சரவணன் தன் ஆபிஸ் அறையில் அமர்ந்து கேஸ் சீட்களைப் பார்த்துக் கொண்டு இருக்க, அப்போது அவன் போன் சத்தம் போட்டது. யார் என்று எடுத்துப் பார்க்க, திரையில் டிபி என்று பெயர் மின்ன, அதைப் பார்த்து சிரித்தபடி போனை எடுத்துக் காதில் வைத்து “ சொல்லுடா குரங்கு “ என்று பேச, போனின் மறுபக்கம்
“ என்ன பக்கத்துல யாரும் இல்ல போல குமாரு “
“ ஆமா எல்லாம் சாப்பிடப் போயிருக்காங்க “
“ நீ போலயா மச்சி “
“ இல்லடா வீட்டுலயே சாப்பிட்டேன், ஆமா என்ன அதிசயம்டா கால் பண்ணிருக்க “
“ இப்போ தான் ஃப்ரீ ஆனேன் அதான் கால் பண்ணேன் “ என்று இருவரும் வெகு நேரம் பேசிவிட்டு, சரவணன் போனை வைக்கவும், மகிழன் கால் செய்தான். மகிழன் அழைப்பை புருவம் சுருக்கிப் பார்த்துவிட்டு, போனை எடுத்துக் காதில் வைத்து “ சொல்லுடா மகிழா இப்போ என்ன பிரச்சனைய தீர்க்கணும் “ என்று அலுத்துக்கொள்ள, மகிழன் “ பிரண்டுக்கு பிரச்சனைனா மட்டும் தான் கால் பண்ணனுமாடா? ஏன் சும்மா கால் பண்ணக் கூடாதா “
“ உனக்கு பிரச்சனைன்னா தானே என் ஞாபகம் வரும் பிரச்சனை முடிஞ்சதும் இதோ இப்போ கழட்டி விட்டியே, அப்படி கழட்டி விட்டுருவ “
“ டேய் கழட்டி விடப் நினைக்குறவன் ஏன்டா கால் பண்ணப் போறான் “
“ அப்போ வேற எதுக்கு கால் பண்ண “
“ ம்ம்ம் உன்ன என் பார்ட்னரா சேர்த்துக்க “ அதைக் கேட்டு மகிழ்ந்த சரவணன்
“ உண்மையாவாடா? என்னை உன் கூட சேர்த்துக்கப் போறியா? டேய் விளையாடலல “
“ உண்மையா தான். அதைப் பத்தி பேசத்தான் உன்னைப் பார்க்க நானே தனியா கார் எடுத்து வந்து கோர்ட் வாசல்ல வெயிட் பண்ணிட்டு இருக்கேன் “
“ இங்க இருக்கியா? இதை முதல்லயே சொல்ல மாட்டியாடா? எங்க இருக்கான்னு சொல்லு, நானே வரேன் “ என்று மகிழன் கார் இருக்கும் இடத்திற்குக் சென்று காரில் ஏறிக்கொண்டான். காரில் ட்ரைவர் சீட்டில் மகிழன் முகம் முழுக்கப் பூத்த புன்னகையுடன் சரவணனைப் பார்த்து “ போலாமா மச்சான் “ என்று கேட்க, அதற்கு அவன் “ நீ கூப்பிட்டு வரமா இருப்பனாடா “ என்றபடி மகிழனைப் பார்க்க, அவன் எப்பவும் போடும் வெள்ளை சட்டை போடாமல் டிசர்ட் மற்றும் ஜீன்ஸ் அணிந்திருக்க, சரவணன் “ என்னடா வெளிய எங்கேயாவது போறோமா? இப்படி ட்ரெஸ் பண்ணிருக்க “ “ அதுவா உனக்கு ஒரு சின்ன ட்ரீட் தரப் போறேன் அதான் “
“எதுக்கு மச்சான் ட்ரீட்லாம்? என்ன, நீ பாட்டனார உன் கம்பெனில சேர்த்துக்கிட்டதே போதும்.” அதை கேட்ட மகிழன், காரை ஓட்டியபடி சிரித்துக்கொண்டு, “நீ மாறவே இல்லடா சரா. காலேஜ்ல இருந்த மாதிரியே இருக்க. நீ பார்க்குற வேலைக்கு ஏத்த மணியை தாண்டி அப்பவும் எதுவும் வாங்க மாட்ட, இப்பவும் வேணாம் சொல்ற.”
