ரஞ்சன் துரையை குழப்பமாக பார்த்தபடி “ நான் எப்படி காரணமான “ என்று கேட்க அதற்கு துரை “ உன்னால, உன்னால மட்டும் தான். நீ சென்னைக்கு வந்ததுல இருந்து நிறைய கேஸை என் கிட்ட கொடுக்காம இருந்திருந்தா, என்னை உன் கூடவே வைச்சிக்காம இருந்திருந்தா, நான் அந்த ட்ரக் எடுத்திருக்க மாட்டேன் அந்த கேஸ் எல்லாம் ஸால்வ் பண்ண தான் எடுத்துகிட்டேன் “
“டேய் என்ன சொல்ல வர “
“ நான் உன்னை விட எல்லாத்திலேயும் பெட்டர்னு நிரூபிக்க ஆசைப்பட்டேன். அதான் கேஸ் சால்வ் பண்ண இந்த ட்ரக் எடுத்துக்கொண்டேன் “
“ சரி அது ஓகே , உன் வைஃப் நளினிக்கு ஏன் கொடுத்த “
“அது அவளை நான் லவ் பண்ண காரணமே அவள் ஐஏஎஸ் ஆகிடுவா நம்மா கெத்தா இருக்கலாம்னு நினைச்சி தான். ஆனா அவ தொடர்ந்து ரெண்டு அட்டம்ட் ஃபெயில் ஆகவும் எனக்கு கோபம். அவளை அவசரப்பட்டு மேரேஜும் பண்ணிட்டோமோ ன்னு யோசிச்சன் . அப்போ தான் மகிழன் இந்த ட்ரக் கொடுத்தா பாஸ் ஆகிவிடுவான்னு சொன்னான். அன நான் பஸ்ட் ஒத்துக்கல எங்க அவ ரம்மியை தம்பி மாதிரி ஆகிட்டான்னு வேணான்னு தான் சொன்னேன். ஆனா அதுக்கு மகிழன், ரம்மிய தம்பி டோசேஜ் தெரியாம எடுத்ததுனால தான் அவன் இப்படி இருக்கான். நீ டெய்லி ஒன்று சாப்பிடு, ஒன்றும் ஆகாதுன்னு சொன்னான். அதை நம்பி தான் நானும் சாப்பிட்டேன் “ இதை கேட்ட ரஞ்சன்
“ அப்போ உன் வைஃப் பாஸ் ஆனது இந்த ட்ரக் ஹெல்ப் மூலமாக தான். சரி ரம்மியாவை யார் கொன்னது “ என்று கேட்டபடி அவன் எதிரே அமர்தான் அதற்கு துரை “ நான் நீ கேட்கிற எல்லாத்துக்கும் பதில் சொல்றேன். ஆனா அதுக்கு நீ என்னை மகிழன் கூட ஒரே செல்லில போடணும் “
அதை கேட்டு சிரித்த ரஞ்சன் “ வெளியில முஸ்தப்பா முஸ்தப்பான்னு பாடுனது பத்தாம உள்ளே வேற போய் பாட போறியாடா “ என்று அவன் தொடையில் லத்தியை வைத்துப் திருவ வலியை பொறுத்துக்கொண்ட துரை “ இல்லை அந்த மகிழன் என்னை ஏமாத்திட்டான். அவனை நான் சும்மா விட மாட்டன். அவனை, அவனை என் கையால் கொல்லணும். அவன் சாவு என் கையில் தான் “ என்று கத்தியதை பார்த்த ரஞ்சன் அவனை ஒரு நிமிடம் உற்று பார்த்து விட்டு “ சரி நீ முதல்ல சொல்லு. அப்புறம் நீ சொல்றதை நான் செய்றேன் “
“அந்தப் பொண்ணு ரம்மியாவை மகிதான் ஆளவச்சி கொல்லச் சொன்னான். நான் அதை மறைக்க மட்டும்தான் செஞ்சேன். அப்புறம் அந்த ட்ரக் விசியம் கூட அவன்தான் எல்லாம் பண்ணுவான். நான் வெறும் உங்களை வாட்ச் பண்ணி அவனை மாட்டவிடாம பார்த்துபன். வேற எதுவும் நான் பண்ணல.”
“ஓ, அப்போ நீ வெறும் ஹெல்பர் வேலைதான் பார்த்திருக்க, சரி” என்றுவிட்டு வெளியே செல்லப் போக, துரை, “மகிழன், அவன் எப்போ இங்க வருவான்?” அதற்குத் துறை, “உனக்குத் தண்டனை கிடைச்ச பிறகு வருவான்” என்றுவிட்டு வெளியே சென்றவன், கான்ஸ்டபிள் ஒருவரை அழைத்து, “அவனுக்குக் கொடுக்கிற தண்ணி, ஃபுட் எல்லாத்திலேயும் அந்த ட்ரக்கை மிக்ஸ் பண்ணிக் கொடுங்க. அப்புறம் கோர்ட்டுக்குப் போற முன்னாடி டாக்டரை கூப்டு துரையை ஃபுல் பாடி செக் பண்ணி ரிப்போர்ட் சப்மிட் பண்ண போதும்.”
