ிடியல் 49

இது பகலா இல்லை இரவா என்று தெரியாமல் கை கால் கண் வாய் என்று அனைத்தும் கட்டப்பட்டு எவ்வளவு நேரமாக அந்த சேரிலேயே இருக்கிறோம் என்று தெரியாமல் அரை மயக்க நிலையில் ஒரு இருட்டு அறையில் ஒருத்தனை அடைத்து வைத்திருந்தனர். அந்த அறைக்கு வெளியில் இருபது ஆட்களுக்கு மேல் பாதுகாத்துக்கொண்டிருந்தனர்.

அதில் பாதுகாத்துக்கொண்டிருந்த ஒருவன் மற்றவர்களிடம் ஏதோ சொல்லிவிட்டு அங்கிருந்த ஒரு படி மேலே ஏறி சென்றான். அந்த படியின் இறுதியில் ஒரு கதவு இருக்க அதை ஒரு முறை தட்டி விட்டு நின்றான். ஐந்து நிமிடம் கழித்து ஒருவன் அந்தக் கதவின் ஓட்டை வழியாகப் பார்த்து அவனை உறுதிப்படுத்திவிட்டுக் கதவைத் திறந்தான்.

அது ஒரு சிறிய ரூம் போல இருந்தது. அதை விட்டு வெளியே சென்றால் அங்கு பெரிய ஹால் ஒன்று நிறைய கதவுகளுடன் இருந்தது. அதில் சரியாக ஒரு கதவைத் திறக்க அங்கு ஒரு பாதை நேராக சென்றது. அதன் வழியே ஒரு பத்து நிமிடம் நடந்து  இன்னொரு கதவிடம் சென்றான். அதையும் முன்பு போலத் தட்ட ஒருவன் திறந்துவிட்டான். அங்கு ஒரு படி இருக்க அதில் ஏறி மேலே சென்றான். அங்கு சீலிங்கில் ஒரு இரும்பு டோர் ஒன்று இருக்க அதை அவனிடம் இருந்த சாவிகொண்டு திறந்து வெளியே சென்றான். அது ஏதோ பாத்ரூம் போல் இருந்தது. அதன் தரையில் இருந்த டைல்ஸைத் திறந்து வெளியே வந்தான் அவன்.

பின் அந்த பாத்ரூம் விட்டு வெளியே வந்தாவன் காதில் பீச்சின் சத்தம் நன்றாகக் கேட்டது. பின் அந்த பெரிய வீட்டை விட்டும் வெளியே வந்து காரில் ஏறி நேராக அசோகர் வீட்டுக்குச் சென்றான். அங்கு அவர் அவர் மகனுடன் உணவு உண்டு கொண்டு இருக்க, அவர் அருகே சென்று “ஐயா” என்று அழைக்க, அதற்கு அவர் திரும்பி ஒரு பார்வை பார்க்க, அதில் பயந்து அவர் பின் சென்று நின்று கொண்டான்.

அவர் உணவு உண்டு முடித்து மகிழனை சிரித்த முகத்துடன் அனுப்பி வைத்தவர். அவன் சென்ற மறு நிமிடம் அவர் முகம் சிரிப்பில் இருந்து கடுமைக்கு மாறி, தன் வெள்ளை வேட்டியை மடித்துக் கட்டியபடி உள்ளே வந்த வேகத்தில் அந்த அடியாள் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தார். அவர் அறைந்த வேகத்தில் அவர் கையில் அணிந்திருந்த கற்கள் பதித்த மோதிரம் அவன் கன்னத்தில் பட்டு கிழித்து ரத்தம் ஊற்றிக்கொண்டு இருந்தது. அதை எதையும் கவனிக்காத யசோகர் அவர் கையை உதறியபடி அங்கு நின்று இருந்த அவர் பி.ஏ.விடம் கண்ணைக் காட்ட, அவன் உள்ளே இருந்து இரண்டாயிரம் நோட்டுக்கட்டை எடுத்து வந்து அவனிடம் கொடுத்துவிட்டுச் சென்றான்.

