ரஞ்சன் சரவணனை நோக்கி துப்பாக்கியை நீட்டியபடி அவனைத் தலை சரித்துப் பார்க்க, சரவணன், “உயிர் கெடுப்பான் தோழன்னா நீ? உயிர் எடுக்கும் தோழனால இருக்க முதல்ல இவனோட கோத்துவிட்ட. இப்போ நீயே சுடப் பார்க்கிறா. நீயெல்லாம் ஃபிரண்ட்டா?” என்று புலம்ப, அதைத் தலையை இருபக்கமும் ஆட்டியபடி கேட்ட ரஞ்சன்,
“குமாரு, சீரியஸான டைம்ல ஃபன் பண்ணாம. வழி விடு” என்று அவனைத் தள்ளிக்கொண்டு உள்ளே செல்ல, ராஜூம் மகிழனும் இவன் வந்ததைக்கூட கவனிக்காமல் சண்டை போட்டுக்கொண்டு இருக்க, அதைப் பார்த்த ரஞ்சன், அவனுடன் வந்த குழுவிலிருந்து நான்கு போலீசாரை வரச்செய்து இருவரையும் கடினப்பட்டுப் பிரித்து விலங்கு போட்டனர். போதையில் இருவரும் மற்றவர்கள் காது கருகும் அளவு மாற்றி மாற்றி கேவலமான வார்த்தைகளால் திட்டிக்கொள்ள, ரஞ்சன் சரவணன குமாரை பார்த்து, “எத்தனை பாட்டில்டா குடிக்க வச்ச குமாரு?”
“அது அந்த மகி ஒரு 5 பாட்டில்டா, ராஜ் ஒரு 3 பாட்டில்டா . அதுல 2 பாட்டில்ல மட்டும் நீ கொடுத்த ட்ரக் கலந்திருக்தேன்.”
“ஓ ஓகே அப்போ டூ டேஸ் ஆகும் அவனுங்க நார்மல் ஆக , சரி அது இருக்கட்டும். நீ எத்தனைடா குடிச்ச?” என்று முறைக்க.
“அது வந்துடா ஒரு பாட்டில் தான் குடிச்சேன் அதுவும் அவங்களுக்கு டவுட் வரக் கூடாதுன்னு“ என்று தலையைச் சொறிய ரஞ்சன்,
“சரி ஒன்னுங்கிறதுனால விடுறேன்“ என்று திரும்பி மகிழன் ராஜ் இருவரையும் வேனில் ஏற்றி அனுப்பி வைத்துவிட்டான். பின் அந்த இடத்தை முழுமையாகச் சுற்றிப் பார்க்கத் தொடங்கினான். அந்த இடத்திற்கு வர மொத்தம் நான்கு வழி வெவ்வேறு வீட்டின் பாத்ரூம், சமையலறை, தோட்டம் போன்ற இடத்தில் அமைந்து இருந்தது. அந்த நான்கு வீடும் யாசோகரின் பினாமிகள் பெயரில் இருந்தன. இந்த நான்கு வீட்டையும் சேர்பது போல கீழே அண்டர்கிரவுண்ட் இருந்தது.