“சார், ஏதாவது ஆகிடப் போகுது சார்.” என்று அவர் பதற “அதெல்லாம் செத்துர மாட்டான். எத்தனை பொண்ணுங்க வாழ்க்கைய கெடுத்துருப்பன் அதை வச்சு இனிமே எந்த பெண்ணையும் ஒண்ணும் பண்ண முடியாத மாதிரி பண்ணிறனும் ” என்று சிரித்துவிட்டுச் சென்றான்.
பின் ரஞ்சன் மகிழன் அறைக்குள் செல்ல, மகிழன் மிக அமைதியாக உள்ளே நுழையும் ரஞ்சனைப் முறைத்து பார்த்துகொண்டு , “என்ன உன்னால ரொம்ப நாள் உள்ளே வச்சிருக்க முடியாது. என் ட்ரக் இல்லாம அதை சாப்பிட்ட குழந்தைங்க யாராலும் எதுவுமே பண்ண முடியாது. எத்தனை பசங்க, எத்தனை கவர்மெண்ட் ஆபிசர்ஸ் இதுக்கு அடிமை தெரியுமா? எண்ணி இன்னும் மூணே நாள்ல வெளிவிடச் சொல்லி வெறி பிடிச்சி அலையப் போறாங்க. அப்போ எல்லாம் என்னைத் தேடிதான் வரணும்” என்று கொடூரமாகச் சிரிக்க, அந்தச் சிரிப்பை நக்கலாக பார்த்த ரஞ்சனின் முகத்தைப் பார்த்த மகிழனின் சிரிப்பும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து ரஞ்சனை வெறித்தான். அதை பார்த்த ரஞ்சன், “என்னடா? சிரிப்பை நிறுத்திட்ட. நல்லா சிரி” என்று ரஞ்சன் அவனைப் பார்த்துகொண்டே, அவன் முன்னால் இருந்த டேபிளில் அமர்ந்து,
“நான் இந்தக் கேஸ் எடுத்து எவ்வளவு நாள் ஆகுது தெரியுமா ?, அவ்வளவு நாளும் ஸ்டேஷன்ல உட்கார்ந்து ஈ ஓட்டிட்டு இருந்தான்னு நினைச்சியாடா?” என்று அவனைப் பார்த்துச் சிரித்தபடி, கைகளை மேலே தூக்கிச் சுடக்கு எடுத்து, “உன் ட்ரக்கைப் பத்தி ஆல் டீடெயில்ஸ் ஐ நோ. சோ, ரொம்பக் கனவு காணாத. எனக்கு வர கேஸையெல்லாம் பக்காவா முடிச்சிதான் எனக்கு பழக்கம். சோ, எல்லாம் முடிச்சிட்டேன். இனிமே அந்தக் கடவுளே வந்து மகிழனை வெளிவிடுங்கன்னு சொன்னாலும் விட முடியாது. எல்லா எவிடன்ஸையும் ஸ்ட்ராங் பண்ணி வச்சிருக்கேன் அதோட அந்த ட்ரக் பார்முலா என் கையில சோ டோன்ட் வரி மகி . அண்ட் உனக்காக ஒரு ஸ்வீட் சர்ப்ரைஸ் வச்சிருக்கேன். என்னன்னு பார்க்கிறியா?”
என்று உள்ளே இருந்தபடி, “சுடர்…” என்று அழைக்க, அந்தப் பெயரைக் கேட்டதும் மகிழன் கண்கள் பளபளக்க, அந்தக் கதவை நோக்கிப் பார்த்தான்.
அங்கு சுடர் ஆதியின் கைகளைப் பிடித்தபடி உள்ளே நுழைய, அதைப் பார்த்துக் கோபம் கொண்ட மகிழன், அவன் கைகளைக் சேரில் இருந்து விடுவிக்க முயன்றபடி, “ஏய்! அவ கையத் தொடாதடா! அவ எனக்கு மட்டும்தான்! அவளைத் தொடாதே! கையை எடு!” என்று அவன் கத்திய வேகத்தில் சுடர் உடல் ஒரு முறை தூக்கிப் போட, அதை உணர்ந்த ஆதி அவள் தோள்களைத் தட்டிக் கொடுத்தபடி தேற்றினான், பின் சுடர் ஒரு முறை கண்களை மூடித் திறந்து ஆதியின் கைகளை விட்டுவிட்டு ஒரு அடி முன்னால் எடுத்து வைத்தபடி, “என்னது? நான் உனக்குச் சொந்தமா? நீ சொந்தம் கொண்டாட நான் என்ன பொருளா? பொண்ணுடா! உயிருள்ள பொண்ணு! ஆ கரைட், உன்னை மாதிரி கேவலமான ஜந்துகளுக்கெல்லாம் பொண்ணுங்களெல்லாம் பொருளாகத்தான் தெரியும்ல!” என்று கைகளை கட்டி கொண்டு கோபமாக பேசினாள்.
