சுடர் வேந்தனைக் குளிப்பாட்டி உடை அணிவித்துக் கொண்டிருந்தாள். அப்போது காலிங் பெல் சத்தம் கேட்டு குமரன் கதவைத் திறந்து பார்க்க, சுடரை அழைத்துச் செல்ல ஆதிதான் வந்திருந்தான். அவனை அழைத்து சோபாவில் அமர வைத்து காப்பி கொடுத்தபடி குமரன் பேசிக்கொண்டிருக்க, இவர்கள் பேசும் சத்தத்தில் வந்திருப்பது ஆதி என்று உறுதி செய்தபடி அமைதியாக வேந்தனைக் கிளப்பியபடி இருந்தாள்.
அப்போது வேந்தன் தன் பிஞ்சுக் கைகளால் சுடர் முகம் பற்றி அவனைப் பார்க்க வைத்து, “நான் பேசுறத கேட்குறியா இல்லையாமா?” என்று கேட்க வெளியில் ஆதி குமரன் பேசியதைக் கவனித்திருந்த சுடருக்கு எப்படித் தெரியும் வேந்தன் பேசியது? அவள் விழித்தபடி, “அது அம்மா, மார்னிங் என்ன சாப்பிடலாம்னு யோசிச்சிட்டு நீ பேசினத கவனிக்க மறந்துட்டேன், சாரி.” அதைக் கேட்டு அழகாக இருபக்கமும் தலையை அசைத்த வேந்தன்,
“எப்பவும் என்ன சாப்பிடுறதப் பத்தியே யோசிக்காதன்னு சொல்லிட்டு இப்போ நீ அதையே யோசிச்சிட்டு இருக்கியாம்மா?”
இதைக் கேட்டு தன் பற்கள் தெரிய “ஈ…” என்ற சுடரைப் பார்த்து “ அது நாம வெளியில எங்க போறோம்ன்னு கேட்டன் “
அதற்கு “ அங்க சார் தான் கூட்டிட்டு போறாங்க எனக்கு எங்க தெரியும்?”
“உனக்குத் தெரியாதாமா?”
“ம்ம்ம், தெரியாது. உங்க சார் தான் கூட்டிட்டுப் போறாங்க. நீ அவங்ககிட்டயே போய்க் கேளு” என்று வேந்தனைக் கிளப்பிக் கீழே இறக்கி விட, அவனும் வெளியே ஓடி ஆதி அருகே சென்று, “குட் மார்னிங் சார்” என்று சொல்ல, அதற்கு ஆதியும் சிரித்தபடி, “குட் மார்னிங் டா” என்று சொன்னபடி அவனை மடியில் தூக்கி வைத்துக்கொள்ள, வேந்தனும் அவன் மடியில் அழகாக அமர்ந்தபடி, “எங்களை எங்க கூட்டிட்டுப் போறீங்க சார்?”
“பஸ்ட் பக்கத்துல இருக்கிற கோயில் போலாம் அப்புறம் ஹோட்டல் போய் மார்னிங் பிரேக்பாஸ்ட் சாப்பிட்டு அங்க இருந்து மால் போறோம் அங்க சுத்திப் பார்த்துட்டு அங்க இருக்கிற தியேட்டர்ல 3-டி படம் பார்த்துட்டு நேரா பீச் போறோம் அது அப்புறம் டின்னர் முடிஞ்சி வீட்டுக்கு வந்துடலாம் “
இதை கேட்ட வேந்தன் ஆதியை நிமிர்ந்து பார்த்தபடி “ஓ….. பீச் போறோமா …” என்று இழுக்க “ஏண்டா பீச்சானு இழுக்குற “
“அது இது வரை நான் பீச் பார்த்தது இல்லையா அதன் “
“என்னது போனது இல்லையா “
“அது அம்மா மால் தான் கூட்டிட்டு போவாங்க வேற எங்கேயும் போனது இல்ல “ என்று உதட்டை பிதுக்கி கைகளை விரித்து “என்ன பண்ண “ என்று அவன் செய்த பாவனையில் அவன் கன்னத்தில் முத்தம் கொடுத்த ஆதி “க்யூட் டா நீ டோன்ட் வரி இனிமே நான் உன்னை எல்லா இடத்துக்கும் கூட்டிட்டு போறேன் “ என்று அவன் சொல்லவும் சுடர் வரவும் சரியாக இருந்தது.
