ிடியல் 47

சுடர் எப்போதும் போல அவள் கிளாஸ் முடிந்ததும் ஸ்டாப் ரூமில் வந்து அமர்ந்து நேரம் பார்த்தாள். மணி 11 என்றது. இந்த பீரியட் இவள் ஃப்ரீ தான். ஆகையால் அவள் போனை எடுத்து பார்க்கத் தொடங்கினாள். அப்போதுதான் குமரனிடம் இருந்து வந்த வாய்ஸ் மெசேஜ் பார்த்தவள் அதைத் திறந்து தன் ஹெட்செட் வழியே கேட்கத் தொடங்கினாள்.

அதில் குமரன் சொல்லியிருப்பது “தீபாவ ஆஸ்பத்திரியில அட்மிட் பண்ணியிருக்காங்க. நான் அங்க போயிட்டு ஆஸ்பத்திரி பேர் சொல்றேன். நீ ஃப்ரீ ஆகிட்டு கால் பண்ணு“ என்று பதட்டத்துடன் பேசியிருந்தான். அதன் கீழ்  “குட் லைஃப் ஆஸ்பத்திரி“ என்று சிறிது நேரம் கழித்து அனுப்பியிருந்தான்.

 இதைப் பார்த்து பயந்த சுடர் தீபாவிற்கு என்னமோ என்று வேகமாக அங்கிருந்து யாரிடமும் சொல்லாமல் கீழே இறங்கி கேட் நோக்கி ஓடிச் சென்றாள். திடீரென்று  நினைவு வந்தவளாக “வேந்தன்“ என்று திரும்ப அங்கு தூரத்தில் ஆதி இவளைப் பார்த்தபடி வர அவனிடம் ஓடி சென்று மூச்சு வாங்க “நிலா… நிலாவை ஆஸ்பத்திரியில சேர்த்திருக்காங்க. நான்… வேந்தனைக் கூட்டிட்டுப் போறேன் சார்“ என்று பேச முடியாமல் பேச “பொறுமையா சுடர். மூச்சு வாங்குது பாரு.“ என்று சொல்லிய ஆதியிடம் “இல்லை… நான் கிளம்புறேன்“ என்று வேந்தனின் கிளாஸை நோக்கிச் சென்றவளை நிறுத்தி தன் போனை எடுத்து பியூனை அழைத்து வேந்தனைப் பள்ளி முடிந்ததும் தன் ஆபீஸ் ரூமில் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு தன் காரில் சுடரை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிச் சென்றான்.

அங்கு ரஞ்சன், குமரன், புனிதா, பாக்கியா, கார்த்திக் என்று அனைவரும் அறைக்கு வெளியே டாக்டருக்காகப் பதற்றத்தோடு காத்திருந்தனர். அப்போது ஒரு 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் டாக்டர் கோட்டுடன் உள்ளே வந்தார்,  வந்தவர் இவர்களை ஒரு கூர்ந்து பார்த்துவிட்டு தீபாவின் அறைக்குள் சென்றார்.

 அவர் சென்று ஒரு 5 நிமிடங்களில் ஒரு செவிலியர் வந்து “தீபாவுக்கு என்ன ஆச்சு? எப்படி மயங்கினாங்கன்னு டாக்டர் கேட்கிறார். தெரிஞ்சவுங்க உள்ளே வந்து  டாக்டர் கிட்ட சொல்லுங்க” என்று சொல்லிவிட்டுச் செல்ல ரஞ்சன் உள்ளே நுழைந்தான். மனது கேட்காமல் புனிதாவும் அவனுடன் உள்ளே சென்றாள்.

உள்ளே டாக்டர் தீபாவிற்கு ட்ரிப்ஸ் ஏற்றச் சொன்னபடி இவர்களைப் பார்த்து வந்தவர் ரஞ்சனிடம் கை நீட்டி “நீங்க ரஞ்சன் தானே?” என்று கேட்க அதற்கு அவனும் “ஆமாம் டாக்டர். உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று கேள்வியாகப் பார்க்க, அதற்கு அவர் “தீபா சொல்லிருக்காங்க ” என்று சொல்லிவிட்டுப் புனிதாவைப் பார்க்க, அவர் “நான் அவ சித்தி, புனிதா” என்று சொல்ல அதற்கு அவர் தலை ஆட்டியபடி “தீபா நல்லாதானே  இருந்தாங்க? ரொம்ப இம்ப்ரூவ்மென்ட் காட்டினாங்களே இந்த வாட்டி அப்புறம் எப்படி இப்படி ஆச்சு?”