அங்கு இருந்த சேரில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தபடி “ என் பையன் முன்னாடி வராதீங்கன்னு எத்தன வாட்டி சொல்றதுடா?  இது எதுவும் அவனுக்கு வேண்டாமுன்னு இருந்த நீங்களே காட்டிக் கொடுத்துடுவீங்க  போல “

 என்று பி.ஏ வை அருகில் வரச் சொல்லி அவன் பாக்கெட்டில் இருந்து சிகரெட் ஒன்றை எடுத்து பற்ற வைத்தபடி

“ ஆமா என்ன விஷயமா வந்தா? “ என்று புகையை இழுத்து ஊதியபடி கேட்டார்.

 “அது அய்யா, நீங்கள் சொன்ன ஆளைத் தூக்கி ஒரு நாள் ஆகிருச்சி . அவனை என்ன பண்ணலாம்ன்னு கேட்க வந்தேன் ஐயா “ என்று கை கட்டி பவ்வியமாக நின்றான்.

“அவனையா? “ என்று தலையில் தட்டி யோசித்துவிட்டு “ அவனை இன்னும் ஒரு நாள் வைச்சி நல்லா டார்ச்சர் பண்ணி அப்புறம் கொன்னுடு, என்ன தைரியம் இருந்தா என்னைப் பத்தி தப்பா பேசுவான்? சரி, பேசத்தான செய்றான்னு  விட்டா ஆதாரம் தேடி என் இடத்துக்கே வருவான. என்ன தைரியம் இருந்தா இந்த இடத்துக்கு வருவான்? கொலையிலிருந்து கடத்தல் வரை பண்ணி நான் கஷ்ட பட்டு இந்த இடத்துக்கு வந்தா அசால்ட்டா க்ளூ தேடி வருவானா? “ என்று பிடித்திருந்த சிகரெட்டை கீழே போட்டபடி

 “ கொன்னு உடம்பை வெளியே போட்டுறாதீங்கடா. எப்பவும் பண்ற மாதிரி ஆசிட் ரூமில் போட்டுறுங்க “ என்று எழுந்து சென்ற யசோகர் திரும்பிப் பார்த்து “ புதிதாக நிறைய பேர் கட்சியில் சேர்ந்திருக்காங்க. பார்த்து, நம்ம இடம் தெரியாம பார்த்துக்கொ “ என்று காரில் ஏறிச் சென்றுவிட்டார்.

இங்கு ஆஸ்பத்திரியில் தீபாவை அட்மிட் செய்து இரண்டு நாள் ஆகப் போகிறது. ரஞ்சனிடம் இருந்து ஒரு தகவலும் வரவில்லை. இந்த இரண்டு நாட்களாக தீபாவை அரை மயக்க நிலையிலேயே வைத்திருந்தனர். அப்படி இருந்தும் அடிக்கடி ஏதேதோ புலம்பியபடியே இருந்தாள். இந்த இரண்டு நாட்களும் புனிதா தீபாவை விட்டு நகரவில்லை. குமரனும் இவர்களுக்குத் துணையாக அங்கேயே இருந்தான். சுடர் வீட்டுக்கும் ஆஸ்பத்திரிக்கும் நடந்தபடி இருந்தாள். இவ்வாறு குமரன், சுடர், புனிதா மூவரும் ரூமில் தீபாவை பார்த்தபடி அமர்ந்திருக்கும் போது ரஞ்சன் அங்கு வந்து நின்றான்.

 வந்தவன் இவர்களைப் பார்த்து “நான் தீபா கிட்ட தனியா பேசணும்“ என்று நிற்க புனிதா “இல்ல தம்பி, அவ மயக்கத்துல இருக்கா. எப்போ முழிப்பான்னு தெரியாது“ என்று தயங்க

 “நான் டாக்டர் கிட்ட கேட்டுட்டுதான் வந்தேன் அத்தை. இன்னும் கொஞ்ச நேரத்துல முழிச்சிருவாளாம்“ என்று சொல்லிவிட்டு இவர்களையே பார்க்க குமரன் “இல்ல, அவ முழிச்சா டாக்டர் கிட்ட சொல்லச் சொன்னாங்க“

“இல்லை டாக்டர் கிட்ட கேட்டுட்டு தான் வந்த பேசலாம்ன்னு சொல்லிட்டாங்க “ இதைக் கேட்டும் குமரன் புனிதா தளங்கியே இருக்க சுடர் தான் இருவரையும் “வாங்க சித்தி வாங்க மாமா அவர் பேசட்டும் “ என்று அழைத்துச் சென்றாள்.