வந்த சுடரை நிமிர்ந்து பார்த்து ஒரு பாராட்டும் பார்வையுடன் “ ம்ம்ம் கிளம்பலாமா சுடர் “
“ம்ம்ம் போலாம் “ என்று குமரனிடமும் பத்திரமாக இருக்கச் சொல்லிவிட்டு மூவரும் கிளம்பினர். சுடர் கதவை திறந்து வெளியே வர அப்போது பக்கத்து வீட்டு மீனா சுடரை பார்த்து வாயை பிளந்து நிற்க அவளை பார்த்த சுடர் எப்போதும் போல ஒரு சிரிப்பை சிந்தியபடி செல்ல போக வழி மறைத்த மீனா “அக்கா உங்கள பார்த்தா என்ன விட சின்ன பொண்ணு மாதிரி இருக்கீங்க யாராவது உங்கள தெரியாதவங்க கிட்ட உங்க வயசு 30 ன்னு சொன்னா நம்பவே மாட்டாங்க “
“அமா நம்ப மாட்டாங்க தான் ஏன்ன என் வயசு 23 தான 30ன்னு சொன்னா யார் நம்புவா?” “என்னது 23னா அப்போ உங்க ஹஸ்பண்டுக்கு உங்களை விட ரொம்ப நிறைய வயசு இருக்குமே?”
“யார் ஹஸ்பண்ட்? அது எங்க மாமா. நான் எப்ப எனக்கு கல்யாணம் ஆச்சுன்னு உங்ககிட்ட சொன்னேன்?”
“அப்போ அந்த பையன்?”
“அவன் எங்க பையன் தான். அதுல உங்களுக்கு என்ன பிரச்சனை? போலீஸ் மாதிரி விசாரிச்சிட்டு இருக்கீங்க. போய் வேலையைப் பாருங்க!” என்று வேந்தனைத் தூக்கியபடி அங்கே வந்த ஆதி, சுடரைப் பார்த்து, “டைம் ஆச்சு பாரு சுடர். வா போலாம்” என்று சுடரின் கைகளைப் பிடித்து அழைத்துச் சென்றுவிட்டான். அவர்கள் செல்வதைப் பார்த்த மீனா, “இங்க என்ன நடந்துச்சு இப்போ? அப்போ அந்தப் பொண்ணுக்கு கல்யாணம் ஆகல. ஆனா குழந்தை இருக்கு. இப்போ வந்தவன் அவனோட அப்பானா? அப்போ அவன் தானே சுடர் ஹஸ்பண்ட்? ஒருவேளை சண்டை போட்டு இந்தப் பொண்ணு வந்திருச்சோ?” என்று மண்டையைப் போட்டுக் குழப்பிப் பின், “நமக்கு ஏன் தேவையில்லாத வேலை?” என்று சென்றுவிட்டாள். காரில் முன்புறம் வேந்தனுடன் சுடர் அமர்ந்துகொள்ள, ஆதி காரை எடுத்து கோயில் நோக்கிச் சென்றான். காரில் ஏறியதிலிருந்து வேந்தன் ஆதியைப் பார்ப்பதும் சாலையைப் பார்ப்பதுமாக இருக்க, அதைக் கவனித்த ஆதி,
“என்னடா பார்த்துட்டே இருக்க? ஏதாவது வேணுமா?” அதற்கு ஆம் என்று வேகமாகத் தலையாட்டியபடி,
“நீங்க ஏன் அந்த ஆண்டிகிட்ட அப்படி சொன்னீங்க?” “எந்த ஆண்டிகிட்ட என்ன சொன்னேன்?”
