Advertisement

விடியல்
அது ஒரு தனியார் மருத்துவமனை இரவு 12.05 வாசலில் வந்து நின்ற காரில் இருந்;து ஒரு பெண் இறங்கி விரைந்து வந்தார்
‘ரோசி பெஷண்ட் எங்கே” மருத்துவர்
‘மேடம்இ உள்ளே இருக்காங்க நார்மலுக்கு வாய்ப்பே இல்லைஇ பனிக்குடம் உடைச்சு ஒரு மணி நேரத்துக் மேல் ஆச்சுஇ நீங்கதான் அவங்க பெற்றோர்கிட்ட பேசணும்” ரோசி
‘சரி நீங்க போங்க”
‘அம்மா நான் ஏற்கனவே சொன்னதுதான் அவங்களுக்கு நீர்; அளவு கம்மியா இருந்துச்சு இன்னும் டெலிவரி டேட்டுக்கு நாள் இருக்கு வேற வழி இல்லை இப்ப ஆபரேஷன்தான் பண்ணனும் என்ன சொல்றீங்க புர் பொறிங்கல இல்ல ஆபரேஷனுக்கு ரெடி பண்ண சொல்லவா”
‘என் பொண்ண ஒரு வார்த்தை கேட்டுக்கோங்க டாக்டரம்மா” வாசகி
அடுத்த ஒரு மணி நேரத்தில் ஆபரேஷன் முடிந்து ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது
மறுநாள் காலை மயக்கத்தில் இருந்து எழுந்தவளை தன் தாயின் அழுத முகமே வரவேற்றது.
‘என்னாச்சுமாஇ குழந்தை எங்கே?” வாணி
‘நல்லா இருக்காம்மா தூங்குறான்” வாசகி
பின்னே ஏன் அழறீங்கஇ நான் நல்லாத்தான் இருக்கேன்.
அதில்லம்மாஇ உன் நாத்தனார் குழந்தையை பாத்துட்டு குழந்தை நம்ம சாடையில்லையே அப்பவே சொன்னே இவ சம்பாதிக்கிறா நம்ம குடும்பத்துக்கு சரிபடமாட்டான்னு கேட்டீங்கல என் வீட்டுக்காரும் அப்பவே சொன்னாரு நம்ம சொந்தக்காரங்களுக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க
எப்படிம்மா இப்படி நாக்கில நாரம்பே இல்லாம்ம போசுறாங்க
விடும்மா அவுங்களுக்கு என்ன கஷ்டமோ அவரு வந்தாராம்மா
இல்லைம்மா உங்க அத்தை மாமா வெளியே இருக்காங்க அவரு வெளியூர் வேலையா போயிருக்காராம் வந்துருவாருன்று சொன்னாங்க.
மூன்று வருடங்கள் ஓடியது பகலில் குழந்தையை தன் தாயின் வசம் ஒப்படைத்து விட்டு வேலைக்கு சென்றுவந்தாள்
தெளிந்த நீரோடையாய் சென்று கொண்டிருந்த வாழ்வில் புயலாய் வந்தது பொருளாதார வீழ்ச்சி அதில் அவளது வேலையும் பறிபோனது
பணத்தின் மீது பற்றில்லாததால் வேலை போனது பெரிதாக தெரியவில்லை. தன் மகனுடன் செலவிடப்போகும் நேரத்தை எண்ணி மகிழ்வோடு தனது வீட்டிலேயே இருந்தால்.
இரண்டு மாதங்கள் சென்றிருக்க சுகந்தனுக்கு காய்ச்சல் அடித்தது எப்போதும் செல்லும் மருத்துவரிடம் அழைத்துச் சென்றாள். அவனை பரிசோதித்த மருத்துவர் அவனிடம் தெரிந்த சில வித்தியாசங்களை கவனித்து.
‘குழந்தை இன்னும் பேசலையா” டாக்டர்
“ஒரு வார்த்தை இரண்டு வார்த்தை பேசுவான் டாக்டர் இன்னும் கோர்வையா பேசல” வாணி
வயது என்ன ?
3¼ வயது ஆகுது
பொதுவா ஒரு குழந்தை இரண்டு வயசுல ஒரு சாலஅநள பாடனும் மூன்று வயசுல ஒரு குட்டி கதை சொல்லனும் குழந்தையோட செயல்களை பார்க்கும் போது ஆட்டிஸமா இருக்குமோன்னு தோணுது நீங்க ஒரு தடவை ஊழரளெநடடiபெ போயிட்டு வந்துருங்க என்றார்.
