ிடியல் 61

இவை அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த தீபா, சுடர் இருவரும் கண்கள் கலங்கி நிற்க, குமரன் “அப்போ அக்காவுக்கு மாமா பத்தி எல்லாம் தெரியுமா?” என்று கேட்க, அதற்கு யசோதா “அவங்க மேரேஜ் முடிஞ்ச கொஞ்ச நாள்லயே தெரிஞ்சிருக்கும் போல. நான்  இந்த டைரியை பாக்கும் போது இந்த பேப்பர் மட்டும் இன்னொரு பேப்பரோட ஒட்டி இருந்துச்சு.”

 இதைக் கேட்ட குமரன் யசோதாவை நோக்கி “இப்போ மாமா எங்கே?” என்று கேட்க, அதைக் கேட்டு யசோதா தயங்கி நிற்க, தீபா, சுடரும் கூட சோர்ந்து “அப்பா எங்கே அத்தை?” என்று கேட்டனர். அவர்களின் அத்தை என்ற அழைப்பில் சந்தோஷப்படுவதா அல்லது இப்போது அவள் சொல்லப்போவதை எண்ணி வருந்துவதா என்று தெரியாமல் அவள் விழிக்க,

குமரன் “ மாமா எங்கன்னு சொல்றீங்களா இல்லையா?” என்று அதட்டவும், யசோதா எச்சிலை விழுங்கியபடி “அண்ணா இப்போ இல்லை” என்று அவள் சொல்வதைக் கேட்டு அனைவரும் அதுவாக இருக்கக் கூடாது என்று வேண்டியபடி அவளைப் பார்க்க, அனைவரது பார்வையையும் பார்த்த யசோதா தன் பையை இறுக்கிப் பிடித்துக்கொண்டு பேசத் தொடங்கினாள்.

“அண்ணா எங்களைத் தேடி வந்தப்ப எங்க அப்பா உயிரோட இல்லை. வீட்டில இரண்டாவது அண்ணாவும் அவனோட வைஃபும் தான் இருந்தாங்க. அவன் மாதவ் அண்ணா கிட்ட, அண்ணா  எங்களை விட்டுப் போன இரண்டு வருஷத்துல நீ கிடைக்காத சோகத்துல அப்பா  இறந்துட்டான்னு சொல்லிருக்கான். அதைக் கேட்டு அண்ணா ஃபீல் பண்ணி நம்மளதான்னு தப்ப நினைச்சிருச்சு. அப்பாவுடைய சமாதியை ஆவது பார்க்கப் போகலாம்னு இரண்டாவது அண்ணா கிட்ட கேட்டுருக்கான். அதுக்கு அவன் கார்ல மாதவ் அண்ணாவை மட்டும் அனுப்பி வெச்சிட்டு. பெரிய அண்ணா போயிட்ட அப்புறம் அவனை ஆக்சிடென்ட் பண்ணப் போறதா அவன் வைஃப் கிட்ட பேசிட்டு இருந்ததை நான் ஒளிஞ்சிருந்து கேட்டுட்டேன். உடனே என் அண்ணாவைக் காப்பாத்த வேகமாதான் நானும் போனேன். ஆனா நான் போறதுக்குள்ள என் அண்ணா அடிபட்டு கார்ல இருந்து கஷ்டப்பட்டு வெளிய வந்து விழுந்து கிடந்தார் ரத்த காயத்தோட அதைப் பார்த்துட்டு நான் கிட்ட போன அப்போதான் அண்ணா அவன் கையில இருந்த பேக்கை என்கிட்ட கொடுத்துட்டு, குழலின்னு சொல்லிட்டு இறந்துட்டான்” என்று யசோதா அழுக.

இதைக் கேட்ட குமரன் கோபமாக, “எங்க உன் அண்ணா? சொத்துக்காக சொந்த அண்ணனையே கொன்னுருக்கான். அவன்லாம் மனுஷனா? அவனை என்ன பண்ணீங்க? போலீஸ்ல பிடிச்சிக் கொடுத்தீங்களா? இல்லை அண்ணா பாவம்னு விட்டீங்களா?” என்று குமரன் சொன்னதைக் கேட்ட யசோதாவுக்கு மூச்சு வாங்க, அதைப் பார்த்த சுடர் வேகமாகச் சென்று தண்ணீர் எடுத்து வந்து கொடுக்க, அவர் தண்ணீர் குடித்தபடி மூச்சை இழுத்து விட்டு இருந்தார். அவர் நிலையைப் பார்த்த ரஞ்சன்.

