மனோ மற்றும் தேவியின் திருமணம் முடிந்ததும் தீபா அனைவரிடமும் ஏதேதோ காரணங்கள் சொல்லி அவள் வீட்டுக்கு கிளம்பிவிட்டாள். அவள் கிளம்பும் போது முகத்தில் ஏதோ பதற்றம் எதிலிருந்தோ தப்பித்து ஓடுவது போல இருந்தது. அவளைப் பார்த்தபடி நின்று கொண்டிருந்த ரஞ்சனை கூட கவனிக்காமல் சென்றுவிட்டாள். தீபாவை பார்த்த ரஞ்சனுக்கு நேற்று இவனுடன் சிரித்து முறைத்து கோபப்பட்டு என்று இவன் ரசித்த முகத்துக்கும் இப்போது இவள் காட்டிவிட்டு போகும் முகத்துக்கும் ஒப்பிட்டு பார்க்க கூட முடியவில்லை. இந்த மண்டபத்தை மகிழ்ச்சியுடன் இன்று காலை வரை வலம் வந்தவளுக்கும் தற்போது பதட்டத்துடன் செல்பவளுக்கும் ஆயிரம் வித்தியாசம் கூறிவிடலாம்.
அன்று இரவு ரஞ்சன் அவன் ரூம் பால்கனியில் கைகட்டி நின்றபடி தீபாவை பற்றி தான் எண்ணிக்கொண்டிருந்தான். அப்போது அவன் போன் சத்தம் போட எடுத்துப் பார்த்தான். அதில் ஆஜூன் ஸ்டார் என்ற பெயர் மின்ன ஒரு கீற்றான புன்னகையுடன் எடுத்து காதில் வைத்தான் “சொல்லு ஆஜூன் என்ன பண்ற” என்று சாதாரணமாக கேட்க
“அது எல்லாம் நல்லாதான் போச்சு கொஞ்சம் டயர்ட் அதான் வாய்ஸ் இப்படி இருக்கு”
“உனக்கு டயட் அதை நான் நம்பணும் நீ இப்போ என் கிட்ட சொன்னதை அப்படியே தூக்கிட்டு போய் உன் கூடவே ஒருத்தன் சுத்துவானே ஒரு அனிமல் பிளானட் அவன் கிட்ட சொல்லு நல்லா வாய பார்த்துட்டு அப்படியான்னு கேப்பான், போ என் கிட்ட பொய் சொல்லாத “
“டேய் ஆஜூன்..” என்று சிரித்து விட்டான் ரஞ்சன் “சிரிச்சி சமாளிக்காதடா ஒழுங்கா என்ன ஆச்சு ஏன் இப்படி பேசுற ஏதாவது பிரச்சனையா சொல்லு “
“அது எனக்கு தெரிஞ்ச ஒரு பொண்ணுடா அதே சமயம் நான் தெரிஞ்சிக்க ஆசைப்படுற பொண்ணும் கூட ஆனா அவளை பத்தி தெரிஞ்சிக்க தெரிஞ்சிக்க தான் இன்னும் குழப்புறா ஒரே புரியாத புதிராவே இருக்குறாடா “ என்று புலம்பும் தன் நண்பனை பார்த்து ஆஜூன் “ என்னடா தீபாவை பத்தியா “ என்று பாயிண்ட்டை பிடிக்க
“ என்ன பத்தி எல்லாம் எப்படி மச்சான் உன் ஃபிங்கர் டிப்ல வச்சிருக்க “
“சும்மாவாடா பத்து வருட நட்புல “ என்று சிரித்த அஜூன் பின் தன் நண்பனின் நிலை உணர்ந்து
“ சரி தீபாவுக்கு என்ன ஏன் அவளை நினைச்சி இப்படி புலம்புற “ என்றதும் மேலோட்டமாக ரஞ்சன் கூற “ ஓ.. அப்போ நீ இப்போ அந்த அனிமல் பிளானட்டோட வைஃப் மேல சந்தேகம் படுற, டேய் இதெல்லாம் ஒரு மேட்டராடா ஆஜூன் இருக்க பயமே நான் பார்த்துக்கிறேன்”
“சரி இதை பார்க்கிறது இருக்கட்டும், அந்த சாக்லேட் பார்ட்டியை ஃபாலோ பண்ணியே லீட் ஏதாவது கிடைச்சிச்சா “
“இல்லை மச்சான், ஒரே டெட் எண்டுடா? அவனுக்கே அவன் பண்ற வேலையைப் பத்தி தெரியாது போலடா. அவன் பாட்டுக்கு போஸ்டர் ஒட்டுறான். அவன் தலைவன் பேரை சொல்லி ஒவ்வொரு கடையாய்ப் பிச்சை எடுக்கிறான். இதில் இன்னொரு ஹைலைட் தெரியுமா?.”
