சுடர் தன் வகுப்பு முடிந்து ஸ்டாப் ரூமிற்கு சென்று கொண்டிருந்தாள். அப்போது அங்கு வந்த வாணி, “மேம், நான் கொஞ்சம் வெளியில் போறேன். சோ, என்னோடதையும் ஆபிஸ் ரூமில் சப்மிட் பண்ணிருங்க ப்ளீஸ்,” என்று சொல்லிவிட்டு வேகமாக சென்றுவிட, சுடரும் அவளுடைய ரெக்கார்டை எடுத்தபடியும் சுற்றி ஆதியை தேடியபடியே செல்ல, ஆதியோ இரண்டு நாளாக அவள் கண்ணில் படுவேனா என்று ஆட்டம் காட்டி கொண்டு இருந்தான்.
சுடரோ, “இந்த ஆதி மூணு நாளா கண்ணுலயே படல. என்னைப் பார்த்து பயந்து ஓடுறதுலயே இருக்கான்,” என்று அவனையே நினைத்து முனுமுனுத்த படி ஆபிஸ் ரூமிற்கு செல்ல, அவனுடைய காலி சீட்தான் வரவேற்றது சுடரை. அதைப் பார்த்து கடுப்பான சுடர், “கடுப்பு ஏத்துறான் எருமை என் முன்னாடி வந்தா என்னை அப்படியே தூக்கிட்டு ஓடுற மாதிரிதான் ரொம்பத்தான் பண்றான். இரு, நேர்ல மாட்டுவள. அப்போ இருக்கு அவனை ஒருவழி ஆக்கிறன்,” சிறு குரலில் திட்டியபடி திரும்பிய சுடர், ஆதியை அங்கு எதிர்பார்க்காமல் அவன் மீது மோதி பின் சுதாரித்து வேகமாக பின்னோக்கி சென்று அவனை நிமிர்ந்து பார்த்தாள். ஆதியோ அவன் கண்கள் சிரிக்க அவளைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் கண்களைப் பார்த்த சுடர் மனதில்
“என்ன தேவதாஸ் போய் ஏசுதாஸ்ஸ வந்து நிக்கிறாரு” என்று நினைத்தபடி அவளை மறந்து அவனையே உற்றுப் பார்த்தபடி இருக்க, அதைக் கவனித்த ஆதி திடீரென்று ஒற்றைக் கண்ணை அடிக்க, அதில் அதிர்ந்த சுடர் பதட்டத்தில் “என்ன.. என்ன வேணும் சொல்லுங்க” என உளற, அதைக் கேட்டு சிரித்த ஆதி அவள் அருகே வந்து “என்ன நேத்து மட்டும் ஆதி ஆதின்னு அத்தனை ஆதி போட்டு கூப்பிட்ட இன்னைக்கு என்ன ‘ங்க’ போட்டு பேசுற சுடர்” என்று பேசியபடி அவள் அருகே சிறு இடைவெளி விட்டு அவள் உயரத்திற்குக் குனிந்து தன் பாக்கெட்டில் கைவைத்தபடி உதட்டில் தேங்கிய புன்னகையுடன் பேச, சுடர் அவன் முகத்தை மிக நெருக்கத்தில் பார்க்கத் தயங்கியபடி அங்கும் இங்கும் கண்களை உருட்டி “நீங்க கூடத்தான் நேத்து ‘மேம்’னு கூப்பிட்டு இன்னைக்கு சுடர்னு பேசுறிங்க” என்று அவனைப் பார்ப்பதைத் தவிர்த்தபடியே பேசினாள், அதைக் கண்டுகொண்ட ஆதி ஒரு குறும்பு சிரிப்புடன்
“சரி அது இருக்கட்டும். கொஞ்ச நேரம் முன்னாடி ஏதோ ‘நேர்ல மாட்டுனா பாத்துக்குறேன்’னு சொன்னியே என்னது” என்று கேட்க, அதைக் கேட்டு திடுக்கிட்ட சுடர் “அது அது என் அக்காவை, ஆமா அக்காவை நினைச்சுப் பேசினேன்” என்று சமாளிப்பாகச் சிரிக்க, ஆதி “ஓ உங்க அக்காவை ‘அவன் இவன்’னுதான் கூப்பிடுவியா” என்று கேலியாக சிரிக்க, சுடர் மனதில் “அச்சோ! புல்லா கேட்டுட்டான் போலயே! சரியான பாம்பு காது! இவன் கிட்ட மாட்டிக்காத சுடர் ஓடிடுடி!” என்று நினைத்தபடி “அது டைம் ஆச்சு. வேந்தன் வெயிட் பண்ணுவான். நான் கிளம்புறேன்” என்று வேகமாக கதவை நோக்கிச் செல்ல.