என்ன டாக்டர் சொல்றீங்க
பயப்படாதீங்க நீங்க பதற்றபடற அளவு ஒண்ணும் இல்ல இது ஒரு குறைபாடுதான்
‘சரியான நேரத்தில் முறையான பயிற்சி கொடுத்தா குழந்தை நார்மலாயிடுவான் “ என்றார்.
அவரிடம் விடைபெற்றவளுக்கு என்ன செய்வதென்று ஒன்றும் விளங்க வில்லைஇ ஏற்கனவெ இருக்கும் பிரச்சனை தன் கணவனோ அவரின் வீட்டினரோ என்ன நினைப்பார்கள் என்ன செய்வார்கள் இதை எவ்வாறு ஏற்றுக் கொள்வார்கள்
தன் கணவனிடம் இதைப்பற்றி பேசிவிட்டு பிறகு மற்றவரிடம் கூறலாம்இ இன்னும் தன் கணவன்மிதிருந்த சிறு நம்பிக்கையில் அவன் துணையிருந்தால் மற்றவரை சமாளித்துவிடலாம் என நம்பினால்
ஆனால் அவனோ அவளது ஒட்டு மொத்த நம்பிக்கையையும் அவனின் காலில் போட்டு மித்தான்.
‘அம்மாட்ட சொல்லு அவுங்க என்ன சொல்றாங்க பாரு” செழியன்
‘சொல்ல முன்னாடி டாக்டரை பார்த்துட்டு வந்துருவோம்.”
அப்போ நீ மட்டும் போயிட்டு வந்துரு எனக்கு வேலை இருக்கு
நான் மட்டும் எப்படி
உங்கம்மாவ கூப்பிட்டுகோ
சரிங்க
இருதினங்கள் சென்றிருந்த நிலையில் மருத்துவரிடம் சென்றுவிட்டு வீடு திரும்பியவள் டாக்டர் கூறிய விஷயத்தை எப்படி வீட்டில் உள்ளவர்கள் இடம் கூறுவது என்று யோசித்துக் கொண்டே நடந்தவளின் காதில் அவள் கணவனின் குரல் விழுந்தது .
அவர் வந்துட்டார் போல இனி அவர் பார்த்துப்பார் என்ற நம்பிக்கையில் அடுத்து அடிவைத்தவரின் தலைமையில் இடியை இறக்கியது அவள் கணவரின் வார்த்தை.
நிஜந்தாம்மா அவள் வேணும் தான் கல்யாணம் பண்னே. எதுக்கு ஐவு ல் வேலை பாக்குற நான் விசாரித்த வரை அவ வீட்டு மனுஷல நல்ல பார்த்துக்குற கல்யாணத்துக்கு பின்னே நம்ம குடும்பத்தையும் அப்படி பார்த்துப்பான்னு நம்பி கல்யாணம் பண்ணேம். இல்லைன இவள யாரு கல்யாணம் பண்ணுவ அவ அழகின்னா கல்யாண பண்ணே. இந்த மூதேவி இப்படி வேலையை தொலைஞ்சிட்டு வந்து நிக்குன்னோ இல்லை இப்படி ஒரு பைத்தியத்தை குழந்தையை பெத்து வைக்கும்னே நான் என்ன கணவர் கண்டேன்.
‘சரி விடுடா என்ன பண்ணலாம்னு யோசிப்போம். அவ வந்தாலு வந்துருவா” கோதை
இவை அனைத்தையும் கேட்டவளால் நிற்க கூடமுடியவில்லை இவனையா உருகி உருகி காதலித்தேன் இவனுக்காகவா கடன்பட்டு வீட்டை மீட்டு தந்தேன்.
இவனின் மீது இருந்த நம்பிக்கையில் என் ஒட்டு மொத்த வாழ்க்கையின் சேமிப்பையும் இவனுக்காகவும் இவன் வீட்டாருக்காவும் அளித்தேன்.