வெளியே சென்றதும் குமரன் “ என்ன சுடரம்மா” என்று பார்க்க “ மாமா நேத்தே அந்தக் கார்த்திக் சொன்னாங்க தான நம்ம தீபா ரஞ்சன் அவங்களோட ரிலேசன் பத்தி அப்புறம் தீபாவை பக்கத்துல இருந்து பார்த்துகிட்டு அந்தப் பிரச்சனையை கூட சால்வ் பண்றன்னு சொல்லிருக்காரு இதுக்கு மேல என்ன மாமா வேணும் “ என்று சுடர் கேட்க அதற்கு புனிதா “இருந்தாலும்மா அவங்க வீட்டுல ஒத்துக்கணுமே “

“ அது அவங்க பார்த்துப்பாங்க சித்தி நீங்க பயப்படாம இருங்க “ என்று சொல்லி இருவரையும் அமர வைத்தாள் சுடர்.

 ரூமில் ரஞ்சன் தீபாவை ஒரு முறை தலை முதல் கால் வரை பார்த்தான் இந்த இரு நாட்களிலேயே தீபா மெலிந்து போய் முகம் வெளிறி சோர்வுடன் காணப்பட்டாள். அப்படியே அவளை பார்த்தபடி அவள் அருகே வந்து அவள் ட்ரிப்ஸ் போடப்படாத கையை மிக மெதுவாக தன் இரு கைகளுக்குள் பொத்தி வைத்துக்கொண்டு அவள் முகத்தைப் பார்த்தபடி “ எனக்கு எப்படி எப்போ இருந்து உன்னை இவ்வளவு பிடிச்சதுன்னு எனக்கு தெரியல தீபா ஆனா இந்த ரெண்டு நாள்ல எனக்கு ஒன்னு மட்டும் நல்லா புரிஞ்சது அது உனக்கு ஒன்னுன்னா நான் நானா இருக்க மாட்டேன்னு மட்டும் தெளிவா புரிஞ்சுது தீபா ,நான் நானாவே இருக்கிறதும் இல்லாம போறதும் உன் கிட்ட தான் இருக்குடி ப்ளீஸ் எனக்காக நல்லபடியா திரும்பி வாடி “ என்று அவள் கைகளை அவன் கண்களில் வைத்து அழுத்திப் பிடித்துக்கொண்டான்.

அப்போது தீபா கை சிறிது அசைவு காட்ட கண்கள் திறந்து ரஞ்சன் பார்க்க, தீபா ரஞ்சனைத்தான் பார்த்து கொண்டு இருந்தாள். அவளைப் பார்த்த ரஞ்சன்

 “தீபா முழிச்சிட்டியா இப்போ எப்படி இருக்கு“ என்று அவள் கையை விட்டு அவள் அருகே செல்ல. உடனே தீபா ரஞ்சனின் கையைப் பிடித்தபடி தலையை மட்டும் வேண்டாம் என்பது போல ஆட்ட, ரஞ்சன்

 “தீபா இங்க பாரு நான் உன்கிட்ட பேசணும் கொஞ்சம் நான் சொல்றதைக் கேளு“ என்று சொல்ல சொல்ல தீபா தலையை ஆட்டியபடியே இருக்க ரஞ்சன் அவள் தாடையைப் பிடித்து அவனைப் பார்க்கச் செய்து

