விடியல் 50

ரஞ்சன் தன் பெற்றோர்கள் முன் சோபாவில் அமர்ந்தபடி அவன் கைகளை கோர்ப்பதும் பிரிப்பதும் என இருக்க அவனை விசித்திரமாகப் பார்த்தபடி அவன் தாய் வள்ளியும் அவன் தந்தை மூர்த்தியும் அவன் எதிரில் அமர்ந்து இருந்தன. சிறிது நேரம் காத்திருந்த அவன் அப்பாவே “ஏதோ பேசணும்னு சொன்னியேப்பா“ என்று தொடங்க அதற்கு ரஞ்சன் “அது வந்துப்பா… நம்ம தேவி ஹஸ்பண்ட் இருக்காங்கல “ என தடுமாறியபடி பேச “ஆமா மாப்பிள்ளைக்கு என்ன ஆச்சு தேவி எதுவுமே சொல்லலையே“ என்று பதறியபடி வள்ளி கேட்க “மச்சானுக்கு ஒண்ணும் இல்லை அவரோட சித்தி பொண்ணு இருக்காங்கல“ “அவர் சித்திக்கு பையன் தான இருக்காங்க எப்போ பொண்ணு பொறந்துச்சு அதுவும் ஒரு மாசத்துல“ என்று வள்ளி தாடையில் கை வைத்தபடி கேட்க “அம்மா நான் புனிதா அத்தையை சொல்லல மச்சானோட இன்னொரு சித்தி அவங்க கூட இப்போ இங்க இல்லை“ “ஏன்டா வெளியூர்ல இருக்காங்கல என்ன கல்யாணத்துக்கு கூட வரல போல“

 “அம்மா… அவங்க இறந்துட்டாங்கம்மா கல்யாணம் அப்போ மச்சான் கூட தங்கச்சின்னு ரெண்டு பொண்ணுங்கள உங்க கிட்ட காட்டுனாங்களே “ “அச்சச்சோ நான் கவனிக்கலயேடா “ என்று தன் கணவரை பார்த்து விட்டு பின் “ஆமா அந்த ரெண்டு பொண்ணுங்களும் சொந்த சித்தி பொண்ண ? நான் ஏதோ தூரத்து சொந்தம்னு நினைச்சேன் ஆமா அப்புறம் ஏன் நிச்சயதார்த்தத்துக்கு வரல வந்திருந்தா நான் கரெக்டா சொல்லிருப்பேன்ல“ “அம்மா என்னம்மா ஒண்ணுமே தெரியாத மாதிரி பேசுற“

“என்னடா தெரியணும்? கல்யாண வீடு கொஞ்சம் பிஸியா  இருந்துட்டேன், அதான் ஒண்ணும் கேட்டுக்கல.” இதைக் கேட்டு இரு பக்கமும் தலையை ஆட்டிய ரஞ்சன், “சூப்பர் போங்க, சரி அப்பா உங்களுக்கு ஆவது ஏதாவது தெரியுமா?” என்று தன் அப்பாவிடம் திரும்ப  “உங்க அம்மா மாதிரி இல்லடா நானு. அன்னைக்கே சம்மந்தி எல்லாம் சொல்லிட்டாங்க. உங்க அம்மா தான் பாயசம் டேஸ்ட் பண்றேன்னு எதையும் கேட்கல.” இதைக் கேட்டு “ஈ…” என்று சிரித்த வள்ளி, பின் “ஆமா மாப்பிள்ளை, சித்தி பொண்ண பத்தி நீ என்ன பேசப் போற?” அதற்கு மீண்டும் அவன் கைவிரல்களைப் பார்த்தபடி, “அது அம்மா, வந்து அந்த பொண்ணு பேரு தீபா…” என்று தயங்க,

