ிடியல் 54

சுடர் ஆபிஸில் இருப்பதை எதிர்பார்க்காத ஆதி ஒரு நிமிடம் அதிர்ந்து பின் முகத்தில் எதையும் காட்டாமல் இலகுபடுத்தி “ சொல்லுங்க மேம் இங்க ஏன் வெயிட் பண்றீங்க “ என்று யாரோ போல் பேச சுடர் அவனின் மேம் அழைப்பில் வியந்து இது ஆதி தானா என்பது போல பார்க்க சுடர் பார்வை கண்டும் காணாதபடி அவன் இருக்கையில் போய் அமர்ந்து “ சொல்லுங்க மேம் “ என்று சுடரை ஏதோ கல்லை மண்ணைப் பார்ப்பது போல பார்த்துவிட்டு “ சொல்ல எதுவும் இல்லைனா நீங்க கிளம்பலாம் “ என்று வாசலை நோக்கி கை காட்ட இதற்கு மேலே பேசாமல் இருந்தால் வேலைக்கு ஆகாது என்று எண்ணிய சுடர் “ கொஞ்சம் பர்சனலா பேசணும் இங்கயே பேசலாமா இல்லை வெளிய போலாமா “

“ இனிமே நமக்குள்ள பேச பர்சனலா எதுவும் இல்லைன்னு நினைக்கிறேன் மேம் “ என்று சுடர் முகம் கூட பார்க்காமல் பேச “ ஆதி கொஞ்சம் பொறுமையா நான் சொல்ல வரத கேளுங்க “

 “ ப்ளீஸ் எனக்கு மத்தவங்க பொருளுக்கு ஆசை படுறது பிடிக்காது எனக்கு பிடிக்காத ஒன்ன பண்ண வச்சிராதீங்க மேம் புரிஞ்சுக்கோங்க “

“ உங்களுக்கு பிடிக்காத எதையும் பண்ண சொல்ல நான் வரல ஆதி “

 “ சந்தோஷம் அதுக்கு வரலைனா அப்போ கிளம்புங்க “

 “ என்ன ஆதி உங்களுக்கு பிரச்சனை வந்ததுல இருந்து என்ன துரத்துறதுலயே இருக்கீங்க முதல்ல என்னை பார்த்து பேசுங்க “ என்று பொறுமையிழந்து கத்த இதைக் கேட்ட ஆதி அவளை நிமிர்ந்து ஒரு வெற்று பார்வை பார்த்தான் நேற்று வரை அந்தக் கண்களில் சுடரைக் காணும் போதெல்லாம் காதலைத் தவிர வேறு எதுவும் இல்லாமல் இருந்தது ஆனால் இன்று எந்த உணர்ச்சியும் இல்லாமல் ஒரு பார்வை அதைப் பார்த்த சுடர் “ஆதி… “ என்று ஏதோ சொல்ல வர அவளைக் கை நீட்டி தடுத்தவன்

“ இதோ பாருங்க உங்க மாமா போன் பண்ணி உங்க முடிவைப் பத்தி சொல்லிட்டாங்க உங்க மனசுல வேற யாரோ இருக்காங்கன்னு தெரிஞ்ச பிறகு நம்ம விலகி இருப்பதுதான் நல்லது எனக்குச் ஒன்னு சொந்தமாக போறது இல்லைன்னு தெரிஞ்ச பிறகு அதைப் பார்க்கக்கூட நான் விரும்ப மாட்டேன் சோ போறீங்களா “