 “அது டாக்டர், திடீர்ன்னு  கழுத்தைப் பிடிச்சிட்டு மயங்கி விழுந்துட்டா எழுப்பியும் எந்தகரிக்கள அது அப்பறம் தான் ஆஸ்பத்திரியில சேர்த்தோம். அங்கே நினைவு வந்ததும்  இன்ஜெக்ஷன வச்சி அவ முகத்தை அவளே குத்திக்க  போன அப்புறம் டாக்டர் வந்து ஊசி போட்டு இங்கே கூட்டிட்டு வரச் சொன்னாங்க.”

“அப்போ தீபாவுக்கு என்னன்னு உங்க யாருக்கும் இன்னும் தெரியாது“ என்று சொன்னபடி நர்ஸிடம் ஏதோ ஊசியின் பெயரைச் சொல்ல, அதை அந்த நர்சும் எடுத்து ட்ரிப்ஸில் இன்ஜெக்ட் செய்தார். ரஞ்சன் அதற்கு “அதை தெரிஞ்சுக்க தான் டாக்டர் உங்ககிட்ட வந்திருக்கோம்“

 “இப்போ கூட தீபா ஓட நடவடிக்கை பார்த்து வரல“ என்று சலித்த டாக்டரை பார்த்து புனிதா “எங்க பொண்ணுக்கு என்ன ஆச்சு டாக்டர்? நீங்க பேசுறத பார்த்தா பயமா இருக்கு. அவளுக்கு ஏதாவது பெரிய பிரச்சனையா?“ என்று கலங்கிப் போய்க் கேட்பவரிடம், “நீங்க ஏன் இப்போ வந்து கேட்கிறீங்க?” என்று கேட்கத்தான் முடியுமா என்று எண்ணிய டாக்டர்,

 “தீபாவுக்கு  ஸ்.ஏ.டி இருக்கு. அதாவது சோசியல் அனக்சிட்டி டிசார்டர் இருக்கு. இது நார்மலா எல்லார் கிட்டயும் இருக்கிறதுதான். ஆனா தீபா கேஸ்ல அவ இதனால ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கா“ என்று சொல்லிமுடிக்க, தீபாவின் சத்தம் முனங்கலாக “அம்மா… அம்மா“ வெளியே கேட்டது. அதைப் பார்த்து பயந்த ரஞ்சன், “டாக்டர்! அவ முழிச்சா அவளை அவளே காயப்படுத்திப்பா“ என்று பதற, டாக்டர், “அப்படி எதுவும் ஆகாது ரஞ்சன். நான் கொடுத்திருக்க மருந்துனால அவளால பேச மட்டும்தான் முடியும்“ என்று அவர் சொன்னதும் தான் மூச்சே வந்தது.

பின் மீண்டும் தீபா அவள் கைகளை கஷ்டப்பட்டு உயர்த்தி புனிதாவை நோக்கி நீட்டி, “அம்மா… வந்துட்டியா… அம்மா“ என்று அழைப்பதைப் பார்த்து புனிதா கண் கலங்க, இதைப் பார்த்த டாக்டர் புனிதாவிடம், “நீங்க போய் அவ கிட்ட என்ன ஆச்சுன்னு கேளுங்க“ என்று அனுப்பி வைக்க அதைக் கேட்டு புனிதாவும் அவள் அருகே சென்றார். தீபா தன் அருகே கைவைத்து காட்டி, “அம்மா வாம்மா…” என்று புனிதாவை அழைக்க புனிதாவும் அவள் அருகே அமர்ந்தாள். புனிதா அமர்ந்ததும் தீபா கஷ்டப்பட்டு அவள் தலையை எடுத்து புனிதாவின் மடியில் வைத்தபடி, “உனக்கு எங்களைவிட அப்பா தான் முக்கியம்லமா? அதான் அப்பா வர மாட்டாங்கனு தெரிஞ்சதும் எங்களை விட்டு போயிடல“ என்று குழறலாக பேச, அதற்கு புனிதா, “இல்லை நிலா, அம்மாக்கு உன்னையும் பிடிக்கும்டா“

