ிடியல் 45

நானும் அவளும் சேர்ந்துதான் ட்ரெய்னிங் போனோம். அப்படியே அவ எனக்கு ஹெல்ப் பண்றதும் நான் அவளுக்கு ஹெல்ப் பண்றதும்னு ஃப்ரெண்ட்ஸ் ஆனோம். அவள் சென்னைக்குப் புதுசு சோ என்கிட்ட ஃப்ரீயா இருக்கும்போது ஊரைச் சத்திக் காட்டுகிறாயான்னு  கேட்டாள்.

நானும் ஓகே சொல்ல அப்படியே ஸ்டாட் ஆனது தான் எல்லாம் அவள் தான் பஸ்ட் வந்து லவ் சொன்னாள். நானும் அப்போ சிங்கிளா தான் இருந்தேன். சோ ஓகே சொல்லிவிட்டேன். ஒரு வருஷம் எல்லாம் நல்லா தான் போச்சு. என்று ஆதி நிறுத்த, சுடர் ஆர்வமாக “அப்புறம் என்ன ஆச்சு?” எனக் கன்னத்தில் கை வைத்தபடி கேட்க, சிரித்தபடி ஆதி தொடர்ந்தான்.

 “அப்புறம் எங்க ப்ராஜெக்ட் முடிஞ்சி என்னையும் அவளையும் வேற வேற டீம்கு அசைன் பண்ணிடாங்க. அந்த டீமுக்குப் போனதிலிருந்து அவ கிட்ட இருந்து வரும் மெசேஜ், கால் எல்லாம் கம்மி ஆச்சு. நானும் வொர்க் பிஸின்னு விட்டேன்.

அப்புறம் ஒரு நாள் தனியா பேசணும்னு பீச் கூட்டிட்டு வந்தாள். இங்கே வந்து லவ் பிரேக்கப் பண்ணிக்கலாம், இது வொர்க்கவுட் ஆகாதுன்னு ஈஸியா சொல்றா. நானும் என் கோபத்தைக் கட்டுப்படுத்திட்டு அவ கிட்ட கேட்டேன் ஏன் என்ன ரீசன்னு. அதுக்கு அவ ஒரு ரீசன் சொன்னா பாரு, அதுதான் இன்னும் என்னால் ஜீரணிக்க முடியவில்லை.”

“அப்படி என்ன சொன்னாங்க?“

 “எங்க வீட்டுல சீக்கிரம் மேரேஜ் பண்ணிக்க சொல்றாங்க. நீ இப்போதான் வேலைக்கு போக ஆரம்பிச்சிருக்க. எங்க வீட்டுல செட்டில் ஆன பையன்தான் வேணும்னு சொல்றாங்க. சோ, இது செட் ஆகாது, பிரிஞ்சுறலாம்னு சொல்லிட்டா.“ “இல்ல, எனக்கு புரியல. நீங்க ஆல்ரெடி செட்டில் ஆனா பையன் தானே?“

 “ஆமா, ஆனா அது அவளுக்குத் தெரியாதே.“ “ஏன் சொல்லியிருக்கலாமே? நீங்க பிரிஞ்சிருக்க மாட்டீங்களே?“

“நானே நல்லவேளை அவகிட்ட சொல்லலையேன்னு சந்தோஷப்பட்டா. நீ வேற சுடர்.“

“சந்தோஷப்பட்டீங்களா?“

 “ஆமா, என்னைப் பத்தி அவகிட்ட சொல்லலன்னு சந்தோஷம்தான் பட்டேன்.“ இதைக் கேட்டு புரியாமல் பார்த்த சுடரைப் பார்த்து,

 “மதி பிரேக் அப் சொன்ன அப்போ எனக்கு கோபம் வந்தாலும், அப்போ நான் எதுவும் பேசல. சரி, கொஞ்ச நாள்ல அவளே என்ன மிஸ் பண்ணிட்டு வருவான்னு இருந்தேன். அந்த டைம் ஒரு ஒன் மந்த் என்னால ஆபீஸ்க்கு போக முடியல. ஒன் மந்த் கழிச்சி ரிசைன் பண்ண போனேன்.“