அந்த இடம் பல அறைகள் கொண்டு யாசோகரின் ஆட்களால் கட்டப்பட்ட இடம். இதற்குள் இருந்த யாசோகரின் கைகூலிகள் மட்டும் 50-க்கும் மேல் இருந்தனர். இதில் ஒரு அறையில் லேப் போன்று அமைக்கப்பட்டு இருந்தது. அதன் பக்கத்து அறையில் இந்த சாக்லேட் செய்யும் வேலை நடந்து கொண்டு இருக்க, அவர்களைப் பிடித்து விட்டான் ரஞ்சன். இவ்வாறு அந்த இடத்தின் ஒரு பகுதி இப்படி இருக்க, அதன் மறு பகுதியோ ஆசிட் அறை, புதைக்கும் அறை, டார்ச்சர் செய்யும் அறை என்று மனித உடல்களின் பாகங்களுடன் இருந்தது. இதை பார்த்த சரவணன் அங்கிருந்து வெளியே வந்து வாந்தியே எடுக்க தொடங்கி விட்டான், அவன் பின்னேயே வந்த ரஞ்சன் அதைப் பார்த்து சிரித்தபடி தண்ணீரைக் எடுத்து வந்து கொடுத்துவிட்டு, “எத்தனை மாசம்டா குமாரு?“ என்று கேலி செய்ய, அதைக் கேட்டு கடுப்பான சரவணன், “ஆ… இருபது மாசம்“ என்றபடி தண்ணீரை அருந்திவிட்டு, “மனுஷனுங்களாடா இவனுங்க? ச்சீ! இப்படி இருக்கானுங்க. ட்ரக்ஸ், கொலை, ரேப் என்னும் என்னென்ன இருக்கோ?“ என்று முகம் கழுவ
“நீ நினைக்குற மாதிரி இல்லடா குமார், இந்தக் கொலைக்குக் காரணம் அவனுங்க இல்லை. இவனுங்க ட்ரக்ஸ் மட்டும்தான் விக்கிறானுங்க. கொலை இவன் அப்பா பண்ணது.“
“நல்ல குடும்பம். அப்பா கொலைகாரன், பையன் ட்ரக் சைன்டிஸ்டா?“ என்று தலையில் அடித்துக்கொண்டு ரஞ்சனைப் பார்த்து, “திருப்பியும் இப்படி ஏதாவது கேஸைத் தூக்கிட்டு வந்துறாதடா ரஞ்சி. அப்புறம் நான் வெறி ஆகிடுவேன்.“ என்றுவிட்டு, தன் கைகளை விரித்தபடி, “விடுதலைக் காத்துன்னு இத தான் சொல்லுவாங்க போல. எப்பா, இனிமேலாவது நிம்மதியா தூங்குவேன்.“ என்றபடி மூச்சை இழுத்துவிட்டு, “நான் கிளம்புறேன்டா ரஞ்சி இதுக்கு மேல இங்க இருந்த நைட் தனியா தூங்க முடியாது “ என்று சென்றுவிட்டான். அவன் சென்றதும் ரஞ்சன் ஃபாரன்சிக் டீம் வைத்து அனைத்து எவிடன்ஸையும் மற்றும் சரவணன் மூலம் எடுக்கப்பட்ட வாய்மொழி ஆதாரத்தையும் வைத்து மகிழன், ராஜ் மற்றும் யசோகர் இவர்கள் மூன்று பேர் மீதும் அரெஸ்ட் வாரன்ட் வாங்கிக்கொண்டு போய் யசோகரை அரெஸ்ட் செய்தான். அதன் பின்னரே இந்த நியூஸ் அனைவரையும் அடைந்தது, ஆங்காங்கே கலவரம், போராட்டம் என்று சென்னையே இரண்டு நாட்களுக்கு அமைதியின்றி காணப்பட்டது.
மகிழனின் ட்ரக் பற்றி நியூஸில் வர, பெற்றோர்கள் அனைவரும் பயந்துதான் போனார்கள். எங்கு தன் பிள்ளையும் தெரியாமல் சாப்பிட்டு இருக்குமோ என்ற பயத்தில் ஆஸ்பிட்டல் அனைத்தும் நிரம்பி வழிந்தது. பின் அரசே அனைத்துப் பள்ளி, கல்லூரிக்கும் டாக்டர்களை அனுப்பி சோதனை செய்ய வைத்தனர். அந்தச் சோதனையின் முடிவில் திட்டத்தட்ட பத்தில் ஒருவர் இந்த சாக்லேட்டை சாப்பிட்டு இருந்தனர். இதில் ஒரே நல்ல விஷயம் என்றால், அதில் குறைந்த மாணவர்கள் தான் லாஸ்ட் ஸ்டேஜில் இருந்தனர். மற்ற அனைவரும் தொடக்கத்தில்தான் இருந்தனர்.
இந்த நியூஸை எல்லாம் செய்தியில் பார்த்த குமரன் மற்றும் அவன் சொந்தங்கள் அனைவரும் பயந்து போய் சுடரை பார்க்க ஓடி வந்துவிட்டனர், அவர்களை சுடரால் சமாளிக்கவே முடியவில்லை. பின் ஆதி வந்துதான் நடந்ததை பொறுமையாக எடுத்துக்கூறி சமாளித்தார். அதை கேட்ட பின்புதான் அனைவருக்கும் மூச்சே வந்தது.