“டேய், நீ வேற காலேஜ்ல இருந்த மாதிரிலாம் நான் இல்லடா மகி. நீ கொடுக்குற ட்ரீட் வெஜ்-அ இருக்கும் நான் கொஞ்சம் நான்வெஜ் எதிர்பார்ப்பேன்.” அதை கேட்டு சிரித்த மகிழன், “சிக்கன் பிரியாணி வாங்கி தர்றேன்டா.” “இப்பவும் சின்ன பிள்ளையாவே இருக்கியே மகிழா. நான் நான்-வெஜ்னு வேற சில ஹெல்த் டிரிங்க்ஸ சொன்னேன். உனக்கு அது தெரியாதுடா” என்று தலை சொரிய,
“டேய், சரக்கையா சொல்ற?” “அதுவும் தான்.” என்று இழுத்து “ ஆனா நீ தான் இப்போலாம் குடிக்கிறது இல்லையேடா, யூத் மினிஸ்டர் ஆனதுல இருந்து.”
“யார்டா அப்படி சொன்ன?”
“நானே பார்த்தேனேடா. இத்தனை நாள் குடிக்காம தான இருந்த?” அதை கேட்டு சிரித்த மகிழன், “சரி, அது இருக்கட்டும். நான் வைக்கிற ட்ரீட்ல எல்லாமே இருக்கும். டோன்ட் வொரி.” “எல்லாமேன்னா மச்சான்?”
“எல்லாமேன்னா எல்லாமே” என்று கண்ணை அடிக்க, அதை பார்த்து மலர்ந்த சரவணன், “சூப்பர்டா மச்சான். இன்னைக்கு ஒரு பிடி” என்று போனில் ஏதோ செய்ய, அதை பார்த்த மகிழன், “என்ன பண்றடா?” என்று கேட்க, அதற்கு அவன், “நான் டூ டேஸ் பிஸின்னு எல்லாருக்கும் இன்பார்ம் பண்ணிட்டு இருக்கேன்டா. இல்லனா கரடி மாதிரி டிஸ்டர்ப் பண்ணுவாங்க” என்று மெசேஜ் செய்து முடித்து மகிழனை பார்த்து, “ஆமா மகிழா, எனக்கு ஏன் திடீர் ட்ரீட்?” “உனக்கு வைக்காம்மா வேற யாருக்குட வைக்க? நீ இல்லனா சுடர் இப்போ எனக்கு கிடைச்சிருப்பாளே.”
“நான் என்னடா பண்ண? எல்லாம் நீ தான பண்ண.”
“ஆக்சிடென்ட்க்கு ஆளை ஃபிக்ஸ் பண்ணது நான் தான். ஆனா அந்த பிளான் சொன்னது நீ தானேடா? அது மட்டுமா? என்ன பத்தி சுடர் கிட்ட பேசி அவளை என் கிட்ட பேச அனுப்பி வச்சதும் நீ தானடா?”
“ நான் சுடர் கிட்ட சொன்னது உன்மை தானேடா அது நீ சுடரை உங்க அப்பாவால தான் பிரிஞ்ச? அதைத்தான் சொன்னேன். ஆமாம், உன் லவ் ஸ்டோரிய ஃபுல்லா சொல்லுடா. எப்படி நீ சுடரை லவ் பண்ண? உனக்கு ஏன் அவங்களை ரொம்ப பிடிக்கும்னு? “ அதைக் கேட்டு சிரித்த மகிழன் காரை பிரேக் போட்டு நிறுத்த “ ஏன் மகி காரை நிறுத்துன? “ என்று கேட்க பதில் பின்னால் இருந்து வந்தது. காரின் பின்னால் ஒருவன் ஏறி அமர்ந்தபடி “ நான் ஏற தான் நிறுத்தினான் “ என்று சிரித்து விட்டு “ ஹாய் சரவணன், உங்களைப் பற்றி ரொம்ப கேள்விப்பட்டேன். இன்னைக்கு தான் பார்க்க முடிஞ்சது. நான் ராஜ், மகிழன் ஃப்ரெண்ட் “ என்று கைநீட்ட அவன் கையை குலுக்கிய சரவணன் “ ஹாய் ராஜ், சாரி அவன் உங்களைப் பத்தி ஒன்னுமே சொல்லல “
