Advertisement

அத்தியாயம்….13

ஜமுனா  கை முழுவதும் மருதாணி இட்டுக் கொண்டு இருந்தால் கதவை தாழ் போடாது அப்படியே திறந்த படி விட்டு தான்  பாலாஜியின் விடுதிக்கு வந்து இருந்தாள். திறந்த கதவை பார்த்த வைதேகி தன் மகளை  முறைத்தவராய் வீட்டின் உள் சென்றவர்…. ….

 ஜமுனாவை பார்த்து….” மாப்பிள்ளை கிட்ட பேசிட்டு இரு நான் சமச்சி கூப்பிடுறேன்.” என்று சொல்லியவர். 

பாலாஜியிடம்……“ நீங்க பேச்சிட்டு இருங்க தம்பி…. நான் சீக்கிரம் சமச்சிடுறேன்.” என்று  சமையல் கட்டில் நுழைந்தவரின் முதுகை பார்த்த வாறே அப்படியே நின்று விட்டான் பாலாஜி.

எதுவும் நடவாது போல் எப்படி இவரால் இருக்க முடிகிறது…..? இது சாத்தியமா….? இது  போல் இருக்க மனதைரியம் எவ்வளவு இருக்க வேண்டும்….இதை தான் நினைத்தான் பாலாஜி.

ஜமுனா அழைத்த …. “ வாங்க…” என்ற அழைப்பில் வீட்டில் நுழைந்தவன்… மாலை நடக்கும் விழாவுக்காக ஓட்டலுக்கு கொண்டு போக வேண்டிய பொருட்கள் அங்கு அங்கு சிதறி கிடந்தது. வீட்டின்  நிலமையை பார்த்து விட்டு…

சமையல் கட்டின் அருகில் சென்றவன்… “    நம்ம ஹாஸ்ட்டலில் இருந்தே  சாப்பிட ஏதாவது  கொண்டுட்டு வர சொல்றேன்.நீங்க இங்கு இருக்கும் வேலைய பாருங்க….” வீட்டில் இரைந்து கிடக்கும்  பொருட்களை சுட்டி காட்டி சொன்னான்.

“ பரவாயில்ல தம்பி. அந்த ஹாஸ்ட்டல் சாப்பாடு தான்  நீங்க பொழுதன்னைக்கும்  சாப்பிடுறிங்க… இன்னிக்கி என் கை சமையலை சாப்பிடுங்க….” என்று சொன்னவரின் குரலில் மாறு பாட்டால்…

சிறிதும் யோசிக்காது…அவர் தோள் பற்றி தன்னை பார்க்கும் மாறு செய்தவன்… அவர் கண்ணில் வழிந்த கண்ணீரை பார்த்து…. “ அத்த என்ன இது….? நீங்க எவ்வளவு தைரியமானவன்ங்கன்னு இப்போ தான் நான் பெருமை பட்டேன்…என்ன இது….?” பாலாஜி அந்த சமயத்தில் வைதேகிக்கு மருமகனாய் இல்லாது ஒரு மகனாய் அதட்டினான்.

“ நானும் மனிஷி தானேப்பா…. எப்போ அவன் திருமணம் முடிஞ்சவன்னு தெரிஞ்சதோ…அப்பவே  நான் ஏமாந்தது தெரிஞ்சி போயிடுச்சி….எதுக்காக என் கூட பழகுனான் என்பதும்…ஆனா அதை இன்னிக்கி நேருல சந்திக்கும் போது…முடியல தம்பி….”

கண்ணில் கண்ணீர் மட்டும் வந்து கொண்டு இருந்த வைதேகிக்கு பாலாஜி கேட்டதும்… தன் மனது துக்கத்தை வார்த்தையால் கொடிட்டியவர் தாங்க முடியாது பேச்சின் முடிவில்…  கதறி அழுது விட்டார்.