“நீயே சொல்லுடா ”
“அவன் பார்க்க குளத்தாமை மாதிரி இருந்துட்டு ஏதோ நாட்டாமை சரத்குமார் ரேஞ்சுக்கு பில்டப் கொடுக்கிறான் பாரு. எப்பா, கண்ணு தீஞ்சி போச்சு மச்சான், அவன் பண்றதைப் பார்த்து.” ஆஜூன் பேசியதைக் கேட்ட ரஞ்சன் சிரித்தபடி, “ஸ்ட்ரெஸ் பஸ்டர்டா நீ!”
“சரி சரி, போதும் போதும், குளிர்கிறதுடா ஐஸ் வச்சது போதும் .”
“உன் வாய் இருக்கேடா, அதைச் சமாளிக்க ஒரு ஆள ஆர்டர் செய்துதான் வர வைக்கணும் போல, போடா, போய்ப் வேலையைப் பாரு” என்று போனை வைக்கப் போன ரஞ்சனை நிறுத்திய ஆஜூன், சீரியஸான குறளில்
“ ரஞ்சன், அந்த சாக்லேட் கேஸ் கொஞ்சம் டேஞ்சர் அதிகம் மாதிரி இருக்கு. பார்த்து ஹேண்டில் பண்ணுடா. அந்த யசோகர் ரொம்ப கேர்ஃபுல்லா எவிடன்ஸ் இல்லாம பண்றான். ஏதோ பெருசா இருக்கு போல. பார்த்து” என்று பேசிவிட்டு வைத்தான். அவன் போனை வைத்ததும் ரஞ்சன் அவன் நிலவுக்கு ஒரு குட் நைட் மெசேஜ் ஒன்றைத் தட்டிவிட்டு அவனும் உறங்கச் சென்றான்.
அடுத்து மறுநாள் தான் சுடர், குமரன், வேந்தன் மூவரும் சொல்லிக்கொண்டு வீடு திரும்பினர். அங்கு இருந்த யாருக்கும் இவர்களைத் தனியாக அனுப்பி வைக்க விருப்பம் இல்லை, ஆனால் சுடர் வேலை மற்றும் வேந்தனின் படிப்பை நினைத்தே அரை மனதோடு அனுப்பி வைத்தனர். இதில் தீபா தனி வீட்டில் இருப்பது யாருக்கும் தெரியாது. குமரனும் சொல்ல மறந்து போனான். சுடரும் மற்றதைப் பேசும் கவனத்தில் சொல்ல மறந்தாள். இது இவர்களுக்குத் தெரியவரும் காலமும் வெகு தூரம் இல்லை. இது தெரியவரும் நேரம் நம் தீபாவின் நிலை.
அன்று காலை சுடர், வேந்தன் கல்யாணத்திற்கு எடுத்த லீவு முடிந்து மிகச் சந்தோஷமாகத் தான் பள்ளிக்குச் சென்றனர். இதில் என்ன ஒரு வருத்தம் என்றால் நம் சுடர் அவள் குடும்பத்தைப் பார்த்த குஷியில் ஆதியையும் அவன் உடன் வெளியே போவதையும் மறந்தாது தான். அன்று வகுப்பு எப்போதும் போல முடிவு பெற சுடர் வாணி மேம் உடன் அட்டெண்டன்ஸ் சப்மிட் செய்ய எப்போதும் போல பேசியபடி இருவரும் சென்றனர்.