சுடர் கோபத்தைப் பார்த்து அதிர்ந்த மகிழன் பின் சுதாரித்து முகத்தைப் பாவமாக வைத்தபடி, “சுடர், இதுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை, எங்க அப்பாதான் எல்லாத்துக்கும் காரணம். நான் எங்க அப்பாவை மாட்டிவிடத்தான் முயற்சி செய்ஜேன். ஆனா அவர் என்னை மாட்டிவிட்டுவிட்டார். என்னைக் காப்பாத்து சுடர்!”
“அச்சோ! மகி, அப்போ எனக்காகத்தான் இது எல்லாம் பண்ணியா மகி?” என்று சோகமாக முகத்தை வைத்துப் பேசினார் சுடர் , அவள் முகத்தைப் பார்த்து நம்பிக்கை பெற்ற மகிழன், “ஆமா சுடர், எல்லாம் உனக்காகத்தான் சுடர். என்னை நம்பு!”
“அப்போ எனக்காக என்ன வேணாலும் பண்ணுவியா மகி?” “அ… கண்டிப்பா! உனக்காக என்னனாலும் பண்ணுவேன் சுடர்!” என்று முகம் வாட பேசினான்
“ஓ… அப்போ நீ என்ன பண்ற? ஒரு கத்தியை எடுத்து என்னை தொட்ட, உன் கையை துண்டு துண்டா வெட்டி எனக்கு கொடுத்துடு. எனக்கு அது போதும்.” என்று சுடர் பேச அதைக் கேட்டு ஷாக் ஆன மகிழன், “சுடர்….” என்று அழைக்க, அதற்கு டென்ஷன் ஆன சுடர், “என் பெரை சொல்லி நீ கூப்பிடாதடா! எனக்கு கோபமாக வருது.”
“சுடர், நீ ஏதோ தப்பா நினைச்சி பேசுற.” என்று அவன் சொல்லி முடிக்கும் முன், சுடர் அருகில் இருந்த சேரை எடுத்து அவன் மீது வீசியபடி, “என் பெயரை சொல்லாதடா நாயே!” என்று அவள் கத்தியதைப் பார்த்து ஆதி மட்டுமல்ல, ரஞ்சனே அசந்துதான் போனான். பின் ஆதி சுடரைப் பிடித்து ,
“சுடர், என்ன பண்ற? விட்டா அவனை கொன்னுருவ போல, அவனை உயிரோடு கோர்ட்டுக்கு கூட்டிட்டு போகணும் சுடர்.”
என்று அவளை அமைதிப்படுத்த இங்கு மகிழன் தலையில் இருந்து ரத்தம் வழிவகை கூட உனறாமல் சுடரைத்தான் கோபமாகப் பார்த்துக்கொண்டு இருந்தான். சுடரோ ஆதியிடம், “சரி, டென்ஷன் ஆகாத” என்றுவிட்டு மீண்டும் மகிழனைப் பார்த்துத் திரும்பி,
“உன்கிட்ட ஒண்ணு சொல்லிட்டுப் போகணும்னுதான் வந்தேன். அதை விட்டுட்டு கண்டதை பேசுறேன் பாரு. அது என்னன்னா நான் உன்னை மண்ணிச்சிட்டேன்னு சொல்லி கல்யாணத்துக்கு ஓகே சொன்ன பாத்தியா, அது உண்மை இல்லை. எங்க மாமாவுக்காகப் பண்ண ஒரு சின்ன ஹெல்ப் தான் அப்படியே உன்ன பழியும் வாங்குன மாதிரி இருக்கும்ல. நீ வேற நினைச்சிக்க போற உண்மையா திரும்பி உன்னை லவ் பண்ணினேன்னு, அண்ட் இன்னொரு குட் நியூஸ். எனக்கும் ஆதிக்கும் கல்யாணம் ஆகப் போகுது. எப்போ தெரியுமா? எங்க அக்கா கல்யாணத்தோட சேர்ந்து நடக்கப் போகுது. ஆனா பாவம், உன்னாலதான் பார்க்க முடியாது. வேணும்னா கனவுல என் கல்யாணத்தை நினைச்சுக் கஷ்டப்பட்டுக்கோ, ” என்று ரஞ்சனிடம் போறேன் என்று தலை அசைத்து விட்டு ஆதியுடன் வெளியே சென்றுவிட்டாள், சுடர் சென்றவுடன் மகிழன், “சுடர் என்ன ஏமாத்திட்டால? இல்லை, இருக்காது. அவ என்னை ஏமாத்த மாட்டா. யாராலும் என்னை ஏமாத்த முடியாது. சுடர் ஏமாத்தில்ல. சுடர் ஏமாத்துல ” என்று பைத்தியம் போல் அதையே திரும்பிச் சொல்லியபடி மயங்கிவிட்டான். மயங்கிய மகிழனை ஆஸ்பத்திரியில் சேர்க்க, அவனை பார்த்த டாக்டர் அவன் எடுத்துக்கொண்ட டிரக் மற்றும் சுடர் சொன்ன அதிர்ச்சி என்று முழுதும் சேர்ந்து அவனை மனநிலை சரியில்லாதவனாக ஆக்கிவிட்டது என்று சொல்லிவிட்டார்.