“தீபாவா? நிலா சடர்னு தானே சொன்னாங்க?” என்று வள்ளி பிரேக் போட்டு டவுட் கேட்க, “பிச்! அது முழு பேரு தீப நிலா. ஃபாரன்சிக் ஆபிசராக இருக்கா .” என்று ஒரு பெண்ணைப் பற்றி முழு விவரமும் சொல்லும் தன் மகனை மூர்த்தி சந்தேகமாகப் பார்க்க, அவர் பார்வை கண்டும் காணாதபடி, “அம்மா, அப்பா, அது வந்து நான் இன்னும் கொஞ்ச நாள் போய்ச் சொல்லலாம்னு தான் இருந்தேன். ஆனா சூழ்நிலை கொஞ்சம் சரி இல்லை.” என்று நிறுத்தி இருவர் முகமும் பார்க்க, மூர்த்தி எதையோ எதிர்பார்த்துக் காத்து இருந்தார் என்றார். வள்ளி புரியாமல் காத்து இருந்தார். “தீபாவை பொண்ணு கேட்டுப் பேசுங்கப்பா.” என்று சொல்லிவிட்டு இருவர் முகம் பார்க்க, மூர்த்தி அமைதியாகவே இருந்தார். ஆனால் வள்ளி அவர் வாயில் கைவைத்தபடி, “ரஞ்சன், இது நீதானாடா?” என்று கேட்க, மூர்த்தி, “எப்போ இருந்து அந்த பொண்ண உனக்கு தெரியும் ரஞ்சன்?” என்று சரியாக கேட்டார் என்றாள்

“தேவி கல்யாணத்துக்கு முன்னாடியே தெரியுமாடா “ என்று வள்ளி அதிர்ந்து கேட்டார் “தேவி கல்யாணம் முன்னாடி அவ மனோ தங்கச்சின்னு சொல்லிருந்தா தேவி கல்யணத்தோட என் கல்யாணத்தையும் முடித்திருப்பேன் “ என்று முனங்கியவனைப் பார்த்து “ என்ன ரஞ்சன் “ என்று வள்ளி கேட்க அதற்கு “ கல்யாணத்துக்கு முன்னாடி அவளைத் தெரியும் ஆனா சொந்தம்னு தெரியாதும்மா “ “உனக்கு ஓகேனா எனக்கு ஓகே ரஞ்சன் ஆனால் உங்க அம்மா கிட்ட எல்லாம் சொல்லி சம்மதம் வாங்குறது உன் பொறுப்பு “ என்று மூர்த்தி பொறுப்பைத் தன் பையனிடம் திருப்பி விட்டு இவர் நகர்ந்து கொள்ள “ என்ன எல்லாம் சொல்லணும் அதான் ஆல்ரெடி சொல்லிட்டானே “ என்று வள்ளி பார்க்க அவரை பார்த்தவன் ஒரு பெருமூச்சு ஒன்று விட்டபடி தீபாவை பற்றி சொல்ல அதை கேட்டு அமைதியான வள்ளியை ஒரு பதட்டத்துடன் பார்த்த ரஞ்சனின் பார்வை சொன்னது தீபாவை வேண்டாம் என்று சொன்னால் மீண்டும் கல்யாணம் என்று வரமாட்டான் என்று  இதையெல்லாம் யோசித்த வள்ளி சரி என்று ஒத்துக்கொண்டார்.

 பின் அவரே “ பொண்ணு வீட்டில உங்க அப்பாவை பேச சொல்றேன் “ என்று எழுந்து சென்று விட்டார். பின் மூர்த்தி ரஞ்சனின் தோளில் கைவைத்து “ உங்க அம்மா கோபத்தில் போலடா வரப்போற பொண்ணு எப்படி இருப்பான்னு பயத்தில் போற “ “பயப்படுற அளவு அவ ஒன்னும் பண்ண மாட்டாப்பா நல்ல பொண்ணு தீபா “ அதை கேட்டு ஒரு சிரிப்புடன் தலையாட்டியபடி சென்று விட்டார் மூர்த்தி. ரஞ்சன், வீட்டில் ஒத்துக்கொண்ட சந்தோஷத்தில் டியூட்டிக்கு சென்றான்.