ஹாலில் அமர்ந்து இருந்த ஜமுனாவின் நிலமை அதோடு மோசமாக இருந்தது. தன் பிறப்புக்கு காரணமானவனின் எதிரில் வீரமாக “ நீ இல்லேட்டா  நாங்க எதுலேயும் குறைந்து போய் விட வில்லை. நல்லா தான் இருக்கோம்.” என்று  காமித்துக் கொண்டாலும்…

அவள் மனதின் ரணம்….   தந்தை என்ற இந்த உறவு இல்லை என்று… பள்ளியிலும்….அக்கம் பக்கத்திலும் தாங்கள் கேட்ட வார்த்தைகள்….  அன்னையின் ஒழுக்கம் பற்றிய விமர்சனங்கள். அந்த டீன் ஏஜில் அவள் அனுபவித்த  வலிகள் வார்த்தையால் சொல்ல முடியாது.

அதுவும் தன் திருமணம்….தனக்கு அது முறையா நடக்குமா….? விவரம் தெரிந்த நாள் தொட்டு அந்த சந்தேகம் ஜமுனா மனதில் உதித்து விட்டது. காதல் ஒரு  ஹம்பக்…உடல் இச்சையை தீர்த்துக் கொள்ள நாகரீகமாய் பயன் படுத்தும் வார்த்தை. அதனால் காதல் அது அடுத்து திருமணம்  என்பது சாத்தியம் இல்லை.

பெரியவர்கள் பார்த்து முறையாய் தந்தை  பெயர் தெரியாது தன்னை பெண் கேட்டு இந்த வீட்டுக்கு வர மாட்டார்கள். தனக்கு ஒரு திருமணம் நடக்குமா….?  சமீப காலாமாய் அவள் மனதில் எழும் சந்தேகம் இது.

ஜமுனா கொஞ்சம் பார்க்கும் படி இருப்பதால் பாலாஜிக்கு முன் இரண்டு பேர் ஜமுனாவிடம் காதல் சொல்லி இருக்கிறார்கள். பாலாஜிக்கு என்ன சொன்னாளோ..அதே தான் அவர்களிடம் சொன்னாள்.

அதை கேட்டதும் அவளை மேலும் கீழும் ஒரு பார்வை  பார்த்து போய் விடுவர்.  அதற்க்கு அடுத்து அவர்கள் தன் கண்ணில் பட்டதும் இல்லை. தான் நினைத்தது சரி தான்…காதல் என்ற பெயரில் தன் இச்சையை தீர்த்துக் கொள்ள தான் இருக்கிறார்கள் என்று  நினைத்தாள்.

பாலாஜி தன்னிடம் காதல் சொன்னதும்… “பெண் கேட்டு வாருங்க….” என்று சொன்னவள்…இனி இவன் எங்கு கண்ணில் பட போறான் என்று  தான் நினைத்தாள்.

அந்த நினைப்பை தகர்த்து  ஊர் மதிக்க தனக்கும்  ஒரு வாழ்க்கை. அதன் ஆரம்பமாய் இன்று மாலை அவனோடு  எனக்கு நிச்சயம். வெளி பார்வைக்கு சாதரணமாக இருந்தாலும் ஜமுனாவின் மனதின் அழுத்தம்…இன்று தகர்ந்து காலையில் இட்ட மருதாணியை தன்னவனுக்கு  காட்ட நினைத்தே அன்னையை பாலாஜியை அழைத்து வர அனுப்பியது.

ஆனால் இப்போது  நினைத்தாள்  அவரை நான்  அனுப்பி இருக்க கூடாதோ…. என் பிறப்புகு  காரணம் ஆனவரைய்   பார்த்து மட்டும் எனக்கு என்ன ….? இன்று என் மகிழ்ச்சி கெட்டது தான் மிச்சம்.