“ஏன் ரிசைன் பண்ண போனீங்க?“

“அது…“ என்று ஆதி முகம் சோர்ந்து, “எங்க அப்பா ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டாங்க. அதான் வேலையை கண்டினியூ பண்ண முடியல. ஸ்கூல் தானிய பாத்துக்கவே டைம் சரியா இருந்துச்சு.“

“ஓ சாரி சார்.“ என்று குறள் உள்ளே போக சொன்னால் அதற்கு ஆதி

“பரவாயில்லை சுடர். எங்க அப்பா அம்மா கூட இல்லைனாலும் அவங்க பிளஸ்ஸிங்ஸ் இருக்கும்.“ என்று சிரித்த ஆதியை கண் எடுக்காமல் பார்த்த சுடரைப் பார்த்து, “சுடர், மேல சொல்லட்டா?“ என்று கேட்க அதற்கு சுடரும் “ம்ம்ம்“ என்று தலை அசைத்தாள்

“சரி, ரிசைன் பண்ணிட்டு போலாம்னு போன இடத்துல இந்த மதி பத்திரிக்கையோட நிக்கிறா.“

“என்னது ஒரு மாசத்துல மேரேஜ் ஃபிக்ஸ் ஆயிடுச்சா?”

 “இதுக்கே இப்படி ஷாக் ஆன பையன் யாருன்னு கேட்டா அவ்வளவுதான் போலையே.” “அப்படி யாரு கூட மேரேஜ் பண்ணிக்கப் போனாங்க?”

“அவ அப்போ வொர்க் பண்ற டீம் ஹெட் கூட, அதுவும் லவ் மேரேஜ்.”

இதை கேட்டு சுடர் “ஆ…” என்று வாயைப் பிளக்க, அவள் வாயை மூடியபடி

“அவ அந்த டீம்க்கு மூவ் ஆகியே ஒரு சிக்ஸ் மன்த் இருக்கும். அதுவும் இல்லாம என் கூட ஒரு டூ மன்த்தா தான் ஒழுங்கா பேசல. அன அவ அப்போவே சொன்னா நம்ம லவ் பண்றது யாருக்கும் தெரியவேண்டாம்னு எதுக்குன்னு அப்போ தெரியல இப்போ தெரியுது.”

 “அடி பாவி! இப்படி எல்லாம் இருப்பாங்களா என்ன?”

 “இதுக்கு மேலயும் இருப்பாங்க. சுடர் மனிஷங்க சோ இப்போ இதுல இருந்து என்ன சொல்ல வரேன்னா, நானும் அவளும் ஒன் இயர் லவ் பண்ணிருப்போம். அந்த டைம் நாங்க போகாத இடமே இல்லை. இந்த பீச்சுக்கே நிறைய டைம் வந்திருக்கேன். சோ நீ சொன்னபடி பார்த்தா நான் எங்கேயுமே அவள கூட்டி போன இடத்துக்கு போக முடியாது அப்படி எங்கயும் போகமா இருக்குறது ரைட்டா.” என்று சிரித்துக்கொண்டே வேந்தனை பார்த்தபடி

“இத பாரு சுடர், அவளை எனக்கு இப்போதான் தெரியும். ஆனா இந்த பீச் எனக்கு அவளைப் பிடிக்குறதுக்கு முன்னாடியே பிடிக்கும். இப்போ அவளைப் பிடிக்கல, அவளை மறக்கணும்னு எனக்குப் பிடிச்ச இந்த பீச்சை தியாகம் பண்ண முடியுமா? கசப்பான ஞாபகம் தான். ஆனா அதை மறக்கணும்னு யோசிக்காம அது மேலயே அழகான நினைவுகளை எழுத ட்ரை பண்ணனும். நீ சொன்னியே பீச்னா அவன் ஞாபகம் வருதுன்னு, இனிமே அவன் ஞாபகம் வராது. என் லவ் ஸ்டோரிதான் வரும். நீ வேணா பாரு.”