இங்கு தீபாவை குமரன் வீட்டுக்கு அழைத்துச் வந்துவிட்டான் . புனிதா தீபாவை குமரன் வீட்டில் விட்டுவிட்டு  தீபாவிடம் ஆயிரம் பத்திரம் சொல்லிவிட்டு தினமும் கால் செய்ய வேண்டும் என்ற கட்டளையுடன் வீடு சென்றுவிட்டார். வீட்டிற்கு வந்த தீபா டிவியைப் பார்த்தபடி இருக்க அப்போதுதான் வீட்டிற்கு ஆதியுடன் வந்த வேந்தன் “பெரியம்மா….“ என்று ஓடி வந்து கட்டி அணைத்தான். வேந்தனை அணைத்து கன்னத்தில் முத்தம் வைத்து மடியில் அமர வைத்து “இப்போதான் ஸ்கூல் விட்டு வரியாடா“ என்று கேட்க. “இல்லை பெரியம்மா ஸ்கூல் எப்பவோ முடிஞ்சிருச்சி.“ “அப்போ இவ்ளோ நேரம் எங்கடா இருந்த?“ “ஆதி சார் கூடதான்“ என்று திரும்பி ஆதியைப் பார்க்க அப்போதுதான் ஆதி நிற்பதை தீபா கவனித்து “அச்சோ சாரி சார் கவனிக்கல வாங்க உட்காருங்க“ என்று சோபாவில் அமர வைக்க அங்கே சுடர் ஜூஸூடன் உள்ளே வந்து மூவருக்கும் கொடுத்துவிட்டு அவளும் ஒரு கப் எடுத்தபடி அமர்ந்தாள்

. “தாங்க்யூ சார் இந்த டூ டேஸா வேந்தனை நல்லா பார்த்துக்கிட்டதுக்கு அன்ட் சுடர்க்கு ஹெல்ப் பண்ணதுக்கும்“ என்று தீபா ஆதியைப் பார்த்து சொல்ல அதற்கு ஆதி “அச்சோ பரவாயில்லைங்க இதுக்கு ஏன் தாங்க்யூலாம். வேந்தன் ரொம்ப ஸ்வீட் அவனைப் பார்த்துக்கறதுல ஹாப்பிதான்“ என்று தன் கையில் இருந்த ஜூஸை குடித்தபடி சுடரை ஒரு பார்வை பார்த்து விட்டு

 “ஆமா குமரன் அண்ணா எங்க காணோம்“ அதற்கு சுடர் “நைட் ஷிஃப்ட்க்கு போயிருக்காங்க“ இதைக் கேட்ட தீபா “நைட் ஷிஃப்டா மாமா நைட் ஷிஃப்ட் போக மாட்டாங்களே என்ன திடீர்னு“ என்று சுடரைப் பார்த்துக் கேட்க அதற்கு அவள் “அது மார்னிங் நான் ஸ்கூல் போயிட்டா நீ தனியா இருப்பனு மாமா மாத்திட்டாங்க“ “என்னது நான் ஏன் தனியா இருக்கப் போறேன் நான் தான் நாளைல இருந்து வொர்க் போகப் போறேனே“ “என்னது வொர்க் போறியா இப்போதான் ஹாஸ்பிட்டல்ல இருந்து வந்திருக்க உடனே வொர்க் போறன்னு சொல்ற நிலா “

“சுடர் எனக்கு என்ன நல்லாதானே இருக்கான். எனக்கு சும்மா வீட்டில் இருந்து பழக்கம் இல்லை. போர் அடிக்கும் ப்ளீஸ்.” “அது எனக்குத் தெரியாது. மாமா கிட்ட கேட்டுக்கோ. எனக்கு இதுக்குச் சம்பந்தம் இல்லை” என்று எழுந்து சென்றுவிட, இப்போது என்ன செய்ய என விழித்திருந்த தன் பெரியம்மாவைப் பார்த்து வேந்தன், “அப்போ இனிமே இங்க எங்க கூட தான் இருப்பியா பெரியம்மா?” “ஆமா.. செல்லம் இங்க உங்க கூட தான் இருக்கப் போறேன்” என்று கன்னம் கிள்ள, வேந்தன் முகம் பிரகாசிக்க சிரித்தபடி தீபாவை அணைத்துக்கொண்டான். இதைப் பார்த்திருந்த ஆதிக்கு இதே போல் ஒரு குடும்பம் நமக்கு இல்லையே என்று ஏக்கமாகத்தான் இருந்தது.