இப்படி தன் நினைவில் சுழன்டு கொண்டு இருக்கும் போது  அன்னையின் அழுக்  குரல் கேட்டதும் பதறி போய் சமையல் அறைக்கு ஓடி போய் பார்க்க…

அங்கு பாலாஜி  தன் அன்னையை தோள் சாய்த்து ஏதோ ஆறுதல்  கூறுகிறான் என்பது மட்டும் தான் தெரிந்தது. என பேசுகிறான் என்று  கவனிக்கும் மனநிலையில்  அவள்  இல்லை.

அந்த காட்சி…தனக்கு அம்மா..அம்மாவுக்கு நான் இது தான் வாழ்க்கை என்று இருந்தவளுக்கு… அன்னைக்கு ஆறுதல் அளிக்க  ஒருவன். அதுவும் தன்னவன்  என்ற  போது ஜமுனா அவனை பார்த்த அந்த பார்வை…

அந்த பார்வையை மட்டும் பாலாஜி பார்த்து இருந்தால்…..?  ஜமுனாவிடம் இருந்து  எந்த பார்வை கிடைக்க ஏங்கி இருந்தானோ…அந்த பார்வையை இப்போது பார்த்து இருப்பான்.

பாவம் அவனுக்கு இன்னும் தன் காதலியிடம் இருந்து காதல் பார்வையை பார்க்கும்  யோகம் வரவில்லை போல்…. அவன் கடமையே  கண்ணாக தன் அத்தைக்கு ஆறுதல் கூறிக் கொண்டு இருந்தான்.

“ என்ன அத்த  சமச்சி  கொடுக்குறிங்கன்னு சொல்லிட்டு இப்படி அழுதுட்டே இருந்தா எப்படி….? எனக்கு இன்னிக்கும் என் விடுதி சாப்பாடு தானா….?” அவர் மனநிலையை மாற்றும்  பொருட்டு  சொன்னவன்… ஜமுனாவை  அப்போது  தான் அங்கு வந்ததை பார்த்தவன்..அவள் பார்வை பார்க்காது…

“ என்ன ஜம்மூ….உன் அம்மா தான் சமைக்கல…நீயாவது சமச்சி போடுவியா…?இல்ல நீயும் பேச்சோடு தானா….?” என்று சொல்ல அதுக்கு எந்த  பதிலும் சொல்லாது தங்கள் இருவரையும் மாறி..மாறி பார்த்துக் கொண்டு இருந்தவளை பார்த்த வைதேகி..

“ மாப்பிள்ளை  ஹால்ல  பொருள் எல்லாம் எரஞ்சு கிடக்குது.  நீங்க ஜமுனா ரூமுல அவ கூட பேசிட்டு இருங்க…அதுக்குள்ள நான் சமச்சிடுறேன்.” மகளின் கசங்கிய முகம் அவருக்கு ஏதோ செய்தி சொல்ல…. தன் மகளை பாலாஜியிடம் ஒப்படைக்க அவ்வாறு சொன்னார்.

பாலாஜியும் அப்போது தான் ஜமுனா முகத்தை பார்த்து விட்டு…. “ அங்கயே அவள் சரியில்லை என்று தானே அவசர அவசரமாய் கூட்டிட்டு வந்தேன்….வந்து அவள பாக்காம விட்டுட்டேனே….” வருந்தியவனாய் ஜமுனா …வைதேகி  இருவரின் முகத்தையும்  மாறி ….மாறி….  பார்த்தான்.

வைதேகி ஒரு நமுட்டு சிரிப்புடன்…” இப்போ தானே  குடும்பஸ்தன் ஆக முதல் படியை அடி எடுத்து வெச்சி இருக்கிங்க…போக போக..யாருக்கு  முதல்ல   ஆறுதல் கொடுக்கனுமுன்னு தெரிஞ்சிப்பிங்க…” சிரித்துக் கொண்டு சொல்லியவரின் முகத்தை பார்த்து இப்போது பாலாஜிக்கு கொஞ்சம் ஆசுவாசம் கிட்டியது.