இங்கு மகிழன், ராஜ், யசோகர் மூவரையும் ரஞ்சன் தன் கஸ்டடியில் தான் வைத்திருந்தான். மூன்று நாட்களாக மகிழன் மற்றும் ராஜை ஒரே அறையிலும், யசோகரை தனி அறையிலும் வைத்திருந்தான். மூன்று நாட்களாக எதிர் எதிரே சேரில் மகிழன் மற்றும் ராஜை கட்டிப்போட்டு வைத்திருந்தான். ஏதாவது பேசுவார்கள் அதை ஆதாரமாக ஆக்கி கேஸை இன்னும் ஸ்ட்ராங் செய்யலாம் என்று நினைத்திருக்க. இவர்களோ அதற்கு மாறாக ஒருவரை ஒருவர் பார்த்து முறைத்தபடியே இருந்தனரே தவிர ஒரு வார்த்தை பேசவில்லை. தண்ணீர் குடிக்க மட்டுமே வாயைத் திறந்தார்கள். அதேபோல இருவரும் மூன்று நாட்கள் அகியும் கண்களை சிறிது நேரம் கூட மூடவில்லை. இதில் இருந்து ரஞ்சன் தெரிந்துகொண்டது. இருவருமே அந்த ட்ரக்கை எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பது உறுதியானது. ரஞ்சன் தன் போலீஸ் சட்டையை கழட்டி வைத்தபடி யசோகரை வைத்திருந்த அறைக்குள் சென்றான். யசோகரை சேரில் கட்டிப்போடாமல் சும்மாதான் அமர வைத்திருந்தான. ரஞ்சனை பார்த்த யசோகர் அவனை முறைத்தபடி “என்ன பத்தி தெரியாம மோதிட்ட தம்பி. உயிர் முக்கியம்னா இந்த கேஸை விட்டு ஒழுங்கா போயிடு. நான் லைட்டா கண் அசைச்ச போதும் உன் குடும்பமே இல்லாம போயிடும் தம்பி.” என்று மிரட்ட ரஞ்சன்
“எங்க கண் அசை பாப்போம்“ என்று அருகில் இருந்த டேபிளில் சாய்ந்தபடி கதவைப் பார்க்க, அப்போது ஒரு போலீஸ் கையில் கவருடன் உள்ளே வர, ரஞ்சன் அந்தக் கவரில் இருந்து கைநிறைய மிளகாய்ப் பொடியை எடுத்து யசோகர் முகத்தில் அடித்துவிட, அவர் வலி பொறுக்காமல் அலறியபடி “தண்ணி தண்ணி“ என்று கத்தி கொட்டே ஓட, அதை ரசித்துப் பார்த்த ரஞ்சன் “மிளகாய்ப் பொடிக்கே இப்படி கத்துறியே, ஆசிட்ல போட்டு உயிரோட முக்கிக் கொன்னுருக்கியே, அவங்களுக்கு எவ்வளவு வலிச்சிருக்கும்? உன்னைப் பத்தி பேசினா கொல்லுவியாடா? இப்ப ஊரே உன்னைப்பத்திதான் பேசுது. எங்க எல்லாரையும் போய்க் கொல்லு பாப்போம்“ என்று பேச, அங்கு யசோகரே இவை எதையும் கேட்கும் நிலையில் இல்லை. “தண்ணி தண்ணி“ என்று கத்தியபடியே இருக்க, ரஞ்சன் பக்கத்தில் இருக்கும் கான்ஸ்டபிளைப் பார்த்து “இவனை நம்ம ரெடி பண்ணி வச்சிருக்க தண்ணியை வச்சு குளிக்க வைங்க” என்று விட்டு அடுத்த அறைக்குச் செல்ல, இங்கே ஒரு பக்கெட் முழுக்க மிளகாய்த்தூள், பச்சை மிளகாய் அரைத்துக் கலந்து தண்ணீர் உள்ளே சென்றது. ரஞ்சன், மகிழன் மற்றும் ராஜைப் பிரித்து தனித்தனி அறைக்கு மாற்றிவிட்டு, ராஜின் அறைக்குள் செல்ல, ராஜ் சேரில் கட்டப்பட்ட நிலையில் கண்கள் மூடி ஏதோ யோசித்தபடி இருந்தான். ரஞ்சன் “ராஜ்“ என்று அவன் அருகில் வர, ராஜ் கண்களைத் திறந்து பார்த்தான்.