அங்கு அந்த அறையில் ஆதியும் போன் பேசியபடி ஆர்வமாக சுடருக்காகத் தான் காத்திருந்தான். அவள் வந்து ஏதாவது வெளியே போகப் போவதைப் பற்றிப் பேசுவாளா என்று காத்திருக்க, அவன் காத்திருப்புக்குப் பலனாகச் சுடரும் வந்தாள். வந்தவள் எப்போதும் போல உள்ளே வர அனுமதி கேட்டு உள்ளே நுழைந்து அட்டெண்டன்ஸும் வைத்துவிட்டு ஆதியிடம் நன்றி சொல்லிவிட்டு வாசலைத் தாண்டிச் செல்லப் போனாள். அதைப் பார்த்த ஆதி, “இவளா வந்து நம்ம கிட்ட பேச போறது இல்லை, நம்மளா போய்ப் பேசினால்தான் உண்டு” என்று எண்ணி
“சுடர் நீங்க மட்டும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்“ என்றபடி போன் பேசிக்கொண்டே வாணியைப் பார்க்க, அதைப் பார்த்து வாணியும் “நான் கிளம்புறேன் மேம்“ என்று கிளம்பிவிட்டார். வாணி சென்ற பிறகுதான் அவன் காதில் இருந்த போனை கீழே வைத்தான்.
அவனைப் பார்த்திருந்த சுடருக்கு அப்போது தான் ஆதி அவளிடம் பேசியது வெளியே போக இவள் ஒத்துக்கொண்டது நினைவுக்கு வர, , “அச்சோ போச்சு போச்சு! இவர்கிட்ட போய் தனியா சிக்கிட்டேனே! மூணு நாள் லீவுல எல்லாத்தையும் மறந்துட்டேன். சரியான லூசு சுடர் நீ!“ என்று அவளை அவளே திட்டியபடி அங்கேயே நின்றகொண்டு ஆதியைப் பார்க்க. ஆதியும் அதுவரை அவளைத்தான் பார்த்து கொண்டு இருந்தான். அவள் இவனை பார்த்தும் தலையை அசைத்து அருகில் வரச் சொல்ல, அவளும் அவன் முன்னே இருந்த நாற்காலியில் வந்து அமர்ந்தாள்.
அவளைப் பார்த்து சிரித்த ஆதி, “எங்க போலாம்னு ஏதாவது ஐடியா இருக்கா சுடர்?“ என்று கேட்டான் அதற்கு இல்லை என்று தீபா தலை அசைக்க, “சரி அப்போ நானே ப்ளான் போடுறேன். நீயும் வேந்தனும் சண்டே மார்னிங் ரெடியா இருங்க. நானே வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்“ என்று அவன் சொல்வதை கேட்டு சுடர் வேகமாகத் தலை ஆட்டியபடி, “இல்லை சார், நீங்க வராதீங்க. எங்கன்னு சொல்லுங்க, நானே வரேன்.“
“ஏன் நான் வரக்கூடாதா? நானே வந்து கூட்டிட்டு போறேன். உங்க மாமா பத்தி யோசிக்காத. நான் ஆல்ரெடி எல்லாம் சொல்லிட்டேன். சோ, பிராப்ளம் இல்லை. ஆல்ரெடி உங்க வீட்டுக்கு வந்திருக்கேன்ல? சோ, எஎனக்கு நோ இஸ்சு “ என்று கைகளை விரிக்க
“உங்களுக்கு புரியலையா வீட்டுக்கு கெஸ்ட்டா வந்து பார்த்துட்டுப் போறதுகம் எங்களை வெளியே கூட்டிட்டுப் போறதும் ஒன்னு இல்லை சார், புரியுதா. நானே வர்றேன்.” அப்போதுதான் ஆதிக்கு நினைவே வந்தது அங்கு அனைவரும் சுடரை குமரன் மனைவி என்று நினைப்பது. அது நினைவுக்கு வந்ததும் ஆதி முகத்தில் சிறு மாற்றம். கோபமா? வருத்தமா? அவனே அறிவான். ஆதி தன்னைத்தானே அதில் இருந்து கட்டுப்படுத்தி கொண்டு, “பரவால்லை, நானே வர்றேன்.”
“சார், நான் என்ன சொல்ல வரேன்னு புரியுதா இல்லையா?” என்று கோபத்துடன் அவள் சத்தமும் உயர்ந்து வந்தது.
“உனக்குத்தான் ஒன்னும் புரியல்லை சுடர். உங்கள் மாமா உன்னையும் உன் அக்காவையும் உங்க அம்மா இடத்தில வைச்சி பார்க்கிறாரு. அதைப் புரிஞ்சிக்காம நீ யாரோ எதுவோ பேசுகிறார்ங்கனு உங்க மாமாவை நீயே கஷ்டப்படுத்திட்டு இருக்க.”
