சென்னை நகரமே ஒளியால் நிரம்பி விடிந்து விட்டேன் என்று காட்டிய அந்த இரைச்சல் நிறைந்த காலை வேளையில், அந்த தெருவில் இருந்த வீட்டு மாடியில் இருந்த அறையில் இருந்து பீப் பீப் பீப்… என்ற சத்தத்தில் “ அதுக்குள்ள விடிஞ்சிருச்சா என்ன” என கண்களை கசக்கியவாறு விழித்தாள் அவள், எழுந்து நேராக பாத்ரூம் சென்று காலைக்கடன் அனைத்தும் முடித்து முகம் கழுவி சமையலறை சென்று.
” டீ யா இல்ல காப்பி யா” என ஒரு நிமிடம் தலையை தட்டி யோசிக்க டீ போட்டு பால்கனி சென்று வேடிக்கை பார்த்தவாறு கைபேசியில் உண்மை கொலை சம்பவ நிகழ்வை எதோ காதல் பாடலை கேட்பது போல ஒலி வடிவ வாயிலாக கேட்ட வாரு டீயை ரசித்து குடித்து முடித்தாள்.
அது ஒரு ஹால் ஒரு கிச்சன் இரு பெட்ரூம் உடைய வீடு, வீடு என்று சொல்ல முடியாத அளவு இருந்தது ஹாலில் ஒரு மேஜை இரு நாற்காலி, கிச்சனில் ஒரு பானை ஒரு கடாய் ஒரு டம்பலர் மற்றும் டீ, காப்பி போட தேவையான பொருட்கள் வீட்டில், ஒரு கடிகாரம் கூட மாட்ட பட வில்லை யாராவது பார்த்து மனிதர்கள் வாழும் வீடு என்று சொன்னால் நம்ப இயலாத வாரு காட்சியளித்தது அந்த வீடு.
அரை மணி நேரமாக கிரைம்கேஸ் ஆடியோவை கேட்டு முடித்து இன்று அணிய வேண்டிய ஜீன்ஸ் மற்றும் குர்த்த டாப்பை அயன் செய்து முடித்து குளித்து உடை அணிந்து வெளியே சென்றால், அங்கு கேட்டில் மாட்டியிருந்த பையில், இருந்து ஹாட் பாக்ஸை எடுத்து அதில் இருந்த இட்லியை ரசித்து உண்டு முடித்து கிச்சனில் இரவு உண்டு விட்டு வைத்திருந்த ஹாட் பாக்ஸயும் சேர்த்து கலுவி எடுத்து முகத்தில் முகம்மூடி ஒன்றை அணிந்து அதனுடன் ஹெல்மெட்டையும் அணிந்து முழு முகமும் மறைத்த வாரு தன் இரு சக்கர வாகன சாவியை எடுத்து கீழே இறங்கி சென்றால்.
கிரவுண்ட் ஃப்ளோரில் ஒரு வீட்டின் முன்பு நின்று காளிங் பெல் அடித்துவிட்டு கதவில் மாட்டியிருந்த பையில் ஹாட் பாக்ஸை போட்டு விட்டு திரும்பிக்கூட பார்க்காமல் ஸ்க்கூட்டியில் சென்றுவிட்டால்.
