விடியலை தேடி

 

ஒளியை தொலைத்த அந்த திகாலை பொழுதில் வானில் கரு மேகங்களின் உதவியோடு  மழை பொழிந்த வன்னம் இருந்தது. அங்கு ஜன்னல் ஓரம் அந்த இருளை வெறித்தவாறு நின்று இருந்தாள், அவள் சுடர் ஒளி தன் பெயரில் உள்ள ஒளியை வாழ்வில் தேடி தோற்று இன்று இருளை வெறித்து நின்றுகொன்டு இருக்கிறாள்.

எவ்வளவு நேரம் நின்றுகொன்டு இருந்தாளோ அவளுக்கு தெரியவில்லை திடீரென்று வெட்டிய மின்னல் ஒளியில் சுயம் பெற்று வேகமாக திரும்பி நேரத்தை பார்த்தாள் மணி காலை 5:00 என்றதுஅச்சோ இவ்வளவு நேரமாவா நின்னஎன தலையை தட்டிக்கொண்டு சமையல் செய்ய தொடங்கினால்.

வேக வேகமாக காலை உணவாக இட்லி, தேங்காய் சட்னி மதியம் உணவிற்காக தக்காளி தொக்கு, வெண்டைக்காய், முட்டை என்று நடு நடுவே காப்பி குடித்தவாறு செய்து கொண்டு இருந்தால்.

இந்த மழை ஓஞ்ச மாதிரி தெரியலையே, இப்படி இருந்த இந்த ஸ்கூல்லுக்கு எப்படி போகவாரம் ஆரம்பமே இப்படியா சுத்தம் போ..” என தனக்கு தானே சலித்தவாறு வேலை பார்த்தால்.

சுடர்அங்க என்ன பன்றமா, டி.வி பாக்கலய நீ?” என குமரன் அங்கு வந்தான்.

நான் ஏன் மாமா வேலையை விட்டுட்டு டி.வி பாக்கணும்

அட லூசு சுடர், இன்னிக்கு நம்ம டிஸ்ட்ரிக்ட் லீவு விட்டிருக்காங்க பாரு

…” என்று சொல்லிவிட்டு காப்பி எடுத்த வரவா மாமா என கேட்டால் சுடர். இதை பார்த்த குமரன் அதான் ஸ்கூல் இல்லைல கொஞ்சம் பொருமைய சமைக்கலாம் மா

ஆனா உங்களுக்கு வர்க் லீவ் இல்லைல மாமாஎன சிரித்து கொண்டு சமையலறை சென்று காப்பி எடுத்து வந்து கொடுத்தால் சுடர். அவளை பார்த்து ஏதோ சொல்ல போகும் போதுஅப்பா அப்பா …” என்று ஓடி வந்த ஐந்து வயது வேந்தனை தூக்கி மடியில் வைத்துக்கொண்டுடேய் குட்டி எந்திரிச்சிட்டியடாஎன கன்னம் பற்றி கோட்டான்

ஆமா ப்பா நீங்க இல்லையா பக்கத்துல அதான் தூக்கம் போய்ருச்சி நானே வந்டேன் உங்களை தேடி

அது வந்டேன் இல்லை வந்துட்டேன் ஓகேவா

அதற்கு அவன் அப்பா…” என்று சிணுங்க சரி சரி எதும் சொல்லல ஆமா டுடே ஸ்கூல் லீவ்டா குட்டி ஹாப்பியாஅதற்கு வேந்தன் முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு நோ ஹாப்பி ஒன்லி போர் ப்பா..” இதை பார்த்த குமரன் வேந்தனின் முகம் திருப்பி ஏன்டா குட்டி போருன்னு சோல்ற வீட்ல ஜாலிய விளையாடலாம்ல

தனியா நான் மட்டும்தான் விளையாடனும் அதுக்கு நான் ஸ்கூல்க்கே போகலாமே ப்பாஅதற்கு குமரன் சிரித்து கொண்டேகுட்டி அதான் மம்மி இருக்காங்கலட அவுங்க கூட விளையாடலாமே

போ ப்பா மம்மி எப்பவும் பிசிஎன தலை மீது கை வைத்து அமர்ந்து விட்டான் இதை எல்லாம் கவனித்தவாறு பார்த்து இருந்த சுடர் ஏதோ ப்ளான் போடுறான் போலயேஎன முனங்கிய வாரு லஞ்ச் பேக் பண்ணிட்டு இருந்தால்..

அப்பாஅப்பா..”