ஆதி அவள் கைகளைப் பிடித்து இழுத்து அதை அவள் பின்னே கொண்டு சென்று அவளை அணைத்தபடி “ என்ன அவசரம் சுடர்? அன்னைக்கு என்ன சொன்ன? என்னைத் துரத்துறதுலயே இருக்கீங்கன்னு இப்போ நீ ஏன் பயந்து ஓடுற? “ என்று அவளை விடாமல் பேச சுடர் அவள் கைகளை உறுவ முயன்றபடி
“ நீ கூட தான் அன்னைக்கு மத்தவன் பொருளைத் தொட மாட்டேன், ஆசைப்பட மாட்டேன்னு டயலாக் பேசுன. இப்போ என்ன பண்ற? “
“ அது மத்தவங்க பிராப்பர்ட்டியைத் தான் தொட மாட்டேன். என் பிராப்பர்ட்டியை இல்லை. “
“ அப்போ நான் உங்க பிராப்பர்ட்டியா? பரவாயில்லையே! கடைசியா பல்ப் எரிஞ்சிருச்சு போல! “ என்று அழகாகச் சிரிக்க அந்தச் சிரிப்பில் விழுந்த ஆதி “ ஆமா ஆமா, நம்ம பையன் தான் எரியவச்சான்! “ அதைக் கேட்டு குழம்பிய சுடர் “ ஆனா நான் வேந்தன் கிட்ட உங்களைப் பத்தி சொல்லலையே! “
“என்னைப் பத்தி சொல்லலைனாலும் அந்த மகிழனைப் பத்தி சொல்லி வச்சிருக்கல? அவனைப் பழி வாங்கப் போறன்னு. அத அப்படியே இன்னைக்கு உளறிட்டான் நம்ம பையன்! “ என்று சிரிக்க அதற்கு அவள் “அவனை யார்கிட்டயும் சொல்லாதடான்னு சொன்னேன் எல்லார் கிட்டயும் உலறிவச்சிருக்கான் போலையே போச்சி போச்சி . “ என்று பதற “ சரி, அது இருக்கட்டும். என்கிட்ட மட்டுமாவது சொல்லியிருக்கலாம்ல? சுடர்“
“ நானும் சொல்லலாம்னுதான் நினைச்சேன். ஆனா மாமா தான் வேணாம்னு சொல்லிட்டாங்க. “ “ அண்ணாவ? என்கிட்ட மகிழனுக்கும் உனக்கும் மேரேஜ்ன்னு நிஜமாதிரியே பேசுனாங்க. அவங்களை அப்புறம் பார்த்துக்கறேன். “ என்று கோப பட
“அய்யோ ஆதி குமரன் மாமா இல்லை எங்க அக்காவ கட்டிக்க போறா ரஞ்சன் மாமா அவங்க தான் சொன்னாங்க “ என்று வேகமாக பேச அதை கேட்ட ஆதி புருவம் சுருக்கியபடி “ அவங்க ஏன் உன் கிட்ட அப்படி சொல்லணும் “ “அது தெரியல ஏதோ கேஸுக்காக இந்த ஹெல்ப் பண்ண முடியுமான்னு கேட்டாங்க நானும் அவனை பழி வாங்கணும்னு ஒத்துக்கிட்டேன் “ என்று தோளைக் குலுக்க அதை கேட்டு ஷாக் ஆன ஆதி “ கேஸுக்காகவா அப்போ மகிழன் ஏதோ பெரிய தப்பு பண்ணி அத கண்டுபிடிக்க உன் ஹெல்ப் கேட்டாங்கலா“ என்று அவன் சொன்னதை கேட்ட சுடரும் “அப்படி தான் நினைக்கிறேன் “ என்று ஆதியை ஒரு கலக்கத்துடன் பார்த்தாள்.