இதைக் கேட்டு மேலும் கோபம் கொண்ட சுடர், “நான், நான் எங்க மாமாவைக் கஷ்டப்படுத்திட்டு இருக்கனா? உனக்குத் தெரியுமா நான் எப்படி இருக்கேன்னு? தெரியுமா எங்க மாமா பெரு கெட்டுப் போகக்கூடாதுன்னு?” என்று அவள் கத்த, அதைக் கேட்டு யாராவது வந்துவிடுவார்களோ என்று எண்ணிய ஆதி எழுந்து அவள் அருகே சென்று,
“பொறுமையா பேசு சுடர். வெளியே கேட்கப் போது.”
“யார் கேட்டா எனக்கு என்ன? நான் இப்படித்தான் பேசுவேன்.”
“ஆ.. இப்போ மட்டும் யார் கேட்டா எனக்கு என்னன்னு சொல்லத் தெரியுதுல்ல? அதே மாதிரி யார் பேசினா உனக்கு என்னன்னு போக வேண்டியதுதானே?”
“அது மாமா அவங்களை என் கூட “ என்று சொல்லிக் கூட முடிக்கவில்லை அவள் வாயை அவன் கைகளால் மூடி இருந்தான் ஆதி. அதில் அதிர்ந்து கண்கள் விரிய நின்றா சுடரைப் பார்த்து “ இதோ பாரு யார் என்ன பேசினாலும் எனக்குப் பிரச்சனை இல்லை ஆனா இன்னொரு தடவை அந்த வார்த்தை உன் வாயில இருந்து வரக் கூடாது சரியா “
அதற்கு “ம்ம்ம் “ என்றபடி அவன் கைகளைத் தள்ளிவிட்டு “ நான் அந்த வார்த்தையை சொல்ல கூட இல்லை அன அதையே உங்களால தாங்கிக்க முடியல. இதே மாதிரி தானே எனக்கும் என் மாமா பத்தி பேசுறப்ப இருந்திருக்கும் “ அதற்குத் தன் நெற்றியைத் தேய்த்தபடி ஆதி
“ நான் சொல்ல வரத கொஞ்சம் முழுசாப் புரிஞ்சிக்க ட்ரை பண்ணு “ என்று தன் குரலைச் சிருமியபடி “இதோ பாரு சுடர் இப்போ என்ன பத்தி மத்தவங்க என்ன பேசினாலும் எனக்குப் பிரச்சனை இல்ல நான் அதை பெருசா எடுத்துக்க மாட்டேன் ஆனா அதுவே நீ என்ன பத்தி தப்பா பேசினா கண்டிப்பா கஷ்டப்படுவேன் ஏன்னா எனக்கு உன்னைப் பிடிக்கும் என் லைஃப் நீ புரியுதா அதே தான் உங்க மாமாவுக்கும் யார் அவரைப் பத்தி என்ன நினைச்சாலும் கவலைப்பட மாட்டாரு புரியுதா
“இதை கேட்டு ஒரு குழப்பமான முகத்தை வைத்தபடி “அப்போ நான் பண்ணிட்டு இருக்குறது தான் மாமாவுக்குக் கஷ்டம்னு சொல்றியா “
“ஆமா கஷ்டம் தான் அவரே என்கிட்ட சொல்லியிருக்காரு”
“என்னன்னு” என்று உள்ளே போன குரலில் கேட்டாள்
“அது மத்தவங்க தப்ப பேசக் கூடாதுன்னு வேந்தனை அப்பான்னு கூப்பிட வச்சது. அப்புறம் உங்க மாமா வயசோட நீ மேட்ச் ஆகணும்னு உனக்குப் பிடிக்காத புடவை கட்டுறது இப்படி நிறைய இருக்கு. நீ இப்படி பண்ணும்போதுலாம் உங்க மாமாக்கு உன்கிட்ட வந்து யார் என்ன சொன்ன என்னன்னு கேட்கணும்னு தோணுமா? ஆனா நீ எங்க தப்ப புரிஞ்சிட்டு கஷ்டப்படுவியோன்னு சொல்ல மாட்டாங்கலாம்.”