“அது பரவாயில்லை. போகப் போக எல்லாம் தெரிஞ்சிக்கலாம் “ என்று சிகரெட்டை ஒன்று எடுத்து பற்ற வைத்து வாயில் வைத்து புகைவிட்டபடி, “அப்பா…, இப்போதான் கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்கு“ என்று சீட்டில் சாய்ந்து அமர, கண்ணாடி வழியே அவனையே பார்த்திருந்த சரவணனைப் பார்த்து மகிழன், “அவன் என் சின்ன வயசு பிரண்டுடா. நாங்களெல்லாம் ஒன்னாதான் படிச்சோம். என்ன, காலேஜ் தான் வேற வேற. அதான் உனக்கு அவனைத் தெரியல்லை“ என்று சிரித்தபடி, “ஏதோ கேள்வி கேட்டியே சரா, அந்தக் கேள்வியை இப்போ கேளு“ என்று பின்னாடி இருந்த ராஜைக் கண்ணாடி வழியே பார்த்தபடி பேச, ராஜும் கண்ணாடி வழியே மகிழனை என்ன என்பது போலப் பார்க்க, சரவணன், “அது உன்னோட அண்ட் சுடரோட லவ் ஸ்டோரி கேட்டேன்“ என்று இருவரையும் குழப்பமாகப் பார்க்க, அதைக் கேட்ட ராஜ் சிரித்தபடி,
“ரெண்டு பேரோட லவ் ஸ்டோரி இல்லை, மூணு பேரோடதுன்னு சொல்லுங்க“ என்று சிகரெட்டைப் பிடிக்க, சரவணன் குழம்பிப் போய், “என்னது, மூணு பேரா?“ என்று இருவரையும் பார்க்க, மகிழன், “நம்ம ப்ளேஸ்க்குப் போயிட்டுப் பேசலாம். இங்க வேண்டாம்“ என்று காரை வேகமாக ஓட்டினான். கார் நேராக ஈசியார் நோக்கிச் சென்று ஓர் இடத்தில் நின்றது. அங்கு கார் நிற்பதைப் பார்த்து சரவணன் மகிழனைப் பார்க்க, அவன் சரவணன் கண்களைத் துணியால் கட்டி, “சர்ப்ரைஸ்! சோ கண்ணைத் திறக்காத“ என்று மீண்டும் காரை ஸ்டார்ட் செய்தான். கார் இன்னும் ஒரு ஐந்து நிமிடம் சென்று ஒரு இடத்தில் நின்றது.
அங்கிருந்து சரவணனைக் கண்கட்டிய நிலையிலேயே அழைத்துச் சென்றனர். சிறிது தூரம் நடந்து பல படிகள் இறங்கிக் கடைசியாக ஓர் அறையில் அவன் கண்ணைத் திறந்துவிட்டனர்.
கண்களைக் கசக்கிவிட்டு அந்த அறையைப் பார்த்த சரவணன் அசந்துதான் போனான். அது பெரிய அறையின் ஒரு மூலையில் டிவி, பிரிட்ஜ், சோபா, டைனிங் டேபிள் என்று சொல்லிக்கொண்டே போகலாம். அறையைப் பார்க்க ஏதோ பைவ் ஸ்டார் ஹோட்டல் போல காட்சியளித்தது. அதைச் சரவணன் வாயைப் பிளந்து பார்க்க, ராஜ் சோபாவில் அமர்ந்தபடி மகிழனைப் பார்த்து, “டேய் மச்சான், நம்ம ஐட்டத்தை எடுத்துவரச் சொல்லுடா” என்றான். மகிழனும் அவன் போனில் ஏதோ செய்ய, வெளியிலிருந்து மூன்று பேர் கைகள் நிறைய பாட்டிலையும் அதனுடன் சிப்ஸ், சிக்கன் என்று பல உணவுப் பொருட்களையும் டேபிளில் அடுக்கினர். “டேய், நான் சொர்க்கத்துக்கு வந்துவிட்டேனடா” என்று சரவணன் அந்த பாட்டிலில் ஒன்றை எடுத்து கன்னத்தில் வைத்தபடி,
“நல்லா ஜில்லுனு இருக்கு மச்சான்” என்றான். அதற்கு மகிழன், “எப்போ இந்த பழக்கத்தைக் கத்துக்கிட்ட சரா?” என்றான். “அது சம்பாதிக்க ஆரம்பிக்கும்போதுதான் பழகிக்கிட்டேன். ஒரு ஒரு கேஸ் வின்னிங்கிலும் பார்ட்டிதான்” என்று ஒரு பாட்டிலைத் திறந்து குடித்துப் பார்த்துவிட்டு, “சூப்பர்டா…” என்று அவன் ரசித்துக் குடிக்க அதை பார்த்து மகிழனும் ராஜும் ஆளுக்கு ஒன்றை எடுத்து குடிக்க ஆரம்பித்துவிட்டனர். அப்போது ஞாபகம் வந்தவனாக சரவணன், “அது என்னடா ஏதோ மூணு பேர் லவ்வுன்னு சொன்ன?” என்றான். போதை ஏற வார்த்தை சிறிது தடுமாற்றத்துடன் வந்து விழுந்தது, அதைக் கேட்டு மகிழன் லேசாகச் சிரித்து ராஜைப் பார்த்துச் சொல் என்று கண்ணைக் காட்டினான்.