ஆதி சொன்னதைக் கேட்டு சிரித்த சுடர் “நல்லா பேசறீங்க சார் “

 “பிரின்சிப்பல் ஆச்சே “ ஆதியின் கதை கேட்ட பிறகு சுடர் கொஞ்சம் இலகுவாக இருந்தது போல ஆதிக்குத் தோன்றியது. பின் மூவரும் இரவு உணவை உண்டுவிட்டு குமரனுக்கு உணவைப் பார்சலில் வாங்கிக்கொண்டு வீட்டுக்குச் சென்றனர். செல்லும் வழியில் வேந்தன் உறங்கிவிட்டான். சுடர் வீடு வந்ததும் ஆதியே வேந்தனைத் தூக்கிக் குமரன் அறையில் படுக்க வைத்துவிட்டுச் சென்றான். ஆதி சென்றவுடன் சுடர் நேராக குமரன் இடம் வந்து “உங்க கூட வேலை பார்த்த மதி போட்டோ இருக்கா மாமா “

“எந்த மதிம்மா “

“அதான் இந்த ஆதி சாரோட எக்ஸ் லவ்வர் அவர் கூட வேலைக்கு ஜாயின் பண்ணவங்க” என்று சுடர் சொன்னதை கேட்டு குழம்பிய குமரன்  “இல்லையேம்மா  ““

ஓ.. இல்லையா, சரி விடுங்க சும்மா பார்க்கணும்னு கேட்டேன், குட் நைட் மாமா “ சென்று சென்ற சுடரைப் பார்த்து தலையைச் சொறிந்த குமரன் உடனே அவன் அறைக்குச் சென்று கதவைத் தாழிட்டு ஆதிக்கு போன் செய்தான். அதை ஒரு ரிங்கில் எடுத்த ஆதி “ சொல்லுங்க அண்ணா இப்ப தானே பார்த்தீங்க அதுக்குள்ள கால் பண்ணிருக்கீங்க “ என்று கார் ஓட்டிக்கொண்டே பேசினான் ஆதி.

“டேய் சுடர் கிட்ட என்ன சொல்லி வச்சிருக்க அவ எதேதோ உளறுறா. ஏதோ மதி உன்னோட எக்ஸ் அவளைப் பார்க்கணும்னு கேட்கிறா.” “அதனே இப்பவாவது என்ன பத்தி யோசிப்பான்னு பார்த்தேன். என் எக்ஸ் பிக்க போய் கேட்கிறா. என்ன அக்கா பொண்ணோ போங்க.”

“ஆதி என்ன உளறுறா நீ என்னைக்குடா லவ் பண்ண?” அதை கேட்டு சிரித்த ஆதி,

 “அச்சோ அண்ணா இத சுடர் கிட்ட சொல்லிட்டீங்களா?”

 “இல்லை, சொல்லவில்லைடா. ஏன் அப்படி சொன்னா? யார் அந்த மதி?” என்று கேட்க,

 “அது நம்ம நகுல் இருக்கானே, அவன் லவ் பண்ண பொண்ணு பேர் ஞாபகம் இருக்கா ” “ம்ம்ம்.. ஆமா, அவ பேரு மதி தானே?”

“ஆமா, அவன் லவ் ஸ்டோரியைத்தான் கொஞ்சம் மாத்தி என் ஸ்டோரி மாதிரி சொல்லி வச்சிருக்க.”

 “ஏன்டா உனக்கு இந்த தேவையில்லாத வேலை?”

“அப்புறம் என்ன அண்ணா? நான் பக்கத்துல இருக்கேன். என்ன லவ்வா பார்க்கலனாலும் பரவாயில்லை. என்னமோ தியாக செம்மலை பார்க்கிற மாதிரி பார்த்து வச்சா, அதான் இப்படி சொன்னேன். நானும் உன்ன மாதிரி லவ் ஃபெயிலியர் தானு.”