அவன் அருகே ஒரு சேர் போட்டு அமர்ந்த ரஞ்சன் “ராஜ்னு கூப்டா ஃபில் வரல நான் வேன எப்பவும் உன்ன கூப்பிடுற மாதிரி சிங்கம்னு கூப்பிடவா? கான்ஸ்டபிள் துரை ராஜ்“ என்று பற்களைக் கடித்தவாறு பேசியவன். “நான் உன்னை சிங்கம் சிங்கம்னு கூப்பிடும்போதெல்லாம் அப்படியே குளி குளின்னு இருக்குமே, உன்னை இனிமே அப்படி கூப்பிட கூடாது அப்படி கூப்பிட்டா அந்த சிங்கத்துக்கு தான் கேவளம் நீலாம் இந்த வேலையில இருக்க அசிங்கம்டா உன்ன அசிங்கம்னு தான் கூப்டனும் “ என்று ராஜின் நெஞ்சில் ஓங்கி ஒரு உதை உதைக்க, அவன் சேரோடு கீழே சரிந்தான்.
அவன் கைகளை ஹூ காலால் மிதித்தபடி “ அக்யூஸ்ட் நீ, உனக்கு போலீஸ் வேலையாடா “ என்று அடிக்க துரை வலி தாங்காமல் கத்தியபடி “ எப்படி கண்டுபிடிச்ச என்னை? நான் உன்னை வாட்ச் பண்ணிட்டுதானே இருந்தேன் “ அதைக் கேட்டு சிரித்த ரஞ்சன் “ உன் கண்காணிப்பில்ல நான் இருந்தேன்னு நினைத்தாயாடா? உன்னைத்தான் என் கண்காணிப்பில்ல வைத்திருந்தேன்டா என் வெண்ண “ அதைக் கேட்டு அதிர்ந்த துரை “ எப்படி என்மேல் சந்தேகம் வந்துச்சி உனக்கு “
“ உன் கேள்விக்கு நான் பதில் சொல்லனுமா “ என்று லத்தியை வைத்து அவன் தொடையில் அழுத்த, வலியில் கத்தியபடியே “ சொல்லு ரஞ்சன், எப்படி கண்டுபிடிச்ச “ என்று திரும்ப திரும்ப அதையே கேட்க, ஒரு நிமிடம் அவனைப் உற்று பார்த்த ரஞ்சன்
“ ரம்மியா ஓட டெத்க்கு அப்பறம் தான் எனக்கு டீம்மேல சந்தேகம் வந்துச்சி. ரம்மியா கேஸ் கொடுத்த விஷயம் நம்ம டீமைத் தவிர வேறு யாருக்கும் தெரிய வாய்ப்பு இல்லை. அப்போ அவ டெத்க்கு காரணமானவனும் நம் டீம்குள்ளதான் இருக்கான்னு டவுட் வந்த அடுத்த செக்கேண்ட் இருந்து உங்க எல்லாரையும் வாட்ச் பண்ணி உன்னையும் கண்டுபிடிச்சேன் “ அதைக் கேட்ட துரை “ அப்போ என்ன கூடவே வச்சி சுத்துனதும் இதுக்கு தான “ என்று அவனை நிமிர்ந்து பார்க்க, ரஞ்சன் அவன் முகத்தில் குத்தியபடி “ ஆமாம், ஆமா உனக்குத்தான் அந்த ட்ரக் மூலம் என்ன ஆகும்னு ரம்மியா ஓட தம்பி பார்த்து தெரியும்ல? அப்படி தெரிஞ்சும் ஏன் அதை எடுத்துக்கிட்ட “என்று ரஞ்சன் பேசியதை கேட்ட துரை கோபமாகக் கத்தியபடி “ எல்லாம் உன்னால தான்டா, உன்னால மட்டும்தான் நான் இப்படி ஆக காரணமும் நீ தான் ” .