கீழ் வீட்டு பாக்கியா அக்கா வந்து பார்கும் போது அவள் அங்கு இல்லை “இந்த பொண்ணு மூஞ்சக்கூட பாக்காமா ஏன்தான் இப்படி ஓடுறலோ “ என பெரும்மூச்சி விட “அதல்லாம் பாக்குர மாதிரி இருக்கணும் இப்படி சோர்னாக்க மாதிரி இருந்த” என பெருமூச்சு விட்டு “ எப்படியோ நிலா அக்கா தப்பிச்சிறா நான் தான் “ என எதோ சொல்ல வந்த தன் மகள் கீதாவின் காதை பிடித்து நன்றாக திருவ “வாய் அதிகம் ஆகிடுச்சு உனக்கு வாயை கொஞ்சம் குறைடி நம்ம நிலா பார்த்து கத்துக்கோடி “
“அம்மா காதை விடுமா…. வலிக்குது ” என கத்தியவாரு குதித்து விலகி கொண்டே “என்னத்த கத்துக்க முகமூடி கொள்ளைக்காரி மாதி போகாதான் கத்துக்கணும் போலா ”
“அடியே அந்த பிள்ளை வேலை அப்படி டி”
“ ஆமா அப்படியே லீவ் ல மட்டும் முகத்த காட்டிட்டு தான் நீ வேரமா “
“அது வெக்கமா இருக்கும் டி”
“அமா நி விஜய், நா அஜீத்து பாத்து வெக்கம் பட “
“ஆன நல்ல பிள்ளை டி இங்கே வந்து மூனு வருசம் ஆச்சி ஒரு பிரச்சனை வந்துருக்குமா “
“அதேதான் நானும் கேக்குறேன் மூனு வருசம் ஆச்சி நம்ம கிட்ட நாலு வார்த்த சிரிச்சு பேசிருப்பாங்களா இல்லா அவுங்களை பத்தி எதாவது சொல்லி இருப்பாங்களா அவுங்க முகத்தையே மாசத்துக்கு ஒரு தடவ அந்த சாப்பாடு காசு தரப்ப தான் காமிக்குறாங்க” என தலை ஆட்டியவாறு கூற, அவள் தலையை தட்டி “நிலா பத்தி பேசுனது போதும் நீ டியூசன் போலயா டி டைம் ஆச்சு பாரு”
“ தோ.. போரமா “ என உள்ளே சென்றுவிட்டாள்
“ என்ன தான் படிக்கிறாளே வாய்தான் காது வர போகுது “ என சிரித்த வாரு சென்றுவிட்டார்.
இருசக்கர வாகனத்துடன் வளசரவாக்கம் ஆபிஸ்க்குள் நுழைந்தாள் அவள் தீபநிலா வயது 25 சுடர் ஒளியின் அக்கா ஃபாரன்சிக் இன்வஸ்டிகேட்டராக பணிபுரிகிறாள்.
அளவான உயரம் அதற்கான உடல் அமைப்பு இடை தாண்டிய முடியை ஒன்றாக அடக்கி பின்னல் இட்டுக்கட்டி இருந்தாள் முகம் தெரியவில்லை ஆனால் அவள் முகத்தை பார்த்தவர்கள் அழகி தான் என்பார்.
இவள் நேராக சென்று அவள் இருக்கையில் அமர்ந்து விட்டால் முகம் மூடியவாரு மேசை மீதிருந்த ஆவணங்களை பார்க்க ஆரம்பித்து விட்டாள். அவளை அந்த அறையில் இருந்த மற்றொரு மேசையில் இருந்தவாரு பாலா, ஏதோ யோசித்த வாரு அவளையே பார்த்து இருந்தான் அப்போது அவன் தோளில் கையை போட்டவாரு “என்ன ப்ரோ சைட்டா எவ்வளோ நாளா நடக்குது தீபா மேம்க்கு தெரியுமா “ என அவன் பேசிட்டே போக அவன் வாயை அடைத்தா பாலா.
“ஏன் ப்ரோ நான் நல்ல இருக்குறது உங்களுக்கு பிடிக்கலையா இப்படி டேன்ஜர் ஓடா கோத்து விடுறிங்க” என அலறவே செய்தான்
“ஏன் மேடம்க்கு என்ன ஏன் இவ்ளோ பயம்”
“ நீ இங்க ஜாயின் பன்னி ஒரு மாசம் தான ஆகுது அதன் தெரியல உனக்கு அவுங்கள பத்தி, பாக்கத்தான் சைலன்ட் மாதிரி தெரியும் அன அவுங்க கிட்ட பேசவே எல்லாரும் யோசிபாங்கட கண்ணலயே மிறட்டுவாங்க பாரு “ என தலையை மறுப்பாக ஆட்டினான்.