தேவையில்லாமல் தன் நண்பனின் குரல் செவியில் விழுந்தது ‘ஏன் இப்படி பண்ற உனக்குன்னு கொஞ்சம் ஒதுக்கி வை இதுவரை உன் தங்கைகளுக்காக செய்தாய் சரிஇ இப்போ நீ செய்வது சரியாக படவில்லை அட்லீஸ்ட் உன்னோட pகு பணமவாது இருக்கட்டும்” தனக்காக தன்னிடமே வாதாடிய தன் நண்பனின் நட்பைக் கூட இவனுக்கு பிடிக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக தொலைத்து விட்டு நிற்கும் தன் முட்டாள் தனத்தை எண்ணி நின்றவள் தன் மகனின் சிணுங்கலில் இவ்வுலகம் வந்தாள்.
நடக்க முடியாத தன் கால்களை கஷ்டப்பட்டு நகர்த்தி வீட்டிற்குள் நுழைந்தவளை ’வாம்மா டாக்டர் என சொன்னாங்க” என்று கன அக்கறையாக
விசாரித்த வரை பார்க்கும் போது இந்த அன்பு பொய்யேன்றால் பார்ப்பவர் யாருமே ஒத்துக்கொள்ளமாட்டார்கள் ஏன் இவர்கள் பேசியதை கேட்டிராவிட்டாள் தானுமே உண்மை என்று தான் சொல்லுவேன்.
‘சரிபண்ணிரலாம்னு சொன்னாங்கத்தை.” வாணி
நான் சொல்றோன்னு தப்ப நினைக்கதம்மா
சொல்லுங்கத்தை
நீ உங்க அம்மாவீட்டில் இருந்து தம்பிக்கு வசநயவஅநவெ குடுக்கிறியா ஏன்ன நம்ம சொந்தகாரங்களுக்கு தெரிச்சா நல்ல இருக்காது அதுக்குத்தான்
‘அவர்ட்ட ஒரு வார்த்தை கேட்டுக்கலாத்தை” வாணி
அவன்ட்ட நான் பேசிகிறேன்.
சரிங்கத்தை
நாட்கள் விரைந்து சென்றது சுகந்தனை பள்ளியில் விடுவது மதியம் பயிற்சிக்கு அழைத்து செல்லுவது மீதி நேரம் அவர்கள் கூறியபடி வீட்டிலேயே சிற்சில பயிற்சிகள் அளிப்பது என்று நாட்கள் வாரங்களாகி வாரங்கள் மாதங்களாகியது.
தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்தவளுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது.
கணவனின் நெருங்கிய உறவில் விஷேசம் என்று சென்ற இடத்தில் அவளை பார்ப்பதும் அவர்களுக்குள் பேசுவதுமாக இருந்தனர். இதை எதையும் உணராத வாணி தன் குழந்தையை கவனிப்பதும் உறவினர்களை வரவேற்பதும் பேசுவதுமாக இருந்தாள்.
வணக்கம்மா நீ தான் செழியன் பொண்டாட்டிய
ஆமங்க நீங்க
நான் உனக்கு அண்ண முறை வேணும்மா
என்னம்மா கல்யாணமான பிள்ளை மாமியார் வீட்டில் இருக்காம இது என்னம்மா அம்மா வீட்டில் இருக்க நல்லாவா இருக்கு இன்னொரு பிள்ளைய பெத்துக்கிட்டு படிக்க வச்சோமா மாமனார்இ மாமியார பார்த்தோம வீட்ட கவனிச்சுகிட்டோமான்னு இல்லாம இப்படி இருக்க
உன் வீட்டாலுகள் எவ்வளவு தங்கமானவுங்க தெரியுமா
அவனிடம் என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்தவள் பிறகே தன்னை சுற்றி நடப்பவற்றை கண்ணுற்றால்
சரிமாஇ பார்த்து நடந்துக்க சரியா என்று சென்ற வரை வெறுமன பார்க்க மட்டுமே அவளால் முடிந்தது.
யாரிடம் என்னவென்று சொல்லுவாள் மனதின் கஷ்டங்கள் அழுத்தத்தை ஏற்படுத்த வீட்டிற்கு வந்தவள் குழந்தையை தாயிடம் விட்டுவிட்டு தன் அறைக்கு சென்று தன் மனபாரம் குறையும் மட்டும் அழுதாள். சிறிது நேரத்தில் மனம் தெளிந்தவள் இதுவே கடைசியாக இருக்க வேண்டும் சுய பச்சதாபம் நம்மை கீழே தள்ளி நசிக்கிவிடும் இனி ஒருமுறை இதுபோல் அழக்கூடாது என்ற உறுதியோடு குழந்தையை நாடிச் சென்றாள்.