மறுநாள் மதியம் வேலையில் சென்னை புறநகர்ப் பகுதியில் ஒரு ஓரமாக காரை நிறுத்தச் சொல்லி துரையிடம், “வெளியில ஹெல்மெட் இல்லாம வரவனைப் பிடிங்க சிங்கம்” என்று சீட்டில் சாய்ந்தபடி போனை எடுக்க, “சார் அது நம்ம வேலை இல்லை. அதுக்குத்தான் டிராஃபிக் போலீஸ் இருக்காங்களே.” “சிங்கம் என்ன வேலையா இருந்தா என்ன? எல்லாம் வேலைதான்” என்று தீபாவுக்கு போன் செய்து காதில் வைக்க, துரை, “ஆமா உங்களுக்கு என்ன? ஜாலியா போன்ல கடலை போட போறிங்க. நான் தானே இந்த வெயில்ல நிக்கணும் அந்த கஷ்டம் உங்களுக்கு எப்படி தெரியும் ” என்று முனங்கியபடி கீழே இறங்கி நின்றான்.

தீபா ரூம்மில் அமர்ந்தபடி போனை பார்த்துக்கொண்டு இருக்க, ரஞ்சனிடம் இருந்து போன் வந்தது. அதை பார்த்து சிரித்தபடி போனை எடுத்து காதில் வைத்து, “சொல்லுங்க ரஞ்சன், கால்லாம் பண்ணிருக்கீங்க?” என்று எடுத்த உடன் நக்கலாக பேச  “தீப்ஸ், நேத்து கொஞ்சம் பிஸிடி. அதான் கால் பண்ணல கோபமா .”  “ஓ… அப்போ நீங்க பிஸியா இருக்கீங்க, நான் வெட்டியா இருக்கேன்னு சொல்ல வர்றீங்க?” “வாய்ஸ் கால்ல நல்லா வாய் கிழிய பேசு. எங்க இதே மாதிரி வீடியோ கால்ல பேசு பார்ப்போம்.” என்று சுதாரித்து ரஞ்சன் பேச்சை மாற்ற “வீடியோ கால் தானே? அதுவும் சீக்கிரம் பேசிறேன் என்ன விசியமா கால் பண்ணிங்க.”

“ ஏன் சும்மா கால் பண்ண மேடம் பேச மாட்டிங்கள “  “ எப்ப கால் பண்ணலும் நான் பேச ரெடி தான் கால் பண்ண தான் நீங்க ரெடி இல்லை “

 “சரி அதை விடு அமா , ஜாலியா வீட்டில் என்ஜாய் பண்றீங்க போல?” “போங்க ரஞ்சன், நீங்க வேற செமையா போர் அடிக்குது. வேலைக்கு போறேன்னு சொன்னா மாமா உம்முன்னு ஆகிறாங்க. நெக்ஸ்ட் வீக் தான் அலவ் பண்ணுவாங்களாம்.” “வீட்டில ஜாலியா என்ஜாய் பண்ணாம்மா போர்னு சொல்ற. சரி, அதை விடு. நெக்ஸ்ட் வீக் ஆபீஸ்ல உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு போய் பாரு.”

“என்ன? அந்த பாலா வேற இடத்துக்கு டிரான்ஸ்பர் வாங்கிட்டு போனதா?” “இது உனக்கு எப்படி தெரியும்?” “ என் ஜூனியர் கார்த்திக் இருக்க பயமேன்? எல்லாம் அப் டு டேட் கரெக்டா வந்துரும்.”