“அப்புறம் ஏன் அந்த ரோமண்டிக் லுக் ப்ரோ “
“அடேய் நான் எப்படி சிக்காம தப்பிக்கிறதுனு பாக்குறது உனக்கு ரோமண்ஸ் மாதிரி தெரியுதாட “ என முதுகில் ஒன்று போட “நீங்க வேற வச்ச கண்ணு வாங்காம பார்த்திங்கள அதான்“ என தலையை சோறிந்தான்.
“அதுவடா இந்த கேஸ் அவுங்க கூடதான் ஸ்பாட்டுக்கு போணும்னு போட்டு இருக்காங்க ஆதான் எப்படி தப்பிக்க எமர்ஜென்சினு லீவ் போடலாமானு பார்த்தன் அத போய் நீ “ என மீண்டும் யோசிக்க அரம்பித்தான் “ ஏன் ப்ரோ அவுங்க வேலை-ல ஸ்ட்ரிக்ட்டா ரொம்ப”
“அது அப்படியில்ல ஹெல்ப்லா பண்ணுவாங்க பட் சின்னதா க்ளு மிஸ் பண்ண கூட நீ இந்த டிபார்ட்மன்ட்ள இருந்து மிஸ் அகிருவ அதை பெரிய இஸ்சு ஆக்குவா தலைவலிடா “
“அச்சோ ப்ரோ ப்ளிஸ் ப்ளிஸ் என்ன மாட்டி விட்டுறாதிங்க நீங்க இல்லன்னா நான் மட்டும் மாட்டிப்பேன் ப்ரோ “ என கையை பிடித்த வாரு கெஞ்சினான் கார்த்திக்.
இங்கே இவ்வாறு இருவரும் பேசிக்கொண்டு இருக்க இவர்கள் அருகே வந்த தீபா “காய்ஸ் க்ரைம் சைட்கு போலாமா..” என்ற சத்தம் கேட்டு இருவரும் திடுகிட்டவாரு திரும்பி பார்த்தன. அவர்களை பார்த்த தீபா என்ன என்று தன் புருவங்களை உயர்த்த அதை பார்த்த இருவரும் சேர்ந்தார் போல “ இதோ போலாம்” என எழுந்து நின்றன. இவர்களை பார்த்த தீபா தலையை அசைத்தவாறு சென்றுவிட்டாள் “ப்ரோ ஒரு சந்தேகம்” என காதை கடித்தான் கார்தி “ என்னடா “ என கேட்டுக்கொண்டே தேவையான பொருட்களை எடுத்து வைத்தவண்ணம் கேட்டான் “ நான் தான் மேடம் விட ஜூனியர் ஸோ மரியாதையா நின்ன அன…” என அவ இலுக்கும் போதே தலையில் தட்டி “ நாட்டுக்கு ரொம்ப அவசியம் கிளம்புடா இல்ல விட்டுட்டு போய்டுவாடா திமிரு பிடிச்சவ “ என ஓடவே செய்தான்.
மூவரும் சேர்ந்து க்ரைம் ஸ்பாட்டுக்கு பேய் சேர்ந்தன அது ஒரு திருடு போன வீடு , திருடு போன இடம் பூஜை அரை அங்கு இருந்த தங்க விக்கிரகத்தையே திருடி இருந்தன அங்கு வந்த தீபா கை மற்றும் காலுறை அணிந்தவாறு உள்ளே செல்ல போகா கார்திக் பாலா தனது காலணிகளை கலட்டி பின் பாதுகாப்பு காலுறையை அணிந்தார்கள் அதை பார்த்த தீபா தனது கால்களை பார்த்தாள் பின் காலணிகளை அவலும் கழற்ற தொடங்கினாள்.
தீபநிலா அவலுக்கு கடவுள் நம்பிக்கை இருந்தது அனால் அது அவளை விட்டு போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டது. அவளுக்கு இல்லை என்றாலும் பிறர் நம்பிக்கையை மதிக்காமல் இருக்க மாட்டாள் இப்போது நடந்தது போல.