 அத்தை  சரியா ஆகிட்டாங்க…இப்போ நம்ம ஜம்மூவை பார்ப்போம் என்று நினைத்தவனாய்… “ அத்தை சீக்கிரம் சமையல் செய்ங்க எனக்கு பசிக்குது.” என்று சொன்னவன்..

“  வா ஈவினிங் பங்ஷன் பத்தி கொஞ்சம்  பேசனும்.” என்று  அழைத்தான்.

“ உங்களுக்கு பசிக்குதுன்னு சொன்னிங்கலே..சமையல்ல அம்மாவுக்கு எல்ப் பண்ணா  சீக்கிரம்  முடிச்சிடலாம்.”  ஜமுனாவுக்கு பாலாஜி தன்  அன்னையை தோள் சாய்த்து ஆறுதல் செய்வதை பார்த்ததும்….

கொஞ்ச நேரத்துக்கு முன் இருந்த மனநிலையில்  சிறிது மாற்றம் ஏற்பட்டது. அந்த மாற்றம் அன்னைக்கு  சமையலில் உதவி செய்யும் அளவுக்கு அவளை இட்டு சென்றது.

 காரியமே  கெட்டுது போ…உன்னை இங்கு இருந்து கூட்டிட்டு போகதான் அத்தை கிட்ட பசிக்குதுன்னு சொன்னேன்..இவ என்னன்னா ப்ளேட்டையே மாத்துறாளே….பாலாஜி மனதில்  ஜமுனாவை திட்டும் வேளயில்..

“ நீ இங்கு இருந்து போவது தான்   சமையலில்  நீ எனக்கு செய்யும் பெரிய உதவி.” அத்தையின் பேச்சில்..

“  ஓ..அப்படியா..அப்போ கல்யாணம் ஆகி கூட எனக்கு விடுதி சாப்பாடு தானா…? ” என்று பாலாஜி  சொன்னதுக்கு…

“ நீங்க ஏன் தம்பி…அவள எதிர் பார்க்குறிங்க….நான் சமச்சி கொடுக்குறேன்.” என்று  வைதேகி சொன்னதும்…

பாலாஜிக்கு இப்போதே அத்தையை தன்னுடன் வைத்துக் கொள்வதை பற்றிய பேச்சை ஆராம்பித்து விடலாமா….? என்று யோசித்தது சில நொடி தான்.

ம்..ம்… வேண்டாம். இதை பற்றி பிறகு பேசி கொள்ளலாம்.  இன்று எங்களுக்கான நாள். அந்த நாளின் பாதியை  ஏற்கனவே ஒருத்தர் கெடுத்து விட்டார். இன்னும் கொஞ்ச நேரத்தை அத்தைக்கு செலவிட்டு விட்டோம். இப்போவாவது காதல் மன்னனாய் நம்ம  சைட்டைய் பார்ப்போம்.

திரும்பவும்  ஏதாவது இடஞ்சல் வரும் முன்..அவசர அவரமாய் ஜமுனாவை அவள் அறைக்கு அழைத்து சென்றான். “ நானே வர மாட்டேனா….இப்போ எதுக்கு கை பிடிச்சிட்டு இழுத்துட்டு வர்றிங்க….? தன்  மருதாணி  இட்ட கை  கலைந்து விட்டதா என்று பார்த்தாள்.

“எங்கே காட்டு….” திரும்பவும் அவள் கை பற்றி அவள் படுக்கையில் அமர வைத்தவன்… மருதாணி போய் விட்டதா பார்க்கிறேன் என்று காய்ந்த மருதாணியை  சிறிது சிறிதாக எடுத்துக் கொண்டு இருந்தான்.

“இப்போ  ஒன்னும் வேண்டாம். எல்லாம் நான் பாத்துக்குறேன்.” அவன் கைய் பிடியில் இருந்து தன் கையை உறுவிக் கொண்டாள்.