“என்னை ஏன் உங்க பையன்னு சொன்னீங்க?” “ஏன் என் பையனா இருக்க மாட்டியாடா?” “ம்ம்ம்” என்று கன்னத்தில் கை வைத்து யோசித்தபடி, “உங்க பையனா ஆனா எனக்கு என்ன செய்வீங்க?”
“ஆமா ரொம்ப பிடிக்கும் என் பிரண்ட் ராஷித் டெய்லி அவங்க அப்பா கூட பைக்ல வருவான் அதுவும் முன்னாடி உட்கார்ந்துட்டு வருவான் அதே மாதிரி நானும் முன்னாடி உட்கார்ந்துட்டு போகணும்னு ஆசை நான் உங்க பையனா ஆனா கூட்டிட்டு போவீங்களா “
“கண்டிப்பா கூட்டிட்டு போறேன் ப்ராமிஸ் “ என்று அவன் தலை கோத , அதை கேட்டு சந்தோஷம் ஆன வேந்தன் “ அப்போ எனக்கு ஓகே நான் உங்க பையனா இருக்கேன் “ என்று சொல்லி விட்டு பின் சுடரை பார்த்து “ உனக்கு ஓகேவா ம்மா “ என்று கேட்க . ஆதியும் சுடர் சொல்ல போகும் பதிலுக்காக ஆவலாக பார்க்க , சுடர் “ வேந்த காலையில என்ன வேணும் சாப்பிட “ என்று அப்படியே பேச்சை மாற்றிவிட்டாள். அதை பார்த்த ஆதி “ சரியான உஷார் எப்படி பேச்சை மாத்திட்டா பாரு “ என்று முனங்கிய படி வண்டியை ஓட்டினான்.
ஆதி சொன்னபடி முதலில் கோவிலுக்குச் சென்று பின் மால் சென்று படம் பார்த்துவிட்டு கடற்கரைக்கு வந்தனர். முதல் முறை கடலைப் பார்த்த வேந்தனைக் கையில் பிடிக்க முடியவில்லை. அவனுடன் சேர்ந்து ஆதியும் விளையாடியபடி இருக்க, சுடர் மட்டும் எதிலும் கலந்துகொள்ளாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள். அவளைத் தூரத்தில் இருந்து பார்த்த ஆதி, வேந்தனை மணலில் விளையாடச் சொல்லிவிட்டு, சுடர் அருகே வந்து மூச்சு வாங்க அமர்ந்தான்.
“உங்க வயசுக்கு அவன் கூட போய் விளையாடினா இப்படித்தான் மூச்சு வாங்கும்.” “உங்கள் வயசுன்னா இல்லை, எனக்குப் புரியவில்லை. எனக்கு எவ்வளவு வயது இருக்கும்னு நினைச்சுப் பேசுற?”
“35+ இருக்குமா?”
“என்னது 35+ ஆ? எனக்கு 28 தான்மா ஆகுது.” “எங்க மாமா ஃபிரண்டு நீங்க அதான் வயசு அதிகம் இருக்கும்னு நினைச்சேன்.”