இதை எல்லாம் கேட்ட சுடர் அழுதபடி ஆதியை அண்ணாந்து பார்த்து “அப்போ நான் தான் மாமாவ கஷ்டப்படுத்துறேனா?”
அதற்கு அவள் கண்களை துடைத்தபடி “சரியான லூசு சுடர் நீ. நான் சொல்ல வர்றத தப்பா புரிஞ்சிக்கிட்ட பாரு இதுக்கு தான் உங்க மாமா பயந்து உன்கிட்ட சொல்லாம விட்டது போல.”
அதற்கும் முகத்தை சோகமாக வைத்தபடி அவனை நிமிர்ந்து பார்த்து “எனக்கு உண்மையாவே புரியவே இல்லை.”
“உங்க மாமா சந்தோஷம் உன்னோட உன் அக்காவோட சந்தோஷமான வாழ்க்கையில தான் இருக்கு. இப்போதைக்கு உங்க ரெண்டு பேரையும் தாண்டி வேற எதுவும் யோசிக்க மாட்டாங்க. அப்படிப்பட்ட மாமா முன்னாடி போய் உன் இயல்பை விட்டு இருந்தா கஷ்டமாதானே இருக்கும்?”
“ஆமா… கஷ்டமா தான் இருக்கும்.” என்று குழந்தை போல் தலையாட்டு சுடரை கொஞ்ச கைகள் பறபறக்க அதை அடக்கியபடி “சோ இனிமே யார் பேசுறதையும் கண்டுகாம உன் லைஃப் நீ ஹாப்பியா இரு ஓகேவா?”
“சரி, டைம் ஆச்சு. நான் போயிட்டு வரேன் சார்.” “அதனா உன் காரியத்துல கரெக்ட்டா இரு. சரி போ.” என்றதும் கண்களை துடைத்தபடி வெளியே சென்ற சுடரை பார்த்து “சுடர் லேகாங்கால செம்மையா இருந்த. அப்பவே வந்து தூக்கிட்டு வந்திரலாம்னு நினைச்சேன். ஜஸ்ட் மிஸ்.” என்று அவன் கன்னத்தில் கைவைத்து பார்க்க “என்னது ஜஸ்ட் மிஸ்ஸா?” என்று முனங்கியபடி அவனை பார்க்க அதற்கு ஆதியும் ஆம் என்பது போல் தலையை ஆட்ட அதை பார்த்து பயந்த சுடர் அடுத்த நிமிடம் அங்கு இருக்கவில்லை.
இங்கே தீபாவோ மண்டபத்தில் இருந்து நேராக அவள் வீட்டுக்குச் சென்று அவள் வைத்திருந்த மாத்திரைகளில் இரண்டை எடுத்துப் போட்டபடி சென்று படுத்தவள்தான் மறுநாள் மதியமே கண் விழித்தாள். கண் விழித்து சுற்றும் முற்றும் பார்த்து அவள் வீட்டில் இருப்பதை உறுதி செய்துகொண்ட பிறகுதான் அவளுக்கு மூச்சே வந்தது. சிறிது நேரம் அப்படியே கண்களை மூடி அமர்ந்துவிட்டாள். அப்போதுதான் ரஞ்சனின் நினைவே வந்தது அவளுக்கு அவன் நினைவு வந்த உடன் தலையில் அடித்தபடி “கிளம்பும் போதுகூட பார்க்காம வந்துட்டேனே “ என்று அவள் போனைத் தேட அது பசியில் மயங்கி இருந்தது.”சுத்தம் போ “என்று எழுந்து போனை சார்ஜரில் போடப் போக அவளால் எழுந்திருக்கக்கூட முடியவில்லை. தலையில் கைவைத்தபடி அமர்ந்துவிட்டாள். வயிறு பசிக்குக் கத்தியது. எழுந்திருக்கக்கூட முடியவில்லை இதில் எங்கிருந்து உணவு செய்ய முடியும் போனும் ஆன் ஆகவில்லை. சுற்றிப் பார்த்தாள். தண்ணீர் பாட்டிலில் கொஞ்சம் நீர் இருக்க அதை எடுத்து குடித்துவிட்டு அப்படியே அமர்ந்துவிட்டாள். சிறிது நேரம் கழித்த பின்பே பொறுமையாக போனை சார்ஜரில் போட்டு ஆன் செய்து முதல் வேலையாக உணவை ஆர்டர் செய்ததுதான்.