ிடியல் 52

சுடரின் கைகளை தன் அடிபட்ட கைகளால் பிடித்து கண்களில் நீர் வடிய “எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடு சுடர், நீ இல்லாமல் என்னால் இந்த வாழ்க்கையை நினைச்சிக்கூட பார்க்க முடியாது ப்ளீஸ்“ என்று அழுதுகொண்டே மகிழன் கெஞ்சுவதைப் பார்த்து மனம் உருகித்தான் போனது சுடருக்கு. அவள் கண்களும் கலங்க அவன் கையைப் பிடித்தபடி “திரும்பி என்னை விட்டுப் போக மாட்டல  மகி“ என்று குரல் நடுங்கக் கேட்க ஐந்து வருடம் கழித்து சுடரிடமிருந்து வந்த மகி என்ற அழைப்பைக் கேட்டு இதழ் விரியச் சிரித்த மகிழன் “என் உயிர் இருக்குற  வரை உன்னை விட்டுப் போக மாட்டேன் சுடர்“ என்று அவள் கைகளில் ஓர் அழுத்தம் தர அந்தக் கைகளை அவனிடமிருந்து பிரித்த சுடர் “எனக்குக் கொஞ்சம் டைம் கொடு மகிழன் திடீர்னு உன்னை அக்சப்ட் பண்ண ஒரு மாதிரி இருக்கு“ என்று அவள் கைகளைப் பின்னே இழுத்தபடி பேச அதைப் பார்த்த மகிழன் புரிந்துகொண்டவனாக “எனக்குப் புரியுது சுடர் ஆனா நீங்க எவ்வளவு சீக்கிரமா என்கிட்ட வர்றீங்களோ அவ்வளவு நல்லது. என்கிட்ட நீங்க இருந்தா மட்டும் தான் எங்க அப்பாவால உங்கள ஒண்ணும் பண்ண முடியாது அண்ட் இந்த உலகத்துக்கு நீ என் மனைவி, வேந்தன் என் பையன்னு சீக்கிரமா நாம சொல்லணும். அப்படி சொல்லிட்டா எங்க அப்பாவால நம்மளை ஒண்ணும் பண்ண முடியாது.“  “அப்போ மகி உங்க அப்பாவால என் ஃபேமிலிக்கு ஏதாவது ஆயிடுமா” என்று பயத்துடன் கேட்க

“ இவ்வளுவு நாள் பத்தறமா பாத்த எனக்கு இனிமே பாக்க தெரியாத “ என்று மகிழன் சிரிக்க பின்பு தான் சுடருக்கு மூச்சே வந்தது “ சரி மகி நம்ம சீக்கிரம் மேரேஜ் பண்ணிக்கலாம் அன வேந்தன் அவன எப்படி நீ எல்லார் கிட்டயும்  சொல்லுவ உன் பையன்னு அப்படி சொன்னினா என்ன என் வயச வச்சி பிரச்சன வருமே மேரேஜ் முன்னாடி பேபியான்னு “ என்று தயங்க “ அத பத்தி நீ கவலைப்படாத சுடர் அதுக்கு நான் ஒரு ஐடியா வச்சிருக்கன் முதல நம்ம மேரேஜ சீக்ரட்ட பண்ணிடலாம் பின்னாடி அனேன்ஸ் பண்ணும் போது ஃபைய் இயர் முன்னாடி மேரேஜ் ஆகிடுச்சு அப்பாக்கு பயந்து வாழ்தோம்னு நியூஸ்ல கொடுத்துடலாம்   எப்படி ஓகேவா “

“ஓகே தான் ஆனா எங்க வீட்டில எப்படி ஒத்துப்பாங்க தெரியலையே “  “நீ எதையும் யோசிக்காத நான் டிஸ்சார்ஜ் ஆகி முதல் வேலையாக உங்க மாமா கிட்ட போய் பேசி ஒத்துக்க  வைக்கிறேன் “ இதை கேட்டு சரி என்பது போல தலையாட்டிய சுடரைப் பார்த்து மீண்டும் முகம் கசங்கி “ நம்ம பையன் என்னை ஏத்துப்பானா சுடர் “  என்று கரகரத்த குரலில் கேட்க அதற்கு சுடர் “ அதெல்லாம் ஏத்துப்பான் ஆனா கொஞ்சம் டைம் ஆகும் ஏன் வெயிட் பண்ண மாட்டியா மகி “ “ உங்களுக்காக காலம் முழுக்க வெயிட் பண்ண கூட நான் தயார் “ என்று சுடரை ஏக்கமாகப் பார்க்க அவன் பார்வையைப்  பார்த்த சுடர் “ எனக்கு டைம் வேணும்  மகி “ என்று வேறு எங்கோ பார்க்க சுடரைப் புரிந்தவனாக “சரி சுடர் என் போன் நம்பரை ப்ளாக்ல இருந்து எடுப்பியா  இல்ல அதுக்கும் டைம் ஆகுமா “ என்று விளையாட்டாக பேச அதற்கு சிரித்த சுடர் “ ஆமா அதுக்கும்  டைம் ஆகும் வீட்டுக்குப் போய் பொருமையா தான் எடுப்பேன் மகி அது வரை வெயிட் பண்ணு “ என்று பேசிக்கொண்டிருந்த சுடருக்கு அப்போது தான் வீட்டின் நினைவு வர தலையில் தட்டி கொண்டே  “ அச்சோ மகி லேட் ஆகிருச்சி வேந்தன் வெயிட் பண்ணுவான் நான் கிளம்புகிறேன் அண்ட் மாமா கிட்ட நான் சொல்லும் போது பேசினா போதும் “ என்று கிளம்பிச் சென்றவளை சிறிது நேரம் பார்த்து விட்டு பின் கண்களை மூடியபடி “ என் சுடர் என்கிட்டயே வந்துட்டா “ என்று சிரித்துக் கொண்டான்.