“ உன் ஜூனியரை சரி அவனை அப்புறம் வச்சிக்கிறேன் “ என்று இருவரும் திடீர் என்று அமைதியாக இருக்க, ரஞ்சன் தன் வீட்டில் ஒத்து கொண்டதை எப்படி சொல்ல என்று சொல்ல நினைப்பதும் பின் தயங்குவதுமாக இருக்க, தீபாவே  அமைதியை கலைக்கும் விதமாக “ ரஞ்சன்..” என்று மிக மெதுவான குரலில் அழைக்க, அதைக் கேட்ட ரஞ்சன் உதட்டில் புன்னகையுடன் அவன் விரல்களால் நெற்றியைத் தேய்த்தபடி “ தீபா … “ என்று சொல்லி இருவரும் அமைதியாக இருக்க, இவை அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த துரை “ என்ன திடீர் அமைதி “ என்று முனங்கியபடி நெருங்கிச் செல்ல, இதைக் கண்ணாடி வழியே பார்த்த ரஞ்சன் “ தீபா நான் அப்புறம் கால் பண்றேன் பாய் “ என்று வைத்துவிட்டான்.

பின் வெளியே இருந்த துரையை உள்ளே அழைத்து “ பெண்டிங் கேஸ் ஏதாவது இருக்கா சிங்கம் “ என்று கேட்க, அதைக் கேட்டு ஜெர்க் ஆன துரை “ என்ன திடீர்னு கேஸ் பத்தி கேட்குறாரு “ என்று எண்ணியபடி “ பெண்டிங் கேஸ் எதுவும் இல்லை சார் “ “அப்போ இன்னைக்கு நைட் ஃப்ரீன்னு சொல்லு “ “ஆமா சார் ஃப்ரீ தான் “ “ அப்போ வைஃப் கூட மூவி ஏதாவது போங்க சிங்கம் என் டார்ச்சர் இன்னைக்கு இருக்காது “ “அச்சோ உங்களைப் போய் டார்ச்சர்ன்னு சொல்லுவேனா சார் அதுவும் இல்லாம என் வைஃப் வேற படிச்சிட்டு இருப்பா கூப்பிட்டாலும் வர மாட்டா சார் “ இதை கேட்டு புருவம் சுருக்கி யோசித்தபடி  ரஞ்சன் “அப்படியா சூப்பர் சிங்கம் ஆமா அவுங்க என்ன படிக்கிறாங்க “ “யூ.பி.எஸ்.சி க்கு பிரிப்பேர் பண்ணிட்டு இருக்காங்க “ “ஓ.. சூப்பர் சூப்பர் ஐ.ஏ.எஸ- க்கா  இல்லை ஐபிஎஸ்-க்கா “

“ ஐ.ஏ.எஸ்-க்கு  சார் “ “சிங்கம் நீங்க லவ் மேரேஜ் தானே உங்க ஸ்டோரி சொல்லுங்களேன் “ இதைக் கேட்டு சிரித்த துரை “ சொல்ல பெருசா ஒன்னும் இல்லை சார் என் வைஃப் நளினி என்னோட தூரத்து சொந்தம் ஒரு ஃபேமிலி ஃபங்ஷன்ல தான் மீட் பண்ணோம் அப்போ இந்த யுபிஎஸ்சி எக்ஸாம் பத்தி டவுட்னு வந்தா அது அப்படியே லவ் ஆகிடுச்சு “ “ அப்போ இருந்து ட்ரை பண்றாங்களா உங்க வைஃப் “

“ஆமா சார் இது தேர்ட் ட்ரை ஆனா இந்த வாட்டி பாஸ் ஆகிடுவான்னு நம்பிக்கையா சொல்லியிருக்கா சார் “ என்று சிரித்தபடி சொல்ல இங்கு ரஞ்சனுக்கு கடல் அளவு நளினி மேல் கோபம் இருந்தாலும் அதை எதையும் துரையிடம் காட்டாமல் இருக்க முயன்றபடி ரேடியோவைப் போட அதில் “ நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை…” என்று பாட்டு ஓட அதை கேட்டு சிரித்த ரஞ்சன் “நல்ல பாட்டுல சிங்கம் “ என்று அதனுடன் சேர்ந்து பாடினான் .