கோடைவிடுமுறையில் தன்வீட்டிற்கு சென்று வருவதாக கூறியவளிடம்
வாணி உனக்கு நான் சொல்லனும்னு இல்ல உன் தங்கைக்கு நல்ல வரன்ல்லாம் வருது நீ இங்க இருந்தா ஏதாவது பேச்சு வரும் எங்களுக்கு தெரியும் நீ குழந்தைக்காகத்தான் இங்க இருக்கேனு ஆனால் எல்லாரும் அதை நம்புவாங்கலா இப்பவே நீ வாழம வந்து இருக்கேனு சுத்தி பேசுறாங்க நீ புரிச்சுப்பேன்னு நினைக்கிறேன்.
‘சரிம்மாஇ நான் என் மாமியார்ட்ட பேசுறேன். முடிச்சளவு அங்கேயே இருக்கபாக்குறேன் என்று கிளம்பி விட்டாள்.
அவள் சென்ற நேரம் பெரிய விருந்தே நடந்து கொண்டிருந்தது. தன் கணவனை தவிர அனைவரும் அங்கு இருந்தனர்.
இப்பொழுதெல்லாம் அவன் சரியாக பேசுவதில்லை அவனுக்கு தன் குழந்தையின் பிறந்த நாள் கூட நியாபகம் இருந்ததாக தெரியவில்லை.
மருமகன் மகள்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட விருந்தில் இவள் வந்ததை யாரும் எதிர்ப்பார்க்கவில்லை என்பது அவர்கள் முகத்திலேயே தெரிந்தது. அவளை வா என்று அழைக்க ஒருவருக்கு மனமில்லை தன் குழந்தைக்கு தேவையானதை மட்டும் எடுத்துக் கொண்டு தங்கள் அறைக்குச் சென்றுவிட்டாள்.
அதன் போக்கில் சென்று கொண்டிருந்தது வாழ்க்கை. ஒரு மாலை வேளையில் தன் நண்பனிடம் இருந்து அழைப்பு வரவே சிறிது மகிழ்வோடே அழைப்பை ஏற்றாள்.
‘சொல்லு அகில் எப்படி இருக்க அம்மா அப்பா எப்படி இருக்காங்க கல்யாண வாழ்க்கை எப்படிப்போகுது” அவள் கேட்ட எந்த கேள்விக்கும் பதில் இல்லாமல் போகவே
‘ஹலோ லைன்ல இருக்கியா” என்றாள் வாணி
நீ எப்படி இருக்க
நான் நல்ல இருக்கேன். முதலில் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்
நாங்க நல்ல இருக்கோம் வேகேஷசனுக்கு கொடைக்கானல் வந்திருக்கோம் உங்கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியால.
என்னடா சொல்லு ஏதும் விஷேசமா
‘வாணி நெசமாவே நீ சந்தோஷமா தான் இருக்கியா”
அகில்
ஏண்டா அப்படி கேக்குற
உன் கணவரை இங்க பார்த்தேன்
அலுவலக வேலையா வந்திருப்பாரு உனக்கு தான் தெரியுமே அவருக்கு ஊர் ஊரா அலையுரது தான் வேலையே
‘அதில்லை ஒரு பெண்ணோட வந்திருந்தார். அவங்களை பார்த்தா எனக்கு சரியாபடலை உங்களுக்குள்ள ஏதும் பிரச்சனையா” அகில்
அதெல்லாம் ஒண்ணுமில்லை அவரோட கூட வேலை பாக்குறவங்கல இருக்கும்.
அப்படி இருந்தா சந்தோஷம்தான். வாணி எப்பவும் ஒரு நண்பனா மட்டும் இல்ல ஒரு அண்ணானாவும் உனக்கு துணை நான் இருக்கேன்றத நீ மறந்திடாத. சரி சுகன் எப்படி இருக்கான்.
தன் துக்கத்தை முழுங்கியவள். அவனோடு இயல்பாக பேசினால் நல்ல இருக்கான் அவனிடம் நல்ல முன்னேற்றம் தெரியுது எப்படியம் 6 (அ) 7 வயசுக்குள்ள சரி பண்ணிரலாம்னு மருத்துவர் சொல்லிருக்காங்க.