“எங்க மாமாவுக்கு கூட தான் 40 வயசு ஆனா அவங்களைப் பார்த்தா அப்படித் தெரியாது அதேபோல நினைச்சேன்”என்று சொல்லிவிட்டு மீண்டும் அலைகளைப் பார்க்கத் தொடங்கினாள். ஆதியும் எவ்வளவோ முயன்று பார்த்துவிட்டான் சுடரை இலகுவாக்க ஆனால் காலையில் இருந்து ஏதோ யோசித்தபடியே இருக்கிறாளே தவிர இவர்களுடன் பேசக்கூட மாட்டிக்கிறாள் என்று நினைத்தபடி ஆதி சுடரையே பார்த்துக்கொண்டு இருந்தான். அதை உணர்ந்தும் அவன் பக்கம் திரும்பாமலே
“இந்த பீச்ல தான் அவனைப் பார்த்தேன் ஃபர்ஸ்ட் டைம் நானும் எவ்வளவோ ட்ரை பண்ணிட்டேன் அவனை நினைக்கக் கூடாதுன்னு ஆனா பீச்னு சொன்னாலே அவன் தான் நினைவுக்கு வரான் அதனாலயே எனக்கு பீச்னா பிடிக்காது“ என்று ஆதியைப் பார்த்துவிட்டு பின் திரும்பி “சில விஷயத்தை நம்மால என்ன பண்ணாலும் மறக்க முடியறது இல்லை“ என்று மீண்டும் கடலைப் பார்த்து “ஏன் சார் என்னை கல்யாணம் பண்ணணும்னு ஆசைப்படுறீங்க என்கிட்ட அப்படி என்ன இருக்கு“ என்று கால்களை மடக்கி அதில் தலை சாய்ந்தபடி ஆதியைப் பார்த்துக் கேட்டாள். அவளைப் பார்த்து ஒரு புன்னகையை சிந்தியபடி அந்த நீலக் கடலை ரசித்துக்கொண்டே “நீ என்ன கேட்க வரன்னு புரியுது குழந்தை கூட இருக்க உன்னை ஏன் சூஸ் பண்ணணும்னு கேட்குற ரைட்.“ என்று இடைவெளி விட்டு “நீ ஃபர்ஸ்ட் ஒன்னு சொன்னியே இந்த பீச் உனக்கு அவனை நினைவுபடுத்துதுன்னு அதே மாதிரி தான் எனக்கும் இந்த பீச் நிறைய பேரை ஞாபகம் படுத்துது எங்க அம்மாவை என் அப்பாவை என் ஃபிரண்ட்ஸ்-அ அப்புறம் மதி அவளையும் ஞாபகம் படுத்துது
“அந்தப் பெயரைக் கேட்டு ஆதியைத் திரும்பி யார் அது என்பது போலப் பார்க்க, அதைப் பார்த்த ஆதி, “உண்மையிலேயே உங்க மாமா என்னைப் பற்றி உன்கிட்ட ஒண்ணுமே சொல்லல போல,” என்று சிரிக்க, அதைப் பார்த்து முறைத்த சுடரைப் பார்த்து, “சரி, நானே சொல்றேன் என்னைப் பற்றி. டென்ஷன் வேண்டாம்,” என்று பெருமூச்சு ஒன்று விட்டபடி, “மதி என் கூட வேலை பார்த்தவ. அண்ட் என் முன்னாள் காதலி கூட. எனக்கு ஐடி ஜாப் பார்க்கணும்னு ஆசை. ஆனா அப்பாவுக்கு எங்க ஸ்கூல்ல நான் பார்த்துக்கணும்னு ஆசை.” “என்னது உங்க ஸ்கூல்லா?” இடையே நிறுத்தினாள் சுடர்.
“அது நான் யார் கிட்டேயும் சொன்னது இல்லை. அண்ட் ஸ்கூல்ல கூட சில பேரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது நான் வேலை பார்க்கிறது எங்க ஸ்கூல்னு,” என்று சிரிக்க, அவனை யார்டா நீ என்பதுபோலப் பார்த்த சுடரைக் கண்டுகொள்ளாமல், “சரி, கதையைக் கண்டினியூ பண்றேன் கேளு. எனக்கு டீச்சராக இன்ட்ரஸ்ட் இல்லை. ஆனா எங்க அப்பா டீச்சர்தான் ஆகணும்னு சொன்னாங்க. அத கேட்காத நான் எப்படியோ கால்ல கையில விழுந்து ஒரு 3 இயர் ஐடி ஜாப் போக பர்மிஷன் வாங்கி ஜாப்லயும் சேர்ந்துட்டேன். அங்கதான் என் கூடவே ஒரு பொண்ணு ஜாயின் பண்ணா. அவதான் மதி.”