்றைய சூழ்நிலையில்…எதுவும் மனது ஏற்காது…  “முதல்ல இங்க இருந்து போ…. சார் பார்த்தா திட்டுவாரு…”
மீடியா காரார்களின் பார்வை தங்கள் பக்கம் திரும்புவதை பார்த்து முருகேசன் மரியாதையை கை விட்டவனாய்… அவள் வயது…இது போல் பிரச்சனையில் மாட்டக்கூடாது என்று   ஒருமையில் பேசி விரட்டினான். முருகேசனின் இந்த பேச்சுக்கு கொஞ்சம் மரியாதை இருந்தது.
ஜமுனா அந்த இடத்தை விட்டு சென்றாள்….ஆனால் என்ன  ஒன்று அந்த இடத்தை விட்டு வீதியில் செல்லாது…. விடுதியின்  உள்ளே அவள் கால்கள் சென்றது.

Advertisement