க்ரைம் ஸ்பாட் முழுக்க தேடி அனைத்து க்ளுக்களையும் சேகரித்து முடிக்கவே மதியம் தாண்டியது கார்த்திக் அருகில் இருந்த பாலாவை சுரண்ட அதற்க்கு பாலா “என்னடா உனக்கு இப்போ” என கடுப்புடன் கேட்கக் அதற்கு அவன் வயிற்றை தடவிய வாரு “பசிக்குது ப்ரோ..” என பாவமாக கேட்டான்.
“ஓ டைம் என்ன 2 ஆ சரி தோ வரன் “ என தீபாவை நோக்கி சென்று எதோ சொல்ல அவள் தலை ஆட்டியதும் பாலா கார்த்திகை நோக்கி “வாடா நாமா போய் சாப்பிட்டு வரலாம் பென்டிங் வர்க்க தீபா பத்துக்குறாங்களாம் “ என இருவரும் சென்றன “ப்ரோ தீபா மேடம் நம்ம கூடலாம் சாப்பிட மாட்டாங்கல என்ன “ அதற்க்கு பாலா தன் கைபேசியை பார்த்த வாரு “நம்ம கூடனு இல்லை யார் கூடையும் சாப்பிட மாட்டாங்க அதே டைம் வேளிய வர்க் பாக்குர இடத்துலயும் சாப்பிட மாட்டாங்க ஆபிஸ்ல இருக்க கேண்டின்ல தான் சாப்டுவாங்க “
“ஓ… ஆமா சாப்பிட போது ஆவது அந்த மாஸ்க கலட்டுவாங்கலா இல்ல ஸ்டார போட்டு உறிஞ்சிவாங்களா ப்ரோ” என சிரிக்க
“அது அந்த தீபா முகத்தையே நாலாம் அவுங்க லன்ச் சாப்பிடும் போதுதான் பர்தேன் தெரியுமா நான் மட்டும் இல்ல இந்த அபீஸெ அப்படி தான் பாத்தாச்சு “
“ஏன் ப்ரோ அப்படி மாஸ்க் போட்டே சுத்துராங்க வேண்டுதலா என்ன “
“என்னவோ யாருக்கு தெரியும் ஜாயின் பண்ண புதுசுல நாங்களும் சரி இன்ரவென்ட் போலனு நாங்கலாம் ஒரு நாலு பேரு சேர்ந்து அவுங்க சாப்பிடும் போது பழகலாம்னு போன மூஞ்சில அடிச்ச மாதிரி பாதி சாப்பாட்லயே கை கழுவிட்டு வந்து என்னனு கேட்டாங்க பாரு அந்த வாய்ஸ் ஏ தேவையில்லமா பேசாதனு சொன்ன மாதிரி இருந்துச்சி அதுல இருந்தே தீபானா தள்ளிதான் இருப்போம்”
“ஓ….ஓகே ப்ரோ” என எதையோ யோசிக்க
“என்ன நீ ரொம்ப அவுங்கள பத்தியே பேசிட்டு இருக்க”
“அய்யோ தேய்வமே என்ன விட்டுறுங்க அவுங்கள பாத்தாலே பயமா இருக்கும் , ஒரு ஆர்வத்துல தான் கேட்டேன்” என சொன்னவாறு கை கூப்பி கூற அதை பார்த்து பாலா உன்ன பார்த்த பயப்படுற மாதிரி இல்லையே என்று பார்த்தான்.
இங்கு தீபாவொ வேலையையே கண்ணாக இருந்தாள் பசி ஒரு பக்கம் இருந்தாலும் அதை வேளியே காட்டாதவாறு வேலை பார்த்தால், எப்பவும் போல மனது எதற்காக இப்படி ஒரு தனிமை நிறைந்த வாழ்க்கை என மனது கேள்வி எழுப்ப அதை அடக்கிய வாரு “ஐயம் குட் ஐயம் குட்” என மந்திரம் போலா அவளுக்கு அவளே சொல்லிக் கோண்டாள் .