“ இப்போ வேண்டான்னா  எது வேண்டான்னு  சொல்ற …? அதுக்கு  என்ன அர்த்தம்….? தோ பாரு நான் ரொம்ப நல்ல பையன்…நாம கை பிடிச்சதாலே  கஷ்டப்பட்டு போட்ட மருதாணி கலஞ்சி போயிடுச்சோன்னு தான் கை பிடிச்சி பார்த்தேன்.  பார்த்ததில்  காஞ்சி போய் இருந்தது. அது தான் தேச்சி விட்டுட்டு இருந்தேன்.  நீ நினைப்பது போல் தப்பு எல்லாம் இப்போ செய்ய மாட்டேன். அது எல்லாம்    கல்யாணதுக்கு அப்புறம் தான். சொல்லிட்டேன்.”

 இந்த வசனத்தை பாலாஜி சொன்ன விதமும்..சொன்ன பாவனையும் பார்த்து…. “ அடப்பாவீ….நீ ஒரு அப்பாவீன்னு நினச்சிட்டு இருந்தா….நான் சொன்ன அப்புறம் என்ற ஒரு வார்த்தைக்கு ஆயிரம் அர்த்தத்தை சொல்லி….நீ ஒரு பாவீன்னு நிருபிச்சிட்ட  டா…..”

ஜமுனாவின் இந்த பேச்சும்…அவள் சொன்ன விதத்திலுமே…பாலாஜிக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்து விட்டது. அந்த சிரிப்போடு… “  என்னை பாவீன்னு சொல்லுவேடீ சொல்லுவே….காதல் சொல்லிட்டு உன்ன ஒன்னும் செய்யாம இவ்வளவு மாசமா இருந்தேன்  பாரு..என்னை சொல்லனும்.”

அதே சிரிப்போடு…தன்  பேக்கட்டில் வைத்திருந்த  மோதிரத்தை எடுத்து காட்டி …..” பிடித்து இருக்கா….?” என்று கேட்க…

ஒரே போல் இருக்கும் இரு  மோதிரம். அதன் ஜொலி ஜொலிப்பில் நான் வைரம் என்று காட்ட…” என்ன பாலாஜி… மோதிரம் வைரமா….? எதுக்கு வைரம் வாங்குன…. இப்போ தானே  வைர செட்டு வாங்கி கொடுத்து  பணத்தை வாரி எரச்ச….இன்னும் கல்யாணம் செலவு எல்லாம் இருக்கு …. பார்த்து செலவு பண்ணு பாலாஜி….”

ஜமுனாவுக்கு பாலாஜியின் வருமானம் இன்னும் கூட சரியாக  தெரியாது. அவனிடன்  பணம் இருக்கு…நல்ல வருமானம்  வருகிறது..அவ்வளவு தான் தெரியும். இவ்வளவு என்று அவனும் சொல்ல வில்லை. இவளும் கேட்க வில்லை.

நுங்கம் பாக்கத்தில்  வாங்கிய இடத்தில்  விடுதி கட்ட வேண்டும் என்று வேறு சொல்லி இருந்தான். நிச்சயத்துக்கே லட்ச கணக்கில் செலவு செய்கிறான் என்று தெரியும். ஆனால் எத்தனை லட்சம் என்று தான் தெரியவில்லை.மேலும் கல்யாண செலவு வேறு இருக்கிறது. தங்களை ஒரு செலவும் செய்ய விடுவது இல்லை.

அவன் செய்யும்  செலவை பார்த்தால் அவளுக்கே ஒரு மாதிரியாக இருந்தது.இதே பாலாஜிக்கு அப்பா அம்மா இருந்து இருந்தால்….அவர்கள்  வசதிக்கு என்ன என்ன கேட்டு இருப்பார்கள். அவனுக்கு பெற்றோர் இல்லை என்று நாம் அட்வான்டேஜ் எடுத்துக் கொள்கிறோமோ…அவன் செலவு செய்வதை பார்த்து  ஜமுனாவின் மனதில் குற்றவுணர்ச்சி எழுந்தது.அதன் வெளிப்பாடே…

“ ஏன் வைரம் வாங்குனிங்க….?  தங்கம் வாங்குனா போததா…?” என்று கேட்டது….