சுடரின் முகத்தில் இருந்த கலக்கத்தை பார்த்த ஆதி “ பிச் ஏன் இப்போ முகத்தை அப்படி வைக்குற அவன் கிட்ட இருந்து எப்படியோ வந்துட்டியேன்னு சந்தோஷம் படு அதை விட்டுட்டு அலுறா “ என்று அவள் தலையை ஆட்ட அவள் கையை விட அதை சாதகமாக எடுத்து கொண்ட சுடர் அவன் நெஞ்சில் கைவைத்து தள்ளி விட்டு வெளியே சென்றுவிட்டாள் அவள் சென்றதை பார்த்து சிரித்த படி அந்த வாசலையே ஆதி பார்த்தபடி நிற்க சுடர் அவள் தலையை மட்டும் நீட்டி எட்டி பார்த்தபடி “ ஹலோ சார் கல்யாணத்துக்கு ஓகே தான் சொல்லிருக்கன் என்னும் கல்யாணம் ஆகல ரோம்ப பாஸ்டா தான் போறிங்க பிரின்ஸ்சி ஸ்பிட குரைங்க ஆக்சிடேண்ட் ஆகிட போது “ என்று அவள் கண்களை சிமிட்டிய படி சென்று விட்டால். சுடர் செயலை பார்த்த ஆதிக்கு வெட்கம் பிடுங்கி தின்ன அவன் கழுத்து வருடிய படி “ சுடர் உன்ன “ என்று சிரித்து கொண்டான்.
இங்கு மகிழன் அவன் கையில் இருந்த பாட்டிலை காலி செய்து விட்டு அடுத்த பாட்டிலை எடுக்கப் போக அதற்குள் சரவணன் எழுந்து சென்று அதை எடுத்து கொடுக்க மகிழன் குழறலாக பேச தெடங்கினான் “ என் பையன் வேந்தன் அவனுக்காக தான், இந்த உலகத்துக்கு அவன் என் பையன்னு தெரியணும் அதுக்கு சுடர் என் கூட இருக்கணும்” இதை கேட்ட சரவணன் மீண்டும் குழம்பி “ ஏன் வேந்தன் தான் வேணும்னு சொல்ற நீ நினைச்சா வேற கல்யாணம் பண்ணிட்டு குழந்தையை பெத்துக்கலாமேடா “
இதை கேட்டு கண்கள் சிவக்க தன் கையில் இருந்த பாட்டிலை தூக்கி எறிந்த மகிழன் “ அது தான் என்னால முடியாதேடா” என்று பைத்தியக்காரனைப் போல் தன் முடியைப் பிடித்தபடி கத்தியிருந்தான் அதை கேட்டு ராஜ் மற்றும் சரவணன் அதிர்ந்து என்ன என்பது போல பார்க்க மகிழன் தொடர்ந்தான் “ எல்லாம் அந்த ஆளால தான் அவன் ஏன் சுடர் விஷயம் தெரிஞ்சதும் என்னை யூஎஸ் அனுப்பினான் அவன் அனுப்பாம இருந்திருந்தா நான் அன்னைக்கு என் பிரன்ஸோட குடிச்சிட்டு பைக்ல போயிருக்க மாட்டேன்ல அந்த ஆக்சிடென்ட்டும் நடந்திருக்காது எனக்கு முதுகு தண்டுல அடியும் பட்டிருக்காது டாக்டரும் எனக்கு இனிமே குழந்தை பிறக்க வாய்ப்பு இல்லைன்னு சொல்லியிருக்கவும் மாட்டாரு “ என்று ராஜ் கையில் இருந்த பாட்டிலை பிடுங்கி முழுவதையும் வாயில் சரித்து விட்டு ராஜை பார்க்க அவன் “ என்னடா மகி சொல்ற இந்த ஆக்சிடென்ட் எப்போ நடந்துச்சு உங்க அப்பா கூட இத பத்தி எதுவுமே சொல்லலையே “