“அவங்க இரண்டாவது அண்ணாவுக்கு என்ன ஆச்சுன்னு நான் சொல்றேன்“ என்று அனைவரையும் பார்க்க, அதைக் கேட்டு அனைவரும் ரஞ்சனிடம் திரும்பினர். ரஞ்சன், “இவங்க இரண்டாவது அண்ணா யாதவ்தான் இவங்க அப்பாவையும் கொண்ணுருக்கான். தீபா அப்பா அங்க வர விடாம வச்சிருக்கான், ‘வந்தால் உன் வைஃபை அப்பா கொண்ணுருவாருன்னு  ஆள் வைத்து தீபா அப்பாகிட்ட சொல்லியிருக்கிறான். அதான் அவர் இத்தனை வருஷமா அவுங்க அப்பாவ தேடி போகாம இருந்திருக்கிறார்.” இதைக் கேட்ட குமரன்,

 “இதை எல்லாம் ஏன் பண்ணனும் அவரு?” “ஏனென்னா  எல்லாம் சொத்துக்காகத்தான். மாமாவுடைய அப்பாவிற்கு அந்த ஆஸ்பத்திரியில ப்ரியா நிறைய பேருக்கு மருத்துவம் பார்க்கணும்னு ஆசை. ஆனா இது அவருடைய இரண்டாவது பையனுக்குப் பிடிக்கல்லை. தீபா அப்பாவும் அவங்க அப்பா மாதிரிதான் ஆஸ்பத்திரியை நடத்தியிருக்கிறார். அதான் முதல்ல தீபா அப்பா அங்க இருந்து அனுப்பிருக்கான்  அப்புறம், காசு சம்பாதிக்க தடையா இருக்க அவனுடைய அப்பாவையும் கொண்ணுட்டான். அதைக் கண்டுபிடித்த யசோதாவையும் ஹவுஸ் அரெஸ்ட் பண்ணி பதினைந்து வருஷமா வச்சிருந்தான். அப்படியே இருக்கும் போது தான் தீபா அப்பா அங்க போயிருக்காங்க அவரையும் கொண்ணுட்டான். ‘எங்கே அவனுடைய பசங்களுக்கு சொத்துன்னு பங்கு கேட்டுருவானோன்னு .”

இதைக் கேட்டு டென்ஷன் ஆன சுடர் “அவன்லாம் ஒரு தம்பியா? அவன் நல்லாவே இருக்க மாட்டான்” என்று கத்திய சுடரைப் பார்த்து சிரித்த ரஞ்சன் “நீ சொன்ன மாதிரி அவன் நல்லாதான் இல்லை. சொத்து சொத்துன்னு அலைஞ்ச  அவன், அவன் பொண்டாட்டியைப் பார்க்காம விட்டுடான், அவள் வேற ஒருத்தனோட  உறவில இருந்திருக்கிறா. அதைத் தெரிந்து அவன் சண்டை போடும்போது ரெண்டு பேரும் மாற்றி மாற்றி சுட்டுட்டு போன வருஷம் தான் செத்து போனாங்க ” என்று சொல்லி முடித்தான். அதைக் கேட்ட தீபா ரஞ்சனின் கையைப் பிடித்து “உங்களுக்கு எப்படி இவங்கள தெரியும்?” என்று கலங்கிய விழியுடன் அவனைப் பார்க்க, அவள் கண்களைத் துடைத்துக்கொண்டே

 “நீ என்னைக் கல்யாணம் செய்யத் தயங்குனது உங்க அப்பாவை நினச்சி தானே? நம்ம அம்மாவை அவ்வளவு லவ் பண்ண அப்பாவே விட்டுட்டுப் போய்ட்டாரே, எங்கே அதே மாதிரி நானும் போய்விடுவேனோ ன்னு பயந்துதானே சம்மதிக்கல்லை? அதுக்காகத்தான் உங்க அப்பா எங்கேன்னு தேடி அலைஞ்சன். உங்க அப்பா ஓட லவ் மேல நம்பிக்கை வச்சி.  நீ என்னைக் கல்யாணம் பண்ணும்போது எந்தத் தயக்கமும் இல்லாமல் பண்ணிக்க  ஆசைப்பட்டேன். அதான் ரொம்ப நாள் தேடி அலைந்தேன். நல்லவேளை என் நேரம் யசோதாவும் உன்னையும் சுடரையும் தேடிட்டு இருந்தாங்க. அப்படித்தான் அவங்களை மீட் பண்ணினேன். அங்கே போன இடத்தில்தான் என் போன் உடைந்துபோச்சு. ரிப்பேர் பண்ண நேரம் கிடைக்கல்லை. அதான் உன்னைக் காண்டாக்டும் பண்ண முடியல்லை” என்று அவன் சொன்னதைக் கேட்டு தீபா அழுதுகொண்டே சிரிக்க, அவள் கண்களைத் துடைத்துவிட்ட ரஞ்சன் “அழாத தீபா” என்று சமாதானம் செய்தான்.