அதே சமயம் துரை போலிஸ் குவட்டஸில் சோபாவில் அமர்ந்து போனில் தன் தோழியிடம் பேசிக்கொண்டிருந்தாள் நளினி “ எல்லாம் ஏன் விதி நல்ல இப்படி வந்து சிக்கிக்கொண்டேன்டி “ “ஏன்டி இப்படி பேசுற உனக்காக தான சொல்றாரு “ “கிழிச்சான் அவன்,  அவனை நான் கரெக்ட் பண்ண எப்பவோ ஐஏஎஸ் ஆகுறது தான் என் ஏம்னு அடிச்சு விட்டான் அத அவன் நம்பி இன்னும் அதையே பிடிச்சிட்டு நீ பாஸ் ஆகு அப்புறம் ஹனிமூன் போலாம்னு சொன்னா கடுப்பாகும்மா ஆகாதா?”

“ஏ அப்போ உன் ஆசை ஐஏஎஸ் ஆகுறது இல்லையா  “ “ நீ வேற பன்சன்ல அவன பாத்துட்டு பையன் பார்க்க நல்லா இருக்கானே போலீஸ் வேற நல்லா செட்டில் ஆகலாம்னு கரெக்ட் பண்ண சென்ன பொய்டி அது, என் ஏம் என்ன தெரியுமா ஜாலியா ஷாப்பிங் போயிட்டு வீட்டுல இருந்துட்டு பிள்ளைய பெத்துட்டு நினைச்ச நேரம் ஊர் சுத்திட்டு லைஃப என்ஜாய் பண்ணனும் டி அத விட்டுட்டு படி எழுதுன்னு கடுப்பு “ “நல்ல ஏம்டி சரி நளினி நாளைக்கு ஃப்ரீயா இருந்தா வாடி ஷாப்பிங் போலாம் “ “நான் இப்போ கூட ஃப்ரீ தான் இப்போ நீ கூப்பிட கூட ரெடி தான் “ “ உன் ஹஸ்பண்ட் ஒன்னும் சொல்ல மாட்டாங்களா டி “ “அவன் எப்ப பாரு வேலைன்னு தான் இருப்பான் வீட்டுக்கே வர மாட்டான் வீட்டுக்கு வந்தா தானே நான் எங்க போறன்னு தெரியும் “ “ ம்ம்ம் நல்ல ஹஸ்பண்ட் தான் உனக்கு கிடைச்சிருக்காரு சரி ஃபைவ் மினிட்ஸ் கிளம்பிட்டு கால் பண்ற “ என்று போனை வைத்து விட்டாள் நளினியின் தோழி . போனை வைத்த நளினி அவள் வீட்டில் வேலை பார்க்கும் அக்காவை பார்த்து “ எல்லா வேலையும் முடிஞ்சிதா “ என்று உடலை நெளித்து சோம்பல் முறித்த படி கேட்டாள்.

அதற்கு அவர் தயங்கிய படி “ அது வந்து ம்மா இன்னும் கொஞ்சம் பாத்திரம் மட்டும் இருக்கு”

அதை கேட்டு முகத்தில் எரிச்சலை அப்படியே  காட்டிய  நளினி “  வேகமாவே வேலை செய்ய தெரியாத உங்களுக்கு நாளைக்கு வந்து அத விளக்குங்க இப்போ கிளம்புங்க எனக்கு டைம் ஆச்சு “ என்று தூறாத குறையாக துரத்தி அனுப்பினாள்.

வாழ்க்கை என்பது கண்ணாடி போல முதல் பாதியில் நீ எதை பிறருக்கு காட்டுகிறாயோ அதையே மறு பாதியில் இவ்வுலகம் உனக்கு காட்டும் என்பதை இவள் அறிய போகும் காலம் எப்போது ?