“அப்பாவுக்கு தெரிஞ்சா தானே இதை பத்தி உன்கிட்ட சொல்லுவாங்க? அப்பாவுக்கு எனக்கு சின்னதா ஆக்சிடென்ட்னு மட்டும் தான் தெரியும். வேற எதுவுமே தெரியாத மாதிரி பார்த்துக்கிட்டேன். எங்க இது தெரிஞ்சா எல்லாம் என்ன கேவலமா பார்ப்பாங்களோன்னு, நான் இத்தனை வருஷம் கல்யாணம், டேட்டிங்னு எதுவும் பண்ணாம இருந்ததுக்கு காரணமும் இது தான். கடைசி வரை இப்படியே கட்சிக்காக வாழ்றேன்னு நல்லவன் வேஷம் போட்டு ஏமாத்திடலாம்னு பார்த்தேன் அன அது என்னால முடியல. என் கூட சுத்தினவன், என்னை சுத்தி இருந்தவன் எல்லாம் சந்தோஷமா குடும்பமா இருக்கும் போது நான் மட்டும் எந்த சந்தோஷமும் இல்லாம துறவி மாதிரி வாழ்றது அத பாக்கும் போதுலாம் எனக்கு வர கோபமிருக்கே அது தலைக்குள்ள போய் எதேதோ பண்ணும் அப்போ நான் கண்டுபிடிச்சது தான் அந்த சாக்லேட். எனக்கு தெரியும் எல்லாரையும் என்ன மாதிரி மாத்த முடியாது தான். ஆனாலும் கொஞ்ச பேர மாத்தலாமே. அப்போதைக்கு எனக்கு அது போதும்னு தோனிச்சி, அதான் எனக்கு தெரிஞ்ச ஜூனியர்க்கு கட்சி ஆளுங்களுக்கு நான் ரெஃபர் பண்ணி நிறைய பேர சாப்பிட வச்சேன். இந்த சாக்லேட் முதல்ல ஒருத்தனோட இனப்பெருக்க உறுப்பை தான் தாக்கும் அது ஆணா இருந்தாலும் சரி பெண்ணா இருந்தாலும் சரி. அப்படி தான் நான் அதை மாடிஃபை பண்ணேன். அப்படியே அதுக்கு அவன் அடிமை ஆகி நான் சொல்றதை தான் கேட்பான். அதே மாதிரி தான் நடக்கவும் செஞ்சிது. இதுல நான் ரொம்ப ஹாப்பியா எல்லாத்தையும் மறந்து ஒரு பக்கம் கட்சி, ஒரு பக்கம் இந்த ட்ரக்னு எல்லாம் நல்லா போயிட்டு இருக்கும் போது தான் எங்க அப்பா ஒரே நொய் நொய்ன்னு கல்யாணம் பண்ணிக்கோ பண்ணிக்கோன்னு டார்ச்சர் பண்ண ஸ்டார்ட் பண்ணா. அப்போ அந்த ஸ்ட்ரெஸ்ல நான் இருக்கம் போது தான் நான் சுடர பார்த்தேன். அவ என் குழந்தையை பெத்துக்கிட்டதையும் தெரிஞ்சிக்கிட்டேன். அப்போதான் எனக்கு இந்த ஐடியா தோணிச்சு. இப்போ சுடரையே கல்யாணம் பண்ணி வேந்தனை என் பையன்னு இந்த உலகத்துக்கு காட்டிட்டா போதும். என் எல்லா பிரச்சனையும் சால்வ் ஆகிடும். அத நடத்திக்கவும் செஞ்சேன் இதுக்கு அப்புறம் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை எதுவுமே இல்லை” என்று பயங்கரமாக சிரிக்க.
மகிழன் பேசியதைக் கேட்ட ராஜ் கோபமாக எழுந்து அவனை உலுக்கியபடி “என்னடா சொல்றா? அப்போ அந்த சாக்கிலேட்டை சாப்பிட்டா குழந்தை பிறக்காதா? அப்புறம் ஏன்டா அந்த சாக்கிலேட்டை எனக்கு என் மனைவிக்கும் கொடுத்தா?” என்று கோபத்தில் அவன் முகத்தில் குத்த, அதற்கு மகிழனும் பதிலுக்கு அடித்தபடி “ என் கூட இருக்குற நீயும் என்ன மாதிரி தானே இருக்கனும் அதான் கோடுத்தன் “ என்று இருவரும் மிருகங்களைப் போல அடித்து உருள, இதைப் பார்த்துப் பயந்த சரவணன், “இதுக்கு மேல வெயிட் பண்ணினா இங்கேயே செத்துடுவானுங்க போலயே!” என்று பயந்து கதவைத் திறக்க, அங்கே ரஞ்சன் வெள்ளை டி-சர்ட், காக்கி பேண்ட் சகிதமாகக் கையில் துப்பாக்கியை வைத்துச் சுற்றியபடி, “என்னம்மா கண்ணு, சௌக்கியமா?” என்று பாட்டுப் பாடியபடி அவனை நோக்கித் துப்பாக்கியைக் குறி வைத்தான்.