இதை எல்லாம் கேட்டு இருந்த அனைவரும் “குழலி பேச்சை நம்ம கேட்காம போயிட்டோம். அவ  அப்போவே சொன்னா, மாதவன் நல்லவன்னு. நாமதான் அவளைப் நம்பல அவளைச் சாக விட்டுவிட்டோம்” என்று அனைவரும் வருத்தமாகப் புலம்ப, அப்போது யசோதா தயங்கித் தயங்கி அருகே இருந்த சுடர் கையைப் பிடித்து,

“உங்க அம்மாவுக்கு உங்க அப்பா இறந்த விஷயம் தெரியும்” என மெல்லிய குரலில் சொல்லியதைக் கேட்டு அதிர்ந்த சுடர், “என்ன சொல்கிறீர்கள் அத்தை? அம்மாவுக்கு அப்பா இறந்து போனது தெரியுமா? என்ன சொல்றிங்க?” என்று கத்த, மீண்டும் அனைவரின் கவனமும் யசோதாவிடம் திரும்பியது, ரஞ்சனும் “இது என்ன புதுக்கதை?” என்பது போலப் பார்க்க,

 யசோதா “அது அண்ணா இறந்து இரண்டு வருடம் அப்புறம், அந்த யாதவ் ஒரு நாள் அவன் பொண்டாட்டியோட குடிச்சிட்டு பேசிட்டு இருந்தான். யாரோ குழலி மாதவ் வைஃப்னு ஆஸ்பத்திரிக்கு கால் வந்ததாகவும், அதுக்கு அவங்க அவன் ரூம்க்கு கால் கனெக்ட் பண்ணியிருக்காங்க. அப்போ அவன் ‘மாதவ் வைஃப்பா? அவன் இறந்து இரண்டு வருடம் ஆகுது’ன்னு சொன்னதும் கால் கட் ஆகிருச்சாம். அவனும் பொண்டாட்டின்னு யாராவது வந்தா அவளையும் கொன்னுடுறேன்னு பேசிட்டு இருந்தான்.” இதைக் கேட்ட அனைவரும் ஆணி அடித்தாற்போல உடைந்து போக, குமரன் “இல்ல அக்கா, மாமா வந்த லட்டர் தரச் சொல்லி எழுதி வச்சிட்டு தான் போனாங்க!”

அதற்கு யசோதா “ அது அவங்க அண்ணா இறந்ததை ஏத்துக்க முடியாம எழுதிருக்காலாம்  அன்ட் அண்ணா இறந்தது உங்களுக்கு தெரிய கூடாதுன்னு நீங்க அண்ணாவ தேடி அங்க போயிட கூடாதுன்னும் எழுதியிருக்கலாம் ஏன்னா அண்ணி இறந்த மாசம் தான் அந்த கால் வந்ததா அவன் சொன்னா “ என்று சொல்லி முடிக்க அங்கு யாரும் பேசவில்லை. அனைவரும் ஒரு வித அமைதியான நிலையில் அவரவர் சிந்தனையில் மூழ்கிப் போயிருக்க,

யசோதா பொறுமையாக எழுந்து சுடர் மற்றும் தீபா கையைப் பிடித்தவாறு “ நான் இங்க வர இரண்டு காரணம் இருந்துச்சு. ஒன்று என் அண்ணா உங்க அம்மாவை என்னைக்கும் ஏமாத்தலைன்னு சொல்ல வந்தேன். அடுத்த காரணம் ஆஸ்பிட்டல், வீடு, மத்த சொத்து எல்லாத்தையும் உங்க ரெண்டு பேருக்கும் கொடுக்கிறதுக்கு வந்தேன்“ என்று யசோதா கூறியதைக் கேட்ட இருவரும் உடனே ஒன்று போல மறுப்பாகத் தலையை ஆட்டி, தீபா “ அந்த ஆஸ்பிட்டலை நீங்க பார்த்துக்குறதுதான் சரி. அப்பா இருந்திருந்தா கூட அதுதான் சொல்லுவாங்க. எங்களுக்கு அது வேண்டாம் “ என்று தீபா சொல்லியதைக் கேட்ட சுடரும் “ தாத்தா, அப்பா ஆசைப்பட்ட மாதிரி அந்த ஆஸ்பிட்டலில் நிறைய ஏழை மக்களுக்கு மருத்துவம் பார்க்க உங்களாலதான் முடியும். அதை நீங்க பண்றதுதான் சரியும் கூட “ என்று தலை ஆட்ட, இவர்கள் பேசியதைக் கேட்டு யசோதா விழிக்க, ரஞ்சன் “ அவங்களால தனியா பார்த்துக்க முடியாது தீபா “ என்று கண்களால் ஏதோ சொல்ல, உடனே சுடர் “எங்க மாமா வெட்டியாதான் இருக்காங்க. உங்க கூட ஆஸ்பிட்டலை பார்க்க அவங்களை வேணா கூட்டிட்டு போங்க “ என்று கோர்த்து விட, அதைக் கேட்ட குமரன் “ யாரை வெட்டியா இருக்கேன்னு சொல்ற? நான் ஒரு கம்பெனி எச்.சார்-ம்மா “ என்று அவன் புலம்ப,