இங்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்த சுடர் எண்ணம் எல்லாம் இதை எப்படி தன் வீட்டில் சொல்லி அனைவரிடமும் சம்மதம் வாங்குவது என்பதை பற்றியே இருக்க அதை யோசித்தபடியே வீட்டிற்குச் சென்றாள். வீட்டிலோ தூங்கிக் கொண்டிருந்த குமரன் திடீரென்று முகம் முழுக்க மகிழ்ச்சி பொங்க ஹாலில் இருந்த தீபவிடம் வந்து “எங்க சுடர காணோம் நிலா நீ மட்டும் தான் இருக்க?“ “அது அவ ஸ்கூலுக்குப் போயிருக்கா மாமா ஏதோ டெஸ்ட்டுன்னு சொன்னா. ஆமா நீங்க என்ன ஒரே ஹாப்பி மூட்ல இருக்கீங்க போல, ஏதாவது குட் நியூஸ்ஸா மாமா?“ “ஆமா குட் நியூஸ் தான்“ என்று வேந்தனை டிவி பார்க்கச் சொல்லி அனுப்பிவிட்டு தீபா அருகில் அமர்ந்த குமரன் “உன்ன பொண்ணு கேட்டு ரஞ்சன் வீட்டில இருந்து கால் பண்ணிருக்காங்க“ அதை கேட்டு முகம் மலர்ந்த தீபா பின் எதையோ யோசித்தபடி முகம் சோர்ந்து போனது. இதை கவனித்த குமரன் “என்ன ஆச்சு நிலா? ஏன் சோகமா இருக்க?“ “மாமா ரஞ்சன் வீட்டுக்கு நம்மள பத்தி எல்லாம் தெரியும் தான?“ “அதை ஏன்மா இப்போ கேக்குற? அதெல்லாம் தெரியாம இருக்காது.“ “ம்ம்ம் என்ன சொல்லி போன் பண்ணாங்க மாமா?“  “அது முதல்ல உங்க சித்தி கிட்ட தான் பேசிருக்காங்க. அதை கேட்டு சந்தோஷமான உன் சித்தி எனக்கு கால் பண்ணிருக்கா.“  “ஓ.. சரி அதுக்கு நீங்க என்ன சொன்னீங்க மாமா?“  “நானா ஒரு நல்ல நாள் பார்த்து வரச் சொல்லிட்டேன் . எனக்கு தெரிஞ்சு வர புதன் அப்போ வருவாங்க போல“ என்று என்னென்ன செய்ய வேண்டும் என்று இப்போதிருந்தே குமரன் திட்டம் போட தீபா “இந்த மேரேஜ் வேணாம் மாமா.“ என்று சொல்லிவிட்டு தலை குனிய

“என்னம்மா சொல்ற ஏன் வேணாம்னு  சொல்ற உனக்கு தான் ரஞ்சனை பிடிக்குமேம்மா அப்புறம் ஏன் வேணாம் “ என்று குமரன் கேள்வியாக தீபா முகம் பார்க்க அவள் தலையை குனிந்து எதுவும் பேசாமல் அமர்ந்து கொண்டாள். குமரன் எவ்வளவு கேட்டும் காரணம் எதுவும் சொல்லாமல் இருக்க அப்போது தான் அங்கு சுடர் வந்தாள் வேந்தனை கூட்டிக்கொண்டு. சுடரைப் பார்த்த குமரன் “ உங்க அக்கா என்ன நினைக்கிறான்னே எனக்கு புரியல சுடர் “ என்று கோபமாக பேச “ஏன் என்ன ஆச்சு நிலா என்ன பண்ணா “ என்று தீபா அருகில் வந்து அமர “ ரஞ்சன் வீட்டிலிருந்து கால் பண்ணியிருக்காங்க நம்ம நிலாவை பொண்ணு கேட்டு “