அவனும் “ அதுக்கு என்னையும் மகியையும் பத்தி சொல்லிறேன் அப்போ கரைட்டா இருக்கும்” என்று சிறிது குடித்து விட்டு “நானும் மகியும் சின்ன வயசுல இருந்து ஃப்ரெண்ட், ஃப்ரெண்ட்னா சாதாரண ஃப்ரெண்ட் இல்ல எல்லாத்தையும் ஷேர் பண்ணிக்கிற ஃப்ரெண்ட் “ என்று கண்ணைச் சிமிட்ட அதை ஒரு புரியாத பார்வை ஒன்று பார்க்க ராஜ் தன் கையில் இருந்த பாட்டிலை வாயில் கவிழ்க்க அது காலியாக இருப்பதைப் பார்த்த சரவணன் எழுந்து ஒரு புது பாட்டிலை இருவருக்கும் கொடுத்து விட்டு “ இப்போ சொல்லுங்க ப்ரோ “ என்று அவர்கள் எதிரில் அமர்ந்து கொண்டான் ராஜும் அதைக் குடித்தபடி ஆரம்பித்தான். “ எங்க வீட்டுல நான் ஒரே பையன் சோ நான் ரொம்ப செல்லம் அதனாலயா இல்ல எதுனாலன்னு தெரியல நான் தனியா தான் இருப்பேன் யார் கூடயும் செட் ஆகாது அப்போ தான் எங்க வீட்டுப் பக்கத்துல மகிழன் வந்தான் அவன் கூடவும் முதல்ல நான் பேசல ஆனா போகப் போக தான் புரிஞ்சது எனக்கும் அவனுக்கும் ஒரே டேஸ்ட்னு விளையாடுற பொருள்ல இருந்து சாப்பிடுற சாப்பாடு வரை நாங்க எப்பவும் ஒண்ணாதான் இருப்போம் எப்படினா ஒண்ணு அவன் என் வீட்டுல இருப்பான் இல்ல அவன் வீட்டுல நான் இருப்பேன் நாங்க எது பண்ணாலும் சேர்ந்து தான் பண்ணுவோம் இப்படியே இருக்கும் போது தான் மகிழனோட முதல் காதல் அவனைத் தேடி வந்துச்சு “
என்று மகிழனைப் பார்க்க, மகிழன் சிரித்தபடி தொடர்ந்தான், “அப்போ நான் டென்த். அவளும் எங்க கிளாஸ் தான். அவதான் லவ் சொன்னா. நானும் ஓகே சொன்னேன். எல்லாம் நல்லாதான் போச்சு மொதல்ல அப்பறம் நாள் ஆக ஆக அவ என் ஃப்ரெண்ட் ராஜை என்கிட்ட இருந்து பிரிக்க ட்ரை பண்ண எனக்கு அது சுத்தமா பிடிக்கல. அவ யாரு எங்களை பிரிக்க? அப்போதான் அவளை பழிவாங்க ஒரு பிளான் போட்டோம். அவளை எங்க வீட்டுக்கு என் பர்த்டே பார்ட்டிக்கு எல்லா ஃப்ரெண்ட்ஸோட வர வச்சு, பார்ட்டில அவ குடிக்கிற ஜூஸ்ல எங்க அப்பா குடிக்கிற ட்ரிங்க் சேர்த்து அவளை மயக்கமா ஆக்கிட்டோம். நான் கூட மொதல்ல போட்டோ மட்டும் எடுத்துட்டு விட்டுரலாம்னுதான் சொன்னேன். ராஜ் தான் கேட்கல”
என்று பெருமூச்சு விட்டபடி, “ஆனா ஃபர்ஸ்ட் எக்ஸ்பீரியன்ஸ் இப்பவும் மறக்க முடியல இட்ஸ் ய பெஸ்ட் டே இன் மை லைஃப் ” என்று ரசித்து சொல்ல, ராஜ், “ஆமாடா, இப்போ நினைச்சா கூட ஒரு மாதிரி பண்ணுது பாரு. ஆனா அவ இப்போ எங்கன்னு தெரியல. பீச் ரொம்ப மிஸ் பண்றேன்டா. ஏன்தா ஸ்கூல் மாறிப் போனாளோ?”