ரஞ்சன் உடனே “ இது நல்ல ஐடியாவா இருக்கே. நம்ம மேரேஜ் முடிஞ்சதும் குமரனை லக்னோவுக்கு பார்சல் பண்ணிடலாம் “

 என்று குமரன் கத்துவதைக் கண்டுகொள்ளாமல் இவர்கள் பாட்டுக்குப் பிளான் போட, குமரனோ கடுப்பாகி நடுவில் அனைவரின் வாயையும் பார்த்தபடி அமர்ந்திருந்த யசோதாவை முறைக்க, அவள் இதை எதையும் கண்டுகொள்ளாமல் அனைவரையும் உதட்டில் தோன்றிய புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தாள்.

 அப்போது பார்த்து அங்கு வந்த ஆதி, அங்கு நின்றுகொண்டிருந்த ரஞ்சனைப் பார்த்து, “ப்ரோ, இங்க என்ன பண்றீங்க? உங்களைக் காணோம்னு ஆள விட்டுத் தேடச் சொல்லிட்டு வந்திருக்கேன். நீங்க என்னன்னா இங்க நின்னுட்டு இருக்கீங்க?” என்று அருகில் வர,

 ரஞ்சன், “டேய், நான் போலீஸ்டா ஆள விட்டுத் தேடச் சொல்லியிருக்கன்னு சொல்ற” “உக்கும், என்ன போலீஸோ? போற இடத்தைச் சொல்லிட்டுப் போக வேணாமா? எங்க அண்ணி பதறுறாங்களே!” அதைக் கேட்டு ரஞ்சன் சிரிக்க, அப்போதுதான் ரஞ்சன் பின்னாடி இருந்த கூட்டத்தை எட்டிப் பார்த்தான் ஆதி,

அங்கு யசோதாவைச் சுற்றி அனைவரும் அமர்ந்தபடி பேசிக்கொண்டிருக்க, அதைப் பார்த்த ஆதி ரஞ்சனிடம், “ஆமா, யாரு ப்ரோ அது? நம்ம கும்பலுக்கும் அவங்களுக்கும் சம்பந்தம் இல்லாம உட்கார்ந்திட்டு இருக்குறது?” என்று கேட்க, அதற்கு ரஞ்சன், “அவங்களா அவுங்க நமக்குச் சித்தி முறை வரும்னு நினைக்கிறேன்” என்று ரஞ்சன் சொன்னதைக் கேட்டு ஷாக் ஆன ஆதி, “என்னது? குமரன் அண்ணா லவ்வரா? அவங்க அண்ணா என்கிட்ட சொல்லவே இல்லை!” என்று ஆதி சொன்னதைக் கேட்டு மேலும் வயிற்றைப் பிடித்துச் சிரித்த ரஞ்சன், “எதை வச்சு அவங்களை குமரன் லவ்வர்ன்னு சொன்ன?”

“அது குமரன் அண்ணா வைஃப் தான் நமக்கு சித்தி முறை வருவாங்க அண்ட் குமரன் அண்ணா வேற அவங்களையே வச்ச கண்ணு வாங்காம ரொமான்டிக்கா பார்க்கிறாங்கல அதான் அப்படி சொன்னேன், ஏன் தப்பா சொல்லிட்டேனா ப்ரோ?“

அதை கேட்டு ரஞ்சன் ஆதி மீது கை போட்டு வெளியே அழைத்துச் சென்றபடி “கரெக்ட்டா தப்பா சொல்லியிருக்க, ஆனா இந்த ஐடியாவும் நல்லாதான் இருக்கு. பார்க்கலாம். ஆனா முறைச்சி பார்க்கிறதை ரொமான்டிக்னு சொன்ன பார்த்தியா, அங்க நிக்குற ஆதி“ என்று சிரிக்க, அதை கேட்டு மேலும் குழம்பிய ஆதி “ப்ரோ என்னன்னு தெளிவா சொல்லுங்க அவுங்க யாரு“ “அவுங்கள பத்தி சொல்லனும்ன அதுக்கு முதல்ல நம்ம அத்தை மாமா லவ் ஸ்டோரி இன்ட்ரோல இருந்து சொன்னாதான் உனக்கு புரியும். சோ வா, பொறுமையா சொல்றேன்“ என்று அழைத்துச் சென்றுவிட்டான்.