“ஆமாம் எனக்கு தெரியும் உனக்கு என்னையும் பிடிக்கும் அதே சமயம் அப்பாவை ரொம்ப பிடிக்கும்னு போமா நீ இல்லாமல் நானு மாமா சுடர்லாம் எவ்வளவு கஷ்டப்பட்டோம் தெரியுமா மாமா உன் ஞாபகம் வரும்போதெல்லாம் அவங்க ரூமுக்குள்ளே போய் எப்படி அழுவாங்க தெரியுமா அப்புறம் சுடர் பாவம் நீ இருந்திருந்தா அவளை அவன் அந்த மகிழன் ஏமாத்தியிருப்பானா அப்புறம் நானும் அந்த நளினிக்கு பயந்து யார் கூடவும் பேசாம காலேஜ்ல வீட்லனு தனியா இருந்திருப்பேனா “ என்று கண்ணீர் விட அதை கைகளால் புனிதா துடைத்தபடி

“ நீ ஏன் நிலா போயும் போயும் அந்த நளினியை பார்த்து பயந்த “

“ஏன் உனக்கு தெரியாதா அம்மா நம்ம தெருவில உன்னை பத்தி தப்பு தப்பா சொன்ன மாதிரி காலேஜ்லயும் சொல்லுவேன்னு சொன்னா அப்படி சொல்லாதேன்னு சொன்னதுக்கு தான் என்னை யார் கிட்டயும் பேசக்கூடாதுன்னு சொன்னா நானும் பேசல்லை”

“ இதை மாமா கிட்ட சொல்லியிருக்கலாமே ம்மா அவன் பாத்துபானே “

“அது மாமா கிட்ட சொல்லக்கூடாதுன்னு மிரட்டினா அத மாமா கிட்டயும் சொல்லலை “

“சரி வீடு மாறிப் போன பிறகாவது சொல்லியிருக்கலாமே”

“இல்லம்மா, வீடு மாறிட்ட பிறகு மாமா திருப்பி அதே காலேஜ்லதான் சேர்த்தாங்க அதுவும் ஆஸ்டல்ல அங்க தான் மாமா இல்லையே யார் கிட்ட சொல்ல. எங்க அவ ஃபிரண்ட்ஸ் என்ன  கண்டுபிடிச்சிருவாங்களோனு பயம். அதான்மா, அப்பவும் எதுவும் பண்ணமுடியாம  எங்க போனாலும் மாஸ்க் போட்டு போக ஆரம்பிச்சேன். வெளிய அதிகமா போக மாட்டேன். ஆனா அப்படி இருந்தும் அவ என்ன கண்டுபிடிச்சிட்டா போலம்மா. “ அதை கேட்டு அனைவரும் குழப்பமாக பார்க்க

“என்ன சொல்ற நிலா?”

 “ம்ம்ம் இன்னைக்கு லிஃப்ட் கிட்ட ரெண்டு பொண்ணுங்க என்ன கார்த்திக் ரஞ்சனை தப்பா பேசிட்டு இருந்தாங்க. இதை இப்படி பேசச் சொல்லி நளினிதான் சொல்லியிருப்பா. அதான் பயமா இருக்கும்மா. என்னால பாரு கார்த்திக் ரஞ்சனுக்குதான் கஷ்டம்.” என்று ஏதோ முனங்கிவிட்டு, “ரஞ்சன் தெரியுமா ம்மா உனக்கு? அவன் ரொம்ப நல்ல போலீஸ். எனக்கு ரொம்ப பிடிக்கும் அவன. அன அதே சமயம் பயமா இருக்கு ம்மா.” இதை கேட்டு ரஞ்சனும் என்ன பயம் என் கிட்ட தீபாக்கு என்று பார்க்க அதையே புனிதாவும் கேட்டால்

 “என்ன பயம் நிலா?”