“அந்த வீடியோவை வேற எங்க அப்பன் எரிச்சிட்டான், அறிவுகெட்டவன்” என்று மகிழன் சரவணனைப் பார்க்க, அவன் இவர்களைப் பார்த்து, “அப்புறம் என்ன ஆச்சு?” என்று ஆர்வம் பொங்க கேட்க, அதற்கு மகிழன், “அப்புறம் என்ன? அவளை நாங்க வீடியோ எடுத்து அவளை மிரட்டி செம ஹாப்பி. ஆனா டேன்த் அப்புறம் அவளை காணோம். வீடு காலி பண்ணி போயிட்டா. நாங்க செம அப்செட். அப்போதான் ராஜும் நானும் சேர்ந்து ஒரு ப்ளேன் போட்டு நெக்ஸ்ட் டார்கெட் தேடிப் போனோம். மாத்தி மாத்தி பொண்ணுங்களை லவ் பண்ண ஆரம்பிச்சோம். அவன் காட்டுற பொண்ணை நான் லவ் பண்ணுவேன். நான் காட்டுற பொண்ணை அவன் லவ் பண்ணுவான். எங்களை நம்பி வர பொண்ணுங்க ஜூஸ்ல ட்ரக் கலக்குற அளவு இம்ப்ரூவ்மென்ட் ஆனோம். ஆனா காலேஜ் அப்போதான் எங்க அப்பன் ரெண்டு பேரையும் பிரிச்சிட்டான். அப்பவும் அப்பப்போ மீட் பண்ணுவோம். ஆனா சம்பவம் எதுவும் இல்லாம நாலு வருஷம் போச்சு.” என்று மகிழன் சலித்து கொண்டு ராஜைப் பார்க்க ராஜ் தொடர்ந்தான் “திரும்பிக் காலேஜ் முடிஞ்சி நாங்க அவனும் மீட் பண்ணி எப்போதும் போல ஜாலியா இருக்கும் போதுதான் பீச்சில சுடரைப் பார்த்தேன். அப்போ அவ ஸ்கூல் தான் படிச்சிட்டு இருந்தா ஆனாலும், அவளைப் பார்த்ததும் விழுந்துட்டேன். அதை அப்படியே மகிழன் கிட்ட சொன்னேன், ‘எனக்கு அவ வேணும் மச்சான்’ ன்னு. அவனும் ‘சரி’ ன்னு எனக்காக சுடரை லவ் பண்ணினான். சுடர் பார்க்கச் சின்னப் பெண்ணா இருந்தாலும், அவளைக் கரெக்ட் பண்ண டைம் ரோம்ப ஆச்சு. ஆனா, எப்படியோ அவளை கெஸ்ட் ஹவுஸ் வரக் கூட்டிட்டு வந்துட்டான். ஆனா, எனக்குத்தான் அன்னைக்கு லக் இல்லாம போச்சு. ச்சா…” என்று சோபாவை குத்தி மகிழனைப் பார்த்து “உங்க அப்பன் மட்டும் அன்னைக்கு வராம இருந்திருந்தா, ச்சே… அவளை அன்னைக்கு மிஸ் பண்ணிட்டேன்!”
என்று முழு பாட்டிலையும் வாயில் கவிழ்க்க மகிழன் “எங்க அப்பாக்கு எங்க மேல டவுட். அதுவும் இல்லாம அப்போதான் அவருக்கு வேற கட்சில சீட் கிடைச்சுது. அதான் ராஜ்-அ பிடிச்சு வச்சிட்டு நேரா கெஸ்ட் அவுஸ்க்கு வந்தாரு. நல்லவேளை அதுக்குள்ள சுடரை வச்சு ரெக்கார்ட் பண்ணிட்டு வீட்டுல விட்டுடன். அப்பறம் இங்க வந்து பார்த்தா எங்க அப்பன் எல்லாத்தையும் எரிச்சிட்டான். எத்தனை வருஷ வீடியோ தெராயுமா, எத்தனை பொண்ணுங்க தெரியுமா? எல்லாத்தையும் எரிச்சிட்டான் இதுனாலேயே சுடரை எங்களால ஒன்னும் பண்ண முடியாம போயிடுச்சு. பாவம் என் ராஜ் தான் ரொம்ப ஃபீல் பண்ணா.” இதைக் கேட்ட சரவணன் குழம்பி
“சரி, இது வரை ஓகே. ஆனா திரும்பி ஏன் மகி சுடரை கல்யாணம் பண்ணிக்க நினைக்கிற? ராஜ் காகவா அப்போ கூட கல்யாணம் எதுக்கு எனக்குப் புரியல.” அதைக் கேட்டு முகம் மாறிய மகிழன் “என் பையன் வேந்தனுக்காக. அவன் என் கூட இருக்கணும்னா சுடர் என் கூட இருக்கணும், இருந்து ஆகனும்.”