சரி பாத்துக்கோ பை
வாணியால் இதை ஏற்க முடியவில்லை தான் என்ன தவறு செய்தேன். தன் பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையை மணந்தது தன் குற்றமா? தனக்கு இப்படி ஒரு குழந்தை பிறந்தது. என் குற்றமா அவனுக்காக தான் ஓடிக் கொண்டிருப்பது தான் செய்த குற்றமா? என்று சிந்தித்தவள் தன் கணவனின் வரவுக்காக காத்திருக்க தொடங்கினாள்.
இரு தினங்கள் அவளை காக்க வைத்து வீடு வந்தவனிடம்.
நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.
எனக்கு டையர்டா இருக்கு நாளைக்கு பேசலாம்.
எனக்கு இப்பவே பேசணும்
‘அவன்தான் டையர்டா இருக்குன்னு சொல்றான்ல நாளைக்கு பேச வேண்டியது தானே” கோதை
நான் அவர்ட பேசிட்டிருக்கேன்
உனக்கு என்னதான்டி வேணும்
நீங்க எங்க போயிட்டு வரீங்க
‘எதுக்கு கேட்குற” செழியன்
நான் கேட்டதுக்கு பதில்
ஏன் உன்னோட லவ்வர் சொல்லிட்டானா அவன் என்னை பாத்ததுமே நினைச்சேன் ஆமாண்டி நான் என் காதலியோடதான் கொடைக்கானல் போயிருந்தேன் அதுக்கு என்ன இப்பே.
உங்களுக்கு இத சொல்ல வெட்கமா இல்லை
நான் எதுக்கு வெட்கப்படனும் அவள் என்னோட வேலை பாக்குறா என்னவிட நல்ல சம்பளம் வாங்குறா அவள கல்யாணம் பண்ணிக்க போறேன். இருக்க இஷ்டம்னா இரு இல்லைன்னாகிளம்பிக்கிட்டே இரு உனக்கென்ன ஆள இல்லை.
நீங்க தப்பு செய்துட்டு என்னை குற்றம் செல்றீங்கல. நான் இருக்கும் போது நீங்க இன்னொரு கல்யாணம் பண்ணிக்க முடியாது.
என்ன பண்ணப்போற கேஸ் போடுவியா போட்டுக்கோ அவளுக்கு உன்ன பத்தி தெரியும். இதனால அசிங்கபட போறது நீயும் உன் குடும்பமும் தான் நியாபகம் வச்சுக்க அப்புறம் உன் தங்கச்சி கல்யாணமாகமா உனக்கு துணையாய் உன்னோட இருக்க வேண்டியது தான் என்றவாறே செல்லும் கணவனை அதிர்ந்து போய் பார்த்து நின்றாள்.
அன்றைய பொழுதை யோசனையிலேயே கழித்தவள். ஒரு முடிவுக்கு வந்தவளாக தன்னுடைய மீதி நகைகளை தனது பெட்டியில் இருந்து எடுத்துக கொண்டு குழந்தையோடு வெளியில் சென்றாள். ஒரு மெல்லிய செயின் சின்னத்தோடு கை வளையல் இவற்றை தவிர மீதியை விற்று பணமாக்கி தனது வங்கியில் போட்டுவிட்டு வீடு வந்தாள்.
சிறிது நேரத்தில் கையில் ஒரு பெட்டியோடு வெளியில் வந்தவளை எவரும் தடுக்கவில்லை.
குழந்தைக்கும் தனக்கும் தேவையான அத்தியாவசிய பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டு தெருமுனையில் நின்ற ஆட்டோவில் ஏறி இரயில் நிலையம் வந்தாள்.
தான் தந்தைக்கு எழுதி வைத்திருந்த கடிதத்தை தபால் பெட்டியில் சேர்ந்துவிட்டு இரயிலில் ஏறினாள்.
வந்தோரை வாழவைக்கும் சென்னை நிச்சயம் தன்னையும் தன் குழந்தையையும் வாழ வைக்கும் என்ற நம்பிக்கையோடு அந்த இரவில் சென்னையை நோக்கி தொடங்கியது வாணியின் பயணம்.
அடுத்து வரும் விடியல் அவர்கள் வாழ்க்கையில் வெளிச்சத்தைக் கொண்டு வரும் என அவளைப் போல நாமும் நம்புவோம்.

Advertisement