 “அது அவனுக்கு என்ன ரோம்ப பிடிக்கும்னு எனக்கு தெரியும் . ஆனா எங்க இவனும் அப்பா மாதிரி என்ன விட்டுப் போய்விடுவானோன்னு பயமா இருக்கு, அப்பாவுக்கும் உன்னை ரொம்ப பிடிக்கும் இருந்தும் அப்பா உன்னை விட்டுப் போய்டாங்க தானே? அதே மாதிரி அவனும் போய்ட்டான்னா? எனக்கு எல்லாம் பயமா இருக்கு எங்க அந்த நளினியும் திருப்பி வந்துவிடுவாளோனு நான் வேணா என் முகத்தை மாத்திக்கவா எதவது பண்ணி அப்படி பண்ணா அவளுக்கு என்ன தெரியாதுதானே?” அதை கேட்டு பதறிய புனிதா

“நிலா அவளைப் பார்த்து பயப்படாத ம்மா. அவளால ஒன்றும் பண்ண முடியாது. அம்மா நான் பார்த்துக்கிறேன் .“

“போ, பொய் சொல்லாதேம்மா. நீ எங்கே என் கூட இருக்க? என்னைப் பார்த்துக்க உன்னால என்னை எப்படி பாத்துக்க முடியும்” என்று சிறுது அமைதி ஆகி பின் தீபா “ அம்மா நீ  இந்த பாக்கிய அக்கா பார்த்தியா? அவங்க பொண்ணை அவங்க ஹஸ்பண்ட் இல்லனாலும்  எப்படி பார்த்துக்கிறாங்க தெரியுமா . நீ மட்டும் ஏன்ம்மா எங்களை விட்டு போன, ஏன் விட்டுப் போனா?“ என்று தீபா தேம்பி அழுவதைப் பார்த்து புனிதா அவளை அணைத்தபடி

 “இந்த அம்மா எங்கேயும் போக மாட்டேன்டா. நான் இருக்கிறேன். நான் பார்த்துக்கிறேன்டா. அழாத! ம்மா“ என்று சொல்லியும் தீபா மீண்டும் மீண்டும் “ஏன் இரண்டு பேரும் விட்டுப் போனீங்க?“ என்று அதையே சொல்லியபடி இருக்க டாக்டர் வேறு சில மருந்துகளை அவளுக்குச் செலுத்த அவள் மீண்டும் மயக்கத்திற்குச் சென்றாள்.

புனிதா, தீபா மயக்கத்திற்கு சென்ற பிறகும் அவளை விட்டு நகராமல் அங்கேயே அமர்ந்து விட்டார். தீபா பேசியதைக் கேட்டு ரஞ்சன் சிலையென நின்று விட்டான். இத்தனை நாள் அவள் பட்ட கஷ்டம், இப்போது இருக்கும் பயம் என்று அனைத்தையும் கேட்ட ரஞ்சனுக்கு, தீபாவை கட்டிப் பிடித்தபடி “யார் உன் கூட இல்லனாலும் நான் இருக்கேன்டி உனக்கு, உன்னை விட்டு எப்பவும் போக மாட்டேன்“ என்று சொல்லி அவளை தன் கைகளுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் போல் இருந்தது. இதையெல்லாம் நினைத்துப் பின் இந்நிலைக்கு தீபாவை கொண்டு வந்த நளினியைக் கொன்றுவிடும் ஆத்திரம் வர, அதை அடக்கியபடி கண்கள் சிவக்க நின்று இருந்தான்.

 அப்போது ரஞ்சனை வெளியே அழைத்து பேச டாக்டர் அவனைக் கூப்பிடப் போக அவன் நிற்கும் நிலையைப் பார்த்து டாக்டரே ஒரு நிமிடம் அவனைக் கூப்பிட யோசித்து பின் “ரஞ்சன்“ என்று அழைத்த மறுநொடி முகத்தை இயல்புக்கு கொண்டு வந்து “சொல்லுங்க டாக்டர்“ என்று சொல்லவும் டாக்டரே இப்போ கோபமா இருந்தவன் இவனா என்று பார்த்து விட்டு “ரூமுக்கு வாங்க பேசணும்“ என்று சொல்லிவிட்டு சென்றார். இங்கு வெளியே நின்றிருந்த சுடர், குமரன் இருவரும் இடிந்து போய் அமர்ந்து இருப்பதைப் பார்த்த ஆதி இருவரையும் ஏதேதோ சொல்லி தேற்றியபடி இருந்தான். அப்போது ரூமில் இருந்து வந்த டாக்டர் குமரன் மற்றும் சுடரையும் தன் ரூமுக்கு வரும்படி அழைத்துச் சென்றார்.