 “பின்னாடி ஏதாவது பிரச்சனை ஆகிடப் போதுடா.”

“வாயை வைக்காதீங்க. எதுவும் ஆகாது. அப்படியே மீறி ஆனாலும் கால்ல  விழுந்திட வேண்டியதுதான்.”

 “என்னமோ போடா. ஆமா, இப்படி சொன்ன பிறகு ஆவது எதவது இப்புருமெண்ட் ஆச்சா ”

 “அதுக்கு அப்புறம்தான் அவ என்கூட நார்மலாவே பேசினா அண்ணா.”

 “சரி, என்னமோ நல்லா இருந்தா சரி. ஆனா உனக்கு வேற ஸ்டோரியே கிடைக்கலையாடா? அந்த மதி பெயரைப் போய் சொல்லி வச்சிருக்க.” “நானா ஏதாவது சொல்லப் போய் அவ நம்பல்லை ன்னா, அதுவும் இல்லாம எனக்குப் பொண்ணுங்க மேல வெறுபு வர காரணமே அவ தான். அதான் அவ கதையே சொல்லிட்டேன்.”

“ஆமாம் அவ என்ன பொண்ணோ இப்படியும் பொண்ணுங்க இருக்கத்தான் செய்றாங்க அவளைக் கட்டின சத்யன்தான் பாவம் “

“அதான் எப்பவோ டைவோர்ஸ் வாங்கிட்டானே அப்புறம் என்னன்னா “

“என்னது டைவோர்ஸா இது எப்போ “

“அது எப்பவ இருந்தா நமக்கு என்ன அவ கதை நமக்கு எதுக்கு அதை பேசவே கடுப்பா இருக்கு வேற பேசுங்க ன்னா“

“அதுவும் சரிதான் சரி நீ பார்த்து வீட்டுக்குப் போடா “ என்று வைத்துவிட ஆதியும் சுடரின் நினைவுகளோடு அவன் வீட்டை நோக்கிச் சென்றான்.

மறுநாள் அழகாக விடிய சுடர் எப்போதும்போல் பள்ளிக்குக் கிளம்பக் கண்ணாடி முன் நின்று. அவள் முகம் பார்த்து கொண்டிருந்தாள் பின் என்ன நினைத்தாளோ திடீர் என்று அவள் கண்களுக்கு மை வைத்துக்கொண்டு பள்ளிக்குக் கிளம்பினாள். அன்று பள்ளியில் அவள் நுழைவதை பார்த்த ஆதி தன் கண்களை விரித்துப் பின் சுருக்கி இதழில் பூத்த சிரிப்புடன் அவளைப் பார்த்து ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்கிவிட்டுத் தன் தலையைச் சரி என்பதுபோல ஆட்டிச் சென்றான். இதைப் பார்த்த சுடருக்கும் முகம் முழுக்க அரும்பிய புன்னகையுடன் சென்றாள்.

 சுடர் ஆதி ஒரு நாள் முழுவதும் ஒன்றாக வெளியே சென்றது மகிழனுக்குத் தெரியவர கோபத்தில் அவன் கெஸ்ட் ஹவுஸில் ஹாலில் இருந்த அனைத்துப் பொருட்களையும் போட்டு உடைத்தபடி “சுடர்….. “ என்று கத்தியபடி தரையில் அமர்ந்தான். பின் நினைவு வந்தவனாக சரவணனைப் போன் செய்து அழைத்தான். அவனும் சிறிது நேரத்தில் அங்கு வந்து சேர்ந்தான். அங்கு வந்த சரவணன் கண்டது ஹாலில் உடைந்த பொருட்களுக்கு நடுவே அமர்ந்திருந்த மகிழனை தான். “என்னடா மகி சின்ன தம்பி குஷ்பு மாதிரி உட்கார்ந்துட்டு இருக்க “