 “ என்னது ரஞ்சன் வீட்டிலிருந்து நிலாவை பொண்ணு கேட்டு கால் பண்ணாங்களா சூப்பர் நிலா கங்கிராஜுலேஷன் “ என்று அவளைக் கட்டிப் பிடிக்க நிலா அமைதியாகவே இருந்தாள். அதைப் பார்த்து சுடர் “ என்ன நிலா டல்லா இருக்க ஹாப்பி தானே நீ “ என்று அவள் முகம் நிமிர்த்திப் பார்க்க அவள் கண்கள் கலங்கி இருந்தன. “ ஏ நிலா என்ன ஆச்சு ஏன் இப்போ நீ அழுற “

“இல்ல சுடர் ரஞ்சனுக்கு நான் வேணும்” என்று தேம்ப  “ஏன் என்ன உளறுற நிலா “ என்று அவள் கண்களை துடைக்க குமரன் “ இதைத் தாமா அப்போ இருந்து சொல்றா ஏன்னு காரணத்தைக் கேட்டா அதையும் சொல்ல மாட்டிக்கிறா “ என்று தலையில் கை வைத்தபடி அமர சுடர் தீபாவின் கண்களை துடைத்து விட்டுவிட்டு “ போ நிலா போய் முகத்தை கழுவிவிட்டு வா “ என்று அனுப்பி வைக்க குமரன் தீபா செல்வதைப் பார்த்து “ இவளை என்னம்மா பண்றது “ என்று சோர்வாக கேட்க

“இவளை நாம ஒன்னும் பண்ண வேண்டாம், ரஞ்சன் வந்து பார்த்துப்பாங்க. நீங்க பயப்படாம இருங்க “ என்று ரஞ்சனுக்கு கால் செய்து நடந்ததை சொல்ல, அதைக் கேட்டு ரஞ்சன் அடுத்த ஐந்தாவது நிமிடம் குமரன் வீட்டில் இருந்தான். வீட்டிற்கு வந்த ரஞ்சனைப் பார்த்த குமரன் “ வாங்க தம்பி, காபி ஏதாவது குடிக்கிறீங்களா “ என்று கேட்க, அதற்கு அவன் “ம்ம்ம் போடுங்க “ என்று சுடரிடம் திரும்பி  “ தீபா எங்கே “ என்று கேட்க, அதற்கு அவள் ரூமைக் கை காட்ட நேராக அங்கே சென்று விட்டான்.

இதைப் பார்த்த குமரன் சுடரை என்ன என்பது போலப் பார்க்க, சுடர் தன் பற்கள் தெரிய ஈ என்று சிரித்தபடி எழுந்து கிச்சனுக்குள் சென்று விட்டாள். ரூமுக்குள் தீபா பால்கனியில் நின்று வானத்தை வெறித்தபடி நிற்க, அவளைப் பார்த்துக்கொண்டே உள்ளே வந்த ரஞ்சன் அவள் அருகே அவளைப் பார்த்தபடி கைகாட்டி நின்றபடி “ என்ன ஏமாத்திட்டு போகலாம்னு நினைக்கிறியா தீபா “ என்று கடுமையான குரலில் கேட்க, அதைக் கேட்டு டக் கென்று திரும்பி ரஞ்சனைப் பார்த்து “ நான் எப்போ உங்களை ஏமாத்துனேன் “  என்று அனைத்தையும் சற்று மறந்து பேச

“ எப்போவா? உன் அண்ணா மேரேஜ் அப்போ அழகா ட்ரெஸ் போட்டு வந்து என்ன முறைச்சி முறைச்சி பார்த்து என்ன மயக்கி என் மனசைக் கெடுத்துட்டு இப்போ மேரேஜ் பண்ணிக்க மாட்டேன்னு சொன்ன. ஏமாத்துறதுன்னு சொல்லாம வேற என்னன்னு சொல்றது “ என்று கோபமாக முகத்தை வைத்து கேட்க, அதைக் கேட்டு வாயைப் பிளந்து சுடர் “ என்னது நான் உங்களை முறைச்சி பார்த்து மயக்கிட்டேனா ” “ ஆமா, நீதான் என்ன மயக்குன. அப்புறம் நானா என்ன “ என்று அலட்சியமாக பார்க்க அதில் என்னும் கோபம் கொண்ட தீபா

“நீங்க சொல்லலனாலும் அதான் உண்மை. என் பேரை வச்சு பாட்டு போட்டு நல்லா சைட் அடிச்சு மயக்கிட்டு என்னை சொல்றீங்கள” என்று அவள் எகிற, “விட்டா பாட்டு பாடுனேன்னு கூட சொல்லுவ போலையே”

 “அப்போ பாட்டு பாடலேன்னு வேற சொல்லுவீங்களா? அதுவும் என் காது கிட்ட வந்து பாடுனீங்களே, அத இல்லைன்னு வேற சொல்லுவீங்களா?”