 “தீபா இங்க என்னைப் பாரு கொஞ்சம் உன்கிட்ட பேசணும் கொஞ்சம் நேரம் தான் அதுவரை அமைதியா இரு“ என்று தீபா கண்களையே பார்க்க தீபாவும் அவனைப் பார்த்தபடி “ம்ம்ம்“ என்று சொன்னாள். பின் ரஞ்சன் தீபாவை பொறுமையாக அமர வைத்து அவள் கையைப் பிடித்தபடி அவள் அருகே போட பட்ட சேரில் அமர்ந்தான். தீபா ரஞ்சன் பிடித்திருந்த கையையே பார்க்க அதை எதையும் கவனிக்காதபடி ரஞ்சன் பேசத் தொடங்கினான். “தீபா நான் பேசி முடிக்கிற வரை எமோஷனல ஆகக் கூடாது சரியா” என்று கேட்க அதற்கு பதில் சொல்லாமல் ரஞ்சன் பிடித்து இருந்த கைகளையே பார்த்திருந்த தீபாவின் முகத்தை அவனைப் பார்க்கும்படி செய்துவிட்டு “நீ ஆபிஸ்ல அந்தப் பொண்ணுங்க பேசினதைக் கேட்டியே அதைச் சொன்னது நீ நினைக்குற மாதிரி நளினி இல்லை உன் கூட வொர்க் பண்ற பாலா தான்“

அதை கேட்டு ஒரு நம்பாத பார்வை ஒன்று அவள் பார்க்க “நான் சொல்றத நம்பவே மாட்டியா தீபா“ என்று சொல்லியபடி தன் பாக்கெட்டில் இருந்த போனை எடுத்து அதில் வீடியோ ஒன்றை போட்டுக் அவளிடம் காட்டினான் ரஞ்சன். அதில் பாலா தலை கலைந்து கண்கள் சிவந்து முகம் அங்கே அங்கே வீங்கியபடி

“தீபா சாரி என் தப்பு தான் நீ என்ன கம்ப்ளெய்ன்ட் பண்ணதுக்கு பழி வாங்க தான் இப்படி பண்ணிட்டேன் சாரி தீபா சாரி என்ன“ என்று ஏதோ அவன் சொல்ல வருவதற்குக் முன்  அந்த வீடியோ முடிந்து இருந்தது. அதை பார்த்த தீபாவின் கண்களில் இருந்து கண்ணீர் வந்தபடி “அப்போ நளினி அதை பண்ணல அவளுக்கு நான் அங்க வேலை பார்க்குறது தெரியாதுல“ என்று அழுதுகொண்டே அவனை பார்த்து சிரித்த தீபாவின் கைகளைப் பிடித்தபடி “இனிமே உன்னை நீயே காயப்படுத்திக்க மாட்டல்ல தீபா“ என்று கலக்கத்துடன் கேட்டான்.

 அதற்கு தீபா தலையை ஆட்டியபடி “மாட்டேன்“ என்று குழந்தை போல் சொல்ல அதை பார்த்து “நளினியை பார்த்து பயப்படாத நான் இருக்கேன்” என்று சொல்ல தோன்றினாலும் டாக்டர் அவளை பற்றி தீபாவிடம் பேசக்கூடாது என்று சொன்ன காரணத்தினால் அனைத்தையும் அவன் மனதிலே வைத்தபடி தீபாவின் தலையை பிடித்து ஆட்டியபடி “நான் கிளம்புறேன் தீபா இன்னைக்கு உன்னை டிஸ்சார்ஜ் பண்ணிருவாங்க வீட்டுக்கு போயிட்டு கால் பண்ணு“ என்று எழுந்த ரஞ்சனின் விரலை பிடித்தபடி அவனை பார்க்க அதை பார்த்து சிரித்த ரஞ்சன் அவள் கன்னத்தை கிள்ள கைகளை எடுத்து அவள் முகம் நோக்கி செல்ல போனவன் பின் சுதாரித்து அவள் தலையை மீண்டும் ஆட்டியபடி “கால் பண்றேன் பார்த்துக்கோ“ என்று கிளம்பிவிட்டான்.

அறையை விட்டு வெளியே வந்த ரஞ்சன் அனைவரிடமும் சொல்லிவிட்டு கிளம்பியவன் நேராக சென்று நின்றது என்னமோ அவன் அம்மா அப்பா முன்னாடி தான்.