“டேய் சரா செம கடுப்புல இருக்கேன் அமைதியா இரு “

“ கோர்ட்ல இருந்தவனை அவசரமா கூப்பிட்டது அமைதியா இருக்குறதுக்காடா “

“சரா அந்த ஆதி பாருடா சுடரை வெளியே கூட்டிட்டு போயிருக்கான் “ என்று குழந்தை போல முகத்தை வைத்துப் பேசுபவனைப் பார்க்கப் பாவமாகத்தான் இருந்தது சரவணனுக்கு. “யார் மச்சான் ஆதி அவன் எதுக்கு சுடரை கூட்டிட்டு போகணும் “

“அது அந்த ஸ்கூல் பிரின்சிபல்டா அன்னைக்கு சுடர் வீட்டுல கூட இருந்தானே”

“ஆ…. அவனா… சரி அவன் ஏன் சுடரை கூட்டிட்டு போகணும் “

“தெரியல ஆனா டவுட்டா இருக்கு மச்சான் எங்க சுடரையும் என்னையும் பிரிச்சிடுவானோன்னு “

“ அவன் ஏன் புதுசா போய் பிரிக்கணும் நீங்க ஆல்ரெடி பிரிஞ்சுதான் இருக்கீங்க “

“சரா… ஏதாவது பண்ணுடா “

“எதுவுமே குடிக்காம யோசிக்க சொன்ன என் பிரைன் எப்படி வொர்க் ஆகும் “

“ சுடர் கூட என்னை சேர்த்து மட்டும் வை உன்னை என் பிஸ்னஸ் பார்ட்னர் ஆக்கிடுறேன்டா “ என்று சொன்னதும் சரவணன் முகம் பிரகாசிக்க “ சரி நான் சுடர் கிட்ட பேசி பார்க்கிறேன் “ என்று சுடருக்கு அழைத்தான். சுடர் அப்போதுதான் அவள் கிளாஸ் முடிந்து ஸ்டாப் ரூமுக்கு வந்தாள். அப்போது அவள் போன் ஒலிக்க யார் என்று பார்த்தால் அது புது நம்பர். அதை பார்த்துவிட்டு யோசித்தபடி போனை எடுக்க “ ஹலோ சுடரா ? நான் சரவணன் லாயர் பேசுறேன் “

“சரவணன்” என்று சுடர் யோசிக்க

 “அது அன்னைக்கு மகிழன் கூட உங்க வீட்டுக்கு வந்தேனே” அதை கேட்டு கோபமாக சுடர்

“நீங்க எதுக்கு எனக்கு கால் பண்ணி இருக்கீங்க?” என்று குரலைக் கடினமாக்கிப் பேச

“அது சுடர் மகிழன் பத்தி கொஞ்சம் பேசணும்.” “அவனைப் பத்தி பேச ஒன்னுமில்லை நீங்க போனை வைங்க.”

 “சுடர் போனை வச்சிடாதீங்க ப்ளீஸ்” என்ற சரவணன் கத்தவும் சுடர் “என்ன வேணும் உங்களுக்கு? முடிஞ்சி போனதைப் பத்தி என்ன பேசப் போறீங்க?”

“ஒரே ஒரு வாட்டி நேர்ல வந்து பேசுங்க சுடர் ப்ளீஸ். இதே விஷயத்தை நீங்க நேர்ல வந்து சொல்லிட்டுப் போங்களேன் ப்ளீஸ்.” என்று கேஞ்சவும் யோசித்த சுடர் “சரி நான் வீக் எண்ட் தான் வர முடியும்.” “சரி வீக் எண்ட் ஓகே. எங்கன்னு நான் மெசேஜ் பண்ணுகிறேன்.” போனை வைத்த சரவணன் மகிழனைப் பார்த்து தன் கட்டை விரலைத் தூக்கிக் காட்டியபடி சிரித்தான்.