ஆதி பேசுவதைக் கைகட்டி கேட்டு இருந்த சுடர், அவன் பேசி முடித்ததும், “முடிஞ்சிதா. இப்போ நான் என்ன சொல்லறத கொஞ்சம் கேட்கிறீங்கள?” என்று அவனைப் பார்த்து முறைக்க, அதற்கு ஆதி அப்படி என்னதான் பேசப்போறா என்று அவளைக் கண்கள் சுருக்கிப் பார்த்தான். “உங்களுக்குச் சொந்தமில்லாத எதையும் உங்களை ஒன்னயும்  உங்கள பார்க்கச் சொல்லல்லை. ஆனா, இந்த ஸ்கூல் உங்களுக்குச் சொந்தம்தானே? அப்புறம் ஏன் இதை விட்டுப் போறீங்க ஆதி?” அதற்கு ஒரு வெருமையான சிரிப்பை உதிர்த்த ஆதி, “ஸ்கூல் சொந்தமா இருந்தா போதுமா?” என்று ஒரு பெருமூச்சு விட்டு, “இதோ பாருங்க மேம், உங்களைக் கண்ணு முன்னாடி வச்சிட்டு என்னால உத்தமனா இருக்க முடியாது. அதுக்காகத்தான் போறேன். உங்களை நான் பார்க்காம இருக்குறது தான் உங்க லைஃப்க்கு நல்லது. என்னதான் இருந்தாலும் நான் லவ் பண்ண பொண்ணு நீங்க. நல்லா வாழணும். அதான் போறேன்.”

“இதுதான் காரணம இருந்தா நீங்க எங்கயும் போக வேண்டாம்.” அதற்கு ‘ஏன்?’ என்பதுபோல ஆதி பார்க்க “ஏன்னா? மேரேஜ் அப்புறம் நான் ஸ்கூலுக்கு வர மாட்டேன். அண்ட் ஒரு ஒன் வீக் பொறுத்துக்கொங்க. அதுக்குள்ள எல்லாம் ஓகே ஆகிடும்.”

“நான் போறதுல உங்களுக்கு என்ன பிரச்சன மேம்?”

“ எனக்கு ஒன்னும் இல்லை. ஆனா பசங்க, டீச்சர் எல்லாம் கஷ்டப்படுவாங்க. என்னால பசங்க அவங்களுக்கு பிடித்த பிரின்சிப்பாலை இழக்கக் கூடாது. அதான் பேசணும்னு வந்தேன்.“ இதைக் கேட்டு ஆதி முகம் ஒரு நிமிடம் சோகமாக மாறி, மனதில் “ அப்போ கூட எனக்காக வரல்லையா சுடர்? “ என்று எண்ண, அந்த எண்ணத்தை தலையாட்டி உதறி சுதாரித்த ஆதி, “ சரி, நான் எங்கேயும் போகல்லை. இப்போ நீங்க போங்க “ என்று சுடரை அனுப்புவதிலேயே குறியாக இருக்க, சுடர் அவனைப் பார்த்து மென்மையாகச் சிரித்தபடி,

“ இவ்வளவு நாள் உங்களை ஒரு நல்ல பிரின்சிப்பால மட்டும்தான் நினைச்சேன். ஆனா இன்னைக்கு நீங்க ஒரு நல்ல காதலன்னும்  நிரூபிச்சிட்டிங்க ஆதி. நான் போயிட்டு வறேன் “ என்று சொல்ல, அவள் சிரிப்பைப் பார்த்த ஆதி அதில் மயங்கிப் மூழ்கி போனான். இவ்வளவு நாள் அவன் அவளிடம் ஏங்கிய சிரிப்பு இப்போது அவள் அவனுக்கு இல்லை என்ற நேரத்தில் கிடைக்கிறது அதைப் பார்த்தவன் சுடர் சென்றும், அதை அவன் மனக்கண்ணில் திருப்பித் திருப்பிப் பார்த்தபடி எவ்வளவு நேரம் அசையாமல் இருந்தான் என்று அவனுக்கே தெரியவில்லை. பின் பியூன் வந்து, சார், டைம் ஆகிடிச்சி என்று சொல்லும் வரை அப்படியேதான் இருந்தான்.