 “எப்படி இவ்ளோ கிட்ட வந்து இப்படி உன் காது கிட்ட என் முகத்தை வச்சு

என் சண்டக்காரி நீதான் என் சண்டக்கோழி நீதான் சத்தியமா இனிமே என் சொந்தமெல்லாம் நீதான் எய் என்னை தாண்டி போறவளே ஓரக்கண்ணால் ஒரு பார்வை பார்த்து என்ன கொன்ன சரியா நடந்தாலும் தானாவே சறுக்குறேன் என்ன நீ என்ன பண்ண .. சொல்லு தீபா என்னை என்ன பண்ண” என்று அவள் அருகே அன்று நின்றது போல நெருங்கி நூல் அளவு இடைவெளி விட்டு அவள் காது அருகே குனிந்து பாட, ரஞ்சனின் மூச்சுக்காற்று அவள் காதில் உரச சிலையாகி போனாள் தீபா. தீபா அசையாமல் அவள் கைகளால் அவள் போட்டிருந்த டாப்பை இறுக பிடித்தபடி நிற்பதை பார்த்ததும் சுதாரித்த ரஞ்சன் அவன் தொண்டையை செருமியபடி “தீப்ஸ்…” என்று அவளை விட்டு தள்ளி நிற்க அப்போதுதான் சுயம் பெற்று “இதோ இப்ப பண்ண மாதிரி அன்னைக்கு நீங்க பண்ணல” “ஆமாம், பண்ணதான்” “ம்ம்ம் அப்புறம் நான் மயக்கிட்டேன்னு சொல்றீங்க” “சரி, நீ மயக்கல, நான் தான் மயக்குனேன். ஒத்துக்குறேன். அதுக்கு இப்ப என்ன பண்ணலாம்?” என்று கேட்க ஒரு நிமிடம் ஒன்றும் புரியாமல் தீபா முழிக்க அதை பார்த்து சிரித்த ரஞ்சன் “நான் உன்னை மயக்குனதுனால நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்று கள்ளச்சிரிப்பு ஒன்று சிரிக்க “இல்லை இல்லை, கல்யாணம் வேணாம்”

“நீதான நான் மயக்கிட்டேன்னு சொன்ன? அதான் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்ன.” “இல்லை, இல்லை, நீங்க ஒண்ணும் மயக்கல.” “அப்போ நான் மயக்கலன்னா நீ மயக்கிட்டேன்னு அர்த்தம். அப்போ நீ என்னை கல்யாணம் பண்ணிக்கோ!” என்று ஒற்றை கண்ணை அடிக்க, கடுப்பான தீபா, “உங்களுக்கு யாரு இப்படிப் பேசச் சொல்லிக் கொடுத்தது?”

 “இதுக்கே இப்படினா! இது வெறும் டெமோதான் தீப்ஸ். மேரேஜ் அப்புறம் ஃபுல்லா காமிக்கிறேன் !” என்று சிரிக்க, அதைக் கேட்டு தீபா முகம் கலக்கத்துக்கு மாறி, “ரஞ்சன்…” என்று கலக்கத்துடன் அழைக்க, அவள் மாற்றத்தைப் பார்த்து விளையாட்டைக் கைவிட்ட ரஞ்சன், “என்ன நம்புறியா தீபா?” என்று ரஞ்சன்  கேட்க அதைக் கேட்டு கலங்கிய தீபா, “ரஞ்சன்!” என்று மீண்டும் அழைக்க, ரஞ்சன் அவளின் கைகளைப் பிடித்து, “உங்க அப்பா மாதிரி போயிடுவேன்னு நினைக்கிறியா தீபா?” என்று அவள் கண்களைப் பார்த்துப் பேச, அதற்குத் தயங்கித் தயங்கி, “பயமா இருக்கு ரஞ்சன்.” என்றபடி அவன் முகம் பார்க்க, “என்னை நம்பு தீபா. என்னை நம்பி சரின்னு சொல்லு. கண்டிப்பா எல்லாத்தையும் நான் சரி பண்ணுவேன்.” என்று அவள் முகம் நிமிர்த்தி, “ என்னை நம்புறியாடி…?” என்று கண்கள் பார்த்து கேட்க, அதற்கு ஆம் என்பது போல தலையை உருட்டியபடி, “ம்ம்ம்” என்று சொல்ல, அதைப் பார்த்துச் சிரித்த ரஞ்சன், “உனக்கு தீபா நீலான்னு பேர் வைக்கிறதுக்கு பதிலா உருட்டு நீலான்னு வச்சிருக்கலாம்!” என்று அவள் தலையை ஆட்டினான்.