என்னாடா குட்டி

டுடே லீவ் போடுறிங்கள ப்ளீஸ் ப்ளீஸ் ப்பாஎன கண்களை மூடி அவன் கன்னத்தில் கை வைத்து மறுக்க முடியாத வன்னம் கெஞ்சினான் உடனே சுடர் அப்பவே நினைச்சேன் இப்படி எதாவது சொல்லுவனு உன்ன…” என அவன் காதை திருவியவாரு பிரக்ஷ் பண்ணியாடா

தோ.. போற ம்மா

பிரக்ஷ் பண்ணாமா என்னடா பண்ணுற சுடரை கண்டுக்காமல்

அப்பா லீவு போடுங்கப்பா வெளிய போலாம் ப்ளிஸ்

குட்டி இம்பார்டன் மீட்டிங் அட்டன் பண்ணணும்டா லீவ் கஷ்டம்டா

அப்பா….” என அழ தயார் ஆனான்

 “டுடே கஷ்டம் வேணும்னா வீக் எண்டு போலாம் ஓகே வா

டபுள் ஓகே ப்பாஎன துள்ளி குதித்து ஓடி விட்டான்

நீங்கதான் மாமா அவன செல்லம் கொடுத்து கெடுக்கிறது

அவன் எப்பவும் அடம்பிடிக்க மாட்டான் எப்பவாது தானமா

என்னமோ மாமா அவனாவது நல்ல இருக்கணும்என பேரும் மூச்சி விட்டு சுடர் சென்றாள். இதை பார்த்த குமரன்இந்த பொண்ணு எப்போ தான் எல்லாம் மறந்து நிம்மதியா இருப்பாளோஎன புலம்பிக்கொண்டே வேலைக்கு சென்றான்.

மதியம் உணவு சாப்பிட்டு முடித்து விட்டு வேந்தனை அழைத்துகடைக்கு போகலாம் வர யா வேந்தா

வாவ் மம்மி பொலம் மா நான் ரெடிஎன தன் சின்ன பற்கள் தெரிய சிரிக்க நின்ற வேந்தனை பார்த்து முகத்தில் தோன்றிய புன்னகையுடன் ஃபைவ் மினிட்ஸ் டா என தன் அறையை நோக்கி சென்றாள். பெரிய பார்டர் வைத்து ஒரு காட்டன்  புடவை கட்டி காதை ஒட்டிய கம்பல் கழுத்தில் ஒரு தங்க சங்கிலி தலையை கொண்டை போட்டு வேறு ஒப்பனை எதுவும் செய்யாமல் மிக எளிமையாகவே நான் ரெடி போகலாம்என இருவருமே கிளம்பினர்.

இவர்கள் வசிப்பது இரு அரை ஒரு ஹால் ஒரு கிச்சன்  உடைய அப்பார்ட்மெண்ட் சுடர் யாரோடும் நெருங்கி பழகுவது இல்லை அதிலும் குமரன் ஆவது சிலருடன் ஏதோ கொஞ்சம் பேசுவான் ஆனால் சுடர் சுத்தம், சிரித்தே சமாளிப்பாள் . வெளியே கிளம்பிய சுடர் கதவை பூட்டிக்கொண்டு இருக்கும் போது உங்க இளமையின் ரகசியம் என்ன அக்காஎன எப்பவும் போல பக்கத்து வீட்டு மினா ராகமாக கேட்டுக்கொண்டு வந்தாள்.

இன்னிக்கு அதை நான் தெரிஞ்சிக்கிட்டே ஆகனும் சொல்லுங்க அக்காஎன வழி மறைத்து நின்றாள் அதற்க்கு பதில் சொல்லாமல் சிரித்தவாறு அவளை தாண்டி சென்றாள் ச்சே இந்த அக்கா ஓவராதான் பண்றாங்க எவ்ளோ நாளைக்கு இப்படி இருக்காங்க பாக்குறேன் என முகத்தை தோளில் இடித்து சென்றாள்அம்மா இந்த ஆன்டி ஏன் உங்கள எப்ப பாரு அக்கானு கூப்பிடுறாங்க ம்மா

அமைதிய வா வேந்தாஎன அவனை இழுத்து சென்றாள்.

இவள் சுடர்ஒளி வயது 22 இது இங்கு இருக்கும் பலருக்கு தெரியாது சிலர்” 30 கிட்ட இருக்கும்என்றும் பலர் பார்த்த காலேஜ் பொண்ணு போல இருக்காங்க என பேசுவார்கள் இவள் அனைவருக்கும் சிரிப்பையே பதிலாய் தருவாள். இதே போலத்தான் குமரனயும் கேட்பார் என்ன ஒரு வித்தியாசம் என்றால் அவனுக்கு வயதை குறைத்து “30-என்பார் ஆனால் அவன் வயது 40 என யார் சொல்ல? நான் மனைவி இல்லை என்று யார் சொல்ல?.