வீட்டில் சுடர் நகம் கடித்தபடி முகத்தை சோகமாக வைத்து கொண்டு தீபாவையே பார்த்திருக்க, அதைப் பார்த்தும் தீபா கண்டுகொள்ளாமல் இருப்பதைப் பார்த்து சுடர் எழுந்து நேராக தீபா முன் நின்று “ஏ நிலா, இப்போ பேசுவியா மாட்டியா என் கூட? மாமா, புனிதா சித்தின்னு எல்லாரும் ஒத்துக்கிட்டும் நீ மட்டும் ஏன் இப்படி பண்ற?” என்று தீபாவை உலுக்க,

 “அவங்க ஒத்துக்கிட்டா நான் ஏன் ஒத்துக்கணும்? அதுவும் வந்தவன் ஏதோ திருட்டு கல்யாணம் பண்ணிக்க போற மாதிரி அவசரமா இன்னும் ரெண்டு நாள்ல மேரேஜ்ன்னு சொல்லிட்டு இருக்கான் நீங்களும் மண்டைய மண்டைய ஆட்டுறிங்க. எனக்கு என்னமோ இதைப் பிடிக்கல. என் தங்கச்சி மேரேஜ் எப்படி நடக்கணும்னு ஆசைப்பட்டேன். இப்போ எல்லாம் வேஸ்ட்” என்று முகத்தைத் திருப்ப, தீபா பேசியதும் சரிதான். ஏன் இவ்வளவு அவசரம் என்று அவளுக்கும் புரியவில்லைதான். மேரேஜ் ஆவது அனைவர் முன்னிலையில் செய்யலாம் என்றால் அதையும் வேண்டாம் என்று சொல்லிவிட்டான் மகிழன்.

அன்று காலை தான் மகிழன் டிஸ்சார்ஜ் ஆனான்.  டிஸ்சார்ஜ் ஆகி நேராக சுடர் வீட்டுக்கு தான் வந்தான்  அவன் வருவதை முன்பே சொன்னதால் சுடர் சொந்தங்கள் அனைவரும் அங்கு தான் இருந்தன.  அங்கு வந்த மகிழன் அனைவரிடமும் சுடரிடம் சொன்ன ப்ளானை சொல்லி சம்மதமும் வாங்கி கொண்டான்.  அங்கு இருந்த யாருக்கும் இதில் முழு சம்மந்தம் இல்லை இருந்தாலும் சுடர் இவர்களிடம் பேசி பேசியே ஒத்துக்கொள்ள வைத்தாள். அனைவரிடமும் பேசிவிட்டு மகிழன் சுற்றி வேந்தனை தேட வேந்தன் தீபா பின் ஒழிந்து நின்றபடி மகிழனை  தான் பார்த்து கொண்டு இருந்தான்.  அவனை பார்த்து சிரித்த மகிழன் அருகில் அழைக்க அவன் வர தயங்கி அவன் அன்னை முகம் கான  அவளும் வா என்று அழைக்க பொருமையாக நடந்து மகிழன் அருகே வந்து நின்றான்.

அவனைப் பார்த்த மகிழன் முகம் பிரகாசிக்க, அவனிடம் இருந்த சாக்லேட் ஒன்றை நீட்டி அவனைத் தொடச் செல்ல, வேந்தன் ஓடிச் சென்று மீண்டும் தீபா பின் மறைந்து கொண்டான். வேந்தன் சென்றதும் மகிழன் முகம் வாட, சுடர், “புதுசா பார்க்கிறான்ல, அதான் பயப்படுறான் போல. சீக்கிரமா எல்லாம் சரி ஆகிடும்”

என்று ஆறுதல் சொல்லி சமாதனம் படுத்தினாள். மகிழன் இன்னும் இரு நாளில் திருமணம் செய்யளாம் என்று அனைவரையும் சம்மதிக்க வைத்த பின்தான் சென்றான். இதை எல்லாம் யோசித்தபடி தீபா, “வேந்தன் கூட அவனைப் பார்த்தா பயமாக இருக்குன்னு சொல்றான்” என்று சுடரைப் பார்க்க, அவள் தீபாவை முறைத்துவிட்டு எழுந்திருக்கப் போக, அவள் கைகளைப் பிடித்த தீபா, “கல்யாணம் பண்ணி அங்கே போயிட்ட பிறகு ஏதாவது பிரச்சனைன்னா உடனே என் கிட்ட வந்துடு சுடர். நான் இருக்கிறேன். நாம சேர்ந்து எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம் ” என்று தீபா பேசும்போது அவள் கைகள் லேசாக நடுங்குவதை உணர்ந்த சுடர், தீபாவை அணைத்தபடி, “நம்ம அம்மா நம்மளை அவங்களைவிட தைரியமாகத்தான் வளர்த்திருக்காங்க. என்ன பிரச்சனை வந்தாலும் அதைச் சமாளிக்கிற அளவு தைரியமாகத்தான் இருக்கிறேன் நிலா. நீ பயப்படாதே” என்று சுடர் சொன்ன பிறகுதான் தீபாவுக்குச் சிறிது பதற்றமே குறைந்தது. சுடர் எப்போது மகிழனைத் திருமணம் செய்துகொள்ளப் போவதாகச் சொன்னாளோ, அன்று இருந்தே தீபாவிற்குப் பயம்தான். சுடருக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று. ஏனென்றால் தீபாவிற்கு மகிழன் மீது இன்னும் நம்பிக்கை வரவில்லை.