“  எனக்குன்னு செலவு செய்வதே இது தான். இது வரை   எனக்குன்னு ஒரு  நல்ல வண்டி கூட வாங்குனது இல்ல. என் ட்ரஸ் லட்சணம் தான் உனக்கு தெரியுமே…..இதுல நான் என்ன செலவு செஞ்சி இருப்பேன். அன்னிக்கு  சொன்னது  தான் இன்னிக்கும் சொல்றேன். என் கிட்ட பணம் நிறைய வருது…

யாருக்கு செலவு செய்வதுன்னு ஆளு இல்லாம இது வரை  இருந்துட்டு இருந்தேன். எனக்கே எனக்காக வரப்போற உனக்கு செலவு செய்யாம யாருக்கு செலவு செய்ய சொல்ற….?இனி பணத்தை பாக்காதே ….பிடிச்சி இருக்கா….? அத சொல்லு….”

“ ம்… ரொம்ப  பிடிச்சி இருக்கு.” என்று சொல்லிக் கொண்டே தன்னுடையதை  அளவு சரியாக இருக்கிறதா…என்று  போட்டு பார்க்க  மோதிரத்தை தன் விரலில்  நுழைக்கும் வேளயில்…

அவளிடம் இருந்து அதை பறித்த பாலாஜி…”ம்ம்.. இது நீ போட வாங்கல…நான் தான் போட்டு விடனும்.” என்று சொன்னதும்..

தன் கையை அவன் புறம் நீட்டி …” போட்டு விடுங்க ……” என்று  ஜமுனா சொன்னதற்க்கு…

“ தனி ரூமுல…. கை கூட கழுவாம இருக்கும் போது போட்டு விடவா இதை வாங்கினேன். அனைவரின்  முன்னும்….இவள் எனக்கே எனக்கானவள்  பகிரங்கடுத்த போடுறது.” என்று சொல்லிக் கொண்டே அவள் கை பற்ற…

“ அது தான் இப்போ போடலேன்னு சொல்லிட்டிங்கல…அப்புறம் என்ன….?அவனிடம் இருந்து கையை இழுக்க…. பார்த்தாள்.

“ ஏய் இரு இரு….இந்த மருதாணி வைக்கும் போது பெயர் எல்லாம் எழுதுவாங்கலே…அது போல என் பெயர் எழுதி இருக்கியா….? அது காட்ட தான் விடுதிக்கு வந்தியா….?” என்று  கேட்டுக் கொண்டே அவள் கையில் தன் பெயர் எழுதி இருக்கா என்று பார்த்துக் கொண்டு இருந்தான்.

“   கல்யாணத்துக்கு அப்புறம் தான் உங்க பெயர் என் உடம்புல இடம் பிடிக்கும்.” என்று அவள் சொல்லிக் கொண்டு இருக்கும்  போதே….

பிடித்த கை திருப்பி மருதாணி கை மீதே தன் முதல் முத்தத்தை பதித்தவன்… “  உன் உடம்பில் என் பெயர்  பொறுமையா எழுது. இப்போ …” என்று சொல்லிக் கொண்டே அவள் முகத்தை தன் முகம் அருகில் கொண்டு வந்தவன்…

அவள் சம்மதத்திற்க்காக அவளை பார்க்க…அவள்  எங்கு இந்த உலகில் இருந்தாள்…கண் மூடி உதடு துடிக்க  வேறு உலகில் சஞ்சரிப்பது போல் அவள் முகத்தை பார்த்து விட்டு  அவன் சும்மா இருந்தால்… நாளைய வரலாறு அவனை தப்பா பேசாது.

Advertisement