இங்கு நளினி நியூஸ் பார்த்து விட்டு வேகமாக ஆஸ்பத்திரி சென்று முழு உடல் பரிசோதனை செய்து பார்க்க, அதில் இனி இவளுக்கு குழந்தை பிறக்காது என்றும், இனி உயிர் வாழும் காலம் வரை அந்த ட்ரக்கை எடுத்து கொள்ள வேண்டும் என்றும் சொல்லிவிட்டனர். அதுமட்டும் இன்றி அவள் உடல் உறுப்புகள் பல மோசமான நிலையில் இருப்பதால் ஆஸ்பத்திரியில் தான் அதிக நாள் கழிக்க வேண்டிய நிலை. இதில் வேறு அவள் பாஸ் ஆன யுபிஎஸ்சி தேர்வும் ட்ரக் மூலமாக எழுதி பாஸ் ஆன காரணத்தினால் ரத்து செய்யப்பட்டு விட்டது. இதை எதையும் தாங்கிக்கொள்ள முடியாத நளினி தன் தாய் வீட்டுக்கு சென்றுவிட, அங்கு அருகில் தெரிந்தவர்கள் அனைவரும் அவள் கணவனைப் பற்றியே பேசிப் பேசி இவளையும் அதனுடன் சேர்த்துப் பேச, இதை எல்லாம் கேட்ட நளினி மன உளைச்சல் தாங்காமல் தற்கொலை செய்து இறந்து போனாள். “நீ எதை விதைக்கிறாயோ அதையே அறுப்பாய்” என்னும் பழமொழிக்கேற்ப அவள் வாழ்க்கை அமைந்து போனது.
கோர்ட்டுக்கு துரையை அழைத்துச் செல்லும் முன் அவனைச் சோதித்த டாக்டர், அவன் தொடர்ந்து அந்த ட்ரக் எடுத்ததால் அவன் அதற்கு அடிமையானது மட்டும் இன்றி அவனின் இனப்பெருக்க உறுப்புகள் முழுதும் சேதாரம் ஆகிவிட்டது. அதனுடன் அந்த ட்ரக் அவன் நரம்புகளை பலவீனம் ஆக்கிவிட்டதால் இனிமேல் அவனால் ஒழுங்காக நிற்கக் கூட முடியாது என்று சொல்லிவிட்டனர்.
இப்படியே அந்தக் கேஸினால் ஆன போராட்டம், பிரச்சனை அனைத்தும் அடங்கவே ஒரு மாதம் மேல் ஆனது. கோர்ட் தீர்ப்புப்படி மகிழன் குணம் ஆகும் வரை மெண்டல் ஆஸ்பத்திரியிலும், குணம் ஆன பின் தூக்கில் இட வேண்டும் என்றும் உத்தரவு தரப்பட்டது. துரைக்கு ஆயுள் தண்டனையும், யசோதருக்கு தூக்கு தண்டனையும் கொடுக்கப்பட்டது. தண்டனை கொடுத்தபின் கோர்ட்டில் இருந்து வெளி வரும்போது யசோதர், துரை, மகிழன் மூவரையும் மக்கள் கற்கள் கொண்டு அடிக்க, அதில் யசோதருக்கு தலையில் அடிபட்டு அவர் கோமாவுக்கு சென்றுவிட்டார். அவர் முழிப்பது கஷ்டம் என்று டாக்டர்கள் சொல்லிவிட்டனர். இப்படியே அனைத்தும் முடிந்து ஒரு வாரமாக சுடர் மற்றும் தீபா திருமணத்திற்கு இரு நாட்களே இருக்கும் நிலையில் மாப்பிள்ளை ரஞ்சனைக் காணவில்லை.