இங்கு ரஞ்சன் அவன் ஆபீஸ் ரூமில் அமர்ந்தபடி “அஜூன் எல்லாம் கரெக்டா போயிட்டு இருக்கா?” “ம்ம்ம் ரஞ்சன், டாக்டர் கிட்டத்தட்ட எல்லா ஸ்கூல்லயும் செக் பண்ணி முடிச்சிட்டாரு.” “இதுவரை எத்தனை ஸ்டுடண்ன்ஸ் பாதிக்கப்பட்டு இருக்காங்க அஜூன்?”

 “13 வயசுல இருந்து 16 வயசு வரை சுமார் 500 பேர் கிட்ட இந்த சாக்கலேட் சாப்டுருக்காங்க. 16 வயசுக்கு மேல நம்ம இப்போதான் செக் பண்ண ஸ்டார்ட் பண்ணிருக்கோம். சோ, இதுவரை 400 பேர் வரை இதை சாப்பிட்டு இருக்காங்க. இதுல ரொம்ப பாதிக்கப்பட்ட பசங்கன்னா 120 பேர் ரஞ்சன். மற்ற எல்லாரும் ஸ்டார்ட்டிங் ஸ்டேஜ் தான்.”

“ம்ம்ம் ஓகே அஜூன். இதை கண்டினியூ பண்ண சொல்லு. அண்ட் நான் சொன்ன மாதிரி ரெடியா இரு. ஆடு எப்ப வேணும்னாலும் சிக்கும்.” “எல்லாம் ரெடியாகத்தான் இருக்கு ரஞ்சன். எல்லாம் பிளான் படிதான் போகுது. இருந்தாலும் கேர்ஃபுல்ல இரு ரஞ்சன்.”

“ம்ம்ம் நான் பார்த்துக்கிறேன் “ என்று போனை வைத்தபடி “ 1000 பேரோட வாழ்க்கையில் விளையாடி இருக்க, வெயிட் பண்ணு இன்னும் கொஞ்சம் நாள் தான் கிட்ட வந்துவிட்டேன்டா “ என்று கண்களை மூடியபடி சீட்டில் சாய்ந்தான். அப்போது கதவைத் தட்டிவிட்டு ஸ்வீட்டுடன் உள்ளே வந்த துரை “ சார் என் வைஃப் எக்ஸாம்ல பாஸ் ஆகிட்டா சார் “ என்று நீட்ட அதை ஒரு புன்னகையுடன் எடுத்தபடி “ படிக்கிறாங்க தான சொன்னீங்க சிங்கம் “  என்று கேட்க “இல்ல எக்ஸாம் எழுதிட்டா இன்டர்வியூக்காக பிரிப்பேர் ஆகிட்டு இருந்தா இன்னைக்கு தான் ரிசல்ட் வந்துச்சு இன்னும் இன்டர்வியூ மட்டும் தான் பாக்கி அதுலயும் பாஸ் ஆகிடுவான்னு நம்புறேன் சார் “ என்று சிரிக்க “ ம்ம்ம் கங்கிராஜுலேஷன் சொன்னதா சொல்லுங்க சிங்கம் “ என்றபடி எழுந்து வெளியே சென்றவன் அங்கு இருக்கும் குப்பைத் தொட்டியில் அந்த ஸ்வீட்டைப் போட்டபடி “ நளினி “ என்று பல்லைக் கடித்தபடி நின்றான்.